Home Blog Page 322

ஐடி மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனத்தை சுக்கு நூறாக்கிய ட்ரம்ப்!! அல்லல் படப்போகும் இந்தியர்கள்!!

0
Donald Trump: அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் ட்ரம்ப வந்த பிறகு வரி ரீதியாக பல்வேறு அறிவிப்புகள் வெளியாகும் என்று பொருளாதார நிபுணர்கள் கணித்தனர். ஏனென்றால் இவர் வாக்கு சேகரிக்கும் போதே, ஒரு சில நாடுகள் விசா இல்லாமல் மக்களை உள் நுழைத்து உற்பத்தி துறையை தொடங்கி விடுகின்றனர். குறிப்பாக அமெரிக்காவிற்கு வரவிடாமல் திருடுவதாகவும் தெரிவித்திருந்தார்.

அந்த வகையில் இவர் தலைமை பொறுப்பை ஏற்றதும், வரிவிகிதத்தை ஏற்றினால் உற்பத்தியை நமது நாட்டிலேயே தொடங்கிவிடுவார்கள் என்று மனக்கணக்கு போட்டு இறக்குமதி வரியை ஏற்றி உத்தரவிட்டுள்ளார். இது இந்தியாவின் ஐடி மட்டும் ஸ்டார்ட்டப்  நிறுவனங்களுக்கு பெரும் அடி எனக் கூறுகின்றனர். அதாவது அமெரிக்கா சமீபத்தில் வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது.

இதனால் எந்த ஒரு பணத்தையும் வெளிநாடுகளுக்கு தருவதில்லை. அவர்களே வைத்துக் கொள்கின்றனர். தற்சமயம் வரி ஏய்ப்பு செய்ததால் அமெரிக்காவில் கட்டாயம் பொருள்களின் விலைவாசியும் உயரக்கூடும். அந்த சூழ்நிலை கட்டாயம் வட்டி விகிதமானது குறைய வாய்ப்பே இல்லை. மாறாக வட்டி விகிதம் அதிகரிக்க தான் கூடும், அப்படி இருக்கும்போது ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு அமெரிக்காவால் பணம் தர முடியாது. ஐடி போன்றவை பெரும் பாதிப்பை சந்திக்க கூடும்.

டிரம்பின் வரி விதிப்பு இந்தியாவில் டெக்ஸ்டைல் மற்றும் ஃபார்மாத்துறைக்கு எந்த ஒரு பாதிப்பையும் விளைவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் உற்பத்தி திறன் பங்கு குறைந்து வருவதால் ட்ரம்ப் இப்படியான முடிவை எடுத்துள்ளதாக கூறுகின்றனர். ஆனால் இந்த திட்டம் காலப்போக்கில் கை கொடுக்காது எனவும் கூறுகின்றனர்.

இந்தியா அமெரிக்காவிடமிருந்து மில்லியன் கணக்கில் கொள்ளையடித்த சீனா.. ட்ரம்ப் கொடுத்த ரிவென்ஜ்!!

0
Donald Trump : டொனால்ட் ட்ரம்ப்  சீனா மீது விதித்த வரியால் இரு நாடுகளுக்கும் மோதல் போக்கு உண்டாகியுள்ளது. அதாவது சீனா ரீஸ்டாம்ப் முறையை ஒவ்வொரு நாட்டிலும் உபயோகப்படுத்துகிறது. இதனால் அந்தந்த நாட்டினர் வர்த்தக இழப்பை சந்திக்கின்றனர். (ரீஸ்டாம்ப்) என்பது வணிக ஒப்பந்தங்களின் கீழுள்ள நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொழுது ஒரு சில சலுகைகள் செய்யப்படும்.

அதேபோல நமது நாட்டிலிருந்தும் அந்த ஒப்பந்த அடிப்படையில் உள்ள நாடுகளுக்கு பொருள்களை ஏற்றுமதி செய்வதிலும் சில சலுகைகள் இருக்கும். ஆனால் இந்த வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் சீனா கையொப்பமிடவில்லை, அதற்கு மாறாக தனது தயாரிப்பை அந்த ஒப்பந்த நாட்டில் நிறுவி அங்கிருந்து பொருட்களை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. இதனால் இதர நாடுகளுக்கு வர்த்தக இழப்பு ஏற்படுகிறது.

