Home Blog Page 310

பெயர் பலகை மாற்றி வைக்கப்பட்ட ஜாமா மசூதி!! யாரு பார்த்த வேலைடா இது.. தொல்லியல் துறை கொடுத்த விளக்கம்!!

0

கோவில் இருந்த இடத்தில் கோவிலை இடித்துவிட்டு மசூதி கட்டப்பட்டதாக பல்வேறு பிரச்சனைகளை சந்தித்த உத்தரபிரதேசத்தில் இருக்கக்கூடிய சம்பல் ஜாமா மசூதியின் பெயர் ஜூம்மா மசூதி என தொல்லியல் துறையால் பெயர் பலகை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த மாதம் நவம்பர் 24ஆம் தேதி ஜாமா மசூதியில் ஆய்வு மேற்கொள்வதற்காக தொல்லியல் துறையினர் சென்றபோது கலவரம் ஏற்பட்டு அதில் 4 பேர் பலியான நிலையில் ஆய்வு மேற்கொள்வதை தொல்லியல் துறை உடனடியாக நிறுத்திவிட்டது. அப்பொழுது இந்த மசூதியின் பெயர் பழகியானது மாற்றி அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஏற்கனவே மசூதியின் உட்பகுதியில் பெயர் பலகை மாற்றப்பட்டு இருப்பதாகவும் வெளியிலும் நீல நிறத்தில் ஜும்மா மசூதி என்ற பெயர் பலகை வைக்கப்பட்ட நிலையில் வேண்டாத மர்ம நபர்கள் யாரோ பெயர் பலகையை மாற்றி வைத்து விட்டதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜாமா மசூதி என குறிப்பிடப்பட வேண்டிய இடத்தில் ஜும்மா மசூதி என குறிப்பிட்டு இருப்பது இஸ்லாமியர்கள் இடையேயும் சம்பல் பகுதியிலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தொல்லியல் துறை இதற்கான பெயர் பலகை காவல்துறையிடம் மற்றொன்று பாதுகாப்பாக இருப்பதாகவும் இதற்கான பெயர் பலகை பிரச்சனை தீர்வு செய்யப்பட்டு புதிய பெயர் பலகைகள் மாற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் புதிய பெயர் பலகை எப்பொழுது மாற்றப்படும் என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.

13 வருட வாழ்க்கை முடிஞ்சு போச்சு.. இனி ஏதும் நடக்காது – நளினி கணவர் ஓபன் டாக்!!

0

Cinema: ராமராஜன் 70களில் முன்னணி ஹீரோக்கள் பட்டியலில் முக்கிய இடத்தை பெற்றிருந்தார். இவர் மீனாட்சி குங்குமம் படத்திற்கு பிறகு எங்க ஊரு பாட்டுக்காரன், நேரம் நல்லா இருக்கு, எங்க ஊரு காவல்காரன், வில்லுப்பாட்டுக்காரன் என பல வெற்றி படங்களை தொடர்ந்து கொடுத்தார். இவையனைத்தும் கிராமம் சார்ந்து எடுக்கப்பட்டதால் இவருக்கு திரையுலகில் நல்ல வரவேற்பு கிடைத்தது. பின்பு நடிகை நளினியை காதலித்து வந்தார். இருவரும் பரஸ்பர உறவுடன் காதலித்து வந்த நிலையில் வீட்டில் ஒப்புக்கொள்ளவில்லை.

இதனால் இருவரும் வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமண நிகழ்ச்சியை எம்ஜிஆர் வெகு விமர்சையாக எடுத்து நடத்தினார். இவர்கள் திருமண வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருந்த தருணத்தில் 14வது வருடம் இவர்கள் திருமணம் முற்றுப்புள்ளிக்கு வந்தது. 13 ஆண்டு பந்தத்தை 2000 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். ஆனால் இவர்களின் குழந்தைகளின் திருமணம் நிகழ்ச்சி உள்ளிட்டவைகளில் மனக்கசப்பு ஏற்படாமல் சேர்ந்து நடத்தினர்.

