Home Blog Page 345

நீங்கள் முருகன் பக்தரா..?? அப்போ இந்த உயிரினம் உங்கள் வீட்டிற்கு கண்டிப்பாக வரும்..!!

0

நீங்கள் ஒரு சிறந்த முருகன் பக்தராக இருந்தால் குறிப்பிட்ட சில உயிரினங்கள் உங்களின் வீடு தேடி வரும். பொதுவாகவே நமது வீடுகளில் தெய்வீக சக்தி இருக்கிறது என்றால், சில உயிரினங்கள் நமது வீட்டை தேடி வரும். அவ்வாறு வருகிறது என்றால், நமது குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வத்தின் அருள் நமக்கு இருக்கிறது என்று அர்த்தம்.

நீங்கள் ஒரு முருகன் பக்தராக இருந்தால், உங்கள் வீட்டில் முருகன் இருந்தால் ஒரு சில அறிகுறிகள் தெரியும். பொதுவாக நமது வீடுகளில் தெய்வீக மனம் எப்பொழுதும் இருக்கிறது என்றால், கடவுளின் அருள் நமது வீட்டிற்கு இருக்கிறது என்று கூறுவார்கள். அதிலும் குறிப்பாக சந்தனம் பன்னீர் இது போன்ற வாசனைகள் இருந்தால், நமது வீட்டில் முருகன் நடமாட்டம் இருப்பதாக அர்த்தம்.

முருகன் பக்தர்களின் கனவில் குறிப்பாக செவ்வாய்க் கிழமை, சஷ்டி திதி, கிருத்திகை நட்சத்திரம், விசாகம் நட்சத்திரம் இது போன்ற நாட்களில் அவர்களது கனவில் முருகன், முருகனின் வாகனம், முருகனின் வேல் அல்லது முருகனின் ஆறுபடை வீடுகளை காண்பார்கள். இவ்வாறு அவர்களது கனவில் வந்தால் அவர்களுக்கு முருகனின் அருள் பரிபூரணமாக இருக்கிறது என்று அர்த்தம்.

அதேபோன்று முருகன் கோவிலுக்கு சென்று முருகனை வழிபட வேண்டும் என்று நினைக்கும் பொழுது, அதற்கான வாய்ப்பு விரைவில் கிடைத்துவிடும். அவ்வாறு இருந்தாலும் முருகனின் அருள் உங்களுக்கு இருப்பதாக அர்த்தம். ஆனால் ஒரு சிலர் முருகனை சென்று வழிபட வேண்டும் என்று பல நாட்களாக நினைத்து இருப்பார்கள், ஆனால் அவர்களால் முருகனைச் சென்று காண முடியாது. அதாவது அதற்கான சூழ்நிலை அவர்களுக்கு அமையாது.

எவர் ஒருவருக்கு முருகனின் அருள் என்பது பரிபூரணமாக இருக்கிறதோ, அவர்களால் மட்டுமே நினைக்கும் பொழுதெல்லாம் முருகனைச் சென்று வழிபட முடியும். அதிலும் முருகனின் தீவிர பக்தர்களாக இருப்பவர்களது வீட்டிற்கு முருகனின் வாகனமான மயில் கண்டிப்பாக வரும்.

அதேபோன்று நமது வீடுகளில் வளர்க்கும் சேவல்களை தவிர்த்து, வேறொரு சேவல் உங்கள் வீட்டிற்கு வருகிறது என்றாலும் முருகனின் அருள் உங்களுக்கு இருப்பதாக அர்த்தம். அதிலும் குறிப்பாக முருகனுக்கு உகந்த செவ்வாய்க் கிழமை, சஷ்டி, கிருத்திகை இதுபோன்ற நாட்களில் உங்கள் வீட்டிற்கு முருகனின் வாகனமான உயிரினங்கள் வருகிறது என்றால் அது மிகவும் சிறப்பு மிக்க ஒன்று.

