Home Blog Page 302

எச்சரிக்கை.. லெமன் ஜூஸ் குடிப்பதற்கு முன்னர் இந்த மிஸ்டேக்ஸ் செய்தால் உயிருக்கு ஆப்புதான்!!

0

எலுமிச்சையை கொண்டு ஜூஸ்,சாலட்,சாதம்,ஊறுகாய்,தொக்கு,தேநீர் என்று வகை வகையான உணவுகள் செய்து சாப்பிட்டு வருகின்றோம்.எலுமிச்சை சாறை பயன்படுத்தி ஜூஸ் செய்து குடிப்பதை பலரும் வழக்கமாக வைத்திருக்கின்றனர்.

எலுமிச்சை சாறு வைட்டமின் சி சத்து நிறைந்தவை என்பதால் பலரும் அதை விரும்பி பருகுகின்றனர்.எலுமிச்சை சாறு குடித்தால் சருமம் சார்ந்த பாதிப்புகள் அகலும் என்று பலரும் கூறுகின்றனர்.மற்ற பானங்களை காட்டிலும் எலுமிச்சை ஆரோக்கியமானதாக இருப்பதால் பாட்டிலில் அடைத்து விற்கப்படும் ஜூஸை வாங்கி குடிக்கின்றனர்.

எலுமிச்சை ஜூஸ் நல்லது என்றாலும் பாட்டிலில் அடைத்து விற்கப்படும் ஜூஸை குடித்தால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுவிடும்.அதேபோல் வீட்டில் எலுமிச்சை ஜூஸ் தயாரித்து சாப்பிடும் பழக்கம் இருப்பவர்கள் சில தவறுகளை செய்தால் அவை ஆரோக்கியம் இல்லாத பானமாகிவிடும்.

எலுமிச்சம் பழச்சாறு அதிக அமிலத் தன்மை கொண்டவையாக உள்ளது.எலுமிச்சை சாறை நேரடியாக பருகினால் வயிற்றில் அமில அளவு அதிகரித்துவிடும்.வயிறு எரிச்சல்,நெஞ்செரிச்சல் போன்ற பாதிப்புகள் இதனால் ஏற்படும்.

ஒரு பங்கு எலுமிச்சை சாறுக்கு நான்கு அல்லது ஐந்து பங்கு தண்ணீர் ஊற்றி பருக வேண்டும்.எலுமிச்சை சாறில் செயற்கை பதப்படுத்திகளை பயன்படுத்தினால் அவை உடல் ஆரோக்கியத்தை பாதிக்கச் செய்துவிடும்.

காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சை ஜூஸ் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.இதனால் வயிறு சம்மந்தபட்ட பிரச்சனைகள் ஏற்படும்.அடிவயிற்றுப் பகுதியில் அமிலத் தன்மை அதிகரித்து வாயுத் தொல்லை அதிகமாகிவிடும்.லெமன் சாறை தண்ணீர் கலக்காமல் குடித்தால் பற்கள் சேதமாகிவிடும்.அளவிற்கு அதிகமாக எலுமிச்சை சாறு குடித்தால் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும்.

இது தெரியாமல் இனி உப்பை பயன்படுத்தாதீங்க!! நாம் இத்தனைநாள் உப்பு பயன்படுத்தி வந்த விதமே தப்பாம்!!

0

நாம் சாப்பிட்டு கொண்டிருக்கும் அறுசுவைகளில் ஒன்றுதான் உப்பு.உணவில் காரம் மற்றும் மற்ற சுவைகள் குறைவாக இருந்தால்கூட அனுசரித்து சாப்பிடலாம்.ஆனால் உப்பு என்ற சுவை மட்டும் குறைந்தால் மொத்த உணவின் சுவையும் ஒன்றும் இல்லாமல் போய்விடும்.நம் முன்னோர்கள் காலத்தில் உப்பை ஒரு மருந்தாக பயன்படுத்தி வந்தனர்.

ஆனால் காலப்போக்கில் உணவுகளில் பயன்படுத்த மக்கள் தொடங்கிவிட்டனர்.கடல் நீரில் இருந்து தயாரிக்கப்படும் கல் உப்பில் சோடியம் குளோரைடு நிறைந்து காணப்படுகிறது.இந்த உப்பு சுவை எடுத்துக் கொள்ளும் அளவு வயதிற்கு ஏற்ப மாறுபடும்.

