Home Blog Page 320

உடல் வலிமை அதிகரிக்க ஒரு பிடி வேர்கடலையுடன் இதை சேர்த்து மென்று சாப்பிடுங்கள்!!

0

நமது உடல் இயக்கத்திற்கு ஸ்டாமினா தேவைப்படுகிறது.இந்த ஸ்டாமினா குறைந்தால் உடல் சோர்வு,உடல் பலவீன உணர்வு ஏற்படும்.உடலுக்கு தேவையான ஸ்டாமினா கிடைக்க நீங்கள் இந்த வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்யுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)வேர்க்கடலை – ஒரு பிடி
2)வெல்லம் – ஒரு துண்டு

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு கைப்பிடி வேர்க்கடலையை கிண்ணம் ஒன்றில் போட்டுக் கொள்ள வேண்டும்.பச்சை வேர்கடலையாக இருக்க வேண்டும்.நான்கு முதல் ஐந்து மணி நேரம் ஊறவைத்த பிறகு தண்ணீரை வடிகட்டிவிட்டு வேர்க்கடலையை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் இந்த வேர்கடலையுடன் ஒரு துண்டு வெல்லத்தை வைத்து சாப்பிட வேண்டும்.இப்படி காலையில் வேர்க்கடலை வெல்லம் சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை அதிகரிக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)மூக்கு சுண்டல் – 50 கிராம்
2)வேர்க்கடலை – 50 கிராம்

செய்முறை விளக்கம்:-

ஒரு கிண்ணத்தில் 50 கிராம் மூக்கு சுண்டல் மற்றும் 50 கிராம் வேர்க்கடலை போட்டு தண்ணீர் ஊற்றி ஊறவைக்க வேண்டும்.

நாள் முழுவதும் ஊறிய இந்த இரண்டு பொருளையும் பின்னர் தண்ணீர் வடித்துவிட்டு பச்சையாக மென்று சாப்பிட வேண்டும்.இப்படி சாப்பிட்டால் உடல் வலிமை அதிகரிக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)வேர்க்கடலை – 50 கிராம்

செய்முறை விளக்கம்:-

கிண்ணம் ஒன்றில் பச்சை வேர்க்கடலை போட்டு தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.

பிறகு இதை காலை நேரத்தில் நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.இந்த வேர்க்கடலையை சாப்பிட்டால் உடல் வலிமை அதிகரிக்கும்.

நாள் முழுக்க சுறுசுறுப்பாக இருக்க.. இந்த வீட்டு வைத்தியத்தை மட்டும் ட்ரை பண்ணுங்க!!

0

உங்களது உடல் சோர்வு நீங்கி நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க இந்த நான்கு வீட்டு வைத்தியங்களில் ஒன்றை பின்பற்றுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)வால்நட் – நான்கு
2)பாதாம் பருப்பு – நான்கு
3)சியா விதை – ஒரு தேக்கரண்டி
4)உலர் திராட்சை – ஐந்து

செய்முறை விளக்கம்:-

கிண்ணம் ஒன்றை எடுத்து நான்கு வால்நட்,நான்கு பாதாம் பருப்பு போட்டுக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி சியா விதை மற்றும் ஐந்து உலர் திராட்சை போட்டு தண்ணீர் ஊற்றி ஊறவைக்க வேண்டும்.

8 முதல் 10 மணி நேரம் நன்றாக ஊறவைத்த பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு ஒரு கப் பால் ஊற்றி மைய்ய அரைக்க வேண்டும்.இந்த பாலை குடித்து வந்தால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)வெந்தய விதை – இரண்டு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கப்

செய்முறை விளக்கம்:-

கிண்ணம் ஒன்றில் தண்ணீர் ஊற்றி இரண்டு தேக்கரண்டி வெந்தய விதை போட்டு ஊறவைக்க வேண்டும்.

வெந்தயம் நன்கு ஊறி வந்த பிறகு வாயில் போட்டு மென்று சாப்பிட்டால் உடலுக்கு தேவையான வலிமை கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)பூசணி விதை – இரண்டு தேக்கரண்டி
2)ஆளிவிதை – ஒரு தேக்கரண்டி
3)சூரியகாந்தி விதை – ஒரு தேக்கரண்டி
4)எள் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

கிண்ணம் ஒன்றில் பூசணி விதை இரண்டு தேக்கரண்டி அளவு போட்டுக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி ஆளிவிதை,ஒரு தேகர்ந்து சூரியகாந்தி விதை மற்றும் ஒரு தேக்கரண்டி எள் சேர்த்து நன்றாக ஊறவைக்க வேண்டும்.

