Home Blog Page 321

அக்டோபர் 1 ரிலீஸால் இட்லி கடைக்கு செம லக்!.. சும்மா வசுலை அள்ளப்போகுது!….

0

Idli kadai: தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருப்பவர் தனுஷ். துள்ளுவதோ இளமை துவங்கி பல படங்களிலும் நடித்து தன்னை ஒரு முன்னணி நடிகராக உயர்த்திகொண்டார். ஒருபக்கம் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த வாய்ப்பிருக்கும் சிறப்பான கதைகளிலும், ஒருபக்கம் கமர்ஷியல் மசாலா படங்களிலும் நடித்து வருகிறார். ஆடுகளம், அசுரன் போன்ற படங்களுக்காக தேசிய விருதையும் பெற்றிருக்கிறார்.

தமிழ் சினிமா மட்டுமின்றி ஹிந்தி, ஹாலிவுட், தெலுங்கு என எல்லா மொழிகளிலும் கலக்கி இருக்கிறார். இந்திய சினிமா அளவில் ஒரு முக்கிய நடிகராக தனுஷ் பார்க்கப்பட்டு வருகிறார். ராஜ்கிரணை வைத்து பவர் பாண்டி படம் எடுத்து கோலிவுட்டில் இயக்குனராக மாறினார். அதன்பின் சில வருடங்கள் கழித்து ராயன் என்கிற படத்தை இயக்கி நடித்தார். இந்த படம் 50 கோடிக்கும் மேல் வசூல் செய்து சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நல்ல லாபத்தை கொடுத்தது.

அதேபோல் தனது சகோதரி மகன் நிவிஷை வைத்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தையும் இயக்கினார். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இப்போது இட்லி கடை என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ராஜ்கிரண், சத்தியராஜ், பார்த்திபன், அருண் விஜய், நித்யா மேனன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

80 சதவீதம் படம் முடிந்துவிட்டது. நடிகர்களின் கால்ஷீட் காரணமாக படப்பிடிப்பு நடக்காமல் இருக்கிறது. இந்த படம் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியாகும் ஏப்ரல் 10ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஆனால், ஷூட்டிங் இன்னும் பாக்கி இருப்பதால் அக்டோபர் 1ம் தேதி ரிலீஸ் என இப்போது அறிவித்துள்ளனர். அக்டோபர் 1ம் தேதி சரஸ்வதி பூஜை, அடுத்தநாள் 2ம் தேதி காந்தி ஜெயந்தி அதன்பின் சனி, ஞாயிறு என தொடர் விடுமுறைகள் வருகிறது. எனவே, இட்லி கடை படத்திற்கு நல்ல வசூல் கிடைத்துவிடும் என்கிறார்கள்.

எனக்கு ஏன் அரசியல் சரி வரலன்னு தெரியுமா!! கால்ல விழ.. பொய் சத்தியம் செய்ய.. உண்மையை உடைத்த பாக்கியராஜ்!!

0

நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாக்கியராஜ் அவர்கள் முன்னாள் முதல்வர் எம்.ஜி. இராமச்சந்திரன் அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபொழுது தான் நேரில் சென்றதும் அவரை பார்க்க முடியாமல் திரும்பியதும் அதன் பின்பு நிகழ்ந்த சில தருணங்கள் குறித்து விளக்கியிருக்கிறார்.

தன்னுடைய சொந்த பணத்தை செலவு செய்து தன்னுடன் 4,5 நபர்களை எம்ஜிஆரை காண்பதற்காக பாக்யராஜ் அவர்கள் அழைப்பு சென்று இருக்கிறார். ஆனால் அவரை எம்ஜிஆர் ஐ காண விடாமல் அவமானப்படுத்தி திருப்பி அனுப்பியுள்ளனர். எனினும் தான் எம் ஜி ஆர் ஐ பார்க்கவில்லை என்று தமிழக மக்களுக்கு தெரிந்தால் அதிமுகவின் ஆட்சி என்ன ஆகுமோ என்ற பயத்தில் தமிழகத்திற்கு வந்த பாக்கியராஜ் அவர்கள் நான் அவரை பார்த்தேன் அவர் என்னை அமரச் செய்தார் பால் குடித்தார் இவை அனைத்தும் உண்மையில் நிகழ்ந்தது எனச் சொல்லி தனக்கு சமீபத்தில் பிறந்த குழந்தையின் மீது சத்தியம் செய்திருக்கிறார்.

