Home Blog Page 297

அதிமுகவுக்கு எண்ட் கார்டு!.. அமித்ஷாவோட பிளானே இதுதான்!.. ஐடியா இல்லாத பழனிச்சாமி!..

0

பாஜக ஆட்சி இல்லாத மாநிலங்களில் எந்த கட்சி வலிமையோடு இருக்கிறதோ அதோடு கூட்டணி வைத்து ஒருகட்டத்தில் அந்த கட்சியை பிளவுப்படுத்தி டம்மியாக்கி வருமான வரித்துறை ரெய்டு போன்றவற்றை வைத்து மிரட்டி பாஜகவின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து அந்த மாநிலத்தில் வலிமை பெற்ற கட்சியாக பாஜகவை மாற வைப்பதுதான் பாஜகவின் ராஜ தந்திரம். இதை மத்திய அமைச்சர் அமித்ஷா சிறப்பாக செய்வார். ஆந்திரா, கர்நாடகா, பீகார் போன்ற மாநிலங்களில் இதை செய்தும் காட்டியிருக்கிறார். பாஜக எப்போது மத்தியில் ஆட்சிக்கு வந்தார்களோ அப்போது முதல் இப்போதுவரை இதைத்தான் செய்து வருகிறார்கள்.

கடந்த பல வருடங்களாகவே தமிழகத்தில் காலூன்ற பாஜக எல்லா முயற்சிகளையும் செய்து வருகிறது. இப்போது 8 சதவீத ஓட்டுகள் வரை வந்துவிட்டார்கள். இந்நிலையில்தான் 2026 சட்டமன்ற தேர்தலை குறிவைத்து அதிமுக – பாஜக கூட்டணி உருவாகியிருக்கிறது. இந்நிலையில், மனு தனிக்கள் என்பவர் கீழ்க்கண்டவாறு தன்னுடைய முகநூலில் பதிவிட்டுள்ளார்.

eps
eps

அண்ணாமலை மாற்றப்படுவார் என்றதும், “அவர் பவர் தெரியுமா?” என்று கிக்கி பிக்கி செய்த நண்பர்கள் அனைவருக்கும் விடை தெரிந்தாகிவிட்டது. திரு. மோடியின் கண்ணசைவுகளும், விருப்பங்களும் தான் எல்லா மாநில அரசியலிலும் இராணுவ கட்டளை போல் பாஜக பின்பற்ற வேண்டுமென்பது எழுதப்படாத விதி.

2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவின் கூட்டணியை பெரிதும் எதிர்பார்த்தனர் திரு. மோடியும், திரு. அமித்தும். ஆனால் அதற்கு பெரிதும் எதிர்ப்பாய் நின்றவர் அண்ணாமலை தான். தேர்தல் தோல்வி நேரத்திலே அண்ணாமலையை மாற்றினால் அது கட்சியை பலவீனமாக்கும் என்பதையறிந்து, 2026 சட்டமன்ற தேர்தல் வரை அண்ணாமலையை தலைவராக வைத்திருக்கவே பாஜக தலைமை விரும்பியது. ஆனால் மீண்டும் அதிமுக கூட்டணிக்கு அண்ணாமலை எதிர்ப்பு தெரிவிக்கவே, தடாலடியாக மாற்றப்பட்டுள்ளார்.

2026 தேர்தலை நாம் நினைப்பதை விடவும் வீரியமாக அணுகவிருக்கிறது பாஜக. ஒருங்கிணைந்த அதிமுக மேலுள்ள அழுத்தங்களை சற்று தளர்த்தி, இரட்டை இலை சின்ன பிரச்சனைகள் சுமூகமாக தீர்ந்ததுபோல் ஒரு பிம்பத்தை கட்டமைத்து, அஇஅதிமுகவின் ஒருமித்த முகமாக திரு. பழனிசாமியை நிறுவ பாஜக முன்னேற்பாடுகள் செய்யத் தொடங்கியுள்ளது.

கடந்த முறை NDA கைப்பற்றிய 75 தொகுதிகளை இம்முறையும் அக்கூட்டணி வென்றுவிடும் என்ற நம்பிக்கையில்தான் கூட்டணியை மிகத் தீவிரமாக்கியிருக்கிறது பாஜக.39.71 சதவீத வாக்கு வங்கியில் விஜயின் கட்சியால் பாதிப்பு உண்டா என்றால், நிச்சயம் உள்ளது. ஆனால் அது திமுக கூட்டணியின் 45 சதவீத வாக்கு வங்கியிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையே பாஜகவை சற்று தெம்பூட்டியிருக்கிறது.

