Home Blog Page 352

பேர மட்டும் கெத்தா வச்சிக்கிட்டா போதுமா!.. ஸ்டாலினை கிழித்த விஜய்…

0

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் செண்டரில் இன்று காலை துவங்கியது. இந்த கூட்டத்தில் தவெக நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர். பொதுக்குழு கூட்டத்தின் முதல் வரிசையில் விஜயின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரும், அம்மா ஷோபாவும் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. விஜயும் அவர்களின் அருகில் சென்று கட்டிதழுவி வரவேற்றார். கூட்டம் துவங்கியதும் தவெக பொதுக்குழு உறுப்பினர்களுடன் நெஞ்சில் கை வைத்து உறுதி மொழி ஏற்றார் விஜய்.

இந்த பொதுக்குழுவில் இருமொழிக்கொள்கை, டாஸ்மாக் ஊழல், தொகுதி மறுவரையறை, பரந்தூர் விமான நிலையம், சாதி வாரிக் கணக்கெடுப்பு போன்ற 17 தீர்மானங்கள் தவெக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டது. அதன்பின் பேசிய தவெக நிர்வாகிகள் விஜயை புகழ்ந்தும் திமுக அரசை விமர்சித்தும் பேசினார்கள்.

பேர மட்டும் கெத்தா வச்சிக்கிட்டா போதுமா!.. ஸ்டாலினை கிழித்த விஜய்...

அதன்பின் பின் பேசிய விஜய் வழக்கம்போல் திமுகவை விமர்சித்து பேசினார். மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் அவர்களே.. மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே.. பெயரை மட்டும் வீரப்பாக சொன்னால் போதாது அவர்களே. செயலிலும் காட்ட வேண்டும் அவர்களே.. அணை போட்டு ஆற்றை வேண்டுமானாலும் தடுக்கலாம்.. காற்றை தடுக்க முடியாது. மீறி தடுக்க நினைத்தால் சாதாரண காற்று சூறாவழியோ அல்லது சக்திமிக்க புயலாக மாறும்’ என பேசினார்.

அப்படியே பாஜக பற்றியும் பேசிய விஜய்.. ‘ஏன் ஜி.. தமிழ்நாடு என்றால் மட்டும் உங்களுக்கு ஏன் அவ்வளவு அலர்ஜி?’ என மோடியை விமர்சித்த விஜய் தமிழ்நாட்டை மிகவும் கவனமாக கையாளுங்கள்.. தமிழ்நாடு பல பேருக்கு தண்ணி காட்டுன மாநிலம் சார், கொஞ்சம் பார்த்து பண்ணுங்க சார் என ரைமிங்காக பேசினார் விஜய்;. மேலும், திமுகவின் சீக்ரெட் ஓனர் மோடிதான். மோடியின் பெயரை சொல்வதற்கு எங்களுக்கு எந்த பயமும் இல்லை.

மக்களை நாம் சந்தித்து குறைகளை கேட்டால் ஒவ்வொரு வீட்டின் உச்சியிலும் தவெக கொடி தானாக பறக்கும். நீங்கள் ஒழுங்காக ஆட்சி நடத்தியிருந்தால் சட்டம் ஒழுங்கு சரியாக இருந்திருக்கும். தமிழ்நாட்டின் சகோதரிகள்தான் திமுகவின் அரசியலுக்கு முடிவு கட்ட போகிறார்கள்’ என பேசினார்.

அனல் பறக்கும் பாஜக மேலிடம்! ஆர்.எஸ்.எஸ் தலைமையகம் செல்லும் பிரதமர் மோடி: காரணம் என்ன?