முன்பெல்லாம் உப்பு மருந்து பொருளாக பயன்படுத்தப்பட்டு வந்தது.ஆனால் தற்பொழுது உப்பில் அதிக கலப்படம் நடப்பதால் அது உயிருக்கு ஆபத்தானவகையாக மாறி வருகிறது.நாம் கடைகளில் வாங்கும் உப்பை நேரடியாக பயன்படுத்தினால் அவை ஆபத்தானதாக மாறிவிடும்.உப்பில் இருக்கின்ற நச்சுகள் நம் உடலுக்குள் சென்று பல தொந்தரவுகளை கொடுக்கும்.

எனவே உப்பை நாம் முறையாக பயன்படுத்த வேண்டியது அவசியமான ஒன்றாக உள்ளது.நம்மில் பலரும் உப்பை நேரடியாகத் தான் சமையலில் பயன்படுத்தி வருகின்றோம்.ஆனால் இனி இப்படி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

நம் முன்னோர்கள் காலத்தில் உப்பை சட்டியில் கொட்டி பொன்னிறமாக வறுத்து பயன்படுத்தி வந்தனர்.இதனால் உப்பில் இருக்கின்ற நசச்சுக் கழிவுகள் நீங்கிவிடும்.அதேபோல் உப்பை தண்ணீரில் கொட்டி கரைத்து அந்த நீரை சமையலுக்கு பயன்படுத்தினால் உப்பு நச்சுக்கள் கலக்கப்படாமல் இருக்கும்.

அதேபோல் உப்பை சட்டியில் கொட்டி முருங்கை கீரை போட்டு வறுத்தால் உப்பின் நச்சுத் தன்மை நீங்கிவிடும்.முருங்கை கீரையை நீக்கிவிட்டு உப்பை பாட்டிலில் கொட்டி பயன்படுத்தலாம்.தூள் உப்பிற்கு பதில் கல் உப்பை அரைத்து பயன்படுத்தலாம்.தற்பொழுது ராக்சால்ட் பயன்பாடு அதிகரித்து வருகிறது.இந்த ராக்சால்ட்டையும் வறுத்து பயன்படுத்துவதே சிறந்தது.

எப்படி தூங்க வேண்டும்? எத்தனை மணி நேரம் தூங்க வேண்டும்? ஆழ்ந்த தூக்கத்திற்கு 5 நிமிஷம் இதை செய்யுங்கள்!!

0

மனிதர்கள் வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய மற்றும் அவசியம் தேவைப்படக் கூடிய ஒன்றுதான் உறக்கம்.தினமும் நம் உடலுக்கு தூக்கத்தின் மூலம் ஓய்வை கொடுக்கின்றோம்.நாம் பெரும்பாலும் இரவு நேர உறக்கத்தைதான் அனுபவிக்கின்றோம்.இருப்பினும் அந்த உறக்கம் நல்ல உறக்கமா இல்லையா என்று நாம் ஒருநாள் சிந்தித்தது இல்லை.மனிதர்களுக்கு 8 மணி நேர தூக்கம் அவசியமான ஒன்று.

உறக்கத்தின் பொது கனவு வருவது இயல்பான ஒரு விஷயம்தான்.இருப்பினும் கனவு வந்தால் அவை நல்ல தூக்கம் இல்லை என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.நாம் கனவு வராமல் தூங்குவதுதான் உண்மையான தூக்கம்.கனவு மற்றும் தொந்தரவுகள் எதுவும் இல்லாமல் 3 மணி நேரம் தூங்கினாலும் அது நல்ல தூக்கம்தான்.

சிலர் இரவில் சிறிது நேரம் மற்றும் பகலில் மதிய நேரத்தில் தூங்கிவிட்டு 8 மணி நேரம் தூங்கிவிட்டேன் என்று கூறுகின்றனர்.இப்படியான சீரற்ற தூக்கம் ஆரோக்கியத்தை பாதித்துவிடும்.சிலர் நேரம் கடந்து தூங்கி அதிகாலை நேரத்தில் எழுகின்றனர்.இப்படி பெரும்பாலும் பெண்கள்தான் உறங்குகின்றனர்.அதிக வேலை காரணமாக பெண்கள் தங்கள் உறக்கத்தை தொலைக்கின்றனர்.

