Home Blog Page 338

மூட்டு வலி குறைய.. எலும்பு பலத்தை அதிகரிக்க நீங்கள் சாப்பிட வேண்டிய 10 உணவுகள்!!

0

உங்களுக்கு மூட்டு வலி தொந்தரவு நீண்ட வருடங்களாக இருக்கிறது என்று கவலைப்பட வேண்டாம்.சில ஆரோக்கிய உணவுகளை சாப்பிட்டு மூட்டு எலும்பின் வலிமையை அதிகரிக்கலாம்.

மூட்டு பகுதியில் வலி வர வயது முதுமை,கால்சியம் சத்து குறைபாடு,மூட்டில் அடிபடுதல் போன்ற பல காரணங்களால் இருக்கலாம்.இந்த மூட்டு வலி பிரச்சனைக்கு முடிவு கட்ட இந்த 10 உணவுகளை அவசியம் சாப்பிட வேண்டும்.

1)நெய்

பால் ஒரு கால்சியம் சத்து நிறைந்த பானமாகும்.இந்த பாலில் இருந்து கிடைக்கும் நெயை உருக்கி சூடான சாதத்தில் கலந்து சாப்பிட்டு வந்தால் மூட்டு வலிமை அதிகரிக்கும்.

2)பன்னீர்

பாலை திரித்து பன்னீர் என்ற உணவுப் பொருள் தயாரிக்கப்படுகிறது.இந்த பன்னீரில் சுவையான உணவுகள் செய்து சாப்பிட்டு மூட்டு வலிமையை அதிகரிக்கலாம்.

3)முளைக்கட்டிய பயிர்

பச்சை பயறு,கொண்டைக்கடலை போன்ற பயறுகளை முளைகட்டி தாளித்து சாப்பிட்டு வந்தால் மூட்டு எலும்பு வலிமை அதிகரிக்கும்.

4)முட்டை

தினமும் ஒரு முட்டையை வேகவைத்து சாப்பிட்டு வந்தால் மூட்டு எலும்பு வலிமை அதிகரிக்கும்.மூட்டுகள் பலம் பெற முட்டை உணவுகளை உட்கொள்ளலாம்.

5)பச்சை பட்டாணி

கால்சியம் சத்து நிறைந்த பச்சை பட்டாணியில் பொரியல்,குருமா,கிரேவி போன்ற சுவையான உணவுகள் செய்து சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி வராமல் இருக்கும்.

6)முருங்கை கீரை

கால்சியம்,இரும்பு போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகம் கொண்டிருக்கும் முருங்கை கீரையை வாரம் இரண்டுமுறை சாப்பிட்டு வந்தால் மூட்டு வலிமை அதிகரிக்கும்.

7)பிரண்டை

எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்க,மூட்டு வலியை தடுக்க பிரண்டை பொடியை சாப்பிடலாம்.பிரண்டை கஷாயம்,பிரண்டை துவையல் செய்து சாப்பிட்டு வந்தாலும் எலும்பு வலிமை அதிகரிக்கும்.

8)ராகி

சிறுதானியமான ராகியில் கால்சியம் சத்து அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.இந்த ராகி மாவை அவித்து புட்டாக சாப்பிடலாம்.ராகி களி,ராகி லட்டு செய்து சாப்பிட்டால் மூட்டு வலியே வராது.

9)கறிவேப்பிலை

தினமும் ஒரு தேக்கரண்டி கறிவேப்பிலை பொடியை தண்ணீரில் கலந்து குடித்தால் மூட்டு வலிமை அதிகரிக்கும்.

10)சுண்டைக்காய்

கசப்பு சுவை நிறைந்த சுண்டைக்காயில் கால்சியம் அதிகமாக இருக்கின்றது.இந்த சுண்டைக்காயை பொடித்து தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் மூட்டுகள் வலிமையாக இருக்கும்.

உங்கள் சிறுநீர் டார்க் மஞ்சள் கலரில் இருக்கா? இதற்கான காரணமும் எளிய தீர்வும்!!

0

உடலில் இருந்து வெளியேறும் கழிவுகளில் சிறுநீறும் ஒன்று.நம் உடல் ஆரோக்கியத்தை நாம் கழிக்கும் சிறுநீரை கொண்டு கணித்துவிடலாம்.சிறுநீர் வெளிர் மஞ்சள்,வெண்மை,அடர் மஞ்சள்,ஆரஞ்சு போன்ற நிறத்தில் வெளியேறுகிறது.

நம் உடலில் உள்ள இரத்தத்தில் இருக்கும் கழிவுகள் வடிக்கப்படப்பட்டு சிறுநீராக வெளியேறுகிறது.எல்லா நேரங்களிலும் நாம் கழிக்கும் சிறுநீர் ஒரே நிறத்தில் இருப்பதில்லை.சிலவகை சிறுநீர் நிறம் நம் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் அறிகுறியாக இருக்கலாம்.

எனவே நீங்கள் கழிக்கும் சிறுநீரின் நிறம் எப்படி இருக்கிறது என்பதை முதலில் கவனியுங்கள்.உங்கள் சிறுநீரின் நிறம் அடர் மஞ்சளாக இருந்தால் உடலில் தண்ணீர் சத்து குறைவாக இருக்கிறது என்று அர்த்தம்.உடல் சூடு,நீர்ச்சத்து குறைபாடு,அதிக நேரம் சிறுநீரை அடக்கி வைத்தல் போன்ற காரணங்களால் அடர் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறும்.அதேபோல் உடலில் வைட்டமின் பி அதிகமாக இருந்தாலும் அடர் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறும்.கோடை காலத்தில் பெரும்பாலானோருக்கு அடர் மஞ்சள் நிற சிறுநீர் வெளியேறும்.