இதை இரவு நேரத்தில் ஊறவைத்து காலையில் எழுந்ததும் மென்று சாப்பிட்டால் உடலுக்கு தேவையான வலிமை அதிகரிக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)பச்சை பயறு – ஒரு தேக்கரண்டி
2)வெந்தயம் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

கிண்ணம் ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.அதில் பச்சை பயறு ஒரு தேக்கரண்டி அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி வெந்தயம் போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக ஊறவைக்க வேண்டும்.இவற்றை முளைகட்ட வைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான வலிமை கிடைக்கும்.

ஆண்களின் ஆண்மையை அதிகரிக்கும் 5 வகை உணவுகள்!! என்னனு செக் பண்ணுங்க!!

0

கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுகளை சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும்.எந்தஒரு மருத்துவ சிகிச்சையும் இன்றி ஆண்மையை அதிகரிக்க இந்த டிப்ஸ் நிச்சயம் உதவும்.

1)மாதுளை

இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்து காணப்படுகிறது.இந்த மாதுளம் பழத்தில் ஜூஸ் செய்து சாப்பிட்டு வந்தால் உடலில் எதிர்ப்பு பண்புகள் அதிகரிக்கும்.மாதுளம் பழச்சாறு சாப்பிட்டால் நீரிழிவு நோய் பாதிப்பு குணமாகும்.

ஆண்மை அதிகரிக்க மாதுளை ஜூஸ் செய்து குடிக்கலாம்.மாதுளை சாறு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.உடலில் புற்றுநோய் செல்கள் வளராமல் மாதுளை ஜூஸ் செய்து குடிக்கலாம்.

2)தக்காளி

தினமும் ஒரு தக்காளி பழத்தை அரைத்து ஜூஸாக செய்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும்.

தக்காளியில் இருக்கின்ற வைட்டமின் சி,நார்ச்சத்து,புரதம் போன்ற ஊட்டச்சத்துக்கள் ஆண்களுக்கு விந்தணு உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது.

3)அவகேடோ

வெண்ணெய் பழத்தை அரைத்து ஜூஸாக சாப்பிட்டு வரும் ஆண்களுக்கு ஆண்மை அதிகரிக்கும்.இதில் இருக்கின்ற பொட்டாசியம் சத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

இந்த வெண்ணெய் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் செரிமானப் பிரச்சனை சரியாகும்.வெண்ணெய் பழத்தில் இருக்கின்ற நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.

4)பூண்டு

உடலில் இருக்கின்ற தேவையற்ற கொழுப்பு கரைய பூண்டு பற்களை சாப்பிடலாம்.பூண்டில் இருக்கின்ற நல்ல சத்துக்கள் விந்து உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது.

பூண்டில் இருக்கின்ற ஒமேகா 3 கொழுப்பு அமிலம் சருமம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது.பூண்டு பற்களை சாப்பிட்டால் உடலில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் அதிகரிக்கும்.

பூண்டு பற்களை சாப்பிட்டால் மூளையின் ஆரோக்கியம் மேம்படும்.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க பூண்டு பற்களை சாப்பிடலாம்.

5)முருங்கை கீரை மற்றும் காய்

இரும்புச்சத்து நிறைந்த முருங்கை காய் மற்றும் கீரையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும்.முருங்கை கீரையில் உள்ள சத்துக்கள் ஆண்களுக்கு விந்து உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது.

முருங்கை மரத்தில் இருந்து கிடைக்கும் பிசினை ஊறவைத்து சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும்.முருங்கை பிசினை பொடித்து பாலில் கலந்து குடித்தால் ஆண்மை அதிகரிக்கும்.

இந்திய நிறுவனங்களிடம் சரணடைந்த அமெரிக்கா நிறுவனங்கள்!

0

இந்திய நிறுவனங்களிடம் சரணடைந்த அமெரிக்கா நிறுவனங்கள்!

