Home Blog Page 323

IPL 2025: ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனையை படைத்த ஹர்திக் பாண்டியா!

0

IPL 2025: ஐபிஎல் வரலாற்றில் கேப்டனாக ஹர்திக் பாண்டியா புதிய சாதனையை படைத்துள்ளார்.

– ஒரு போட்டியில் 5 விக்கெட் வீழ்த்திய முதல் கேப்டன்!

2025 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசன் தொடர்ந்து அதிரடிகளை தரும் நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் எதிர்பாராத சாதனையை படைத்துள்ளார். முந்தைய ஐபிஎல் ரெக்கார்டுகளை முறியடித்து, இவர் செய்த பெரும் சாதனை கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

லக்னோவில் நடந்த இந்த 16வது லீக் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்களில் 203 ரன்கள் எடுத்தது. இது மும்பை அணிக்கு கடினமான இலக்காக அமைந்தது. ஆனால், அந்த பதிலடி இனிங்ஸில் ஹர்திக் பாண்டியாவின் பந்துவீச்சு அசத்தல் திருப்பமாக இருந்தது.

சாதனை பக்கம்:

மும்பையின் பவுலிங் சுழற்சியில் ஆறாவது பவுலராக வந்த ஹர்திக் பாண்டியா, நான்கு ஓவர்களில் 36 ரன்கள் மட்டுமே வழங்கி, நேர்த்தியான பந்து வீச்சுடன் ஐந்து விக்கெட்களை வீழ்த்தினார். இதன்மூலம், ஐபிஎல் வரலாற்றில் ஒரே போட்டியில் ஐந்து விக்கெட் வீழ்த்திய முதல் கேப்டனாக புது ரெக்கார்டை உருவாக்கியுள்ளார்.

இத்தனை ஆண்டுகள் பிந்தியும், இந்த வகை சாதனையை எந்த கேப்டனும் செய்யாத நிலையில், ஹர்திக் பாண்டியாவின் இந்த பவுலிங் பட்டம், அனில் கும்ப்ளேவின் முந்தைய சாதனையை தாண்டியுள்ளது. அனில் கும்ப்ளே ஒரே போட்டியில் அதிகபட்சமாக நான்கு விக்கெட்களே எடுத்திருந்தார். தற்போது ஹர்திக் அதையும் கடந்துவிட்டார்.

மேலும் சாதனைகள்:

  • கேப்டனாக இரண்டு வெவ்வேறு அணிகளுக்கு எதிராக மூன்றுக்கும் மேற்பட்ட விக்கெட்களை வீழ்த்திய ஒரே கேப்டன்.

  • கேப்டன்களுக்கான அதிக விக்கெட்கள் பட்டியலில், அனில் கும்ப்ளேவுடன் இரண்டாவது இடத்தை பகிர்ந்து கொள்கிறார் (30 விக்கெட்கள்).

  • ஷேன் வார்னே (57 விக்கெட்கள்) முதல் இடத்தில் தொடர்கிறார்.

  • ரவிச்சந்திரன் அஸ்வின் 25 விக்கெட்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

கட்டுரை முடிவு:

ஹர்திக் பாண்டியாவின் இந்த சாதனை, அவரது கேப்டன்சி திறமை மட்டுமல்லாது, பவுலராகும் திறமையை நிரூபிக்கிறது. மும்பை அணியின் எதிர்கால வெற்றிகளில் பாண்டியாவின் பங்கு குறிப்பிடத்தக்கதாக இருக்கப்போகிறது என்பது உறுதி!

ரிஷப் பண்ட் ஃபார்ம் இழப்பு: லக்னோ அணியின் கனவுக்கு பின்னடைவு?

0

ரிஷப் பண்ட் ஃபார்ம் இழப்பு: லக்னோ அணியின் கனவுக்கு பின்னடைவு?

– ரசிகர்களின் எதிர்பார்ப்பை முறியடித்த ‘27 கோடி’ வீரர்!

2025 ஐபிஎல் சீசனில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனாக செயல்படுகிற ரிஷப் பண்ட், தொடர்ச்சியான மோசமான ஆட்டத்தால் அவரது ரசிகர்களையே ஏமாற்றியுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெறும் 2 ரன்களிலேயே ஆட்டமிழந்த பண்ட், இந்த தொடரில் இதுவரை எடுக்கப்பட்ட 4 போட்டிகளிலும் சேர்த்து 19 ரன்களே எடுத்துள்ளாராம்.

