Home Blog Page 284

மீண்டும் இயக்குனராகும் எஸ்.ஜே.சூர்யா!. அட ஹீரோ யார் தெரியுமா?..

0

மீண்டும் இயக்குனராகும் எஸ்.ஜே.சூர்யா!. அட ஹீரோ யார் தெரியுமா?..

இயக்குனர் வசந்திடம் சினிமா கற்றவர் எஸ்.ஜே.சூர்யா, சில படங்களில் உதவியாளராக வேலை செய்துவிட்டு சும்மா இருந்தவரை அஜித் அழைத்து பட வாய்ப்பு கொடுத்தார். அப்படி உருவான படம்தான் வாலி. அஜித் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்த திரைப்படத்தில் சிம்ரன் கதாநாயகியாக நடித்திருந்தார். தேவாவின் இசையில் பாடல் சூப்பர் ஹிட் ஆனது.

படம் வெளியான போது அடல்ட் படம் போல இருக்கிறது என கமெண்ட்ஸ்கள் வந்தாலும் படம் ஹிட் அடித்துவிட்டது. எனவே, எஸ்.ஜே.சூர்யாவுக்கு விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பு வந்தது. அப்படி உருவான குஷி திரைப்படமும் சூப்பர் ஹிட் அடித்தது. அதன்பின் தான் இயக்கும் படங்களில் தானே ஹீரோவாக நடிக்க துவங்கினார் எஸ்.ஜே.சூர்யா.

அப்படி அவர் நடித்து வெளியான நியூ, அன்பே ஆருயிரே, இசை போன்ற படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை. எனவே, மற்ற இயக்குனர்களின் படங்களில் நடிக்க துவங்கினார். சில படங்களில் ஹீரோவாக நடித்த எஸ்.ஜே.சூர்யா ஒரு கட்டத்தில் வில்லனாக நடிக்க துவங்கினார். அதுதான் அவரை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது.

sj suriya
sj suriya

விஜயின் மெர்சல் துவங்கி சியான் விக்ரமின் வீர் தீர சூரன் வரை பல படங்களிலும் நடித்துவிட்டார். ஆதிக் ரவிச்சந்திரனின் இயக்கத்தில் உருவான மார்க் ஆண்டனி படத்தில் அசத்தலாக நடித்து ரசிகர்களை கவந்தார். இப்போது கோலிவுட்டின் தவிர்க்க முடியாத நடிகராக எஸ்.ஜே.சூர்யா மாறிவிட்டார்.

இந்நிலையில், மீண்டும் எஸ்.ஜே.சூர்யா இயக்குனர் அவதாரம் எடுக்க முடிவு செய்திருக்கிறார். சில வருடங்களுக்கு முன்பே கில்லர் என்கிற கதையை அவர் எழுதினார். இந்த படத்தை அவரே தயாரித்து, இயக்கி, நடிக்க முடிவு செய்துள்ளார். எனவே, இன்னும் ஒரு வருடத்திற்கு எந்த புதிய படத்திற்கும் அவரின் கால்ஷீட் கிடைக்காது என்கிறார்கள்.

விஜய் கேட்டத கொடுத்திருந்தா பழனிச்சாமி காலி!. ஆடிட்டர் குருமூர்த்தி ஓப்பன் டாக்!..

0

தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சி துவங்கியது முதலே விஜய் திமுகவை மட்டுமே தொடர்ந்து விமர்சித்து வருகிறார். முதல் கட்சி மாநாட்டிலும் சரி, கட்சி துவங்கி ஒரு வருடம் முடிந்த விழாவிலும் சரி, கட்சி பொதுக்கூட்டத்திலும் சரி அவர் முழுக்க முழுக்க திமுகவை மட்டுமே டார்கெட் செய்து பேசி வருகிறார். அதிமுக பற்றி அவர் எங்கும் பேசவில்லை.

