Home Blog Page 351

அனுமனின் இந்த ஒரு மந்திரத்தை மட்டும் கூறுங்கள்..!! வீட்டில் உள்ள தீய சக்திகள் அனைத்தும் மிரண்டு ஓடும்..!!

0

எங்கெல்லாம் ராம நாமம் ஒலிக்கின்றதோ அங்கெல்லாம் சென்று, அங்கு அந்த நாமத்தை ஒழிக்கின்றவர்களுக்கும் பயபக்தியுடன் அந்த நாமத்தை கேட்பவர்களுக்கும் அருள்புரிய கூடியவர் தான் ஆஞ்சநேயர். மாருதி, அனுமன், அஞ்சனை மைந்தன், வாயுபுத்திரன் இப்படி எல்லாம் பல பெயர்கள் இருந்தாலும், ஆஞ்சநேயர் என்ற பெயரை நாம் சொல்லும் பொழுது அதில் உள்ள கம்பீரம் நமக்கு தெரிகின்றது.

பலவிதமான அற்புதப் பலன்களை நமக்கு அள்ளித் தரக்கூடிய அந்த அனுமனின் வழிபாடு என்பது காரிய தடைகள் மற்றும் தீய சக்திகளை நீக்கக்கூடிய ஒரு சக்தி வாய்ந்த வழிபாடு ஆகும். இன்றைய உலகில் தீய சக்திகளால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை என்பது அதிகரித்து காணப்படுகிறது. அதனை நீக்குவதற்கு அனுமனின் மந்திரம் ஒன்றே போதும்.

இருள் அதிகமாக சூழும் சமயத்தில் தான் துஷ்ட சக்திகளின் நடமாட்டமும் அதிகமாக இருக்கும் என்று சொல்லுவார்கள். இருள் அதிகமாக சூழ்ந்திருக்கும் அமாவாசை தினத்திலும் கெட்ட சக்திகளின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும்.

இதன் அடிப்படையில் உங்களுடைய வீட்டில் ஏதேனும் துர்சக்திகளால் பிரச்சனைகள் இருந்தால், வீட்டில் இருப்பவர்கள் துர் சக்திகளால் பாதிக்கப்பட்டிருந்தால், வரும் அமாவாசை நாளில் அனுமனது இந்த சக்தி வாய்ந்த மந்திரத்தை சொல்லுங்கள். உங்களுடைய துன்பங்கள் உங்களை விட்டு சீக்கிரமாக விலகும்.

வீட்டில் யாரேனும் கெட்ட சக்தியால் பாதிக்கப்பட்டு, பிரம்மை பிடித்தது போல இருக்கிறார்கள் என்றாலும், இந்த பரிகாரத்தை செய்யலாம். அல்லது துஷ்ட சக்திகளின் ஆதிக்கத்தால் ரொம்பவும் ஆக்ரோஷமாக இருப்பவர்களை அடக்குவதற்கும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

இன்றைய தினம் 29-3-2025 இந்த அமாவாசை திதியோடு சூரிய கிரகணமும் வரவிருக்கிறது. சனி பெயர்ச்சியும் நடக்கவிருக்கிறது. ஆக இந்த நாள் அதிசக்தி வாய்ந்த நாளாக கருதப்படுகிறது. இன்று சூரிய உதயத்திற்கு பிறகு முன்னோர்கள் வழிபாட்டை எல்லாம் முடித்துவிட்டு, சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு இந்த மந்திரத்தை படியுங்கள்.

இல்லையென்றால் மாதந்தோறும் வருகின்ற அமாவாசை மற்றும் சனிக்கிழமை நாட்களில் இந்த மந்திரத்தை கூறலாம்.

“அஞ்ஜனா கர்ப்ப ஸம்பூதம் குமாரம் ப்ரும்ஹ சாரிணம் துஷ்ட க்ரஹ வினாசயா ஹனுமந்த முபாஸ் மஹே!”

பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, அனுமனை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். பிறகு பாதிக்கப்பட்டவர்களால் இந்த மந்திரத்தை படிக்க முடியும் என்றாலும் படிக்கலாம், அல்லது பாதிக்கப்பட்டவர்களை பூஜை அறையில் அமர வைத்துவிட்டு, மற்றொருவர் இந்த மந்திரத்தை படித்து பாதிக்கப்பட்டவருடைய காதுகளில் இந்த மந்திரம் விழும் படி செய்யலாம்.

