Home Blog Page 301

முட்டாள்தனமாக முடிவெடுத்த அமேசான் நிறுவனம்!!ரூ.4 கோடிநஷ்டம்.. புலம்பும் உற்பத்தியாளர்கள்!!

0

அமேசான் நிறுவனமானது மிகப்பெரிய முட்டாள்தனமான முடிவை தற்பொழுது எடுத்து இருக்கிறது. இதனால் பல உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவதோடு அமேசான் நிறுவனத்தின் பங்குகளும் வீழ்ச்சியை சந்திக்கும் என்பதை அமேசான் நிறுவனத்தினர் யோசித்தார்களா என்பது போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.

அமேசான் நிறுவனம் 4 கோடி ரூபாய்க்கு பொருட்கள் ஆர்டர் செய்துவிட்டு திடீரென அவற்றை தவறுதலாக ஆர்டர் செய்து விட்டதாக கூறி ஆர்டரை கேன்சல் செய்து இருப்பது உற்பத்தியாளர்களை மிகப்பெரிய அளவில் அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. அமேசான் நிறுவனத்தின் இந்த முடிவானது அதிபர் ட்ரம்ப் அவர்களின் சுங்க வரியால் நிகழ்ந்திருக்கலாம் என கூறப்பட்டாலும் உற்பத்தியாளர்களிடம் இதுபோன்று ஆர்டர் கொடுத்துவிட்டு அந்த ஆர்டர் தயார் நிலையில் இருக்கும்பொழுது அதனை வேண்டாம் என கூறுவது முறையான விஷயம் அல்ல.

பீச் ஷேர் கடந்த 10 ஆண்டுகளாக அமேசான் நிறுவனத்திற்கு உற்பத்தி செய்து கொடுத்து கொண்டிருக்க கூடிய தொழிலாளர் இது குறித்து கூறும் பொழுது, இத்தனை ஆண்டுகளாக தங்களிடம் பீச் ஷேர் வாங்கிக் கொண்டிருந்த அமேசான் நிறுவனம் தற்பொழுது அதனை தவறுதலாக வைத்த ஆர்டர் எனக் குறிப்பிட்டு இருப்பது தங்களுக்கு மிகப்பெரிய நஷ்டத்தை உருவாக்கியிருப்பதாகவும் தொழிற்சாலைகளுக்கு உடனடியாக பணம் கொடுக்க வேண்டிய நெருக்கடியில் தாங்கள் சிக்கி இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

நீட் தேர்வு வேண்டும்!!உயிரிழந்த 22 மாணவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி.. எடப்பாடி பழனிச்சாமியின் திடீர் அறிவிப்பு!!

0

எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமி அவர்கள் நீட் தேர்விற்கு ஆதரவு அளிக்கிறாரா இல்லையா என்ற குழப்பம் தற்பொழுது அதிகரித்திருக்கிறது. ஒருபுறம் அனைத்துக் கட்சி கூட்டத்தை அதிமுக முழுவதுமாக புறக்கணித்த நிலையில் நீட் தேர்வு காரணமாக 2021 ஆம் ஆண்டிலிருந்து உயிரிழந்த 22 மாணவர்களுக்கு வருகிற 19ஆம் தேதி மாணவரணி சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்த இருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கிறார்.

இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டிருக்கக்கூடிய அறிவிப்பு :-

திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் நீட் நுழைவு தேர்விற்கான விலக்கு வழங்க வேண்டும் என்பதற்காக சட்டமன்றத்தில் இதுவரை 2 முறை தீர்மானங்களை நிறைவேற்றி குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்புதல் களில் அனுப்பப்பட்ட 2 ஆவது ஒப்புதலில் குறிப்பாக திமுக மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் என சுமார் 1 கோடி பேரிடம் நீட் தேர்வு வேண்டாம் என்பதற்காக கையெழுத்து பெறப்பட்டு குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால் அதனையும் குடியரசு தலைவர் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த நிலையில் தான் நீட் நுழைவு தேர்வு வேண்டாம் என மூன்றாவது கட்டமாக தீர்வு காண சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டமானது ஏப்ரல் 9 ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

நீட் நுழைவு தேர்வுக்கு விலக்கு பெறவே முடியாது என்ற காரணத்தால் தான் அதிமுக அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணித்ததாகவும் 2021 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை நீட் தேர்வால் உயிரிழந்த 22 மாணவர்களுக்கு அதிமுக மாணவரணி சார்பாக மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்த இருப்பதாகவும் அது சரியாக ஏப்ரல் 19ஆம் தேதி அன்று மாலை 6 மணி அளவில் நடைபெறும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கிறார்.