முதல் மாநாட்டில் பேசியபோது தங்களோடு கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு ஆட்சியிலும் பங்கு.. அதிகாரத்திலும் பங்கு என அறிவித்தார் விஜய். எனவே, காங்கிரஸ், விடுதலை சிறுத்தை, கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் தங்கள் பக்கம் வருவார்கள் என விஜய் எதிர்பார்த்தார். ஆனால், அப்படி எதுவும் நடப்பதாக தெரியவில்லை. எனக்கு ஆசை காட்டி திமுக கூட்டணியிலிருந்து பிரிக்க பார்க்கிறார்கள் என திருமாவளவன் கூறினார். எனவே, அதிமுகவுடன் தவெக இணையும். இதைத்தவிர விஜய்க்கும் வேறு வழியில்லை என பலரும் நினைத்தார்கள்.

eps

ஆனால், பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைப்பது உறுதியாகிவிட்டது. எனவே, விஜய் தனித்துவிடப்படுவாரா என்கிற எண்ணமும் பலருக்கும் எழுந்துள்ளது. ஏனெனில், நாம் தமிழர் கட்சி சீமானும் விஜயுடன் இணைவார் என தோன்றவில்லை. சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசி பழ. கருப்பையா ‘விஜயுடன் கூட்டணி போட வேண்டும் என்பதே பழனிச்சாமியின் எண்ணமாக இருந்தது. ஆனால், முதல்வர் பதவியை ஆளுக்கு இரண்டரை வருடம் என பிரித்து கொள்வோம் என விஜய் சொன்னதை பழனிச்சாமி ஏற்கவில்லை. ஏதேனும் ஒரு கட்சியின் கூட்டணி வைத்தால் மட்டுமே திமுகவை தோற்கடிக்க முடியும் என்பதால் பாஜக பக்கம் போய்விட்டார்’ என பேசியிருந்தார்.

இந்நிலையில், ஒரு டிவி சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ள துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி ஒரு புதிய தகவலை சொல்லியிருக்கிறார். அதிமுகவின் முதல் சாய்ஸ் விஜய்தான். ஆனால், 90 சீட் மற்றும் விஜய்க்கு துணை முதல்வர் பதவி கேட்டதால் பழனிச்சாமி பாஜக பக்கம் போய்விட்டர். விஜய் கேட்டதை கொடுத்திருந்தால் பழனிச்சாமியின் அதிகாரத்திற்கே பங்கம் வந்திருக்கும்’ என பேசியிருக்கிறார்.

வேதங்கள் சட்டக் கல்வி பாடத்திட்டத்தில் இடம்பெற வேண்டும்: உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து

0

வேதங்களும் புராணங்களும் சட்டக் கல்விக்கூடங்களில் சேர்க்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதி பங்கஜ் மிதால் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்திய நீதித்துறையை இந்திய மயமாக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன என்றும், உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் இப்போது பிராந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு மக்களுக்குச் சேர்க்கப்படுகின்றன என்றும் நீதிபதி பங்கஜ் மிதால் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது: “வேதங்கள், ஸ்மிருதிகள், அர்த்தசாஸ்திரம், மனு ஸ்மிருதி, தர்ம சாஸ்திரங்கள், மகாபாரதம் மற்றும் இராமாயணம் போன்றவை வெறும் கலாசாரப் பொருட்கள் அல்ல. அவை நீதியும் சமத்துவமும், ஆட்சி முறையும், தண்டனையும், சமாதானமும், ஒழுக்கமும் குறித்த ஆழ்ந்த தத்துவங்களை கொண்டுள்ளன. இந்திய நீதித் தத்துவத்தின் மூலங்களை புரிந்துகொள்ள இதனை நம்முடைய பாடத்திட்டத்தில் சேர்த்தல் அவசியமாக இருக்கிறது.”

இந்த கருத்தை அவர் ஏப்ரல் 12-ஆம் தேதி போபாலில் உள்ள தேசிய சட்ட நிறுவனம் (NLIU) நடத்தும் சட்ட மாநாட்டில் தெரிவித்தார். இது உச்சநீதிமன்றத்தின் 75 ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகும்.

நான்கு நூல்கள்… சட்டக் கோட்பாட்டின் அடித்தளங்கள்

முன்னாள் தலைமை நீதிபதி (CJI) டி.வாய். சந்திரசூத் தலைமையில், நீதி தேவியின் புதிய சிலைச் சாயியில் உடையும் கண்களை மூடாமலும், வாளுக்கு பதிலாக புத்தகத்துடன் காண்பிக்கப்பட்டது. அந்த புத்தகம் இந்திய அரசியலமைப்பைக் குறிக்கிறது. ஆனால் நீதிபதி மிதால் கூறுகிறார்: “அரசியலமைப்புடன் வேதம், புராணம், பகவத்கீதையும் சேர வேண்டும். இந்திய சட்டத்திட்டம் அதனடிப்படையில் செயல்பட வேண்டும். அப்போதுதான் நம்முடைய ஒவ்வொரு குடிமகனுக்கும் நீதி கிடைக்கும்.” என்று அவர் கூறுகிறார்.