அனுமனை நினைத்து இந்த மந்திரத்தை அமாவாசை தினத்தன்று படித்தால் தீய சக்திகளில் இருந்து விடுபடக்கூடிய பாக்கியம் உங்களுக்கு கிடைக்கும்.சனிக்கிழமை மாலை பூஜை அறையில் விளக்கு ஏற்றி எவர் ஒருவர் இந்த மந்திரத்தை படிக்கிறார்களோ, அவர்கள் உடம்பில் இருக்கும் கெட்ட சக்தியும் சரி, அவர்கள் வீட்டில் இருக்கும் கெட்ட சக்தியும் சரி, உடனடியாக வெளியேறும்.

உங்கள் வீட்டின் குபேர மூலையில் இந்த ஒரு செடியை வைத்து பாருங்கள்..!! அதிர்ஷ்டம் தேடி வரும்..!!

0

இன்றைய காலத்தில் வீட்டிற்கு உள்ளேயும் சரி, வீட்டிற்கு வெளியேயும் சரி சில வாஸ்து செடிகளை வளர்ப்பது என்பது ஒரு பழக்கமாகி வருகிறது. பணப் பிரச்சனைகள் நீங்க வேண்டும், உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க வேண்டும், மகாலட்சுமி அம்சம் வேண்டும் என்பதற்காக பலவிதமான செடிகளை வாங்கி வீட்டில் வளர்த்து வருகின்றனர்.

அந்த வகையில் சில முக்கியமான வாஸ்து செடிகளுள் ஒன்று தான் மூங்கில் செடி. இந்த மூங்கில் செடியை வீட்டில் வைத்து வளர்ப்பதனால் என்ன பலன்? அதனை நமது வீட்டில் எங்கு வைக்க வேண்டும்? என்பது குறித்து காண்போம்.

எப்போதுமே நம்முடைய வீடுகளை சுற்றி மரங்கள், செடிகள் இருந்தாலே, நமக்கான ஆரோக்கியம் கூடும் என்பார்கள். இதற்கு காரணம் தாவரங்களிலிருந்து நமக்கு கிடைக்கக்கூடிய ஆக்சிஜன் போன்ற பலவிதமான நன்மைகள் இருப்பதால் தான்.இவைகள் அதிக ஆக்சிஜன் வழங்குவதுடன், மாசுபடும் துகள்களை சிலவகை செடிகள் கவர்ந்து அழித்து விடும். இதனால் சுற்றுப்புறச்சூழலும் மாசுபடாமல் இருக்கும்.

வீட்டுக்கு வெளியே செடியை வளர்க்கும் போதே இப்படியென்றால், இந்த தாவரங்களை வீடுகளுக்குள் வைத்திருக்கும்போது, மேலும் ஆரோக்கியம் பெருகும். ஆனால், சில வகையான செடிகளை மட்டுமே வீட்டுக்குள் வளர்க்க முடியும். இதுகுறித்து வாஸ்துவில் விரிவாகவே சொல்லப்பட்டுள்ளது.

ஆனால் ஒரு சில செடிகளை வீடுகளில் வைத்து வளர்க்கக்கூடாது என்பார்கள். உதாரணமாக அத்திமரம், புளியமரம், பருத்தி செடி இது போன்ற சில செடிகளை வீடுகளில் வைத்து வளர்க்கக் கூடாது. அவ்வாறு வளர்த்தால் குடும்பத்தில் பிரச்சனைகள், உடல்நல குறைபாடு, குடும்ப முன்னேற்றம் ஆகியவை பாதிக்கப்படும் என்று வாஸ்து ரீதியாக கூறப்படுகிறது.

அந்த வகையில் வீட்டில் வைத்து வளர்த்தால் பல நன்மைகளை தரக்கூடிய, அதாவது சுற்றுச்சூழல் நன்றாக இருக்கவும், பாசிட்டிவ் எனர்ஜி பெருகவும், குடும்பத்தில் நிதி நெருக்கடி சீராகவும், மனதில் அமைதி பெறவும் குறிப்பிட்ட செடிகளை வளர்க்க வேண்டும். அந்தவகையில், பெரிதும் பயன்தரக்கூடிய செடிகளுள் ஒன்றுதான் மூங்கில் செடியாகும்.

