Home Blog Page 299

அடக் கடவுளே.. மலை நெல்லியை இப்படி சாப்பிடுவதால் ஒரு பயனுமே இல்லையா?

0

நாம் சாப்பிடும் கனிகளில் நெல்லிக்காய் அதிக வைட்டமின் சி சத்து கொண்டவையாக உள்ளது.தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.

நெல்லிக்காய் சாப்பிட்டால் சரும ஆரோக்கியம் மேம்படும்.செரிமான ஆரோக்கியம் மேம்பட நெல்லிக்காய் உட்கொள்ளலாம்.நெல்லிக்காயில் இருக்கின்ற வைட்டமின் ஏ சத்து கண் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது.நெல்லிக்காய் ஜூஸ் குடித்தால் குடலில் உள்ள கழிவுகள் நீங்கும்.

உடலில் இருக்கின்ற தேவையற்ற கொழுப்புகள் கரைய நெல்லிக்காய் ஜூஸ் செய்து குடிக்கலாம்.ஆனால் நெல்லிக்காயை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் வயிறு எரிச்சல்,செரிமானப் பிரச்சனை,வயிறுக் கோளாறு,வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

நெல்லிக்காயை பாலுடன் சேர்த்து சாப்பிட்டால் வாயுத் தொல்லை உண்டாகும்.பால் மற்றும் நெல்லிக்காய் ஆகிய இரண்டையும் சேர்த்து உட்கொண்டால் செரிமானப் பிரச்சனை ஏற்படும்.சிலர் நெல்லிக்காயில் உப்பு சேர்த்து சாப்பிடுவார்கள்.இப்படி நெல்லிக்காயுடன் உப்பு சேர்த்து சாப்பிட்டால் உடலில் உப்பு சத்து அதிகமாகிவிடும்.

நெல்லிக்காயை பகலில் சாப்பிட்டால் எந்த பாதிப்பும் ஏற்படாது.இரவு நேரத்தில் நெல்லிக்காய் உட்கொண்டால் உடல் மந்தப் பிரச்சனை ஏற்படும்.நெல்லிக்காயை மற்ற பழங்களுடன் சேர்த்து சாப்பிட்டால் அஜீரணக் கோளாறு உண்டாகும்.நெல்லிக்காய் சற்று புளிப்பு தன்மை கொண்டவை என்பதால் அதை உட்கொண்டால் பல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுவிடும்.சிலருக்கு அலர்ஜி,தோல் சம்மந்தபட்ட பிரச்சனைகள் உண்டாகலாம்.

நெல்லிக்காயை தேனில் ஊறவைத்து சாப்பிடலாம்.நெல்லிக்காயை உலர்த்தி பொடியாக்கி தண்ணீரில் கலந்து குடிக்கலாம்.நெல்லிக்காய் சட்னி,நெல்லிக்காய் தேநீர் போன்று செய்து சாப்பிடலாம்.

இனி உப்பு வாங்கி வந்தவுடன் இதை மறக்காமல் செய்யுங்கள்!! இல்லையேல் ஆபத்து உங்களுக்குதான்!!

0

தற்பொழுது கல் உப்பு,தூள் உப்பு,இந்துப்பு போன்ற பல வகை உப்புகள் பயன்படுத்தப்படுபட்டு வருகிறது.உப்பில் சோடியம்,பொட்டாசியம்,கால்சியம்,சல்பர்,மெக்னீசியம்,ஆக்சிஜனேற்ற பண்புகள் நிறைந்து காணப்படுகிறது.

நாம் சாப்பிட வேண்டிய அறுசுவைகளில் உப்பும் ஒன்று.உணவிற்கு சுவை கூட்டும் முக்கிய அறுசுவை உப்புதான்.உப்பில் இருக்கின்ற ஊட்டச்சத்துக்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.உப்பை சாப்பிட்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

உப்பு கலந்த தண்ணீரை குடித்தால் தொண்டைப்புண் குணமாகும்.சரும ஆரோக்கியம் மேம்பட உப்பு கலந்த தண்ணீரை பருகலாம்.உப்பு சாப்பிட்டால் மன அழுத்தம் குறையும்.உப்பு சுவை மூளையின் செயல்பாட்டை ஊக்குவிக்க உதவுகிறது.