மேலும், “இது வெறும் பாடநூல் படிப்பாக இல்லாமல், இந்தியாவின் பாரம்பரிய நீதியின் கோட்பாடுகளையும், தற்போது உள்ள அரசியலமைப்பு நீதித்துறையின் பிரதிபலிப்புகளையும் ஒப்பிட்டு கற்றுக்கொள்வது போன்றதாக இருக்க வேண்டும்.”

இந்த புதிய பாடப்பிரிவுக்கு “தர்மமும் இந்திய சட்டக் கோட்பாடும்” அல்லது “இந்திய சட்ட தத்துவத்தின் அடித்தளங்கள்” என்ற பெயர் இருக்கலாம் என அவர் சுட்டினார்.

மேற்கத்தியக் கொள்கைகளை விட இந்திய பாரம்பரியம் மேல்

“மீள சிந்திக்கும் சட்ட மாணவர்கள் மற்றும் நீதிபதிகள் ஒரு தலைமுறை உருவாகட்டும் — அவர்கள் சட்டப்பிரிவு 14 (சமத்துவம்) என்பது மேற்கத்திய கொள்கை அல்ல, சமத் என்ற வாதத்தின் பிரதிபலிப்பாக புரிந்து கொள்ளட்டும். சுற்றுச்சூழல் சட்டத்தை சட்டங்களின் வழியே அல்ல, வேதங்களில் உள்ள பிரகிருதி பக்தியால் புரிந்து கொள்ளட்டும். மாற்று வழி தீர்வு (ADR) என்பது ஷாஸ்திரங்களில் உள்ள பஞ்சாயத்து மரபுகளின் தொடர்ச்சியாக பார்ப்பட்டும். அரசியலமைப்பு ஒழுக்கம் (Constitutional Morality) என்பது இராஜதர்மத்தின் ஒரு நவீன வடிவமாக உணரட்டும்.”

இது ஒரு பழைய கால நினைவலைகளுக்கு இடம் கொடுக்கும் முயற்சி அல்ல எனவும், இது இந்திய அரசியலமைப்பின் பல்வகைமிக்க சட்ட அடையாளத்தை காக்கும் “அடித்தள இந்தியாவாக்கம்” எனவும் அவர் விளக்கினார்.

நீதியும் தர்மமும் – இரண்டும் ஒன்றே

“நம்முடைய நீதித்துறையின் வரலாறு 1950-இல் ஆரம்பிக்கவில்லை. அது தொன்மையான, ஆனால் இன்றும் உயிருள்ள மரபிலிருந்து தோன்றியது. உச்ச நீதிமன்றத்தின் குறிக்கோள் — யதோ தர்மஸோ ததோ ஜய: (தர்மம் இருக்கும் இடத்தில் வெற்றி) என்பது மகாபாரதத்திலிருந்து வந்தது. நம்முடைய கலாசாரப்பார்வையில், நீதிதான் தர்மத்தின் வடிவம்.”

நீதிமன்றத்தின் முக்கிய பங்கு என்னவெனில், “அரசியலமைப்பு ஒழுக்கம் ஆட்சித் திட்டங்களை விட மேலாக அமைய வேண்டும்; நீதி அரசியல் வசதிக்காக தியாகம் செய்யக்கூடாது; சட்டத்தின் ஆட்சி அதிகாரத்தின் ஆட்சியாக மாறக்கூடாது.”

சுற்றுச்சூழல் சட்டம், சமத்துவக் கொள்கை — வேதங்களில் தோன்றியவை

அதர்வவேதம் கூறுவது போல, “வானத்தை, நிலத்தை, காற்றை, நீரைக் காயப்படுத்த வேண்டாம்” என்பது நீதிமன்ற சுற்றுச்சூழல் தீர்ப்புகளுக்கான சான்று. ரிக் வேதத்தில் கூறப்படுவது போல, “யாரும் மேலானவர்களாகவோ கீழானவர்களாகவோ இருக்கக் கூடாது; அனைவரும் ஒரே பாதையில் பயணிக்கும் சகோதரர்களே” என்பதே சமத்துவத்தின் விழுமியக் கொள்கை.

மேற்கத்திய சட்டங்கள் சட்டம் மற்றும் நெறிமுறையை இரண்டாகப் பிரிக்கிறது. ஆனால் இந்திய பாரம்பரியத்தில் தர்மம் என்பதே சட்டமும் நெறிமுறையும், நீதியும் ஒழுக்கமும் ஒன்றாக பிணைந்த ஒருமைத்தன்மையான வழிமுறை என நீதிபதி மிதால் வலியுறுத்துகிறார்: “இந்திய உச்ச நீதிமன்றத்தின் செயல்பாடுகள் இதை நிரூபிக்கின்றன.”