இதைதான் ரீஸ்டேம்ப் முறை என கூறுகிறோம். இதே போல தான் அமெரிக்காவிற்கும் நடந்துள்ளது. இதனால் கிட்டத்தட்ட 882 பில்லியன் அளவிற்கு இழப்பை சந்தித்துள்ளது. இதனை கண்டறிந்த அமெரிக்கா தற்போது சீனா மீது 34 சதவீதம் வரியை உயர்த்தியுள்ளனர். இதேபோல தான் சீனா இந்தியாவிலும் ரீ ஸ்டாம்ப் முறையை பயன்படுத்தி வருகிறது.

இந்தியா உட்பட 10 நாடுகள் வணிக பொருளாதார ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ள நிலையில் இவர்களுக்குள் ஏற்றுமதி இறக்குமதியில் சலுகைகள் உண்டு. இதில் சீனா இல்லை, மாறாக தனது நிறுவனத்தை ஒப்பந்தத்தில் உள்ள நாடுகளில் நிறுவி அதன் மூலம் பொருட்களை இறக்குமதி செய்து வருகிறது. அப்படி பார்க்கையில் ஏற்றுமதியை காட்டிலும் இறக்குமதி தான் அதிகளவில் நடைபெறுகிறது. இதனால் இந்தியா பெரும் இழப்பீடை சந்திக்க கூடுகிறது.

இதனை சரி செய்ய வேண்டுமென்றால் 10 நாடுகளுடன் போட்ட ஒப்பந்தத்தில் வரையறை செய்ய வேண்டும். இதற்கு நடவடிக்கை எடுக்கும் விதமாகத்தான் தற்சமயம் ட்ரம்ப் அதிகப்படியான வரியை சீனாவிற்கு விதித்துள்ளார்.

7 ஆம் தேதி பொதுத்தேர்வு கிடையாது!! 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வந்த முக்கிய அறிவிப்பு!!

0

Holiday : தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு 12ஆம் வகுப்பு பொது தேர்வு நடந்து முடிந்து தற்போது பத்து மற்றும் ஒன்று முதல் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது. குறிப்பாக பத்தாம் வகுப்பு பொது தேர்வு ஒன்பது லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர் மற்றும் மாணவிகள் எழுதி வருகின்றனர். இந்தத் தேர்வானது கடந்த மாதம் மார்ச் 28-ம் தேதி தொடங்கி இம்மாதம் 15ஆம் தேதி முடிவடைய உள்ளது.

இவர்களை அடுத்து ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வானது இம்மாதம் ஏழாம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் வருடம் தோறும் ஆழி தேர் திருவிழா மிகவும் விமர்சையாக கொண்டாடப்படும். இந்த தேர் திருவிழாவானது வரும் ஏழாம் தேதி வர உள்ளதால், அன்று திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அன்று நடக்கவிருந்த தேர்வை ஒத்திவைத்து அம்மாவட்ட ஆட்ச்சியர் உத்தரவிட்டுள்ளார்.

ஆனால் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வானது ஒத்திவைக்கப்படவில்லை, வழக்கம்போல் நடைபெறும் என்று கூறியுள்ளார். இதனால் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுபவர்கள் கட்டாயம் அந்நாளில் தேர்வு எழுத வருமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார். அதேபோல தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ள பொதுத்தேர்வானது ஏழாம் தேதிக்கு மறுநாளே நடைபெறும் என்றும் கூறியுள்ளனர். இதனால் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்கள் முதல் நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு அடுத்த நாள் கட்டாயம் தேர்வு எழுத வருமாறு அம்மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

காய்ச்சல் கொப்பளம்.. இதெல்லாம் தக்காளி காய்ச்சல் அறிகுறி!! குழந்தைகளுக்கு எச்சரிக்கை!!