மிகப்பெரிய தொகையான ₹27 கோடி செலவில் லக்னோ அணி அவரை வாங்கியதில் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பு வைத்திருந்தனர். ஆனால், அந்த நம்பிக்கையை தற்போது பண்ட் பூரணமாகவே வீணாக்கியுள்ளார் என்பது சமூக வலைத்தளங்களில் வெளிப்படையாகத் தெரிகிறது.

பண்ட்- பவுலரா?  பேட்ஸ்மேனா ?

முந்தைய போட்டிகளில் அவர்:

  • டெல்லிக்கு எதிராக – வெறும் சில ரன்கள்

  • சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக – 15 ரன்கள்

  • பஞ்சாப் அணிக்கு எதிராக – 2 ரன்கள்
    என தொடர்ந்து விரக்தி ஏற்படுத்திய பாட்டிங் மட்டுமே காட்டியுள்ளார். மும்பைக்கு எதிராக 6 பந்துகளை சந்தித்த பண்ட், ஹர்திக் பாண்டியாவின் அதிரடியான பந்துவீச்சுக்கு எதிராக கணிசமான ரன்கள் எடுக்கத் தவறியதோடு, அணியின் வெற்றியும் தொலைந்துவிட்டது.

ரசிகர்கள் மீம்ஸ் மூலம் அதிர்ச்சி வெளிப்படுத்துகிறார்கள்

சமூக வலைத்தளங்களில் #PantFlop என்கிற ஹாஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. பலரும் பண்ட் ஒரு தடவை ஓய்வெடுத்து பயிற்சியில் கவனம் செலுத்த வேண்டுமென ஆலோசனை கூறியுள்ளார்கள். மேலும், இந்திய அணியிலிருந்து ஒதுக்கப்பட்ட பிறகு அவரது உற்சாகம் குறைந்துவிட்டது என்கிறார்கள்.

இதில் முக்கியமானது, பண்ட் இந்த ஆட்ட திண்டாட்டத்தில் இருந்து மீண்டு வர முடியுமா என்பது தான் ரசிகர்களிடையே பெரும் கேள்வியாக உள்ளது. பண்டின் பிந்தைய போட்டிகள், அவருடைய கிரிக்கெட் பயணத்தில் முக்கிய திருப்புமுனையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

எம்புரான் பட பிரச்சனை!.. பிரித்திவிராஜை கட்டம் கட்டும் வருமானவரித்துறை!.

0

பிரித்திவிராஜின் இயக்கத்தில் மோகன்லால் நடித்து உருவான திரைப்படம்தான் எம்புரான். சில வருடங்களுக்கு முன்பு வெளியான லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமாக எம்புரான் உருவாகியிருக்கிறது. இதில், மோகன்லால், மஞ்சுவாரியர், டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். எம்புரான் படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் ஒரு பேன் இண்டியா படமாக உருவாகியிருக்கிறது.

மார்ச் மாதம் 27ம் தேதி வெளியான இப்படம் இதுவரை 200 கோடி வசூலை தாண்டியிருக்கிறது. 200 கோடியை தாண்டிய முதல் மலையாள படம் என்கிற பெருமை இந்த படத்திற்கு கிடைத்திருக்கிறது. அதேநேரம், இந்த படத்தில் சிறுபான்மையினர் மீது மதவாத கட்சிகள் நடத்தும் தாக்குதல், குஜராத்தில் நடந்த இனப்படுகொலைகள் தொடர்பான காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இது மதவாத கட்சிகளுக்கும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பினருக்கும் கோபத்தை ஏற்படுத்தியது.

empuraan

எனவே, இப்படத்திற்கு பாஜக, ஆர்.எஸ்.எஸ் போன்ற சங்கபரிவார்த்தன அமைப்புகள் மிரட்டல் விடுத்தனர். எனவே, படத்தின் சில காட்சிகளை நீக்கியும், சில வசனங்களை மியூட் செய்தும் மீண்டும் சென்சார் செய்து இப்போது படம் ஓடிக்கொண்டிருக்கிறது. அதோடு, சர்ச்சைகளை ஏற்படுத்திய காட்சிகளுக்காக மோகன்லால் மன்னிப்பும் கேட்டார்.