சிறுநீரகத்தில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகமாக இருந்தால் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறும்.பழுப்பு நிறத்தில் சிறுநீர் வெளியேறுவது மாத்திரையின் விளைவு மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளின் அறிகுறியாக இருக்கலாம்.

பச்சை நிற சிறுநீர் கல்லீரல் சம்மந்தப்பட்ட பாதிப்புகளை குறிக்கிறது.சிறுநீரில் நுரை வருவது நோய் தொற்று பாதிப்பை உணர்த்துகிறது.கேரட்,பீட்ரூட் போன்ற கலரான உணவுகளை சாப்பிட்டால் சிறுநீரின் நிறம் சிவப்பு,ஆரஞ்சு போன்ற நிறத்தில் இருக்கும்.

உங்கள் சிறுநீர் நிறம் அடர்ந்த மஞ்சள் நிறத்தில் தொடர்ந்து வெளியேறினால் நீங்கள் அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டுமென்று அர்த்தம்.காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் குடிக்க வேண்டும்.குடிக்கும் நீரில் எலுமிச்சை சாறு சேர்த்துக் கொண்டால் சிறுநீரகக் கழிவுகள் முழுமையாக வெளியேறிவிடும்.

கோடையில் வீடுகளை நோக்கி வரும் பாம்புகள்..!! இதை செய்தால் வராது..!!

0

கோடைக்காலம் தொடங்கி விட்டாலே பாம்புகள் குடியிருப்புகளை நோக்கி வர ஆரம்பித்து விடும். தென்னிந்தியாவில் பாம்பு கடியால் அதிகம் பாதிக்கப்படுவதில் தமிழகம் தான் முதன்மை மாநிலமாக இருப்பதாக, அதிர்ச்சி தகவலையும் கூறுகிறார்கள் பாம்பு கடி ஆராய்ச்சி வல்லுநர்கள்.
அப்படி வீட்டுக்குள் பாம்பு வந்து விட்டால் வனத்துறை அல்லது தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும்.

அதே நேரத்தில் கோடை காலத்தில் எந்த மாதிரியான பாம்புகள் வீடுகளை நோக்கி வரும்? அப்படிப்பட்ட பாம்புகள் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்த விளக்கத்தை தற்போது காண்போம்.

இந்தியாவில் சுமார் 362 வகை பாம்புகளில் தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை, கிழக்கு தொடர்ச்சி மலை, சமவெளி என பல பகுதிகளில் 134 வகையான பாம்புகள் உலாவி வருவதாக ஊர்வனம் இயற்கை மற்றும் விலங்குகள் பாதுகாப்பு குழுவினர் கூறுகின்றனர்.

இதில் 86 வகை பாம்புகள் நஞ்சில்லாத பாம்புகள் எனவும், மீதமுள்ள 48 வகை பாம்புகள் மட்டுமே நஞ்சுள்ள பாம்புகள் எனவும் வகைப் படுத்தப்பட்டுள்ளன. இந்த 48 வகை நஞ்சுள்ள பாம்புகளில் 20 வகை பாம்புகள் ஆபத்து இல்லாதவை எனவும், மீதமுள்ள பாம்புகளில் 17 வகை பாம்புகள் தான் அதிகம் நஞ்சுள்ள பாம்புகள் எனவும் கூறப்படுகிறது.

இந்தியாவில் வருடத்துக்கு 10 லட்சம் பேர் பாம்பு கடிக்கு ஆளாகிறார்கள். இதில் 58 ஆயிரம் பேர் உயிர் இழக்கிறார்கள் எனக் கூறுகிறது ஐ. சி. எம். ஆர் எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம். இந்தியாவில் பாம்பு கடிக்கு ஆளாகும் 100 பேரில் 95 பேர் நஞ்சு இல்லாத பாம்புகளாலும், ஐந்து பேர் மட்டுமே Big Four எனப்படும் பெரியவகை நஞ்சுள்ள பாம்புகளால் பாதிக்கப்படுகிறார்கள் எனக் கூறப்படுகிறது.

குறிப்பாக கண்ணாடி விரியன், கட்டுவிரியன், நாகப்பாம்பு ஆகிய விஷத்தன்மை வாய்ந்த பாம்புகள் குடியிருப்புகளை ஒட்டியே வாழக்கூடியவை. சுருட்டை விரியன் எனும் அதீத நஞ்சுள்ள பாம்பு அதிக வெப்பம் உள்ள பாறைகள் நிறைந்த பகுதிகளில் தான் வாழும்.

இதனால் அதை ஒட்டி உள்ள மக்கள் சுருட்டை விரியன் பாம்பு கடித்து உயிரிழப்பது அதிகம். வழக்கமான காலங்களை விட கோடை காலங்களில் பாம்புகள் குடியிருப்புகளை நோக்கி ஏன் வருகின்றன? என்பதையும் பாம்பு ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.

அதாவது பறவைகள், பாலூட்டிகள் சூடான ரத்தப் பிராணிகள் என அழைக்கப்படுகின்றன. அதுவே மீன், தவளை, பல்லி, பாம்பு போன்ற ஊர்வன, நீர்வாழ் உயிரினங்கள், பூச்சிகள் மற்றும் பிற முதுகெலும்பற்ற உயிரினங்கள் குளிர் ரத்தப் பிராணிகள் என வகைப்படுத்தப்படுகின்றன.