0

பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) புதிய தேசிய தலைவர் 2025 ஏப்ரல் 10ஆம் தேதி தேர்வு செய்யப்பட உள்ளார். தற்போதைய தலைவர் ஜே.பி.நட்டாவின் பதவிக்காலம் முடிவுக்கு வந்துள்ளதால், புதிய தலைவர் தேர்வு செய்வது கட்சிக்குள் முக்கியமான ஒரு நிகழ்வாக பார்க்கப்படுகிறது. ஜே.பி.நட்டா கடந்த பொதுத் தேர்தலின் போது நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதுடன் மத்திய அமைச்சராகவும் பணியாற்றி வருகிறார்.

பாஜகவின் தேசிய தலைவர் தேர்வு ஒரு கட்டுப்பாடான மற்றும் பரிசீலனையுடன் நடைபெறும் செயன்முறையாகும். கட்சியின் மாநில நிர்வாகங்களில் தேர்தல் முடிந்த பிறகு மட்டுமே தேசியத் தேர்தல் நடைமுறைகள் தொடங்கும். மாநிலங்களில் சில இன்னும் முழுமையாக தேர்வு நடத்தவில்லை என்பதால் இத்தேர்வு தாமதமாகியுள்ளது. ஏப்ரல் 10 அன்று டெல்லியில் சிறப்பு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பாஜகவின் மாநில தலைவர்கள், பொதுச் செயலாளர்கள், மற்றும் முக்கியமான கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டு, புதிய தலைவரை தேர்வு செய்வதைப் பற்றி விவாதிக்கவுள்ளனர்.

பாஜகவின் தேசிய தலைவர் கட்சியின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும், தேர்தல் வெற்றிக்கும் முக்கிய பங்கு வகிப்பார். தேர்தல் வியூகம், கட்சியின் கொள்கை நிலைப்பாடு போன்றவை இவரது தலைமையில் அமையும். மேலும், ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கத்தின் (RSS) ஆலோசனைக்குப் பிறகே புதிய தலைவர் அறிவிக்கப்படுவர். கட்சியில் குறைந்தது 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர் மட்டுமே தேசிய தலைவராக வர முடியும். எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளை கண்காணித்து, அவர்களை எதிர்கொள்ள புதிய உத்திகளை உருவாக்க வேண்டும். பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சரவையுடன் இணைந்து பணியாற்றி கட்சியின் கொள்கைகளை செயல்படுத்த வேண்டும்.மாநிலங்களிலும், பாஜக பாதிப்பு குறைந்த பகுதிகளிலும் கட்சியை வளர்க்கும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

பாஜகவின் புதிய தலைவராக யார் தேர்வாக வாய்ப்பு உள்ளனர் என்பதில் பல்வேறு கருதுகோள்கள் நிலவுகின்றன. முக்கியமாக, கட்சியின் மூத்த தலைவர்கள், மாநில முதல்வர்கள் மற்றும் பொதுச் செயலாளர்கள் ஆகியோரில் ஒருவர் தேர்வு செய்யப்படலாம். இதற்கான இறுதித் தீர்மானம், பாஜகவின் உயர்மட்ட ஆலோசனைக் குழுவினரால் எடுக்கப்படும். புதிய தலைவர் எதிர்கால தேர்தல்களுக்கு கட்சியை வழிநடத்தும் பொறுப்பை ஏற்கவுள்ளார். இதனால், இந்த தேர்தல் கட்சியின் அடுத்த கட்ட அரசியல் பயணத்திற்கு முக்கியமானதாக இருக்கும்.

 

வீர தீர சூரனை தாண்டிய எம்புரான்!.. முதல் நாள் வசூலே இவ்வளவு கோடியா?!…

0

Empuraan Collection: மலையாளர் நடிகர் பிரித்திவிராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள திரைப்படம்தான் எம்புரான். 2019ம் வருடம் பிரித்திவிராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்து வெளியான லூசிபர் படத்தின் இரண்டாம் பாகம் போல எம்புரான் உருவாகியுள்ளது. இந்த படத்தில் மன்சு வாரியர், பிரித்திவிராஜ் மற்றும் ஹாலிவுட் நடிகர், நடிகைகளும் நடித்திருக்கிறார்கள்.