நீங்கள் மிகவும் குழப்பமான சூழ்நிலையில் இருக்கும் பொழுது முருகனின் புகைப்படம், கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், திருப்புகழ் இதுபோன்று முருகனுக்கு உகந்த படங்களை காணும் பொழுது, முருகனை நீங்கள் வழிபட்டால் உங்கள் குழப்பங்களுக்கு கண்டிப்பாக ஒரு தீர்வு கிடைக்கும் என்பதை உணர்த்துகிறது.

அதேபோன்று நீங்கள் முருகனின் தீவிர பக்தர்களாக இருக்கும் பொழுது, உங்களுக்கு பிறக்கக்கூடிய குழந்தையானது முருகனுக்கு உகந்த செவ்வாய் கிழமை, சஷ்டி, கிருத்திகை நட்சத்திரம் இது போன்ற நாட்களில் பிறக்கும். அதாவது முருகனே உங்களுக்கு குழந்தையாக வந்து பிறப்பார்.

பசு மாடு உங்கள் வீட்டிற்கு வருகிறது என்றால் அந்த பசுவிற்கு உணவாக வாழைப்பழம், தண்ணீர் இது போன்றவை கொடுக்கும் பொழுது, தெய்வங்களின் அருள் உங்களுக்கு கிடைக்கும். மேலும் உங்கள் வீடு லட்சுமி கடாட்சம் நிறைந்து இருக்கும்.

டம்மி துப்பாக்கி… அட்டக்கத்தி!.. விஜயை மோசமாக விமர்சித்த திண்டுக்கல் லியோனி…

0

Vijay Tvk: சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போதே அரசியலுக்கு வந்திருக்கிறார் விஜய். தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி வேலைகள் வேகமாக நடைபெற்று வருகிறது.  ஜனநாயகன் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முடிந்ததும் முழுநேர அரசியலில் அவர் ஈடுபடவிருக்கிறார். சமீபத்தில்தான் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

அதில் பேசிய விஜய் வழக்கம்போல் திமுகவை விமர்சித்து பேசினார். மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் அவர்களே.. மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே.. பெயரை மட்டும் வீரப்பாக சொன்னால் போதாது அவர்களே. செயலிலும் காட்ட வேண்டும் அவர்களே.. அணை போட்டு ஆற்றை வேண்டுமானாலும் தடுக்கலாம்.. காற்றை தடுக்க முடியாது. மீறி தடுக்க நினைத்தால் சாதாரண காற்று சூறாவழியோ அல்லது சக்திமிக்க புயலாக மாறும்’ என பேசினார்.

vijay

அதோடு, வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் தவெக-வுக்கும் திமுகவுக்கும் இடையேதான் போட்டி என்றும் பேசினார். இதுதான் திமுகவினரை கோபப்படுத்தி இருக்கிறது.
எனவே, திமுகவை சேர்ந்த பலரும் விஜயை திட்ட துவங்கிவிட்டனர்.

இந்நிலையில், திமுக விசுவாசியும், பிரச்சார பீரங்கியுமான திண்டுக்கல் லியோனி விஜயை மிகவும் மோசமாக விமர்சனம் செய்திருக்கிறார். டம்மி துப்பாக்கி, அட்டக்கத்தி, அரசியல் மக்கு ஒன்னு மேடையில ஹா ஹூன்னு கத்திக்கிட்டு இருக்கு. காலையில நாய் ஒன்னு சூரியன் பின்னாடி இருக்கறது தெரியாம நின்னு தனது நிழல் பெருசா தெரியுறத பார்த்து நாமதான் பெரிய ஆள். 2026ல் நாமதான்னு கத்திக்கிட்டு இருக்கு.. நேரம் ஆக ஆக சூரியன் மேல வந்தா அந்த நாயோட நிழல் கூட தெரியாது.. சூரியன் தன் பவரை காட்டினா நம்ம இருக்கிற இடம் கூட தெரியாம போயிடுவோம்’ என பேசியிருக்கிறார்.

அந்த காட்சிகளை தூக்கிடறோம்!.. எம்புரான் பட சர்ச்சைக்கு மன்னிப்பு கேட்ட மோகன்லால்!..