இதனால் பாம்பானது கோடை வெப்பம் அதிகமாகும் பொழுது குளிர்ச்சியுள்ள, கதகதப்பான இடங்களை நோக்கி வர ஆரம்பிக்கிறது. இதில் கண்ணாடி விரியன், கட்டுவிரியன், நாகப்பாம்புகள் உள்ளிட்ட கொடிய நஞ்சுள்ள பாம்புகள் வீட்டிற்கு அருகிலேயே உயிர் வாழ்வதால், உடனே அவை வீட்டை நோக்கி வரும் என எச்சரிக்கிறார்கள்.

மேலும் சமவெளியில் வாழக்கூடிய சாரைப்பாம்பு, கொம்பேறி மூக்கன், தண்ணீர் பாம்புகளான காளியான்குட்டி, கண்டங்கண்டை, நீர்க்கோழி போன்றவை மண்ணுளிப் பாம்பு, ஓலை பாம்பு, புழு பாம்பு, எண்ணெய் பனையன், சிவப்பு மண்ணுளிப் பாம்பு, மோதிர வளையன், ஓடுகாலி பாம்பு, பச்சை பாம்பு என 24 வகை நஞ்சற்ற பாம்புகளும் கோடைகாலத்தில் குடியிருப்புகளை நோக்கி வருவதற்கான வாய்ப்பு அதிகம் எனவும் கூறுகின்றனர்.

அதுவும் கோடைகாலத்தில் முட்டையிலிருந்து பாம்புகள் வெளிவரும் காலம் என்பதால், இந்த காலகட்டத்தில் வீட்டை நோக்கி குட்டி பாம்புகள் வரும் என பீதியை கிளப்புகிறார்கள்.

பாம்புகள் முக்கிய உணவாக தவளைகள் மற்றும் எலிகளை தான் சாப்பிடும். தவளைகள் வாழக்கூடிய குளம், குட்டைகள் பெரும்பாலும் ஆக்கிரமிப்புகளால் அழிக்கப்பட்டு விட்டன. அப்படியே இருந்தாலும் கோடை காலங்களில் வறட்சியாக இருப்பதால் தவளைகளும் இருக்காது. இதனால் பாம்புகளின் அடுத்த டார்கெட் எலிகள்தான்.

எலிகள் எங்கே இருக்கும்? உணவு குப்பைகள் அதிகமாக போடப்பட்டு இருந்தால் அங்கே தானே இருக்கும்? ஆக உணவு குப்பைகள் போடப்பட்ட இடத்திற்கு எலியை தேடி பாம்புகள் கொலை பசியோடு வர ஆரம்பிக்கும். அதனால் குடியிருப்புகளை ஒட்டி உணவு குப்பைகளை போடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக காற்றுக்காக மக்கள் பலரும் தரையில் படுப்பது வழக்கம். இது போன்ற நேரங்களில் கொசு வலை போன்ற பாதுகாப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். சில பாம்புகள் கதவு வழியாக நைசாக உள்ளே வரக்கூடும். சமையலறை, பாத்திரம் கழுவும் தொட்டிகள், குழாய்கள் வழியாகவும் வரும். எனவே கதவுகளை மூடி எச்சரிக்கையாக இருந்து கொள்ள வேண்டும்.

வீட்டிற்கு வெளியே ஷூக்களை வைப்பதை தவிர்த்து, ஏதாவது ஆணி போன்ற அமைப்புகளில் தொங்கவிடுவது பாதுகாப்பானது. காரணம் ஷுவுக்குள் சிறு பாம்புகள் உள்ளே புகுந்து ஒளிந்து கொள்ளும். உதறினால் கூட வெளியில் வராது.

இரவில் பாம்புகள் வெளியில் சாலைகளில் உலாவிக் கொண்டிருப்பதால், டார்ச் லைட் இல்லாமல் வெளியில் செல்லக் கூடாது எனவும் எச்சரிக்கிறார்கள்.

கோடையில் வெப்பம் கொஞ்சம் குறைவாக இருக்கும் கட்டிட இடுக்குகள், அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் செங்கல்களிலும் பாம்புகள் அண்டி இருக்கும். வீடுகளை சுற்றி விறகுகள், அட்டைப் பெட்டிகள், தேவையற்ற பொருட்களை குவிப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

குறிப்பாக சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். வீடுகளில் ஓட்டை போன்றவை இருந்தால் அதனை அடைத்து வைக்க வேண்டும். மேலும் வீட்டின் கழிவு நீர் குழாய்களை வலை போன்ற அமைப்புகளில் மூலம் மூடி வைக்க வேண்டும். இரவு நேரங்களில் வீடுகளை சுற்றி வெளிச்சம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

வீட்டிற்கு வெளியே குளியலறை, கழிவறை போன்றவை இருந்தால் அவற்றை சுத்தமாகவும், வெளிச்சத்தோடும் வைத்திருக்க வேண்டும். இதனையும் மீறி வீட்டிற்குள் பாம்புகள் வந்துவிட்டால்
044-222 00 335 என்ற உதவி எண்ணை அழைக்க வேண்டும்.

எச்சரிக்கை.. இனி இந்த விஷயம் தெரிந்து கொள்ளாமல் தயிர் சாப்பிடாதீங்க!!

