Home Blog Page 296

தமிழக பாஜக தலைவராகப் போகும் நயினார்.. இவருக்கெல்லாம் அந்த அதிகாரமில்லை!! அண்ணாமலை வீடியோ வைரல்!!

0

BJP: பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வாகியுள்ள நிலையில் அண்ணாமலைக்கு அடுத்த போஸ்ட் என்னவாக இருக்கும் என்று கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாக மத்திய அமைச்சரவையில் முக்கிய பொறுப்பு கொடுக்கப்படும் என கூறி வருகின்றனர். கூட்டணி கட்சி என்று கூட பாராமல் அதிமுக குறித்து அண்ணாமலை அவதூறாக பேசியதால் எடப்பாடி கூட்டணிக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இதன்பின் அதிமுக சார்பாக ஒருபோதும் பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என கூறிவந்தனர். அதேபோல அண்ணாமலையும், அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டால் கட்டாயம் பதவி விலகிக் கொள்வதாக கூறினார். இப்படி இருவரும் மாறி மாறி வசைப்பாடி வந்த நிலையில், டெல்லி சென்று அமித்ஷா வை எடப்பாடி சந்தித்து வந்தார். அதன்பின் இருவரும் மீண்டும் இணைய போவதாக தகவல்கள் வெளியானது.

https://x.com/Surya_BornToWin/status/1910672830716330209?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1910672830716330209%7Ctwgr%5E5ced4b5637078dc7f8b99971640cc3f8e4fc53ef%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftamil.samayam.com%2Flatest-news%2Fstate-news%2Ffact-check-did-annamalai-said-nainar-nagendran-has-no-authority-viral-video-is-false%2Farticleshow%2F120225883.cms

அதேபோல பாஜக மாநில தலைமைக்கு வேறு தலைவர் நியமிப்பதாகவும் கூறினர். அந்த வகையில் இந்த வாய்ப்பானது தற்போது நயினார் நாகேந்திரனுக்கு சென்றுள்ளது. தற்பொழுது அண்ணாமலை மற்றும் அதிமுக எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் முன்பு பேச வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் இருவருக்குண்டான கூட்டணி குறித்து நயினார் நாகேந்திரனிடம் கேட்டபோது, எடப்பாடி-யிடம் பேசினாலே போதும் ரெய்டு விட அவசியம் இருக்காது என்று கூறினார்.

இவ்வாறு அவர் கூறியது குறித்து அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேட்ட போது, ரெய்டு அனுப்புவதற்கான அதிகாரம் அவருக்கு இல்லை என தெரிவித்திருந்தார். இந்த வீடியோவானது தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சற்றுமுன் : அன்புமணிக்கு தலைவர் பதவி.. ராமதாஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

0

PMK: கடந்த இரு தினங்களுக்கு முன்பு பாமக நிறுவனர் ராமதாஸ் கட்சி தலைவர் பதவியிலிருந்து அன்புமணியை நீக்கி உத்தரவிட்டிருந்தார். இதற்கு முக்கிய காரணமாக அப்பா மகனுக்கிடையே உள்ள கருத்து வேறுபாடு தான் என்று பலரும் கூறினர். சில மாதங்களுக்கு முன்பு பொதுக்கூட்டம் ஒன்றில் மகள் வழி பேரனை இளைஞர் அணித் தலைவராக நியமிப்பதில் இருவருக்கும் மேடையிலேயே மோதல் போக்கு உண்டானது. அக்கணமே பாமக நிறுவனர், இது நான் உருவாக்கிய கட்சி நான் சொல்வதை கேட்கவில்லையென்றால் யாராக இருந்தாலும் கட்சி விட்டு வெளியே செல்லுங்கள் என தெரிவித்தார்.