0

Empuraan: பிரித்திவிராஜ் இயக்கத்தில் மோகன்லால், மஞ்சுவாரியர், டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலரும் நடித்து உருவாகியுள்ள திரைப்படம்தான் எம்புரான். பிரித்திவிராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்து ஏற்கனவே வெளியான லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமாக எம்புரான் உருவாகியுள்ளது. மலையாளத்தில் உருவாகி தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு ஒரு பேன் இண்டியா படமாக எம்புரான் வெளியாகியிருக்கிறது.

லூசிபர் படத்தை போலவே இந்த படத்திலும் அதிரடி சண்டை காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. இந்த படத்திற்கு அதிக அளவில் முன்பதிவு இருந்தது. தமிழில் விடாமுயற்சியை விட இந்த படத்திற்கு அதிக டிக்கெட் முன்பதிவு இருந்தது. படம் வெளியாகி 2 நாட்களில் இப்படம் 100 கோடி வசூலை தாண்டியது.

இந்த படத்தில் சிறுபான்மையினர் மீது மதவாத கட்சிகள் நடத்தும் தாக்குதல், குஜராத்தில் நடந்த இனப்படுகொலைகள் தொடர்பான காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. இது மதவாத கட்சிகளுக்கும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பினருக்கும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே, இப்படத்திற்கு பாஜக, ஆர்.எஸ்.எஸ் மிரட்டல் விடுத்திருக்கிறார்கள். எனவே, படத்தின் சில காட்சிகளை நிக்கவும், சில வசனங்களை மியூட் செய்யவும் படக்குழு திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில், மோகன்லால் தனது எக்ஸ் தளத்தில் ‘எம்புரான் படத்தின் சில பகுதிகள், ரசிகர்கள் பலரது மனதை புண்படுத்தி இருப்பதாக அறிந்தேன். எந்த ஒரு அரசியல் கட்சி, கருத்தியல் மற்றும் மதத்திற்கு எதிராகவும் வெறுப்பை உண்டாக்கக் கூடாது என்பது ஒரு கலைஞனாக என்னுடைய கடமையாகும். எனவே, நானும் எம்புரான் படக்குழுவும் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். இதற்கு பொறுப்பேற்கும் விதமாக சர்ச்சைக்குரிய பகுதிகளை படத்திலிருந்து நீக்க முடிவு செய்திருக்கிறோம்’ என தெரிவித்திருக்கிறார்.

எம்புரான் படக்குழுவினருக்கு மிரட்டல்!.. காட்சிகள் மாற்றப்படுமா?!…

0

Empuraan movie: மலையாளர் நடிகர் பிரித்திவிராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள திரைப்படம்தான் எம்புரான். 2019ம் வருடம் பிரித்திவிராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்து வெளியான லூசிபர் படத்தின் இரண்டாம் பாகம் போல எம்புரான் உருவாகியுள்ளது. இந்த படத்தில் மன்சு வாரியர், பிரித்திவிராஜ் மற்றும் ஹாலிவுட் நடிகர், நடிகைகளும் நடித்திருக்கிறார்கள்.

மலையாள சினிமா என்றாலே இயல்பான கதை சொல்லல் என்கிற ஃபார்முலாவை மீறி, மேக்கிங்கில் அசத்தியிருக்கிறார் பிருத்திவிராஜ். பாலிவுட், ஹாலிவுட் படங்கள் போல இப்படத்தை உருவாக்கியிருக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியானது.

லூசிபர் படத்தை போலவே இந்த படத்திலும் அதிரடி சண்டை காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. இந்த படத்திற்கு அதிக அளவில் முன்பதிவு இருந்தது. தமிழில் விடாமுயற்சியை விட இந்த படத்திற்கு அதிக டிக்கெட் முன்பதிவு இருந்தது. படம் வெளியாகி 2 நாட்களில் இப்படம் 100 கோடி வசூலை தாண்டியது.

