Home Blog Page 356

எடப்பாடியே பழனிச்சாமியே பரவால்ல.. அவரும் திருந்தணும்!.. டிடிவி தினகரன் பேட்டி!…

0

ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் ஓ.பன்னீர் செல்வத்தை ராஜினாமா செய்ய வைத்துவிட்டு சசிகலா முதல்வராக முயன்றார். ஆனால், சொத்துக்குவிப்பு வழக்கில் அவர் சிறைக்கு செல்ல நேரிட அதிமுக கட்சியின் பொதுச்செயலாளராக டிடிவி தினகரனையும், முதலமைச்சர் பதவியில் எடப்பாடி பழனிச்சாமியையும் நியமித்துவிட்டு சிறைக்கு சென்றார்.

ஒருபக்கம் ஓ.பன்னீர் செல்வம் தர்ம யுத்தம் நடத்திக்கொண்டிருந்தார். இதனால் அதிமுகவில் இரண்டு பிரிவுகள் உண்டானது. இதில் சிலர் ஓபிஎஸ் பக்கம் இருந்தார்கள். இவர்கள் இருவரையும் இணைக்கும் முயற்சியில் பாஜக இறங்கியது. அதுவெற்றி பெற்று ஓ.பன்னீர் செல்வத்துக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கப்பட்டது. ஆனால், ஒருகட்டத்தில் பழனிச்சாமிக்கும், பன்னீர் செல்வத்துக்குமே ஒத்து வரவில்லை. எனவே, ஓபிஎஸ்-ஐ கட்சியிலிருந்து நீக்கினார் பழனிச்சாமி. அதோடு சசிகலாவை, தினகரனையும் கட்சியில் இருந்து நீக்கிவிட்டு கட்சியின் தலைமையாக மாறினார்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்து திமுக ஆட்சியை அமைத்தது. இதன் மூலம் மு.க.ஸ்டாலின் முதல்வராகி விட்டார். கடந்த 4 வருட திமுக ஆட்சி சாதனை என திமுகவினர் சொல்லிக்கொண்டாலும் சோதனையான ஆட்சி என அதிமுக விமர்சனம் செய்து வருகிறது. மக்களிடம் சில அதிருப்திகளும் நிலவுகிறது. குறிப்பாக தமிழத்தில் தினந்தோறும் ஒரு ரவுடி கொலை சட்ட ஒழுங்கு பாதிக்கப்பட்டிருக்கிறது. கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு பின் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிவிட்டது.

இந்நிலையில்தான் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று முன் தினம் டெல்லி சென்று மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். இதனையடுத்து அதிமுகவும் பாஜகவும் மீண்டும் கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன் ‘திமுகவை ஒப்பிடும்போது எடப்பாடி பழனிச்சாமியே பரவாயில்லை என சொல்லுமளவுக்கு இன்றைய நிலைமை மாறி வருகிறது. அதற்கேற்றார் போல் அவரும் திருந்துவார் என நம்புகிறோம். அமித்ஷா சிறந்த தலைவர். அவர் போட்டுள்ள எக்ஸ் தள பதிவுகள் உங்களுக்கு எல்லாவற்றையும் உணர்த்தும்’ என சொல்லியிருக்கிறார்.

நீண்ட நேர தாம்பத்தியத்திற்கு உதவும் வயாகரா ஜூஸ்!! இரவில் ஒரு கிளாஸ் குடிங்க!!

0

உங்கள் தாம்பத்திய வாழ்க்கை சிறக்க இங்கு சொல்லப்பட்டுள்ள சித்த வைத்தியத்தை பின்பற்றுங்கள்.நிச்சயம் தாம்பத்திய வாழ்க்கையில் சந்தோசம் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)தர்பூசணி
2)பீட்ரூட்
3)மாதுளை

செய்முறை விளக்கம்:-

1.முதலில் ஒரு தர்பூசணி கீற்றை எடுத்து தோல் நீக்கிகொள்ள வேண்டும்.பிறகு இதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