இதற்கு ஏற்றார் போல் அன்புமணியும், பனையூரில் புதிய அலுவலகம் திறந்துள்ளேன் யாராக இருந்தாலும் அங்கு வந்து என்னை சந்தியுங்கள் என்று கூறினார். இவர்கள் இருவரையும் கட்சி நிர்வாகிகள் சமாதானம் செய்து வைத்தனர். தற்போது மீண்டும் இருவருக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இச்சமயம் தலைவர் பதவியிலிருந்து அன்புமணியை நீக்கும் அளவிற்கு மோதல் போக்கு உச்சிக்கு சென்று விட்டது. இப்படி இருக்கையில் ராமதாஸ் அவர்களை காண பல்வேறு நிர்வாகிகள் தைலாபுரம் சென்று வருகின்றனர்.

ஆனால் ராமதாஸ் யாரையும் சந்திப்பதில்லை என்று ஒரேடியாக மருத்து வருகிறாராம். இது ரீதியாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், என்னை யாரும் சந்திக்க வர வேண்டாம், குறிப்பாக தலைமை பதவியிலிருந்து அன்புமணியை நீக்கியது தொடர்பாக பேச விரும்பவில்லை என தெரிவித்துள்ளார். ஆனால் கௌரவ தலைவரான ஜிகே மணி இது குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், கட்சியின் ஒற்றுமைக்காக இருவரும் இணைய வேண்டும். மேற்கொண்டு பாமக ஒரு குடும்பம் இதில் தற்பொழுது மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது.

விரைவில் இந்த சலசலப்பு சரியாகிவிடும் மேற்கொண்டு நல்ல செய்தி வரும் என தெரிவித்துள்ளார். கட்சி தலைமையிலிருந்து நீக்கியது குறித்து அன்புமணியிடம் பேசி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

எங்களுடன் கூட்டணி வேண்டுமா.. கட்டாயம் இவர்கள் மீது ED ரெய்டு பாயனும்!! எடப்பாடி போட்ட ஆர்டர்!!

0

ADMK BJP: அதிமுக, பாஜகவுடன் இந்த முறை கூட்டணி வைக்கும் போது மிகவும் விவரமாக பல நிபந்தனைகளை போட்டுள்ளதாம். இவர்களின் முதல் நிபந்தனையாக இருந்ததே அண்ணாமலை மாநில தலைவர் பதவியில் இருக்கக் கூடாது என்பதுதான். அதனை பாஜக நிறைவேற்றி விட்டது, இதற்கு அடுத்தபடியாக கிட்டத்தட்ட பத்துக்கும் மேற்பட்ட நிபந்தனைகளை போட்டுள்ளதாம். அதில் முதலாவதாக, எங்கள் உட்கட்சி பிரச்சனையில் தலையிடக்கூடாது யாரையும் கூட்டு சேர்க்க கோரி வலியுறுத்தவும் கூடாது.

இரண்டாவதாக திமுக மற்றும் பாஜக ரகசிய பேச்சுவார்த்தையில் இருப்பதாக தகவல்கள் வெளிவரும் நிலையில் அது இல்லை என்று நிரூபணம் செய்ய வேண்டும். மூன்றாவதாக திமுக அமைச்சர்கள் மீது பாஜக ED மூலம் நடவடிக்கை எடுத்து நெருக்கடி கொடுக்க வேண்டும். நான்காவதாக, அதிமுக நிர்வாகிகள் மீதுள்ள வழக்கை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லாமல் காலம் தாழ்த்த வேண்டும். ஐந்தாவதாக, நாங்கள் யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பதை நாங்கள் தான் முடிவெடுப்போம் அதுவும் அரசியல் சூழல் பொறுத்து எடுக்கப்படும் இதில் பாஜக கட்டாயப்படுத்தக்கூடாது.

ஆறாவதாக, தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எங்கள் கட்சியின் நிர்வாகிகளில் ஒருவராக தான் இருக்க வேண்டும். ஏழாவதாக, தேர்தலில் உங்களுக்கு எத்தனை இடம் வேண்டும் என்பதை கேட்டு பெற்றுக் கொள்ளலாம் இதை தவிர்த்து கூட்டணி கட்சிகளுக்கு நாங்கள் ஒதுக்கும் தொகுதிகளை தான் வாங்கிக் கொள்ள வேண்டும். எட்டாவதாக, எந்தெந்த இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெறலாம் என்று வரிசை பட்டியல் தரவுகளில் அதில் 50 சதவீதம் மட்டுமே பாஜக கேட்டு வாங்கிக் கொள்ள முடியும்.