எனக்கும் ஆசைதான்!. ஆனா அஜித்தை கணிக்கவே முடியாது!.. வெங்கட்பிரபு ஃபீல் பண்ணிட்டாரே!..

0

நடிகர் அஜித் மற்ற நடிகர்கள் போல் இல்லை. சூப்பர் ஹிட் கொடுக்கும் இயக்குனர்களின் படங்களில் மட்டுமே நடிக்க வேண்டும் என நினைக்கமாட்டார். புதுப்புது இயக்குனர்களை அறிமுகம் செய்வார். அல்லது ஒரு படம் இயக்கியவரை கூட அழைத்து படம் கொடுப்பார். எஸ்.ஜே.சூர்யாவை கூட வாலி படம் மூலம் இயக்குனராக்கியவர் இவர்தான்.

இப்போது ஆதிக் ரவிச்சந்திரனுக்கு குட் பேட் அக்லி பட வாய்ப்பை கொடுத்திருக்கிறார். நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தபோது அஜித்துக்கு பழக்கமானார் ஆஜித். ஆதிக் அடிப்படையில் ஒரு அஜித் ரசிகர். அந்த படத்தில் நடிக்கும்போதே ‘நாம சேர்ந்து ஒரு படம் பண்ணுவோம்’ என சொல்லியிருக்கிறார் அஜித்.

அந்த நம்பிக்கையில்தான் மார்க் ஆண்டனி படத்தின் கதையை ஆதிக் எழுதியிருக்கிறார். விஷால் – எஸ்.ஜே.சூர்யா நடித்து வெளியான இப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. அடுத்து அஜித்தை வைத்து குட் பேட் அக்லி படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் அஜித் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. படம் வெளியாகி 5 நாட்களில் இப்படம் உலகமெங்கும் 150 கோடியை வசூல் செய்திருக்கிறது. இந்தியாவில் இப்படம் 100 கோடியை வசூல் செய்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த படத்தை இயக்கியது பற்றி பேசியுள்ள ஆதிக் ‘அஜித் சார் என்னை நம்பும்போது நான் ஒன்றுமே இல்லை. நான் இயக்கிய படம் தோல்வி அடைந்திருந்த நேரம் அது. அவர் எப்படி என்னை நம்பினார் என தெரியவில்லை. அவருக்கு மிகவும் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன் என பேசியிருந்தார். இதே கருத்தைத்தான் வெங்கட்பிரபும் சொல்லியிருந்தார். மூன்று சின்ன படங்களை இயக்கியிருந்த எனக்கு மங்காத்தா படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்தார். மங்காத்தா 2 படத்தை நான் எடுக்க வேண்டும் என அஜித் ரசிகர்கள் ஆசைப்படுகிறார்கள். எனக்கும் அந்த ஆசை இருக்கிறது.

அதேநேரம், அது மங்காத்தா 2-வாக இல்லாமல் வேறு ஒரு கதையை அஜித்திடம் சொல்லி அவரை சம்மதிக்க வைத்து அந்த படத்தை இயக்கலாமா என்கிற எண்ணமும் இருக்கிறது. ஆனால், அஜித் சாரை பொறுத்தவரை எப்போது எந்த இயக்குனரை தேர்வு செய்வார் என கணிக்கவே முடியாது’ என சொல்லியிருக்கிறார்.

குட் பேட் அக்லி தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா…

0

Good bad ugly: விடாமுயற்சி படம் அஜித் ரசிகர்களை திருப்தி படுத்தாத நிலையில் அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம்தான் குட் பேட் அக்லி. இப்படம் கடந்த 10ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் அஜித் ரசிகர்களுக்கு பிடித்தமான பல காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. படம் முழுக்க மாஸான காட்சிகளை வைத்திருக்கிறார் இயக்குனர் ஆதிக்.

