Home Blog Page 339

குலதெய்வத்தை ஒருமுறை இப்படி வணங்கி பாருங்கள்..!! தீராத பிரச்சனைகளும் தீரும்..!!

0

இந்த உலகில் உள்ள அனைவருக்கும் ஏதேனும் ஒரு பிரச்சனை என்பது கண்டிப்பாக இருக்கும். அது கடன் பிரச்சனை, வறுமை, திருமண தடை, வேலையின்மை, குழந்தை பாக்கியம் இன்மை, நிம்மதியின்மை இது போன்ற பல்வேறு பிரச்சனைகள் அனைத்து மனிதர்களுக்கும் உண்டு. இந்த உலகில் பிரச்சனை இல்லாத மனிதர்களே கிடையாது.

இதுபோன்ற எந்தவித தீராத பிரச்சனைகளாக இருந்தாலும் ஒரு எளிய வழிபாட்டை செய்வதன் மூலம், தீராத பிரச்சனைகளையும் தீர்த்து விடலாம். இந்த வழிபாட்டை நீங்கள் செய்த ஒரு நாளில் அதற்கான பலனை காண முடியும்.

ஒரு குடும்பத்திற்கு முழு முதல் கடவுளாக திகழ்வது அவர்களது குலதெய்வம் மட்டுமே. ஒருவர் பக்தி என்றால் என்ன என்பது குறித்து அறிவதற்கு முன்பாகவே, அதாவது சிறு வயதிலேயே அவர்களது குலதெய்வ கோவிலுக்கு சென்றிருப்பார்கள். அவர்களுக்கு மொட்டை அடித்து காது குத்துவது இது போன்ற விசேஷங்கள் அங்கு நடைபெற்றிருக்கும்.

யார் ஒருவர் அவரது குலதெய்வத்தை சரியான முறையில் தொடர்ந்து வழிபட்டு வருகிறார்களோ, அவர்களுக்கு அத்தனை கிரகங்கள் மற்றும் தெய்வங்களின் ஆசியும் கிடைக்கும் என்பது உறுதி. குலதெய்வத்திற்கு பெரிய பூஜையையோ, வழிபாட்டையோ, தான தர்மத்தையும் செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை. குலதெய்வத்தை மறவாமல் சரியான முறையில் வழிபட்டாலே போதும் அனைத்து விதமான நன்மைகளும் கிடைத்துவிடும்.

உங்களுடைய குலதெய்வம் ஆண் தெய்வமாக இருந்தால் அந்த குலதெய்வ கோவிலுக்கு அமாவாசை நாட்களில் செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும் பொழுது ஒரு வாழை இலை மற்றும் 9 தேங்காய் கொண்டு செல்ல வேண்டும். நாம் கொண்டு சென்ற அந்த 9 தேங்காயையும் உடைத்து, வாழை இலையில் பச்சை அரிசியை நிரப்பி கொண்டு அந்த உடைத்து தேங்காயை வைத்து கொள்ள வேண்டும்.

பிறகு அதில் சுத்தமான பசு நெய்யை ஊற்றி, திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். தீபத்தை ஏற்றி உங்களது குலதெய்வத்தை மனதார நினைத்து உங்களது பிரச்சனைகளை கூறி, குல தெய்வத்தின் உதவியை கேட்க வேண்டும். அதன் பிறகு உங்களால் முடிந்த யாரேனும் ஒருவருக்காவது அல்லது ஏதேனும் ஒரு வாயில்லா ஜீவனுக்காவது அன்னதானம் செய்ய வேண்டும்.

உங்களது குலதெய்வம் பெண் தெய்வமாக இருந்தால் பௌர்ணமி நாட்களில் சென்று, இதே போன்று ஒன்பது தேங்காயை உடைத்து வாழை இலையில் வைத்து, தீபம் ஏற்றி வழிபாட்டினை செய்ய வேண்டும். அதேபோன்று நீங்கள் எப்பொழுது குலதெய்வ கோவிலுக்கு சென்றாலும், கோவிலுக்கு தேவையான நல்லெண்ணெய், சர்க்கரை பொங்கலுக்கு தேவையான பொருட்கள் அதாவது வெல்லம் ஆகியவற்றை வாங்கி கொடுத்தால் மிகவும் சிறப்பு.

குலதெய்வ கோவிலுக்கு சென்று இதுபோன்று ஒருமுறை உங்களது வேண்டுதல்களை கூறி வழிபட்டு வந்தால் போதும், நீங்கள் வேண்டியது கண்டிப்பாக நடந்து முடியும் என்பது உறுதி. குலதெய்வ கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டில் இருந்தும், இந்த வழிபாட்டை இதே முறையில் செய்து கொள்ளலாம்.

ஆனால் அதற்கான பலன் கிடைக்க சற்று தாமதம் ஆகும். எனவே முடிந்த அளவிற்கு உங்களது குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபடுவது என்பது சிறப்பு. உங்களது குலதெய்வ கோவிலின் மண்ணை நீங்கள் மிதித்தாலே போதும், நவகிரகங்கள் மற்றும் மற்ற தெய்வங்களின் ஆசியும் உங்களுக்கு கிடைத்துவிடும்.