0

குழந்தைகளுக்கு பறவை காய்ச்சல் பரவுவதாகவும் கட்டாயம் அவர்களுக்கு கொடுக்கும் இறைச்சியை நன்றாக வேகவைத்து கொடுக்குமாறும் அறிவிப்புக்கள் வெளிவந்த வண்ணமாக உள்ளது. இந்நிலையில் பொது சுகாதாரத்துறை மேற்கொண்டு தக்காளி காய்ச்சல் ரீதியாகவும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

வெயில் காலங்களில் பொதுவாகவே குழந்தைகளுக்கு தக்காளி காய்ச்சல் வருவது இயல்பான ஒன்று. இது குறிப்பாக சுகாதாரமற்ற நிலையில் இருக்கும் பட்சத்தில் தான் வரும். முதலில் குழந்தைகளுக்கு தக்காளி காய்ச்சல் வந்து விட்டால் தொண்டை வலி அதிகரிக்கக்கூடும். முதலில் காய்ச்சலும் அதனைத் தொடர்ந்து கை, முதுகு, கால் என அனைத்து இடங்களிலும் சிறு சிறு கொப்பளங்கள் காணப்படும். குறிப்பாக அரிப்பும் சேர்ந்து இருக்கும்.

இச்சமயத்தில் குழந்தைகளை மிகவும் சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதேபோல பள்ளிக்கு சென்று வந்தவுடன் கை கால் உள்ளிட்டவற்றை கழுவ பெற்றோர்கள் சொல்லித்தர வேண்டும். இந்த காய்ச்சல் பெரும்வாரியான பாதிப்பை கொடுக்காது. ஆனால், மாறாக உடல் சோர்வு, வயிற்றுப்போக்கு போன்றவை உண்டாகக்கூடும். மேற்கொண்டு இந்த தக்காளி காய்ச்சல் வரும் பட்சத்தில் ஓரிரு வாரங்களில் தானாகவே சரியாகிவிடும்.

மேற்கொண்டு சுகாதாரத்தை பேணிக்காக்கும் வகையில் இதிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கலாம். அதுமட்டுமின்றி இது ரீதியாக பொது சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். தற்காலத்தில் தக்காளி காய்ச்சல் பரவல் அதிகரிக்க தொடங்கியிருப்பதால் குழந்தைகளை முன்கூட்டியே பாதுகாத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர். அதுமட்டுமின்றி தக்காளி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை மருத்துவரிடம் அழைத்து சென்றும் ஆலோசனை பெறலாம்.

தமிழக பாஜக தலைவர் பதவி விவகாரத்தில் திடீர் டிவிஸ்ட்!.. அண்ணாமலையே சொல்லிட்டாரே!…

0

எடப்பாடி பழனிச்சாமி எப்போது டெல்லிக்கு போய் அமித்ஷாவை சந்தித்தாரே அப்போதே தமிழக அரசியல் சூடுபிடிக்க துவங்கிவிட்டது. தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை நீக்கினால் பாஜக கூட்டணியில் அதிமுக இணையும் என அமித்ஷாவிடம் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை வைத்ததாக சொல்லப்பட்டது. எனவே, தமிழக பாஜக தலைவர் மாற்றப்படலாம் என்கிற செய்தி பரவியது. அதோடு, தமிழிசை சவுந்தர்ராஜன், வானதி சீனிவாசன், கருப்பு முருகானந்தம், நயினார் நாகேந்திரன் ஆகியோர் இந்த பட்டியலில் இருப்பதாகவும் சொல்லப்பட்டது.