அதேபோல நடிகை நளினியும் எந்த ஒரு பேட்டி கொடுத்தாலும் சரி தனது கணவரை விட்டுக் கொடுப்பதில்லை. அதே போல தான் ராமராஜனும் நளினி குறித்து அவதூறு கருத்தை தற்போது வரை தெரிவித்ததில்லை. ஆனால் சமீப காலமாக, ராமராஜன் நளினி மீண்டும் இணைந்துள்ளதாக ஒரு தகவல் இணையத்தில் பரவி வந்துள்ளது. இது குறித்து தற்பொழுது ராமராஜன் வாய் திறந்துள்ளார், அதில், நளினியும் நானும் மீண்டும் சேர வாய்ப்பே இல்லை நடக்காத விஷயத்தை பற்றி ஏன் இப்படி தவறான கருத்தை பரப்புகிறீர்கள்?? இது எனக்கும் என் பிள்ளைகளுக்கும் மன உளைச்சலை கொடுக்கிறது.

நானும் நளினியும் இணைந்து விட்டோம் என்பதில் ஒரு துளிக் கூட உண்மை இல்லை. நாங்கள் பிரிந்து கிட்டத்தட்ட 25 வருடங்கள் ஆகிவிட்டது நான் தனியாக வாழ பழகிக் கொண்டேன் இனிவரும் நாட்களில் இப்படிப்பட்ட வதந்திகளை பரப்பாதீர்கள் இது மிகவும் வருத்தமடை செய்கிறது என்று கூறியுள்ளார்.

பெண் குரலில் கிண்டல் அடித்து கமலஹாசன் பாடிய 4 பாடல்கள்!!

0

கமலஹாசன் தனது பல்திறமைகளை நிரூபித்தவர். அவர் நடிப்பில் மட்டுமல்லாது, பாடலாசிரியர், இயக்குநர், பின்னணிப் பாடகர் எனும் பல்வேறு தருணங்களில் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். அதில் ஒரு தனித்திறமை பெண்குரலில் பாடியுள்ள சில பாடல்கள்.அவர் மிகவும் வித்தியாசமாகவும், கலை ரீதியாகவும் அதை செய்துள்ளார்.

கமல்ஹாசன் பெண் குரலில் பாடிய அல்லது பெண் குரல் போல் பாட முயன்ற சிறப்பான பாடல்கள் சில :-

✓ கன்னத்தில் முத்தமிட்டால் – விருமாண்டி (2004)

விவரம்: இந்த பாடலில் சில இடங்களில் கமல்ஹாசன் பெண் குரலைப் போல் பாடுகிறார். இது முழுமையான பெண்குரலாக இல்லையெனினும், அவர் குரலை மாற்றி, ஹ்யூமருடன் வழங்குகிறார்.

✓ இஞ்சி இடுப்பழகி – தேவர் மகன் (1992)

இசை: இளையராஜா

பாடியவர்: கமல்ஹாசன்

விவரம்: இது முற்றிலும் பெண்குரலில் பாடப்பட்டது என்று தவறாக நினைக்கப்படலாம், ஆனால் இது கமல் பாடிய உண்மையான பாடல் — அவர் ஒரு மென்மையான, நகைச்சுவை கொண்ட பெண்குரல் போல் பாடியிருந்தார்.

✓ நினைவோ ஒரு பறவை – சிகப்பு ரோஜாக்கள் (1978)

பாடியவர்: கமல்ஹாசன்

இது ஒரு முழுமையான பெண்குரல் அல்ல, ஆனால் மென்மையான குரல் பாடலில் அவர் குரலை வித்தியாசமாக மாற்றி பாடி இருப்பார்.

✓ பொட்ட புள்ள – மும்பை எக்ஸ்பிரஸ் (2005)

இதில் கமல் சில இடங்களில் பெண்குரலை நகைச்சுவையாகப் பயன்படுத்துகிறார்.