eps

அதிருப்தி ஓட்டு மற்றும் தவெக இரண்டும் பெரிதளவில் வாக்கு வங்கியில் பாதிப்பை ஏற்படுத்தினால், திமுக/கூட்டணி எளிதாக 45-50 இடங்களில் பின்னடைவை சந்திக்கும். அதாவது, திமுகவை 90 முதல் 100 தொகுதிக்குள் அடக்குவதே பாஜகவின் நோக்கமாக இருக்கும். 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் தந்திரமும் கனவும் தொங்கு சட்டமன்றமே! அதாவது தனிப் பெரும்பான்மை இல்லாத ஒரு சூழ்நிலையை உருவாக்கி, தன் அதிகார பலத்தால் அதிமுகவை முன்னிறுத்தி தமிழ்நாட்டை பாஜக ஆள வேண்டுமென்பதே அவர்களின் தற்போதைய எண்ணம். ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய பிறகு அதிமுகவை பிளந்து பாஜகவுடன் இணைத்து, தமிழ்நாட்டின் நிரந்தர அரசியல் சக்தியாக உருமாறுவதே பாஜகவின் தீவிரமான திட்டமாக இருக்கப்போகிறது’ என பதிவிட்டிருக்கிறார்.

இதுபற்றி உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். இதுபோன்ற பரபரப்பான அரசியல் கட்டுரைகளுக்கு எங்கள் பக்கத்தை ஃபாலோ செய்யுங்கள்..

வடிவேலு செய்த மோசமான காரியம்!! மீண்டும் களத்தில் இறங்கிய ராஜ்கிரண்!!

0

சிறந்த கதாநாயகனாகவும், கதை நாயகனாகவும், துணை கதாபாத்திரங்களிலும் நடித்து மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர்தான் ராஜ்கிரண். தனுஷ அவரின் தந்தைக்கு ராஜ்கிரன் கொடுத்த வாய்ப்பால் நன்றியை மறவாத தனுஷ் பவர் பாண்டி திரைப்படத்தில் ராஜ்கிரனுக்கு வாய்ப்பு கொடுத்தார். அதோடு கூடவே பாஸ்கரன் மீது தனுஷ் அவர்களுக்கு தனி பாசமும் மரியாதையும் உள்ளது. அப்படித்தான் ராஜ்கிரனும் தனுஷை உரிமையுடன் தம்பி என பாசமாக அழைத்து வந்தார்.

இது குறித்து பிரபல youtube சேனலுக்கு போயிட்டு தந்த செய்யாறு பாலு தெரிவித்திருப்பதாவது :-

90களில் உச்சத்தில் இருந்த நடிகர் தான் ரஜினிகாந்த். அப்பொழுது இருந்த நடிகர்களுக்கு ரஜினிகாந்தை விட ஒரு ரூபாய் அதிக சம்பளம் பெற வேண்டும் என்பது கனவாகவே இருந்தது. அந்த கனவை முறியடிக்கும் வகையில் ராமராஜன் ரஜினியை விட 1 ரூபாய் அதிக சம்பளம் பெற்றார். எனினும் அவரால் தொடர்ந்து அந்த முன்னணியில் நீடிக்க முடியவில்லை. மீண்டும் ரஜினியே முதலிடத்திற்கு வந்துவிட்டார்.

சிறிது காலம் செல்ல ராஜ்கிரன் திடீரென ரஜினியை தாண்டி அதிக சம்பளம் பெறக்கூடிய நடிகராக உருவெடுக்க தொடங்கினார். இதில் ரசிகர்கள் சினிமா துறையினர் என அனைவருக்கும் மிகப்பெரிய ஆச்சரியம் உருவானது. காரணம் எந்த ஒரு வசீகரமும் இல்லாமல் ஹீரோவுக்கான உருவ தோற்றமும் இல்லாமல் முரட்டுத்தனமான உருவத்தோடு காதல் காட்சியில் நடிப்பதற்கு கூட எந்த வித நளினமும் இல்லாத ஒருவர் எப்படி நடிகர் ரஜினியை விட மிகப்பெரிய நடிகராக மாறினார் என்பதுதான்.