ஒருபக்கம் சோகமான முகத்தோடு பேட்டி கொடுத்த அண்ணாமலை ‘கட்சியின் வளர்ச்சியே எனக்கு முக்கியம். நான் ஒரு சாதாரண பாஜக தொண்டன். பதவி எனக்கு முக்கியமில்லை. இதைவிட பெரிய பதவியில் இருந்து வந்தவன் நான். என்னிடம் தோட்டம் உண்டு. ஆடு மாடு உண்டு. அதை வைத்து சந்தோஷமாக இருப்பேன்’ என சொன்னார். எனவே வெளியான செய்தி உண்மைதானோ என்கிற எண்ணம் பலருக்கும் ஏற்பட்டது.

eps

அதோடு, ஏற்கனவே சொன்னது போல எடப்பாடி பழனிச்சாமி தலைமயில் கூட்டணி என்றால் நான் பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என பேட்டி கொடுத்தார். எனவே, அதிமுக கூட்டணிக்காக அண்ணாமலையை மாற்றிவிட்டு புதிய தலைவர் நியமிக்கப்படுவாரா என்கிற கேள்வி பலரிடமும் இருந்தது. ஒருபக்கம், தமிழக பாஜக தலைவரை நியமிக்க டெல்லியிலிருந்து கிஷன் ரெட்டி வருவதாகவும் சொல்லப்பட்டது.

ஆனால், திடீர் திருப்பமாக பாஜக தலைவர் பதவியில் அண்ணாமலையே நீடிப்பார் என செய்திகள் வெளிவந்திருக்கிறது. பாஜகவை பொறுத்தவரை கருத்து கேட்டோ, ஓட்டெடுப்பு நடத்தியோ மாநில தலைவரை தேர்ந்தெடுக்க மாட்டார்கள். பாஜக தலைமை என்ன முடிவெடுக்கிறதோ அதுவே இறுதி முடிவு. இதுவரை நான் பாஜக தலைவர் பதவிக்கு வர விரும்புகிறேன் என தமிழ்நாட்டிலிருந்து யாரும் கட்சி தலைமைக்கு விண்ணப்பிக்கவும் இல்லை. எனவே, தமிழக பாஜக தலைவராக போட்டியின்றி அண்ணாமலையே தேர்ந்தெடுக்கப்படுவார் என்கிறார்கள். இது தெரிந்துதான் ‘புதிய தலைவர் நியமிக்கப்பட்டதும் இன்னும் நிறைய பேசுகிறேன்’ என அண்ணாமலை செய்தியாளர்களிடம் சொல்லியிருக்கிறார் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.

ஆடு கோழி வளர்க்க ரூ 50 லட்சம்.. தமிழக அரசின் அசத்தல் திட்டம்!! மிஸ் பண்ணிடாதீங்க உடனே விண்ணப்பியுங்கள்!!

0

TN Gov: தமிழக அரசானது மக்களுக்கு பயன் தரும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் விவசாயிகளுக்கு ஏற்ற பலத் திட்டங்கள் அமலில் உள்ளது. மேற்கொண்டு புதிய தொழில் தொடங்குவதற்கும் ஏராளமான கடன் உதவிகளை வழங்குகிறது. அந்த வகையில் ஆடு, கோலி மற்றும் பன்றி ஆகிய பண்ணைகள் அமைக்க தமிழக அரசு கிட்டத்தட்ட 50 லட்சம் வரை கடன் வழங்க தயாராக உள்ளது.

இது ரீதியான அறிவிப்பை கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, புதிதாக பண்ணை வைக்க விரும்புவோர் தமிழக அரசின் கால்நடை பண்ணை வளர்ப்பு திட்டத்தின் மூலம் பயன்பெறலாம். இத்திட்டத்திற்காக கடந்த 2021 ஆம் ஆண்டின் பட்ஜெட் தாக்குதலிலிருந்து நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது.

இதன் முக்கிய நோக்கமே தமிழகத்தில் பண்ணைகளை உருவாக்கி அதன் மூலம் ஆடு கோழி முட்டை போன்றவைகளின் உற்பத்தியை அதிகரிப்பது தான், மேற்கொண்டு இதன் மூலம் பல பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும். அந்த வகையில் நாட்டு கோழி பண்ணை அமைக்க 25 லட்சமும், செம்மறி அல்லது வெள்ளாடு பண்ணை நிறுவ பத்து 10 லட்சம் எனத் தொடங்கி 50 லட்சம் வரையும், பன்றி வளர்ப்பிற்கு 15 லட்சம் முதல் 30 லட்சம் ரூபாயை தமிழக அரசு ஒதுக்குகிறது.