சிலருக்கு தூக்கம் என்பதே இல்லாத நிலைதான் உள்ளது.சிலர் இரவு நேர தூக்கத்தை தொலைத்துவிட்டு பகல் நேரத்தில் உறங்குகின்றனர்.ஆனால் பகல் நேரத்தில் 8 மணி நேரம் உறங்கினாலும் இரவு நேர உறக்கம்தான் சிறந்தது.

அதேபோல் நல்ல உறக்கத்தை அனுபவிக்க இரவில் 10 நிமிடங்கள் தியானம்,யோகா போன்றவை செய்ய வேண்டும்.நன்றாக மூச்சு பயிற்சி செய்த பிறகு படுத்தால் கனவு இல்லாமல் நிம்மதியான தூக்கத்தை அனுபவிக்கலாம்.தியானம் செய்தால் நல்ல தூக்கம் வரும்.தூங்குவதற்கு முன் எதிர்மறை சிந்தனைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

கிட்னி ஸ்டோனுக்கு சிறந்த வைத்தியம்!! ஹாஸ்ப்பிட்டல் செலவே வராமல் இருக்க இதை செய்யுங்கள்!!

0

மனித உடலில் சிறுநீரகம் கழிவுகளை அகற்றும் பணியை செய்கிறது.இந்த சிறுநீரகத்தில் யூரிக் அமிலம் அதிகரித்தல்,உப்புகள் படிதல் போன்ற காரணங்களால் கற்கள் உருவாகிறது.சிறுநீரக கல் சிறுநீரகத்தின் பாதை,கருப்பை,சிறுநீர்ப்பை போன்ற எந்த பகுதியிலும் பாதிப்பை உருவாக்கலாம்.

சிறுநீரக கல் பாதிப்பு இருந்தால் அலட்சியம் கொள்ளாமல் உடனடியாக சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.நம் இந்தியாவில் சர்க்கரை நோய்க்கு,புற்றுநோய்க்கு அடுத்து சிறுநீரக கல் பாதிப்பை பலரும் அனுபவித்து வருகின்றனர்.

சிறுநீர் கழிக்கும் பொழுது வலி ஏற்படுதல்,சிறுநீர் கழிக்கும் பொழுது எரிச்சல்,சிரமம் போன்றவற்றை சந்தித்தல் போன்ற காரணங்கள் சிறுநீரக கல் அறிகுறியாக இருக்கலாம்.அதேபோல் இடுப்பு பகுதியில் அதிக வலி,வயிறு வீங்குதல் போன்ற பாதிப்புகளும் சிறுநீரக கற்களுக்கான அறிகுறிகளாகும்.

சிறுநீரக கல் அறிகுறிகள்:-

1)கடுமையான வயிற்று வலி
2)வாந்தி உணர்வு
3)குமட்டல் உணர்வு
4)இரத்தத்துடன் சிறுநீர் வெளியேறுதல்
5)சிறுநீர் கழிக்கும் பொழுது வலி உணர்வு
6)அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு
7)வயிறு வீக்கம்

சிறுநீரக கல் உருவாக காரணங்கள்:-

1)தண்ணீர் பருகாமை
2)சிறுநீரை கழிக்காமல் அடக்கி வைத்தல்
3)அதிக உடல் பருமன்
4)பரம்பரைத் தன்மை
5)சிறுநீர் பாதையில் அடைப்பு
6)யூரிக் அமில அளவு அதிகரித்தல்

சிறுநீரக கற்களை கரைக்க மற்றும் சிறுநீரகத்தை பாதுகாக்க நாம் பின்பற்ற வேண்டிய விஷயங்கள்:

**நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிட வேண்டும்.தினமும் 8 கிளாஸ் தண்ணீரை தவறாமல் குடிக்க வேண்டும்.

**சிறுநீர் கழிக்கும் உணர்வு வந்தால் உடனே கழித்துவிட வேண்டும்.சிறுநீரை அடக்கி வைத்தால் சிறுநீரகத்தில் வீக்கம் மற்றும் வலி ஏற்பட்டுவிடும்.சிறுநீரகத்தில் உள்ள உப்பு நாளடைவில் கற்களாக மாறிவிடும்.