0

இயற்கையாகவே அதிக ஊட்டச்சத்துக்கள் கொண்டுள்ள ஒரு உணவுப் பொருள் தயாராகும்.குளிர்ச்சி நிறைந்த தயிரில் லாக்டிக் அமிலம் அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.தயிர் உணவுகளை சாப்பிடுவதால் நமது உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது.இருப்பினும் சில வகை உணவுகளுடன் தயிரை சேர்த்து சாப்பிட்டால் அவை அதிக பக்க விளைவுகளை ஏற்படுத்திவிடும்.

தயிரில் கால்சியம்,மெக்னீசியம்,வைட்டமின்கள்,பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகளவு நிறைந்திருக்கிறது.தயிர் ஒரு புரோபயாட்டிக் உணவாகும்.தயிர் உணவுகளை சாப்பிட்டால் செரிமானப் பிரச்சனை நீங்கும்.குடல் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் குணமாக தயிர் உணவுகளை சாப்பிடலாம்.இருந்தாலும் நாம் தயிரை சிலவகை காமினேஷனுடன் சேர்த்து சாப்பிட்டால் நமக்கு பாதகமாகிவிடும்.

தயிருடன் சேர்த்து சாப்பிடக் கூடாத உணவுகள்:

1)வெங்காயம்

தயிருடன் வெங்காயம் சேர்த்து சாப்பிடும் பழக்கத்தை நிறுத்துங்கள்.தயிரும்,வெங்காயமும் இயற்கையாக குளிர்ச்சி நிறைந்த பொருளாகும்.இவை இரண்டையும் ஒன்றாக சேர்த்து சாப்பிட்டால் அலர்ஜி ஏற்பட்டுவிடும்.தோல் அலர்ஜி,தோல் அரிப்பு போன்ற பாதிப்புகள் தயிர் வெங்காயம் சாப்பிடுவதால் ஏற்படும்.

2)மீன்

தயிருடன் மீன் சேர்த்து சாப்பிட்டால் வெண்புள்ளி நோய் பாதிப்பு ஏற்படும்.தயிருடன் மீன் சேர்த்து சாப்பிட்டால் செரிமானப் பிரச்சனை ஏற்படும்.வயிறு சம்மந்தபட்ட பிரச்சனைகள் மீன் தயிர் சாப்பிடுவதால் ஏற்படும்.எனவே இனி மீன்,தயிர் சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

3)பால் மற்றும் பால் பொருட்கள்

தயிர் பால் பொருளாக இருந்தாலும் பால்,நெய் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் பக்க விளைவுகள் ஏற்பட்டுவிடும்.தயிருடன் பால் பொருட்களை சேர்த்து சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு,வயிறு உப்பசம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

4)உளுந்து பருப்பு

தயிருடன் உளுந்து உணவுகளை சேர்த்து சாப்பிட்டால் வயிறு உப்பசம்,வயிறு வீக்கம்,வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகள் ஏற்படும்.தயிருடன் உளுந்து உணவு சாப்பிட்டால் செரிமானப் பிரச்சனை ஏற்படும்.

5)மாம்பழம்

தயிருடன் மாம்பழம் சேர்த்து சாப்பிடக் கூடாது.இவை இரண்டையும் சேர்த்து சாப்பிட்டால் செரிமானப் பிரச்சனை அதிகரிக்கும்.

உடலில் இருக்கும் இந்த கட்டி கேன்சருக்கான அறிகுறியா? இத்தனை வகை கட்டிகள் இருக்கா?

0

நமது தோலில் புடித்தது போன்ற கட்டிகள்,வலியுடன் வரும் கட்டிகள் என்று பல விதமான கட்டிகள் உருவாகிறது.இந்த கட்டிகளில் சிலவகை ஆபத்தற்றவையாக இருக்கிறது.சிலவகை ஆபத்தான கட்டிகளாக உள்ளது.

மார்பு கட்டி

பெரும்பாலான பெண்கள் மார்பு பகுதியில் கட்டி பிரச்சனையை அனுபவிக்கின்றனர்.இது பெரும்பாலும் புற்றுநோய் கட்டியாகதான் கண்டறியப்படுகிறது.பெண்களால் இந்த கட்டி பாதிப்பை ஆரம்ப நிலையில் கண்டறிய முடிவதில்லை.கிட்டத்தட்ட 40% அளவு முற்றிய பிறகுதான் இந்த மார்பக கட்டி கண்டறியப்படுகிறது.

இந்த கட்டிகள் மார்பு புற்றுநோய் மாறாமல் இருக்க உடனடி மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.இந்த மார்பு கட்டி வலி மற்றும் வீக்கத்தை உண்டாக்கும்.குழந்தை பெற்ற பெண்களுக்கு இந்த மார்பு கட்டி பிரச்சனை அதிகமாக இருக்கிறது.

கொழுப்பு கட்டி

இந்த வகை கட்டி உருவானால் வலி ஏற்படாது.இது உடலில் முட்டை போன்று ஆங்காங்கே தென்படும்.கொழுப்புகள் ஒன்று சேர்ந்து கட்டிகளாக மாறுகிறது.இந்த கட்டிகள் அக்குள்,முதுகு,கை கால்,வயிறு போன்ற இடங்களில் அதிகமாக காணப்படுகிறது.இந்த கட்டிகள் ஆபத்தை ஏற்படுத்தாது என்றாலும் சிகிச்சை மூலம் சரி செய்து கொள்வது நல்லது.

நிணநீர் கட்டிகள்

நமது உடலில் உள்ள நிணநீர் முனைகளில் சிறிய கட்டிகள் உருவாகுகிறது.இது அக்குள்,இடுப்பு,கழுத்து போன்ற பகுதிகளில் அதிகமாக காணப்படுகிறது.