கூட்டம் கலைந்த பின்பு ஒருவன் ஓடி வந்து நீங்கள் உங்கள் குழந்தையின் மீது சத்தியம் செய்து பொய்யை உண்மை என அனைவரையும் நம்ப செய்து விட்டீர்கள் என வாழ்த்து இருக்கிறான். அந்த தருணம் இப்படி பொய் சொல்லி தான் அரசியல் செய்ய வேண்டுமா? என தனக்கு தோன்றியதாகவும் அதனால்தான் அரசியலில் இருந்து வெளியேறிவிட்டதாகவும் பாக்யராஜ் அவர்கள் தெரிவித்திருக்கிறார்.

இவை ஒருபுறம் இருக்க, மற்றொருபுறம் ஜெயலலிதா அம்மா அவர்கள் ஆட்சிக்கு வந்த பொழுது மீண்டும் பாக்யராஜ் அவர்களை பலரும் அரசியலுக்கு அழைத்துள்ளனர். அப்பொழுது பாக்யராஜ் அவர்களோ நெருப்பை அருகில் சென்று தொட்டாலும் ஆபத்து தூரத்தில் தள்ளி நின்றாலும் அதற்கான கதகதப்பு கிடைக்காது எனவே நான் இருக்கும் இடத்திலேயே இருந்து கொள்கிறேன் என தெரிவிக்கிறார். அதுமட்டுமல்லாத ஜெயலலிதா அம்மா அவர்களை பார்க்கக் கூடியவர்கள் இரண்டு கைகளையும் தூக்கி கும்பிடு போட்டு அவர் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் அவர் வரும்பொழுது தரையில் வீழ்ந்து வணங்குகிறார்கள்.

ஒருவேளை நான் மீண்டும் அரசியலில் இணைகிறேன் என்றால் அனைவரும் ஜெயலலிதா அம்மா அவர்களின் காலில் விழுவார்கள் ஆனால் நானோ கீழே விழாமல் நின்று கொண்டிருப்பேன். இது மிகப்பெரிய பிரச்சனையை வழி வகுக்கக் கூடிய ஒன்றாக அமையும். என்னால் யாருடைய காலிலும் விழவும் முடியாத அதே நேரத்தில் பொய் சொல்லி அரசியல் செய்யவும் முடியாது என விளக்கம் அளித்திருக்கிறார்.

CSK Vs DC: தொடர் 4 விக்கெட்.. டெல்லியிடம் அடிப் பணிய போகும் சென்னை சூப்பர் கிங்க்ஸ்!!

0

IPL: சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் (DC) அணிகள் இரு அணிகளுக்குமிடையே போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று டெல்லி கேப்பிடல்ஸ் முதலில் பேட்டிங் செய்யத் தேர்வு செய்தது. பின்பு தொடக்க வீரர் கே.எல்.ராகுல்  77 ரன்கள் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். அபிஷேக் போரேலும் துள்ளலான 33 ரன்கள் சேர்த்து ஸ்கோரை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தினார். 20 ஓவர் முடிவில், டெல்லி 183 க்கு 6 என்ற இலக்கை சிஎஸ்கே க்கு நிர்ணயித்தது .

சிஎஸ்கே வில் ரவீந்திர ஜடேஜா மற்றும் நூர் அஹமது முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி இந்த ஆட்டத்தை தங்கள் வசம் கொண்டு வர நினைத்தனர். குறிப்பாக, நூர் அஹமத் தனது அபாரமான பௌலிங்கால் டெல்லி கேப்டன் ஆக்சர் பட்டேலை கிளீன் போல்டு செய்த தருணம் ரசிகர்களை உற்சாகப்பட வைத்தார்.

இதனைத் தொடர்ந்து பதிலடி ஆட்டத்தில் சென்னை அணி களமிறங்கியது. ஆனால் தொடக்கத்தில் சிறிய பின்னடைவு ஏற்பட்டது. முதல் ஓவரிலேயே ராசி ரவீந்திரா, முகேஷ் குமாரின் பந்தில் கிளீன் போல்டாகி வெளியேறினார். அந்த நேரத்தில் CSK ஸ்கோர் 14க்கு 1 என்ற கணக்கில் இருந்தது.