CSK அணியில் இருந்து விலகிய ருதுராஜ்!! மீண்டும் கேப்டனாக மாறிய தோனி!!

0

IPL 2025: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ருத்ராஜ் விலகிவிட்டார். அவருக்கு பதிலாக மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக முன்னாள் கேப்டன் தோனி நியமிக்கப்பட்டுள்ளார்.

2025 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆனது 5 போட்டிகள் விளையாடி உள்ள நிலையில் முதல் போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று இருக்கிறது. அதனைத் தொடர்ந்து 4 போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியை மட்டுமே சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உடன் மோத இருக்கிறது. இதுபோன்ற சூழலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ருத்ராஜ் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது ஏற்கனவே தொடர்ச்சியாக 4 போட்டிகளில் தோல்வியை சந்தித்திருப்பது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில் தற்பொழுது காயம் காரணமாக CSK கேப்டன் ருத்ராஜ் ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்திருப்பது வருத்தத்தை அளிக்க கூடியதாக அமைந்துள்ளது. எனினும் CSK அணிக்கு 5 முறை கோப்பைகளை வென்று கொடுத்த தோனி மீண்டும் கேப்டன் பதவியை ஏற்றிருக்கிறார்.

இதுகுறித்து CSK தலைமை பயிற்சியாளர் பிளமிங் தெரிவித்திருப்பதாவது :-

ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு எதிரான போட்டியில் விளையாடும் பொழுது ருத்ராஜ் ராஜஸ்தான் வேகுபந்துவீச்சாளர் சோப்ரா வீசிய பந்தில் காயமடைந்துள்ளதாகவும் இதனால் அவருடைய முழங்கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதால் இந்த ஐபிஎல் தொடரில் விளையாட முடியாமல் விலகி இருப்பதாகவும் கூறியிருக்கிறார். இதனால் CSK அணிக்கு மீண்டும் எம் எஸ் தோனி கேப்டன் பதவி வகிப்பார் என்றும் அவர் குறிப்பிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரிலும் இதே போன்று ரவீந்திர ஜடேஜா கேப்டனாக இருந்த பொழுது அவரும் காயத்தால் தொடரை விட்டு விலகியதால் தோனி கேப்டனாக பொறுப்பேற்றார். மீண்டும் அதே போன்ற ஒரு சூழல் 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரிலும் நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சிறு வயதில் முழங்கால் வலியால் அவதியா? அப்போ நிவாரணம் கிடைக்க இதை ட்ரை பண்ணி பாருங்க!!

0

முழங்கால் வலி சீக்கிரம் குணமாக இங்கு கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்யவும்.

தீர்வு 01:

1)கிராம்பு
2)இஞ்சி
3)ஏலக்காய்
4)கல் உப்பு
5)அரிசி மாவு
6)காட்டன் துணி

முதலில் பத்து இலவங்கம் அதாவது கிராம்பை எடுத்து வாணலியில் லேசாக வறுத்து ஆறவைத்து பொடித்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் இரண்டு ஏலக்காயை பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.அதன் பின்னர் இரண்டு தேக்கரண்டி கல் உப்பை லேசாக வறுத்து பொடித்துக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு காட்டன் துணி ஒன்றை எடுத்து விரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.அதில் கிராம்புத் தூள்,ஒரு துண்டு தோல் நீக்கப்பட்ட இஞ்சி,ஏலக்காய் தூள்,கல் உப்பு மற்றும் அரிசி மாவு ஆகியவற்றை கொட்டி மூட்டை போல் கட்டிக் கொள்ள வேண்டும்.

இந்த மூட்டையை வாணலி ஒன்றில் வைத்து சிறிது எள் எண்ணெய் அதாவது நல்லெண்ணெய் ஊற்றி மூட்டையை சூடாக்க வேண்டும்.பிறகு இந்த மூட்டை லேசாக ஆறவைத்து கால் மூட்டு பகுதியில் வைத்து அழுத்தம் கொடுத்து வந்தால் வலி தானாக குறையும்.