இவர் இளையராஜாவின் மிகப்பெரிய தீவிர பக்தராக இருந்ததால் இளையராஜா படங்கள் என்றால் மட்டுமே தன்னுடைய தயாரிப்பில் எடுத்துக் கொள்வார்.மற்றும் படத்தை விநியோகம் செய்ய வேண்டும் என்றாலும் அத்திரைப்படத்தில் இளையராஜாவின் பாடல்கள் உள்ளது என்றால் மட்டுமே அதற்கான உரிமையும் பெறக்கூடிய ஒருவராக இவர் திகழ்ந்து வந்துள்ளார். இப்படிப்பட்ட தருணத்தில் தான் ராஜ்கிரணினுடைய படத்தில் இளையராஜா இணைந்து ராமராஜனை வைத்து படம் தயாரிக்கின்றனர் அதில் வடிவேலுவையும் ராமராஜன் அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

ஒரு காலத்திற்கு ஹீரோவாக நடிப்பதற்கு வாய்ப்பு இல்லாமலும் தன்னுடைய படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்திக்கக்கூடிய நிலையில் ராஜ்கிரனின் சினிமா வாழ்க்கை சரியா தொடங்கியுள்ளது. அந்த நேரத்தில் நடிக்கும் வடிவேலு உதவி செய்துவிட்டு நான்தான் உதவி செய்தேன் என தம்பட்டம் அடித்திருக்கிறார். இது நடிகர் விநியோகஸ்தரான ராமராஜனை மிகவும் வருத்தத்திற்கு உள்ளாக்கியதோடு உச்சத்தில் இருக்கும் பொழுது மட்டுமே நம்முடன் இணைய பல பேர் வருவார் என்றும் கீழே விழுந்துவிட்டால் தூக்கிவிட கூட யாரும் வரமாட்டார்கள் என்ற உண்மையை அவர் அறிந்து அதன் பின் துணை கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதோட அதிமுக காலி!.. கட்சியை அடமானம் வச்சிட்டார் பழனிச்சாமி!.. பொங்கும் நெட்டிசன்கள்!.

0

சசிகலா சிறைக்கு செல்லும் முன் கூவத்தூர் விடுதில் அவரின் காலில் விழுந்து முதல்வர் பதவியை வாங்கியவர்தான் எடப்பாடி பழனிச்சாமி. சசிகலா சிறைக்கு சென்றுவிட அதிமுக பாஜக கட்டுப்பாட்டில் வந்தது. பாஜக மேலிடம் சொன்ன எல்லாவற்றுக்கும் தலையாட்டினார் பழனிச்சாமி. பாஜக – அதிமுக கூட்டணியும் உருவானது. அப்போதைய எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அதிமுக அடிமைகள் என விமர்சனம் செய்தார்.

பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் அதிமுக மீது மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்த இது திமுகவிற்கு சாதகமாகிப் போனது. 2021 சட்டமன்ற தேர்தல் மற்றும் 2023 நாடாளுமன்ற தேர்தல் என இரண்டிலுமே அதிமுக தோல்வி அடைந்தது. ஒருபக்கம், அதிமுக தலைவர்களை அண்ணாமலை கடுமையாக விமர்சிக்க ‘இனிமேல் பாஜகவுடன் கூட்டணி இல்லை’ என அறிவித்தார் பழனிச்சாமி. ஆனால், இப்போது மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்திருக்கிறார். அதுவும், இந்த கூட்டணியில் பழனிச்சாமிதான் முதல்வர் வேட்பாளர் என்று கூட அமித்ஷா சொல்லவில்லை. தேர்தல் முடிவுக்கு பின் அதுபற்றி யோசிப்போம் என்றே சொல்லியிருக்கிறார்.
இந்நிலையில், பிரபல சினிமா மற்றும் அரசியல் விமர்சகர் புளூசட்டமாறன் எக்ஸ் தளத்தில் கீழ்கண்டவாறு பதிவிட்டுள்ளார்.

eps

அதிமுகவின் இறுதி அத்தியாயத்தை எழுதிவிட்டார் பழனிச்சாமி.. எம்.ஜி.ஆரால் வளர்க்கப்பட்டு, ஜெயலலிதாவால் நிலைநிறுத்தப்பட்ட கட்சி அதிமுக. திமுகவிற்கு சிம்ம சொப்பனமாக இருந்து பலமுறை ஆட்சியை பிடித்தது வரலாறு. சூழ்நிலை காரணமாக ஒருமுறை தவறுசெய்து பாஜகவுடன் கூட்டணி வைத்தோம். இனி எந்த காலத்திலும் சேரமாட்டோம என்றார் எடப்பாடி.

தற்போது மீண்டும் அதே தவறு. இந்த சூழ்நிலைக்கு பெயர் ‘ED ரெய்டு’ என்பது சாமான்யரும் அறிந்த விஷயம். இந்த கூட்டணியை அதிமுக தொண்டர்கள் விரும்ப மாட்டார்கள் எனத்தெரிந்தும், சுயநலத்திற்காக.. மொத்தமாக கட்சியை அடகு வைத்து விட்டார். தான்தோன்றித்தனமாக.. பெரியாருக்கு எதிராகவும், பெண்களை கொச்சையாகவும் பேசி.. பாஜகவின் விசுவாசியாக இருந்ததால் நாம் தமிழர் கூடாரத்தை காலி செய்துவிட்டு வெளியேறினர் தொண்டர்கள். தற்போது அதேநிலை அதிமுகவிற்கு வந்துள்ளது.