2.அடுத்து ஒரு பீட்ரூட்டை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.அதன் பின்னர் ஒரு மாதுளம் பழத்தை கட் செய்து பழ விதைகளை தனியாக சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

3.அதன் பின்னர் மிக்சர் ஜார் ஒன்றை எடுத்து நறுக்கி வைத்துள்ள தர்பூசணி துண்டுகள்,பீட்ரூட் துண்டுகள் மற்றும் மாதுளை விதை போட்டு தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

4.இந்த ஜூஸை தினமும் இரவு நேரத்தில் பருகி வந்தால் விறைப்புத் தன்மை அதிகரிக்கும்.தாம்பத்தியத்தில் அதிக நேரம் ஈடுபட இந்த ஜூஸ் செய்து பருகலாம்.

தேவையான பொருட்கள்:-

1)கசகசா
2)ஜாதிக்காய்
3)பசும் பால்
4)தேன்

செய்முறை விளக்கம்:-

1.ஒரு தேக்கண்டி கசகசா மற்றும் ஒரு தேக்கரண்டி ஜாதிக்காய் தூளை மிக்சர் ஜாரில் போட்டு ஒரு சுத்துவிட்டு எடுத்துக் கொள்ள வேண்டும்.

2.பிறகு அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கிளாஸ் பசும் பால் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அதன் பிறகு அரைத்த ஜாதிக்காய் கலவையை அதில் கொட்டி மிதமான சூட்டில் கொதிக்க வைக்க வேண்டும்.

3.இந்த பாலை கிளாஸிற்கு ஊற்றி ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து பருகி வந்தால் தாம்பத்தியத்தின் மீதான ஆர்வம் அதிகரிக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)வெந்தயம் – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

1.ஒரு கிண்ணத்தை எடுத்து வெந்தயம் ஒரு தேக்கரண்டி அளவு போட்டுக் கொள்ள வேண்டும்.அடுத்து வெந்தயம் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும்.

2.மறுநாள் காலையில் ஊறவைத்த வெந்தயத்தை தண்ணீருடன் சேர்த்து நன்கு மென்று சாப்பிட வேண்டும்.இப்படி செய்தால் தாம்பத்தியத்தின் மீதான ஈர்ப்பு அதிகமாகும்.

மூட்டு வலியை இல்லாமல் ஆக்கும் முடக்கத்தான் கீரை!! இதில் சூப் செய்து குடித்தால் ஒரே நாளில் பலன் கிடைக்கும்!!

0

கடுமையான மூட்டு வலி தொந்தரவை பெரியவர்கள்,சிறியவர்கள் என்று அனைவரும் சந்தித்து வருகின்றனர்.மூட்டு பகுதியில் ஜவ்வு தேய்மானம் ஏற்படுதல்,மூட்டு பகுதியில் அடிபடுதல்,வயது முதுமை,கால்சியம் சத்து குறைபாடு,உடல் பருமன் போன்ற பல்வேறு காரணங்களால் மூட்டு வலி ஏற்படுகிறது.இந்த மூட்டு வலி பாதிப்பு குணமாக முடக்கத்தான் கீரை சூப் செய்து சாப்பிடலாம்.

மூட்டு வலியை குணமாக்கும் முடக்கத்தான் கீரை சூப்:

தேவையான பொருட்கள்:-

1)முடக்கத்தான் கீரை – ஒரு கப்
2)பூண்டு பல் – நான்கு
3)கரு மிளகு – கால் தேக்கரண்டி
4)தக்காளி – ஒன்று
5)மஞ்சள் தூள் – கல் தேக்கரண்டி
6)சீரகம் – ஒரு தேக்கரண்டி
7)உப்பு – சிறிதளவு

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு கப் முடக்கத்தான் கீரையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து இவற்றை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து பாத்திரம் ஒன்றில் போட்டுக் கொள்ள வேண்டும்.

பிறகு அதில் நான்கு வெள்ளைப்பூண்டு பற்களை இடித்து போட்டுக் கொள்ள வேண்டும்.பிறகு ஒரு தேக்கரண்டி சீரகம் மற்றும் கால் தேக்கரண்டி கரு மிளகை உரலில் போட்டு தட்டி முடக்கத்தான் கீரையில் சேர்க்க வேண்டும்.