மீதமுள்ள 50 சதவீதம் நாங்கள் தரும் தொகுதிகளை தான் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒன்பதாவதாக பாஜகவின் என்டியே கூட்டணிக்கு தமிழகத்தில் அதிமுக தலைமையாக அறிவிக்க வேண்டும். பத்தாதாக, வரப்போகும் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிகப்படியான தொகுதிகளில் அதிமுக போட்டியிட சம்மதிக்க வேண்டும். இவையனைத்திற்கும் ஒப்புக் கொள்ளும் பட்சத்தில் கூட்டணி வைத்துக் கொள்ளலாம் என்று எடப்பாடி அக்ரீமெண்ட் போட்டுள்ளார். பாஜகவும் மறுக்க முடியாமல் ஒப்புதல் அளித்துள்ளது. நாளடைவில் இது ரீதியான அறிவிப்புகள் ஒன்றின் பின் ஒன்றாக வெளிவரும் என கமலாலய வட்டாரங்கள் கூறுகின்றனர்.

பாமக நிர்வாகிகளுக்கு புது ஆர்டர் போட்ட ராமதாஸ்!.. இது எங்க போய் முடியுமோ!…

0

பாமகவின் தலைவர் பதவியிலிருந்து அன்புமணியை நீக்கிவிட்டு தானே இனிமேல் தலைவர் எனவும், அன்புமணி இனிமேல் கட்சியின் செயல் தலைவராக இருப்பார் எனவும் அறிவித்து பாமக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ். கட்சிக்கு புதிதாக வந்துள்ள இளைஞர்களை வழிநடத்த இந்த முடிவும் எனவும் ராமதாஸ் சொல்லியிருக்கிறார். இதனால், அன்புமணியும், அவரின் ஆதரவாளர்களும் கடும் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த முடிவு பற்றி செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ் ‘இதுவரை சட்டப்பேரவைக்கோ, நாடாளுமன்றத்துக்கோ செல்வதற்கு நான் ஆசைப்பட்டதில்லை. இனியும் செல்லப் போவதில்லை என உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன். என் வழிகாட்டுதலின்படி செயல்பட வேண்டும் என இளைஞர்களும் கட்சி நிர்வாகிகளும் கட்டளையிட்டதாலும், 2026 சட்டமன்றத் தேர்தலில் கட்சியின் வெற்றியைக் கருத்தில் கொண்டு சில செயல் திட்டங்களை வகுத்துள்ளேன்.

அதன்படி கட்சி அமைப்பில் சில மாற்றங்களை செய்ய முடிவெடுத்துள்ளேன். பா.ம.க நிறுவனர் என்பதோடு இனி கட்சியின் தலைவராகவும் செயல்படுவதற்கு முடிவு செய்துள்ளேன்’எனவும் விளக்கமளித்தார். இராமதாஸ் இந்த முடிவை எடுத்தது அவரின் வீட்டிக்குள்ளேயே சிலருக்கு பிடிக்கவில்லை என சொல்லப்படுகிறது.

கடந்த சில தேர்தல்களில் ராமதாஸை ஆலோசிக்காமல் யாருடன் கூட்டணி என்பதை அன்புமணியே முடிவு செய்தார். 2024 பாராளுமன்ற தேர்தல் நடந்தபோது கடைசி நேரத்தில் திமுகவிடம் அன்புமணி பேரம் நடத்தியதால்தான் ஒரு எம்.பி. சீட் கூட இல்லாம போனதாக ராமதாஸ் கருதுகிறார். இப்போது, 2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்கவும் அவர் திமுகவுடன் ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தி வருவது ராமதாஸுக்கு தெரிந்துவிட்டது. இப்படியே போனால் 2026 சட்டமன்ற தேர்தலின் போதும் ஒரு எம்.எல்.ஏ கூட இல்லாமல் செய்துவிடுவார் என்பதற்காகவே தலைவர் பதவியிலிருந்து அன்புமணியை தூக்கிவிட்டார் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.