உங்களது குலதெய்வத்தை தவிர்த்து மற்ற எந்த தெய்வத்தை பலமுறை சென்று வணங்கினாலும் அதில் பெரிய பலன்கள் எதுவும் கிடைக்காது. அதாவது முதலில் குலதெய்வத்தின் அருள் உங்களுக்கு இருந்தால் மட்டுமே மற்ற தெய்வங்களின் அருள் உங்களுக்கு கிடைக்கும்.

யாருக்கு அலர்ஜி வரும்? ஒவ்வாமை ஏற்படுத்தும் உணவுகளை சாப்பிட்டால் என்னாகும்?

0

நமது உடலில் ஆரோக்கியத்திற்கு தீங்கு ஏற்படுத்தும் பாக்ட்டீரியா,வைரஸ் போன்ற தொற்றுகளிடம் போராடும் வேலையை நோய் எதிர்ப்பு மண்டலம் செய்கிறது.ஆனால் இந்த நோய் எதிர்ப்பு அமைப்பானது பலவீனாக இருப்பவர்களுக்கு அலர்ஜி அதாவது ஒவ்வாமை ஏற்படுகிறது.அலர்ஜி பாதிப்பு என்பது யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்.ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான அலர்ஜி பிரச்சனை ஏற்படுகிறது.

இப்படி உடலில் அலர்ஜி இருந்தால் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.தூசி,காற்று மாசுபாடு,புகை,மகரந்தம்,விலங்குகள் முடி போன்ற காரணங்களால் அலர்ஜி ஏற்படுகிறது.அதேபோல் சிலவகை உணவுகளால் அலர்ஜி ஏற்படுகிறது.

அலர்ஜியின் பொதுவான அறிகுறி தொடர் தும்மல்தான்.தும்மல் அனைவருக்கும் வரக் கூடிய ஒரு விஷயம்தான்.இருப்பினும் ஒருவர் ஒரே நேரத்தில் 10,20 முறைக்கு மேல் தும்மினால் அது அலர்ஜி பாதிப்பை குறிக்கிறது.

அலர்ஜி பாதிப்பானது நமது உடலில் எந்த உறுப்பை பாதிக்கிறதோ அதை பொறுத்துதான் அறிகுறிகள் தென்படும்.உங்களுக்கு சைனசைடிஸ் என்ற அலர்ஜி இருந்தால் மூக்கடைப்பு பிரச்சனை ஏற்படும்.அதேபோல் சரும அலர்ஜி இருந்தால் அதை எக்சிமா என்பார்கள்.ஆஸ்துமா என்ற பாதிப்பு நுரையீரல் பாதிக்கப்படுவதால் ஏற்படுகிறது.

உணவு சாப்பிடுவதால் அலர்ஜி ஏற்படுகிறது என்றால் அதை ஓரல் அலர்ஜி என்று அழைப்பார்கள்.உடலுக்கு ஒற்றுக் கொள்ளாத உணவுகளை சாப்பிடும் பொழுது வயிறு வீக்கம்,குமட்டல்,தோல் அரிப்பு,உடல் சோர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

சிலருக்கு பருக காலத்தில் சளி,மூக்கடைப்பு,கண் எரிச்சல்,கண் வீக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.இதனால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும்.எல்லா அலர்ஜி பாதிப்பிற்கு ஒரே மாதிரியான அறிகுறிகள் தென்படுவதில்லை.இருப்பினும் எந்த அலர்ஜியாக இருந்தாலும் அதை அலட்சியம் செய்யக் கூடாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

சரும அலர்ஜி இருந்தால் தோல் தடிப்பு,தோல் அரிப்பு,தோல் சிவந்து போதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.உங்களுக்கு அலர்ஜி பிரச்சனை இருந்தால் அதில் அதில் இருந்து விலகி இருப்பதுதான் நல்லது.சில வகை உணவு உங்களுக்கு ஒவ்வாமை ஏற்படுத்துகிறது என்றால் அதிலிருந்து விலகி இருப்பது நல்ல முடிவாக இருக்கும்.ஒவ்வாமை பாதிப்பு இருந்தால் நீங்கள் மருத்துவரை அணுகி உரிய தீர்வு காண்பது நல்லது.

ஹார்ட் சர்ஜரி செய்த பின்னரும் மரணம் வருவது எதனால்? வெளியான அதிர்ச்சி தகவல்!!

0

இதயம் சமந்தப்பட்ட பாதிப்புகள் இருந்தால் அறுவை சிகிச்சை மூலம் அதை சரி செய்ய முடியும்.பெரும்பாலான இதய நோய்களுக்கு அறுவை சிகிச்சையே முதன்மை தீர்வாக இருக்கின்றது.அப்படி இருக்கையில் சமீப காலமாக இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர் மரணிப்பது அதிர்வை ஏற்படுத்து விஷயமாக உள்ளது.

நமது உடலில் மற்ற உறுப்புகளில் செய்யப்படும் சிகிச்சை போன்று இதய அறுவை சிகிச்சையை எளிதில் செய்துவிட முடியாது.இதய அறுவை சிகிச்சையில் குறைபாடு இருந்தால் மீண்டும் பிரச்சனைகள் ஏற்படும்.சிகிச்சை செய்த பின்னரும் சரியாகாமல் இருந்தால் அதன் பாதிப்பு தீவிரமாகும்.