அதன் பின்பு ஒரு தக்காளி பழத்தை சிறு சிறு துண்டுகளாக அதில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்ற வேண்டும்.அடுத்து கால் தேக்கரண்டி மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.

ஒரு கப் பானம் அரை கப் அளவிற்கு சுண்டி வரும் வரை கொதிக்க வைத்து அடுப்பை அணைக்க வேண்டும்.இந்த சூப்பை இளஞ்சூட்டில் ஒரு கிண்ணத்திற்கு வடித்து கொத்தமல்லி தழை தூவி குடிக்கலாம்.

முடக்கத்தான் கீரை சூப்பை தொடர்ந்து பருகி வந்தால் மூட்டு வலி பாதிப்பு முழுமையாக குணமாகும்.முடக்கத்தான் கீரையில் தோசை,சட்னி,துவையல்,முடக்கத்தான் கீரை வடை என்று விருப்பத்திற்கு ஏற்ப சாப்பிட்டு மூட்டு ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்.

100 சிறுநீரக கற்களை கரைக்கும் அபூர்வ ஜூஸ்!! ஒரு கிளாஸ் குடித்தாலே கிட்னி ஸ்டோனுக்கு மருத்துவ செலவு ஏற்படாது!!

0

சிறுநீரகத்தில் உருவாகிய கற்களை கரைத்து தள்ளும் மூலிகை ஜூஸ் செய்வது குறித்து இங்கு விளக்கப்பட்டுள்ளது.மருத்துவ செலவின்றி கிட்னி கற்களை கரைக்க உடனடியாக முயற்சி செய்யுங்கள்.

தேவைப்படும் பொருட்கள்:-

இஞ்சி – ஒரு துண்டு
நெல்லிக்காய் – இரண்டு
தேன் – ஒரு தேக்கரண்டி
சீரகத் தூள் – ஒரு தேக்கரண்டி
தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

1)ஒரு பீஸ் இஞ்சி துண்டை தோல் நீக்கிவிட்டு தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.பிறகு இரண்டு நெல்லிக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும்.

2)அடுத்து ஒரு தேக்கரண்டி சீரகத்தை வாணலியில் போட்டு வறுத்து ஆறவைத்து பொடித்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு மிக்சர் ஜாரில் இஞ்சி துண்டு,நெல்லிக்காய் துண்டுகள் சேர்த்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ள வேண்டும்.

3)பிறகு இந்த ஜூஸை கிளாஸிற்கு வடிகட்டி ஒரு தேக்கரண்டி தேன் மற்றும் ஒரு தேக்கரண்டி சீரகத் தூள் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்ய வேண்டும்.

4)இந்த ஜூஸை குடித்தால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகாமல் இருக்கும்.இந்த இஞ்சி நெல்லி ஜூஸ் சிறுநீரகத்தில் உள்ள கழிவுகள் முழுமையாக வெளியேறிவிடும்.

தேவையான பொருட்கள்:-

எலுமிச்சை – ஒன்று
தேன் – ஒரு தேக்கரண்டி
தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

1)முதலில் ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதன் சாற்றை கிண்ணம் ஒன்றில் பிழிந்துவிட வேண்டும்.

2)பிறகு அதில் ஒரு கிளாஸ் அளவிற்கு தண்ணீர் ஊற்றி நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.அதன் பிறகு ஒரு தேக்கரண்டி தேனை கலந்து வெறும் வயிற்றில் பருகினால் சிறுநீரகத்தில் உள்ள கற்கள் முழுமையாக உடைந்து வெளியேறிவிடும்.

தேவையான பொருட்கள்:-

வாழைத்தண்டு – ஒரு கப்
தண்ணீர் – ஒன்றரை கப்

செய்முறை விளக்கம்:-

1)ஒரு வாழைத்தண்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு ஒன்றரை கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ள வேண்டும்.

