Home Blog Page 355

எடப்பாடி இப்படி பேசினா எப்பவுமே ஜெயிக்க முடியாது!. நக்கலடித்த ஓபிஎஸ்…

0

தமிழக முதல்வராக இருந்த ஓ.பன்னீர் செல்வத்தை கட்சியிலிருந்து நீக்கியதுதான் எடப்பாடி பழனிச்சாமி செய்த விஷயங்களில் ஹைலைட். இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம் ’அதிமுக இனிமேல் ஒற்றை தலைமையாக செயல்பட வேண்டும். இரட்டை தலைமை இருந்தால் தேர்தலில் வெற்றி பெற முடியாது எனவும் பழனிச்சாமி சொன்னார். ஆனால், ஒரு தேர்தலிலும் வெற்றிபெறவில்லை. எனவே, பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி அவராகவே பதவி விலக வேண்டும் இல்லாவிட்டால் அவமரியாதையை சந்திப்பார்’ என எச்சரிக்கை செய்தார்.

அதைத்தொடர்ந்து டெல்லியில் இருந்து சென்னை வந்த பழனிச்சாமியிடம் ‘பிரிந்து சென்றவர்களை கட்சியில் மீண்டும் இணைத்துக்கொள்வீர்களா?’ என செய்தியாளர்கள் கேட்டதற்கு ‘பிரிந்தது பிரிந்ததுதான். சேர வாய்ப்பே இல்லை. கட்சியை இரண்டாக உடைத்து துரோகம் செய்தவர்களை மீண்டும் சேர்த்து கொள்ள மாட்டேம். அந்த முடிவில் மாற்றமே இல்லை’ என கூறினார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள ஓபிஎஸ் ‘நான் அதிமுகவில் இணைகிறேன் என சொல்லவே இல்லை. பிரிந்து கிடக்கும் அதிமுக சக்திகள் ஒன்றிணைய வேண்டும். அப்போதுதான் வெற்றி பெற முடியும் என சொன்னேன். ஆனால், அதிமுக எந்த காலத்திலும் வெற்றி பெறக்கூடாது என்பதுபோல்தான் பழனிச்சாமியின் நடவடிக்கை இருக்கிறது’ என நக்கலடித்திருக்கிறார். பிரிந்து கிடக்கும் என சக்தி என ஓபிஎஸ் சொல்வது சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரைத்தான் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.

அதாவது எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா, டிடிவி தினகரன் மற்றும் தான் என எல்லோரும் ஒன்றிணைந்து எதிர்த்தால் மட்டுமே திமுகவை வீழ்த்த முடியும் என்பதுதான் ஒ.பன்னீர் செல்வத்தின் எண்ணமாக இருக்கிறது. ஆனால், பழனிச்சாமிக்கு இதில் கொஞ்சம் கூட விருப்பமில்லை. சசிகலா, டிடிவி உள்ளே வந்தால் மீண்டும் தன்னை டம்மி ஆக்கிவிடுவார்கள் என்பதால் தனது தலைமையில் மட்டுமே இனிமேல் அதிமுக செயல்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.

வீர தீர சூரன் ரிலீசுக்காக சியான் விக்ரம் செய்த உதவி… ஒருவழியா படம் ரிலீஸ்!..

0

சியான் விக்ரம் நடித்து உருவான திரைப்படம்தான் வீர தீர சூரன். இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, மலையாள நடிகர் சுராஜ் மற்றும் ராயன் படத்தில் நடித்த துஷரா விஜயன் இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். சித்தா படத்தை இயக்கிய அருண்குமார் இப்படத்தை இயக்கியிருந்தார்.