இப்போட்டியின் நடுநிலை பேட்டிங் துவங்கியுள்ள நிலையில், தல தோனி மற்றும் இதர வீரர்களை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் 9 ஓவர்களில் 4 விக்கெட் கொண்டுள்ளதால் சிஎஸ்கே வெற்றிபெறுவது சற்று கடினம் தான் எனக் கூறுகின்றனர்.

வாடிவாசலுக்கு முன்னாடி ஒரு செம லவ் ஸ்டோரி!.. சூர்யா போடும் ஸ்கெட்ச்…

0

Actor suriya: நேருக்கு நேர் படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் சூர்யா. அதன்பின் கவுதம் மேனன் இயக்கத்தில் காக்க காக்க, பாலா இயக்கத்தில் பிதாமகன் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். அதன்பின் பல காதல் மற்றும் ஆக்‌ஷன் படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். ஜோதிகாவுடன் அதிக படங்களில் நடித்ததால் அவருடன் காதல் ஏற்பட்டு அவரையே திருமணமும் செய்து கொண்டார்.

சூர்யாவின் படங்களுக்கு தெலுங்கிலும் நல்ல மார்க்கெட் உருவானது. எனவே, அவரின் படங்கள் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியாகி வருகிறது. ஆனால், சூர்யா நடிப்பில் தியேட்டரில் வெளியாகி ஹிட் அடித்து பல வருடங்கள் ஆகிவிட்டது. ஜெய்பீம் மற்றும் சூரரைப்போற்று படங்கள் ஓடிடியில் வெளியாகி வரவேற்பை பெற்றது. ஆனால், தியேட்டரில் வெளியான எதற்கும் துணிந்தவன் படம் ரசிகர்களை ஈர்க்கவில்லை.

மேலும், சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து பெரும் பில்டப் செய்யப்பட்ட கங்குவா படமும் பாக்ஸ் ஆபிசில் ஹிட் அடிக்கவில்லை. ஹாலிவுட் படம் போல மேக்கிங்கில் அசத்தியிருந்தார் சிவா. கதை கூட ஒன்றும் அவ்வளவு மோசமில்லை. ஆனால், சூர்யாவின் மீது இருந்த வன்மத்தில் ஒரு கூட்டம் படத்தை பற்றி நெகட்டிவாக பேச துவங்கியது. படம் பார்த்துவிட்டு வெளியே வந்த சிலர் சூர்யாவை திட்ட அந்த வீடியோக்கள் வைரலாகி படத்தின் வசூலையே பாதித்துவிட்டது.

அடுத்து கார்த்திக் சுப்பாராஜின் இயக்கத்தில் ரெட்ரோ என்கிற படத்தில் நடித்துவிட்டு அடுத்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். ஒருபக்கம் வெற்றிமாறனும், சூர்யாவும் எப்போது வாடிவாசலுக்காக இணைவார்கள் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கிறது. ஆனால், அது தள்ளிக்கொண்டே போகிறது. இந்நிலையில், வாடிவாசல் துவங்குவதற்கு முன் ஒரு காதல் கதையில் நடித்துவிடலாம் என்கிற எண்ணம் சூர்யாவுக்கு இருக்கிறது. அடுத்து தெலுங்கு பட இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள படம் செம லவ ஸ்டோரி என்கிறார்கள். இது முடித்துவிட்டு சூர்யா வாடிவாசல் படத்திற்கு செல்வார் என்கிறார்கள்.

தப்பு பண்ணது ஒருத்தன்.. கூட மாட்டினது நானா!! இயக்குனர் மற்றும் நடிகரான பிரித்விராஜ் நிகழ்ந்த சோகம்!!