ஒருபக்கம், கடந்த 2 நாட்களாக ராமதாஸை சந்தித்து அவரை சமாதானம் செய்யும் முயற்சியில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், பாமக தலைவர் நீக்கம் தொடர்பான என்னிடம் பேச யாரும் வர வேண்டாம்’ என ராமதாஸ் அறிவித்திருக்கிறார்.

2026 சட்டமன்ற தேர்தலில் பாஜகவோடு கூட்டணி இல்லை!.. பழனிச்சாமி பேசிய வீடியோ வைரல்!..

0

சசிகலாவின் தயவால் முதல்வரான எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை தக்க வைப்பதற்காக பாஜகவிற்கு ஆதரவாக மாறினார். இதனால் கடுமையான விமர்சனங்களையும் சந்தித்தார். குறிப்பாக அதிமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வைத்துக்கொண்டு அவர்களை மத்திய அரசு மிரட்டியே காரியம் சாதித்து வருவதாக அப்போதையை எதிர்கட்சி தலைவர் ஸ்டாலினும் அடிக்கடி சொல்லி வந்தார்.

2021 சட்டமன்ற தேர்தலில் பாஜகவுன் கூட்டணி வைத்தார் பழனிச்சாமி. ஆனால், அந்த தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்து திமுக வெற்றியை பெற்று மு.க.ஸ்டாலின் முதல்வராக மாறினார். பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் அதிமுக மீது மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்த இது திமுகவிற்கு சாதகமாகிப் போனது. 2021 சட்டமன்ற தேர்தல் மற்றும் 2023 நாடாளுமன்ற தேர்தல் என இரண்டிலுமே அதிமுக தோல்வி அடைந்தது.

eps

ஒருபக்கம், அதிமுக தலைவர்களை அண்ணாமலை கடுமையாக விமர்சிக்க ‘இனிமேல் பாஜகவுடன் கூட்டணி இல்லை’ என அறிவித்தார் பழனிச்சாமி. ஆனால், இப்போது மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்திருக்கிறார். அதுவும், இந்த கூட்டணியில் பழனிச்சாமிதான் முதல்வர் வேட்பாளர் என்று கூட அமித்ஷா சொல்லவில்லை. தேர்தல் முடிவுக்கு பின் அதுபற்றி யோசிப்போம் என்றே சொல்லியிருக்கிறார்.

இந்நிலையில், சூழ்நிலை காரணமாக அப்போது பாஜகவுடன் கூட்டணி அமைத்து விட்டோம். இப்போது வரும் நாடாளுமன்ற தேர்தலில் மட்டுமில்லை. அடுத்து வரப்போகும் சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தில் அவர் பேசிய வீடியோவை இப்போது சிலர் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ’இப்படி பேசிய பழனிச்சாமி இப்போது எப்படி மாறிவிட்டார்’ என பதிவிட்டு வருகிறார்கள்.

 

அறிவிக்கப்பட்ட தள்ளுபடி!! மகிழ்ச்சியில் நகைக் கடன்.. பயிர் கடன் பெற்றவர்கள்!!