மலையாள சினிமா என்றாலே இயல்பான கதை சொல்லல் என்கிற ஃபார்முலாவை மீறி, மேக்கிங்கில் அசத்தியிருக்கிறார் பிருத்திவிராஜ். பாலிவுட், ஹாலிவுட் படங்கள் போல இப்படத்தை உருவாக்கியிருக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது.

லூசிபர் படத்தை போலவே இந்த படத்திலும் அதிரடி சண்டை காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. நேற்று காலை இப்படம் உலகமெங்கும் வெளியானது. இந்த படத்திற்கு அதிக அளவில் முன்பதிவு இருந்தது. தமிழில் விடாமுயற்சியை விட இந்த படத்திற்கு அதிக டிக்கெட் முன்பதிவு இருந்தது.

empuraan

இந்நிலையில், எம்புரான் படம் முதல் நாளிலேயே நல்ல வசூலை பெற்றிருக்கிறது. மலையாள மொழியில் 19 கோடி, தெலுங்கில் 1.2 கோடி, தமிழில் 80 லட்சம், ஹிந்தியில் 50 லட்சம் மற்றும் கன்னடத்தில் 5 லட்சம் என மொத்தம் 21.55 கோடி என இந்தியாவில் மொத்தம் 21.55 கோடியை இப்படம் வசூல் செய்திருக்கிறது. இன்று வெள்ளிக்கிழமை மற்றும் தொடர்ந்து சனி, ஞாயிறு என விடுமுறை நாட்கள் வருவதால் இந்த படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என கணிக்கப்படுகிறது.

ஒருபக்கம் விக்ரமின் வீர தீர சூரன் படம் நேற்று காலை வெளியாகவிருந்தது. ஆனால், சில பிரச்சனைகளால் நேற்று மாலை 5 மணிக்கே முதல் காட்சி வெளியானது. இரவு ஒரு காட்சி என மொத்தம் 2 காட்சிகள் மட்டுமே நேற்று திரையிடப்பட்டது. இதனால் இந்த படம் 3.2 கோடியை மட்டுமே வசூல் செய்திருக்கிறது. அதேநேரம், இனிமேல் அந்த படத்தின் வசூலும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் வரிசையில் அப்பா, அம்மா!.. 17 தீர்மானங்கள் நிறைவேற்றம்?.. தவெக பொதுக்குழு அப்டேட்!..

0

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் செண்டரில் துவங்கிவிட்டது. இந்த கூட்டத்தில் 2 ஆயிரம் நிர்வாகிகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் தொகுதி மறுவரை, ஜாதி வாரி கணக்கெடுப்பு, மும்மொழிக் கொள்கை போன்ற விவகாரங்கள் தொடர்பாக தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளதாக செய்திகள் வெளியானது.

மேலும், 2026 சட்டமன்ற தேர்தலை எப்படி சந்திக்க வேண்டும், என்னென்ன செய்ய வேண்டும் என தொண்டர்களுக்கு விஜய் ஆலோசனை வழங்கவுள்ளார் என சொல்லப்பட்டது. மேலும், 500 பேருக்கு காலை உணவும், 2500 பேருக்கு மதிய உணவும் வழங்கப்படவுள்ளது. இந்நிலையில், பொதுக்குழு தொடர்பான முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

tvk vijay

பொதுக்குழு கூட்டத்தின் முதல் வரிசையில் விஜயின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரும், அம்மா ஷோபாவும் இருக்கை ஒதுக்கப்பட்டிருக்கிறது. அவர்களும் இன்று காலையிலேயே அங்கு வந்துவிட்டார்கள். விஜயும் அவர்களி அருகில் சென்று வரவேற்றார். கூட்டம் துவங்கியதும் தவெக பொதுக்குழு உறுப்பினர்களுடன் நெஞ்சில் கை வைத்து உறுதி மொழி ஏற்றார் விஜய்.