உப்பில் இருக்கின்ற வைட்டமின்கள் செரிமானப் பிரச்சனையை போக்க உதவுகிறது.குடலில் இருக்கின்ற நச்சுக் கழிவுகள் நீங்க உப்பு உணவுகளை உட்கொள்ளலாம்.ஆனால் தற்பொழுது உப்பிலும் கலப்படம் நடப்பதால் அதை வாங்கி பயன்படுத்துவதில் ஒருவித தயக்க உணர்வு மக்களிடையே ஏற்படுகிறது.கடல் நீரில் இருந்து தயாரிக்கப்படும் உப்பு பல்வேறு பிராசஸ் செய்த பிறகே நமக்கு விற்பனை செய்யப்படுகிறது.

உப்பில் அயோடின் சத்து நிறைந்து காணப்படுகிறது.இந்த அயோடின் நிறைந்த உப்பை அதிகமாக உட்கொண்டால் இரத்த அழுத்த பாதிப்பு,பக்கவாதம்,உடல் பருமன்,மாரடைப்பு,பெருங்குடல் புற்றுநோய் பாதிப்பு போன்றவை ஏற்படும்.

இரத்தத்தில் உப்பு அளவு அதிகரித்தால் உயர் இரத்த அழுத்தப் பிரச்சனை ஏற்படும்.அதிக உப்பு சாப்பிடுவதால் இதய செயலிழப்பிற்கு வழிவகுக்கும்.அதிக உப்பு சேர்த்த உணவு வயிறு உப்பசத்தை உண்டாக்கிவிடும்.

அயோடின் கலந்த உப்பை அதிகமாக சாப்பிடுவதால்தான் உடலில் தைராய்டு பாதிப்பு ஏற்படுகிறது.தற்பொழுது தைராய்டு பாதிப்பு அதிகரித்துவர இதுவும் காரணம்.இந்த அயோடின் சத்து உப்பில் இருந்து நீங்க இங்கு கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸை பின்பற்றுங்கள்.

ஒரு தட்டில் கல் உப்பை கொட்டி பரப்பி வெயிலில் காய வைக்க வேண்டும்.இரண்டு மணி நேரம் வெயிலில் நன்றாக காய வைத்தால் அயோடின் சத்து நீங்கும்.முடிந்தவரை கல் உப்பை பயன்படுத்துங்கள்.தூள் உப்பு பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.

உங்களுக்கு சுள்ளுனு கோபம் வருமா? அப்போ இந்த நோய்கள் சீக்கிரம் உங்களை வந்துசேரும்!!

0

மனிதர்களுக்கு கோபம் வருவது இயல்பான விஷயம்தான்.கோபத்தை எந்த சூழ்நிலையிலும் கட்டுப்படுத்த முடியாது.அதிக கோபம் ஒரு மனிதரையே அழித்துவிடும்.அதிக கோபத்தால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.

அதிக கோபம் மன அழுத்தத்தை அதிகரித்துவிடும்.அதிக கோபத்தால் உறவில் விரிசல் உண்டாகிவிடும்.நாம் பொறுமையை இழக்க பல காரணங்கள் இருக்கிறது.யாரும் வேண்டுமென்று கோபப்படுவதில்லை.சூழ்நிலை மனிதர்களுக்கு கோபத்தை உண்டாக்கிவிடுகிறது.

அதிக கோபம் வந்தால் இதய ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுவிடும்.கோபம் மன ஆரோக்கியத்தை முழுமையாக பாதிக்கப்பட்டுவிடும்.கோபம் வந்தால் இரத்த அழுத்தம் அதிகரித்துவிடும்.சிலருக்கு அதிக கோபத்தால் நரம்புகள் சேதமாகும்.