தீர்வு 02:

1)நல்லெண்ணெய்
2)மஞ்சள் தூள்

அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து 100 மில்லி நல்லெண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு அதில் கால் தேக்கரண்டி மஞ்சள் தூள் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

இந்த எண்ணையை ஆறவைத்து மூட்டு பகுதியில் தடவினால் முழங்கால் வலி சீக்கிரம் குணமாகும்.

தீர்வு 03:

1)கல் உப்பு
2)நல்லெண்ணெய்

ஒரு காட்டன் துணியில் சிறிதளவு கல் உப்பு போட்டு முடிந்து கொள்ள வேண்டும்.பின்னர் அடுப்பில் தோசைக்கல் ஒன்றை வைத்து சிறிது நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும்.

அதன் பிறகு கல் உப்பு மூட்டையை அதில் வைத்து சிறிது நேரம் சூடாக்க வேண்டும்.இதை முழங்கால் மீது வைத்து அழுத்தம் கொடுத்தால் வலி குறைந்துவிடும்.

தீர்வு 04:

1)வெந்தயம்
2)தண்ணீர்

கிண்ணம் ஒன்றில் தண்ணீர் ஊற்றி இரண்டு தேக்கரண்டி வெந்தயம் போட்டு ஊறவைக்க வேண்டும்.7 முதல் 8 நேரம் வரை ஊறவைத்த பின்னர் தண்ணீரை வடித்துவிட்டு வெந்தயத்தை வாயில் போட்டு மென்று சாப்பிட வேண்டும்.இப்படி செய்து வந்தால் முழங்கால் வலி,மூட்டு வீக்கம் ஏற்படாமல் இருக்கும்.

உடல் எடை குறைய இந்த ஜூஸ் குடிங்க!! இது PCOS பிரச்சனைக்கு அபூர்வ மருந்து!!

0

பெண்கள் தைராய்டு,PCOS பிரச்சனையை எதிர்கொள்வது அதிகரித்து வருகிறது.இதனால் உடல் எடை அதிகரித்து பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படுகிறது.எனவே PCOS பிரச்சனை இருப்பவர்கள் தங்கள் உடல் எடையை குறைக்க பெரிய நெல்லிக்காயில் ஜூஸ் செய்து குடிக்கலாம்.

வைட்டமின் சி சத்து நிறைந்த நெல்லிக்காய் உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது.இந்த நெல்லிக்காயில் ஜூஸ் செய்து குட்டித்தால் பிரசவத்திற்கு பிறகு உடல் எடை அதிகரிக்கும் பிரச்சனையை தவிர்க்கலாம்.

தேவையான பொருட்கள்:-

1)பெரிய நெல்லிக்காய் – 10
2)தண்ணீர் – ஒரு கப்
3)சீரகம் – கால் தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

நீங்கள் 10 பெரிய நெல்லிக்காய் சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள்.அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி விதையை மட்டும் நீக்கிவிட வேண்டும்.

பிறகு கால் தேக்கரண்டி சீரகத்தை வாணலியில் போட்டு வறுக்க வேண்டும்.பிறகு இதை ஆறவைத்து மிக்சர் ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் மிக்சர் ஜாரில் பெரிய நெல்லிக்காய் துண்டுகளை போட்டுக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு சீரகத் தூளை அதில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைக்க வேண்டும்.இந்த ஜூஸை வடிகட்டி குடித்து வந்தால் உடலில் இருக்கின்ற கெட்ட கொழுப்பு கரையும்.இந்த நெல்லிக்காய் ஜூஸை குடித்து வந்தால் கல்லீரலில் கொழுப்பு சேர்வது கட்டுப்படும்.

சிறுநீரகத்தில் உள்ள கழிவுகள் அகல நெல்லிக்காய் ஜூஸ் செய்து பருகலாம்.நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால் ஜீரண சக்தி மேம்படும்.

நெல்லிக்காய் ஜூஸ் செய்து குடித்தால் சளி,இருமல் பிரச்சனை நீங்கும்.நெல்லிக்காய் ஜூஸ் செய்து குடித்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.நெல்லிக்காய் ஜூஸ் செய்து குடித்தால் முடி வளர்ச்சி நன்றாக இருக்கும்.தைராய்டு,PCOS பிரச்சனை இருக்கும் பெண்கள் இந்த நெல்லிக்காய் ஜூஸை குடித்து வந்தால் உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும்.