நேற்று நடந்த பிரெஸ்மீட்டில் அமித் ஷா மட்டுமே பேச.. எடப்பாடி கைகட்டி வாய் மூடி இருந்தார். இது இந்த தனிமனிநருக்கோ அல்லது அதிமுக எனும் பேரியக்கத்திற்கோ நேர்ந்த அவமானம் மட்டுமல்ல. தமிழர்களுக்கும் ஏற்பட்ட தலைக்குனிவு. அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு? தினம் அச்சப்படும் கோழைக்கு இல்லம் எதற்கு என எம்.ஜி.ஆர் பாடியது இதற்குத்தான். அதிமுகவின் இறுதிப்பயணத்தை காவிக்கொடி அசைத்து துவக்கியுள்ளார் எடப்பாடி’ என பதிவிட்டிருக்கிறார். இதோடு ஒத்த கருத்தையே பொதுமக்கள் பலருமே தங்களின் சமூகவலைத்தள பக்கங்களில் சொல்லி வருகிறார்கள்.

பழனிச்சாமி எடுத்த முடிவு சரியா?. தவறா?.. உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்!..

ஓய்வூதியம் வர தாமதம் ஆகிறதா.. சந்தோஷப்படுங்கள்!!RBI கூற்றுப்படி 8% வட்டி கிடைக்கும்!!

0

சமீப காலமாகவே அதிக அளவில் ஓய்வூதியம் செலுத்தக்கூடிய வங்கிகள் தங்களுடைய வங்கிகளில் உள்ள ஓய்வூதியம் பெறக்கூடியவர்களுக்கு அல்லது ஓய்வூதிய நிலுவைத் தொகையை திருப்பி வழங்குவதற்கு மிகவும் காலதாமதம் செய்வதாக புகார்கள் எழுந்து வந்து இருக்கின்றன. இவற்றை சரி செய்யும் விதமாக இனி ஓய்வு பெற்ற மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 8% பட் யானது வழங்கப்படும் என இந்தியன் ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது.

இந்த வட்டி விகிதமானது ஓய்வூதியதாரர்களுக்கு இழப்பீடாகவும் வங்கிகள் மூலம் செலுத்தப்படக்கூடிய ஓய்வூதிய பணத்தோடு இந்த வட்டியானது சேர்த்து வழங்கப்பட வேண்டும் என்றும் ஏப்ரல் 1 2025 அன்று இந்தியன் ரிசர்வ் வங்கி திருத்தப்பட்ட ஏஜென்சி வங்கிகள் மூலம் அரசு ஓய்வூதியம் வழங்கப்படுதல் என்ற பிரிவின் கீழ் தெரிவித்திருக்கிறது.

இதில் முக்கியமாக திருத்தப்பட்ட ஓய்வூதியம் மற்றும் நிலுவைத் தொகைகளை வழங்கக்கூடிய வங்கிகள் அதற்கான வட்டியை ஓய்வூதியதாரர்களுக்கு தானாகவே சேர்த்து வழங்கப்பட வேண்டும் என்றும் தாமதமான ஓய்வூதியத்திற்கான வட்டியை செலுத்தும் அம்சம் என்ற முதன்மை திட்டத்தை உருவாக்கியிருக்கிறது. இந்த இழப்பீடு வழங்குவது என்பது தாமதம் செய்யப்பட்டால் அந்த தாமதத்திற்கும் சேர்த்து வட்டியானது விதிக்கப்படும் என்றும் அந்த வட்டியையும் இணைத்து ஓய்வூதியதாரர்களுக்கு கட்டாயமாக வங்கிகள் வழங்கிய தீர வேண்டும் என்றும் இந்தியன் ரிசர்வ் வங்கி திரும்பத் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே அக்டோபர் 1 2008 ஆம் ஆண்டு தாமதமாக செலுத்தப்படக்கூடிய அனைத்து ஓய்வூதிய தொகைகளுக்கும் பங்கியானது கட்டாயமாக எந்தவித கோரிக்கையும் இல்லாமல் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அந்த இழப்பீடு ஓய்வூதியதாரரின் கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும் என்றும் சுற்றறிக்கை அனுப்பிருப்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஓய்வூதியம் வழங்கக்கூடிய அனைத்து முகமை வங்கிகளும் ஓய்வூதியதாரர்களுக்கு உரிய மரியாதை அக்கறை அனுதாபம் என அனைத்தையும் வழங்கி அவர்களுடைய சேவைகளை திருப்திகரமாக முடிக்க வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

5 வருட சேமிப்பு கணக்கை பாதியில் எடுக்க வேண்டுமா!! இந்த வழிமுறைகளை பின்பற்றினால் பணம் குறையாது!!