அறுவை சிகிச்சை செய்த தையல் தளர்தல்,அறுவை சிகிச்சை செய்த பின்னரும் இரத்தக் கசிவு ஏற்படுதல்,பாதிக்கப்பட்ட இடத்தில் இருக்கும் ஒட்டுத்திசு இயங்காமல் போதல் போன்ற காரணங்களால் அறுவை சிகிச்சை தோல்வியுற்று மரணங்கள் ஏற்படுகிறது.

பக்கவாதம்,வலிப்பு,நரம்பு சார்ந்த பிரச்சனைகள்,அறுவை சிகிச்சை செய்த அதிர்ச்சி,இரத்தப்போக்கு உண்டதால் போன்ற காரணங்களால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.இதய வால்வு அறுவை சிகிச்சை பெற்றவர்கள் காலப்போக்கில் சிதைந்து மீண்டும் சர்ஜரி செய்ய வேண்டிய நிலை வரும்.

உங்களுக்கு இதய சர்ஜரி செய்ய வேண்டுமென்றால் நீங்கள் அனுபவம் வாய்ந்த மருத்துவரை தேர்ந்தெடுக்க வேண்டும்.அதேபோல் இதய அறுவை சிகிச்சைக்கு முன் மற்றும் பிந்தைய கால உணவுமுறை மற்றும் வாழ்க்கைமுறையை தகுந்தார் போல் பின்பற்ற வேண்டும்.இதய அறுவை சிகிச்சைக்கு பின்னர் உங்கள் உடல் நலத்தில் ஏதேனும் பிரச்சனை இருக்கிறது என்றால் நீங்கள் தயங்காமல் மருத்துவரை அணுக வேண்டும்.

அறுவை சிகிச்சை பின்னர் மருத்துவர் சொல்லும் விஷயங்களை அவசியம் பின்பற்ற வேண்டும்.மருத்துவர் கொடுக்கும் மருந்து,மாத்திரைகளை சரியான நேரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.அறுவை சிகிச்சைக்கு பிறகு உடலுக்கு அதிக ஓய்வு கொடுக்க வேண்டும்.குறைந்தது 6 மாதங்கள் வரை கடினமான வேலைகளில் ஈடுபடக் கூடாது.

உங்கள் வீட்டில் உருளி மற்றும் காற்றுமணியை வைத்திருக்கிறீர்களா..?? இதனால் கிடைக்கக்கூடிய பலன்களைக் கேட்டால் அசந்து போவீர்கள்..!!

0

வாஸ்து ரீதியாக வீட்டில் சில முக்கியமான பொருள்களை வைப்பதன் மூலம் லட்சுமி கடாட்சமும், உடல் ஆரோக்கியமும், நிம்மதியும் நிலைத்திருக்கும். அந்த வகையில் இந்து சாஸ்திரத்தின் படி வீடுகளில் வைக்கக்கூடிய உருளி மற்றும் சீன சாஸ்திரத்தின் படி வைக்கக்கூடிய காற்று மணி ஆகியவற்றை நமது வீடுகளில் வைப்பதால் கிடைக்கக்கூடிய பலன்கள் என்ன? என்பதற்கான விளக்கத்தை தற்போது காண்போம்.

1. காற்று மணி:

வீடுகளில் நேர்மறையான எண்ணங்கள் உருவாக வேண்டும், கண் திருஷ்டிகள் விலக வேண்டும் என்பதற்காக பல்வேறு விதமான வாஸ்து பொருட்களை வாங்கி வைக்கும் பழக்கம் என்பது பலருக்கும் உண்டு. அவ்வாறு மக்கள் வாங்கி வைக்கும் பொருட்களுள் ஒன்றுதான் காற்று மணி.

கோவில்களில் எழுப்பக்கூடிய மணி ஓசையை கேட்கும் பொழுது எவ்வாறு புத்துணர்ச்சி என்பது ஏற்படுகிறதோ, அதேபோன்றுதான் இந்த காற்று மணியில் இருந்து வரக்கூடிய சத்தமும். இது சீன வாஸ்து பொருட்களுள் ஒன்றாக இருந்தாலும் கூட, இது வீடுகளில் நேர்மறையான எண்ணங்களையும், அதிர்ஷ்டங்களையும், பல யோகங்களையும் தரக்கூடியது என்பதால் நம் நாட்டு மக்களும் இதனை வீடுகளில் வாங்கி வைத்துள்ளனர்.

இந்த காற்று மணியை நமது வீடுகளில் வைப்பதன் மூலம் நேர்மறையான எண்ணங்கள், செல்வ செழிப்பு, ஆரோக்கியம் ஆகிய அனைத்தும் சிறந்து விளங்கும் என கூறப்படுகிறது. பஞ்சபூதங்களின் எண்ணிக்கைகளின் அடிப்படையில் இந்த காற்றுமணியை வாங்கினோம் என்றால், பலவிதமான அதிர்ஷ்டங்களை கொடுக்கும்.

பஞ்சபூதங்களான நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய அனைத்து விதமான சக்திகளும் நமது வீட்டில் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. எனவே காற்று மணி வாங்கும் பொழுது ஐந்து கம்பிகள் இருக்குமாறு வாங்குவது சிறப்பு. மேலும் சிவப்பு, பச்சை, மற்றும் வெள்ளை ஆகிய நிறங்களில் இந்த காற்று மணியை வாங்குவதும் நல்ல அதிர்ஷ்டத்தை கொடுக்கும் எனவும் கூறப்படுகிறது.