இந்த படம் இன்று காலையிலேயே வெளியாகியிருக்க வேண்டும். ஆனால், ஓடிடி உரிமையை பலருக்கும் கொடுத்து தயாரிப்பாளர் சொதப்பியதால் இந்த படத்தில் பண முதலீடு செய்திருந்த இரண்டு நிறுவனங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர படம் வெளியாகவில்லை. அதிலும் இன்னும் 4 வாரங்கள் கழித்தே படம் வெளியாக வேண்டும் என டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஓடிடி உரிமையை 2 நிறுவனங்களுக்கு கொடுத்தது மட்டுமில்லாமல் சியான் விக்ரமுக்கு கொடுக்க வேண்டிய சம்பள பாக்கியான 7 கோடிக்கும் அவரிடமும் ஓடிடி உரிமையை தயாரிப்பாளர் கொடுத்திருக்கிறார். ஆனால், முதல் B4U நிறுவனம் நீதிமன்றத்தை நாடியதுமே தன்னிடமிருந்த ஓடிடி உரிமையை சியான் விக்ரம் அவர்களுக்கு கொடுத்துவிட்டார்.

அதுபோக IVY என்கிற நிறுவனமும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர படம் வெளியாகுமா ஆகாதா என்கிற சந்தேகத்தையே உண்டாக்கிவிட்டது. ஒருபக்கம், தனக்கு சம்பள பாக்கி இருந்தபோதும் மேலும் தனது சம்பளத்தில் சில கோடிகளை விட்டு கொடுத்திருக்கிறார் விக்ரம். அதோடு அருண், எஸ்.ஜே. சூர்யா ஆகியோரும் தங்களின் சம்பள பணத்தில் சில கோடிகளை விட்டு கொடுக்க பிரச்சனை தீர்க்கப்பட்டு இன்று மாலை 5.30 மணிக்கு தமிழகத்தில் முதல் காட்சி திரையிடப்பட்டிருக்கிறது. ஏற்கனவே காலை முதல் தியேட்டரில் காத்திருந்த விக்ரம் ரசிகர்களிடம் இயக்குனர் அருண் மன்னிப்பு கேட்டு வீடியோவும் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

பிரிஞ்சது பிரிஞ்சதுதான்.. சேர வாய்ப்பே இல்ல!.. பொடி வைத்து பேசிய பழனிச்சாமி…

0

கூவத்தூர் விடுதியில் சசிகலாவால் முதல்வராக்கப்பட்டவர் எடப்பாடி பழனிச்சாமி. இது ஓ.பன்னீர் செல்வத்துக்கு பிடிக்காமல் போக தர்மயுத்தம் துவங்கினார். ஜெ.வின் சமாதிக்கு சென்று தியானம் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார். அதோடு, சசிகலா தரப்பு என்ன செய்ததோ அதை செய்தியாளர்களிடமும் சொல்லிவிட்டார். எனவே, அதிமுகவில் 2 அணி உருவானது.

அதன்பின் பின் எடப்பாடி பழனிச்சாமி – ஓபிஎஸ் மோதல் துவங்கியது. ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் தனி அரசியல் செய்து வந்தார். மேலும், அதிமுகவின் சின்னமான இரட்டை இலை தங்களுக்கே சொந்தம் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு பல மாதங்கள் நடந்து எடப்பாடி தரப்புக்கு தலைவலியை கொடுத்தது. ஆனால், பாஜகவின் முயற்சியில் பழனிச்சாமி – ஓபிஎஸ் இருவரும் இணைந்தார்கள். பன்னீர் செல்வத்துக்கு துணை முதல்வர் பதவியும் கொடுக்கப்பட்டது. ஆனால், டம்மியாக உணர்ந்த ஓபிஎஸ் மீண்டும் குடைச்சலை கொடுக்க அவரை கட்சியிலிருந்தே தூக்கினார் எடப்பாடி பழனிச்சாமி. அதன்பின் இப்போதுவரை ஓபிஎஸ் தனியாகவே செயல்பட்டு வருகிறார்.

eps

ஆனால், 2021 சட்டமன்ற தேர்தல் மற்றும் கடந்த பாராளுமன்ற தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைந்தது. இன்னும் ஒரு வருடத்தில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம் ’அதிமுக இனிமேல் ஒற்றை தலைமையாக செயல்பட வேண்டும். இரட்டை தலைமை இருந்தால் தேர்தலில் வெற்றி பெற முடியாது எனவும் பழனிச்சாமி சொன்னார். ஆனால், ஒரு தேர்தலிலும் வெற்றிபெறவில்லை. எனவே, பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி அவராகவே பதவி விலக வேண்டும் இல்லாவிட்டால் அவமரியாதையை சந்திப்பார்’ என எச்சரிக்கை செய்திருக்கிறார்.