இந்த படத்தில் சிறுபான்மையினர் மீது மதவாத கட்சிகள் நடத்தும் தாக்குதல், குஜராத்தில் நடந்த இனப்படுகொலைகள் தொடர்பான காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. இது மதவாத கட்சிகளுக்கும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பினருக்கும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே, இப்படத்திற்கு பாஜக, ஆர்.எஸ்.எஸ் மிரட்டல் விடுத்திருக்கிறார்கள். எனவே, படத்தின் சில காட்சிகளை நிக்கவும், சில வசனங்களை மியூட் செய்யவும் படக்குழு திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில், இதை கண்டித்துள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன் ‘மிகக் கொடூரமான இனப்படுகொலையை படம் வெளிக்காட்டுவதால் சங்கபரிவார்களுக்கு கோபம் வந்திருக்கிறது. கலைப் படைப்பை, கலைஞர்களை அழிக்க முயற்சிப்பது ஜனநாயக உரிமையை மீறும் செயல், ஜனநாயக சமூகத்தில் கருத்து சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும்’ என சொல்லி இருக்கிறார்.

தியேட்டரில் ரசிகர்கள் செய்த அலப்பறை!. கடுப்பாகி விக்ரம் என்ன பண்ணார் பாருங்க!..

0

Chiyan vikram: சியான் விக்ரம் நடித்து உருவான திரைப்படம்தான் வீர தீர சூரன். இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, மலையாள நடிகர் சுராஜ் மற்றும் ராயன் படத்தில் நடித்த துஷரா விஜயன் இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். சித்தா படத்தை இயக்கிய அருண்குமார் இப்படத்தை இயக்கியிருந்தார்.

இந்த படத்தின் போஸ்டர்கள் மற்றும் டிரெய்லர் வீடியோக்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. எனவே, இப்படத்திற்கு அதிக அளவில் வரவேற்பும் இருந்தது. ஒருபக்கம், இந்த படத்திற்காக அதிக அளவில் விக்ரம் புரமோஷனும் செய்தார். தமிழ்நாடு மட்டுமில்லாமல் ஹைதராபாத், கேரளா போன்ற இடங்களுக்கும் சென்று படக்குழு புரமோஷன் செய்தது.

ஒருபக்கம் பல ஊடகங்களிலும் படக்குழு பேட்டி கொடுத்தது. விக்ரம் கலர் கலர் சட்டைகளை அணிந்துகொண்டு சென்று ரசிகர்களிடம் படம் பற்றி பேசி புரமோஷன் செய்தார். அதேநேரம், கடந்த 27ம் தேதி காலை வெளியாகவிருந்த இந்த படம் வெளியாகவில்லை. ஓடிடி உரிமை தொடர்பாக இப்படத்தில் முதலீடு செய்திருந்த சில நிறுவனங்களுடன் பிரச்சனை ஏற்பட்டதே காரணம் என சொல்லப்பட்டது.

அதன்பின் பிரச்சனைகள் பேசி முடிக்கப்பட்டு படம் மாலை 5 மணிக்கு வெளியானது. விக்ரம் ரசிகர்களுக்கு இப்படம் மிகவும் பிடித்திருக்கிறது. ஒருபக்கம், தமிழகத்தில் உள்ள பல தியேட்டர்களுக்கு சென்று ரசிகர்களுடன் படம் பார்த்து வருகிறார் சியான் விக்ரம். அந்தவகையில் திண்டுக்கல்லில் உள்ள ஒரு தியேட்டருக்கு சென்றபோது அவரின் காரின் மேல் ரசிகர்கள் ஏறிக்கொண்டார்கள். எனவே, சரியான ஏற்பாடுகளை தியேட்டர் நிறுவனம் செய்யாத கோபத்தில் அங்கிருந்து கிளம்பி சென்றுவிட்டார் விக்ரம்.

இந்த அறிகுறிகள் இருந்தால் கிட்னி பெயிலியர் உறுதி!! சிறுநீரகத்தை பாதுகாக்க நாம் செய்ய வேண்டிய விஷயங்கள்!!