0

திராவிட மாடல் ஆட்சியில் மிகப்பெரிய வளர்ச்சியை தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் அடைந்திருக்கின்றனர். அதன்படி, தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் மட்டுமல்லாது தமிழ்நாடே 9.69% வளர்ச்சியை அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து மக்களும் தங்களுடைய அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் விதமாகவும் அவர்களுக்கான வளர்ச்சி குறித்த முடிவுகளில் கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு வளர்ச்சி பெற்று இருப்பதை விட 2024 2025 ஆம் ஆண்டு மிகப்பெரிய வளர்ச்சியை பெற்று இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மிகப்பெரிய வளர்ச்சியில் கூட்டுறவு துறைகளுக்கும் கூட்டுறவு சங்கங்களுக்கும் மிகப்பெரிய பங்கு இருக்கிறது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் கூட்டுறவு துறையின் கீழ் நகை கடன் தள்ளுபடி திட்டம் 2021 மூலமாக ரூ.4,913 கோடி ரூபாய் அடமானம் வைக்கப்பட்ட நகைகள் தள்ளுபடி செய்யப்பட்டு வடக்கு வைக்கப்பட்ட நகைகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன்களின் மீதான தள்ளுபடி, விவசாயிகளுக்கான பயிர் கடன் தள்ளுபடி உள்ளிட்ட தள்ளுபடிகளின் மூலம் தமிழக அரசு வெற்றிகரமாக கூட்டுறவு சங்கங்களின் மூலம் வழங்கி வருகிறது.

மேலும் விவசாயிகளுக்கு என்று தனியாக பார்க்கும் பொழுது பயிர் கடன், உழவர் கடன் அட்டை திட்டம், கால்நடை வளர்ப்பு திட்டம், கால்நடைகளுக்கான உணவு பொருள் தொழில்களுக்கான திட்டம் என பல்வேறு பிரிவுகளின் கீழ் விவசாயிகளுக்கு கடன் தொகைகள் வழங்கப்பட்டு விவசாயத்தை பெருமளவில் தமிழக அரசு முன்னேற்றி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் செய்த நன்மைகள் குறித்தும் சிறப்பு திட்டம் மக்களுக்கான கடன் தள்ளுபடிகள் குறித்தும் அமைச்சர் பெரிய கருப்பன் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

தட்கலில் ரயில் டிக்கெட் முன்பதிவு நேரம் மாற்றம்!! டிக்கெட் புக் செய்வதற்கு முன் இதை கவனியுங்கள்!!

0

இந்தியாவில் இருக்கக்கூடிய பல அர்த்தங்கள் உடைய அன்றாட போக்குவரத்திற்கு ரயில்களையே சார்ந்து இருக்கின்றனர். இதன் பெரும்பாலானோர் தங்களுடைய ரயில் பயணத்திற்கு டிக்கெட்டுகளை முன் பதிவு செய்து பயணிப்பது வழக்கமான ஒன்றாக மாறி உள்ளது. இந்த நிலையில் IRCTC ஆனது தட்கலில் டிக்கெட் முன்பதிவு நேரத்தை மாற்றி அமைத்து இருக்கிறது.

மாற்றி அமைக்கப்பட்ட டிக்கெட் முன்பதிவு நேரங்கள் பின்வருமாறு :-

✓ AC வகுப்பு (1A, 2A, 3A, CC): முந்தைய நேரம் காலை 10:00 மணி. புதிய நேரம் காலை 11:00 மணி என மாற்றப்பட்டு இருக்கிறது.

✓ Non-AC வகுப்பு (SL, 2S): முந்தைய நேரம் காலை 11:00 மணி. புதிய நேரம் மதியம் 12:00 மணி என மாற்றப்பட்டு இருக்கிறது.

✓ Premium Tatkal (PT): முந்தைய நேரம் காலை 10:00 மணி. புதிய நேரம் காலை 10:30 மணி என மாற்றப்பட்டு இருக்கிறது.

✓ Current Reservation: புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்பு. இதில் எந்த மாற்றமும் இல்லை.
முகவர்கள் முன்பதிவு செய்ய வழங்கப்பட்ட வந்த அனுமதி தற்பொழுது இல்லை. இவற்றிற்கான காலநேரம் காலை 10 AM முதல் 12 PM வரை.