சிவப்பு நிறம் என்பது வீட்டிற்கு சக்தியையும், ஆற்றலையும் கொடுக்கும். பச்சை நிறம் என்பது வீட்டிற்கு செல்வத்தையும், செழிப்பையும் கொடுக்கும். வெண்மை நிறம் என்பது வீட்டிற்கு அமைதியையும், ஆரோக்கியத்தையும் கொடுக்கும். இந்த நிறங்களின் நன்மைகளை தெரிந்து கொண்டு அதன் பிறகு காற்றுமணியை வாங்குவது சிறப்பு.

இந்த காற்று மணியை அதிகமான காற்று வீசக் கூடிய இடத்தில் வைக்க கூடாது. மிகவும் மென்மையான காற்று வரக்கூடிய இடத்தில் மட்டுமே வைக்க வேண்டும். அதாவது இந்த காற்று மணியின் சத்தம் மிகவும் மென்மையானதாக கேட்க வேண்டும். ஆர்ப்பாட்டமான சத்தமாக கேட்கக் கூடாது. எனவே உங்கள் வீட்டில் எந்த இடத்தில் வைத்தால் மென்மையான ஓசை கிடைக்குமோ, அந்த இடத்தில் வைத்துக் கொள்வது சிறப்பு.

வீட்டின் மேற்கு திசையில் வைக்கும் பொழுது கல்வியும், ஞானமும் பெருகும். வடமேற்கு திசையில் வைக்கும் பொழுது வெற்றியையும், செல்வாக்கையும் தேடித் தரும். தென்மேற்கு திசையில் வைக்கும் பொழுது அதிர்ஷ்டம் உண்டாகும். வடக்கு திசையில் வைக்கும் பொழுது செல்வ வளம், பணவரவு அதிகரிக்கும். கிழக்கு அல்லது வடகிழக்கு திசையில் வைக்கும் பொழுது நேர்மறையான ஆற்றல்கள் உருவாகும்.

2. உருளி:

பெரும்பாலான வீடுகளில், கடைகளில், தொழில் செய்யக்கூடிய இடங்களில் உருளியில் பூக்களை போட்டு வைத்திருப்பார்கள், அது வெறும் அழகுக்காக மட்டுமல்ல, அந்த உருளியானது இருக்கக்கூடிய இடத்தில் நேர்மறை ஆற்றல்கள் உருவாகும். எனவே தான் அனைத்து இடங்களிலும் உருளி என்பதை வைக்கின்றனர்.

இந்த உருளியை இரும்பு மற்றும் எவர் சில்வர் ஐ தவிர்த்து மற்ற எந்த உலோகங்களில் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். உதாரணமாக தங்கம், வெள்ளி, பித்தளை, செம்பு, கண்ணாடி, மண் ஆகியவற்றில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

உருளியில் தண்ணீர் ஊற்றி வைத்திருப்பதால், அந்த உருளி இருக்கக்கூடிய இடத்தில் குளிர்ச்சியும், செழுமையும் அதிகமாக இருக்கும். மேலும் அந்த உருளியில் பூக்கள், மஞ்சள், குங்குமம் ஆகியவற்றை போட்டு வைப்பதால் அந்த உருளியானது எதிர்மறை ஆற்றல்களை ஈர்த்துக்கொண்டு, நேர்மறையான ஆற்றல்களை உருவாக்கி வெளியிடும்.

அழகான பூக்களை அந்த உருளியில் போட்டு வைப்பதால் அதனை பார்க்கும் பொழுது சந்தோஷமும், நிம்மதியும் ஏற்படுகிறது. இந்த உருளியை பயன்படுத்தும் முறையானது பண்டைய காலங்களில் இருந்தே இருக்கிறது. இதனால் வீடுகளில் செல்வ செழிப்பும், சகல சௌபாக்கியங்களும் உருவாகும் எனவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த உருளியானது மகாலட்சுமியின் அம்சமாகவும் கருதப்படுகிறது. இந்த உருளியை வீட்டை விட்டு வெளியே செல்லும் பொழுதும், வீட்டிற்குள் நுழையும் பொழுதும் அனைவரும் பார்க்கும் விதத்தில் வைக்க வேண்டும். இந்த உருளியை பார்த்துவிட்டு ஒருவர் வெளியில் சென்றால், செல்லக்கூடிய காரியம் வெற்றி அடையும் எனவும் கூறப்படுகிறது.

நமது வீட்டில் உள்ள நபர்களை பார்த்தோ அல்லது நமது வீட்டினை பார்த்தோ யாரேனும் ஒருவர் கண் திருஷ்டி கொண்டால், அந்த கண் திருஷ்டியையும் தன் பக்கம் ஈர்த்துக் கொள்ளும் சக்தி இந்த உருளிக்கு உண்டு. எனவே உருளி இருக்கக்கூடிய வீடுகளில் கண் திருஷ்டி என்பது நுழையாது.

வடிவேலு கம் பேக்!. மீண்டும் தலைநகரம் கூட்டணி!.. கேங்கர்ஸ் டிரெய்லர் வீடியோ!..