இந்நிலயில், இன்று பிரிந்து சென்றவர்களை கட்சியில் மீண்டும் இணைத்துக்கொள்வீர்களா? என எடப்பாடி பழனிச்சாமியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு ‘பிரிந்தது பிரிந்ததுதான். சேர வாய்ப்பே இல்லை. கட்சியை இரண்டாக உடைத்து துரோகம் செய்தவர்களை மீண்டும் சேர்த்து கொள்ள மாட்டேம். அந்த முடிவில் மாற்றமே இல்லை’ என தெரிவித்திருக்கிறார். பழனிச்சாமி சொல்வதை பார்க்கும்போது இனிமேல் அதிமுக என்பது எடப்பாடி பழனிச்சாமி என்கிற ஒற்றை தலைமையின் கீழ் மட்டுமே செயல்படும் என்பது தெளிவாக புரிகிறது.

EPS- க்கு பெரும் நெருக்கடி.. அதிமுக வுடன் கூட்டணி முறிவு?? சமயம் பாத்து என்ட்ரி கொடுக்கும் விஜய்!!

0

ADMK TVK: அதிமுகவுடன் எஸ்டிபிஐ கட்சி கூட்டணியில் இருக்கும் பட்சத்தில் இதன் செயலாளர் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில், அதிமுக-வானது பாஜகவுடன் கூட்டணி வைத்தால் கட்டாயம் நாங்கள் கூட்டணியிலிருந்து விலகிக் கொள்வோம் என்று கூறியுள்ளார். மத்திய அரசு வக்ஃபு சட்டத்தை திருத்தி அறிவிப்பை வெளியிட்டது. இதற்கு இஸ்லாமியர் பெரிதும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்படி இருக்கையில் தற்போது எஸ்டிபிஐ கட்சி செயலாளரும் இது ரீதியாகவே பேட்டியளித்துள்ளார்.

சமூக நல்லிணக்கத்தை உடைக்கும் வகையில் பாஜக செயல்பட்டு வருகிறது. மேற்கொண்டு வக்ஃபு சட்டத் திருத்தம் என பலவற்றை எங்களுக்கு எதிராக செயல்படுத்தி வருகிறது . அந்தவகையில் அதனை முழுமையாக கண்டிக்கிறோம். அப்படி அதுடன் கூட்டணி வைக்கும் யாருடனும் எங்கள் கை இணையாது என்று தெள்ளத்தெளிவாக தெரிவித்துள்ளார். நாளடைவில் அதிமுக அந்த இடத்தில் இருந்தால் கூட நாங்கள் கூட்டணியிலிருந்து விலகிக் கொள்வோம் என்று தெரிவித்துள்ளார். இது ஒரு வகையில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவாக அமைந்துள்ளது.

டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து விட்டு திரும்பிய எடப்பாடி பாஜகவுடன் கூட்டணிக்கு ஒப்புதல் அளித்து வந்துள்ளார் என்ற தகவல்கள் வெளியாகி வருகிறது. அப்படி அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டால் எஸ்டிபிஐ கட்சியானது கட்டாயம் பாஜகவை எதிர்க்கும்.இதனால் அதிமுக விட்டு வெளியேறும். அந்த சந்தர்ப்பத்தில்  விஜய்யுடன் கூட்டணி வைக்க அதிக வாய்ப்புள்ளது. இதனால் எடப்பாடிக்கு இஸ்லாமிய மதத்தின் வாக்கு கிடைக்காமல் போகலாம். மேற்கொண்டு விஜய் அதிமுக வை எதிர்க்க ஏதுவான சூழலாகவும் இது அமைந்து விடும்.

பொதுத்தேர்வு வினாத்தாள் குறித்து முக்கிய தகவலை வெளியிட்ட பள்ளிக் கல்வித்துறை!!

0

Chennai: 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுடைய பொதுத்தேர்வு வினாத்தாள் கசிந்துவிடக் கூடாதென பள்ளிக்கல்வித்துறை எச்சரித்துள்ளது.

பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வானது நடைபெற்ற முடிந்துவிட்டது. இதனையடுத்து ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர் மற்றும் மாணவிகளுக்கு வரும் மாதம் எட்டாம் தேதி தேர்வு தொடங்க உள்ளது. இந்த தேர்வு நடப்பதற்கான வினா தாள்களை எமிஸ் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து நகல் எடுக்கப்படும்.

அப்படி நகலெடுக்கும் போது கடந்த முறையே வினாத்தாள் கசிவு ஏற்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. அதனை வைத்து தற்போது பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதன்படி எமிஸ் தளத்தில் பதிவிறக்கம் செய்யப்படும் நகல்கள் எதுவும் கசிந்து விடக்கூடாது. அப்படி பிரதிகள் வெளியிடப்பட்டது என்ற புகார்கள் வந்தால் கட்டாயம் அது ரீதியாக சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் எனத் தொடங்கி வட்டார கல்வி அலுவலர்கள் வரை பலர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இறுதியாக நடக்கும் இந்த பொது தேர்வு ரீதியாக எந்த ஒரு புகார் வராத வண்ணம் செயல்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். மேற்கொண்டு மாணவர்களுக்கு கடந்த மாதம் 8 ஆம் தேதி தேர்வு தொடங்கி 24 ஆம் தேதி முடிய உள்ளது. இதற்கடுத்து மாணவர் மற்றும் மாணவிகளுக்கு 1 மாதம் கால அளவில் கோடை விடுமுறை விடப்படும்.

தவெக+அதிமுக கூட்டணி குறித்து முக்கிய முடிவு!! விபூதி அடித்த எடப்பாடி.. உச்சக்கட்ட டென்ஷனில் விஜய்!!

0

ADMK TVK : அதிமுக மற்றும் தவெக கூட்டணி கட்டாயம் அமைந்துவிடும் என பெரும்பாலான நிர்வாகிகள் நினைத்து வந்தனர். ஆனால் அதனை தவிடு பொடியாக்கும் விதத்தில் பாஜகவுடன் கூட்டணி வைக்க டெல்லி சென்று அமித்ஷா – வை சந்தித்து எடப்பாடி சம்மதம் தெரிவித்து வந்துள்ளார். இது ரீதியாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும் அரசல் புரசலான தகவல்கள் கசிந்துள்ளது. முதலில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டுமென்று எடப்பாடி யிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

குறிப்பாக அந்த பேச்சுவார்த்தையில் அதிகப்படியான சீட் ஒதுக்க வேண்டுமென கேட்டுள்ளனர். அதுமட்டுமின்றி எங்கள் தலைமையில் தான் கூட்டணி ஆட்சி அமையும் என்றும் தெரிவித்துள்ளனர். இந்தக் கட்டுப்பாடுகளெல்லாம் எடப்பாடிக்கு ஒத்துவரவில்லை. அதுமட்டுமின்றி புதிதாக வந்த கட்சிக்கு ஏன் ஆதரவு அளிக்க வேண்டுமென அதிமுக மூத்த நிர்வாகிகள் கூறியுள்ளனர். இதனையெல்லாம் வைத்து தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை என்ற தகவல் வெளியானது.

அதேபோல விஜய் கட்சி சார்பாகவும், அதிமுகவுடன் எங்களை ஒப்பிட்டு பேசாதீர்கள் என்ற அறிக்கையையும் வெளியிட்டனர். ஆனால் அதனையும் மீறி மீண்டும் இவர்கள் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தான் கூறினர். ஒரு பக்கம் சீமானின் ஆதரவை விஜய் எதிர்பார்ப்பது போல் அதிமுகவும் கூட்டணியில் வந்து விட்டால் நன்றாக இருக்கும் என கணக்கீட்டு வந்தார். ஆனால் விஜய்க்கு அதிருப்தி ஏற்படும் வகையில் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி தலைமைக்கு சென்று பாஜகவுடன் மீண்டும் கூட்டணி வைக்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அந்த வகையில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்பே இல்லை . மேற்கொண்டு விஜய் சீமான் கூட்டணியையோ அல்லது பாமக கூட்டணியையோ எதிர்பார்க்கும் சூழல் உண்டாகியுள்ளது.