இறக்குமதி வரியை அமெரிக்க அரசு உயர்த்தியதால் இந்திய பொருட்களை வாங்கும் விலையானது அங்கு உயர்ந்துள்ளது. இதனால் அமெரிக்கா நிறுவனங்கள் இந்திய ஆடை உற்பத்தியாளர்கள் விலை உயர்வில் ஒரு பகுதியாக ஏற்றுக்கொள்ள கோரிக்கை விடுத்துள்ளனர்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சமீபத்தில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்தபட்சம் 10% வரி விதித்தார். மேலும், இந்தியாவைச் சேர்ந்த பொருட்களுக்கு கூடுதல் 26% வரி விதிக்கப்பட்டது. இந்த நடவடிக்கை, இந்திய உள்ளிட்ட நாடுகளின் ஏற்றுமதியை பாதிக்கும் என்பதுடன், அமெரிக்க நுகர்வோர் பொருட்களின் விலையை அதிகரிக்கும்.

இந்த வரி உயர்வின் விளைவாக, அமெரிக்க நுகர்வோர் அதிக விலைக்கு பொருட்களை வாங்க வேண்டிய நிலை உருவாகிறது. விலை அதிகரிப்பு விற்பனையை பாதிக்கும் என்பதால், அமெரிக்க சில்லரை விற்பனையாளர்கள் மற்றும் பிராண்டுகள், இந்திய ஆடை உற்பத்தியாளர்களை அணுகி, இந்த வரி உயர்வின் ஒரு பகுதியை அவர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.எம். சுப்பிரமணியன் இதுகுறித்து கூறுகையில், “அமெரிக்க இறக்குமதியாளர்கள் விலைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த எங்களை தொடர்பு கொண்டுள்ளனர். டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு பலவீனமடைந்துள்ளதால், 26% பரஸ்பர வரியின் தாக்கத்தை குறைக்க விலையில் மறுபரிசீலனை செய்ய வாய்ப்பு உள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர். அடுத்த வாரம் நாங்கள் வர்த்தக அமைச்சகத்தை தொடர்பு கொண்டு, கூடுதல் தெளிவைப் பெறுவோம்,” என்றார்.

அமெரிக்காவின் இந்த வரி உயர்வு, இந்திய ஆடை உற்பத்தியாளர்களுக்கு ஒரு சவாலாக அமைந்தாலும், அதே சமயம் ஒரு வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது. மற்ற ஏற்றுமதி நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட வரி குறைவாக உள்ளது. இந்த குறைந்த வரியை பயன்படுத்தி, உற்பத்தியை அதிகரித்து, அமெரிக்க சந்தையில் இந்தியாவின் பங்கு அதிகரிக்கப்படலாம். இதற்கு, உற்பத்தியாளர்கள் மூலதன மானியங்களைப் பெற அரசாங்கத்தின் ஆதரவு அவசியம்.

இந்தியாவின் பின்னலாடை மையமாக விளங்கும் திருப்பூரில், உற்பத்தியாளர்கள் பல நாடுகளுக்கு அடிப்படை ஆடைகளை 2 முதல் 5 டாலர் விலையில் ஏற்றுமதி செய்கிறார்கள். இந்த நிலையில், அமெரிக்காவின் வரி உயர்வு, இந்த ஏற்றுமதியை பாதிக்கும் அபாயம் உள்ளது. எனவே, இந்திய உற்பத்தியாளர்கள், விலை உயர்வை ஏற்றுக்கொள்வதா அல்லது அமெரிக்க விற்பனையாளர்களுடன் இணைந்து தீர்வு காண்பதா என்பதை தீர்மானிக்க வேண்டியுள்ளது.

இந்த சூழ்நிலையில், இந்திய அரசு மற்றும் உற்பத்தியாளர்கள், அமெரிக்காவின் வரி கொள்கைகளுக்கு ஏற்ப தகுந்த நடவடிக்கைகளை எடுத்து, இந்தியாவின் ஏற்றுமதியை பாதுகாக்க வேண்டும். அதேசமயம், அமெரிக்க விற்பனையாளர்களின் கோரிக்கைகளையும் கவனத்தில் கொண்டு, பரஸ்பர நலன்களை பாதுகாக்கும் வகையில் தீர்வுகளை கண்டறிய வேண்டும்.

திறனை வளர்க்க 10 லட்சம் சம்பள வேலை விட்ட இளைஞர் – டெக்கி இளைஞரின் தைரியமான முடிவு!