இந்நிலையில், ஆளும் பாஜகவின் கோபம் எம்புரான் படக்குழு மீது திரும்பியிருக்கிறது. பொதுவாக தங்களின் கோபத்தை வருமானவரித்துறை மூலம் காட்டும் பாஜக அரசு எம்புரான் படக்குழு மீதும் அதையே ஏவியிருக்கிறது. 2 நாட்களுக்கு முன்பு எம்புரான் படத்தை தயாரித்த ஆசிர்வாத் சினிமாஸ் மற்றும் ஸ்ரீ கோகுலம் மூவிஸ் ஆகிய நிறுவனங்களின் அலுவகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.

இப்போது எம்புரான் பட இயக்குனர் பிரித்திவிராஜுக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. அவர் நடிப்பில் வெளியான கோல்டு, ஜன கன மன, கடுவா ஆகிய 3 படங்களில் பிரித்திவிராஜ் இணை தயாரிப்பாளராக இருந்த நிலையில் கணக்கு விபரங்கள் தொடர்பாக நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. அதில் அவர் 40 கோடி வருமானம் பெற்றதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. விரைவில் பிரித்திவிராஜ் வருமான வரித்துறைக்கு பதிலளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசியல் அழுத்தம் காரணமா?!.. உணவுப் பாதுகப்பு துறை அதிகாரி சதீஷ் பணியிட மாற்றம்!..

0

தமிழகத்தின் பல ஹோட்டல்கள் மற்றும் சின்ன சின்ன உணவகங்களிலும் கலப்படம் மற்றும் தரம் குறைந்த உணவு பரிமாறப்பட்டு வருகிறது. சைவமோ, அசைவமோ அதை இப்படித்தான் சமைக்க வேண்டும், இவ்வளவு நேரத்திற்கு மேல் அதை பயன்படுத்தக்கூடாது என விதிமுறைகள் இருக்கிறது. ஆனால், 60 சதவித உணவகங்கள் அதை பின்பற்றுவதில்லை. அந்த உணவகங்களில் சாப்பிடும் பலருக்கும் உடல் உபாதைகள் ஏற்படுவது வழக்கமாகிவிட்டது.

ஹோட்டலில் சாப்பிடும் பிரியாணியில் கரப்பான் பூச்சி, சிக்கனில் புழு என தொடர்ந்து செய்திகளை பார்ப்பது அதிகரித்துவிட்டது. இதில் கொடுமை என்னவென்றால் ‘உணவில் புழு கிடக்கிறதே இப்படி கொடுக்கலமா?’ என கேட்டால் ஹோட்டல் நிர்வாகம் அதற்கு சரியான பதிலையும் சொல்வது இல்லை. எனவே, குறைந்தபட்சம் அதை புகைப்படம் எடுத்து சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து விடுகிறார்கள். பெரும்பாலான உணவகங்களில் சிக்கன் உள்ளிட்ட மாமிசங்களை பல நாட்கள் ஃபிரிட்ஜில் வைத்து பயன்படுத்துகிறார்கள். அவர்கள் எதைப்பற்றியும் கவலைப்படுவது இல்லை. பொதுமக்களின் ஆரோக்கியத்தின் மீது அவர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை. உணவு மட்டுமில்லை. மீன்கள், காய்கறிகள், பழங்கள், பல தின்பண்டங்கள் என எல்லாவாற்றிலும் கலப்படங்கள் வந்துவிட்டது.

கடந்த சில வருடங்களாகவே தமிழகத்தில் பல இடங்களிலும் ரெய்டு செய்து பல கடைகளை சீல் வைத்தவர் உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ்குமார். மேலும், ஒரு பொருளின் தரத்தை எப்படி கண்டுபிடிக்க வேண்டும் என பொதுமக்களிடம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தியவர் இவர். எனவே, இவரை பொதுமக்களுக்கு மிகவும் பிடிக்கும். சமீபத்தில் சென்னை திருவல்லிக்கேனியில் உள்ள ஹோட்டல் பிலால் உணவகத்தில் சாப்பிட்ட 20 பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. வந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு ஏற்பட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எனவே, அங்கு சென்று சோதனை நடத்திய சதீஷ்குமார் பிலால் ஹோட்டலுக்கு சீல் வைத்தார்.