**உடலில் யூரிக் அமில அளவு அதிகரித்தால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகிவிடும்.சிறுநீரகத்தில் அதிக கால்சியம் இருந்தால் அவை கற்களாக உருவாகிவிடும்.

**சிறுநீரக கல் பிரச்சனை இருப்பவர்கள் உட்கொள்ளும் உணவில் உப்பின் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும்.

**தினமும் உறங்குவதற்கு முன் சிறிது தண்ணீர் குடிக்க வேண்டும்.பீன்ஸ்,வாழைத்தண்டு போன்றவற்றை கொண்டு சூப் செய்து குடிக்க வேண்டும்.ரணகள்ளி இலையை அரைத்து சாறு எடுத்து பருகினால் சிறுநீரக கல் கரையும்.

இதய அடைப்பின் முக்கிய அறிகுறிகள் மற்றும் ஹார்ட் அட்டாக்கில் இருந்து தப்பிக்க வழிகள்!!

0

தற்பொழுது நம் நாட்டில் இதயம் சம்மந்தபட்ட பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.கொரோனா காலகட்டத்திற்கு பிறகு இளம் வயது மாரடைப்பு அதிகரித்து வருகிறது.

மார்பு பகுதியில் இறுக்க உணர்வு,இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டம் தடைபடுதல் போன்ற காரணங்களால் மாரடைப்பு ஏற்படுகிறது.இதயத்திற்கு இரத்தத்தை எடுத்துக் செல்லும் தமனியில் அடைப்பு உண்டாவதை மாரடைப்பு என்கின்றோம்.

மாரடைப்பிற்கான முதல் அறிகுறியாக இருப்பது மார்பு பகுதியில் வலி உண்டாவதுதான்.மார்பு பகுதியில் இறுக்கம் உண்டாவது மாரடைப்பிற்கான முக்கிய அறிகுறியாக இருக்கலாம்.இடுப்பு வலி,பின்புற வலி போன்றவை மாரடைப்பிற்கான முக்கிய அறிகுறியாக இருக்கலாம்.

அதேபோல் செரிமானப் பிரச்சனை,நெஞ்செரிச்சல் போன்றவை மாரடைப்பிற்கான முக்கிய அறிகுறியாக இருக்கலாம்.

மாரடைப்பு அறிகுறிகள்:-

1)மூச்சுத் திணறல்
2)லேசான தலைவலி
3)அடிவயிற்றுப் பகுதியில் வலி
4)இடது கழுத்தில் வலி
5)மார்பு பகுதியில் வலி
6)அதிக வியர்வை
7)கழுத்து பகுதியில் வலி
8)தாடை வலி
9)முதுகு பகுதியில் வலி

மாரடைப்பு தவிர்க்க வழி

ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும்.சீரான உணவுப் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.

தினசரி உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.புகை மற்றும் மது பழக்கத்தை தவிர்க்க வேண்டும்.மன அழுத்தத்தை கட்டுப்படுத்த வேண்டும்.

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகளை உட்கொள்ள வேண்டும்.தினமும் 15 நிமிடங்கள் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிட வேண்டும்.முழு தானிய உணவுகளை உட்கொள்ள வேண்டும்.புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.

லப்டப் லப்டப்.. இதயத் துடிப்பு வேகம் அதிகமாக இருக்கா? இதற்கான காரணங்களும் உரியத் தீர்வுகளும்!!

0

நம் இதயத் துடிப்பு சீராக இருக்க வேண்டியது மிகவும் முக்கியம்.நாம் உயிர் வாழ இதய ஆரோக்கியம் மிகவும் முக்கியம்.சிலருக்கு இதயத் துடிப்பு வேகமாக,மெதுவாக அல்லது சீரற்று இருக்கும்.இதில் இதயம் வேகமாக துடிக்க பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது.

இதயம் சில சமயம் வேகமாக துடிக்கும்.இது சாதாரண விஷயம்தான்.ஆனால் இதயத் துடிப்பின் வேகம் எப்பொழுதும் அதிகமாக இருந்தால் அது ஆபத்தான விஷயமாகும்.நம் இதயத் துடிப்பின் தன்மையை பரிசோதனை மூலம் அவ்வப்போது தெரிந்து கொள்ள வேண்டும்.