தினமும் வாழைப்பழம் சாப்பிட்டால் உடல் எடை குறையுமா? தொப்பை தொடை கொழுப்பு குறைய இதுதான் பெஸ்ட் வழி!!

0

நாம் வாங்கி சாப்பிடும் பழங்களில் சற்று மலிவான பழமாக வாழைப்பழம் இருக்கிறது.வாழைப்பழத்தில் மெக்னீசியம்,வைட்டமின்கள் நிறைந்து காணப்படுகிறது.வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கும்.

வாழைப்பழத்தில் இருக்கின்ற பொட்டாசியம் சத்து இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.வாழைப்பழம் சாப்பிட்டால் குடலில் நல்ல பாக்டீரியா அதிகரிக்கும்.நீங்கள் தினமும் ஒரு வாழைப்பழத்தை உட்கொண்டு வந்தால் உடல் எடை குறையும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

வாழைப்பழம் சாப்பிடுவதால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு கரையும்.வாழைப்பழத்தில் இருக்கின்ற நார்ச்சத்து செரிமானத்தை சீராக்குகிறது.வாழைப்பழம் சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் உடலில் வளர்சிதை மாற்றம் அதிகரிக்கும்.

வாழைப்பழத்தில் இருக்கின்ற சர்க்கரை சத்து உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது.தினமும் டயட்டில் வாழைப்பழம் சேர்த்துக் கொண்டால் உடல் எடை வேகமாக குறையும்.மூளையின் செயல்திறன் மேம்பட தினமும் வாழைப்பழம் சாப்பிடலாம்.

வாழைப்பதில் இருக்கின்ற வைட்டமின் ஏ சத்து கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.கோடை காலத்தில் வாழைப்பழம் சாப்பிட்டால் உடல் சூடாகாமல் இருக்கும்.தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் புற்றுநோய் அபாயம் குறையும்.

இதய ஆரோக்கியம் மேம்பட வாழைப்பழம் சாப்பிடலாம்.நரம்பு மண்டல ஆரோக்கியம் மேம்பட வாழைப்பழம் உட்கொள்ளலாம்.தசைகள் வலிமையாக இருக்க தினமும் வாழைப்பழம் உட்கொள்ளலாம்.

நம்புங்க இது அனுபவம்!! இப்படி சாப்பிட்டால் உங்கள் குடலில் ஒரு துளி கழிவுகூட தேங்காது!!

0

குடலில் கழிவுகள் தேங்காமல் இருக்கவும்,தேங்கிய கழிவுகள் வெளியேறவும் நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றலாம்.

1)பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.பிரிட்ஜில் வைத்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.மாவு பொருட்களை அளவாக சாப்பிட வேண்டும்.

2)வெறும் வயிற்றில் எலுமிச்சை பானம்,மூலிகை பானம் செய்து குடித்தால் உடலில் இருக்கின்ற கழிவுகள் வெளியேறிவிடும்.

3)எளிதில் செரிமானமாகக் கூடிய இட்லி,தோசை போன்ற உணவுகளை உட்கொள்ள வேண்டும்.இரவு நேரத்தில் பழங்கள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

4)அதிக நார்ச்சத்து நிறைந்த உணவுகளை தினமும் உட்கொள்ள வேண்டும்.காய்கறிகளை எண்ணையில் வாதக்காமல் வேகவைத்து சாப்பிடலாம்.

5)இஞ்சி டீ,இஞ்சி துவையல்,இஞ்சி ஜூஸ் செய்து குடித்து வந்தால் உடலில் இருக்கின்ற கழிவுகள் வெளியேறும்.

6)அடிக்கடி முட்டைகோஸ் உணவாக சாப்பிட்டு வந்தால் குடலில் கழிவுகள் தேங்காமல் இருக்கும்.பிரிட்ஜில் உணவு வைத்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

7)விளக்கெண்ணெயை தண்ணீரில் கலந்து குடித்தால் குடலில் கழிவுகள் தேங்காமல் இருக்கும்.எலுமிச்சை சாறை வெது வெதுப்பான தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் குடலில் கழிவுகள் தேங்காமல் இருக்கும்.

8)இரவு நேரத்தில் மைதா உணவுகளை தவிர்க்க வேண்டும்.காய்கறிகளை வேகவைத்து சாலட்டாக சாப்பிட வேண்டும்.