0

சிறந்த சேமிப்பு திட்டங்கள் வேண்டும் என நினைக்கக் கூடியவர்களுக்கு இந்தியன் போஸ்ட் ஆபீஸ் மூலமாக பல சேமிப்பு கணக்குகள் வழங்கப்பட்டு வருகின்றன. மற்ற வங்கிகளை கணக்கிடும் பொழுது போஸ்ட் ஆபீஸ் நிறுவனங்களில் சேமிக்க கூடிய பணத்திற்கு வட்டியானது அதிக அளவில் வழங்கப்படுகிறது.

போஸ்ட் ஆபிஸில் பல சேமிப்பு திட்டங்கள் அதிலும் குறிப்பாக 5 ஆண்டுகளுக்கான சேமிப்பு திட்டங்கள் மாதாந்திர சேமிப்பு திட்டங்கள் மத்திய அரசினுடைய பார்வையின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டங்களில் நீண்ட காலம் முதலீடு செய்வது அதிக அளவு வடியை கொடுப்பதோடு முதல் காலத்தில் மிகப்பெரிய தொகையாக மாறவும் செய்கிறது.

மாதாந்திர சேமிப்பு திட்டம் :-

தபால் நிலையத்தில் இருக்கக்கூடிய முக்கிய திட்டங்களில் மாதாந்திர சேமிப்புத் திட்டமும் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதற்கு பல்வேறு விதமான சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. இதில் தனிநபர் கணக்கு தொடங்கும் பொழுது 9 லட்சம் வரை முதலீடு செய்யலாம் என்றும் கூட்டு கணக்கு வைத்திருப்பவர்கள் 15 லட்சம் வரை முதலீடு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற மாதாந்திர சேமிப்பு கணக்குகளில் ஆயிரம் ரூபாய் செலுத்துவதன் மூலம் நம்மால் பயன்பட முடியும். நாம் சேமிக்க கூடிய பணத்திற்கு 7.4% வட்டியானது வழங்குகிறது.

ஒவ்வொரு சேமிப்பிற்கும் ஏற்றவாறு அதற்கான முதல்வொகை கிடைக்கிறது. உதாரணத்திற்கு 9 லட்சம் முதலீடு 5 வருடங்களுக்கு செய்யப்பட்டிருக்கிறது என்றால் அதனுடைய முதிர்வு தொகை 3,33,000 லட்சம் ரூபாய் வட்டி மட்டுமே கிடைக்கும். இதற்கான ஒரு மாத வட்டி என்பது 5,550 ரூபாய் ஆகும்.சில நேரங்களில் இது போன்ற சேமிப்பு கணக்குகளை தொடர முடியாமல் பாதியில் பணம் எடுக்கக்கூடிய சூழல் உருவாகிறது என்றால் அவற்றிற்கும் சில விதிமுறைகளை தபால் அலுவலகம் வெளியிட்டு இருக்கிறது.

அதன்படி , 1 வருடத்திற்குள் கணக்கை மூடினால் சேமிப்பு தொகையானது திரும்ப தர முடியாது என மறுக்கப்பட்டுள்ளது. அதுவே பாதி காலமான 3 வருடங்களுக்குள் கணக்கை மூடினால் உங்களுடைய அசல் மற்றும் வட்டியில் இருந்து 2% அபராதமாக எடுத்துக்கொள்ளப்படும். திட்டங்களை முழுமையாக படித்த பின்பு தான் அந்த திட்டங்கள் சேமிப்பை துவங்குவது அவசியம்.

பெரிய பதவி கொடுத்தும் சினிமாவில்தான் அதிக ஆர்வம்!.. கட்சிக்குள் சலசலப்பு!…

0

அரசியல் வாரிசு என்கிற அடையாளத்தோடு இருந்தவர் கல்லூரி படிப்புக்கு பின் சினிமா துறையில் நுழைந்து தயாரிப்பாளராக அவதாரம் எடுத்தார். அதன்பின் புதிய படங்களை வாங்கி வெளியிட துவங்கினார். கழக ஆட்சியில் மட்டுமே இவரின் நிறுவனம் ஆக்டிவாக இருக்கும். ஒரு கட்டத்தில் சினிமாவில் நடிக்க துவங்கினார். நடிப்பும் வரவில்லை. நடனமும் வரவில்லை என பலர் கிண்டலடித்தும் அவர் மாறவில்லை. காமெடி நடிகரை கூட வைத்து ஒப்பேற்றி வந்தார்.