கோபம் இதய ஆரோக்கியத்தை முழுமையாக சிதைத்துவிடும்.அடிக்கடி கோபம் வந்தால் தூக்கமின்மை பிரச்சனை ஏற்படும்.அதிக கோபம் இதய ஆரோக்கியத்தை முழுமையாக பாதிக்கச் செய்துவிடும்.உங்களுக்கு கட்டுப்படுத்த முடியாத கோபம் வந்தால் ஆஸ்துமா,சுவாசப் பிரச்சனை போன்றவை ஏற்படும்.கோபத்தால் மாரடைப்பு பாதிப்பு ஏற்படலாம்.அடிக்கடி கோபம் வந்தால் மூளை வாத நோய் ஏற்படும்.

அதிக கோபம் மற்றும் அடிக்கடி கோபப்படுதலால் இரத்த குழாய் வெடித்து உயிருக்கு ஆபத்தாக மாறிவிடும்.கோபத்தால் பிரஷர் அதிகரித்து மயக்கம்,தலைச்சுற்றல்,தலைவலி போன்ற பாதிப்புகள் ஏற்படும்.கோபம் அதிகமானால் மன அழுத்தம் அதிகரிக்கும்.அதிகமாக கோபப்படும் பெண்களுக்கு மன அழுத்தம் அதிகமாவதால் மாதவிடாய் கோளாறு ஏற்படும்.

கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் உங்கள் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுவிடும்.கோபத்தால் இரத்த கொதிப்பு,இரத்த அழுத்தம் போன்ற பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.எனவே உங்கள் கோபத்தை இனி கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள்.

அமித்ஷாவுடன் கை கோர்த்த பழனிச்சாமி!.. தனிக்கட்சி துவங்கும் ஒ.பி.எஸ்?!…

0

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவுடன் கிட்டத்தட்ட அரசியல் அநாதை ஆகிவிட்டார் ஓபிஎஸ். அதிமுக ஆட்சியின் போது மூன்று முறை தமிழக முதலமைச்சராக இருந்தவர். சசிகலாவுடன் மோதல், ஜெ.சமாதியில் தியானம், பரப்பு பேட்டி, ஜெ.வின் மரணத்திற்காக தர்ம யுத்தம், அதிமுகவின் இரட்டை இலை சின்னம் எனக்குதான் என நீதிமன்றம் போனது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியவர் இவர். இவரை தூக்கிவிட்டு முதல்வர் பதவியில் பழனிச்சாமியை அமர வைத்துவிட்டு சிறைக்கு போனார் சசிகலா.

அமித்ஷா எடுத்த முயற்சியில் பழனிச்சாமியோடு ஓபிஎஸ் இணைந்து அதிமுகவில் இரட்டை தலைமை உருவானது. ஆனாலும் ஒரு கட்டத்தில் ஒபிஎஸ் நடந்துகொண்டது பிடிக்காமல் அவரை கட்சியிலிருந்து தூக்கிவிட்டு ஆட்சி, கட்சி ஆகிய இரண்டையும் தனது தலைமையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார் பழனிச்சாமி.

எனவே, தனித்து விடப்பட்டார் ஓபிஎஸ். அதன்பின் கடந்த சட்டமன்ற தேர்தலில் இராமநாதபுரத்தில் சுயேட்சையாக போட்டியிட்டு அதிமுக தோற்க காரணமாக இருந்தார். அதன்பின் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என தொடர்ந்து சொல்லி வருகிறார். ஆனால், ஓ.பன்னீர் செல்வத்தை மீண்டும் அதிமுகவில் விட பழனிச்சாமிக்கு கொஞ்சமும் விருப்பம் இல்லை.

ops

ஒருபக்கம், 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவை ஒருங்கிணைத்து பாஜகவுடன் கூட்டணி அமைத்து தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை சந்தித்து திமுகவை தோற்கடிக்க வேண்டும் என அமித்ஷா நினைத்தார். செங்கோட்டையன் மூலம் ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை ஒன்றிணைக்கும் முயற்சி எடுத்தார். எனவே, எப்படியாவது மீண்டும் அதிமுகவில் இணைந்துவிடுவோம் என்கிற நம்பிக்கையில் இருந்தார் ஓபிஎஸ். நேற்று சென்னை வந்த அமித்ஷாவை சந்தித்து இதுபற்றி பேச பல முயற்சிகளையும் எடுத்தார். ஆனால், அமித்ஷா அவரை சந்திக்கவே இல்லை.