2)பிறகு இந்த வாழைத்தண்டு சாறை வடிகட்டி பருகி வந்தால் சிறுநீரக கற்கள் கரைந்து வெளியேறிவிடும்.

இடுப்பு வலி குறைய.. எலும்பு எக்கு போன்று வலிமை பெற கருப்பு உளுந்தை இப்படி பயன்படுத்துங்கள்!!

0

கருப்பு உளுந்தில் கால்சியம்,நார்ச்சத்து,பாஸ்பரஸ்,பொட்டாசியம்,இரும்பு போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.இந்த கருப்பு உளுந்தில் செய்யப்படும் உணவுகளை சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி,எலும்பு தேய்மானம் போன்ற பாதிப்புகள் குணமாகும்.

இடுப்பு வலிமைக்கு கருப்பு உளுந்து புட்டு:

தேவைப்படும் பொருட்கள்:-

1)உடைத்த கருப்பு உளுந்து – ஒரு கப்
2)பச்சரிசி – அரை கப்
3)ஏலக்காய் – ஒன்று
4)தேங்காய் துருவல் – அரை கப்
5)நாட்டு சர்க்கரை – அரை கப்
6)உப்பு – சிறிதளவு
7)தண்ணீர் – சிறிதளவு

செய்முறை விளக்கம்:-

1.முதலில் ஒரு கப் உடைத்த உளுந்தை வாணலியில் சேர்த்து குறைவான தீயில் பொன்னிறமாக வறுக்க வேண்டும்.பிறகு இதை பாத்திரத்தில் கொட்டி ஆறவைக்க வேண்டும்.

2.அடுத்து அரை கப் அளவிற்கு பச்சரிசி எடுத்து வாணலியில் போட்டு வறுக்க வேண்டும்.இப்பொழுது உளுந்து மற்றும் அரிசியை நன்கு ஆறவைத்து மிக்சர் ஜாரில் போட்டுக் கொள்ள வேண்டும்.

3.அதன் பிறகு ஒரு ஏலக்காயை அதனுடன் சேர்த்து பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை ஒரு பாத்திரத்தில் கொட்ட வேண்டும்.

4.அதன் பிறகு அரை கப் நாட்டு சர்க்கரை மற்றும் உப்பு தூவி நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.அடுத்து சிறிது தண்ணீர் தெளித்து புட்டு மாவு பதத்திற்கு கலந்துவிட வேண்டும்.

5.பிறகு அடுப்பில் இட்லி பாத்திரம் வைத்து தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு இட்லி தட்டில் ஈரமான காட்டன் துணி வைத்து தயாரித்து வைத்துள்ள புட்டு மாவை பரப்பி மூடி போட்டு வேகவைக்க வேண்டும்.

6.புட்டு வெந்து வந்ததும் இதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி தேங்காய் துருவலை இதனுடன் தூவி சாப்பிட வேண்டும்.இந்த கருப்பு உளுந்து புட்டு இடுப்பு எலும்பை வலிமையாக்கும்.இடுப்பு வலி,முதுகு வலி பாதிப்பு இருப்பவர்கள் வாரத்தில் மூன்று தினங்கள் கருப்பு உளுந்து புட்டு செய்து சாப்பிட்டு வந்தால் உரிய பலனை காண முடியும்.கருப்பு உளுந்து பால்,கருப்பு உளுந்து லட்டு,கருப்பு உளுந்து களி,கருப்பு உளுந்து கஞ்சி போன்றவற்றை செய்து சாப்பிட்டு வந்தாலும் இடுப்பு எழும்பு வலிமையாகும்.

இது தெரியுமா? பழுத்த மாம்பழத்தைவிட பச்சை மாங்காய்தான் ஆரோக்கியத்திற்கு நல்லதாம்!!

0

வெயில் காலம் என்றால் நமக்கு நினைவிற்கு வருவது மாம்பழங்கள்தான்.அதிக தித்திப்பு சுவையுடன் ஊரை கூட்டும் வாசனையை கொண்டிருக்கும் மாம்பழத்தை ருசிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது.மாம்பழத்தில் மல்கோவா,அல்போன்சா,கிளி மூக்கு,குண்டு மங்கா,பங்கனப்பள்ளி என்று நூற்றுக்கணக்கான வெரைட்டி இருக்கிறது.