இந்த பாடல்கள் அனைத்தும் கமல்ஹாசனின் கலைத் திறமையையும் கலைமீது அவர் வைத்திருக்கக் கூடிய ஆர்வத்தையும் விளக்குவதாக அமைந்திருக்கின்றனர். கமலஹாசன் திரையுலகில் பல பாடல்களை பாடி மிகப்பெரிய கலைஞராக மதிக்கப்படுகிறார். அவற்றில் இவை சற்று வேறுபட்டு காணப்படும் பாடல்களாகும்.

நீட் தேர்வு எதிர்ப்பு.. கட்டாயம் நான் சப்போர்ட் செய்ய மாட்டேன்- சீமானுடன் இணைந்த எடப்பாடி!!

0

ADMK NTK: தமிழக அரசியல் களமானது மீண்டும் பழைய நிலைக்கு திரும்புகிறது என்று சொல்லலாம் பாஜக அதிமுக கூட்டணி முறிவு பெற்ற நிலையில் தற்சமயம் மீண்டும் இணக்கமாக தயாராகி வருகிறது. கூடுதலாக பாஜகவிற்கு சீமானின் ஆதரவும் கிடைத்துள்ளது. இவரின் ஆதரவானது மறைமுகம் என்று கூறினாலும், வெளி உலகத்திற்கு வெளிச்சம் போட்டும் காட்டும் வகையில் தான் அனைத்து நடவடிக்கைகளும் உள்ளது. அதன்படி தமிழக அரசானது நீட் தேர்வை புறக்கணிக்கும் வகையில் அனைத்து கட்சி கூட்டம் ஏற்பாடு செய்துள்ளது.

இதில் முதல் ஆளாக சீமான் இந்த நாடகம் என்னும் கட்சி கூட்டத்தில் பங்கேற்க மாட்டேன் என்று தெரிவித்தார். இது பாஜகவிற்கான மறைமுக சாடல் தான் என அனைவரும் புரிந்து கொண்டனர். அவரைப் போலவே இன்று எடப்பாடி பழனிச்சாமியும் அதாவது நீட் தேர்வை ரத்து செய்யும் அதிகாரமானது மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளது என கூறும் திமுக தற்போது நடத்தும் அனைத்து கட்சி கூட்டத்தில் மட்டும் என்ன செய்யப் போகிறது?? அதனால் நான் திமுக நடத்தும் இந்த நாடகத்தில் பங்கேற்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி இது அனைத்தும் வரப்போகும் சட்டமன்றத் தேர்தலுக்காக செய்யும் திட்டம் என்றும் கூறினார். பாஜக வை எதிர்க்கும் செயலில் அதிமுக எடப்பாடி மற்றும் நாம் தமிழர் கட்சி சீமான் ஒன்றிணைந்து ஒருசேர கருத்துக்களை தெரிவித்திருப்பது அரசியல் சூழலில் சற்று உற்று கவனிக்க வேண்டிய விஷயமாகத்தான் இருக்கிறது. இது நாளடைவில் கூட்டணிக்கு வலுவகுக்கும் எனக் கூறுகின்றனர்.

நகை கடன் பெற்றவர்கள் மீது இறக்கப்பட்ட மற்றொரு இடி!! கூட்டுறவு வங்கியின் புதிய விதிமுறைகள்!!

0

சில நாட்களுக்கு முன்பு இந்தியன் ரிசர்வ் வங்கியானது சர்வதேச வங்கிகள் மற்றும் நகை கடன் நிறுவனங்களுக்கு புதிய விதிகளை அறிமுகப்படுத்தியது. தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது. நீதிமன்றம் தரப்பிலிருந்து இந்தியன் ரிசர்வ் வங்கிக்கு விளக்கம் அளிக்கும்படி தெரிவிக்கப்பட்ட நிலையில் இன்னும் இந்தியன் ரிசர்வ் வங்கிய இடம் இருந்து எந்தவித பதிலும் வெளிவரவில்லை.