satish

அதன்பின் அண்ணா சாலையில் உள்ள பிலால் ஹோட்டலில் சாப்பிட்ட சிலருக்கும் உடலில் பிரச்சனை ஏற்பட்டது. உடனே, அங்கு சோதனை செய்ய சதிஷ்குமார் அங்கு சென்றார். ஆனால், கடையின் முன்பே நின்று கொண்டிருந்த ஊழியர்கள் செல்போனை அவரிடம் கொடுக்க யாரோ ஒருவர் சதீஷிடம் பேசினார். அதன்பின் சோதனை செய்யாமல் அங்கிருந்து கிளம்பி சென்றார் சதீஷ். அதன்பின் சதீஷுக்கு உடல் பதட்டம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

bilal
bilal

இந்நிலையில்தான் சதீஷ் உணவுப்பாதுகாப்பு துறை அதிகாரி பதவியிலிருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டு மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்கத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறார். பிலால் ஹோட்டல் முன் சதீஷிடம் செல்போனில் பேசியது யார்?.. அரசியல் அழுத்தம் காரணமாகவே சதீஷ் இடமாற்றம் செய்யப்பட்டாரா? என்கிற கேள்விகள் பலருக்கும் எழுந்துள்ளது. நேர்மையான அதிகாரிகளை அரசியல்வாதிகள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்க மாட்டார்கள் என்றே பலரும் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

ரயில் பயணத்தில் நிம்மதியாக தூங்க.. ரயில்வே துறையின் புதிய விதிகள்!! மகிழ்ச்சியில் பயணிகள்!!

0

போக்குவரத்து என்று பார்க்கும் பொழுது பொதுவாகவே மூன்று வழிகள் பின்பற்றப்பட்டு வருகிறது. அதில் வான்வழி போக்குவரத்து மற்றும் வாகனங்களின் மூலம் சாலை வழி போக்குவரத்து இவை மிக அதிக செலவை உள்ளடக்கியிருப்பதால் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர்.

குறைவான விலையில் டிக்கெட் பற்றிக் கொண்டு நீண்ட தூரம் நிம்மதியாக பயணிக்க அதிக அளவு மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். இப்படி இருக்கக்கூடிய சூழ்நிலையில் ரயில் பயணத்தின் பொழுது அதிலும் குறிப்பாக இரவு நேர பயணத்தின் பொழுது பல்வேறு விதமான இன்னல்களை வெளிப்படையாக சொல்ல முடியாமல் பயணிகள் சகித்துக் கொண்டு செல்ல வேண்டி இருப்பதால் அவற்றை தீர்க்கும் வண்ணம் ரயில்வே துறை முக்கிய விதிகளை வெளியிட்டு இருக்கிறது.

ரயில்வேயின் முக்கிய மற்றும் புதிய விதிகள் :-

✓ மிடில் பர்த் பயணிகள் நிம்மதியாக தூங்க இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இருக்கைகளில் யாரும் அமரக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

✓ அதே நேரத்தில், இரவு 10 மணிக்கு மேல் டிடிஆர் டிக்கெட் பரிசோதனையில் ஈடுபடக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் அவ்வாறு இரவு நேரங்களில் டிக்கெட் பரிசோதனை செய்யும் பொழுது பயணிகளால் நிம்மதியாக தூங்க ஏனெனில் அவ்வாறு இரவு நேரங்களில் டிக்கெட் பரிசோதனை செய்யும் பொழுது பயணிகளால் நிம்மதியாக தூங்க முடிவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

✓ ஆனால், இரவு 10 மணிக்கு மேல் ரயிலில் ஏறக்கூடிய பயணிகளுக்கு இது பொருந்தாது என்றும் ரயில்வே துறையை தெரிவித்திருக்கிறது.

இனி ரயிலில் பயணம் செய்யும்பொழுது தூக்கத்திற்கு எந்த வித தடங்களும் இருக்காது என்றும் பயணிகள் அனைவரும் இரவு 10 மணிக்கு இருக்கைகளில் அமராமல் அவரவருடைய பர்த்தில் படுத்து உறங்கிக் கொண்டே பயணிக்கலாம் என இந்தியன் ரயில்வே துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் மீனவர்களும்.. படகுகளும் நிபந்தனை இன்றி விடுவிப்பு!! இலங்கைக்கு செல்லும் பிரதமர் மோடி!!