இந்த பொதுக்குழுவில் இருமொழிக்கொள்கை, டாஸ்மாக் ஊழல், தொகுதி மறுவரையறை, பரந்தூர் விமான நிலையம், சாதி வாரிக் கணக்கெடுப்பு போன்ற 17 தீர்மானங்கள் தவெக பொதுக்குழுவில் நிறைவேற்றப்படவிருக்கிறது. மேலும், பூத் கமிட்டி மாநாடு, விஜயின் சுற்றுப்பயண தேதி குறித்தும் அறிவிக்கப்படவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் இப்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் 2026 ஜனவரி மாதம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் விஜய் தீவிர அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வருங்கால முதல்வர் புஸ்ஸி ஆனந்த்!. சென்னையில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள்!…

0

Vijay tvk: புஸ்ஸி என்பது புதுச்சேரியில் ஒரு எம்.எல்.ஏ தொகுதி. அந்த தொகுதியில் போட்டியிட்டு ஆனந்த் வெற்றி பெற்றதால் புஸ்ஸி ஆனந்த் ஆகிவிட்டார். இந்த பெயரை வைத்து அவரை பலரும் கிண்டலடித்தனர். எனவே, இப்போதெல்லாம் என். ஆனந்த் என்று மட்டுமே போஸ்டர்களில் குறிப்பிடுகிறார்கள். எம்.எல்.ஏ பதவி போனவுடன் புதுச்சேரியில் விஜய் ரசிகர் மன்றத்துக்கு தலைவராக இருந்தார். இப்படித்தான் இவருக்கு விஜயுடன் பழக்கம் ஏற்பட்டது.

எனவே, அவரை தன்னுடன் வைத்துக்கொண்டார் விஜய். விஜய் அரசியல் கட்சி துவங்குவதற்கு முன்புலிருந்து விஜயோடு பயணித்து வருகிறார். விஜய் அரசியல் கட்சி துவங்கியபின் அவரின் வலது கை போல மாறினார். விஜய் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி எப்போது எங்கு நடந்தாலும் அதற்கான ஏற்பாடுகளை புஸ்ஸி ஆனந்தே செய்வார். விக்கிரவாண்டியில் நடந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகளையும் அவரே செய்தார். தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயளாளராகவும் அவரை நியமித்திருக்கிறார் விஜய். தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளை வழிநடத்துவதும் இவரே.

poster

அதேநேரம், செய்தியாளர் எதாவது கேள்வி கேட்டால் ‘எல்லாம் தலைவர் சொல்லுவார்’ என சொல்லிவிட்டு எஸ்கேப் ஆகிவிடுவார். அதேநேரம், ஆதவ் அர்ஜுனா வந்துவிட்டதால் புஸ்ஸி ஆனந்த் டம்மி ஆகிவிடுவார் என்றெல்லாம் சமூகவலைத்தளங்களில் கிண்டல் அடித்தார்கள். ஒருபக்கம் தவெக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடக்கிறது.

இந்நிலையில், ‘தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் வருங்கால முதலமைச்சர் அவர்கள் வருக.. வருக’ என ஆனந்த் போட்டோவை போட்டு கூட்டம் நடக்கும் இடத்தின் அருகேயும், சென்னையின் சில இடங்களிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கிறது. இது தவெக தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் ஈ.சி.ஆர் சரவணன் என்கிற பெயரில் போஸ்டர் ஒட்டப்பட்டிருக்கிறது.

ஆனால், எனக்கும் அந்த போஸ்டருக்கும் சம்பந்தம் இல்லை. வேறு கட்சியை சேர்ந்தவர்கள் இப்படி செய்திருக்கலாம். வேண்டுமென்றே என் முதுகில் குத்தும் வகையில் இப்படி போஸ்டர்களை ஓட்டியிருக்கிறார்கள் என சரவணன் விளக்கமளித்திருக்கிறார்.