இதயத் துடிப்பு அதிகமாக இருந்தால் அது தீவிர இதயப் பிரச்சனையை குறிக்கிறது.இதயம் வேகமாக துடிக்க பல காரணங்கள் சொல்லப்படுகிறது.அதிக மன அழுத்தம்,அதிக மன உளைச்சல்,படபடப்பு,பதற்றம் போன்றவை இதயம் வேகமாக துடிக்க காரணமாகும்.

காஃபின் நிறைந்த பானங்கள்,தைராய்டு பாதிப்பு,இரத்த சோகை நோய்,இருதயம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் இதயத் துடிப்பு அதிகரிக்க காரணமாக இருக்கிறது.இதயத் துடிப்பு வேகமாக இருந்தால் நீங்கள் அலட்சியம் செய்யக் கூடாது.

இதயத் துடிப்பு அதிகரிப்பின் அறிகுறிகள்:

1)மூச்சுத் திணறல்
2)மார்பு பகுதியில் வலி உணர்வு
3)தலைச்சுற்றல்
4)உடல் சோர்வு
5)பதட்டம் அதிகரிப்பு
6)அசௌவ்கரிய உணர்வு

இதயம் வேகமாக துடிக்க காரணம்:

1)மருந்துகளின் பக்க விளைவு
2)காபின் நிறைந்த பானங்கள்
3)ஆற்றல் நிறைந்த பானங்கள்
4)பதட்டம்
5)படபடப்பு
6)தைராய்டு பாதிப்பு
7)அனீமியா
8)இருதயப் பிரச்சனை

உங்களுக்கு திடீரென்று இதயத் துடிப்பு அதிகரிக்கிறது என்றால் நீங்கள் சில விஷயங்கள் மூலம் அதை சரிசெய்து கொள்ளலாம்.உங்களுக்கு வேகமான இதயத் துடிப்பு இருந்தால் நீங்கள் முதலில் அமைதியாக இருக்க வேண்டும்.அதன் பிறகு ஆழ்ந்த சுவாசப் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.அடுத்து குளிர்ந்த நீரை பருக வேண்டும்.

வேகமாக இதயத் துடிப்பு பிரச்சனையை சரி செய்வது எப்படி?

முதலில் உடலுக்கு தேவையான உறக்கத்தை அனுபவிக்க வேண்டும்.தினமும் 30 நிமிடங்கள் தியானம்,யோகா போன்றவற்றை செய்ய வேண்டும்.

நடைபயிற்சி,மூச்சுப் பயிற்சி போன்றவற்றை தினமும் செய்ய வேண்டும்.இதய ஆரோக்கியத்தை காக்கும் உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

சிகிச்சை இல்லாமல் வெறும் வேப்பிலை மஞ்சளை வைத்து கேன்சரை குணமாக்க முடியுமா?

0

உலகின் மிகவும் கொடூர நோயாக புற்றுநோய் பாதிப்பு உருமாறி வருகிறது.ஆண்டு தோன்றும் லட்சக்கணக்கான மக்கள் புற்றுநோய் பாதிப்பால் இறக்கின்றனர்.புற்றுநோய் மற்ற நோய்களை போன்று ஆரம்ப அறிகுறிகளை நமக்கு காட்டாது.புற்றுநோயின் தீவிரம் அதிகரித்த பின்னரே அதன் அறிகுறிகளை அறிந்து நம்மால் அறிந்து கொள்ள முடியும்.இதனால்தான் புற்றுநோய் பாதித்தவர்களை காப்பாற்றுவது கடினமான விஷயமாக இருக்கிறது.

உடலில் எந்த உறுப்பிலும் புற்றுநோய் கட்டிகள் வரக்கூடும்.நுரையீரல் புற்றுநோய்,கணைய புற்றுநோய்,கருப்பை புற்றுநோய்,வாய்ப்புற்றுநோய் என்று இதில் பல்வேறு வகைகள் இருக்கின்றது.இந்த புற்றுநோய்களை குணப்படுத்த கீமோ தெரபி மற்றும் நடைமுறை சிகிச்சைகள் இருக்கின்றன.இருப்பினும் நமது பாரம்பரிய வைத்தியத்தின் மூலம் புற்றுநோய் பாதிப்பை பரிபூரணமாக குணப்படுத்திக் கொள்ளலாம்.