இந்த படத்தில் வில்லனாக அர்ஜூன் தாஸ் நடித்திருக்கிறார். மேலும், திரிஷா, சிம்ரன், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். அஜித்துக்காகவே படம் பார்க்கலாம். படத்தில் பாடல்களும், பின்னணி இசையும் கூட சிறப்பாக இருக்கிறது என பலரும் சொல்கிறார்கள். ஒன் மேன் ஆர்மியாக அஜித் படத்தை தாங்கி பிடித்திருக்கிறார் என்றெல்லாம் சொல்கிறார்கள். முதல் நாளிலேயே இப்படம் 30.9 கோடி வசூலை அள்ளியது. மேலும், அஜித்தின் நடிப்பில் இதுவரை வெளியான படங்களில் முதல் நாள் அதிக வசூல் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. படம் வெளியாகி 5 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இப்படம் 150 கோடி வரை வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், இந்த படத்தில் தன்னுடைய அனுமதி இல்லாமல், ஒத்த ரூபாயும் தாரேன், என் ஜோடி மஞ்சள் குருவி, இளமை இதோ இதோ போன்ற பாடல்களை குட் பேட் அக்லி படத்தில் பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தயாரிப்பு நிறுவனத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். படத்தில் தன்னுடைய பாடல்களை பயனடுத்துவதை நிறுத்தவேண்டும் எனவும், 7 நாட்களுக்குள் படக்குழு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் விரைவில் பதிலளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அக்கவுண்டுக்கெல்லாம் ரூ 1000 வந்தாச்சா.. உடனே செக் பண்ணுங்க!! தமிழக அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

0

TN Gov: திமுக ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம்தோறும் ஆயிரம் வழங்குவதாக தெரிவித்திருந்தது. அதன்படி ஒரு கோடி க்கும் மேற்பட்டோருக்கு ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறது. ஆனால் இதனால் பெரும்பாலான மகளிர் திருப்தி அடையவில்லை. ஏனென்றால் இந்த ஆயிரம் ரூபாய் கிடைக்க வேண்டுமென்றால் அரசு கூறிய வரைமுறைக்கு கீழ் இருக்க வேண்டும். அரசு உத்தியோகத்தில் இருப்பவர்கள் பென்ஷன் வாங்குபவர்கள் என யாருக்கும் இது செல்லுபடியாகாது.

அதேபோல மாற்றுத் திட்டத்தின் மூலம் உதவித்தொகை பெற்று வந்தாலும் இந்த திட்டம் மூலம் பயன் பெற முடியாது. அந்தவகையில் கணவரால் கை விட பெற்றவர்கள் உதவித் தொகை வாங்குவது உண்டு, அவர்களால் இந்த திட்டத்தை பயன்படுத்திக்க முடியாது. இந்த முறை அவர்களுக்கு ரூ 300 அதிகரித்து வழங்குவதாக சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இப்படிப்பட்ட சூழலில் பெண்கள் மறுவாழ்வு மையத்தில் இருப்பவர்கள் கார்ப்பரேஷன் ஊழியர்களின் மனைவிகள் போன்றோருக்கும் இத்திட்டம் செல்லுபடியாகாமல் இருந்தது.

பல்வேறு கோரிக்கைகளுக்கு பிறகு சில வரைமுறைகளை தளர்த்தி விட்டனர். அதன்படி பெண்கள் மறுவாழ்வு மையத்தில் இருப்பவர்கள் கார்ப்பரேஷன் ஊழியர் மனைவிகள் என அனைவரும் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என கூறினர். அதேபோல தேர்தல் நெருங்கி வரும் பட்சத்தில் இத்திட்டத்தை விரிவாக்கம் செய்து இனி புதிதாக ரேஷன் அட்டை விண்ணப்பிக்கும் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் வழி செய்வதாக கூறியுள்ளனர். தற்பொழுது இத்திட்டத்தின் 20 வது தவணையானது பயனாளிகளுக்கு போடப்பட்டுள்ளது. அதன்படியே ஒரு கோடி 6 லட்சம் பயனாளிகள் உள்ளனர். மேற்கொண்டு திட்டம் ரீதியாக விரிவாக்கம் செய்யப்படும் என அறிவித்துள்ளனர்.

அதிமுக – வில் மீண்டும் ஓபிஎஸ் சசிகலா டிடிவி இணைப்பு.. கொந்தளித்த முன்னாள் நிர்வாகி!!

0

ADMK : தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள அதிமுக பாஜக மீண்டும் இணைந்துள்ளது. இந்த இணைப்பில் கட்டாயம் ஓபிஎஸ் சசிகலா டிடிவி தினகரன் உள்ளிட்டோரும் கட்சியுடன் ஐக்கியமாகி விடுவார்கள் என்றும் கூறி வந்தனர். ஆனால் அது ஏதும் நடக்கவில்லை. மாறாக பாஜகவுடன் கூட்டணி வைப்பார்கள் என்று எதிர் பார்த்தனர். அதி ரீதியான அறிவிப்பும் வெளியாகவில்லை. இதற்கெல்லாம் எடப்பாடி போட்ட நிபந்தனை தான் கரணம் என கூறுகின்றனர்.