0

Gangers Trailer: தமிழ் சினிமாவில் காமெடி கலந்த காதல் திரைப்படங்களை இயக்கி ரசிகர்களிடம் பிரபலமானவர் சுந்தர்.சி. இவருடன் வடிவேலுவும் சேர்ந்தால் சொல்ல வேண்டுமா!.. ஏற்கனவே தலைநகரம், வின்னர், நகரம் மறுபக்கம் போன்ற படங்களில் இருவரின் கூட்டணியும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. சுந்தர் சி இயக்கிய வின்னர் மற்றும் நடித்த தலைநகரம் ஆகிய 2 படங்களிலும் வடிவேல் காமெடி காட்சிகள் இப்போதுவரை ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில்தான் பல வருடங்களுக்கு பின் சுந்தர்.சி வடிவேல் காமெடி கேங்கர்ஸ் படம் மூலம் மீண்டும் இணைந்திருக்கிறது. இந்த படத்தை சுந்தர்.சியே இயக்கியிருக்கிறார். இருவரும் மீண்டும் இணைகிறார்கள் என செய்தி வெளியான போதே ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எகிற துவங்கியது. இந்த படத்தில் கேத்ரின் தெரஷா, மைம் கோபி, முனிஸ்காந்த், கிங்ஸ்லி உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்.

gangers

போலீஸான சுந்தர்.சி. வில்லனை பிடிப்பதற்காக பி.டி.ஆசிரியர் போல ஒரு பள்ளியில் வேலைக்கு சேர்கிறார். அங்கே ஏற்கனவே வடிவேலு பி,டி ஆசிரியராக வேலை செய்து வருகிறார். அங்கே வேலை செய்து கொண்டே வில்லனை உளவு பார்க்கிறார் சுந்தர்.சி. பல ஆயிரம் கோடியை கொள்ளையடித்து வில்லன் பதுக்கி வைக்க அதை அவனிடமிருந்து எடுக்க நினைக்கிறார் சுந்தர்.சி. அவருடன் வடிவேலுவும் சேர்ந்து களத்தில் இறங்க நடக்கும் காமெடி கலாட்டாதான் கேங்கர்ஸ் படம்.

இந்த படத்தின் டிரெய்லர் வீடியோ இன்று வெளியாகியிருக்கிறது. டிரெய்லரில் பல வேடங்களிலும் வந்து அசத்துகிறார் வடிவேலு. அதிலும் டிரெய்லரின் இறுதியில் வயதானவர் போல வந்து வடிவேல் பேசும் வசனம் சிரிக்க வைக்கிறது. டிரெய்லரை பார்க்கும்போது கண்டிப்பாக கேங்கர்ஸ் படம் சூப்பர் ஹிட் அடிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

அண்ணாமலையை தூக்கணும்!. திமுக – அதிமுக போட்ட ஸ்கெட்ச்!. ஆடிப்போன அமித்ஷா!…

0

எடப்பாடி பழனிச்சாமி அதிமுக ஆட்சியில் முதல்வராக நியமிக்கப்பட்டாலும் மக்கள் அவரை ஆளுமை வாய்ந்த தலைவராக பார்க்கவில்லை. ஆனால், எதிர்கட்சி தலைவராக ஸ்கோர் செய்து வந்தார் மு.க.ஸ்டாலின். அவருக்கு கலைஞரின் மகன் என்கிற இமேஜ் இருக்கிறது. அதுதான் அவரை முதல்வராகவும் மாற்றியது. 2011 முதல் 2021 வரை 10 வருடங்கள் திமுக ஆட்சியில் இல்லை. ஆனால், அதிமுகவுக்கு சிறந்த எதிர்கட்சியாக திமுக விளங்கியது.

அப்போதுதான் பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார். கடந்த 4 வருடங்களாக எதிர்கட்சி தலைவர் போல செயல்பட்டு வருகிறார் அண்ணாமலை. திமுகவின் ஊழலை பட்டியலிட்டு செய்தியாளர்களிடம் பேசி வருகிறார். எனவே, எடப்பாடி பழனிச்சாமி டம்மி ஆகிப்போனார். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செய்த ஊழலை தனி நீதிமன்றம் அமைத்து விசாரித்து நடவடிக்கை எடுப்போம் என சொல்லி ஆட்சிக்கு வந்த திமுக ஆட்சிக்கு வந்த பின் அப்படி எதுவும் செய்யவில்லை.

அண்ணாமலையை தூக்கணும்!. திமுக - அதிமுக போட்ட ஸ்கெட்ச்!. ஆடிப்போன அமித்ஷா!...

கொடநாடு கொலை தொடர்பான வழக்கை கூட திமுக சரியாக நடத்தவில்லை. 10 வருடங்கள் நீங்கள் அடித்த கொள்ளை பற்றி நாங்கள் கேட்க மாட்டோம். நாங்கள் அடிக்கும் கொள்ளையை நீங்கள் கேள்வி கேட்கக் கூடாது என அதிமுகவிடம் டிலிங் போட்டு திமுக ஆட்சி நடத்தி வருவதாக அரசியல் விமர்சகர்கள் சொல்கிறார்கள். ஆனால், திமுக செய்யும் ஊழல்கள் பற்றி அண்ணாமலை தொடர்ந்து பேசி வருகிறார்.