0

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 2019 ஆம் ஆண்டு முதல் முறையாக அரசு முறை பயணத்தில் இலங்கைக்கு சென்று இலங்கை அதிபருடன் பேச்சு வார்த்தை நடத்தினார். இதனைத் தொடர்ந்து இரண்டாவது அரசு முறை பயணமாக இன்று இலங்கைக்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் செல்ல இருக்கிறார்.

அரசு முறை பயணத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இலங்கை அதிபர் அனுரகுமார திஸாநாயக் அவர்களை சந்தித்து மீனவர்களின் பிரச்சனைகள் குறித்து விரிவாக விவாதிக்க இருப்பதாகவும் அதனை தொடர்ந்து 8 ஒப்பந்தங்களில் கையெழுத்து இட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இலங்கைக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டு இருப்பதால் இலங்கையில் இருக்கக்கூடிய 100 தமிழ் மீனவர்களின் படகுகள் மற்றும் தமிழ் மீனவர்கள் எந்த வித நிபந்தனையும் இன்றி விடுவிக்கப்பட இருக்கின்றனர். அதனோடு கூடவே மேலும் 75 தமிழ் மீனவர்களின் படகுகள் இலங்கை அரசின் பொதுவுடமையாக மாற்றப்பட்டுள்ளது. அவ்வாறு மாற்றப்பட்ட படகுகள் பிரதமர் நரேந்திர மோடி தன் பயணத்தை முடித்து இந்தியா திரும்பிய பின்பு நடுக்கடலில் மூழ்கடிக்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் பணிபுரியும் இந்திய ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்த Google!! இப்படி நடந்தால் மட்டுமே தப்பிக்க வாய்ப்பு!!

0

இரண்டாவது முறையாக அமெரிக்காவின் அதிபராக ட்ரம்ப் அவர்கள் பதவியேற்றது முதலே பல்வேறு விதமான வர்த்தகப் போர், வெளிநாட்டவர்களை நாடு கடத்துதல், முறையாக குடியேறியவர்களையும் அவரவருடைய நாட்டிற்கு அனுப்புதல் போன்ற பல குடியேற்ற விதிகள் பின்பற்றப்பட துவங்கியுள்ளன.

சூழ்நிலை இவ்வாறு இருக்க, H-1B விசா வைத்திருக்கக் கூடிய இந்தியர்கள் அமெரிக்காவிலிருந்து தங்களுடைய சொந்த மண்ணிற்கு செல்ல வேண்டாம் என்றும் விடுமுறைக்காகவோ அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்காவோ அமெரிக்காவை விட்டு செல்லும் பட்சத்தில் மீண்டும் அவர்கள் அமெரிக்காவினுள் நுழைய முடியாத நிலை ஏற்படலாம் என அமெரிக்காவில் இருக்கக்கூடிய மிகப்பெரிய நிறுவனங்களான அமேசான், google, மெட்டா போன்ற பல நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கின்றன.

ஏற்கனவே இதுபோன்ற குடியேற்ற விதிகள் புதிதாக மாற்றப்பட்டதால் தங்களுடைய சொந்த நாடுகளுக்குச் சென்ற ஊழியர்கள் மீண்டும் அமெரிக்காவில் நுழைவதற்கு பல்வேறு சவால்களை சந்தித்ததாகவும் மேலும் பலரை சரியான சான்றிதழ்கள் இருந்த பொழுதிலும் மீண்டும் அவர்களுடைய சொந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பியதால் தங்களுடைய ஊழியர்களை இம்முறை அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டாம் என இந்நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. அமெரிக்காவைப் பொறுத்தவரை குடியேற்ற விதிகள் என்பது அதிபரை பொறுத்துதான் அமையும் என்பது மிகப்பெரிய வருத்தத்திற்குரிய விஷயமாக உள்ளது. காரணம் நாட்டை விட்டு தொழிலாளர்கள் வெளியேறும் பொழுது இருக்கக்கூடிய குடியேற்ற விதியானது மீண்டும் அவர்கள் நாட்டுக்குள் நுழையும் பொழுது இருப்பதில்லை.