இப்படி இருக்கையில் அதிமுக முன்னாள் நிர்வாகியான பெங்களூரு புகழேந்தி, தற்பொழுது எடப்பாடிக்கு எதிராக களம் இறங்க உள்ளதாக கூறியுள்ளார். இது ரீதியாக சேலத்தில் அவர் பேட்டியளிக்கையில், ஒரு பொழுதும் ஒருங்கிணைப்பு என்ற பேச்சுக்கு எடப்பாடி தலையசைப்பதில்லை, மாறாக கட்சியை அடமானம் அல்லது விற்று விடுகிறேன் என்ற பேச்சை தான் முன் வைக்கிறார். அந்த வகையில் தான் ஓபிஎஸ் சசிகலா என தொடங்கி அதிமுக முன்னாள் நிர்வாகிகள் யாரையும் சேர்க்க தயாராக இல்லை. இது ரீதியாக ஜே சி டி பிரபாகரன் போன்றோர் எடுத்த முயற்சிகள் அனைத்தும் வீண் தான்.

அதிமுக வலுமை பெற நாங்கலெல்லாம் மீண்டும் இணைய வேண்டுமென்று பல தொண்டர்கள் நினைத்திருந்தனர். அதெல்லாம் தவிடு பொடியாகிவிட்டது. மேற்கொண்டு நாங்கள் தங்கள் பக்கம் எவ்வளவு முடிவு எடுக்க வேண்டுமோ எடுத்து விட்டோம். பழனிச்சாமி இருக்கும் வரை அது ஏதும் நடக்காது. இனி வரும் நாட்களில் நாங்கள் தெளிவான முடிவை எடுக்க உள்ளோம். தமிழகத்தில் உள்ள மூளை முடுக்கெங்கும் பழனிச்சாமிக்கு எதிராக பிரச்சாரம் செய்ய போகிறோம்.

இது ரீதியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். பழனிச்சாமிக்கு எதிராக நாங்கள் செய்யும் இந்த பிரச்சாரத்திற்கு பல முன்னாள் எம்எல்ஏக்கள் ஆதரவளிக்க உள்ளனர். அதேபோல பாஜக-வால்தான் நாங்கள் தோற்றம் என்று கூறிய சிவி சண்முகம் ஜெயக்குமார் போன்றவரை காணவில்லை. ஜெயலலிதா ஒரு முறை பாஜகவுடன் கூட்டணி வைத்து நான் தவறு செய்து விட்டேன் என்று கூறினார். அதனை நோக்கமாக வைத்து எடப்பாடி சிறிது காலம் நாடகமாடிவிட்டார். சேலத்தில் இருந்து சொல்கிறேன் சொந்த ஊரில் கூட எடப்பாடியால் டெபாசிட் வாங்க முடியாது. வாங்கவும் விடமாட்டோம். என்ன செய்யப் போகிறோம் என்பதை பார் என கூறியுள்ளார்.

பேசுறது எப்படின்னு கத்துக்கிட்டு மைக் முன்னாடி வா!. சத்தியராஜ் மகளை விளாசிய மாறன்!..

0

நடிகர் விஜய் இப்போது அரசியல்வாதி விஜய் ஆகிவிட்டார். அதேநேரம் இன்னமும் அவர் தீவிர அரசியலில் இறங்கவில்லை. இப்போது நடித்து கொண்டிருக்கும் ஜனநாயகன் படம் முடிந்தபின் அவர் தீவிர அரசியலில் ஈடுபடுவார்கள் என்கிறார்கள். விக்கிரவாண்டி மாநாடு, தவெக இரண்டாமாண்டு விழா, தவெக பொதுக்குழு கூட்டம் என மூன்றிலும் விஜய் பங்கேற்று திமுகவை திட்டி பேசினார். திமுக ஆட்சியை மன்னராட்சி என தொடர்ந்து விமர்சித்து வருகிறார் விஜய்.