2-3 அடி உயரம் வரை வளரக்கூடியவை மூங்கில் செடிகளை கிழக்கு திசையில் நட்டு வைக்கலாம். கிழக்கு திசைக்கான சூழல் இல்லாவிட்டால் வடக்கு, வடமேற்கு திசையிலும் நடலாம். இதனால் வீட்டில் மகிழ்ச்சியும், அமைதியும் கிடைப்பதுடன் பண நெருக்கடியும் சீராகும். படுக்கை அறையிலும் வைக்கலாம். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அந்நியோன்யம் கூடும்.

பிள்ளைகள் படிக்கும் அறையிலும் மூங்கில் செடிகளை வைக்கலாம்.
வீடுகள் மட்டுமல்லாமல், தொழில் செய்யும் அலுவலகங்களிலும், கடைகளிலும் வைக்கலாம். வீட்டின் வரவேற்பறையில் அழகான மேஜையின் மீது இதை வைக்கலாம். அலமாரிகளில் வைக்கலாம்.

மூங்கில் செடி இருக்குமிடமெல்லாம் சுற்றுப்புறம் தூய்மையாக இருப்பதுடன், எதிர்மறை சக்தியும் அகற்றப்படும். ஆனால் எங்கு வைத்தாலும் சூரிய ஒளி நேராக படும்படி வைக்கக்கூடாது. அப்படி வைத்தால் செடி சுருங்கிவிடும். எக்காரணம் கொண்டும் இந்த செடியின் இலைகள் காய்ந்து விடக்கூடாது. அவ்வாறு காய்ந்தால் பணத்தட்டுப்பாடும் வந்துவிடும். மூங்கில் செடிக்கு உப்புத் தண்ணீரை ஊற்றக்கூடாது. சுத்தமான நீரை ஊற்ற வேண்டும்.

ஸ்டாலினிடம் வீரம்!. மோடிக்கிட்ட கெஞ்சல்!.. உங்க பருப்பு வேகாது!.. விஜயை விளாசும் பிரபலம்!..

0

அரசியலுக்கு வந்தது முதலே திமுக கட்சியை மட்டுமே விமர்சித்து பேசி வருகிறார் விஜய். முதல் கட்சி மாநாடு முதல் இன்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் வரை அவர் ஆக்ரோஷமாக பேசுவதும், காட்டுவதும் திமுக எதிர்ப்பு மட்டுமே. பாஜக என சொல்லவே பயப்படுகிறார் என்கிற விமர்சனம் இருக்கிறது. இதற்கு பதில் சொன்ன விஜய் ‘எங்களுக்கு எந்த பயமும் இல்லை’ என்றார். மேலும், பிரதமர் மோடியை பற்றி பேசியப்போது ‘ஏன் ஜி.. தமிழ்நாட்டுக்கு பாத்து பண்ணுங்க ஜி’ என பம்மினார்.

இந்நிலையில், பிரபல யுடியூபரும், சினிமா விமர்சகருமான புளூசட்ட மாறன் விஜயை பற்றி விமர்சித்திருக்கிறார். எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது:

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று வீராப்பாக சொன்னால் மட்டும் போதாது. செயலிலும் காட்ட வேண்டும் என புலி போல கர்ஜித்தார் விஜய். அவருடைய பெயரை அவர் கூறுகிறார். இதில் என்ன வீராப்பு இருக்கிறது? இதை நக்கலடித்த அதே வாய்.. மோடியையும் நக்கலடித்து இருந்தால் தைரியத்தை பாராட்டி இருக்கலாம்.

ஆனால் இரு கைகளையும் தலைக்கு மேல் வைத்து வணங்கி ‘மோடி சார்.. தமிழ்நாட்டுக்கு ஏதாவது பாத்து செய்யுங்க சார்’ என மண்டி போட்டுள்ளார் விஜய். நமது பாநில உரிமையை வீராப்பாக கேட்க வேண்டும் விஜய். பாத்து செய்யுங்க என பூனை போல கெஞ்சுவது ஏன்? விஸ்வகுரு மோடி, இரும்பு மனிதர் அமித்ஷா என வீராப்பாக சொன்னால் மட்டும் போதாது. தமிழ்நாட்டின் உரிமையை பறிக்க கூடாது என சவுண்ட் விட்டிருந்தால்.. நீங்கள் மானத்தமிழன்.