அந்த தருணத்தில் அமெரிக்க அதிபராக இருக்கக்கூடியவர் என்ன முடிவு எடுக்கிறாரோ என்ன விதிகளை வகுக்கிறாரோ அதன்படி தான் அமெரிக்காவில் குடியேற்றங்கள் நடைபெறும் என ஏற்கனவே உணர்ந்ததால் இது போன்ற ஒரு முடிவை எடுத்து இருப்பதாக அமெரிக்காவில் இருக்கக்கூடிய மிகப்பெரிய நிறுவனங்கள் தெரிவித்திருக்கின்றன.

திடீரென ஒத்திவைக்கப்பட்ட முழு ஆண்டு தேர்வு!! எப்பொழுது என்று தெரியுமா!!

0

தமிழகத்தில் அதிக வெயிலின் காரணமாக 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலக்கூடிய மாணவர்களுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. சரியாக ஏப்ரல் 7-ம் தேதி துவங்கி ஏப்ரல் 17 வரை இந்த தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென திருவாரூர் மாவட்டத்தில் முழு ஆண்டு தேர்வு ஒத்திவைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, திருவாரூர் மாவட்டத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்படக்கூடிய ஆழி தேர் திருவிழா ஏப்ரல் ஏழாம் தேதி நடைபெற உள்ள நிலையில் அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. அன்று நடைபெற இருந்த முழு ஆண்டு தேர்வானது ஒத்திவைக்கப்படுவதாக திருவாரூர் மாவட்டம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த மாவட்டத்தில் இருக்கக்கூடிய 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலக்கூடிய மாணவர்களுக்கு தேர்வு தேதிகள் மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது.

10 ஆம் வகுப்பு பயிலக்கூடிய மாணவர்களுக்கு எப்பொழுதும் போல் பொது தேர்வுகள் நடைபெறும் என்றும் துவக்க பள்ளியில் பயிலக்கூடிய மாணவர்களுக்கு மட்டும் ஏப்ரல் 7 ஆம் தேதி நடைபெற இருந்த முழு ஆண்டு தேர்வானது அடுத்த நாள் அதாவது ஏப்ரல் 8 ஆம் தேதி ஒத்திவைக்கப்படுவதாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருக்கிறார். மாணவர்களின் பெற்றோர்கள் தேர்வு தேதிகளை குறித்து வைத்து அதற்கேற்றார் போல் தங்களுடைய பிள்ளைகளை தேர்வுகளுக்கு தயார்படுத்தும் படியும் கேட்டுக் கொள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

பாகிஸ்தானின் அணு சக்தியை அழிக்க முடிவு செய்த 3 நாடுகள்!! உலகப் போர் துவங்க போகுதோ!!

0

உலகத்தில் ஏற்கனவே ஒரு சில நாடுகளுக்கு இடையே மிகப்பெரிய அளவில் போரானது நடைபெற்று வருகிறது. இப்படி இருக்கும் சூழலில் அமெரிக்கா, இந்தியா மற்றும் இஸ்ரேல் ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து பாகிஸ்தானிடம் இருக்கக்கூடிய அணுசக்தி மையங்களை அளிக்க முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து இந்தியாவுக்கான பாகிஸ்தானின் முன்னாள் தூதர் அப்துல் பாசித் தெரிவித்திருப்பதாவது :-

ஏற்கனவே அமெரிக்கா இஸ்ரேல் இடையே போர் நடந்து கொண்டிருப்பதையும் அதனால் ஈரானது தங்களுடைய நாட்டை அணு சக்தியை உருவாக்க முடிவு செய்திருப்பதாகவும் தெரிவித்து, இதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்கள் ஈரானுக்கு கடிதம் எழுதியும் ஈரானில் இருந்து எந்தவித பதிலும் இன்னும் வரவில்லை என்றும் இதனால் அமெரிக்க அதிபர் கோபமடையும் பட்சத்தில் ஈரான் மீதும் போர்த் தாக்குதல் நடைபெறும் என தெரிவித்திருக்கிறார்.

இது ஒரு புறம் இருக்க உலகத்தில் மொத்தம் 9 நாடுகளிடம் மட்டுமே அணுசக்தி ஆயுதங்கள் மற்றும் அணு உலைகள் உள்ளன என்றும் அதிலும் குறிப்பாக உலகில் உள்ள முஸ்லிம் நாடுகளிலேயே பாகிஸ்தானிடம் மட்டும்தான் அணுசக்தி ஆயுதங்கள் தயாரிக்க கூடிய அணு உலைகள் உள்ளது என்றும் இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் சுட்டி காட்டியிருக்கிறார்.