✓ IRCTC இணையதளத்தில் அதிகப்படியான பயன்பாடு: முன்பு மிதமாக இருந்தது. இப்போது மேம்படுத்தப்பட்டுள்ளது. காத்திருக்கும் நேரம் குறைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய தகவல் :-

புதிய நேர அமைப்பு நேரடி பயணிகள் முன்பதிவு செய்வதை ஊக்குவிக்கிறது. மேலும், முதல் இரண்டு மணி நேரத்தில் பயண முகவர்கள் முன்பதிவு செய்வதைத் தடுப்பதாகவும் அமைக்கப்பட்டிருக்கிறது. மேலே கூறப்பட்டவை அனைத்தும் வகுப்பு வாரியாக பிரிக்கப்பட்ட முன்பதிவு நேரங்கள் ஆகும். தட்கலில் டிக்கெட் புக் செய்து பயணிக்க நினைக்கக் கூடியவர்கள் இனி மாற்றப்பட்ட காலங்களை அறிந்து அதற்கேற்றவாறு முன்பதிவு செய்ய வேண்டும் என ரயில்வே துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தொட்டுப்பார் சீண்டிப்பார் வீடியோ போடுங்க!. செம காமெடியா இருக்கும்!.. ஸ்டாலினை கலாய்க்கும் பழனிச்சாமி!..

0

எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தனது எக்ஸ் தளத்தில் கீழ்க்கண்டவாறு பதிவிட்டுள்ளார்:

பொதுவாக, ஒரு ஆட்சிக்கான அடையாளமாக, அந்த ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட மக்கள் நலத் திட்டங்களே திகழும். ஆனால், ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியோ, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பறிபோன பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் புழக்கம், எங்கும் எதிலும் ஊழல் என குறைகள் மட்டுமே நிறைவாக இருக்கும் ஒரு அவல ஆட்சியாக இருக்கிறது.

இதனை திரு. ஸ்டாலினும் நன்கு உணர்ந்தே இருக்கிறார். அதனால் தான், கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து இவைகளை திசைதிருப்ப வரிசையாக நாடகங்களை அரங்கேற்றி வருகிறார்.

கவுண்டமணி ஒரு நகைச்சுவையில் இலையில் செங்கலை வைத்துவிட்டு “சோத்துல கல்லு இருக்கு” என்பார். அதுபோலத் தான் இருக்கின்றன திரு. ஸ்டாலின் கொண்டுவரும் தீர்மானங்கள்! இந்த கருணாநிதி காலத்து டெக்னிக் எல்லாம் இன்னும் மக்களிடம் செல்லுபடியாகும் என்று நம்புகிறீர்களா? வாய்ப்பே இல்லை!

இவ்வளவு தீர்மானங்களை வரிசை கட்டிக்கொண்டு வருபவர், தமிழ்நாட்டின் ஜீவாதாரப் பிரச்சனையான காவிரி நதிநீர் உரிமை குறித்து ஒரு தீர்மானம் கூட கொண்டுவரவில்லையே ஏன்? எஜமான விசுவாசம் தடுக்கிறதா திரு. ஸ்டாலின் அவர்களே? கர்நாடக காங்கிரஸ் முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோருடன் பல கூட்டங்களில் கொஞ்சிக் குலாவிக் கொண்டிருக்கும் நீங்கள், ஒரு முறையாவது காவிரி குறித்து பேசியதுண்டா? “மேகதாது அணை தமிழ்நாட்டுக்கு நன்மை தரும்” என்று தமிழ்நாட்டிலேயே கர்நாடக முதல்வரை பேசவிட்டு வேடிக்கை பார்த்த கொத்தடிமைகள் தானே நீங்கள்?

கேரள கம்யூனிஸ்ட் முதல்வருடன் பல மேடைகளைப் பகிர்ந்துகொண்டு கைகுலுக்கிக் கொண்டிருக்கும் நீங்கள், ஒரு முறையாவது முல்லைப் பெரியாறு அணையில் தமிழ்நாட்டின் மாநில உரிமை குறித்து , ஒரு கோரிக்கையாவது வைத்தது உண்டா?

2009-14 UPA கூட்டணி ஆட்சியில், முதுகைக் காட்டினால் கூட கையெழுத்து போடும் அளவிற்கு காங்கிரசுக்கு அடிமை சாசனம் எழுதிவிட்டு மத்திய அரசில் பதவி சுகத்தை அனுபவித்த எஜமான விசுவாசிகள் நீங்கள் தானே? இலங்கை இறுதிப் போரில் லட்சக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட போது, காங்கிரசுக்கு சாமரம் வீசிக்கொண்டு, எத்தனை மந்திரி என விவாதித்துக் கொண்டிருந்த சுயநலவாதிகள் தானே நீங்கள்?