பழனிச்சாமி தானா பதவி விலகணும்!.. இல்லனா அசிங்கமாயிடும்!.. ஓபிஎஸ் காட்டம்!..

0

ஜெயலலிதாவின் குட் புக்கில் எப்போதும் இருந்தவர் ஓ.பன்னீர் செல்வம். அதனால்தான் தான் இரண்டு முறை சிறைக்கு சென்றபோதும் முதல்வர் பதிவியை அவரிடம் கொடுத்து சென்றார் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்பும் முதல்வர் பதவி பன்னீர் செல்வத்துக்கே வந்தது. ஆனால், சில விஷயங்களில் சசிகலா தரப்பு சொன்னதை ஓபிஎஸ் கேட்கவில்லை. எனவே, அவரை நேரில் அழைத்து மிரட்டி ராஜினாமா கடிதத்தில் கையெழுத்து வாங்கியது சசிகலா தரப்பு. அதோடு, சசிகலாவை முதல்வராக்கும் முயற்சிகள் நடந்தது.

இதையடுத்து ஜெ.வின் சமாதிக்கு சென்று தியானம் செய்ய துவங்கினார் ஓபிஎஸ். அதோடு, சசிகலா தரப்பு என்ன செய்ததோ அதை செய்தியாளர்களிடமும் சொல்லிவிட்டார். எனவே, அதிமுகவில் 2 அணி உருவானது. கூவத்தூரில் அதிமுக எம்.எல்.ஏக்களை தங்க வைத்து பேரம் பேசியது சசிகலா தரப்பு. ஆனால், சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு செல்ல நேரிட எடப்பாடி பழனிச்சாமிக்கு முதல்வர் பதவியை கொடுத்துவிட்டு சிறைக்கு சென்றார் சசிக்கலா.

eps
eps

அதன்பின் பின் எடப்பாடி பழனிச்சாமி – ஓபிஎஸ் மோதல் துவங்கியது. ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் தனி அரசியல் செய்து வந்தார். மேலும், அதிமுகவின் சின்னமான இரட்டை இலை தங்களுக்கே சொந்தம் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு பல மாதங்கள் நடந்து எடப்பாடி தரப்புக்கு தலைவலியை கொடுத்தது. ஆனால், பாஜகவின் முயற்சியில் பழனிச்சாமி – ஓபிஎஸ் இருவரும் இணைந்தார்கள். பன்னீர் செல்வத்துக்கு துணை முதல்வர் பதவியும் கொடுக்கப்பட்டது. ஆனால், டம்மியாக உணர்ந்த ஓபிஎஸ் மீண்டும் குடைச்சலை கொடுக்க அவரை கட்சியிலிருந்தே தூக்கினார் எடப்பாடி பழனிச்சாமி.

ஆனால், 2021 சட்டமன்ற தேர்தல் மற்றும் கடந்த பாராளுமன்ற தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைந்தது. இன்னும் ஒரு வருடத்தில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம் ’அதிமுக இனிமேல் ஒற்றை தலைமையாக செயல்பட வேண்டும். இரட்டை தலைமை இருந்தால் தேர்தலில் வெற்றி பெற முடியாது எனவும் பழனிச்சாமி சொன்னார். ஆனால், ஒரு தேர்தலிலும் வெற்றிபெறவில்லை. எனவே, பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி அவராகவே பதவி விலக வேண்டும் இல்லாவிட்டால் அவமரியாதையை சந்திப்பார்’ என எச்சரிக்கை செய்திருக்கிறார்

ஓபிஎஸ் சசிகலா எல்லாம் எங்க கூட்டணி.. நீ தலையிட கூடாது!! அமித்ஷா போட்ட கண்டிஷன்.. OK சொன்ன எடப்பாடி!!