திறனை வளர்க்க 10 லட்சம் சம்பள வேலை விட்ட இளைஞர் – டெக்கி இளைஞரின் தைரியமான முடிவு!

இன்றைய இளைஞர்கள் பெரும்பாலும் அதிக சம்பளத்தை அடிப்படையாகக் கொண்டு தங்கள் தொழில் வாழ்க்கையை தொடங்குகிறார்கள். ஆனால், ஒரு இளைஞர் எடுத்த தைரியமான முடிவு இப்போது சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது.

2024-ல் இன்ஜினியரிங் பட்டம் பெற்ற இளைஞர் ஒருவர், கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வருடத்திற்கு ரூ.10 லட்சம் சம்பளத்தில் ஒரு பெரிய நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். தொழில்துறையில் புதிதாக வந்த அவர், இந்த வாய்ப்பை மிகுந்த உற்சாகத்துடன் ஏற்றுக்கொண்டார். ஆனால், வேலைச் சூழ்நிலையை நன்கு புரிந்துகொண்ட பின், அந்த இடத்தில் அவரின் திறமைகள் சரியாக பயன்படவில்லை என்றும், வளர்ச்சி வாய்ப்புகள் இல்லை என்றும் உணர்ந்தார்.

தனது கனவுகளை பின்தொடர விரும்பிய அந்த இளைஞர், மிகத் திறமையாக செயல்படும் ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் வருடத்திற்கு ரூ.5 லட்சம் சம்பளத்தில் பணி ஏற்றார். இது ஒரு பெரிய இழப்பாக பலருக்கு தோன்றினாலும், அவர் எடுத்த முடிவு வேறு வகையில் பாராட்டப்படுகிறது. அந்த நிறுவனத்தில் அவருக்கு மிக முக்கியமான பொறுப்புகள் வழங்கப்பட்டன. இதன் மூலம், அவர் தனது தொழில்நுட்ப திறன்கள், குழுத் தலைமையின்மை திறன், மற்றும் முடிவெடுக்கும் திறன் போன்றவற்றில் முன்னேற்றம் கண்டுள்ளார்.

சமூக வலைதளத்தில் தனது அனுபவத்தை பகிர்ந்த அவர், “பணம் என்பது முக்கியமல்ல, முதலில் உங்களுடைய திறன்களை மேம்படுத்துங்கள். அது நிச்சயமாக நல்ல வருமானத்தையும் உறுதியான தொழில்வாய்ப்பையும் தரும்” என கூறியுள்ளார்.

இது போன்ற சிந்தனைகள், இன்றைய இளைஞர்களுக்கு ஒரு வழிகாட்டியாக அமையும் என்பது உறுதி. குறைந்த சம்பள வேலை என்றும் அவமதிக்க வேண்டாம்; அது பெரும் வாய்ப்புகளுக்கான வாசல் ஆகலாம்.

தமிழக பாஜக தலைவர் ரேஸில் முந்துவது யார்? டெல்லியின் புது கணக்கு

0

தமிழக பாஜக தலைவர் ரேஸில் முந்துவது யார்? டெல்லியின் புது கணக்கு

தமிழக பாஜகவில் தலைமை மாற்றம் குறித்து பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. அண்ணாமலை அடுத்த தேர்தல்களை முன்னிட்டு அமையும் கூட்டணிக்காக தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து விலகக்கூடும் என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனையடுத்து, அடுத்த மாநிலத் தலைவராக யார் நியமிக்கப்படப் போகின்றனர் என்ற எதிர்பார்ப்பு கட்சிக்குள்ளும் பொதுமக்கள் மத்திலும் எழுந்துள்ளது.

இந்நிலையில், நயினார் நாகேந்திரன் முன்னணியில் உள்ளார் என்று கூறப்படுகிறது. தற்போதைய பாஜக சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் இவர், முன்னாள் அதிமுக அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது. நெல்லை மாவட்டத்தில் வேரூன்றிய இவர், முக்குலத்தோர் சமூகத்தின் முக்கியமான தலைவராகக் கருதப்படுகிறார். தமிழகத்தின் தெற்குப் பகுதிகளில் பாஜகவின் வளர்ச்சிக்காக அவருடைய பங்களிப்பு முக்கியமானதாக உள்ளது.