2ஜி இமாலய ஊழல் வழக்கில் திகார் சிறையின் கதவுகள் அழைத்த போதும், அறிவாலய மேல் மாடியில் ரெய்டு நடந்த போதும், அன்றைக்கு உங்களை மிரட்டிய உங்கள் எஜமானரான காங்கிரஸ் கட்சியிடம் சரணாகதி அடைந்து, உங்கள் கட்சியையே அடகு வைத்தவர்கள் தானே நீங்கள்?

அறிவாலயக் கதவுகளை மூடிக்கொண்டாலும் உங்களின் கெஞ்சல், கதறல் சத்தம் அன்றைக்கு தமிழ்நாடு முழுக்க தான் நன்றாக கேட்டதே! இவ்வளவு ஏன், காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில், நீட் என்ற தேர்வை அறிமுகம் செய்தவரே உங்கள் கட்சியை சேர்ந்த அன்றைய மத்திய இணை அமைச்சர் காந்திசெல்வன் தானே? இப்படிப்பட்ட வரலாறு கொண்ட உங்களுக்கு, அஇஅதிமுக பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது?

முதலமைச்சருக்கு நேரடியாக சவால் விடுகிறேன்- தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு எதிரான நிலைப்பாட்டுடன், மேகதாது அணை, காவிரி நதிநீர் விவகாரங்களில் செயல்படும் கர்நாடக காங்கிரஸ் அரசைக் கண்டித்தும், முல்லைப் பெரியாறு அணையில் தமிழ்நாட்டின் உரிமைகளை மதிக்காமல் செயல்படும் கேரள கம்யூனிஸ்ட் அரசைக் கண்டித்தும் அரசினர் தனித் தீர்மானத்தை முடிந்தால் சட்டப்பேரவையில் கொண்டுவாருங்கள் பார்ப்போம்!

(பி.கு. : அமைச்சர் நேருவுக்காக “தொட்டுப் பார்- சீண்டிப் பார்” வீடியோ ஷூட்டிங் முடிந்துவிட்டதா? எப்போது ரிலீஸ்? சீரியஸ் அரசியலுக்கு நடுவில் மக்களுக்கு அந்த வீடியோ நல்ல நகைச்சுவையாக இருக்கும் என்பதால், அதனை தவறாமல் வெளியிட வேண்டுமென திரு. ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்.)’ என நக்கலடித்திருக்கிறார்.

முதல்முறையாக குடியரசு தலைவருக்கு விதிக்கப்பட்ட காலக்கெடு!! தமிழக அரசின் வழக்கில் அதிரடி!!

0

உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசானது ஆளுநர் ரவி மீது வழக்கு தொடர்ந்திருக்கிறது. அந்த வழக்கில் தமிழக அரசானது சட்டப்பேரவையில் நிறைவேற்றக்கூடிய மசோதாக்கள் உண்மையில் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்படுவதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் இந்த வழக்கானது சமீபத்தில் விசாரணைக்கு வந்திருக்கிறது.

இந்த வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஆளுநர் ரவியின் செயல்பாடுகளில் சட்டவிரோதம் இருப்பதாகவும் அவருக்கென தனி அதிகாரம் எதுவும் கொடுக்கப்படவில்லை என்றும் கூறியதோடு அவர் ஜனாதிபதிக்கு அனுப்பிய மசோதாக்கள் எதுவும் செல்லாது என்ற தீர்ப்பினையும் வழங்கியது.

முக்கியமாக தங்களுடைய சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் இருப்பது மிகப்பெரிய குற்றமாக இருக்கிறது என்று அறிவித்ததோடு ஆளுநர் ரவி நிராகரித்த 10 முக்கிய மசோதாக்கள் இன்று சட்டமாக அமலுக்கு வந்திருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசுகள் செய்திருக்கக்கூடிய வழக்கினுடைய விவரங்கள் அதற்கு சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பு உள்ளிட்ட அனைத்து விவரங்களும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.