நீர் கட்டிகள்

இந்த கட்டிகள் தோலில் சீழ் அல்லது திரவங்களால் உருவாகிறது.இந்த கட்டி வலி மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும்.உடலில் வரும் எல்லா கட்டிகளும் புற்றுநோய் கட்டிகள் என்று சொல்ல முடியாது.புற்றுநோய் இல்லாத கட்டிகள் நம் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தாது.

புற்றுநோய் கட்டிகள் தடித்து உடலில் பிற இடங்களுக்கும் வேகமாக பரவும்.உடலில் கட்டிகள் இருந்து திடீர் எடை குறைதல்,அதீத உடல் சோர்வு,தோல் நிறத்தில் மாற்றம்,குடல் இயக்கத்தில் மாற்றம் போன்றவை ஏற்பட்டால் அது புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்.இந்த அறிகுறிகளுடன் கட்டிகள் தென்பட்டால் நீங்கள் தாமதம் செய்யாமல் மருத்துவரை அணுகி தீர்வு காண வேண்டும்.

வீடுகளில் ஆஞ்சநேயர் படத்தை வைத்து வழிபடலாமா..?? உங்கள் சந்தேகத்திற்கான விளக்கம் இதோ..!!

0

கேட்டவருக்கு கேட்ட வரத்தை வாரி வழங்கக் கூடியவர் ஆஞ்சநேயர். ராமாயணம் என்ற மிகப்பெரிய அற்புதமான காவியம் நிறைவேறுவதற்கு காரணமும் இவர்தான். ஆஞ்சநேயரை நினைக்காமல், அவரை வணங்காமல் இந்த உலகில் எவரும் இருக்க மாட்டார்கள். இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆஞ்சநேயரை நமது வீடுகளில் வைத்து வழிபடலாமா? அல்லது கூடாதா? என்ற சந்தேகம் நம்முள் பலருக்கும் இருக்கும் அதற்கான விளக்கத்தை தற்போது காண்போம்.

ஆஞ்சநேயர் என்பவர் பிரம்மச்சாரி என்பதால் தான் அவரை நமது வீடுகளில் வைத்து வழிபடலாமா என்ற சந்தேகம் மக்களுக்கு உருவாகிறது. ஆனால் ஆஞ்சநேயர் படத்தை தாராளமாக நமது வீடுகளில் வைத்து வழிபடலாம். அவ்வாறு நமது வீடுகளில் ஆஞ்சநேயர் படத்தை வைத்து வழிபடும் பொழுது சில குறிப்பிட்ட விஷயங்களை மட்டும் கடைபிடிக்க வேண்டும் என்பது அவசியம்.

பூஜை அறை என்பது நமது வீடுகளில் தனியாக இருந்தால் ஆஞ்சநேயர் படத்தை வைத்து வழிபடுவதில் எந்த ஒரு பிரச்சனையும் கிடையாது. திறந்த நிலையில் உள்ள பூஜை அறையில் தான் வைத்து வழிபடக் கூடாது. எனவே திறந்த நிலையில் உள்ள பூஜை அறைக்கு ஏதேனும் ஒரு திரையை போட்டு தான் ஆஞ்சநேயர் படத்தை வைத்து வழிபட வேண்டும்.

ஏனென்றால் பூஜை அறை என்பது திறந்த நிலையில் இருந்தால், நமது குடும்பத்தில் உள்ள அனைவரும் அந்த படத்திற்கு முன்பாக தான் சென்று வருவோம். அது மட்டுமல்லாமல் நாம் சுத்தபத்தமாக இருந்தாலும் கூட, நமது வீட்டிற்கு வருபவர்கள் சுத்தபத்தமாக இருப்பார்களா என்பது நமக்கு தெரியாது. எனவே பூஜை அறை என்பதை எப்பொழுதும் ஒரு திரையைப் போட்டு மூடி வைத்திருக்க வேண்டும்.

ஆஞ்சநேயர் படத்தை நமது வீடுகளில் வைத்திருந்தால், ஆஞ்சநேயருக்கு தினமும் ஏதேனும் ஒரு நெய்வேத்தியம் என்பதை கண்டிப்பாக வைக்க வேண்டும். நாம் செய்யக்கூடிய சாதத்தில் சிறிதளவு நெய்விட்டு வைக்கலாம் அல்லது ஒரு வாழைப்பழம், கற்கண்டு, பேரிச்சம்பழம், முந்திரிப் பருப்பு இது போன்ற சாதாரண பொருட்களையும் நெய்வேத்தியமாக வைக்கலாம்.

ஆஞ்சநேயர் படத்தை நமது வீடுகளில் வைத்தால் நெய்வேத்தியம் என்பதும், சுத்த பத்தம் என்பதும் கண்டிப்பான முறையில் இருக்க வேண்டும். ஒரு சிலர் இதனை கடைபிடிக்க மாட்டார்கள். எனவேதான் ஆஞ்சநேயர் படத்தை வீடுகளில் வைக்க கூடாது என கூறி விடுகின்றனர்.

அதேபோன்று இவரை வழிபடும் பொழுது துளசி மாலை போடலாம். ராமாயணம், சுந்தரகாண்டம் இது போன்றவைகளை படிக்கலாம். ஏனென்றால் இவை அனைத்தும் ஆஞ்சநேயருக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. சனிக்கிழமை நாட்களில் அவருக்கு மிகவும் பிடித்த வடை, வெண்ணைய் இது போன்ற உணவுகளை வைக்கலாம்.