அப்படி செய்யாததால்தான் சொல்கிறோம் உங்களை. B டீம் என்று. பாஜகவிற்கு எதிராக நீங்கள் ஆயிரம் மேடைகளில் கூவி..நாடகம் ஆடினாலும்.. நீங்கள் B டீம்தான். திமுக, விசிக வாக்குகளை பிரிக்க பெரியார், அம்பேத்கர் முகமூடிகளை அணிந்து வந்தாலும் பருப்பு வேகாது. வரும் தேர்தலில் வாக்குகளை பிரிக்கும் அசைன்மென்ட்டை முடித்துவிட்டு பழையபடி சினிமாவில் நடிக்க கிளம்புங்கள்.
அதுதானே உங்கள் திட்டம்? பிறகு எதற்கு இங்கே வெஜ் மட்டன் பிரியாணி மற்றும் கருவாட்டு சாம்பார் அரசியல் செய்து காமடி செய்கிறீர்கள்?

அம்மா உணவகத்தின் வெஜ் குஸ்கா!.. அதிமுக பற்றி பேசாதது ஏன்?!. விஜயை நக்கலடிக்கும் பிரபலம்!….

0

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்த நாள் முதலே திமுகவை பற்றி மட்டுமே தொடர்ந்து பேசி வருகிறார். திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்றும் மட்டுமே சொல்லிக்கொண்டிருக்கிறார். மறந்தும் அவரின் வாயில் அதிமுக என்கிற வார்த்தை வரவே இல்லை. இன்று கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் பேசியபோதும் திமுகவை மட்டுமே விமர்சித்தார். மேலும்.. ‘பார்த்து பண்ணுங்க சார்’ என பிரதமர் மோடிக்கு கோரிக்க வைத்தார்.

இந்நிலையில், பிரபல யுடியூப் மற்றும் சினிமா விமர்சகர் புளூசட்ட மாறன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:

அம்மா உணவகத்தின் வெஜ் குஸ்கா!.

திமுகவிற்கு எதிராக பொங்கும்போது ‌மட்டன் பிரியாணி போல மாஸ் காட்டும் விஜய் அதிமுகவை பற்றி இதுவரை ஒரு வார்த்தை கூட பேசாத..ஆறிப்போன குஸ்கா போல இருக்கிறார். கேட்டால் ஆளுங்கட்சியை எதிர்ப்பதுதான் வீரம் எனும் மொக்கை லாஜிக் வேறு. நாட்டை ஆளும் பாஜகவிற்கு எதிராக அரசியல் செய்து.. அறுத்து தள்ளிட்ட மாதிரி.

vijays-slanderous-speech-about-stalin
vijays-slanderous-speech-about-stalin

ஆளும் திமுக அரசை விமர்சிக்க வேண்டும் என்பது முற்றிலும் சரி. ஆனால் அதிமுக தமிழ்நாட்டை ஆண்டு 50 ஆண்டுகள் ஆகிவிட்டது? 2021 வரை 10 வருடங்களாக அவர்களின் ஆட்சிதானே? ஊழல், லஞ்சம் பற்றி வாய் கிழிய பேசும் நீங்கள் A1 என குற்றம் சாட்டப்பட்டு தண்டனை பெற்ற ஜெயலலிதாவை பறறி பேசாமல் பம்முவது ஏன்?

எடப்பாடி ஆட்சியில் எந்த தவறும் நடக்கவில்லையா? ஜெ.வை விமர்சித்தால் பெண்களின் வாக்குகள் கிடைக்காது எனும் பீதியா? தேர்தல் சமயத்தில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்பு உள்ளது என்பதால் இந்த அமைதியா? ஒரு சாமான்ய மனிதரை கேட்டால் கூட திமுகவும், அதிமுகவும் எங்களை ஆண்டது‌போதும். புதிதாய் வரும் நேர்மையான தலைவரின் கட்சிக்கு இம்முறை வாய்ப்பு அளிப்போம் என ஒவ்வொரு முறையும் கூறுவதுண்டு.

ஆனால் நீங்கள் அந்த சாமான்யருக்கு உள்ள புரிதல் கூட இல்லாமல் திமுகவை மட்டும் கடித்து வைத்து அதிமுகவின் மறைமுக சொம்பு போல செயல்படுவது முதுகெலும்பற்ற செயல்‌.. உங்கள் சாயம் வேகமாக வெளுத்து வருகிறது’ என பதிவிட்டிருக்கிறார்.