இதில் பெரும்பாலும் மல்கோவா,அல்போன்சா,கிளி மூக்கு மாம்பழங்கள் விற்பனைக்கு வருகிறது.மாம்பழம் சுவையாக இருந்தாலும் பச்சை மாங்காயில் கிடைக்கும் சத்து அதில் இல்லை என்பதுதான் நிதர்சனம்.பச்சை மாங்காய் புளிப்பாக இருப்பதால் அவற்றில் உப்பு,மிளகாய் தூவி சாப்பிடுகின்றனர்.இந்த பச்சை மாங்காய் சுவை குறைவாக இருந்தாலும் அவற்றின் ஆரோக்கிய பலன்கள் தெரிந்தால் இனி ஆர்வத்துடன் வாங்கி சாப்பிடுவீங்க.

பச்சை மாங்காய் கொடுக்கும் ஆரோக்கிய பலன்கள்:

*உடலில் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மாங்காய் சாப்பிடலாம்.பச்சை மாங்காய் சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சனை சரியாகும்.

*உடல் எடையை குறைக்க பச்சை மாங்காய் உட்கொள்ளலாம்.கல்லீரலில் இருக்கின்ற கொழுப்பு கரைய பச்சை மாங்காய் ஜூஸ் பருகலாம்.

*கோடை காலத்தில் வியர்க்குரு பிரச்சனையை பலரும் சந்திக்கின்றனர்.இந்த பாதிப்பு ஏற்படாமல் இருக்க பச்சை மாங்காய் சாறு பருகலாம்.

*பச்சை மாங்காயில் வைட்டமின் சி சத்து அதிகம் நிறைந்திருக்கிறது.இந்த காயை இடித்து உப்பு,மிளகாய் தூள் சேர்த்து சாப்பிட்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

*இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க பச்சை மாங்காய் சாப்பிடலாம்.பல் ஆரோக்கியம் மேம்பட சீசனில் பச்சை மாங்காய் வாங்கி சாப்பிடுங்கள்.கர்ப்பிணிகள் பச்சை மாங்காய் சாப்பிட்டால் குமட்டல்.வாந்தி வராமல் இருக்கும்.

*ஈறுகளில் இரத்த கசிவு பிரச்சனை இருந்தால் பச்சை மாங்காய் ஜூஸ் செய்து குடித்து பலன் காணலாம்.

*ஆனால் பச்சை மாங்காய் அளவிற்கு அதிகமாக சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு ஏற்படும்.ஒவ்வாமை பிரச்சனை இருப்பவர்கள் பச்சை மாங்காய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

*அசிடிட்டி,அல்சர் பிரச்சனை உள்ளவர்கள் பச்சை மாங்காய் சாப்பிடாமல் இருப்பது நல்லது.வயிற்றுப்புண்,வயிறு எரிச்சல் இருப்பவர்கள் பச்சை மாங்காய் அதிகமாக சாப்பிடக் கூடாது.

ஹெல்த்துக்கு சப்போர்ட் தரும் சப்போட்டா!! இந்த பழத்தில் உள்ள 10 மருத்துவ குணங்கள் தெரியுமா?

0

பழங்கள் என்றாலே ஊட்டச்சத்துக்கள்,ஆரோக்கிய நன்மைகள் நிறைந்தவை என்பது நமக்கு தெரியும்.இதில் சிலவகை பழங்களின் சுவை மற்றும் மருத்துவ குணங்கள் தனித்துவம் வாய்ந்து காணப்படும்.அப்படி ஒரு பழம்தான் சப்போட்டா.