சீனியர்கள் பலரும் இருக்க குறுகிய காலகட்டத்திலேயே பெரிய பதவியை இவருக்கு கொடுத்தார் அப்பா. ஆனால், பொறுப்பு மிக்க பதவி கொடுத்த பின்னரும் இவரின் ஆர்வம் இன்னமும் சினிமாவில்தான் இருக்கிறதாம். வியாபாரத்தை காரணம் காட்டி தினமும் ஒரு படம் பார்க்கிறாராம். அந்த படம் பற்றிய வியாபரம் பேசவே அதிக நேரத்தை செலவிடுகிறாராம். ‘இவ்வளவு பெரிய பொறுப்பை கொடுத்தும் இப்படி இருக்காரே’ என அவருக்கு நெருக்கமானவர்களே ஆதங்கப்படுகிறார்களாம்.

பகல் முழுக்க தூங்கி இரவில் படம் பார்த்து மீண்டும் பகல் முழுக்க தூங்குவதால்தான் சட்டசபைக்கு இவர் அடிக்கடி வருவதில்லை என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள். ஒருபக்கம், தேர்தலுக்குள் ஒரு படத்தில் நடியுங்கள் என சில இயக்குனர்கள் அவரை சந்தித்து கதைகளையும் சொல்லி வருவதுதான் இதில் கொடுமை.

அரசியல்னா காலையில மீட்டிங் இருக்கும். கட்சிகாரர்கள் பார்க்க வருவார்கள். பலர் சந்தித்து சால்வை போடுவார்கள். தலைமைச் செயலகம் போக வேண்டும். அதிகாரிகளை சந்திக்க வேண்டும். மக்களை சந்திக்க வேண்டும். அலுவல் கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக காலையில் எழுந்திருக்க வேண்டும்.

ஆனால், சினிமா எவ்வளவு ஈசி? மாலை 4 மணிக்கு எழுந்தால் விடிய விடிய படம் பார்க்கலாம். இயக்குநர்களை வரச் சொல்லி இரவில் கதை சொல்லச் சொல்லலாம். பார்ட்டியெல்லாம் முடித்து விட்டு, காலை 5 மணிக்கு தூங்க போகலாம்’ என சமூகவலைத்தளங்களில் இவரை பலரும் கலாய்த்து வருகிறார்கள்.

நடிகர் லாரன்சை விட மோஷமாக பயப்படும் நடிகர் மனோஜ் மனைவி!!இரவில் தினமும் இப்படித்தான் நடக்கும்!!

0

பாரதிராஜாவின் மகனும் தமிழ் திரை உலகில் நடிகனாகவும் இயக்குனர் ஆகவும் திகழ்ந்த மனோஜ் அவர்கள் சமீபத்தில் உடல் நலக்குறைவால் இறைவனடி சேர்ந்தார். இந்த நிலையில், நடிகர் மனோஜ் மற்றும் அவரது மனைவி இணைந்து கொடுத்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இருவரும் கொடுத்த பேட்டியில் பேசியிருப்பதாவது :-

எப்பொழுதும் இரவு லைட்டை ஆஃப் செய்துவிட்டு தூங்கக் கூடியது என்னுடைய பழக்கமாக இருந்த நிலையில், திருமணத்திற்கு பின் இப்பொழுதும் என் படுக்கை அறையில் லைட் எரிந்து கொண்டு மட்டுமே இருக்க துவங்கின. காரணம் என்னுடைய மனைவிக்கு இருட்டு என்றால் மிகவும் பயம். இதுகூட பரவாயில்லை, இரவு நேரங்களில் பாத்ரூம் செல்ல வேண்டும் என்றால் கூட என்னை மிகவும் டார்ச்சர் செய்து விடுவார். பாத்ரூம் வாசல் வரை தன்னை அழைத்து வந்து விட்டு விட்டு சென்று விடுங்கள் என கூறி என்னை தூங்க விடாமல் கொடுமை படுத்துவார் என்பது போல விளையாட்டாக தன்னுடைய மனைவி குறித்து நடிகர் மனோஜ் தெரிவித்திருக்கக்கூடிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நடிகர் மனோஜ் அவர்களின் இறப்பை தாங்க முடியாமல் இயக்குனர் பாரதிராஜா அவர்களும் மனோஜின் மனைவியான நந்தனா அவர்களும் மீள முடியாத துயரத்தில் இருந்து வருகின்றனர். இவர்களுக்கு பலரும் ஆறுதல் கூறிவரும் நிலையில் இவர்களை தேற்ற முடியாமல் தவித்து வருகின்றனர். ஏற்கனவே நடிகர் மனோஜ் அவர்களுக்கு இதயத்தில் அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து நெஞ்சு வலி ஏற்பட்டே அவரது உயிர் ஆனது உடலை விட்டு பிரிந்திருக்கிறது.