உசிலம்பட்டி நகராட்சி தலைவர் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள் 3 பேர் பதவி தூக்கியடிப்பு: பின்னணி இதுதான்!

0

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் விதிகளை மீறி செயல்பட்ட மாநகராட்சி மற்றும் நகராட்சி நிர்வாகிகள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன் அடிப்படையில்,  சென்னை மாநகராட்சி மற்றும் தாம்பரம் மாநகராட்சி உள்ளிட்ட நகர்ப்புற உள்ளாட்சிகளில் பதவி வகித்த சிலர், தமிழக அரசின் உத்தரவின்படி, அதிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

உள்ளாட்சி அமைப்புகளுக்கான சட்டப்பிரிவு

தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள், 1998ம் ஆண்டு இயற்றப்பட்ட “தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம்” கீழ் செயல்படுகின்றன. இந்த சட்டத்தின் விதிமுறைகளை மீறிய பொது பிரதிநிதிகள் மீது, தேவையான நடவடிக்கைகளை எடுக்க தமிழக அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மேயர், துணை மேயர்கள், கவுன்சிலர்கள், துணை தலைவர்கள், மண்டல குழு தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் சட்டத்தை மீறியதாக நிரூபிக்கப்பட்டால், அவர்களை பதவி நீக்கம் செய்ய அதிகாரம் அரசுக்கு உள்ளது.

பதவி நீக்கப்பட்டவர்களின் விவரங்கள்

இந்த சட்டத்தை மீறி செயல்பட்டதாக, சென்னை மாநகராட்சி 189வது வார்டு கவுன்சிலர் பாபு, 5வது வார்டு கவுன்சிலர் சொக்கலிங்கம், தாம்பரம் மாநகராட்சி 40வது வார்டு கவுன்சிலரும் 3வது மண்டல குழுத் தலைவருமான ஜெயபிரதீப் மற்றும் உசிலம்பட்டி நகராட்சி 11வது வார்டு கவுன்சிலரும் நகராட்சி தலைவருமான சகுந்தலா ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை தொடர்பாக தமிழக அரசு தனித்தனியே அரசாணைகள் வெளியிட்டுள்ளது. சட்ட ஒழுங்கை பாதுகாக்கவும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் முறையான நிர்வாகத்தை உறுதி செய்யவும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அரசு தகவல் வெளியிட்டுள்ளது.

அரசியல் பின்னணி

பதவி நீக்கம் செய்யப்பட்ட உசிலம்பட்டி நகராட்சி தலைவராக இருந்த சகுந்தலா, 2024ஆம் ஆண்டு திமுகவிலிருந்து அதிமுகவிற்கு தாவியவர். மேலும், சென்னை மாநகராட்சி 5வது வார்டு கவுன்சிலராக இருந்த சொக்கலிங்கம், திருவொற்றியூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கே.பி. சங்கரின் தம்பியாகும். இந்த நடவடிக்கைகள், தமிழக அரசின் கட்டுப்பாட்டு முயற்சியின் ஒரு பகுதியாகவும், உள்ளாட்சி அமைப்புகளில் ஒழுங்குமுறையை நிலைநிறுத்தவும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நான் அமித்ஷாவை மீட் பண்ணதால உதயநிதிக்கு காய்ச்சல் வந்துவிட்டது!. பழனிச்சாமி நக்கல்!…

0

2 வருடங்களுக்கு முன்பே பாஜக கூட்டணியிலிருந்து விலகியது அதிமுக. ஆனால், இன்னும் ஒரு வருடத்தில் சட்டமன்ற தேர்தல் வருவதால் அதிமுக – பாஜக கூட்டணி மீண்டும் இணையுமா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு ‘வருகிற சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைப்பீர்களா?’ என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு ‘தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருக்கிறது. அப்போது முடிவெடுப்போம்’ என சொன்னாரே தவிர ‘பாஜகவுடன் கூட்டணி இல்லை ஏற்கனவே சொல்லிவிட்டோம்’ என அவர் சொல்லவில்லை.