0

ADMK BJP: அதிமுகவில் முக்கிய நிர்வாகிகள் மீண்டும் இணைய வாய்ப்புள்ளதாக பல தகவல்கள் வெளியானது, அதற்கு ஏற்றார் போல் பட்ஜெட் கூட்டத்தொடரில் சட்டப்பேரவையில் எடப்பாடிக்கு ஆதரவாக ஓபிஎஸ் உள்ளிட்டோர் நின்றது குறிப்பிடத்தக்கது. அதேபோல பாஜகவுடன் மீண்டும் கூட்டணி வைக்குமா என்ற கேள்வியும் இருந்து வந்தது. இப்படி முடிவுக்கு வராத கூட்டணி, முன்னாள் நிர்வாகிகள் என பலவற்றுக்கும் முடிவில்லாமலேயே இருந்து வந்தது. அப்படி இருக்கையில் திடீரென்று அமித்ஷாவை காண முதல்வர் டெல்லி சென்றுள்ளார்.

மேற்கொண்டு ஓபிஎஸ் ம் சென்றுள்ளார். முதலில் எடப்பாடியை அவர்களது நிர்வாகிகளுடன் சந்தித்து விட்டு பின்பு தனியாக ஒரு மணி நேரத்திற்கு மேலாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதில் பாஜக வுடன் கூட்டணி வைத்தால் எம் மாதிரியான நிபந்தனைகள் இருக்கும் என்பதை விவரித்துக் கூறியுள்ளார். அதில் முதலாவதாக, பாஜகவில் அண்ணாமலை இருப்பது குறித்து நீங்கள் தலையிடக்கூடாது. அவர் இருப்பதும் இல்லாதிருப்பதும் தலைமையில் இருக்கும் நாங்கள்தான் முடிவெடுப்போம்.

அதேபோல நீங்கள் ஓ பன்னீர்செல்வம் டிடிவி தினகரன் சசிகலா உள்ளிட்டோரை கட்சியில் இணைப்பதாக தெரியவில்லை. அதனால் எங்களுடன் அவர்கள் கூட்டணி வைத்துக் கொள்வார்கள். இதில் எந்த ஒரு கருத்து வேறுபாடும் உங்களுக்கு இருக்கக் கூடாது என தெரிவித்துள்ளார். இந்த அனைத்து நிபந்தனைகளுக்கும் எடப்பாடி பழனிசாமி மாற்றுக் கருத்து எதுவும் தெரிவிக்காமல் சரி என்று கூறிவந்துள்ளார் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றனர். அந்தவகையில் வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் மீண்டும் பாஜகவுடன் குறிப்பாக ஓபிஎஸ் சசிகலா உள்ளிட்டோரின் கூட்டணியில் கைகோர்ப்பார்கள் என்பது உறுதியாகியுள்ளது.

நடிகையை துடிக்க துடிக்க கொன்ற பூசாரி!! குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கி அதிரடி உத்தரவு!!

0

ஹைதராபாத்: ஜூன் 2023 இல் ஆர்வமுள்ள தொலைக்காட்சி நடிகையை கொலை செய்த வழக்கில் பாதிரியாருக்கு ஆயுள் தண்டனை விதித்து ரங்காரெட்டி மாவட்ட நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது. குற்றவாளியான ஐயாகரி வெங்கட சாய் கிருஷ்ணா, குருகண்டி அப்சராவைக் கொன்று, அவரது உடலை செயலிழந்த மேன்ஹோலில் வீசி, பின்னர் சிவப்பு மண் மற்றும் சிமெண்டால் மூடிவிட்டார்.