விஜய் வொர்க் ஃபிரம் பாலிடிக்ஸ் செய்து வருகிறார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் தொடர்ந்து கமெண்ட் அடித்து வந்தார். விஜய் களத்தில் இறங்கி மக்களை சந்திக்கவில்லை என்கிற விமர்சனம் பரவலாக எல்லோராலும் வைக்கப்படுகிறது. சமீபத்தில் பாராளுமன்றத்தில் பாஜக அரசு நிறைவேற்றிய வக்பு மசோதாவுக்கு எதிராக இன்று தமிழகமெங்கும் தவெக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. ஆனால், விஜய் இதில் கலந்துகொள்ளவில்லை. இத்தனைக்கும் விஜய்க்கு அன்று ஷூட்டிங் எதுவுமில்லை. அவர் வீட்டில்தான் இருந்தார் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.

சில நாட்களுக்கு முன்பு சமீபத்தில் திமுகவில் தன்னை இணைத்துகொண்ட சத்ய்ராஜ மகள் திவ்யா விஜயை உதயநிதியோடு ஒப்பிட்டு பேசிய வீடியோ இணையத்தில் வைரலானது ‘உதயநிதி சாரை பற்றி பேசுவது எனக்கு பெருமை. அவர் ஒன்றும் ஏசி கேரவானிலும், தோழியோடு விமானத்திலும் செல்லும் அரசியல்வாதி இல்லை. மழை வந்தாலும் வெள்ளம் வந்தாலும் மக்களுக்கு ஒரு பிரச்சனை எனில் உடனே இறங்கி வேலை செய்வார். பாஜக அரசிடமிருந்து தமிழகத்தை காக்க வந்த மாமன்னன் அவர். அவரை எதிர்த்து யார் எங்கு நின்றாலும் டெபாசிட் போய்விடும். அவர் தோற்கடிக்கப்பட முடியாத ஒரு ஹீரோ’ என புகழந்து தள்ளியிருக்கிறார். திவ்யா சமீபத்தில் தன்னை திமுகவுடன் இணைத்துகொண்டவர்.

bluesatta

இந்நிலையில், பிரபல யுடியூபர் மற்றும் அரசியல் விமர்சகர் புளூசட்ட மாறன் எக்ஸ் தளத்தில் ‘உங்களுக்கு மேடைப்பேச்சு சுத்தமாக வரவில்லை. அதை கற்றுக்கொண்டு மைக் முன்பு வாருங்கள். விஜய்யின் அரசியல் மீது விமர்சனம் வையுங்கள். அவர் யாருடன் விமானத்தில் சென்றார். யாருடைய கல்யாணத்திற்கு சென்றார் என சிவாஜி கிருஷ்ணமூர்த்தி போல பேசுவது எதற்கு?’ என பதிவிட்டிருக்கிறார்.

அண்ணாமலை பதவி விலக பாஜக மேலிடம் தான் காரணம்.. நயினார் சொன்ன உண்மை!!

0

BJP: சட்டமன்ற தேர்தல் வருவதற்கு ஓராண்டுக்கு முன்பாகவே அரசியல் களத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. அதில் ஒன்றுதான் அதிமுக பாஜக மீண்டும் இணைந்தது. குறிப்பாக லோக்சபா தேர்தலில் இவர்களின் கூட்டணியானது முறிவு பெற்றது. இதற்கு முக்கிய காரணமாக அண்ணாமலை விளங்கினார். மேற்கொண்டு கூட்டணி பிரச்சனையில் அதிமுக மீண்டும் இணைந்தால் பதிவை விட்டு விலகிக் கொள்கிறேன் என்று சவால் விட்டார்.

அதேபோல வரப்போகும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள அதிமுக பாஜக மீண்டும் இணைந்துள்ளது. அண்ணாமலையும் சொல்லியது போலவே பாஜக வை விட்டு விலகியுள்ளார். இதில் பின்னணி காரணங்கள் பலவற்றை அடுக்கடுக்காக கூறுகின்றனர். ஒரு பக்கம் எடப்பாடி பாஜக மேலிடத்தில் அண்ணாமலை இருக்கவே கூடாது என்று கண்டிஷன் போட்டதாக கூறுகின்றனர். மறுப்புறம் எடப்பாடி மற்றும் அண்ணாமலை இருவரும் ஒரு சாதியை சேர்ந்தவர்கள், அப்படி இருக்கையில் அண்ணாமலை வளர்வது இவருக்கு பிடிக்கவில்லை.