வெஜ் மட்டன் குழம்பு பிரியாணி.. சைவ மீன் குழம்பு!. தவெக பொதுக்குழுவில் உணவு பட்டியல்!..

0

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று நடக்கவுள்ளது. வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுகவை தோற்கடிப்பேன் என்றும் பேசினார்.2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்பதே விஜயின் எண்ணமாக இருக்கிறது. எனவே, அதிமுக, நாம் தமிழர் கட்சி, பாஜக போன்ற கட்சிகளோடு அவர் கூட்டணி அமைப்பாரா இல்லை தனித்து போட்டியிடுவாரா என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இந்நிலையில்தான் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் செண்டரில் நடக்கவுள்ளது.

இந்த கூட்டத்தில் 2 ஆயிரம் நிர்வாகிகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் தொகுதி மறுவரை, ஜாதி வாரி கணக்கெடுப்பு, மும்மொழிக் கொள்கை போன்ற விவகாரங்கள் தொடர்பாக தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளது. இதுபோக, 2026 சட்டமன்ற தேர்தலை எப்படி சந்திக்க வேண்டும், என்னென்ன செய்ய வேண்டும் என தொண்டர்களுக்கு விஜய் ஆலோசனை வழங்கவுள்ளார் என சொல்லப்படுகிறது.

மேலும், 500 பேருக்கு காலை உணவும், 2500 பேருக்கு மதிய உணவும் வழங்கப்படவுள்ளது. காலை உணவாக பொங்கல், வடை, சட்னி, சாம்பார், மதியம் சாப்பாடு பட்டியலில் மால் பூவா ஸ்வீட், வெஜ் சூப், ஊறுகாய், இஞ்சி துவையல், தயிர் பச்சடி, சப்பாத்தி, பன்னீர் மட்டர் மசாலா, வெஜ் மட்டன் பிரியாணி, சாதம், சைவ மீன் குழம்பு, சாம்பார், மிளகு ரசம், இறால் 65, அவியல், ஆனியன் மணிலா பகோடா, உருளை பட்டாணி வருவல், தயிர் வடை, அப்பளம், வெத்தலை பாயாசம், மோர், ஐஸ்கீரீம் போன்றவை இருக்கிறது.

கட்சி ஆண்டுவிழாவில் உணவு வழங்வதில் சில குளறுபடிகள் நடந்தது. அமர்ந்து கூட சாப்பிட முடியாமல் நிர்வாகிகள் நின்று கொண்டே சாப்பிட்டார்கள். அதுபோல நடக்க்கூடாது என விஜய் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார். மேலும், எல்லாம் சரியாக நடக்கிறதா என்பதை கவனிக்க இன்று காலை 7 மணிக்கே விஜய் கூட்டம் நடக்கும் இடத்திற்கு வந்துவிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம்!.. என்னென்ன தீர்மானங்கள்!…

0

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை துவங்கி நடத்தி வருகிறார். சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போதே அரசியலுக்கு வந்திருக்கிறார் விஜய். சினிமாவில் நடித்து கொண்டிருந்தபோது அரசியல்வாதிகளால் அவர் சந்தித்த பிரச்சனைகளும், அதனால் ஏற்பட்ட கோபமும்தான் விஜயை அரசியலுக்கு தள்ளியது. நாமும் அரசியல் அதிகாரத்தில் இருந்தால் மட்டுமே நம்மை சீண்ட மாட்டார்கள் என்பதே விஜயின் அரசியல் முடிவுக்கு காரணமாக இருக்கிறது.

அதேநேரம், அதிமுக, பாஜக பற்றி பேசாமல் முழுக்க முழுக்க திமுகவை மட்டுமே தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார் விஜய். அவரின் கட்சி மாநாடு விக்கிரவாண்டியில் நடந்தபோது சுமார் 8 லட்சம் பேர் கலந்துகொண்டார்கள். இந்த கூட்டத்தில் மிகவும் ஆவேசமாக பேசினார் விஜய். ‘அவர்கள் பாசிசம் என்றால் நீங்கள் என்ன பாயாசமா?’ என பரபரப்பை உண்டாக்கினார். வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுகவை தோற்கடிப்பேன் என்றும் பேசினார்.2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்பதே விஜயின் எண்ணமாக இருக்கிறது.