மேற்கொண்டு இதற்கு தீவனம் வழங்குவதற்கும் மானியம் வழங்குகின்றனர். இது ரீதியாக பயன்பெற விரும்புவோர் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://nlm.udayamimitra.in விண்ணப்பம் செய்யலாம். மேற்கொண்டு தகவல்களை அறிய  கட்டாயம் அருகிலிருக்கும் கால்நடை பராமரிப்பு துறை அலுவலர்களை சந்தித்து ஆலோசனை பெறலாம் எனக் கூறியுள்ளார்.

IPL 2025: “4 ஓவரில் நடந்த திருப்பம்!” – வெற்றிக்கு அருகே சென்று தோற்ற மும்பை இந்தியன்ஸ் 

0

IPL 2025: கடைசி 4 ஓவரில் நடந்த திருப்பம் காரணமாக வெற்றிக்கு அருகே சென்று தோற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

லக்னோ: ஐபிஎல் 2025 சீசனின் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முக்கியமான வெற்றியை பெற்றுள்ளது.

லக்னோவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா காயம் காரணமாக அணியில் இல்லாதது, மும்பைக்கு ஒரு பெரிய இழப்பாக அமைந்தது.

லக்னோவின் திறமையான தொடக்கம்

பேட்டிங் செய்த லக்னோ அணிக்கு, மிட்செல் மார்ச் (60 ரன்), ஏடன் மார்க்கரம் (53 ரன்) ஆகியோர் புள்ளி பேட்டிங் வழங்கினர். நடு வரிசையில் ஆயுஸ் பதோனி (30 ரன்) மற்றும் டேவிட் மில்லர் (27 ரன்) சிறிது நீண்ட நாள் தாங்கினர். மற்றவர்கள் பங்களிக்க முடியாததால், லக்னோ அணி 20 ஓவர்களில் 203 ரன்கள் எடுத்தது.

ஹர்திக் பாண்டியாவின் பவுலிங் அதிர்ச்சி

மும்பை பந்துவீச்சில் ஹர்திக் பாண்டியா நான்கு ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி, தனிப்பட்ட சாதனையை நிகழ்த்தினார். அவரது சாதனைக்குப் பிறகு வெறும் 204 ரன்கள் இலக்குடன் மும்பை களமிறங்கியது.

மும்பையின் எதிர்பார்த்த தோல்வி

ஆட்டம் தொடங்கும் வேகத்தில் தொடக்க வீரர்கள் வில் ஜேக்ஸ் (5 ரன்), ரியன் ரிக்கல்டன் (10 ரன்) விரைவில் ஆட்டம் இழந்தனர். பின்னர் நமன் தீர் (46 ரன்) மற்றும் சூரியகுமார் யாதவ் (67 ரன்) சிறப்பாக ஜோடி அமைத்தனர்.

திலக் வர்மா (25 ரன்) தாமாகவே ரிட்டையர் ஆனதும், முழுப் பொறுப்பு சூரிய குமாரின் மேல் இருந்தது. ஆனால் அவர் வெளியேறியதும், மும்பையின் வெற்றிக்கான வாய்ப்பு குறைந்தது.

மிகவும் முக்கியமான நான்கு ஓவர்

19வது ஓவரில் சர்துல் தாக்கூர் வெறும் 7 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். கடைசி ஓவரில் 22 ரன்கள் தேவைபட்ட நிலையில், ஹர்திக் பாண்டியா முதல் பந்தில் சிக்ஸர் அடித்தாலும், ஆவேஷ் கான் அற்புதமாக பந்து வீசி வெறும் 3 ரன்கள் மட்டுமே கொடுத்தார். 20 ஓவர் முடிவில் மும்பை அணி 196 ரன்கள் மட்டுமே எடுத்தது.