9)தக்காளி பழத்தை அரைத்து ஜூஸாக சாப்பிட்டு வந்தால் உடல் எடை வேகமாக குறையும்.சாப்பிடும் உணவில் தக்காளி சேர்த்துக் கொண்டால் உடலில் கழிவுகள் சேராமல் இருக்கும்.

10)மா இஞ்சியில் கஷாயம் செய்து குடித்து வந்தால் குடல் கழிவுகள் தேங்காமல் இருக்கும்.குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

தினமும் ஒரு கிளாஸ் நெல்லிக்காய் ஜூஸ் குடித்தால்.. நீங்கள் இத்தனை பலன்களை அடையலாம்!!

0

மருத்துவர்கள் சாப்பிடச் சொல்லும் கனிகளில் ஒன்றாக நெல்லிக்காய் உள்ளது.வைட்டமின் சி என்றால் அது நெல்லிக்காய் தான்.இதில் இருக்கின்ற ஊட்டச்சத்துக்கள் மற்றும் மருத்துவ குணங்கள் வேறெதிலும் இல்லை.நெல்லிக்காயில் வைட்டமின் ஏ,நார்ச்சத்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

நெல்லிக்காய் ஜூஸ் முடி வளர்ச்சியை அதிகரிக்க செய்கிறது.நெல்லிக்காய் சாறு குடித்தால் மயிர்க்கால்கள் வலிமை அதிகரிக்கும்.நெல்லியில் உள்ள வைட்டமின் சி சத்து உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது.

நெல்லிக்காய் ஜூஸ் குடித்தால் மன ஆரோக்கியம் மேம்படும்.வைட்டமின் ஏ சத்து கண் பார்வை திறனை மேம்படுத்த உதவுகிறது.குடல் கழிவுகளை அகற்ற செரிமான சக்தியை அதிகரிக்க ஜெல்லிகை ஜூஸ் செய்து குடிக்கலாம்.

நெல்லி ஜூஸ் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:-

1)பெரிய நெல்லிக்காய் – இரண்டு
2)இஞ்சி – ஒரு துண்டு
3)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

முதலில் இரண்டு பெரிய நெல்லிக்காய் எடுத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் இதன் சதை பற்றை மட்டும் பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.

அதன் பின்னர் மிக்சர் ஜாரில் இந்த நெல்லிக்காய் துண்டுகளை போட்டுக் கொள்ள வேண்டும்.அடுத்து ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கிவிட்டு மிக்சர் ஜாரில் போட வேண்டும்.

அதன் பிறகு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.இந்த நெல்லிக்காய் ஜூஸை கிளாஸிற்கு வடிகட்டி ஒரு தேக்கரண்டி தேன் கலந்தால் நெல்லிக்காய் ஜூஸ் ரெடி.தினமும் ஒரு கிளாஸ் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால் உடலுக்கு ஆரோக்கிய நன்மைகள் கிடைத்துக் கொண்டே இருக்கும்.டீ,காபிக்கு பதில் தினமும் ஒரு கிளாஸ் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கலாம்.

தூக்கி எறியும் எலுமிச்சை தோலை தலைக்கு தேய்த்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

0

நாம் அடிக்கடி பயன்படுத்தும் காயான எலுமிச்சையில் ஏகப்பட்ட சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.எலுமிச்சை சாறை ஜூஸாக சாப்பிட்டு வந்தால் ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும்.எலுமிச்சை சாறில் சாதம் செய்து சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

எலுமிச்சை சாறு உடல் எடை இழப்பிற்கு பெரிதும் உதவியாக இருக்கிறது.எலுமிச்சை சாறு குடித்தால் செரிமானப் பிரச்சனை சரியாகும்.உடலில் இருக்கின்ற தேவையற்ற நச்சுக்கள் வெளியேற எலுமிச்சை பானம் செய்து குடிக்கலாம்.

எலுமிச்சை சாறு உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி கூந்தல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது.அதேபோல் எலுமிச்சை தோலை வைத்து தலைமுடி சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம்.எலுமிச்சை தோலை பொடியாக நறுக்கி தேங்காய் எண்ணையில் போட்டு கொதிக்க வைத்து ஆறிய பிறகு தலைக்கு தேய்த்து வந்தால் வளர்ச்சி நன்றாக இருக்கும்.