எனவே, அதிமுக, நாம் தமிழர் கட்சி, பாஜக போன்ற கட்சிகளோடு அவர் கூட்டணி அமைப்பாரா இல்லை தனித்து போட்டியிடுவாரா என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இந்நிலையில்தான் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் செண்டரில் நடக்கவுள்ளது.

இந்த கூட்டத்தில் 2 ஆயிரம் நிர்வாகிகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் தொகுதி மறுவரை, ஜாதி வாரி கணக்கெடுப்பு, மும்மொழிக் கொள்கை போன்ற விவகாரங்கள் தொடர்பாக தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளது. இதுபோக, 2026 சட்டமன்ற தேர்தலை எப்படி சந்திக்க வேண்டும், என்னென்ன செய்ய வேண்டும் என தொண்டர்களுக்கு விஜய் ஆலோசனை வழங்கவுள்ளார் என சொல்லப்படுகிறது.

உடல் அசதியா இருக்கா? அப்போ எனர்ஜி கிடைக்க உடனே இதை செஞ்சி சாப்பிடுங்கள்!!

0

அனைவருக்கும் உடல் வலி வருவது இயல்பான ஒரு விஷயம்தான்.இருப்பினும் வழக்கத்தைவிட உடல் வலி,அசதி அதிகமாக இருந்தால் வலி நிவாரணி மாத்திரை எடுத்துக் கொள்வதற்கு பதில் உளுந்து பருப்பில் சுவையான புட்டு செய்து சாப்பிடுங்கள்.உளுந்தில் இருக்கின்ற கால்சியம் சத்து உடல் வலியை குறைக்க உதவுகிறது.

உடல் அசதி நீங்க உதவும் வெள்ளை உளுந்து புட்டு:

தேவையான பொருட்கள்:-

1)வெள்ளை உளுந்து – 100 கிராம்
2)பச்சரிசி – 50 கிராம்
3)தேங்காய் துருவல் – அரை கப்
4)நாட்டு சர்க்கரை – 100 கிராம்
5)நெய் – இரண்டு தேக்கரண்டி
6)முந்திரி – 20 கிராம்
7)தண்ணீர் – சிறிதளவு

செய்முறை விளக்கம்:-

1.முதலில் 100 கிராம் அளவிளான வெள்ளை உளுந்தை கிண்ணம் ஒன்றில் போட்டு தண்ணீர் ஊற்றி இரண்டு மூன்று முறை அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

2.பிறகு உளுந்தில் உள்ள தண்ணீர் வடிய ஒரு வடிகட்டியில் கொட்டி 5 நிமிடங்கள் வரை அப்படியே விட வேண்டும்.இதே மெத்தடை பச்சரிசிக்கும் செய்ய வேண்டும்.

3.பிறகு அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து சூடானதும் வெள்ளை உளுந்தை போட்டு மிதமான தீயில் பொன்னிறம் வரும் வரை வறுக்க வேண்டும்.இதை ஒரு தட்டிற்கு மாற்றிக் கொள்ள வேண்டும்.

4.அடுத்து பச்சரிசியை வாணலியில் கொட்டி வறுக்க வேண்டும்.இவை இரண்டையும் ஆறவைத்து மிக்சர் ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைக்க வேண்டும்.

4.பிறகு இதை ஒரு கிண்ணத்தில் கொட்டி கட்டிபடாமல் கிளறிவிட வேண்டும்.அதன் பிறகு அடுப்பில் இட்லி பாத்திரம் ஒன்றை வைத்து தண்ணீர் ஊற்றி சூடாக்க வேண்டும்.இரண்டு நிமிடங்களுக்கு பிறகு இட்லி தட்டு வைத்து அதன் மீது காட்டன் துணியை வைக்க வேண்டும்.