தற்போது அதிமுக – பாஜக கூட்டணியை அறிவித்தும் விட்டார் அமித்ஷா. அதோடு, ஓபிஎஸ், டிடிவி ஆகியோர் அதிமுகவில் இணைவது என்பது கட்சியின் தனிப்பட்ட முடிவு. அதில் நாங்கள் தலையிட மாட்டோம் எனவும் சொல்லிவிட்டார். அதிமுகவில் ஓபிஎஸ், சசிகலா, டிடிவி போன்றோரை இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை என பழனிச்சாமி சொல்லிவிட்டதுதான் அதற்கு காரணம்.

எனவே, அதிமுகவோடு இணைவோம் என்கிற பன்னீர் செல்வத்தின் கடைசி நம்பிக்கையும் பொய்த்துவிட்டது. எனவே, இனிமேல் அவர் தனிக்கட்சிதான் துவங்குவார் என்கிறார்கள் சிலர். ஓ.பி.எஸ் என்ன முடிவெடுப்பார் என தெரியவில்லை…

உங்களுக்கு தோன்றுவதை கமெண்ட்டில் பதிவிடுங்கள்!…

அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெற்றாலும் பழனிச்சாமி முதல்வராக முடியுமா?.. ஒரு அலசல்!…

0

எல்லோரும் எதிர்பார்த்தது போலவே 2026 சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுகவும், பாஜகவும் கூட்டணி அமைத்திருக்கிறது. இன்று மாலை சென்னை ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அமித்ஷாவும் இதை உறுதி செய்துவிட்டார். 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் இந்திய ஜனநாயக கூட்டணி இணைந்து தமிழகத்தில் போட்டியிடும். தேசிய அளவில் மோடி தலைமையில் தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலும் தேர்தலை நாங்கள் சந்திக்கவுள்ளோம்’என கூறினார்.

மேலும், யார் யாருக்கு எத்தனை தொகுதி ஆட்சி அமைப்பது யார் என்பது பற்றியெல்லாம் பின்னர் முடிவு செய்வோம். இந்த கூட்டணியால் அதிமுக – பாஜக இருவருக்குமே பலன் கிடைக்கும்’ என சொல்லி இருக்கிறார். அதாவது, அதிமுக தலைமையில் என்.டி.ஏ கூட்டணி போட்டியிடும் எனவும் தெளிவாக சொல்லி இருக்கிறார். அதன் அர்த்தம் பாஜகவுடன் கூட்டணி போடும் மற்ற கட்சிகளும் இந்த கூட்டணியில் இருக்கும். அதோடு, ஆட்சி அமைப்பது பற்றி தேர்தல் முடிவுக்கு பின் ஆலோசிக்கப்படும் எனவும் கவனமாக சொல்லி இருக்கிறார். இதன் அர்த்தம் இந்த கூட்டணி வெற்றி பெற்றாலும் எடப்பாடி பழனிச்சாமிதான் முதல்வர் என அமித்ஷா சொல்லவிலை. இணைந்துதான் ஆட்சி அமைக்கப் போகிறோம்.. கூட்டணி ஆட்சிதான் அமையும். எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கூட்டணி அமையும். வெற்றிக்கு பிறகு மற்றவை பேசி முடிவு செய்யப்படும் என சொல்லியிருக்கிறார். இதிலிருந்து அமித்ஷா மனதில் என்ன இருக்கிறது என்பதை புரிந்துகொள்ளலாம்.

அதிமுக - பாஜக கூட்டணி வெற்றி பெற்றாலும் பழனிச்சாமி முதல்வராக முடியுமா?.. ஒரு அலசல்!...