எலுமிச்சை சாறை தலைக்கு அப்ளை செய்து குளித்து வந்தால் பொடுகு தொல்லை ஒழியும்.எலுமிச்சை சாறு தேய்த்தால் தலையில் உள்ள அழுக்குகள் நீங்கும்.

வாரம் ஒருமுறை எலுமிச்சை சாறை தலைக்கு தேய்த்து குளித்தால் தலை அரிப்பு ஏற்படாமல் இருக்கும்.எலுமிச்சை சாறு தலைக்கு தேய்த்தால் பேன்,ஈறு ஒழியும்.எலுமிச்சை சாறு முடி வளர்ச்சியை ஊக்குவிக்க உதவுகிறது.

எலுமிச்சை தோலை அரைத்து தலைக்கு தடவி நன்றாக மசாஜ் செய்து குளித்தால் முடி வளர்ச்சி நன்றாக இருக்கும்.தலையில் சிக்கு வாடை வீசினால் எலுமிச்சை எண்ணெயை தலைக்கு அப்ளை செய்யலாம்.எலுமிச்சை சாறை தலைக்கு அப்ளை செய்து குளித்தால் முடி பளபளப்பாக்க மாறும்.

எலுமிச்சை சாறு தலையில் இருக்கின்ற எண்ணெய் பிசுபிசுப்பை போக்கி கூந்தல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

வெயில் காலத்தில் பிரிட்ஜ் தண்ணீர் வேண்டாம்.. உடலை ஜில்லுனு வைக்க இந்த நீரை குடிங்க!!

0

தற்பொழுது தாங்க முடியாத அளவிற்கு வெயில் வாட்டி வதக்கி வருகிறது.பகல் நேரத்தில் வெளியில் செல்லவே முடியாத நிலையில் மக்கள் உள்ளனர்.கடுமையான வெயிலால் உடலில் நீர்ச்சத்து குறைந்து மயக்கம்,தலைவலி,உடல் சோர்வு போன்ற பல பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.

பெரும்பாலானோர் இந்த கோடை வெயிலை சமாளிக்க ஐஸ்க்ரீம்,சர்பத்,கூல்ரிங்ஸ்,ஐஸ் வாட்டர் போன்றவற்றை அதிகமாக சாப்பிடுகின்றனர்.இதில் பெரும்பாலானோர் வீடுகளில் பிரிட்ஜ் பயன்படுத்தப்படுவதால் ஜூஸ்,வாட்டர் போன்றவற்றை குளிரவைத்து பருகுகின்றனர்.

ஆனால் பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தப்படும் எந்தஒரு பொருளும் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது அல்ல.இதற்கு மாற்று மண் பானையில் தண்ணீர் ஊற்றி பயன்படுத்தலாம்.மண் பாத்திரங்கள் நம் உடல் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மை பயக்க கூடியதாக உள்ளது.

மண் பானையில் தண்ணீர் ஊற்றி குடித்தால் உடலுக்கு தேவையான இயற்கையான குளிர்ச்சி கிடைக்கும்.உடல் சூடு தணிய மண் பானை தண்ணீர் குடிக்கலாம்.மண் பானை நீர் குடித்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.

மண் பானை தண்ணீர் சுவையாக இருப்பதோடு சுத்தமானதாக இருக்கும்.கோடையில் நீரேற்றத்துடன் இருக்க மண் பானை நீர் பருகலாம்.மண் பானை நீர் அருந்தினால் உடலில் மெட்டபாலிசம் அதிகரிக்கும்.மண் பானை நீர் குடித்தால் தொண்டை வறட்சி ஏற்படாமல் இருக்கும்.ஆஸ்துமா பாதிப்பு இருப்பவர்கள் மண் பானை நீர் பருகலாம்.

தொண்டைப்புண் பிரச்சனை இருப்பவர்கள் மண் பானை நீர் அருந்தினால் அதிக நன்மைகள் கிடைக்கும்.மண் பானை நீர் உடலில் வெப்பம் ஊடுருவாமல் பாதுகாக்கிறது.தினமும் 8 கிளாஸ் மண் பானை நீர் குடித்தால் வயிறு எரிச்சல்,நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கும்.

மண் பானை நீர் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.மண் பானையில் தண்ணீர் ஊற்றி குடித்தால் சருமம் ஈரப்பதத்துடன் இருக்கும்.மண் பானை நீரை குடித்து வந்தால் உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்கும்.