இந்த நவீன சிகிச்சைகளோடு நமது பாரம்பரிய வைத்தியத்தை பின்பற்றி வந்தால் புற்றுநோய் பாதிப்பில் இருந்து மீண்டு வந்துவிடலாம்.இதை இன்ட்டர்மிட்டென்ட் பாஸ்டிங் என்று அழைக்கிறார்கள்.

எலுமிச்சை விதையை பொடித்து தண்ணீரில் கலந்து குடித்தால் புற்றுநோய் பாதிப்பு குணமாகும்.அதேபோல் தினமும் ஒரு கிளாஸ் மஞ்சள் கலந்த தண்ணீர் பருகி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.அதேபோல் துளசி பானம்,வேப்பிலை பானம்,ஆப்பிள் சீடர் வினிகர் போன்ற பானங்களை பருகி வருபவர்கள் புற்றுநோய் பாதிப்பில் இருந்து சீக்கிரம் மீள்வதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது.

வெறும் இன்ட்டர்மிட்டென்ட் பாஸ்டிங் மற்றும் மேற்கொண்டு வந்தால் புற்றுநோய் சிகிச்சையில் இருந்து மீள்வது கேள்விக்குறியாகி விடும்.கீமோ தெரபி,அறுவை சிகிச்சை போன்றவற்றை மேற்கொள்வதோடு இந்த இன்ட்டர்மிட்டென்ட் பாஸ்டிங் முறையை பின்பற்றி வந்தால் கூடிய விரைவில் புற்றுநோய் பாதிப்பில் இருந்து மீண்டுவிடலாம்.

ஆனால் சிகிச்சை எதுவும் இல்லாமல் வெறும் எலுமிச்சை பானம்,மஞ்சள் பானம்,துளசி பானம் ஆகியவற்றை மட்டும் பருகினால் எந்தஒரு பயனும் ஏற்படாது என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

30 வயதை தாண்டியவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் மற்றும் அறவே தவிர்க்க வேண்டிய உணவுகள்!!

0

இன்று இளம் வயதினர் முதுமை தோற்றத்தை அடைவது சாதாரண விஷயமாக மாறிவருகிறது.அதேபோல் முதுமை வயதில் இருப்பவர்கள் தங்கள் இளமை காலத்தை தக்க வைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நாம் பார்த்து ரசிக்கும் சினிமா பிரபலங்கள் எவ்வளவு வயதானாலும் இளமையாகவே இருக்க என்ன காரணம் என்று சிந்திருக்கீங்களா? சினிமா பிரபலங்கள் மட்டுமின்றி யாராக இருந்தாலும் தங்கள் உணவுப் பழக்கத்தை ஆரோக்கியமானதாக மாற்றிக் கொண்டால் மட்டுமே இளமை தோற்றத்தை பெற முடியும்.

நமக்கு வயதாகும் பொழுது நமது உடலில் பல மாற்றங்கள் நிகழ்கிறது.இது உடல் மற்றும் மன ரீதியான மாற்றங்களாக இருக்கலாம்.குறிப்பாக 30 வயதை கடந்தவர்கள் உடலளவில் பல மாற்றங்களை எதிர்கொள்கின்றனர்.குறிப்பாக பெண்களுக்கு உடலில் அதிக மாற்றங்கள் ஏற்படுகிறது.

முன்பெல்லாம் 40 வயதை கடந்தவர்கள்தான் ஓரளவிற்கு வயதானவர்கள் போல் தெரிவார்கள்.ஆனால் தற்பொழுது 30 வயதை தொட்டாலே அவர்களுக்கு வயதாகிவிட்டது என்று முடிவு செய்துவிடுகின்றனர்.30 வயதை கடந்த பின்னர் தலைமுடி உதிர்வு,முழங்கால் வலி,உடல் சோர்வு,கண் பார்வை குறைபாடு ஏற்படுதல்,தூக்கமின்மை,மன அழுத்தம் போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

நீங்கள் உங்கள் 30 வயதை எட்டிய பிறகு உணவுமுறையில் நல்ல மாற்றத்தை கொண்டு வர வேண்டும்.ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை மட்டும் சாப்பிட வேண்டும்.ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த உணவுகள்,புரதம்,கால்சியம்,வைட்டமின்கள்,இரும்பு போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.