அதிமுகவுடனான கூட்டணியை பலப்படுத்தும் நோக்கிலும், நயினார் நாகேந்திரனின் நியமனம் சகோதர ஒத்துழைப்பை ஏற்படுத்தும் என கட்சி நிர்வாகம் கருதுகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் அண்ணாமலை தலைமையில் பாஜகவுக்கு கிடைத்த வெற்றியை தொடர வலிமையான, அனுபவம் வாய்ந்த தலைமை தேவைப்படுகிறது. இதற்கான சரியான தேர்வாக நயினார் நாகேந்திரன் இருக்கலாம் என்று பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் இந்த போட்டியில் வானதி சீனிவாசன், தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோரின் பெயர்களும் பரிசீலனையில் உள்ளன. இருப்பினும், நிலையான தருணங்களில் கூட்டணி கட்சிகளிடையே சமநிலைப் பேணும் தன்மை, பலமிக்க அவர் சார்ந்த சமூகத்தின் ஆதரவு, தெற்குப் பகுதிகளில் உள்ள செல்வாக்கு என்பவற்றால் நயினார் நாகேந்திரன் முன்னணியில் உள்ளார்.

பாஜகவின் அரசியல் திட்டங்களையும், மாநிலத்தில் அதன் எதிர்கால நிலையை நோக்கியும் இந்நியமனம் மிக முக்கியமானதாக அமையும். அடுத்த சில நாட்களில் தமிழக பாஜக தலைமை பற்றி உறுதி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சேலம் மாவட்டத்தை 3 மாவட்டங்களாக பிரிக்க வேண்டும்!.. வலுக்கும் கோரிக்கை!….

0

இந்தியாவில் முதன் முதலில் ஆரம்பிக்க மாவட்டம் என்கிற பெருமை எப்போதும் சேலத்திற்கு உண்டு. மலைகள் சூழ்ந்த மாநகரமான சேலம் வரலாற்று சிறப்புமிக்க ஒரு நகரமாகும். 1000 வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்த சேலம் 234 வருடங்களுக்கு முன்பு 1792ம் வருடம் ஏப்ரல் மாதம் 4ம் தேதி ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்தியாவின் முதல் மாவட்டமாக உருவானது.

சேரலம் என்னும் பெயரே காலப்போக்கில் திரிந்து சேலம் என அழைக்கப்பட்டதாக ஆதாரங்கள் உண்டு. ‘சேலம்’ என்றால் “மலைகள் சூழ்ந்த இடம்” என்று அர்த்தம். சேலை நெசவில் பெயர்பெற்று சேலையூர் என்ற பெயர் சேலம் என காலப்போக்கில் மாறியதாக வரலாற்று அறிஞர்கள் சொல்கிறார்கள். இப்போதும் சேலத்தில் சேலை நெய்யும் தொழில் என்பது பரவலாக காணப்படுகிறது.

salem
salem

சேலம் மாவட்டத்தில் இருந்தே நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்கள் பிரிந்தது. அந்த மாவட்டங்கள் பிரிவதற்கு முன் சேலம் மாவட்டமே தமிழகத்தில் பெரிய மாவட்டமாக இருந்தது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உருவான ஊர் சேலம் எனவும் சொல்லப்படுகிறது. இரும்பு தொழிற்சாலை, அரிசி மில்கள், ஜவ்வரி ஆலைகள், சுவையான உணவகங்கள் போன்றவற்றுக்கு சேலம் மாவட்டம் புகழ் பெற்றது. அதேபோல், சேலத்து மாம்பழம் என சொல்லுமளவுக்கு இங்கே மாம்பழமும் பிரபலமானது.

இந்நிலையில் சேலம் மாவட்டத்தை மூன்றாக பிரிக்க வேண்டும் என மேட்டூர் எம்.எல்.ஏ சதாசிவம் இன்று சட்டசபையில் கோரிக்கை வைத்துள்ளார். சட்டசபையில் பேசிய சதாசிவம் ‘சேலம் மாவட்டம் 11 தொகுதிகள் கொண்ட பெரிய மாவட்டம். எனவே, சேலத்தை மூன்றாக பிரிக்க வேண்டும். மேட்டூரை தலைமையிடமாக கொண்டு ஒரு மாவட்டம், ஆத்தூரை தலைமையிடமாக கொண்டு ஒரு மாவட்டம் மற்றும் சேலம் மாவட்டம் என மூன்றாக பிரிக்க வேண்டும்’ என கோரிக்கை வைத்திருக்கிறார். ஏற்கனவே சேலம் மாவட்டத்தில் இருந்த கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. அதன்பின் ஆத்தூரை தனி மாவட்டமாக்க வேண்டும் என்கிற கோரிக்கையும் பல வருடங்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

நாய் போல் நடித்துக் காட்டி ஒருவர் பிறப்புறுப்பை மற்றவர் பிடித்துக் கொள்ளுங்கள்.. ஊழியர்களின் அத்து மீறல்!!