மேற்கொண்டு நீதிமன்றம் ஆனது குற்றவாளிக்கில் ஒரு 10 லட்சம் அபராதம் விதித்தது பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்திற்கு 9.75 லட்சம் மற்றும் நீதிமன்றத்திற்கு 25 ஆயிரம் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளது. அதேபோல இந்த கொடையானது அப்சராவை திருமணம் செய்ய வேண்டும் என சாய் கிருஷ்ணா கொடுத்ததால் செய்யப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. கோவில் பூசாரி ஆக இருக்கும் சாய் கிருஷ்ணாவின் கோவிலுக்கு அடிக்கடி அப்சராவின் தாயார் சென்றுள்ளார்.
அதன் மூலம் அப்சரா மற்றும் சாய் கிருஷ்ணா இடையே காதல் மலர்ந்துள்ளது. மேற்கொண்டு சாய் கிருஷ்ணா மும்பை திருமணமான நபர். தொடர்ந்து திருமணம் செய்ய வேண்டும் என்று அப்சராவிற்கு அழுத்தம் கொடுத்ததால் அவரை கொலை செய்துள்ளார்.
சாய் கிருஷ்ணா அப்சராவை உனது தோழிகளுடன் கோயம்புத்தூர் விமான நிலையத்தில் இறக்கி விடுவதாக அழைத்துள்ளார். பின்பு கட்டுமான இடத்திற்கு அழைத்து சென்று அடுத்தே கொன்றுள்ளார். பின்பு அப்சராவின் உடலை இரு நாட்களாக காரிலே வைத்து துர்நாற்றம் வீசாத அளவிற்கு வாசனை திரவியங்கள் அடித்துள்ளார்.
பின்பு அரசு அலுவலக வளாகத்தில் உள்ள செப்டிக் டேங்கில் உடலை போட்டு மணலால் நிரப்பி சிமெண்ட் கொண்டு சீல் வைத்துள்ளார். மேற்கொண்டு இவரை உள்ளூர் அலுவலகத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அதில் அப்சராவின் தாயை தனது அக்கா என குறிப்பிட்டு எனது மருமகளை காணவில்லை என்று கூறியுள்ளார். ஆனால் போலீசாரின் விசாரணையில் அப்சராவை கொன்றது சாய் கிருஷ்ணா என்பது தெரியவந்துள்ளது.

கோடையில் தமிழகத்தில் மின் வெட்டு வருமா?!.. செந்தில் பாலாஜி சொல்வது என்ன?!….

0

கோடை காலம் வந்துவிட்டாலே வெயில் கொளுத்த துவங்கிவிடும். எனவே, மின் விசிறி, ஏசி, ஏர் கூலர் போன்றவகளின் பயன்பாடு அதிகரித்து விடும். மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை மக்கள் அதிக மின்சாரத்தை பயன்படுத்துவார்கள். எனவே, மக்களுக்கு கூடுதலான மின்சாரத்தை அரசு கொடுக்க வேண்டும். அது முடியாமல் போகும்போது கோடை காலத்தில் தமிழகத்தில் பல இடங்களில் மின் வெட்டு அறிவிக்கப்படும்.

மின் வெட்டு இருந்தால் மக்கள் அவதிக்கு உள்ளாவார்கள். ஆட்சியாளர்கள் மீது மக்களுக்கு கோபத்தை ஏற்படுத்தும். ஒருமுறை திமுக அரசு தோல்வி அடைந்து அதிமுக ஆட்சியில் வருவதற்கே இந்த மின் வெட்டு காரணமாக அமைந்தது. அந்த அளவுக்கு தமிழகத்தில் மின்வெட்டு என்பது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது.

எனவே, தற்போது தமிழகத்தில் கோடை காலம் துவங்கிவிட்டதால் இந்த வருடமும் மின் வெட்டு இருக்குமா என்கிற கலக்கம் மக்களிடம் எழுந்திருக்கிறது. இந்நிலையில், சென்னையில் உள்ள மின்சார துறை தலைமை அலுவலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று ஆய்வ்ய் செய்தார். அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

கோடைக்காலம் வந்துவிட்டால் தமிழகத்திற்கு 22 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவைப்படும். அதாவது ஏப்ரல், மே மாதங்களில் 6 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கூடுதலாக தேவைப்படும். அதற்கான டெண்டர் கோரப்பட்டிருக்கிறது. எனவே ,கோடை காலத்தில் எந்த தடையும் இல்லாமல் சீரான மின்சாரம் வழங்க வேண்டும் என மின்வாரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. ஒரு யூனிட் 9 அல்லது 9 ரூபாய்க்கு வாங்கும் திட்டம் இருக்கிறது. யூனிட் 12 முதல் 15 ரூபாய்க்கு வாங்கப்படுவதாக பொய்யான செய்திகளை பரப்புகிறார்கள். அதில் உண்மை இல்லை. தமிழகத்தில் ஒரு வருடத்திற்கு ஒரு லட்சத்து 13 ஆயிரம் மில்லியன் யூனிட் மின்சாரம் தேவைப்படுகிறது. கோடை காலத்தை சமாளிக்க மின்சார வாரியம் தயாராக உள்ளது ’ என அவர் கூறினார்.