எதிர்கட்சி தலைவர் போல அண்ணாமலை செயல்படுவது பழனிச்சாமிக்கும், தங்களின் ஊழல் பற்றி பேசுவது ஸ்டாலினுக்கும் கோபத்தை ஏற்படுத்தி இருப்பதால் அவரை எப்படியாவது தமிழக பாஜக தலைவர் பதவியிலிருந்து தூக்க இருவரும் திட்டமிட்டதாக சொல்லப்படுகிறது. ஏனெனில், அண்ணாமலை போய்விட்டால் தன்னுடைய இமேஜ் உயரும் என பழனிச்சாமியும் கருதுகிறார். அதன்படியே டெல்லியில் அமித்ஷாவை சந்தித்தபோது அண்ணாமலையின் பதவியை பறித்தால் மட்டுமே பாஜகவுடன் கூட்டணி அமைப்போம் என பழனிச்சாமி சொல்லியிருக்கிறார். இதற்கு இடையில்தான் தமிழக பாஜகவுக்கு வேறு தலைவர் என்கிற செய்தி தற்போது ஓடிக்கொண்டிருக்கிறது.

amit shah

ஆனால், உளவுத்துறை மூலம் அதிமுக, திமுக இரண்டும் கை கோர்த்தே அண்ணாமலையை தூக்க திட்டமிட்டதை கேட்டு அதிர்ந்து போன அமித்ஷா 2026 சட்டமன்ற தேர்தல் வரை அண்ணாமலையே தமிழக பாஜக தலைவராக இருக்கட்டும் என சொல்லிவிட்டதாகவும் செய்திகள் கசிந்திருக்கிறது.

பாரதிராஜா அந்த விஷயத்தில் வீக்!.. ஷாக் நியூஸ் சொன்ன பத்திரிக்கையாளர்.

0

Bharathiraja: தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனராக இருந்தவர் பாரதிராஜா. பதினாறு வயதினிலே படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக நுழைந்து பல புதிய முயற்சிகளை செய்து பார்த்து ஒரு தலைமுறைக்கே பாடமெடுக்கும் இயக்குனராக மாறினார். கடலோர கவிதைகள், வேதம் புதிது, முதல் மரியாதை என கோலிவுட்டின் முக்கிய படங்களை இயக்கியவர் இவர்.

பாரதிராஜாவின் மகன் மனோஜ் சமீபத்தில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். திரையில் பல புதிய முகங்களை அறிமுகம் செய்து வைத்து ரசிகர்களிடம் பிரபலமாக்கி அவர்களின் வளர்ச்சிக்கு காரணமாக இருந்த பாரதிராஜாவால் தனது மகனை ஹீரோ ஆக்க முடியவில்லை. தாஜ்மகால் படம் மூலம் சினிமாவில் தனது மகனை அறிமுகம் செய்து வைத்தார்.

ஆனால், அந்த படம் ஓடவில்லை என்பதால் மனோஜின் திரை வாழ்க்கை சரியாக அமையவில்லை. அவரும் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். ஆனால், வெற்றி கிடைகக்வில்லை. இந்நிலையில், சினிமா பத்திரிக்கையாளர் சேகுவரா பாரதிராஜா பற்றி சில தகவல்களை பகிர்ந்துள்ளார். கணவன் மனைவி இடையான உறவு என்பது நிலைத்து நிற்க வேண்டும். கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அதையும் தாண்டி சுமூகமான உறவு இருக்க வேண்டும். பிரச்சனை இருந்தால் பேசி தீர்த்துகொள்ளப்பட வேண்டும். அங்குதான் தவறு செய்தார் பாரதிராஜா. பல வருடங்களாக அவர் மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

bharathi raja

60 வயதுக்கு மேல் கண்டிப்பாக ஒரு ஆணுக்கு மனைவியின் துணை தேவைப்படும். ஏனெனில் 60 வயதுக்கு மேல் எப்போது மரணம் வரும் என சொல்லவே முடியது. பாரதிராஜா குடும்பத்தில் அப்பா ஒரு பக்கம், அம்மா ஒரு பக்கம், மகன் ஒரு பக்கம் என தனியாக வாழ்ந்தார்கள். மனோஜுக்கு மன உளைச்சல் ஏற்பட்ட போதெல்லாம் அவருக்கு ஆறுதல் சொல்ல அப்பாவோ, அம்மாவோ அருகில் இல்லை. உனக்கு பணம் கொடுத்துவிட்டேன்.. வீடு கொடுத்துவிட்டேன் என்று சொன்னால் போதுமா.?.. ஒற்றுமையாக இருந்தால்தான் அடுத்த தலைமுறையும் அதை பார்த்து கற்றுக்கொள்ளும்.

பெண் சிசுக்கொலைக்கு எதிராக கருத்தம்மா படமெடுத்தவர் பாரதிராஜா. ஆனால், பெண்கள் விஷயத்தில் அவர் கொஞ்சம் வீக்தான். நடிகைகளுக்கு வாய்ப்பு கொடுக்கும்போதும், நடிக்க வைக்கும்போதும் அவரின் நடத்தை பற்றி நிறைய விமர்சனங்கள் உண்டு. திரைமறைவுக்கு பின்னால் அவரை பற்றி பல கிசுகிசுக்களும் வந்தது’ என சொல்லி இருக்கிறார்.