நேர்மையற்ற முறையில் ஆளுநர் செயல்பட்டு இருப்பதாகவும் உச்ச நீதி மன்றத்தின் உடைய தீர்ப்பை மதிக்காமல் ஆளுநர் ரவி நடந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டதோடு 415 ஆவது பக்கத்தில் ஆளுநர் அனுப்பி வைக்கக்கூடிய மசோதாக்களுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு 3 மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

ஒருவேளை 3 மதங்களுக்குள் முடிவெடுக்க முடியவில்லை என்றால் இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து மாநிலங்களுக்கும் அவர்களுடைய மசோதாக்கலுக்கான விளக்கங்களை அளிக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் தக்க தண்டனை வழங்குவதற்கு நீதிமன்றம் எப்பொழுதும் தயாராக இருப்பதாகவும் மாநிலங்கள் குடியரசுத் தலைவர் மீதான குற்றங்களை நேரடியாக நீதிமன்றத்தில் தெரிவிக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்திய ஆட்சி அமைக்கப்பட்டதிலிருந்து இதுவரை முதல் முறையாக குடியரசு தலைவருக்கு நீதிமன்றத்தால் காலக்கெடு விதிக்கப்பட்டிருப்பது வரலாற்றில் இதுவே முதல்முறை.

என்னை பற்றி குறை மட்டுமே கூறுகிறார் என் கணவர்!! புலம்பி தள்ளும் வரலட்சுமி சரத்குமார்!!

0

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நடிகராக விளங்கக்கூடிய சரத்குமாருக்கும் அவரது முதல் மனைவிக்கும் பிறந்த மூத்த மகள் தான் வரலட்சுமி சரத்குமார். இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான போடா போடி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

அதன்பின் பல படங்களில் நடித்த வெற்றி கொடுத்த இவர், இரண்டு படங்களில் மட்டும் வில்லியாக தன்னுடைய கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்திருப்பது ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்பொழுது சினிமா துறையில் மார்க்கெட்டில் அந்த நடிகையாகவும் தொலைக்காட்சி ஒன்றிய நடுவராகவும் இவர் பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இப்படிப்பட்ட சூழலில் இவர் ஏற்கனவே திருமணம் ஆன மற்றும் திருமணம் ஆகி 15 வயது மதிக்கத்தக்க மகளுடன் இருக்கக்கூடிய ஒருவரை காதலித்த திருமணம் செய்து கொண்டார். வரலட்சுமி சரத்குமார் காதலித்து திருமணம் செய்து கொண்டவர் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவ் என்பவர் அவர். நடிகை வரலட்சுமி தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்த மிகப்பெரிய நடிகையாக இருந்து வந்தவர்.

இப்படிப்பட்ட சூழலில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகை வரலட்சுமி சரத்குமார் பேசியிருப்பதாவது :-

தன்னால் தன்னுடைய கணவரை வைத்துக்கொண்டு சமாளிக்க முடியவில்லை என்றும் எதற்கு எடுத்தாலும் என்னுடைய அப்பா மற்றும் அம்மாவிடம் என்னை பற்றி வாட்ஸ் அப் வாய்ஸ் நோட்டில் புகார் தெரிவித்துக் கொண்டே இருப்பதாகவும் இவர் செய்யக்கூடிய செயலானது சின்ன குழந்தைகள் போல இருக்கிறது என்றும் தெரிவித்து இருக்கிறார். என்னுடைய பெற்றோரும் அவர் செய்யக்கூடிய கம்ப்ளைன்ட் களை மதித்து என்னை திட்டிக் கொண்டே இருக்கின்றனர் அவர்கள் இருவரும் என் கணவருக்கு மட்டுமே சப்போர்ட் செய்கின்றனர் என புலம்பி இருக்கிறார் வரலட்சுமி சரத்குமார்.