நகைகளை விட்டுவிடக் கூடாது என்பதற்காக மக்கள் பலரும் சர்வதேச வங்கிகளில் அடகு வைத்திருந்த நகைகளை மீட்டு கூட்டுறவு வங்கிகளில் வைத்து வருகின்றனர். கூட்டுறவு வங்கிகளில் அதிக அளவில் பொதுமக்கள் நகை அடகு வைப்பதால் அங்கும் சில புதிய விதிமுறைகள் விதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாக்கியுள்ளன.

கூட்டுறவு வங்கிகளில் விரிக்கப்பட்டுள்ள புதிய விதிமுறைகள் :-

✓ 2 லட்சம் ரூபாய்க்கு நகைகள் அடமானம் வைக்கப்பட்டு இருப்பின் ஆண்டுக்கு ஒரு முறை வட்டியை மட்டும் செலுத்தி விட்டு நகையை மீட்டு மறு அடகு வைக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

✓ இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல் நகை கடன் பெற்று இருக்கக்கூடியவர்கள் ஒவ்வொரு மாதமும் அதற்கான வட்டியை கட்டாயமாக செலுத்தியாக வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

✓ அதிகப்படியான நகை கடனாக கூட்டுறவு வங்கிகளில் 30 லட்சம் ரூபாய் வரை மட்டுமே பெற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச வங்கிகளில் நகையை மீட்டு மறு அடகு வைப்பதற்கு முழு தொகை மற்றும் அதற்கான வட்டி தொகை இரண்டையும் செலுத்தி நகையை மீட்டு அதற்கான மறுநாள் மீண்டும் மறு அடக்கு வைக்க வேண்டும் என இந்தியன் ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பினை வெளியிட்டது. இதனால் பயத்தில் நகை கடன் வைத்தவர்கள் தங்களுடைய நகைகளை மீட்டு கூட்டுறவு வங்கிகளில் வைத்து வரக்கூடிய நிலையில் கூட்டுறவு வங்கியில் போடப்பட்ட புதிய விதிமுறைகள் நகை கடன் பெற்றவர்களுக்கு அதிர்ச்சியை அளிப்பதாக அமைந்துள்ளது.

கவர்னருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!! மோடி தமிழகத்துக்கு கொடுக்கப்போகும் டிவிஸ்ட்!!

0

High Court: ஆளுநர் ஆர் என் ரவிக்கும் தமிழக அரசுக்கும் எப்பொழுதும் முன்னுக்கு பின்னான முரண்பாடு உள்ளது. இதனால் எப்பொழுதும் தமிழக அரசு கொடுக்கும் தீர்மானங்களை கண்டு கொள்வதில்லை. மேற்கொண்டு தமிழக அரசு 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்குமாறு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. ஆனால் இதற்கு ஒப்புதல் அளிக்காமல் தற்போது வரை காலம் தாழ்த்தி வந்துள்ளார். இது ரீதியான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் போடப்பட்டது.

அந்த வழக்கானது அமர்வுக்கு வந்து, நீதிபதிகள் கவர்னருக்கு எதிரான தீர்ப்பை வழங்கி உள்ளனர். அதாவது சட்டப்பேரவை மூலம் வழங்கப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் தன்னிச்சையாக செயல்பட எந்த ஒரு மாநிலத்தில் உள்ள ஆளுநருக்கு உரிமை இல்லை எனக் கூறியுள்ளனர். இதே போல தான் டெல்லியில் ஆம் ஆத்மி ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் போன்ற அதிகாரிகள் பணியிடை மாற்றம் செய்வது நியமனம் செய்வது ரீதியான மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமலேயே இருந்துள்ளார்.