உண்மையில் பழனிச்சாமி விருப்பப்பட்டு பாஜகவுடன் இணைய வாய்ப்பில்லை. ஏனெனில், இனிமேல் பாஜகவுடன் கூட்டணி இல்லை என அவர் 2 வருடங்களுக்கு முன்பே அறிவித்தார். 2021 சட்டமன்ற தேர்தலில் சிறுபான்மையினர் ஓட்டு அதிமுகவுக்கு கிடைக்காமல் போனதற்கு அதிமுக பாஜக கூட்டணியில் இடம் பெற்றிருந்ததே காரணம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரே சொன்னார். இப்போது, பாஜக கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே அதிமுக – பாஜக கூட்டணி நிகழ்ந்திருக்கும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

அதேநேரம், எப்படி பார்த்தாலும் சட்டசபை தேர்தலில் அதிமுகவுக்கே அதிக சீட்கள் ஒதுக்கப்படும். என்.டி.ஏ கூட்டணியை விட அதிமுக அதிக இடங்களில் ஜெயிக்க வாய்ப்புண்டு. எனவே, முதல்வராகவும் வாய்ப்பு எடப்பாடி பழனிச்சாமிக்கே அதிகம் எனவும் சிலர் சொல்கிறார்கள்.

உங்களுக்கு என்ன தோன்றுகிறது என கமெண்ட்டில் சொல்லுங்கள்!…

அஜித் படங்களில் முதல் நாள் அதிக வசூல்!.. குட் பேட் அக்லி செய்த மெகா சம்பவம்!..

0

விடாமுயற்சி படம் அஜித் ரசிகர்களை திருப்தி படுத்தாத நிலையில் அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம்தான் குட் பேட் அக்லி. இப்படம் நேற்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் அஜித் ரசிகர்களுக்கு பிடித்தமான பல காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. படம் முழுக்க மாஸான காட்சிகளை வைத்திருக்கிறார் இயக்குனர் ஆதிக்.

இந்த படத்தில் வில்லனாக அர்ஜூன் தாஸ் நடித்திருக்கிறார். மேலும், திரிஷா, சிம்ரன், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். தீனா, பில்லா, மங்காத்தா உள்ளிட்ட பல படங்களிலும் வந்த அஜித்தின் லுக்கை இந்த படத்தில் கொண்டு வந்திருக்கிறார்கள். அதோடு, அஜித் ரசிகர்களுக்கு என்ன பிடிக்குமோ, அவர்கள் அஜித்திடம் என்ன எதிர்பார்ப்பார்களோ அது எல்லாமே படத்தில் இருக்கிறது. படத்தில் அழுத்தமான கதையோ, செண்டிமெண்டோ, லாஜிக்கோ இல்லை. ஆனால், ரசிகர்கள் ரசிக்கும்படி படம் எடுத்திருக்கிறார்கள். படம் முழுக்க ரசிகர்களை அஜித் என்கேஜாக வைத்திருக்கிறார்.

எனவே, அவருக்காகவே படம் பார்க்கலாம். படத்தில் பாடல்களும், பின்னணி இசையும் கூட சிறப்பாக இருக்கிறது என பலரும் சொல்கிறார்கள். ஒன் மேன் ஆர்மியாக அஜித் படத்தை தாங்கி பிடித்திருக்கிறார் என்றெல்லாம் சொல்கிறார்கள். இந்த படம் இந்தியாவில் 28.5 கோடியும் உலக அளவில் 46லிருந்து 50 கோடி வரை வசூல் செய்ததாக சொன்னார்கள்.

good bad ugly

ஆனால், தமிழகத்திலேயே இப்படம் 30.9 கோடி வசூலை அள்ளியிருப்பது தெரியவந்துள்ளது. இந்த தகவலை ஆதிக் ரவிச்சந்திரனே டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்ந்துள்ளார். மேலும், அஜித்தின் நடிப்பில் இதுவரை வெளியான படங்களில் முதல் நாள் அதிக வசூல் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பழனிச்சாமி போட்ட கண்டிஷன்!.. அடங்கிப்போன அமித்ஷா!.. நடந்தது இதுதான்!..