நீங்கள் இளமை காலத்தில் ஆரோக்கிய உணவுமுறையை பின்பற்றி வந்தால்தான் முதுமை காலத்தில் ஆரோக்கியமாக வாழ முடியும்.நீங்கள் இளமை காலத்தில் ஆரோக்கியம் இல்லாத உணவுகளை சாப்பிட்டு வந்தீர்கள் என்றால் வயதான பின்னர் உங்கள் உடல் மற்றும் சரும ஆரோக்கியம் மோசமானதாக இருக்கும்.30 வயதிற்கு பிறகு உங்கள் எலும்புகளை வலிமைப்படுத்தி கால்சியம் சத்து நிறைந்த பால்,பால் பொருட்கள்,பன்னீர்,முட்டை,கீரைகளை உட்கொள்ளலாம்.

எலும்பு ஆரோக்கியம் மேம்பட வைட்டமின் டி சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளலாம்.இரும்புச்சத்து கிடைக்க கீரை உணவுகளை சாப்பிடலாம்.ஒமேகா 3 கொழுப்பு அமிலம் கிடைக்க மீன்,அவகேடோ போன்றவற்றை சாப்பிடலாம்.

புரதம் கிடைக்க முட்டை,பாதாம்,முந்திரி போன்ற உலர் விதைகளை சாப்பிட வேண்டும்.அக்ரூட் பருப்பு,பொட்டாசியம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.வைட்டமின் சி சத்து நிறைந்த உணவுகள் சருமம் சம்மந்தபட்ட பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது.அதிக சர்க்கரை,அதிக உப்பு மற்றும் எண்ணெய் உணவுகளை தவிர்க்க வேண்டும்.கொழுப்பு நிறைந்த இறைச்சி மற்றும் காரமான உணவுகளை தவிர்க்க வேண்டும்.

மாவுச்சத்து நிறைந்த பொருட்களை தவிர்த்துவிட்டு நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.இப்படி சாப்பிட்டு வந்தால் உங்கள் முதுமை காலத்திலும் இளமையாக ஆரோக்கியமாக இருக்கலாம்.

அன்புமணியை தலைவர் பதவியிலிருந்து நீக்க காரணம் இதுதான்!.. ராமதாஸ் போடும் கணக்கு!…

0

பாமகவின் தலைவர் பதவியிலிருந்து அன்புமணியை நீக்கிவிட்டு தானே இனிமேல் தலைவர் எனவும், அன்புமணி இனிமேல் கட்சியின் செயல் தலைவராக இருப்பார் எனவும் அறிவித்து பாமக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ். கட்சிக்கு புதிதாக வந்துள்ள இளைஞர்களை வழிநடத்த இந்த முடிவும் எனவும் ராமதாஸ் சொல்லியிருக்கிறார். இதனால், அன்புமணியும், அவரின் ஆதரவாளர்களும் கடும் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதோடு, புதிய பாட்டாளி மக்கள் கட்சி என்கிற பெயரில் புதிய கட்சியை அன்புமணி துவங்கவுள்ளார் எனவும் செய்திகள் வெளியானது.

இந்த முடிவு பற்றி செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ் ‘இதுவரை சட்டப்பேரவைக்கோ, நாடாளுமன்றத்துக்கோ செல்வதற்கு நான் ஆசைப்பட்டதில்லை. இனியும் செல்லப் போவதில்லை என உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன். என் வழிகாட்டுதலின்படி செயல்பட வேண்டும் என இளைஞர்களும் கட்சி நிர்வாகிகளும் கட்டளையிட்டதாலும், 2026 சட்டமன்றத் தேர்தலில் கட்சியின் வெற்றியைக் கருத்தில் கொண்டு சில செயல் திட்டங்களை வகுத்துள்ளேன்.