0

நம் நாட்டில் கேன்சர்,நீரிழிவு,ஹார்ட் அட்டாக் போன்ற நோய் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது.இந்த லிஸ்டில் கிட்னி சம்மந்தப்பட்ட பாதிப்புகளும் இணைந்துவிட்டது.சிறுநீரக கல்,சிறுநீரக செயலிழப்பு,யூரிக் அமில அளவு
அதிகரித்தல்,சிறுநீரக பாதை தொற்று,சிறுநீர்ப்பை வீக்கம் என்று சிறுநீரகம் சம்மந்தப்பட்ட பாதிப்புகளால் பலரும் அவதியடைந்து வருகின்றனர்.

நமது உடலில் உள்ள உறுப்புக்களின் ஆரோக்கியம் அவசியமான ஒன்றாகும்.எந்த ஒரு உறுப்பு பாதிக்கப்பட்டாலும் நமது உடல் ஆரோக்கியம் மொத்தமும் சிதைந்துவிடும்.சிறுநீரக ஆரோக்கியம் பாதிக்க
மோசமான வாழ்க்கைமுறை மற்றும் மோசமான உணவுப்பழக்க வழக்கங்கள்தான் காரணம்.

சிறுநீரகம் சம்மந்தப்பட்ட பாதிப்புகளை ஆரம்ப நிலையில் கவனிக்காமல் விட்டால் நிச்சயம் பின்னாளில் பெரிய பிரச்சனைகளை அனுபவிக்க நேரிடும்.உங்கள் சிறுநீரகத்தில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் சில அறிகுறிகள் தென்படுவதை கொண்டு கண்டறிந்துவிடலாம்.

சிறுநீரக ஆரோக்கியம் மோசமாக இருப்பதை காட்டும் முக்கிய அறிகுறிகள்:

1)உடலில் அதீத சோர்வு ஏற்படுதல்
2)காலை நேரத்தில் எழுந்த உடன் உடல் களைப்பு ஏற்படுதல்
3)தூக்கத்தில் இருந்து எளிதில் எழுந்திருக்க முடியாத நிலை
4)சிறுநீர் நிறத்தில் மாற்றம்
5)நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல்
6)கடும் துர்நாற்றத்துடன் சிறுநீர் வெளியேறுதல்
7)வயிற்று பகுதியில் வலி மற்றும் வீக்கம் ஏற்படுதல்
8)இடுப்பு பகுதியில் வீக்கம்
9)கை,கால் வீக்கம்
10)தோல் தொடர்பான பாதிப்புகள்
11)அடிக்கடி சிறுநீர் வெளியேற்றும் நிலை
12)சிறுநீர் வெளியேற்றும் போது வலி,எரிச்சல் உண்டாதல்

சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த நாம் பின்பற்ற வேண்டிய முக்கிய விஷயங்கள்:

1.காலையில் எழுந்ததும் உடலுக்கு போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.தண்ணீரில் சிறிது எலுமிச்சை சாறு கலந்து குடிப்பது இன்னும் நல்லது.

2.சர்க்கரை பானங்களை தவிர்க்க வேண்டும்.உணவில் குறைவான அளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

3.பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்.பாக்கட்டில் அடைத்து விற்கப்படும் உணவுகளை தவிர்க்க வேண்டும்.உடலில் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

4.இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டியது முக்கியம்.புகைப்பழக்கம் மற்றும் மது பழக்கத்தை தவிர்க்க வேண்டும்.

5.மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சிறுநீரக பரிசோதனை செய்ய வேண்டும்.சிறுநீரை அடக்கி வைக்காமல் வெளியேற்ற வேண்டும்.

6.சிறுநீரகத்தில் உள்ள கழிவுகள் அகல வெறும் வயிற்றில் தண்ணீர் பருக வேண்டும்.சீரகம்,புதினா,எலுமிச்சை ஆகியவற்றை கொண்டு பானம் தயாரித்து பருகினால் சிறுநீரகத்தில் உள்ள கழிவுகள் முழுமையாக அகலும்.