0

எல்லோரும் எதிர்பார்த்தபடி பாஜகவுடன் கூட்டணி அமைத்திருக்கிறது அதிமுக. நேற்று இரவு சென்னை வந்த அமித்ஷா சென்னை ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் இன்று காலை முதல் அதிமுகவுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். அதன்பின் அதே ஹோட்டலில் 5 மணிக்கு மேல் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அமித்ஷாவுடன் பழனிச்சாமி மற்றும் அண்ணாமலை ஆகியோர் உடனிருந்தார்கள். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமித்ஷா ‘2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் இந்திய ஜனநாயக கூட்டணி இணைந்து தமிழகத்தில் போட்டியிடும். தேசிய அளவில் மோடி தலைமையில் தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலும் தேர்தலை நாங்கள் சந்திக்கவுள்ளோம்.

எங்கள் கூட்டணி நிச்சயம் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும். ஏனெனில், ஜெயலலிதா காலம் முதலே அதிமுகவுடன் பாஜக இனைந்து பயணித்து வருகிறது’ என கூறினார். அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் பாஜக உறுப்பினர் அமைச்சர் ஆவாரா என்பதை பிறகு சொல்கிறோம். அதிமுக தரப்பில் எந்த நிபந்தனையும் விதிக்கப்படவில்லை.

admk

ஓ.பி.எஸ், டிடிவி தினகரன் கூட்டணியை ஏற்பது அதிமுகவின் முடிவு. அதில் நாங்கள் தலையிட மாட்டோம். அதிமுகவின் தனிப்பட்ட விஷயங்களில் பாஜக தலையிடாது. தேர்தல் விவகாரங்களில் மட்டுமே பங்கேற்போம். யார் யாருக்கு எத்தனை தொகுதி ஆட்சி அமைப்பது யார் என்பது பற்றியெல்லாம் பின்னர் முடிவு செய்வோம். இந்த கூட்டணியால் அதிமுக – பாஜக இருவருக்குமே பலன் கிடைக்கும்’ என சொல்லி இருக்கிறார்.

எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தது முதலே அதிமுகவுடன் பாஜக இணைகிறது என செய்திகள் அடிபட்டு வந்தது. தற்போது அது உறுதியாகிவிட்டது. இந்த கூட்டணி இணைய அதிமுக எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை என அமித்ஷா சொன்னதில் உண்மையில்லை என்கிறார்கள் சிலர். ஓ.பி.எஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரை மீண்டும் அதிமுகவில் சேர்க்க மாட்டேன். இது உங்களுக்கு சம்மதம் எனில் கூட்டணி’ என அமித்ஷாவிடம் பழனிச்சாமி உறுதியாக சொல்லிவிட்டாராம். இதை அமித்ஷாவும் ஏற்றுக்கொண்டார். அதனால்தான் செய்தியாளர்களிடம் ‘அது அதிமுகவின் உட்கட்சி பிரச்சனை’ என சொல்லி அமித்ஷா கடந்துபோய் விட்டார் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.

கடந்ந்த சில நாட்களாகவே செங்கோட்டையன் மூலம் பழனிச்சாமி, ஓபிஎஸ், சசிகலா, டிடிவி ஆகிய எல்லோரையும் இணைத்து ஒருங்கிணைந்த அதிமுகவாக மாற்றி அதோடு கூட்டணி அமைக்கும் முயற்சியில் அமித்ஷா ஈடுபட்டிருந்தார். ஆனால், பழனிச்சாமி கறாராக இருந்ததால் அது கடைசி நடக்கவில்லை.

பொன்முடியும் சர்ச்சை பேச்சுக்களும்!. பதவி பறிப்பு மட்டும் போதுமா?.. ஒரு அலசல்!..

0

விழுப்புரத்தை சேர்ந்தவர் பொன்முடி. கல்லூரி பேராசியராக இருந்த போதிலிருந்த திமுகவின் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டார். 1984ம் வருடம் கருணாநிதி தலைமையில் தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார். விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் பதவியும் இவருக்கு கொடுக்கப்பட்டது. 1989ம் வருடம் எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றார்.