உண்மையான பக்தியுடனும், அதிகப்படியான சுத்தபத்தத்துடனும் ஆஞ்சநேயர் படத்தை நமது வீடுகளில் தாராளமாக வைத்து வழிபடலாம். எனவே ஆஞ்சநேயர் பக்தர்கள் இது போன்ற முறைகளை கடைப்பிடித்து, உங்களது வீடுகளில் ஆஞ்சநேயர் படத்தை வைத்து தினமும் வழிபடலாம்.

கோடை காலத்திலும் பூக்களை ஒரு வாரத்திற்கு வாடாமல் வைத்திருக்க வேண்டுமா..?? இதோ அதற்கான டிப்ஸ்..!!

0

தினமும் பூக்களை வாங்க இயலாதவர்கள் வாரத்திற்கு ஒரு முறை பூக்களை வாங்கி வைத்துக் கொள்வார்கள். அவ்வாறு வாங்கி கட்டி வைத்திருக்கும் பூக்கள் இரண்டு நாட்கள் ஆனதும், ஒன்று வாடிவிடும் இல்லையென்றால் அழுகத் தொடங்கி விடும். ஆனால் பூக்களை வாட விடாமல் ஒரு வாரம் ஆனாலும் பிரஷ் ஆகவே வைத்துக் கொள்ள முடியும். அதற்கான வழியை தான் தற்போது காணப் போகிறோம்.

1.முதலில் கட்டி வைத்த பூவை அழகாக சுருட்டி அதை ஒரு வாழை இலையில் வைத்து நன்றாக மடித்துக் கொள்ளுங்கள். முக்கியமாக வாழை இலையில் பூவை வைத்து மடிக்கும் போது அழுத்தம் கொடுக்காமல் லேசாக பேக் செய்ய வேண்டும். பிறகு ஒரு சில்வர் டப்பாவில் அதை வைத்து காற்று புகாதபடி மூடி போட்டு ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும். இப்படி சேமித்தால் ஒரு வாரம் ஆனாலும் மல்லிகை பூ வாடாமல் மொட்டாக இருக்கும்.

2.ஒருவேளை உங்களுடைய வீட்டில் வாழை இலை இல்லை என்றால், ஒரு வெள்ளை காகிதத்தில் பூவை வைத்து மெதுவாக சுருட்டி பேக் செய்ய வேண்டும். பிறகு ஒரு காட்டன் துணி பையை தண்ணீரில் நனைத்து பிழிந்து அந்த பைக்குள் பூ வைத்த காகிதத்தை லேசாக சுருட்டி வைத்து, பின் சில்வர் டப்பாவில் வைத்து மூடி, பிரிட்ஜில் வைக்க வேண்டும். மல்லிகை பூவை இப்படி சேமித்தால் நீண்ட நாட்கள் பூ வாடாமல் இருக்கும்.

3.உங்கள் வீட்டில் ஃப்ரிட்ஜ் இல்லை என்றால் ஒரு அகலமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதன் மேல் வாழை இலையை போட வேண்டும். பிறகு அதன் மேல் கட்டிய பூவை வைக்கவும். பின் ஈரமான காட்டன் துணியை நனைத்து பிழிந்து அந்த பாத்திரத்தை மூடி, சில்வர் தட்டை அதன் மேல் கவிழ்த்து வைத்தால் பூ ஒரு வாரம் ஆனாலும் வாடாமல் பிரஷ்ஷாக இருக்கும். வாழை இலையை தண்ணீரில் மிதக்க வைக்கும் போது வாழை இலைக்குள் தண்ணீர் வந்து விடக்கூடாது என்பதை பார்த்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் காட்டன் துணியை பயன்படுத்தும் போது அது காய்ந்து விட்டால், மீண்டும் மீண்டும் நனைத்து வைக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். மேலே சொன்ன குறிப்புகளை நீங்கள் பின்பற்றினால் நிச்சயம் மல்லிகை பூ மட்டுமல்லாமல் அனைத்து விதமான பூக்களும் வாடாமல் பிரஷ்ஷாக இருக்கும்.

இனி புற்றுநோய் பற்றிய கவலை வேண்டாம்!! கேன்சருக்கு மருந்து கண்டுபிடிப்பு!!

0

உலகின் கொடிய நோயிகளில் புற்றுநோயும் ஒன்று.இந்த புற்றுநோய் பாதிப்பால் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மக்கள் இறக்கின்றனர்.நுரையீரல் புற்றுநோய்,கணைய புற்றுநோய்,வாய் புற்றுநோய்,கருப்பை புற்றுநோய் என்று புற்றுநோயில் ஏராளமான வகைகள் உள்ளன.புற்றுநோய் புதிய நோய் இல்லையென்றாலும் அதை முழுமையாக குணப்படுத்தும் அதிகாரப்பூர்வ மருந்து ஊசி இல்லாத நிலைதான் நீடித்தது.

ஆனால் தற்பொழுது புற்றுநோய்க்கு பல மருந்துகள் கண்டு பிடிக்கப்பட்டு வருகிறது.அதில் ஒன்றுதான் கார்-டி-செல் சிகிச்சை.இது புற்றுநோய் செல்களுக்கு எதிராக போராட உதவுகிறது.இந்த கார்-டி-செல்கள் உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவூட்டுகிறது.