கொடிய நோய்களை பதம் பார்க்கும் இந்த காய்!! எந்தெந்த நோய்களுக்கு எப்படி சாப்பிட வேண்டும்?

0

உடல் ஆரோக்கியத்தை மேம்ப்படுத்துவதில் கடுக்காயின் பங்கு இன்றியமையாதது.கொடிய நோய்களையும் குணப்படுத்தும் தன்மை கொண்ட கடுக்காயை எப்படி சாப்பிட வேண்டும் என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.

கடுக்காயில் காணப்படும் சத்துக்கள்:

**இரும்பு **கால்சியம் **மெக்னீசியம் **நார்ச்சத்து **புரதச்சத்து **வைட்டமின்கள் **நியாசின் **போலேட்

கடுக்காய் ஒரு சிறந்த மூலிகை பொருளாக பார்க்கப்படுகிறது.சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் இந்த கடுக்காயின் பங்கு இன்றியமையாதது.கடுக்காய் பொடியை சாப்பிடுவதால் தலைவலி முதல் கால் நமைச்சல் வரையிலான பாதிப்புகள் குணமாகும்.

கடுக்காயை பொடித்து தண்ணீரில் கலந்து குடித்தால் தொண்டை சம்மந்தபட்ட பிரச்சனைகள் அனைத்தும் குணமாகும்.கடுக்காய் தேநீர் செய்து குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.இரத்தத்தில் உள்ள கழிவுகள் நீங்கி இரத்த விருத்தி அதிகரிக்க கடுக்காய் பானம் செய்து குடிக்கலாம்.

கடுக்காய் பொடியை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் குடல் சுத்தமாகும்.செரிமானப் பிரச்சனையை குணப்படுத்திக் கொள்ள கடுக்காய் பானம் செய்து குடிக்கலாம்.கடுக்காய் பொடியை வெறும் வற்றில் சாப்பிட்டால் வாயுத் தொல்லை,வயிறு உப்பசம் ஏற்படாமல் இருக்கும்.

கடுக்காய் பொடியில் தேநீர் செய்து பருகினால் தலைவலி பாதிப்பு குணமாகும்.இருமல் குணமாக கடுக்காய் கசாயம் செய்து குடிக்கலாம்.பல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாக கடுக்காய் பொடியை பயன்படுத்தலாம்.

குடல் கழிவுகள் அகல கடுக்காய் பொடியை வெது வெதுப்பான தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும்.கடுக்காய் பொடி மஞ்சள் காமாலை நோயை குணமாக்கும்.கடுக்காய் பொடி ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து நெயில் கலந்து சாப்பிட்டால் மூல நோய் பாதிப்பு குணமாகும்.

கடுக்காய் நீர் பருகினால் வயிற்று வலி பாதிப்பு குணமாகும்.பசியின்மை பிரச்சனை இருப்பவர்கள் கடுக்காய் பொடியை தண்ணீர் அல்லது பாலில் கலந்து பருகலாம்.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கடுக்காய் பால் பருகலாம்.

நீண்ட கால சர்க்கரை நோய் புண்களை குணமாக்கும் அதிசய பூ!! மிஸ் பண்ணிடாதீங்க!!

0

சாதாரண காயங்கள் ஏற்பட்டால் அவை சில தினங்களில் குணமாகிவிடும்.ஆனால் சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு சாதாரண புண்கள் கூட பெரிய பாதிப்பை உண்டாக்கிவிடும்.சர்க்கரை நோய் பாதித்தவர்களுக்கு உடலில் காயங்கள்,புண்கள் ஏற்பட்டால் உடனடி மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.

இல்லையேல் உயிருக்கு ஆபத்தான நிலைக்கு கொண்டு சேர்த்துவிடும்.சர்க்கரை நோய் புண்களை குணமாக்கி கொள்ள ஊமத்தை இலை மற்றும் ஊமத்தை பூவை மருந்தாக பயன்படுத்துங்கள்.