6.பிறகு அரைத்த வெள்ளை உளுந்து கலவையை அதில் கொட்டி பரப்ப வேண்டும்.அடுத்து அரை கப் அளவிற்கு தேங்காய் துருவலை அதில் போட்டு 10 நிமிடங்களுக்கு ஆவியில் வேகவிட வேண்டும்.

7.இப்படி செய்த பிறகு ஒரு கிண்ணத்தில் வெள்ளை உளுந்து புட்டை கொட்டிக் கொள்ள வேண்டும்.அடுத்து அரை கப் நாட்டு சர்க்கரை சேர்த்து நன்கு கலந்துவிட வேண்டும்.பிறகு இரண்டு தேக்கரண்டி நெயில் 20 கிராம் முந்திரி பருப்பு சேர்த்து தாளித்து உளுந்து புட்டில் போட்டு கலந்துவிட வேண்டும்.இந்த புட்டை சாப்பிட்டு வந்தால் உடல் எலும்புகள் பலமாக இருக்கும்.வெள்ளை உளுந்து புட்டு உடல் சுறுசுறுப்பை அதிகரிக்கச் செய்கிறது.

நுரையீரல் சளி கழிவுகள் நீங்க.. இஞ்சியுடன் இந்த ஒரு பொருளை சேர்த்து சாப்பிடுங்கள்!!

0

நாம் நன்றாக சுவாசிக்க சுவாச நோய்கள் வராமல் இருக்க நுரையீரல் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது முக்கியம்.நுரையீரலில் சளி,கிருமிகள் போன்றவை தேங்கி இருந்தால் மூச்சுத் திணறல்,ஒவ்வாமை போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.நுரையீரல் கழிவுகள் நீங்க இங்கு சொல்லப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றுங்கள்.

தீர்வு 01:

1)இஞ்சி
2)தேன்
3)தண்ணீர்

ஒரு கட்டை விரல் சைஸ் இஞ்சி எடுத்து அதன் தோலை நீக்கி கொள்ள வேண்டும்.பிறகு தண்ணீரில் கழுவி எடுத்து உரலில் போட்டு இடித்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் இஞ்சி சாறை ஒரு கிண்ணத்தில் ஊற்றி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சிறிது நேரம் சிறிது நேரம் நீர் தெளிந்த பின்னர் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து பருக வேண்டும்.இப்படி செய்து வந்தால் நுரையீரலில் தேங்கிய கழிவுகள் வெளியேறும்.நுரையீரல் ஆரோக்கியம் மேம்பட இஞ்சி சாறை அடிக்கடி செய்து குடிக்கலாம்.

தீர்வு 02:

1)கடுக்காய் பொடி
2)தேன்

கிண்ணம் ஒன்றில் ஒரு தேக்கரண்டி கடுக்காய் பொடி சேர்த்து கொள்ள வேண்டும்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து குழைத்து சாப்பிட்டு வந்தால் நுரையீரல் ஆரோக்கியம் மேம்படும்.

தீர்வு 03:

1)கரிசலாங்கண்ணி பொடி
2)தண்ணீர்

கரிசலாங்கண்ணி கீரையை பொடித்து கொள்ளுங்கள்.பிறகு ஒரு கிளாஸ் அளவு தண்ணீரை சூடாக்கி கரிசலாங்கண்ணி பொடி ஒரு தேக்கரண்டி அளவு கலந்து பருகினால் நுரையீரலில் தேங்கிய கழிவுகள் வெளியேறும்.

தீர்வு 04:

1)கற்பூரவல்லி இலை
2)வெற்றிலை
3)தேன்

கற்பூரவல்லி இலை மற்றும் வெற்றிலையை உரலில் போட்டு இடித்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து நன்றாக கலந்து பருகினால் நுரையீரல் கழிவுகள் நீங்கும்.