0

கேரளா திரையுலகில் முன்னணி நடிகராக மற்றும் இயக்குனராக திகழ்ந்து வருபவர் பிரிதிவிராஜ். இவர் தமிழிலும் பல படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் இவர் இயக்கிய திரைப்படம் வெளியானது முதலில் பல சர்ச்சைகளை பெற்று வருகிறது. அந்த வகையில் இப்பொழுது திரைப்படத்தின் மூலம் ஒருவர் அமலாக்க துறையில் சிக்க பிரித்திவிராஜ் அவர்களுக்கும் அமலாக்கத்துறை நோட்டு பிரித்திவிராஜ் அவர்களுக்கும் அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இவர் இயக்கத்தில் லூசிபர் திரைப்படம் மார்ச் 27 ஆம் தேதி திரைக்கு வந்தது அதனை தொடர்ந்து எம்2 எம்புரான் என்ற திரைப்படத்தையும் வெளியிட்டிருந்தனர். இந்த எம்2 எம்புரான் திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஆன கோகுலம் கோபாலனின் வீட்டிற்கு அமலாக்கத்துறை திடீரென ஆய்வு மேற்கொண்டது. கோகுலம் கோபாலன் அந்நிய சலாவணி மூலமாக 1000 கோடி ரூபாய் மோசடி செய்த புகாரின் பேரில் அமலாக்கத்துறையினர் அவருடைய வீட்டிற்கு ஆய்வு மேற்கொள்ள சென்று இருக்கின்றனர்.

அவரைத்தொடர்ந்து எம்2 எம்புரான் திரைப்படத்தின் இயக்குனரான பிருத்திவிராஜ் அவர்களுக்கும் அவர் கடைசியாக நடித்த 3 படங்களில் பெற்ற 40 கோடி ரூபாய் காண கணக்குகளை முறையாக செலுத்த வேண்டும் என முறையாக செலுத்த வேண்டும் என மின்னஞ்சல் மூலமாக நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது.

ஸ்டிக்கர் ஒட்டும் பொம்மை முதல்வர்!! இந்த திட்டம் வர நாங்க தான் காரணம்.. கொந்தளிக்கும் எடப்பாடி!!

0

நீலகிரி மாவட்டத்தில் 700 படுக்கை வசதியுடன் கட்டப்பட்டுள்ள ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, நாளை தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட உள்ளது. இதனை மையமாகக் கொண்டு, தமிழக அரசியலில் கடுமையான விமர்சனங்கள் கிளம்பியுள்ளன.

அதிமுக ஆட்சிக்காலத்தில் அடித்தளமிட்ட இந்த மருத்துவக் கல்லூரி தற்போது செயல்பாட்டுக்கு வர உள்ளது. இதை திமுக அரசாங்கம் தங்களின் சாதனையாகச் சுட்டிக்காட்டுவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். “முன்னாள் அதிமுக ஆட்சி திட்டமிட்டதையே ஸ்டாலின் அரசு ஸ்டிக்கர் ஒட்டும் வேலையாக மாற்றிவிட்டது” என விமர்சித்து பேசியுள்ளார்.

இத்திட்டம், மத்திய அரசின் ஒப்புதலுடன் 447 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு மூலம் திட்டமிடப்பட்டு, அதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் அனைத்தும் அதிமுக ஆட்சியிலேயே துவக்கினர். ஆனால் நான்கு ஆண்டுகளாக இதனை கண்டுகொள்ளாமல் தேர்தலசமயத்தில் வேலையை முடித்து திறப்பு விழாவை இவர்கள் பெயரில் நடத்துகின்றனர். அதேபோல சிம்லாவுக்குப் பிறகு மலைப் பிரதேசத்தில் கட்டப்படும் இரண்டாவது அரசு மருத்துவக் கல்லூரி இது தான் என்பதால் தனி கவனம் பெற்றுள்ளது.

இந்த மருத்துவமனை ஆண்டுதோறும் 150 எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு கல்வி வழங்கவுள்ளது. இது தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டு, தேசிய மருத்துவ ஆணையத்தால் அங்கீகரிக்கவும் பட்டுள்ளது. இப்படி இருக்கையில் திமுக ஸ்டிக்கர் ஓட்டும் அரசாகவே செயல்படுவதாக எடப்பாடி கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். மேற்கொண்டு இது ரீதியாக சோசியல் மீடியா எங்கும் கேலி கிண்டல் செய்து வருகின்றனர்.

அவள் மட்டும் இல்லை என்றால் செத்தே போயிருப்பேன்.. நான் உயிரோடு இருக்க அவள் தான் முக்கிய காரணம் – இளையராஜா ஓபன் டாக்!!