விழுப்புரம் தொகுதியில் 4 முறையும், திருக்கோயிலூர் தொகுதியில் 2 முறையும் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சுகாதாரத்துறை, போக்குவரத்து துறை உயர் கல்வி அமைச்சர், வனத்துறை ஆகிய துறைகளில் அமைச்சராக இருந்திருக்கிறார். நில அபகரிப்பு வழக்கு, செம்மண் குவாரி வழக்கு, சொத்து குவிப்பு வழக்கு ஆகியவற்றில் சிக்கினார். சொத்து குவிப்பு வழக்கில் இவருக்கு 3 வருடங்கள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. இதனால் அமைச்சர் பதவி பறிப்போனது. அதன்பின், உச்சநீதிமன்றத்தில் இடைக்கால ஜாமீன் பெற்று மீண்டும் அமைச்சராக மாறினார்.

பொன்முடி தொடார்ந்து சர்ச்சையாக பேசி சர்ச்சைகளில் சிக்குவார். திமுக அரசு மகளிருக்கு இலவச பயணம் கொடுத்ததை ஓசி என பேசி எதிர்ப்பை பெற்றார். பட்டியலின பெண் ஊராட்சி ஒன்றிய தலைவரின் சாதி குறித்து கேட்டதாக இவர் மீது சர்ச்சை எழுந்தது. ஒரு விழாவில் பேசிய ஸ்டாலின் ‘காலையில் எழுந்தாலே யார் என்ன பேசி பிரச்சனை வருமோ என்கிற பயமே எனக்கு வந்துவிட்டது’ என சொல்லும் அளவுக்கு சென்றது.

ஒருமுறை தொகுதிக்கு போன போது சில கோரிக்கைகள் பற்றி பெண்கள் அவரிடம் பேச ‘நீங்களாம் எனக்கு ஓட்டு போட்டு கிழிச்சீங்களா?’ என கடிந்துகொண்டார். இப்போது கடந்த 6ம் தேதி சைவம், வைணவம் என பெண்கள் குறித்து ஆபாசமாக பேசி சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். எனவே, இவரிடமிருந்து துணை பொதுச்செயலாளர் பதவியை இப்போது ஸ்டாலின் பறித்திருக்கிறார்.

பொன்முடி இனிமேலாவது திருந்த வேண்டும். அவர் மீது ஸ்டாலின் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

தமிழக பாஜக தலைவர் பதவி!.. போட்டியின்றி தேர்வாகும் நயினார் நாகேந்திரன்?..

0

தமிழகத்தில் பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்தவர் அண்ணாமலை. இவர் கர்நாடகாவில் காவல் துறையில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவர். கடந்த சில வருடங்களாகவே இவர் தமிழக பாஜக தலைவராக சிறப்பாகவே செயல்பட்டு வந்தார். எதிர்கட்சி தலைவராக எடப்பாடி பழனிச்சாமி செய்யாத வேலையை இவரே செய்து வந்து திமுகவுக்கு டஃப் கொடுத்தார்.

திமுகவை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வந்தார். இதுதான் எடப்பாடி பழனிச்சாமிக்கே தலைவலியை கொடுத்தது. ஒருபக்கம், அண்ணாமலை அதிமுக தலைவர்களை விமர்சித்து அதிமுக பாஜக கூட்டணியிலிருந்து விலக காரணமாக இருந்தார். இது பாஜக மேலிடத்திற்கு கோபத்தை ஏற்படுத்தியது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கூட்டணி அமைவதை அண்ணாமலை விரும்பவில்லை.

டெல்லி சென்று அமித்ஷாவை பழனிச்சாமி சந்தித்த போது ‘பழனிச்சாமி தலைமையில் கூட்டணி என்றால் நான் பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என நான் ஏற்கனவே சொன்னதில் மாற்றமில்லை. மாற்றி மாற்றி நான் பேச மாட்டேன்’ என சொல்லியிருந்தார். எனவே, விரைவில் தமிழக பாஜக தலைவர் பதவி மாற்றப்படலாம் என எல்லோரும் எதிர்பார்த்தனர்.