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையுமா? திருமாவளவன் சொல்லும் காரணங்கள்: அரசியல் மாற்றம் நடப்பது உறுதி!

0

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி (என்.டி.ஏ) ஆட்சி அமைக்கும் எனக் கூறியுள்ள அமித் ஷாவின் கருத்துக்கு கடுமையாக எதிர்வினையாற்றினார்.

“தமிழகத்தில் என்.டி.ஏ-விற்கு எந்தவிதமான வெற்றி வாய்ப்புகளும் இல்லை. அமித் ஷா இதை மிக நன்றாகவே அறிந்திருக்கிறார். எனவே, அவர் வட இந்திய மாநிலங்களை கருத்தில் கொண்டு தான் இந்த கருத்தை கூறியிருக்க வேண்டும். தமிழக மக்கள், பா.ஜ.க.-வின் அரசியல் மற்றும் அதன் கொள்கைகளை தொடர்ந்து நிராகரித்து வருகின்றனர். இதை 2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தல் மற்றும் 2024 நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளிலிருந்து தெளிவாக புரிந்து கொள்ளலாம்.

தமிழகத்தில் தற்போது எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்த திட்டமிடலை வகுக்க முடியாமல் தடுமாறி வருகின்றன. அதிமுக இன்னும் ஒரு உறுதியான கூட்டணியை உருவாக்காத நிலையில் இருக்கிறது. பாஜக தனித்து செயல்பட முடியாது என்ற நிலைமை தெளிவாக உள்ளது. மேலும், நடிகர் விஜய் தொடங்கியுள்ள புதிய அரசியல் கட்சி இன்னும் தனது நிலைப்பாட்டை உறுதியாக அறிவிக்கவில்லை. சமீபத்தில் நடந்த விஜயின் பொதுக்குழு கூட்டத்தில், அவர் தன்னை தமிழகத்தின் இரண்டாவது பெரிய கட்சி எனக் குறிப்பிட்டிருந்தார். இதனால், அதிமுக, பாஜக மற்றும் விஜயின் கட்சி ஆகியவை இரண்டாவது பெரிய கட்சி யார் என்பதற்காக போட்டியிடும் நிலை உருவாகியுள்ளது.

அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அரசியல் தேவைக்காக மட்டுமே உருவாக்கப்படும் என்பதால், அது நீடிக்க முடியாது. இது கொள்கை அடிப்படையில் பொருந்தா கூட்டணியாகவே அமையும். அதிமுக-பாஜக கூட்டணியில் உள்ள மனக்கசப்பு தொடர்ந்து மேலெழுந்து கொண்டே வருகிறது. இதற்கிடையே, பாஜக தமிழகத்தில் தனித்து வளர முயற்சித்து வருவது, அதிமுகவின் எதிர்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. இதன் விளைவாக, இரு கட்சிகளும் இணைந்து நீண்ட காலம் செயல்படுவதை சந்தேகமாக பார்க்க வேண்டும்.

அத்துடன், தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இடையே சில முரண்பாடுகள் இருந்தாலும், அவர்கள் அடிப்படை கொள்கைகளில் ஒருமித்த பார்வையை கொண்டுள்ளனர். தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் உறுப்பினர்களுக்கு இடையே கருத்து மோதல்கள் வந்தாலும், அரசியல் நோக்கில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிகிறது. இதனால், அந்த கூட்டணியின் நிலைப்பாடு உறுதியாக இருக்கிறது.

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைய இன்னும் காலம் தேவை. திராவிட கட்சிகளான திமுக அல்லது அதிமுக பலவீனமடையும் பட்சத்தில் மட்டுமே, கூட்டணி ஆட்சி உருவாகும் வாய்ப்பு அதிகரிக்கும். ஆனால் தற்போதைய சூழலில், திமுக தலைமையிலான கூட்டணி வலுவாக இருப்பதால், 2026 தேர்தலில் தமிழ் மாநிலக் கூட்டணிகள் மீண்டும் வெற்றி பெறும் என்றார்.

ஜன நாயகன் படத்தில் விஜய் பேசும் அரசியல்!. செம சம்பவம் இருக்கு!..

0

Jananayagan: நடிகர் விஜய் கோட் படத்தில் நடித்து கொண்டிருந்த போதே அரசியலுக்கு வருவதாக அறிவித்துவிட்டார். கடந்த சில வருடங்களாகவே கட்சிக்கு நிர்வாகிகளை நியமிக்கும் பணிகள் நடந்து வந்தது. பல மாவட்டங்களில் மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர். அதன்பின்னரே அரசியலுக்கு வருவதாக அறிவித்தார் விஜய்.

இப்போது ஒப்புக்கொண்டிருக்கும் படத்தில் நடித்துவிட்டு அரசியலுக்கு வருகிறேன் என அறிவித்த விஜய் இப்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்கிற படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டமும் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய விஜய் திமுகவை கடுமையாக விமர்சித்து பேசினார்.

வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் தவெகவுக்கும், திமுகவுக்கும் இடையேதான் போட்டி எனவும் கூறினார். இதுதான் திமுகவினருக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே, விஜயை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள். ஒருபக்கம் அமைச்சர்கள் சேகர் பாபு, மா.சுப்பிரமணியம், கனிமொழி, சபாநாயகர் அய்யாவு உள்ளிட்ட பலரும் விஜய்க்கு பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

vijay

விஜய்க்கு அரசியல் அனுபவம் இல்லை. அவர் இன்னமும் மக்களை சந்திக்கவே இல்லை. கட்சி துவங்கி இரண்டு வருடங்கள் ஆகியும் 4 சுவருக்குள்ளேயே அரசியல் செய்து வருகிறார் என்றெல்லாம் பேசி வருகிறார்கள். ஆனால், விஜய் இதற்கெல்லாம் விளக்கமே கொடுப்பதில்லை. ஜனநாயகன் படப்பிடிப்பை முடித்துவிட்டு தீவிர அரசியலிலும் அவர் இறங்கவிருக்கிறார்.

ஜனநாயகன் படம் பாலையா நடிப்பில் வெளிவந்த பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என சொல்லப்படுகிறது. ஆனால், அதில் அரசியல் இருக்காது. ஆனால், தமிழில் விஜய் நடிப்பதால் அரசியல் தொடர்பான காட்சிகள் படத்தில் இடம் பெறுகிறது என்கிறார்கள். மேலும், இந்த படத்தில் வாக்குகள் என்பது எவ்வளவு முக்கியம் என்றும் தேர்தலில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் பற்றியும் விஜய் பேசவுள்ளதாகவும் செய்திகள் கசிந்திருக்கிறது.

நித்யானந்தா இறந்துவிட்டது உண்மையா?!. 4 ஆயிரம் கோடி சொத்துக்கள் யாருக்கு?…

0

திருவண்ணாமலையில் தனது ஆன்மிக பணியை துவங்கியவர் நித்யானந்தா. அதன்பின் பக்தர்களின் ஆதரவால் பெங்களூர் மற்றும் தமிழகத்தின் பல ஊர்களிலும் ஆஸ்ரமங்களை நிறுவினார். பல இளம்பெண்கள், ஆண்கள், மற்றும் வெளிநாட்டை சேர்ந்த பலரும் கூட அவரின் ஆசிரமத்தில் சீடர்களாக மாறினார்கள். இதன் காரணமாக மக்களிடம் பிரபலமாக துவங்கினார் நித்யானந்தா.

அப்போதுதான் நடிகை ரஞ்சிதாவையும் நித்யானந்தாவும் ஒரு அறையில் இருப்பது போல ஒரு வீடியோவும் சன் டிவியில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், அவர் மீது பாலியல் புகார்களும் குவிந்தது. ஆனால், இந்தியாவிலிருந்து வெளியேறிய நித்யானந்தா ஒரு தீவை விலைக்கு வாங்கி அதற்கு கைலாஷ் என பெயர் வைத்து அதுவே தனது நாடு எனவும் அறிவித்தார். அங்கிருந்து அவர் சீடர்களிடம் பேசும் வீடியோக்கள் அடிக்கடி யுடியூப்பில் வெளியாகி வந்தது.

இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு அவர் இறந்துவிட்டார் என்கிற செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்து தர்மத்தையும், சமாதானத்தையும் காப்பாற்றுவதற்காக தனது நித்யானந்தா உயிரையே தியாகம் செய்திருக்கிறார்’ என நித்யானந்தாவின் சகோதரி மகன் சுந்தரேஸ்வரன் வீடியோ காலில்  பேசியிருக்கிறர். இது நித்யானந்தாவை பின்பற்றுபவர்களுக்கும், உலகமெங்கும் உள்ள அவரின் சீடர்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. ஆனால், இதுபற்றி கைலாசா நாட்டில் உள்ள நித்யானந்தா ஆஸ்ரமம் எந்த விளக்கும் கொடுக்கவில்லை.

nithyananda
nithyananda

இந்நிலையில்தான் பல முக்கிய தகவல்கள் வெளியே கசிந்திருக்கிறது. தினமும் ஆன்மிக போதனைகளை வீடியோவில் பேசும் நித்யானந்தா கடந்த சில மாதங்களாக வீடியோவில் பேசவில்லை. அவரின் உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவருக்கு டையாலசைஸ் செய்யப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியானது. எனவே, அவர் எப்போதோ பேசிய பழைய வீடியோக்களை யுடியூப்பில் பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில்தான் அவர் இறந்துவிட்டார் என்கிற செய்தி வெளியாகியுள்ளது. நித்யானந்தா மீது சில பாலியல் புகார்கள் நீதிமன்றத்தில் இருக்கிறது. எனவே, கைதிலிருந்து தப்பிக்கவே இப்படி பொய்யான செய்தியை பரப்புகிறார்கள் எனவும் சிலர் சொல்கிறார்கள். கடந்த 2 நாட்களாக தமிழகத்தில் சில இடங்களில் உள்ள நித்யானந்தாவின் ஆஸ்ரமத்தில் இருக்கும் சீடர்கள் சிலர் வெளியேற்றப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. நித்யானந்தா இறந்து உண்மை எனில் அவரின் 4 ஆயிரம் கோடி சொத்து அவரின் முதன்மை சீடர் ரஞ்சிதாவுக்கு செல்லும் என சொல்லப்படுகிறது. அதேநேரம் 4 பேர் அதற்கு போட்டி போடுவார்கள் எனவும் சொல்லப்படுகிறது.