0

இசை உலகின் பெரிய ஜாம்பவான் ஆன இளையராஜா தனது ஆன்மீக பயணத்தை எங்கிருந்து தொடங்கினார் என்பது குறித்து பேட்டி ஒன்றில் விவரித்துக் கூறியுள்ளார் அதிலும் நான் ஏன் மூகாம்பிகை அம்மன் மீது இவ்வளவு பற்றுடன் இருக்கிறேன் என்பதையும் தெரிவித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது, இளையராஜாவின் குருவான ஜி கே வெங்கடேசன் அவர்களின் கச்சேரியானது மைசூரில் நடைபெற்றது அந்த கச்சேரிக்கு நான் முதற்கொண்டு 75 இசை கலைஞர்கள் சென்றிருந்தோம் அச்சமயத்தில் என் நண்பன் வைத்தியநாதன் அனைத்து பொறுப்பையும் என்னிடம் கொடுத்து விட்டார்.

தனியாக நின்று அந்த கச்சேரியை சிறப்புடன் முடித்துக் கொடுத்தேன். அது 1974 காலம் என்பதால் நாங்கள் தங்கி இருந்த ரூம்களில் எந்த ஒரு போன் வசதியும் இல்லை, கச்சேரி முடிந்தவுடன் அனைவரும் அவரவர் ரூமுக்கு சென்று விட்டோம். மேற்கொண்டு எங்களுடன் வந்தவர்கள் மைசூரை சுற்றி பார்க்க சென்றுவிட்டார்கள். அதே போல வைத்தியநாதனும் கச்சேரிக்கு முன்பே மைசூர் வந்து விட்டோம் மூகாம்பிகை கோவிலுக்கு போலாமா என்று கேட்டார். நானும் போலாம் என்று ஒப்புக்கொண்டேன்.

ஆனால் இவர்கள் அனைவரும் மைசூரை சுற்றிப்பார்க்க சென்ற பொழுது என்னை ரூமுக்குள் வைத்து பூட்டிவிட்டு சென்றுவிட்டார்கள். அச்சமயம் எனக்கு தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு காய்ச்சல் வந்துவிட்டது. அவ்வளவுதான் இதற்கு மேல் கிடைக்க மாட்டேன் என நினைத்துக் கொண்டேன். பின்பு சென்றவர்கள் அனைவரும் வந்தனர். என் நண்பன் வைத்தியநாதனும் திரும்பி வந்து என்னை மன்னித்துவிடு நான் தெரியாமல் பூட்டிவிட்டு சென்றுவிட்டேன் எனக் கூறினார். உனக்கு இப்படி உடம்பு சரி இல்லையா என்று கேட்டுவிட்டு உன்னால் மூகாம்பிகை கோவிலுக்கு வர முடியுமா என கேட்டார். என்னால் முடியாத சூழ்நிலை தான் ஆனால் வருகிறேன் என கூறிவிட்டேன்.

அப்படி சொன்னதுமே எனக்குள் ஒரு புத்துணர்ச்சி வந்துவிட்டது. மாத்திரை தண்ணீர் உணவு எதுவும் இல்லாத எனக்கு எங்கிருந்து அப்படி ஒரு புத்துணர்ச்சி வந்ததென்று தெரியவில்லை. பின்பு அந்த கோவிலுக்குள் காலடி எடுத்து வைக்கும் பொழுது எனது இதயம் படபடத்தது. இது அனைத்தும் அவளின் செயல் என எனக்கு அப்பொழுது தெரியவில்லை, பின்பு அந்த கடவுளிடம் நான் எதுவும் கேட்கவில்லை. கைகூப்பி உன்னை பற்றி இரண்டு கீர்த்தி அடுத்த முறை வரும்பொழுது ஆவது பாட வேண்டும் என கேட்டேன். அது அந்நாளிலேயே நடந்தது. கோவிலுக்குள் சென்ற பொழுது நாங்கள் வயலின் எடுத்து சென்று இருந்தோம்.

ஒரு வயலினை அம்பாள் கையில் கொடுத்து பூசித்து மற்றொன்றை நான் வைத்திருந்தேன். அங்கு சாமி ஊர்வலம் வந்து இறங்கியதும் உடனடியாக என் கையில் அதை கொடுத்து வாசிக்க சொன்னார்கள். பின்பு நான் வாசிப்பதை என் நண்பன் ரெக்கார்ட் செய்தும் வைத்துக்கொண்டான். அதனைத் தொடர்ந்து என்னை பாடவும் சொன்னார், எனக்கு தெரிந்த அம்பால் குறித்த ஒரு கீர்த்தியை மட்டும் பாடிவிட்டு அப்படியே நின்றேன். மீண்டும் என் நண்பன் பாடு என்று கை அசைக்கவே எனக்கு தெரிந்ததை பாடினேன்.