அதோடு, கொள்கை வேறு.. கூட்டணி வேறு என்றும் பேசியிருந்தார். எனவே, அதிமுக – பாஜக கூட்டணி உறுதி என பலரும் நினைத்தார்கள். மேலும், 3 நாட்களுக்கு முன்பு அவசரமாக டெல்லி சென்று மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். அவருடன் தம்பி துரை, வேலுமணி, சண்முகம் மற்றும் கேபி முனுசாமி ஆகியோர் இருந்தனர். சுமார் 2 மணி நேரம் அவர்கள் ஆலோசித்தார்கள். என்ன பேசினார்கள் என்பது தெரியவில்லை என்றாலும் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை வீழ்த்தியே ஆகவேண்டும் என்பதே சந்திப்பின் சாரம்சம் என டெல்லி பத்திரிக்கையாளர்கள் சொல்கிறார்கள்.

eps

மேலும், டெல்லியில் நடந்த அமித்ஷா – பழனிச்சாமி சந்திப்பு வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணியை உறுதி செய்திருப்பதாகவே பார்க்கப்படுகிறது. அதிமுக – பாஜக கூட்டணி உறுதி என்றே சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறர்கள். ஆனால், அமித்ஷா உடனான சந்திப்பு பற்றி எடப்பாடி பழனிச்சாமி வேறு மாதிரி விளக்களித்தார்.

மக்கள் பிரச்சனைகளுக்காகவே மட்டுமே இந்த சந்திப்பு நடந்தது. கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை. தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. தேர்தல் நெருங்கும்போதுதான் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கும் என விளக்கமளித்திருக்கிறார். கூட்டணி பற்றி பேசப்படவில்லை என பழனிச்சாமி சொல்வது பொய்.. பாஜகவுடன் வேறென்ன பேசியிருக்க போகிறார்கள்? என திமுகவினர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், இன்று சட்டமன்ற வளாகத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய பழனிச்சாமி ‘நான் அமித்ஷாவை சந்தித்தது பற்றியே கடந்த 3 நாட்களாக திமுகவினர் பேசி வருகிறார்கள். கடந்த 2 நாட்களாக சட்டசபையிலும் இதையே பேசுகிறார்கள். அவர்களுக்கு பயம் வந்துவிட்டது. நான் டெல்லி சென்று அமித்ஷாவிடம் பேசியதால் உதயநிதிக்கு காய்ச்சல் வந்துவிட்டது’ என நக்கலடித்தார்.

நீயெல்லாம் கரப்ஷன் கபடதாரி.. ஸ்டாலினை சரமாரியாக விளாசிய விஜய்!!

0

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டமானது இன்று நடைபெற்றது. இதில் விஜய் தற்பொழுது தமிழ்நாட்டின் நடந்த வரும் பல பிரச்சனைகள் குறித்து பேசினார். குறிப்பாக ஆளும் கட்சி கொடுக்கும் நெருக்கடி, மத்திய அரசு நிதி வழங்காதது என அனைத்தையும் குறிப்பிட்டுள்ளார். மேற்கொண்டு இந்த பொதுக்குழு கூட்டத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கட்டாயம் பெண்களுக்கு 100% பாதுகாப்பு அளிப்போம் என தொடங்கி கிட்டத்தட்ட 17 தீர்மானங்களையும் நிறைவேற்றியுள்ளனர்.

மேற்கொண்டு விஜய் கூறியதாவது, தற்போது வருபவன் எல்லாம் முதலமைச்சர் ஆகி விட முடியாது என்று கூறுபவர்கள் தான் எங்களை பொதுக்கூட்டம் என ஆரம்பித்து எங்கேயும் இடம் கொடுக்காமல் முட்டுக்கட்டை போடுகின்றனர். அதேபோல திமுக ஓட்டுக்காக காங்கிரஸ் உடனும், கொள்ளையடிப்பதற்காக ரகசிய கூட்டணியை பாஜக உடனும் வைத்துள்ளது. மேற்கொண்டு திமுகவை கரப்ஷன் கபடதாரிகள் என்றும் பேசினார். இந்த பொதுக்கூட்டத்தில் குறிப்பாக ஸ்டாலினை நேரடியாகவே தாக்கி பேசியுள்ளார். இவர் பேசிய வீடியோவானது தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதே போல ஆதவ் அர்ஜுனா பேசும் பொழுதும் 1999 ஆம் ஆண்டே பாஜக வளர்வதற்கு கலைஞர் உறுதுணையாக இருந்ததாக கூறினார். அதன் ரகசிய கூட்டணி இப்பொழுது வரை தொடர்கிறது. மேற்கொண்டு அண்ணாமலை பெயரை எடுத்தாலே பலரும் திட்ட மட்டும் தான் செகிறார்கள் , எங்கள் தலைவரை கண்டு ஏன் பயப்பட வேண்டும் என்றும் பேசினார்.