புள்ளி நிலவரத்தில் தாக்கம்

இந்த தோல்வியால் மும்பை அணி புள்ளி பட்டியலில் 7வது இடத்திற்கு மாறியது. சிஎஸ்கே தற்போது 8வது இடத்தில் உள்ளது. இப்போது மும்பை அணி தொடரில் மீண்டும் முன்னிலை பெற கடுமையாக பாடுபட வேண்டிய சூழ்நிலையில் உள்ளது.

விஜய் + விஜயகாந்த்: உருவாகும் புதிய அரசியல் செண்டிமெண்ட்! தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

0

விஜய் + விஜயகாந்த் ரசிகர்களால் உருவாகும் புதிய அரசியல் செண்டிமெண்ட்! தவெக மற்றும் தேமுதிக கூட்டணி உருவாகும் என்ற கணிப்பு தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துமா என தமிழக அரசியலில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

🔹 அதிமுகவின் புறக்கணிப்பால் தேமுதிக புதிய கூட்டணி முயற்சி

🔹 விஜய் மற்றும் விஜயகாந்த் ரசிகர்களின் சென்டிமென்ட் + வாக்குச் சதவீதம் இணைந்து  வெற்றிக்கூட்டணியாக மாறுமா?

தமிழ்நாட்டில் அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரு வருடத்துக்குள்ளான  கால அவகாசமே இருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி வியூகங்களை வகுக்கத் தொடங்கிவிட்டன. இந்த நிலையில், தமிழ் திரைப்பட நடிகர் விஜய்யின் தவெக கட்சியும், விஜயகாந்தின் தேமுதிக கட்சியும் ஒன்றிணைந்து புதிய கூட்டணியை உருவாக்கலாம் என்ற தகவல்கள் தமிழக அரசியல் வட்டாரங்களில் விவாத பொருளாக மாறியுள்ளது.

அதிமுக – பாஜக கூட்டணியில் இருந்து தெளிவாக புறக்கணிக்கப்பட்ட தேமுதிக, அவர்களுக்கான அடுத்த வாய்ப்பை நோக்கி பார்க்க ஆரம்பித்துள்ளது. 2021-ம் ஆண்டு தேர்தலிலேயே தேமுதிகவை புறக்கணித்த அதிமுக, இந்த முறை பேச்சுவார்த்தை கூட இல்லாமல் ராஜ்யசபா சீட் வாயிலாக கழட்டி விட்டுள்ளது. இந்நிலையில் அதிமுக பாஜக கூட்டணி மீண்டும் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதால் பாஜகவையும் நெருங்க முடியாமல் தேமுதிக தற்போது குழப்பத்தில் இருக்கிறது.

இந்நிலையில் விஜய்யின் தவெக கட்சியும், ஆரம்பத்தில் அதிமுகவை நோக்கி இருந்தாலும், எதிர்பார்த்த முறையில் ஒத்துழைப்பு கிடைக்காததால், தற்போது தனிப்பட்ட பாதையில் பயணிக்கிறது. இந்த நிலையில், தவெக மற்றும் தேமுதிக இணைந்து தேர்தலை எதிர்கொள்ளும் வாய்ப்புகள் இருப்பதாகவும் அது எந்த அளவுக்கு இரு கட்சிகளுக்கும் பயனளிக்கும் என்று அந்ததந்த கட்சியை சேர்ந்தவர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

அரசியல் விமர்சகர்கள் கூறுவது போல, இந்த கூட்டணி இரண்டு கட்சிகளுக்கும் பலனளிக்கக்கூடியதாக இருக்கலாம். தேமுதிக, கடந்த காலத்தில் 10% வாக்கு வங்கியுடன் தமிழகம் முழுவதும் ரசிகர்களை வைத்திருந்த கட்சி தற்போது விஜயகாந்த மறைவிற்கு பிறகு குறைந்தது 3 முதல் 5 சதவீதம் வாக்கு வங்கி இருக்கலாம். அதேபோல், தற்போது விஜய்க்கு மாநிலம் முழுவதும் பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது — ஆனால், அது வாக்குகளாக மாறுமா என்பது பெரிய கேள்வி.