தீர்வு 05:

1)தேன்
2)தண்ணீர்

ஒரு கிளாஸ் சூடான தண்ணீரில் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து காலை நேரம் குடித்து வந்தால் நுரையீரல் கழிவுகள் முழுமையாக வெளியேறும்.

நம்புங்க இந்த இரண்டு காயை ஜூஸாக அரைத்து குடித்தால்.. சீக்கிரம் கருத்தரிப்பீங்க!!

0

ஒவ்வொரு பெண்ணும் திருமணத்திற்கு பிறகு தாய்மையை வரவேற்க ஆவலுடன் காத்திருக்கின்றனர்.சிலருக்கு தாய்மை சீக்கிரம் கிடைக்கிறது.ஆனால் ஒருசிலருக்கு கருப்பை சம்மந்தப்பட்ட பிரச்சனை,மேலும் சில உடல் நலப் பிரச்சனை காரணமாக கருத்தரித்தல் தாமதமாகிறது.

தற்பொழுது பின்பற்றி வரும் ஆரோக்கியம் இல்ல உணவுமுறை பழக்கமும் கருத்தரித்தலை தாமதப்படுத்துகிறது.நீண்ட வருடங்களாக கருத்தரிக்க முடியாமல் கஷ்ட்டப்பட்டு கொண்டிருக்கும் பெண்கள் விரைவில் தாய்மை அடைய மாதுளை,நெல்லிக்காயில் ஜூஸ் செய்து பருகலாம்.

மாதுளை மற்றும் நெல்லிக்காய் ஆகிய இரண்டை ஜூஸாக அரைத்து குடித்தால் கருப்பை வலிமை அதிகரிக்கும்.கருமுட்டை வளர்ச்சி அதிகரிக்க இந்த ஜூஸ் செய்து குடிக்க வேண்டுமென்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

தேவைப்படும் பொருட்கள்:-

1)மாதுளம் பழம் – ஒன்று
2)பெரிய நெல்லிக்காய் – இரண்டு
3)தண்ணீர் – ஒரு கப்

பயன்படுத்தும் முறை:-

1.மாதுளம் பழம் ஒன்றை எடுத்து நறுக்கி அதன் விதைகளை தனியாக பிரித்தெடுக்க வேண்டும்.அடுத்து இரண்டு பெரிய நெல்லிக்காயை சிறு தூண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

2.இந்த இரண்டு காய்களையும் மிக்சர் ஜாரில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

3.பிறகு இந்த ஜூஸில் தேன் கலந்து காலையில் குடிக்க வேண்டும்.தொடர்ந்து ஒரு மாதம் குடித்தால் கருப்பையில் உள்ள அழுக்குகள் நீங்கும்.கருப்பை வலிமை அதிகரிக்க,மாதவிடாய் சரியாக வர இந்த ஜூஸ் செய்து குடிக்கலாம்.

மற்றொரு தீர்வு:

தேவைப்படும் பொருட்கள்:-

1)சின்ன வெங்காயம் – நான்கு
2)தேன் – ஒரு தேக்கரண்டி

பயன்படுத்தும் முறை:-

1.நான்கு சின்ன வெங்காயத்தை தோல் நீக்கிவிட்டு பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.இந்த சின்ன வெங்காயத் துண்டுகளை கிண்ணத்தில் போட்டு ஒரு தேக்கரண்டி தேன் ஊற்றி மிக்ஸ் செய்ய வேண்டும்.

2.பிறகு இதை மென்று சாப்பிட வேண்டும்.சின்ன வெங்காயம் கருப்பையில் உள்ள அழுக்குகளை நீக்க உதவுகிறது.தரமான கருமுட்டை வளர்ச்சிக்கு சின்ன வெங்காயத்தை தொடர்ந்து ஒரு மாதம் காலையில் சாப்பிட வேண்டும்.