மேற்கொண்டு சிறப்பு அதிகாரமான 142 சட்ட விதியை பயன்படுத்தி இதன் முழு சுதந்திரத்தை டெல்லி அரசுக்கு உச்ச நீதிமன்றம் கொடுத்தது. ஆனால் இதனை பொறுக்க முடியாமல் மத்திய அரசானது மாநில அரசின் உரிமையை கவர்னர் மூலம் பறிக்கும் வகையில் அவசர சட்ட திருத்தத்தை இதற்கு எதிராக கொண்டு வந்தது. மேற்கொண்டு அதன் அதிகாரம் அனைத்தும் மத்திய அரசு மூலம் பரித்தனர். அதேபோல தமிழக கவர்னருக்கு எதிராக தற்பொழுது உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், அவசர சட்ட திருத்தம் ஏதேனும் மோடி கொண்டு வருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

எடப்பாடிக்கு பெரும் ஆப்பு.. விஜய்யுடன் கூட்டு வைக்கப் போகும் அதிமுக சீனியர் நிர்வாகி!!

0

ADMK TVK: அதிமுகவின் முக்கிய நிர்வாகியாக பார்க்கப்படும் செங்கோட்டையன் தற்பொழுது மாற்றுக் கட்சிக்கு செல்ல விரும்புவதாக தகவல்கள் பரவி வருகிறது. அந்த வரிசையில் திமுக, பாஜக, விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் உள்ளிட்டவையும் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக இவர் டெல்லி சென்று அமித்ஷா மற்றும் நிர்மலா சீதாராமனை சந்தித்து வந்துள்ளார். இதன் மூலம் இவர் பாஜகவுடன் கூட்டு வைத்து அதிமுகவை கைப்பற்றுவார் எனக் கூறி வந்தனர்.

ஆனால் இன்று கோட்டை வட்டாரமானது புதிய தகவலை வெளியிட்டுள்ளது. அமித்ஷாவுடன் ஏற்பட்ட சந்திப்பில், இவருக்கு சாதகமாக எந்த ஒரு பதிலும் கிடைக்கவில்லையாம். எடப்பாடி உடன் சமரசமாக போங்கள் என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்துள்ளாராம். இதனால் வருத்தமடைந்த செங்கோட்டையன் மாற்று யோசனையில் உள்ளாராம்.

அதாவது எந்த கட்சிக்கு சென்றாலும் இவர் சார்ந்த கொங்கு வாக்குகள் அனைத்தும் இவருக்கே கிடைக்கும். அதனால் விஜய்யுடன் இணையுங்கள் என்று இவரது நெருங்கிய  வட்டாரம் அறிவுறுத்துகிறதாம். குறிப்பாக அவரும் கூட்டணி கட்சி இல்லாமல் தனித்த நிற்கிறார், இச்சமயத்தில் அவருக்கு கை கொடுத்தால் பக்கபலமாக இருக்கும் எனக் கூறுகின்றனராம்.

ஆனால் செங்கோட்டையன் குழப்ப நிலையிலேயே உள்ளதாகவும் எந்த பக்கம் செல்வதென்று தெரியவில்லையாம். மேற்கொண்டு இவர் விஜய்யுடன் இணையும் பட்சத்தில் அவருக்கு கட்சியில் முக்கிய இடம் கொடுக்கப்படும், அதுமட்டுமில்லாமல் அதிமுகவிற்கு அது பெரும் அடியாகவும் விழும் எனக் தெரிவித்துள்ளனர். முன்னதாகவே எடப்பாடியுடன் மோதல் போக்கு இருக்கும் பட்சத்தில் இதனை அவருக்கு சாதகமாக ஏற்க முடிவு செய்துள்ளாராம்.

சீமானுக்கு கொடுத்திருக்கும் அசைன்மெண்ட் இதுதான்!.. போட்டு பொளக்கும் பிரபலம்!..

0

நாம் தமிழர் கட்சி என்கிற அரசியல் கட்சியை துவங்கி கடந்த 15 வருடங்களாக அரசியல் செய்து வருபவர் சீமான். தன்னை தமிழ் தேசியவாதியாக காட்டிகொள்வார். பிரபாகரனின் தம்பி என தன்னை சொல்லிக்கொள்ளும் சீமான் தொடர்ந்து தனி ஈழம் பற்றி பேசி வருபவர். இலங்கை சென்று பிரபாரன் வீட்டில் ஆமைக்கறி சாப்பிட்டேன் என சொல்லி சர்ச்சையில் சிக்கியவர் இவர். அரசியல் மேடைகளில் ஆக்ரோஷமாக பேசுவது சீமானின் வழக்கம்.