விஜயகாந்துடன் நடித்த “செந்தூரப்பாண்டி” படம், விஜய்க்கு திரையுலகத்தில் திருப்புமுனையாக அமைந்தது. இதனால், இருவரும் அரசியலிலும் ஒன்றாக இணைந்தால், ரசிகர்களிடையே சென்டிமென்ட்டாகவும், வாக்காகவும் அதிலிருந்து பெரிய ஆதரவு உருவாகலாம் என நிபுணர்கள் கணிக்கின்றனர்.இந்த அரசியல் செண்டிமெண்ட் தமிழக அரசியலில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதும் அனைவருக்கும் கேள்விக்குறியாக உள்ளது.


📌 சாதகமான அம்சங்கள்:

  • தவெகக்கு: பெரிய கட்சி ஆதரவு + தேர்தல் அடிப்படை அமைப்பு

  • தேமுதிகக்கு: இழந்த ரசிகர் வாக்கு மீட்பு + மீண்டும் முன்னணி இடம்

  • விஜய் ரசிகர்களுக்கு: விஜய் + விஜயகாந்த் என உணர்ச்சி சார்ந்த அரசியல்


சரத்குமார் தான் அடுத்த பாஜக மாநில தலைவர்.. டெல்லி மேலிடம் எடுக்கும் அதிரடி முடிவு!!

0

BJP: மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாக அண்ணாமலை பேசியதால் அதிமுக பாஜக கூட்டணியிலிருந்து விலகியது. எடப்பாடி பழனிச்சாமியும் மீண்டும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்ற தீர்க்கமான முடிவிலிருந்தார். ஆனால் தனித்து நின்று போட்டியிட்டால் கட்டாயம் வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற முடியாது என தேர்தல் வியூகர்கள் எடப்பாடியிடம் கூறியுள்ளனர். இதனையெல்லாம் ஆலோசனை செய்த எடப்பாடி பாஜக மேலிடத்திற்கு பல விதிமுறைகளை போட்டார்.

அதில் முதலாவதாக அண்ணாமலையை பதவி நீக்கம் செய்ய வேண்டும். மேற்கொண்டு சசிகலா, தினகரன், ஓபிஎஸ் உள்ளிட்டவர்களை எனது கட்சியில் இணைக்க கூறி கட்டாயப்படுத்த கூடாது எனக் கேட்டுக்கொண்டார். அதேசமயம் பாஜகவும் நீங்கள் ஒதுக்கியவர்களி எங்கள் கூட்டணியில் வைத்துக் கொள்வோம் அதனை தடுக்கக்கூடாது என்றும் கூறியுள்ளனர். இதற்கெல்லாம் சம்மதம் தெரிவித்து எடப்பாடி, சென்னை வரவே அடுத்தடுத்து அரசியல் கலமானது சூடுபிடிக்க ஆரம்பித்தது.

இவரை அடுத்து அண்ணாமலை அமித்ஷாவை சந்திக்க டெல்லி சென்றார். டெல்லி சென்று வந்ததும் இவர்பதவி விலகுவது குறித்து பேச்சு அரசல் புரசலாக பரவ தொடங்கியது. அதன்படி நேற்று கூட கோயம்புத்தூர் ஏர்போர்ட்டில் அளித்த பேட்டியில், தமிழக பாஜக மாநில தலைவருக்கான போட்டி நடைபெறும், அதில் என் பெயர் இல்லை என்று தெள்ள தெளிவாகவே கூறிவிட்டார். இந்த போட்டி லிஸ்டில் கிட்டத்தட்ட ஆறு பேர் உள்ளார்கள் எனக் கூறுகின்றனர்.