1)நல்லெண்ணெய்
2)ஊமத்தை பூ
3)ஊமத்தை இலை

50 மில்லி நல்லெண்ணெய்யை வாணலி ஒன்றில் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்த வேண்டும்.பிறகு ஒரு ஊமத்தை பூ மற்றும் இரண்டு ஊமத்தை இலையை மைய்ய அரைத்து சூடாகி கொண்டிருக்கும் நல்லெண்ணெயில் சேர்க்க வேண்டும்.

இவற்றை நன்றாக காய்ச்சி ஆறவைத்து சர்க்கரை புண்கள் மீது பூசி வந்தால் அவை சீக்கிரம் குணமாகும்.சாதாரண புண்களையும் இந்த மூலிகை எண்ணெய் குணப்படுத்தும்.

1)தேங்காய் எண்ணெய்
2)ஊமத்தம் பூ

அடுப்பில் வாணலி வைத்து 50 மில்லி தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு அதில் நான்கு ஊமத்தம் பூவை போட்டு தைலம் போல் காய்ச்ச வேண்டும்.இதை ஆற வைத்து சர்க்கரை புண்கள் மீது தடவினால் சில தினங்களில் குணமாகிவிடும்.

1)ஊமத்தை இலை
2)மஞ்சள் தூள்
3)ஊமத்தை பூ

முதலில் ஊமத்தை இலை மற்றும் ஊமத்தை பூவை சிறிதளவு எடுத்துக் கொள்ளுங்கள்.பிறகு இதனை மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைக்கவும்.

அதன் பிறகு இந்த கலவையில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து மிக்ஸ் செய்து சர்க்கரை நோய் புண்கள் மீது தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.

1)ஊமத்தை இலை
2)ஊமத்தை பூ

முதலில் ஊமத்தை இலை மற்றும் ஊமத்தை பூ சம அளவு எடுத்து வெயிலில் நன்றாக உலர்த்திக் கொள்ள வேண்டும்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த பொடியை சர்க்கரை நோய் புண்கள் மீது தடவினால் புண் சீக்கிரம் குணமாகிவிடும்.

சர்க்கரை நோய் முதல் புற்றுநோய் வரை.. அசர வைக்கும் அவரைக்காயின் ஆரோக்கிய நன்மைகள்!!

0

நாம் உணவாக எடுத்துக் கொள்ளும் அவரையில் ஏகப்பட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.புரதம்,கால்சியம்,நார்ச்சத்து,பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கும் அவரைக்காயை சாப்பிடுவதால் உடலில் குணமாகும் நோய்கள் என்னென்ன என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.

அவரைக்காயில் உள்ள நார்ச்சத்து செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.அவரைக்காயை ஜூஸாக பருகினால் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கி மலம் வெளியேறும்.அவரைக்காயில் பொட்டாசியம் சத்து அதிகமாக நிறைந்திருப்பதால் இதை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தம் கட்டுப்படும்.

அவரைக்காயில் இருக்கின்ற கால்சியம் சத்து எலும்பு சம்மந்தப்பட்ட பாதிப்புகளை சரி செய்ய உதவுகிறது.பல் வலிமையை அதிகரிக்க அவரைக்காய் சாறு பருகி வரலாம்.அவரை கொண்டிருக்கும் ஊட்டச்சத்துக்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

அவரையில் ஜிங்க் என்ற ஊட்டச்சத்து காணப்படுகிறது.இது உடலில் புற்றுநோய் செல்கள் வளர்வதை கட்டுப்படுத்துகிறது.தினமும் ஒரு கிளாஸ் அவரைக்காய் ஜூஸ் அல்லது அவரை பானம் பருகி வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுப்படும்.

அவரையில் இருக்கின்ற நார்ச்சத்து உடல் எடையை கட்டுப்படுத்துகிறது.பைல்ஸ் பாதிப்பு குணமாக அவரை உணவை உட்கொள்ளலாம்.சிறுநீரக ஆரோக்கியம் மேம்பட அவரைக்காய் உணவுகளை சாப்பிட வேண்டும்.நன்றாக தூக்கம் வர அவரைக்காய் ஜூஸ் குடிக்கலாம்.