விசிகவையும் ஒருநாள் திமுக ஒழிக்கும்!.. தவெக விழாவில் பொங்கிய ஆதவ் அர்ஜுனா.

0

விடுதலை சிறுத்தை கட்சியில் இருந்த ஆதவ் அர்ஜுனா பெரியார் நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு விஜயை பாராட்டி பேச திமுக கோபம் வந்தது. எனவே, விடுதலை சிறுத்தை கட்சிக்கு அழுத்தம் கொடுக்க விளக்கம் கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், விடுதலை சிறுத்தை கட்சியிலிருந்து வெளியேறினார் அண்ணாமலை திமுகவுக்கு வேலை பார்த்து வருகிறார். அவர் மோடிக்கு உண்மையாக இருக்க வேண்டும். தவெகவில் சாதி இல்லை. ஆனால், திமுகவில் சாதி இருக்கிறது.

அதன்பின் தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துகொண்டார். அவருக்கு தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் என்கிற பதவியை கொடுத்தார் விஜய். இன்று தவெக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பரபரப்பான கருத்துக்களை பேசினார் ஆதவ் அர்ஜுனா. விஜய் இனி தளபதி இல்லை.. இனிமேல் அவரை வெற்றி தலைவர் என அழைப்போம்..

பலமான உள் கட்டமைப்போடு தேர்தலுக்கு தயராகி வருகிறோம். அரசியலுக்காக வருமானத்தை விட்டுவிட்டு வந்திருக்கிறார் விஜய். எம்.ஜி.ஆரை அசிங்கப்படுத்தியதால்தான் திமு5 15 வருடங்கள் வொர்க் பிரம் ஹோமில் இருந்தது.

மதிமுகவை எப்படி திமுக ஒழித்ததோ அதேபோல் விசிகவையும் திமுக ஒருநாள் ஒழிக்கும். திமுக சின்னத்தில் போட்டியிட எதற்காக கட்சியை நடத்த வேண்டும்?.. உங்களுகுக் ஓய்வு காலம் நெருங்குகிறது. விரைல் சிறைக்கு போவீர்கள். கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவெடுப்போம். அண்ணாமலையை திமுக செட் செய்துள்ளது. புலி அமைதியாக இருக்கும்போது ஆடு வந்து சம்பந்தம் இல்லாமல் பேசுகிறது. எங்கள் கட்சியையும் தலைவரையும் தொட்டால் உங்கள் உண்மை முகத்தை வெளிகாட்டுவோம்’ என ஆதவ் அஜுன்னா பேசியிருக்கிறார்.

அதிமுக தவெக கூட்டணி உறுதி.. மேடையில் சூசகமாக சொன்ன விஜய்!! பாஜக வுக்கு விழுந்த பெரும் இடி!!

0

இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் முதற் பொதுக்குழு கூட்டமானது சென்னையில் நடைபெற்றது. இதில் விஜய் தாய் தந்தையர் என தொடங்கிய நிர்வாகிகள் அனைவரும் பங்கு கொண்டனர். குறிப்பாக விஜய், இந்த பொதுக்குழு கூட்டத்தில் நேரடியாகவே திமுகவையும் பாஜகவையும் தாக்கி பேசியுள்ளார். கொள்ளையடிக்கவே ரகசிய கூட்டணியில் பாஜகவை பிடித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேற்கொண்டு இவர் யாருடன் கூட்டணி வைப்பார் என்பது குறித்து பேசுவார் என பெரும்பாலானோர் எதிர்பார்த்தனர். ஆனால் அது ரீதியாக அவர் ஏதும் பேசவில்லை. இதற்கு மாறாக, நாங்கள் யாரை நேரடியாக எதிர்க்கிறோம் என்பதை பெயர் சொல்வதில்லை என்று ஒரு கும்பல் கூறுகிறது. அதற்கு மாறாக தான் நாங்கள் மத்திய ஆட்சியில் ஆள்பவர்கள், மாநிலத்தில் ஆளுபவர்கள் எனக் கூறுகிறோம்.