தமிழ் திரையுலகில் நடிகராக தன்னுடைய தந்தையார் அறிமுகப்படுத்தப்பட்டு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும் தன்னுடைய தந்தை மணிரத்தினம் சங்கர் போன்ற முன்னணி இயக்குனர்களுடன் பணி புரிந்து இயக்குனராக முயற்சித்த பொழுதும் அதுவும் மனோஜ் அவர்களுக்கு வெற்றி கொடுக்கவில்லை என்பது மிகப்பெரிய துயரம் முன்பு இருக்கிறது.

களத்துக்கு நாங்க தயார்.. மோதிப் பார்த்திடலாம்!! புதிதாக அறிமுகமாகும் 4 பீர் வகைகள்!!

0

தமிழகத்தில் இருக்கக்கூடிய 4000 டாஸ்மாக் நிறுவனங்களில் விற்பனை செய்யப்படும் பியர் வகைகளில் விற்பனையானது சமீப காலமாக குறைந்து இருக்கிறது. இதனை ஈடு செய்யும் வகையில் புதிதாக 4 வகை பியர் பாட்டில்களை அறிமுகம் செய்ய இருப்பதாக டாஸ்மார்க் நிறுவனம் தெரிவித்திருக்கிறது

இவ்வாறு செய்வதன் மூலம் மது பிரியர்களுக்கு பியர் பாட்டில்களை தேர்வு செய்வதற்கு பல வாய்ப்புகள் இருக்கும் என்றும் அவற்றில் முதல் கட்டமாக ஆந்திராவில் விற்பனை செய்யப்பட்டு வரும் பிளாக் பஸ்டர் பியரானது அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் அதனைத் தொடர்ந்து மத்திய பிரதேசத்திலிருந்து கோதுமை பீரான வூட்பெக்கர் இறக்குமதி செய்யப்பட இருப்பதாகவும் இதனோடு கூட மற்ற வகைகளான 2 பியர் வகைகளும் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலே குறிப்பிடப்பட்ட இரண்டு வகை பியர் பாட்டில்களும் மத்திய அரசினுடைய மதுபான ஆலைகளில் இருந்து பெறுவதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டிருப்பதாகவும் கூடுதல் தகவல் தெரிவிக்கிறது.

கடந்தாண்டு ஒப்பிடும்போது இந்த ஆண்டு முதல் வாரத்தில் பியர் விற்பனையானது சரிந்துள்ள நிலையில் இதனை மேம்படுத்துவதற்காக இது போன்ற முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக டாஸ்மார்க் நிறுவனம் திறப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது கடந்தாண்டு 10 லட்சம் பியர் பாட்டில்களுக்கு மேல் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு இதுவரை 7 லட்சம் பியர் பாட்டில்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த சரிவின் காரணமாகத்தான் தற்பொழுது புதிய வகைகளாக 4 பியர் பாட்டில்களின் வகைகளை அறிமுகப்படுத்த இருப்பதாகவும் இனி வாடிக்கையாளர்களுக்கு தேர்வு செய்வதற்கு நிறைய வாய்ப்புகள் அளிக்கப்படும் என்றும் இதன் மூலம் பியர் பாட்டில்களில் விற்பனை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக டாஸ்மார்க் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.

தொடர்ந்து ஆயில் ப்ரீ உணவுகளை மட்டுமே சாப்பிடுவது நல்லதா? தெரிந்து கொள்ளுங்கள்!!

0

தற்பொழுது ஆரோக்கியம் இல்லாத உணவுகள் சாப்பிடுவது மக்கள் மத்தியில் அதிகரித்து வந்தாலும் மறுபுறம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகளுக்கும் முக்கியத்துவம் தரப்படுவது அதிகமாகியுள்ளது.உணவில் உப்பு,சர்க்கரை,காரம் மற்றும் எண்ணையை குறைந்துக் கொண்டாலே ஆரோக்கியமாக வாழலாம்.

அதிக உப்பு மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகள் இரத்தம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் அதிகரிக்கும்.அதேபோல் அதிக எண்ணெய் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகள் உடலில் எல்டிஎல் கொழுப்பை அதிகரித்துவிடும்.

சிலர் உடல் ஆரோக்கியத்திற்காக எண்ணெய் உணவுகளை குறைத்துக் கொள்கின்றனர்.நாள் முழுவதும் எண்ணையில்லாத உணவுகளை சாப்பிடுவதுதான் எண்ணையில்லா உணவு.இதை பலரும் கடைபிடித்து வருகின்றனர்.உண்மையில் எண்ணெய் சேர்க்கப்படாத உணவுகள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதா என்றால் இல்லை என்பது உண்மையான பதில்.