சளி,இருமல் பிரச்சனை இருப்பவர்கள் அவரைக்காயில் கஷாயம் செய்து குடிக்கலாம்.அவரைக்காய் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு,கண் சூடு குறையும்.பித்த அளவு குறைய அவரைக்காய் சாறு பருகலாம்.தினமும் காலையில் ஒரு கிளாஸ் அவரைக்காய் ஜூஸ் செய்து குடித்தால் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் குணமாகும்.இரத்த ஓட்டம் சீரக அடிக்கடி அவரைக்காய் உணவுகளை சாப்பிடலாம்.சுவாசம் சம்மந்தபட்ட பாதிப்புகள் குணமாக அவரைக்காய் உணவுகளை உட்கொள்ளலாம்.

அல்சர் முதல் மூட்டு வலி வரையிலான நோய்களை வேரோடு குணமாக்க இந்த கீரையை சாப்பிடுங்கள்!!

0

நமது ஆரோக்கியம் மேம்பட கீரை உணவுகளை வாரம் ஒன்று அல்லது இருமுறையாவது சாப்பிட வேண்டும்.அனைத்து கீரைகளும் ஊட்டச்சத்துக்கள் கொண்டவையாகும்.இதில் அளவில் அடங்காத ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கும் கீரையாக அகத்தி உள்ளது.

நமது அகத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் அகத்தி கீரையின் மருந்து குணங்களை நாம் நிச்சயம் அறிந்து கொள்ள வேண்டும்.அகத்தி கீரையில் வெள்ளை அகத்தி,சிவப்பு அகத்தி என்று இரு வகைகள் இருக்கின்றது.அகத்தி கீரை மற்றும் பூ இரண்டுமே அதிக மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது.

தினமும் வெறும் வயிற்றில் அகத்தி கீரை ஜூஸ் செய்து பருகினால் வாய் மற்றும் வயிற்றுப்புண்கள் குணமாகும்.அகத்தி கீரை சாறை தேங்காய் பாலில் கலந்து குடித்தால் குடல் ஆரோக்கியம் மேம்படும்.அகத்தி கீரை ஜூஸ் குடித்து வந்தால் மலச்சிக்கல்,செரிமானப் பிரச்சனை குணமாகும்.

அகத்தி கீரை ஜூஸ் உடல் சூட்டை தணிக்க உதவுகிறது.அகத்தி கீரையை சாப்பிட்டு வந்தால் கண் பார்வை திறன் மேம்படும்.இரத்தத்தில் உள்ள சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்க அகத்தி ஜூஸ் செய்து குடிக்கலாம்.

தேங்காய் பாலில் அகத்தி சாறு கலந்து குடித்தால் உடலில் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும்.அகத்தி கீரையில் இருக்கின்ற கால்சியம் சத்து எலும்புகளை வலிமையாக்க உதவுகிறது.மூட்டு வலி பிரச்சனை இருப்பவர்கள் அகத்தி கீரையை சாப்பிட்டு வந்தால் அபாயம் குறையும்.

அகத்தி கீரை சாறு சொறி,சிரங்கு போன்ற தோல் பிரச்சனைகளை சரி செய்கிறது.உடலில் பித்தம் அதிகமாகிவிட்டால் அதை குறைக்க அகத்தி கீரை சாறு குடிக்கலாம்.விந்து குறைபாடு,மலட்டு தன்மை பிரச்சனை இருப்பவர்கள் வாரம் மூன்று முறை அகத்தி கீரை சாப்பிட வேண்டும்.

இருதய ஆரோக்கியம் மேம்பட அகத்தி கீரை சாப்பிடலாம்.உடலிலுள்ள புண்கள் குணமாக அகத்தி கீரை சாறை பூசலாம்.இரத்த சோகை பாதிப்பு குணமாக அகத்தி கீரை சாப்பிடலாம்.அகத்தி கீரை சாறு கருவளைய பாதிப்பை சரி செய்ய உதவுகிறது.