அவ்வளவுதான் திரும்பவும் நாங்கள் இருந்த அறைக்கே வந்துவிட்டோம். அங்கு வந்து தான் என்ன நடந்தது என்பது குறித்து எனது நண்பன் விவரித்து கூறினான். அம்பாள் ஊர்வலம் வந்துவிட்டு இறங்கும் சமயத்தில் நீ பாடும் பாடலை கேட்டுள்ளார். நீ டெஸ்டில் பாஸ் ஆகிவிட்டாய் என்று கூறினார். அங்கிருந்துதான் எனது ஆன்மீக பயணம் தொடர்ந்தது என்று அந்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.

நின்று போன திருமணம்.. வீட்டு வாடகை கட்டக் கூட பணம் இல்லை!! ராஷ்மிகாவின் அன்ட் டோல்ட் ஸ்டோரி!!

0

முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வரும் ராஷ்மிகாவின் 29 வது பிறந்தநாளன இன்று அவரது பழைய வாழ்க்கை குறித்து பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்திலும் கலக்கி வரும் ராஷ்மிகாவிற்கு ஆரம்ப கட்ட காலத்தில் பெருமளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டார். இவருக்கு நிச்சயதார்த்தமும் முடிவடைந்தது. ஆனால் அது திருமணம் வரை நீடிக்கவில்லை.

தற்போது வரை ராஷ்மிகா மந்தனா நிச்சயதார்த்தம் நின்று போனதற்கான எந்த ஒரு காரணத்தையும் எங்கும் தெரிவிக்கவில்லை. ஒரு தனியார் ஊடகத்தில் இவர் ஆரம்ப கட்டத்தில் எப்படியெல்லாம் வறுமையை சந்தித்தார் என்பது குறித்து பேசியுள்ளார். அந்த வீடியோ, பிறந்த நாளான இன்று வைரலாகி வருகிறது. ஆரம்ப கட்டத்தில் எங்களது வீட்டு வாடகை கட்ட கூட பணம் இருக்காது, நாங்கள் மற்றவர்களிடம் பேசவே தயக்கம் காட்டுவோம் என அதில் கூறியுள்ளார்.

ஆனால் இன்று அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து டாப் ஹீரோயின்களுடன் போட்டி போட்டு வலம் வருகிறார். கிட்டத்தட்ட ஒரு படத்திற்கு மட்டும் பத்து கோடிக்கும் மேல் சம்பளம் பெறுவதாக கூறுகின்றனர். இவரது சொத்து மதிப்பும் 50 கோடியை தாண்டி விட்டதாக விமர்சனங்கள் முன் வைக்கப்படுகிறது. அதே போல இவரும் விஜய் தேவர் கொண்டாவும் காதலித்து வருவதாகவும் , டேட்டிங் செய்வதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இவர்கள் ஒன்றாக சேர்ந்து விடுமுறையை கழிக்கும் புகைப்படங்களையும் அவ்வப்போது சோசியல் மீடியாவில் பதிவிடுவதையும் பார்க்க முடிகிறது.

மிஸ்டர் எம் ஜி ராமச்சந்திரன்.. இப்படி கூப்பிட உனக்கு மட்டும் தான் உரிமை!! ஜெ க்கூட இல்லை!!

0

Cinema Talks: தமிழ் சினிமாவிலும் சரி தமிழகத்தை முன்னெடுத்து சென்ற தலைமையிலும் சரி மறக்க முடியாத ஜாம்பவான் என்றால் எம்.ஜி.ஆர் தான். தற்பொழுது வரை இவரது படங்கள் பொது கருத்துடன் இன்றளவும் மக்களால் பார்க்கப்பட்டு வருகிறது. அப்படி எம்ஜிஆர் சினிமா துறையில் இருக்கும் போது இவரையே ஒருவர் பெயர் சொல்லி அழைத்துள்ளார். அதிலும் சக நடிகர்களை எம்ஜிஆர் யிடம் பழகுவதற்கும் பேசுவதற்கும் தயங்கிய நிலையில் சக நடிகை பெயர் சொல்லி அழைத்த தகவலானது தற்பொழுது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