இந்த டி செல்கள் நோய் பாதிப்பு ஏற்பட்டவர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்டு ஆய்வகத்தில் ஆய்வின் மூலம் மாற்றப்படுகிறது.இந்த கார்-டி-செல்கள் இரத்தப்புற்று நோய் பாதிப்பை சரி செய்ய உதவுகிறது.இந்த கார் டி செல் சிகிச்சை நல்ல முன்னேற்றத்தை கொடுக்கிறது.

இந்த கார்-டி-செல் சிகிச்சை கடந்த 2013 ஆம் ஆண்டு மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பால் அங்கீகாரம் செய்யப்பட்டது.இந்த கார்-டி-செல் சிகிச்சை புற்றுநோய்க்கு எதிராக செயல்படுவதால் இதை மருத்துவத் துறையில் பயன்படுத்துகின்றனர்.

இருப்பினும் கார்-டி-செல் சிகிச்சை பற்றிய பக்கவிளைவுகள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.கார்-டி-செல் சிகிச்சையால் சிலருக்கு மூச்சுத் திணறல்,குறை இரத்த அழுத்தம்,இதய நோய்,காய்ச்சல்,நுரையீரல் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும்.அதேபோல் குழப்பம்,நடுக்கம்,பேசுவதில் சிரமம்,சுய நினைவு இழத்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

கோவிலுக்கு போகாதீங்க..!! சனி பகவானுக்கு அர்ச்சனை பண்ணாதீங்க..!! ஜோதிடர் கூறிய ரகசியம்..!!

0

ஒருவருக்கு தெய்வத்தின் பலம் என்பது நன்றாக இருந்தால் அனைத்து கிரகங்களும் அவர்களுக்கு துணையாக இருக்கும். மனிதர்களாகிய நாம் தெய்வங்களின் கட்டுப்பாட்டில் இருப்பதில்லை, நவகிரகங்களின் கட்டுப்பாட்டுக்குள் தான் நாம் இருக்கிறோம். அதாவது தெய்வமானது நவகிரகங்களின் கைகளில் மனிதர்களை ஒப்படைத்து விட்டது.

எனவே நவகிரகங்களின் தலைவராக இருக்கக்கூடிய தெய்வத்தின் அருள் நமக்கு கிடைத்து விட்டால், நவகிரகங்கள் நமக்கு சாதகமாகவே அமையும். சனிப்பெயர்ச்சி என்ற ஒன்று உள்ளதால் தான், இந்த கிரகங்களை குறித்து நாம் அனைவரும் அறிந்து வைத்திருக்கிறோம். இந்த சனிப்பெயர்ச்சி என்பது அனைவருக்கும் நல்ல விதமாகத்தான் இருக்கும்.

இதில் ரிஷபம், கடகம், துலாம், மகரம் ஆகிய ராசிகளுக்கு இந்த சனிப்பெயர்ச்சியானது மிகவும் சிறப்பாக இருக்கும். இவற்றுள் மேஷம் ராசியினருக்கு யூகங்களை வகுக்கக் கூடிய சக்திகளை கொடுப்பார். ரிஷபம் ராசியினர் கெட்டிக்காரத்தனமாக இருப்பீர்கள். மிதுனம் ராசியினர் உங்களுடைய பலத்தை நிரூபிப்பீர்கள்.

கடகம் ராசியினர் நீண்ட நாட்களுக்குப் பிறகு நிம்மதியாக இருப்பீர்கள். சிம்மம் ராசியினருக்கு சனிபகவான் பல பாடங்களை கற்றுக் கொடுத்துவிட்டார். எனவே இனிவரும் காலங்களில் நீங்களாகவே அனைத்திலும் வெற்றி காண்பீர்கள். கன்னி ராசியினர் உங்களது வார்த்தைகளால் வசிய ஆற்றலை பெறுவீர்கள்.

துலாம் ராசியினர் கடன் பிரச்சனைகளை தீர்ப்பீர்கள். விருச்சிகம் ராசியினர் இந்த உலகத்தை புரிந்து கொண்டு நடந்து கொள்வீர்கள். தனுசு ராசியினர் இடமாற்றம் அடைவீர்கள். மகரம் ராசியினர் முன்னேற்றம் அடைவீர்கள்.
கும்ப ராசியினர் குழப்பங்களை தீர்ப்பீர்கள். மீனம் ராசியினர் மன சஞ்சலங்கள் இல்லாமல் வாழ்க்கையை தொடங்க வேண்டும் என்பது கட்டாயம். சிவபெருமானை வழிபடுவது என்பது அனைத்து ராசியினருக்கும் சிறப்பாக இருக்கும்.

மீனம், மேஷம், கும்பம், மிதுனம், சிம்மம், கன்னி, தனுசு ஆகிய ராசிக்காரர்கள் திருத்தலங்களுக்குச் சென்று சனி பகவானுக்கு அர்ச்சனை செய்யக் கூடாது. இந்த ராசிக்காரர்கள் அனைவரும் சிவபெருமான், விநாயகர், அனுமான் ஆகிய தெய்வங்களை வழிபட்டால் மேலும் பல நன்மைகளை தேடி தரும்.

ஏழரை சனி, அஷ்டம சனி, கண்டக சனி இது போன்ற சனிகளை பார்ப்பதை தவிர்த்துக் கொள்வது நல்லது. சனிப்பெயர்ச்சி என்பது அனைவரது வாழ்க்கையையும் உயர்த்த மட்டுமே நடைபெறும். அதாவது ஒரு சிலருக்கு பலவிதமான பாடங்களை கற்றுக் கொடுத்து அவர்களது வாழ்க்கையை முன்னேற்ற உதவும்.