சீமானின் பேச்சில் மயங்கி பல இளைஞர்கள் அவரின் ஆதரவாளர்களாக மாறினார்கள். திமுக, அதிமுக போன்ற திராவிட கட்சிகளுக்கு மாற்று வேண்டும் என விரும்பும் சிலரும் சீமானை ஆதரித்து பேசி வருகிறார்கள். ஒருபக்கம், நடிகர் விஜயலட்சுமி இவர் மீது தொடர்ந்து பாலியல் புகார்களை சொல்லி வருகிறார். ஒருபக்கம், பெரியாரை பற்றி இழிவாக பேசி திமுக மற்றும் திக கழக தொண்டர்களின் கோபத்திற்கும் உள்ளானர்.

ஒருபக்கம் பாஜக தலைவர் அண்ணாமலையுடன் சீமான் நெருக்கம் காட்டி வருகிறார். சமீபத்தில் நடந்த எஸ்.ஆர்.எம் கல்லூரி விழாவில் அண்ணாமலையுடன் சேர்ந்து சீமானும் கலந்துகொண்டார். அதோடு, நிர்மலா சீதாராமனை சீமான் ரகசியமாக சந்தித்து பேசியதாகவும் சொல்லப்படுகிறது. எனவே, திமுக ஆட்சியை அகற்ற நினைக்கும் சீமான் திமுகவை எதிர்க்கும் கட்சிகளுடன் கூட்டணி அமைப்பார் என்கிற எண்ணம் பலருக்கும் உருவாகியிருக்கிறது. ஆனால், யாருடனும் கூட்டணி இல்லை என சீமான் சொல்லியிருக்கிறார்.

Seeman has said that he will not attend the anti-NEET rally
Seeman has said that he will not attend the anti-NEET rally

இந்நிலையில், பிரபல யுடியூப்பர் மற்றும் அரசியல் விமர்சகர் புளூசட்ட மாறன் எஸ்.ஆர்.எம் விழவில் சீமான் பேசிய வீடியோவை பகிர்ந்து ‘அண்ணாமலை மற்றும் மோடிக்கு பாராட்டு. கிறிஸ்தவ மதத்தை சீண்டுதல், ஆங்கிலத்தை மட்டம் தட்டுதல் என சீமான் நிரந்தர சங்கியாக மாறிவிட்டார். இதற்கு இவர் பயன்படுத்தும் முகமூடி தமிழ்ப்பற்று.. தொடர்ச்சியாக இளைஞர்களை மூளைச்சலவை செய்வதுதான் இவருக்கான அசைன்மென்ட். தற்போது கல்லூரி நிகழ்ச்சிகளில் தமிழ், தமிழ் என புல்லரித்து நாயனம் வாசித்து வருகிறார்.

RSS – பாஜகவின் பக்கவாத்தியமாக இவரும், இவருக்கு பக்க வாத்தியமாக அண்ணாமலையும் சோடி போட்டு வலம் வருகிறார்கள்.போலி தமிழ் மொழிப்பற்று, போலி தமிழர் இனப்பற்றுடன் இளைஞர்களை வசியம் செய்ய வரும் பூம்பூம் மாட்டுக்காரர்களை அண்டவிடாமல் தன்மான தமிழ் இளைய சமூகம் விழிப்புடன் இருக்க வேண்டும். விரட்டி அடிக்க வேண்டும்’ என பதிவிட்டுள்ளார்.

 

பெண்களை போல ஆண்களுக்கும் கட்டணமில்லா பேருந்து பயணம்.. அமைச்சர் சொன்ன குட் நியூஸ்!!