அந்த காலகட்டத்தில் பெண் இயக்குனர் பெண் எடிட்டர் என்பதெல்லாம் சற்று குறைவுதான். அந்த வகையில் அனைத்திலும் முன்னணியாக விளங்கியவர் தான் நடிகை பானுமதி, இவர் எம் ஜி ஆரை காட்டிலும் ஒரு வயது மூத்தவராக இருந்தாலும் எப்பொழுதும் அனைவர் முன்னிலையிலும் மிஸ்டர் எம் ஜி ராமச்சந்திரன் என்றுதான் அழைப்பாராம். இவர் அப்படி கூப்பிடுகிறாரே என்று எம்ஜிஆர் ஒரு போதும் முகம் சுளிக்காமல், மிகவும் மரியாதை தன்மையுடன் அவரை நடத்துவாராம்.

எம்ஜிஆர் பொதுவாகவே அனைவரிடமும் அன்பாகவும் பாசமாகவும் தான் நடந்து கொள்வாராம். இருப்பினும் அவர் இருக்குமிடம் சற்று பதற்றமாக தான் இருக்குமாம், அப்படி இருக்கும் பட்சத்தில் பானுமதி துளி கூட பயப்படாமல் அவர் பெயரை சொல்லி தான் எப்பொழுதும் அழைப்பாராம். இதனை ஒருபொழுதும் எம்.ஜி.ஆர் மறுத்ததில்லை எனக் கூறுகின்றனர். எம்ஜிஆரை பெயர் சொல்லி அழைத்த நடிகை என்ற பெயரும் அவருக்கு உண்டு எனக் கூறுகின்றனர்.

ஒரே நாடு.. ஒரே தேர்தல் விரைவில்!.. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கொடுத்த முக்கிய அப்டேட்..

0

மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்க துவங்கியது முதலே பல அதிரடியான திட்டங்களை கொண்டு வர துவங்கியது. குறிப்பாக மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை எல்லாவற்றையும் செய்து வருகிறது. பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் பாஜக ஆதரவு ஆளுநர்களை நியமிப்பது, அதன் மூலம் அரசுக்கு தொல்லை கொடுப்பது என பல விஷயங்களையும் செய்து வருகிறது.

குறிப்பாக தமிழகத்தில் எப்படியாவது கால் பதிக்க வேண்டும் என பாஜக விரும்புகிறது. ஆனால், அதிமுக, திமுக எனும் இரண்டு திராவிட காட்சிகளை தாண்டி பாஜக-வால் இங்கு கால்பதிக்க முடியவில்லை. தமிழக மக்களும் இந்த இரண்டு கட்சிகளுக்கும் ஓட்டு போடுகிறார்களே தவிர பாஜகவுக்கு ஓட்டு போடுவதில்லை. அதோடு, பாஜக அரசு கொண்டு வரும் எல்லா திட்டங்களையும் திமுக அரசு கடுமையாக எதிர்க்கிறது. சமீபத்தில் கூட மும்மொழிக் கொள்கையை திமுக அரசு எதிர்த்தது.

இதனால் தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய நிதியை கூட பாஜக அரசு கொடுப்பதில்லை. இத்தனைக்கும் இந்தியாவில் உள்ள மாநிலங்களில் அதிக ஜி.எஸ்.டி கொடுப்பது தமிழக அரசுதான். அதோடு, ஒரே நாடு ஒரே தேர்தல் என்கிற திட்டத்தை அமுல்படுத்த பாஜக அரசு விரும்புகிறது. அதாவது, இந்தியா முழுவதும் எல்லா தேர்தல்களையும் ஒரே நாளில் நடத்த வேண்டும் என்பதுதான் பாஜகவின் திட்டம். இதை திமுக கடுமையாக எதிர்த்து வருகிறது.

இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ‘ஒரே நாடு ஒரே தேர்தலை கண்மூடித்தனமாக எதிர்க்க வேண்டாம். நாட்டின் நலனுக்கு அனைவரும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். 2029 நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் இதற்கான நடைமுறையை குடியரசு தலைவர் தொடங்குவார்’ என எஸ்.ஆர்.எம் பல்கலைக் கழக விழாவில் பேசியிருக்கிறார்.