கண்டக சனி, அஷ்டம சனி என இந்த தோஷங்களை நீக்க பரிகார ஆலயங்களுக்கு செல்வதை மேலே கூறப்பட்ட ராசிகள் தவிர்த்துக் கொள்வது நல்லது. ஏனென்றால் இது போன்ற சமயங்களில் சனிபகவான் கோவிலுக்கு இவர்கள் செல்வது, எனக்கு அஷ்டம சனி இருக்கிறது, கண்டக சனி இருக்கிறது என்று நாமாகவே சென்று சனிபகவானிடம் கூறுவது போல இருக்கும்.

சனி பகவானின் பரிகார ஆலயங்களுக்கு சென்றாலும் அங்கு உள்ள மற்ற தெய்வங்களான தர்பாரீஸ்வரர், விநாயகர் இது போன்ற தெய்வங்களை எவ்வாறு வணங்குகிறோமோ, அதே போன்று சனி பகவானையும் வணங்கி விட்டு வந்து விட வேண்டும். தோஷங்களை நீக்குவதற்காக, பரிகாரங்களை செய்வதற்காக என சனி பகவான் கோவிலுக்கு மேல் கூறிய ராசிக்காரர்கள் செல்லக் கூடாது.

ரமலான் நோம்பு இருப்பவர்களுக்கு இந்த பிரச்சனைகள் வரலாம்!! ஒருமாதம் பகல் நேரத்தில் சாப்பிடலாம் இருந்தால் என்னாகும்?

0

இஸ்லாமியர்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகை ரமலான்(ரம்ஜான்).இந்த ரமலான் பண்டிகைக்கு தொடர்ந்து ஒரு மாத காலம் வரை விரதம் அதாவது நோம்பு இருக்கும் பழக்கத்தை இஸ்லாமியர்கள் கடைபிடிக்கின்றனர்.இதனால் உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகிறது.

அதிக நாட்கள் உண்ணாவிரதம் இருப்பதால் உடல் நலக் கோளாறு,தூக்கமின்மை போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.நோம்பு இருப்பவர்களுக்கு நீர்ச்சத்து குறைபாடு,கண் வறட்சி,குடல் தமந்தப்பட்ட பிரச்சனை,உயர் இரத்த அழுத்தம்,தலைவலி போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

ரமலான் நோம்பு என்பது பகல் நேரத்தில் உணவு தண்ணீர் குடிக்காமல் இருப்பதாகும்.மாலை நேரத்தில் தொழுகை முடிந்த பின்னர் உணவு எடுத்துக் கொள்கின்றனர்.உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள இளநீர்,பலசரக்கு பருகலாம்.

மூலிகை தேநீர் செய்து பருகலாம்.அதிக சர்க்கரை பானங்கள் உடலில் நீரிழப்பு ஏற்படுத்துவதோடு இரத்த சர்க்கரை அளவை அதிகரித்துவிடும்.ரமலான் காலத்தில் நோம்பு இருப்பதால் இரைப்பை புண் பிரச்சனை ஏற்படும்.இதனால் மாலை நேரத்தில் எண்ணையில் வறுத்த,பொரித்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.இதனால் குடல் ஆரோக்கியம் முழுமையாக பாதிக்கப்பட்டுவிடும்.

செரிமானப் பிரச்சனை,ஏப்பம்,வயிறு வீக்கம்,வயிற்றுப்புண் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.ரமலான் நோம்பு இருக்கும் பொழுது கண் வறட்சி ஏற்படும்.அதேபோல் ஒற்றைத் தலைவலி போன்ற பாதிப்புகள் ஏற்படும்.ரமலான் நோம்பு முடிந்த பிறகு மீண்டும் எப்பொழுதும் போல் பகல் நேர உணவுமுறையை பின்பற்றும் பொழுது உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகிறது.

அல்சர்,வயிற்றுப்புண்,உடல் எடை குறைதல்,உடல் சோர்வு,இரத்த சிவப்பணுக்களில் மாற்றம் என்று பல பிரச்சனைகள் உடலில் ஏற்படுகிறது.அதேபோல் சர்க்கரை நோயாளிகள்,உயர் இரத்த அழுத்தப் பிரச்சனை இருப்பவர்களுக்கு பல்வேறு உடல் நல பாதிப்புகள் ஏற்படுகிறது.

எனவே ரமலான் நோம்பு முடிந்த பிறகு உடலை நேரேற்றத்துடன் வைத்துக் கொள்ள வேண்டும்.புரோபயாட்டிக் நிறைந்த தயிர் உணவுகளை உட்கொள்ள வேண்டும்.தயிரில் புரோபயாட்டிக் அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.

சியா,சப்ஜா விதைகளை அதிகமாக சாப்பிடலாம்.இதனால் குடல் ஆரோக்கியம் மேம்படும்.நல்ல தூக்கத்தை அனுபவிக்க வேண்டும்.நடைபயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.காய்கறிகளை பாதியாக வேகவைத்து சாலட் போன்று சாப்பிடலாம்.நோம்பு நேரத்தில் ஏற்பட்ட உடல் சோர்வு மற்றும் பாதிப்புகளில் இருந்து மீண்டு பழைய நிலைக்கு வர இதுபோன்ற செயல்களை தொடர்ந்து செய்ய வேண்டும்.ரமலான் நோம்பு அதிக நன்மைகளை வழங்குகிறது என்றாலும் சில உடல் நலப் பிரச்சனைகள் இருப்பவர்கள் நோம்பு முடித்த பின்னர் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் விஷயங்களை செய்ய வேண்டும்.