அதன்படி கட்சி அமைப்பில் சில மாற்றங்களை செய்ய முடிவெடுத்துள்ளேன். பா.ம.க நிறுவனர் என்பதோடு இனி கட்சியின் தலைவராகவும் செயல்படுவதற்கு முடிவு செய்துள்ளேன்’எனவும் விளக்கமளித்தார். இராமதாஸ் இந்த முடிவை எடுத்தது அவரின் வீட்டிக்குள்ளேயே சிலருக்கு பிடிக்கவில்லை என்பதால் இப்போது அவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார் ராமதாஸ்.

கடந்த சில தேர்தல்களில் ராமதாஸை ஆலோசிக்காமல் யாருடன் கூட்டணி என்பதை அன்புமணியே முடிவு செய்தார். 2024 பாராளுமன்ற தேர்தல் நடந்தபோது கடைசி நேரத்தில் திமுகவிடம் அன்புமணி பேரம் நடத்தியதால்தான் ஒரு எம்.பி. சீட் கூட இல்லாம போனதாக ராமதாஸ் கருதுகிறார். இப்போது, 2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்கவும் அவர் திமுகவுடன் ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தி வருவது ராமதாஸுக்கு தெரிந்துவிட்டது. இப்படியே போனால் 2026 சட்டமன்ற தேர்தலின் போதும் ஒரு எம்.எல்.ஏ கூட இல்லாமல் செய்துவிடுவார் என்பதற்காகவே தலைவர் பதவியிலிருந்து அன்புமணியை தூக்கிவிட்டார் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.

வருகிற 12ம் தேதி தமிழக பாஜக தலைவர் அறிவிப்பு!.. அது யாருன்னு தெரியுமா?…

0

தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர் யார் என்கிற கேள்விதான் கடந்த பல நாட்களாகவே ஊடகங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. ஏனெனில் அதிமுகவுக்கும், அண்ணாமலைக்கும் இடையே முட்டிகொண்டதால் கோபப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அதற்கு காரணம் அதிமுக தலைவர்கள் பற்றி மிகவும் அவதூறாக அண்ணாமலை விமர்சித்தார்.

அதேநேரம், பாஜகவும் தமிழகத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீத வாக்குகளை பெற்று முன்னேறி வருகிறது. அதோடு வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்கிற எண்ணமும் பாஜகவுக்கு இருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு எடப்பாடி பழனிச்சாமியும் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசினார்.

அப்போது அண்ணாமலையை பதவியிலிருந்து தூக்க வேண்டும் என அமித்ஷாவிடம் பழனிச்சாமி கோரிக்கை வைத்ததாகவும் சொல்லப்பட்டது. ஏனெனில், அதிமுகவுடன் கூட்டணி வைப்பதை அண்ணாமலை விரும்பவில்லை. அதோடு, பழனிச்சாமியின் தலையின் கீழ் கூட்டணி அமைத்தால் நான் பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் எனவும் அண்ணாமலை அறிவித்திருக்கிறார்.

எனவே, தமிழக புதிய பாஜக தலைவர் யார் என்கிற கேள்வி பாஜக வட்டாரத்தில் எழுந்திருக்கிறது. வானதி சீனிவாசன், கருப்பு முருகானந்தம், தமிழிசை சவுந்தர்ராஜன் உள்ளிட்ட சிலர் பட்டியலில் இருந்தாலும் முதலிடத்தில் இருப்பது நயினார் நாகேந்திரன் என சொல்கிறார்கள். சமீபத்தில் கூட அவர் டெல்லி சென்று பாஜக மேலிடத்தை சந்தித்துவிட்டு வந்தார். எனவே, அவரையே தமிழக பாஜக தலைவராக நியமிக்க நிறைய வாய்ப்பிருப்பதாக சொல்லப்பட்டுகிறது.

nainar

இதை பற்றி விவாதிக்கவும், கூட்டணி பற்றி முடிவெடுக்கவும் இன்று இரவு 10 மணிக்கு சென்னை வருகிறார் அமித்ஷா. நாளை காலை முதல் மாலை 4 மணி வரை அவர் கட்சி நிர்வாகிகளுன் ஆலோசனை செய்கிறார். இந்நிலையில், வருகிற 12ம் தேதி சனிக்கிழமை தமிழகத்தின் புதிய பாஜக தலைவர் யார் என பாஜக மேலிடம் அறிவிக்கவுள்ளதாக செய்திகள் கசிந்திருக்கிறது.