நயினார் நாகேந்திரன், தமிழிசை சவுந்தர்ராஜன், வானதி சீனிவாசன், கருப்பு முருகானந்தம் என பலரின் பெயரும் அடிபட்டது. சில நாட்களுக்கு முன்பு நயினார் நாகேந்திரன் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்துவிட்டு வந்தார். எனவே, அவரே பாஜக தலைவராக அதிக வாய்பிருப்பதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில், பாஜக மாநில தலைவர் தேர்தலுக்காக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் வேட்பு மனு அளித்திருக்கிறார். அவரின் பெயரை அண்ணாமலை, எல்.முருகன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட 10 பேர் பரிந்துரை செய்துள்ளனர். அதோடு, வேறு யாரும் இதுவரை வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. எனவே, தமிழக பாஜக தலைவராகா நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த பேச்சுக்கே இடமில்லை!.. அமித்ஷா பிளானை தவிடு பொடியாக்கிய பழனிச்சாமி!.

0

வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் இந்திய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இணைய வேண்டும் என நினைக்கிறார் அமித்ஷா. இதற்கு அர்த்தம் அதிமுக கூட்டணியில் பாஜக இருக்க வேண்டும் என்பது இல்லை.. இந்திய ஜனநாயக கூட்டணி தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைய வேண்டும் என்பதே அமித்ஷாவின் திட்டமாக இருக்கிறது. ஆனால், பழனிச்சாமிக்கு இதில் விருப்பமில்லை. அதனால்தான் தயங்கி கொண்டிருக்கிறார்.

பழனிச்சாமி தலைமையிலான அதிமுக, ஓ.பன்னீர் செல்வம், சசிகலா, டிடிவி தினகரனின் அமுமக ஆகிவற்றை ஒருங்கிணைக்க வேண்டும் என்பது அமித்ஷாவின் எண்ணம். ஆனால், இதில் எடப்பாடி பழனிச்சாமிக்கு கொஞ்சமும் விருப்பம் இல்லை. அதனால்தான் செங்கோட்டையனை டெல்லிக்கு அழைத்து ‘அதிமுகவை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபடுங்கள். அதை நீங்கள் செய்துவிட்டால் உங்கள் தலைமையில் அதிமுக செயல்படும்’ என சொன்னதாக சொல்லப்படுகிறது.

eps

அனைவரையும் ஒருங்கிணைப்பது பற்றி சில சீனியர் முன்னாள் அமைச்சர்கள் பழனிச்சாமியிடம் பேசினால் ‘அந்த பேச்சுக்கே இடமில்லை. ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை மீண்டும் கட்சிக்குள் சேர்க்கவே முடியாது. அப்படி செய்யாவிட்டால் கட்சி பிளவு படும், தேர்தலில் தோற்றுப்போகும் என யார் சொன்னாலும் எனக்கு கவலையில்லை. அதனால் அவரும் பழியை நான் ஏற்றுக்கொள்கிறேன். இனிமேல் இது விஷயமாக என்னிடம் யாரும் பேச வேண்டாம்’ என உறுதியாக சொல்லிவிட்டாராம்.

பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், அய்யப்பன் ஆகியோரை கட்சியில் சேர்க்கலாம். வேண்டுமானால் பன்னீர் செல்வத்தின் மகனுக்கு கூட சீட் தரலாம். ஆனால், பன்னீர் செல்வத்தை கட்சியில் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை என சொல்லியிருக்கிறார் பழனிச்சாமி. ஒருபக்கம், அதிமுகவை ஒருங்கிணக்கும் முயற்சியில் செங்கோட்டையனும் ஈடுபட்டிருக்கிறார். அதேபோல், சென்னையில் இருக்கும் அமித்ஷாவை எப்படியாவது சந்தித்து பேச வேண்டும் என பன்னீர் செல்வமும் முயற்சி செய்து வருகிறார். ஆனால், எடப்பாடி பழனிச்சாமி பிடி கொடுக்காததால் அமித்ஷா நினைப்பது நடக்குமா என தெரியவில்லை.