0

TN Gov: தமிழக அரசானது பெண்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து கொடுத்துள்ளது. அந்த வகையில் மகளிர் உரிமைத் தொகை, கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் என்ற வகையில் புதுமைப்பெண் திட்டம் மேற்கொண்டு கட்டணமில்லா பேருந்து பயணம் போன்றவையும் உள்ளது. குறிப்பாக கட்டண மில்லா பேருந்து பயணம் மூலம் தமிழக முழுவதும் பெரும்பாலான மகளிர் பயனடைந்து வருகின்றனர். அந்த வகையில் சட்டசபையில் இது ரீதியான கேள்வியை ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ கருமாணிக்கம் கேட்டுள்ளார்.

அதில், விடியல் பயணம் என்ற திட்டத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பெண்கள் பயனடைந்து வரும் நிலையில், ஆண்களுக்கும் விடியல் பயணம் கொடுப்பீர்களா?? என்று கேட்டுள்ளார். இதற்கு தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது, பெண்கள் தான் அதிகம் ஒடுக்கப்பட்டவர்கள், அவர்களை முன்னேற்றிக் கொண்டு வர வேண்டும்.

அந்தவகையில் பெரியார் காட்டிய வழியில் நடக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் ரீதியான பல திட்டங்கள் முன்னிறுத்தப்பட்டுள்ளது. நாளடைவில் நிதிநிலையானது சீராகும் போது கட்டாயம் நீங்கள் வைத்த கோரிக்கையானது கவனம் பெற்று பரிசீலனை செய்யப்படும் என்று தெரிவித்தார். மேலும் இம்முறை சட்டப்பேரவையில் குடும்ப தலைவர்களுக்கு வழங்கி வரும் மகளிர் உரிமைத்தொகையை விரிவாக்கம் செய்வதாகவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது வரை மட்டும் பெண்கள் கிட்டத்தட்ட 2 கோடிக்கும் மேற்பட்டோர் பயனடைந்து வருகின்றனர்.

2 லட்சத்திற்கு மேல் நகையை அடகு வைத்துள்ளீர்களா.. வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

0

RBI: மத்திய பட்ஜெட் கூட்டு தொடரின் மூலம் நகை கடன் ரீதியாக புதிய அறிவிப்புகள் வெளியாகியது. அதன்படி தேசிய வங்கிகளில் நகைகளை அடகு வைத்து திருப்பும் போது அதனுடைய வட்டி மற்றும் அசல் இரண்டையும் செலுத்த வேண்டும். மேற்கொண்டு உடனடியாக அன்றைய தினமே நகையை அடகு வைக்க முடியாது. மாறாக அடுத்த நாள் தான் அடகு வைக்க முடியும். இப்படி நகை கடன் ரீதியான அறிவிப்பு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனால் மக்கள் பெருமளவு சிரமப்படுவர் என்றும், கடன் வாங்கும் பட்சத்தில் வட்டி ரீதியாக பெரும் சிக்கலை சந்திக்க கூடும் என தெரிவித்தனர். இதனால் தேசிய வங்கிகளில் வைத்திருந்த பயனாளிகள் தங்களது நகையை தற்பொழுது கூட்டுறவு சொசைட்டிக்கு மாற்றி வருகின்றனர். இங்கு வட்டி விகிதம் 12 சதவீதம் என்ற அளவில் அதிகமாக இருந்தாலும் தேசிய வங்கிகளில் உள்ள விதிமுறைகள் இங்கு கிடையாது. ஆனால் தற்பொழுது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதாவது நகை அடகு வைப்பவர்கள் இரண்டு லட்சத்திற்குள் வைத்தால் மட்டுமே ஆண்டு வட்டி செலுத்த முடியும். மாறாக இரண்டு லட்சத்திற்கும் மேல் நகையை வைத்து கடன் வாங்குபவர்கள் மாதம்தோறும் வட்டி கட்ட வேண்டும் எனக் கூறியுள்ளனர். இது ஒரு சில நபர்களுக்கு தெரியாமல் வட்டி கட்டாமலேயே உள்ளார்களாம். இது ரீதியான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அந்தந்த கூட்டுறவு வங்கிகள் நாளடைவில் தெரிவிக்கும் என்று கூறியுள்ளனர்.