அதனால் தான் இப்படி ஒரு நிபந்தனையை வைத்ததாக தெரிவித்துள்ளனர். இதனால் அண்ணாமலைக்கு மேலிடம் பதவியை விட்டு விலகுமாறு அழுத்தம் கொடுத்ததாக தகவல்கள் வெளியானது. தற்பொழுது புதிய பாஜக மாநில தலைவராக இருக்கும் நயினார் நாகேந்திரனிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு அவர் கூறியதாவது, அண்ணாமலையை யாரும் கட்சியை விட்டு விளக்க முடியாது. அவர் பாஜகவின் சொத்து. தமிழக பாஜகவிலிருந்து ஒருத்தரும் அவரை வெளியேற்ற இயலாது.

அரசியல் மாற்றங்கள் என்பது ஒவ்வொரு கட்சியிலும் இருக்கும் ஒன்று. அது நடந்து கொண்டுதான் இருக்கும். ஒரு சிலர் கூட்டணியை வரப்போகும் தேர்தலுக்காக வைப்பார்கள், அடுத்த தேர்தலில் முடித்துக் கொள்வார்கள். இதெல்லாம் சாதாரணமான ஒன்று. ஆனால் அரசியலை மிகவும் நாகரிகமாக எடுத்துச் செல்ல வேண்டும் என்பதுதான் என்னுடைய நிலைப்பாடு என கூறியுள்ளார். அதே கணம் அண்ணாமலையும் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

நான் சாதாரண தொண்டன். மோடியை தொடர்ந்து கட்சி ரீதியாக மத்திய நிர்வாகிகள் எந்த முடிவெடுத்தாலும் அதற்கு நான் கட்டுப்படுவேன். வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் கட்டாயம் பாஜக ஆட்சியைப் பிடிக்கும். அதிமுக பாஜக வெவ்வேறு கொள்கைகள் கொண்ட கட்சிகளாக இருந்தாலும், காமன் மினிமம் ப்ரோக்ராம் கொண்டு கட்சியை கொண்டு செல்ல முடிவெடுத்துள்ளதால் இனி வரும் நாட்களில் எந்த ஒரு சந்தேகமும் இருக்காது என கூறியுள்ளார்.

அதிமுக வை இப்படி தான் பாஜக யூஸ் பண்ண போகுது.. இதெல்லாம் பெரிய பிளான்!! பரபர பேட்டியளித்த மாஜி அமைச்சர்!!

0

ADMK BJP: அரசியல் களத்தில் மீண்டும் அதிமுக பாஜக இணைந்தது குறித்து தான் அனைத்து கட்சியினரின் பேச்சாக உள்ளது. இதில் பல நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு தான் பாஜக கூட்டணிக்கு ஒப்புக் கொண்டுள்ளதாம். ஆனால் அதிமுக பாஜக மீண்டும் இணைந்துள்ள நிலையில் இதில் மறைமுக சூழ்ச்சி உள்ளதாக கூறுகின்றனர். பாஜக தனது ஆதரவளிக்காத மாநிலங்களை தன்வசப்படுத்தி ஆளுமை செய்ய வேண்டும் என்பதை நினைக்கிறதாம். அதனால் தான் அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி வைத்துள்ளது. இது ரீதியாக மாஜி அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியதாவது, வரப்போகும் சட்டமன்றத் தேர்தலில் எந்த ஒரு ஆட்சி மாற்றமும் நிகழாது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று, ஏன் இந்தியாவுக்கே அது தெரியும்.

அதேபோல பாஜகவின் முக்கிய நோக்கம் அதிமுகவை மீண்டும் தமிழகத்தில் காலூன்ற வைப்பதெல்லாம் கிடையாது, அதற்கு பதிலாக கூட்டணி கட்சியை கைக்குள் வைத்து ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கொள்கையை கொண்டு வருவதற்காகத்தான் இப்படி செய்கிறது. இதற்குப் பின்னணியில் ஆர்எஸ்எஸ் பாஜக இணைந்திருப்பது நிதர்சனமான உண்மை. அதன் சூழ்ச்சி காரணமாக தான் இந்த மாநில பதவி நியமனம் நாடகமெல்லாம், மேற்கொண்டு சூழ்ச்சி தெரியவரும் நிலையில் அனைவரின் குட்டும் வெளிப்படும்.

தமக்கு ஆதரவளிக்காத மாநிலங்களில் ஆதரவை திரட்டவே இப்படி செய்து வருகின்றனர். அதிகாரத்தில் உட்கார எந்த வகையான கீழ்த்தர செயலையும் செய்ய பாஜக தயாராக உள்ளது. அதன்படி தான் தற்பொழுது அண்ணாமலை பதவியானது பறிக்கப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார்.