0

மார்க்கெட்டிங் நிறுவனமான ஹிந்துஸ்தான் பவர்லிங்க்ஸ் ஊழியர்கள் கொடூரமான துன்புறுத்தலுக்கு ஆளாகும் காட்சிகள் வெளியாகியுள்ளன. தங்கள் இலக்குகளை அடையத் தவறிய ஊழியர்கள் மீது நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் மனிதாபிமானமற்ற மற்றும் கொடூரமான சித்திரவதையை மேற்கொள்கின்றனர்.

ஊழியர்கள் நாய் போல கழுத்தில் பெல்ட்டை கட்டிக்கொண்டு நடக்கவும், தண்ணீர் குடிக்கவும், தரையில் இருந்து அழுகிய பழங்களை நக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

 

வீடுகளுக்குச் சென்று பொருட்களை விற்கும் மார்க்கெட்டிங் ஊழியர்கள் மீது இந்த கொடூரம் சுமத்தப்படுகிறது. ஊழியர்கள் தங்கள் பேண்ட்டை கழற்றி ஒருவருக்கொருவர் பிறப்புறுப்புகளைப் பிடித்துக் கொள்வது, ஒரு நாய் ஒரு அறையில் சிறுநீர் கழிப்பது போல நடந்துகொள்வது, யாரோ ஒருவர் மென்று துப்பிய பழத்தை எடுப்பது, தரையில் இருந்து நாணயங்களை நக்குவது போன்ற சித்திரவதைகளுக்கு ஆளாகின்றனர். இந்த முறை ஊழியர்களை மறுநாள் தங்கள் இலக்குகளை அடையச் செய்வதாகும்.

 

பயத்தின் காரணமாக பலர் இந்த கொடூரத்திற்கு பதிலளிக்கவில்லை, எதிர்வினையாற்றுபவர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள். அவர்களுக்கு ரூ.6,000 முதல் ரூ.8,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. இலக்கை அடைந்தால் பதவி உயர்வு மற்றும் அதிக சம்பளம் தருவதாக உறுதியளித்து அவர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். கலூர் ஜனதா சாலையில் உள்ள கிளையின் காட்சிகள் இப்போது வெளிவந்துள்ளன. இந்த நிறுவனத்திற்கு எதிராக முன்பே புகார்கள் எழுந்துள்ளன. பெண்கள் உட்பட பலர் இந்த சுரண்டலுக்கு பலியாகின்றனர்.

இது தான் கடைசி ஆட்டம்.. மகனை பார்க்க வந்த பெற்றோர்!! ஓய்வு அறிவிக்கப்போகும் தோனி!!

0

IPL 2025: ஒவ்வொரு முறை ஐபிஎல் தொடர் வரும்பொழுதும் இந்த முறை தோனி விலகிவிடுவார் என்ற செய்தி வலம் வருவதுண்டு. ஆனால் இம்முறை இதுதான் அவர் கடைசியாக விளையாடும் போட்டி என்று பலரும் கூறி வருகின்றனர். இது உண்மை தான் என உணர்த்தும் வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அவர் விளையாடுவதை அவரது பெற்றோர்கள் நேரடியாக பார்க்க வந்துள்ளனர். இதுபோல் முன்பு ஏதும் நடந்ததில்லை. கிட்டத்தட்ட தோனி 16 ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாடி வருகிறார்.

அப்படி விளையாடும் போது ஒரு முறை கூட அவரது பெற்றோர்கள் நேரில் வந்து பார்த்ததில்லை. தற்பொழுது தான் முதல்முறையாக சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வந்து பார்த்துள்ளனர். இதனால் இனிவரும் ஐபிஎல் போட்டிகளில் விளையாட மாட்டேன் எனக் கூறி ஓய்வு அறிவிக்க போகிறாரா?? என்று கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. மேற்கொண்டு இந்த தகவலால் அவரது ரசிகர்கள் மிகுந்த வேதனையுடன் உள்ளனர்.