நமது உடலுக்கு கிடைக்க வேண்டிய அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களில் எண்ணெய் சத்தும் ஒன்று.எண்ணையில் கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் இருக்கின்றது.அதேபோல் உடலில் எண்ணெய் குறைந்தால் கண் பார்வை பாதிக்கப்படும்.

உடலில் நோய் எதிர்ப்பு செயல்பாடு பாதிக்கப்பட்டுவிடும்.உடலில் எண்ணெய் குறைந்தால் எலும்பு ஆரோக்கியம் முழுமையாக பாதிக்கப்பட்டுவிடும்.இரண்டு முதல் ஒரு மாதங்கள் வரை எண்ணெய் இல்லாத உணவுகளை சாப்பிட்டால் தோல் சம்மந்தபட்ட பிரச்சனைகள் ஏற்படும்.

எண்ணெய் இல்லா உணவு உடலில் சோர்வை அதிகரித்துவிடும்.உடலில் எண்ணெய் குறைந்தால் மனநிலையில் மாற்றம் ஏற்படும்.எண்ணையில் இருக்கின்ற அத்தியாவசிய கொழுப்பு நமது உடலுக்கு கிடைக்கவில்லை என்றால் உடல் மோசமான விளைவுகளை சந்திக்கக் கூடும்.

நீங்கள் எண்ணெய் சேர்க்காத உணவுகளை சாப்பிட்டாலும் உடலுக்கு தேவையான அத்தியாவசிய கொழுப்பு கிடைக்க மீன்,பாதாம் பருப்பு,வால்நட்,ஆளிவிதை,சியா விதை,ஒமேகா 3 கொழுப்பு அமில உணவுகளை சாப்பிட வேண்டும்.இதுபோன்ற உணவுகளால் உடலில் அத்தியாவசிய கொழுப்பை குறையாமல் பார்த்துக் கொள்ள முடியும்.

மூட்டு வலி முதல் மூலம் வரை.. அசோக மர பட்டையின் அசர வைக்கும் மருத்துவ குணங்கள்!!

0

நம் முன்னோர்கள் காலத்தில் பல்வேறு மூலிகை மரங்கள் கண்டறியப்பட்டு நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்பட்டது.குறிப்பாக அசோக மரத்தில் இருந்து கிடைக்கும் இலை,பூக்கள்,பட்டை என அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தவையாக காணப்படுகிறது.

அசோக மரப்பட்டை உடல் நோய்கள் முதல் சருமம் சம்மந்தபட்ட பிரச்சனைகள் வரையிலான பாதிப்புகளுக்கு மருந்தாக பயன்படுகிறது.அசோக மரப்பட்டையை தண்ணீர் விட்டு அரைத்து சருமத்தில் பூசி குளித்து வந்தால் சகல சரும வியாதிகளும் விடும்.

அசோக மரப்பட்டை பொடி நாட்டு மருந்து கடை,சித்தவைத்திய சாலையில் கிடைக்கிறது.இதை வாங்கி வந்து ஒரு கிளாஸ் வெது வெதுப்பான தண்ணீரில் கலந்து குடித்தால் குடலில் உருவாகிய புழுக்கள் வெளியேறும்.அசோகமரப்பட்டையை பொடித்து தினமும் உட்கொண்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

மூலம் அதாவது பைல்ஸ் பாதிப்பு இருப்பவர்கள் இந்த அசோகமரப்பட்டையை பொடித்து தயிர்,இளநீர் போன்ற குளிர்ச்சியான பொருட்களில் கலந்து சாப்பிட்டு வந்தால் பைல்ஸ் புண்கள் ஆறும்.அசோகமரப்பட்டையை பொடித்து டீ செய்து குடித்தால் உடல் உறுப்புக்கள் ஆரோக்கியம் மேம்படும்.

அசோக மரப்பட்டையை தண்ணீர் விட்டு அரைத்து மூட்டு பகுதியில் பூசினால் வலி,வீக்கம் குணமாகும்.அசோக மரப்பட்டையை பொடித்து ஒரு கிளாஸ் தண்ணீருக்கு 10 கிராம் அரோசக மரப்பட்டை தூள் சேர்த்து காய்ச்சி குடிக்கும் பெண்களுக்கு மாதவிடாய் கோளாறு ஏற்படாது.

அதிக உதிரப்போக்கு,மாதவிடாய் கால வயிற்று வலி போன்ற பிரச்சனைகள் அகல அசோக மரப்பட்டையை மருந்தாக உட்கொள்ளலாம்.பெண்களுக்கு ஏற்படும் கருப்பை கட்டி குணமாக அசோக மரப்பட்டையை பொடித்து 100 மில்லி தண்ணீரில் கலந்து குடிக்கலாம்.