முதலாவதாக சரத்குமார் இரண்டாவதாக, நயினார் நாகேந்திரன், வாணி சீனிவாசன் தமிழிசை சௌந்தர்ராஜன், ஏ பி முருகானந்தம், பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளார்களாம். இதில் சரத்குமாரை தேர்ந்தெடுக்க அதிக வாய்ப்புள்ளது எனக் கூறுகின்றனர். தமிழகத்திற்கு மிகவும் பரிச்சயமான முகம். மேற்கொண்டு தனது அரசியல் பயணத்தை கலைத்துவிட்டு பாஜகவில் இணைந்துள்ளதால் இவருக்கு முக்கிய அந்தஸ்து கொடுக்க டெல்லி மேலிடம் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழகம் வரும் அமித் ஷா… சூடு பிடிக்கும் 2026 தேர்தல் களம்! அதிமுக-பாஜக கூட்டணியில் அடுத்த கட்ட நடவடிக்கை?

0

கடந்த மார்ச் 25, 2025 அன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம், அங்கு அவர் அமித்ஷாவை சந்தித்தது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சந்திப்பின் தொடர்ச்சியாக, பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 6 ஆம் தேதி ராமேஸ்வரம் வருவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில் பாம்பன் பாலம் திறப்பு விழாவில் கலந்து கொள்ளும் பிரதமரை, எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் இருவரும் தனித் தனியாக சந்திக்க நேரம் கேட்டுள்ளனர். இந்த விவகாரம் தமிழக அரசியலில் மேலும் பரபரப்பை கூட்டியுள்ளது.

தமிழகம் வரும் அமித் ஷா

இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதற்கான நாள் இன்னும் உறுதியாகவில்லை. பாஜகவின் தேர்தல் வியூக நிபுணராக கருதப்படும் அமித் ஷா, பாஜகவின் முக்கிய அரசியல் கணக்குகளை வகுப்பதில் முக்கிய பங்கு வகித்து வருகிறார். அக்கட்சியின் தொடர் வெற்றிகளுக்கு இவரே முக்கிய நபராக கருதப்படுகிறார்.

2026 சட்டமன்ற தேர்தலைக் கணக்கில் வைத்து பாஜக திட்டங்கள்

2014 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலிலிருந்து பாஜகவின் வெற்றியை உறுதி செய்தவர் அமித் ஷா என்பதில் மாற்றமில்லை. தற்போது பீகார் மாநில தேர்தல் அடுத்து நடைபெறவுள்ளது. இதனையடுத்து 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. இதனை முன்னிட்டு பாஜக தனது வலிமையை அடுத்தடுத்து தேர்தல் நடைபெறவுள்ள இந்த மாநிலங்களிலும் விரிவாக்க முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு அமித் ஷா பயணம் மேற்கொள்வதும் அவர் அங்கு தங்கள் கட்சி தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களை சந்திப்பதும் வழக்கம்.

தமிழகத்தில் செல்வாக்கை உயர்த்தும் பாஜக

தமிழகத்தில் தற்போது 4 எம்.எல்.ஏக்களை வைத்துள்ள பாஜக, இந்த எண்ணிக்கையை அதிகரிக்க வியூகங்கள் வகித்து வருகிறது. அதற்காக அதிமுக உடனான கூட்டணியை மீண்டும் உறுதியாக்க முயற்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மோடி மற்றும் அமித் ஷா அவர்களின் தமிழக வருகை பாஜகவின் கூட்டணியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமித் ஷா – எடப்பாடி சந்திப்பு

இதற்கு முன்னதாக டெல்லியில் நடைபெற்ற அமித் ஷா – எடப்பாடி பழனிசாமி சந்திப்பு, இரு கட்சிகளுக்குமிடையேயான கூட்டணி  சிக்கல்களுக்கு தீர்வாக அமைந்திருக்கலாம். தமிழகம் வரவுள்ள அமித் ஷா, பாஜகவின் மாநிலத் தலைவர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் உடனும் முக்கிய ஆலோசனைகள் நடத்தவுள்ளார். இதன் மூலம் அதிமுக – பாஜக கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகரும் என கூறப்படுகிறது.