மத்தியில் யார் ஆளுகிறார்கள் என்று தெரியாதா? மத்தியில் காங்கிரசும், மாநிலத்தில் அதிமுக ஆட்சகியுமா நடக்கிறது. பெயர் சொல்லாததற்கு பயம் என்றும் விமர்சனம் வைக்கிறார்கள். இதோ இப்போது நேரடியாகவே சொல்கிறேன் என பேசினார். அதே போல மும்மொழிக் கொள்ளையை  எதிர்த்தும் பேசியுள்ளார். ஒரே நாடு ஒரே தேர்தல் என நீங்கள் கொண்டு வரும் போதே தெரியும் , தமிழ்நாட்டை மிகவும் கேர்புல்லாக காயுளுங்கள் என மோடிக்கு நேரடியாகவே சவால் விட்டுள்ளார். முன்னதாகேவ தமிழ்நாடு தன்னி காட்டியுள்ளது என்றும் எச்சரிக்கையும் விட்டார்.

இதற்கு முக்கிய காரணம் பாஜக வை எதிர்த்த ஜெயலலிதா அம்மா செய்த செயல் தான் என்றும் , அதை வைத்து தான் இவர் அப்படி பேசினார் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். மேற்கொண்டு புரட்சி தலைவியை சுட்டிக்காட்டும் நோக்கில் விஜய் மறைமுக எச்சரிக்கையை கொடுத்திருப்பது நாளடைவில் அதிமுக – வுடன் கூட்டணியில் இணைய அதிக வாய்ப்புள்ளது.

ஒரே வார்த்தை டோட்டல் கூட்டணியும் க்ளோஸ்!! விஜய்யால் ஸ்டாலினுக்கு வந்த நெருக்கடி!!

0

தமிழக வெற்றிக் கழக பொதுக்கூட்டத்தில் விஜய் திமுக வின் கூட்டணி கட்சியினரை அவர்களுக்கு எதிராக இருக்கும் வகையில் பேசியுள்ளார். திமுக தனது கூட்டணி கட்சிகளை அடக்குமுறையில் பயன்படுத்துகிறது தென்றும், குறிப்பாக காங்கிரசை ஓட்டுக்காக மட்டுமே வைத்துள்ளது என்று நேரடியாகவே கூறியுள்ளார். முன்னதாக மாநாட்டில், எங்களுடன் கூட்டணி வைத்துக் கொள்பவர்களுக்கு ஆட்சியில் பங்கு தருவோம் என்று தெரிவித்தார்.

இதுவே திமுகவில் பூதாகரமாக வெடித்து, விடுதலை சிறுத்தை காங்கிரஸ் என அனைவரும் தனித்தனியே ஸ்டாலினை வஞ்சிக்க ஆரம்பித்து விட்டனர். தோழமைக் கட்சி என்றுக் கூறிக்கொண்டு எங்களில் யாரும் முதல்வராகவிட முடியாது என்றும் தெரிவித்தனர். அதேபோல காங்கிரசும் எவ்வளவு நாட்கள் திமுகவை நம்பி இருப்பது என்று அதன் தலைவர்கள் பேச ஆரம்பித்து விட்டனர். இவர்களையெல்லாம் அழைத்து ஸ்டாலின் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்தி அமைதி படுத்திய நிலையில் மீண்டும் இந்த பொதுக்குழு கூட்டத்தில் சூட்டை கலப்பும் விதமாக பேசி உள்ளார்.

மேற்கொண்டு இது திமுகவிற்கு நெருக்கடி கொடுப்பது போல் தான் இருக்கும். காங்கிரஸ் குறித்து விஜய் பேசியது திமுக மற்றும் அதன் கூட்டணிக்கிடையே விரிசலை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. முன்னதாகவே காங்கிரஸ் தலைவர்கள் ஸ்டாலின் மீது அதிருப்தியில் உள்ளனர். இச்சமயத்தில் விஜய் பேசியது அவர்களுக்கிடையே மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தும். நாளடைவில் கூட்டணியில் விரிசல் ஏற்பட்ட தமிழக வெற்றிக் கழகத்துடன் கைகோர்க்கவும் அதிக வாய்ப்புள்ளது.