அதேபோல சில ஆண்டுகளுக்கு முன்பு தோனி ஒரு பேட்டியில், நான் ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெற போகிறேன் என்றால் கட்டாயம் சேப்பாக்கத்தில் தான் எனது கடைசி ஆட்டம் இருக்கும் என கூறியிருந்தார். அதேபோல அவரது பெற்றோர்களும் இம்முறை தான் வருகை புரிந்துள்ளனர். இதையெல்லாம் வைத்துப் பார்க்கையில் இவர் ஓய்வு அறிவிப்பது கட்டாயம் எனக் கூறுகின்றனர். “தோனி ஓய்வை அறிவிக்காதீர்கள்” என்று இணையத்தில் ட்ரெண்டிங் போஸ்ட்போட்டு அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

பழைய தங்க நகைகளை விற்பனை செய்யும்பொழுது வரி விதிக்கப்படுவது குறித்து தெரியுமா!! எந்த கால அளவிற்கு எந்த வகையான வட்டி விகிதம்!!

0

உலக நாடுகளின் இடையே நடைபெறக்கூடிய வர்த்தக போரின் காரணமாக தங்கத்தின் விலையானது சர்வதேச அளவில் கணிசமாக உயர்ந்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக தங்கத்தின் விலை குறைந்த பொழுதிலும் அதற்கு முன்னதாக அதிக விலை உச்சத்தை தங்கம் எட்டி இருக்கிறது.

சென்னையை பொருத்தவரையில் ஜனவரி 1 ஆம் தேதி 24 கேரட் தங்கத்தின் 1 கிராம் நிலையானது 7796 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்பொழுது ஏப்ரல் 5 ஆம் தேதியான இன்று 9,065 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது தங்கத்தின் விலை உயர்வை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே செல்வதால் வீட்டில் இருக்கக்கூடிய பழைய தங்க நகைகளை விற்பனை செய்து லாபம் ஈட்டலாமா என பலருக்கும் கேள்விகள் இருக்கின்றன.

அதிலும் குறிப்பாக ஒருவர் தன்னுடைய தாத்தாவால் வாங்கப்பட்ட பழைய தங்க நகைகளை விற்பனை செய்ய போவதாகவும் அந்த நகையை விற்பனை செய்யும் பொழுது அதற்காக நிதி துறை அந்த நகையை விற்பனை செய்யும் பொழுது அதற்காக வரிகள் விதிக்கப்படுமா என்பது குறித்த கேள்விகளை எழுப்பியிருக்கிறார். இந்த கேள்விகளுக்கு நிதி துறையை சார்ந்த ஒருவர் விளக்கம் அளித்திருக்கிறார். அந்த விளக்கத்தின்படி தங்க நகைகளை விற்பனை செய்யும் பொழுது அவற்றின் கால அளவுகளைப் பொறுத்து மூலதன ஆதாயங்கள் என்ற பிரிவின் கீழ் வரி விதிக்கப்படும் என தெரிவித்திருக்கிறார்.

இவ்வாறு விதிக்கப்படும் வரியானது இரண்டு வகைகளில் பிரிக்கப்படுகிறது :-

✓ குறுகிய கால மூலதன ஆதாய வரி
✓ நீண்டகால மூலதன ஆதாய வரி

குறுகிய கால மூலதன ஆதாய வரி :-

நகை வாங்கிய 24 மாதங்களுக்குள் விற்பனை செய்தால் அந்த நகையின் விற்பனை விலையானது குறுகிய காலத்திற்கான ஆதாய வரி விதிப்பின் மூலம் விற்பனை செய்யப்படும் என தெரிவித்திருக்கிறார்.

நீண்டகால மூலதன ஆதாயவரி (12.5%) :-

2001 ஏப்ரல் 1 ஆம் தேதி நிலவரப்படி பழைய தங்க நகைகள் வாங்கியதற்கான செலவு = நீண்டகால மூலதன ஆதாய வரி என்ற ஃபார்முலா படி வரிவிதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனோடு கூட செஸ் வரியும் நீண்ட கால மூலதன ஆதாய வரியோடு விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.