தற்பொழுது இந்த அணுஉலையை தான் அமெரிக்கா இஸ்ரேல் இந்தியா ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து அளிக்க முடிவு செய்திருப்பதாகவும், உண்மையில் இவர்கள் பாகிஸ்தானின் அணுசக்தி நிலையத்தை தாக்க நினைக்கும் இப்பொழுது அவர்கள் மீதும் பாகிஸ்தான் தாக்குதல் செய்யும் என எச்சரிக்கை விடுத்திருக்கிறார். இது அந்த மூன்று நாடுகளுக்கு மட்டும் இல்லை என்றும் உலகத்தில் உள்ள எந்த நாடு தங்களை தாக்க நினைத்தாலும் அந்த நாட்டை தாக்கி அழிப்பதற்கான அணு ஆயுதங்கள் தங்களிடம் உள்ளது என்றும் பாகிஸ்தான் தூதர் தெரிவித்திருக்கிறார்.

பணத்தை சேமிக்கணும்.. ஆனா அதுல இருந்து மாதா மாதம் வருமானமும் வேணுமா!! தபால் நிலையத்தின் அருமையான திட்டம்!!

0

பலருக்கு பணத்தை சேமிப்பதில் சிக்கல்கள் நிலவுகின்றன. அதாவது பணத்தை சேமிக்கும் பொழுது தங்களுடைய கையில் இருப்பு குறைந்து விடுகிறது. இதனால் திடீரென ஏற்படக்கூடிய பண தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் பலரும் தவித்து வருகின்றனர். அவர்களுக்காகவே தபால் நிலையத்தில் மாதாந்திர வருமான திட்டமானது உருவாக்கப்பட்டுள்ளது.

பொதுவாக பணத்தை சேமிக்க நினைப்பவர்கள் அதற்கான வட்டி விகிதம் எவ்வளவு வருகிறது என்பதை கணக்கிட்டு பார்த்த பின்னரே அது வங்கியாக இருந்தாலும் அல்லது தபால் நிலையமாக இருந்தாலும் சேமிப்பை தொடங்குகின்றனர். பொதுவாக வங்கிகளை கருத்தில் கொள்ளும் பொழுது வங்கிகளை விட தபால் நிலையத்தில் வட்டி அதிகம் கிடைப்பதால் தற்பொழுது அதிகளவு மக்கள் தபால் நிலையங்களில் உள்ள திட்டங்களில் இணைந்து பயன் பெற்று வருகின்றனர். தபால் நிலையத்தில் 5 ஆண்டுகள் சேமிப்பு திட்டங்கள் நிறைய உள்ளன. அவற்றில் ஒன்றுதான் மாதாந்திர வருமான திட்டம்.

இந்த திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் 1000 ரூபாய் முதல் 9 லட்சம் ரூபாய் வரை நம்முடைய டெபாசிட் பணத்தை வங்கி கணக்கில் செலுத்திக்கொள்ள முடியும். இந்த பணமானது நம் கைக்கு மீண்டும் வருவதற்கு 5 ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறது. இந்த 5 ஆண்டுகளில் இதற்கான வட்டியானது ஒவ்வொரு மாதமும் நம்முடைய வங்கி கணக்கில் வந்து சேரும் அப்படி கணக்கிட்டு பார்க்கும் பொழுது நாம் டெபாசிட் செய்த 9 லட்சம் ரூபாய்க்கு 3,33,000 வட்டியாக நமக்கு கிடைக்கிறது. இதற்கான வட்டி விகிதம் ஒவ்வொரு வருடத்திற்கும் 7.4% ஆக இருக்கிறது.

இந்த திட்டத்தில் இணைவதன் மூலம் பணத்தை ஒரு புறம் சேமிக்கவும் அந்த பணத்தின் மூலம் வரக்கூடிய வட்டியானது நம் வாழ்வில் ஏற்படக்கூடிய திடீர் பண தேவைகளை பூர்த்தி செய்வதற்கான முக்கிய வாய்ப்பாகவும் அமைகிறது.