இந்த பழத்தில் சர்க்கரை கொட்டியது போன்ற இனிப்பு இருக்கும்.வாசனை மற்றும் சுவையில் சப்போட்டா தனித்து காணப்படுகிறது.சப்போட்டா பழத்தில் ஜூஸ் செய்து குடித்தால் அவ்வளவு ருசியாக இருக்கும்.சப்போட்டா பழத்தில் வைட்டமின் சி சத்து நிறைந்து காணப்படுகிறது.இந்த சப்போட்டா பழத்தை சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.இந்த பழம் குளிர் காலத்தில் பிஞ்சி பிடித்து கோடை காலத்தில் விளைச்சலுக்கு வருகிறது.

சப்போட்டா பழ ஆரோக்கிய நன்மைகள்:

1)நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சப்போட்டா பழம் சாப்பிடலாம்.செரிமானப் பிரச்சனையை சரி செய்யும் அபூர்வ மருந்து சப்போட்டா.

2)உடல் சூட்டை தணிக்க செய்கிறது.வயிற்றுப்போக்கு பிரச்சனை இருந்தால் சப்போட்டா சாப்பிட்டு சரி செய்யலாம்.

3)மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்க உதவுகிறது.சப்போட்டாவில் இருக்கின்ற நார்ச்சத்து குடல் இயக்கத்திற்கு உதவுகிறது.

4)சப்போட்டா ஜூஸ் பருகினால் பெருங்குடல் ஆரோக்கியம் மேம்படும்.காலை நேரத்தில் சப்போட்டா பழம் சாப்பிட்டால் குடல் எரிச்சல்,வாய்ப்புண் போன்ற பாதிப்புகள் குணமாகும்.

5)சப்போட்டாவில் இரும்பு,கால்சியம் போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.எலும்பு வலிமைக்கு சப்போட்டா சிறந்த நிவாரணமாக இருக்கும்.

6)பெண்களுக்கு எலும்பு தேய்தல் பிரச்சனை அதிகமாக இருக்கிறது.இதை சரி செய்ய சப்போட்டா பழம் சாப்பிடலாம்.

7)சளி,இருமல் பாதிப்பு குணமாக சப்போட்டா பழச்சாறு செய்து பருகலாம்.சப்போட்டாவில் இருக்கின்ற வைட்டமின் ஏ சத்து கண் பார்வை திறனை மேம்படுத்த உதவுகிறது.

8)இதயம் சம்மந்தபட்ட பிரச்சனைகள் குணமாக சப்போட்டா பழம் சாப்பிடலாம்.இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்க சப்போட்டா பழம் சாப்பிடலாம்.

9)கர்ப்பிணி பெண்களுக்கு உடல் சோர்வு ஏற்படாமல் இருக்க சப்போட்டா ஜூஸ் செய்து பருகலாம்.தலைசுற்றல்,வாந்தி போன்ற பாதிப்புகள் குணமாக சப்போட்டா ஜூஸ் பருகலாம்.

10)சரும நோய்களுக்கு சப்போட்டா சிறந்த நிவாரணியாக திகழ்கிறது.முடி வளர்ச்சிக்கு சப்போட்டா பழம் சாப்பிடலாம்.

இந்த ஒரு கசப்பு காயை பச்சையாக சாப்பிட்டால்.. சர்க்கரை லெவல் ஆச்சர்யப்படும் அளவிற்கு கட்டுப்படும்!!

0

தோற்றத்தில் பிஞ்சி வெள்ளரி போன்று இருக்கும் கோவைக்காய் சர்க்கரை நோயை குணப்படுத்தும் மருந்தாக பயன்படுகிறது.கொடி வகையை சேர்ந்த கோவைக்காய் கசப்பு சுவை கொண்ட காய்கறி என்பதால் பலரும் அதை ஒதுக்கி வைக்கின்றனர்.

உண்மையில் கோவைக்கு நிகரான சத்து வேறு எந்த காய்களிலும் இல்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.கோவைக்காயில் நார்ச்சத்து,வைட்டமின் ஏ,வைட்டமின் சி போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்து காணப்படுகிறது.

கோவைக்காயை ஜூஸாக தயாரித்து குடித்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.நீரிழிவு நோயாளிகள் கோவைக்காய் ஜூஸ் செய்து பருகினால் நல்ல பலன் கிடைக்கும்.கோவைக்காயில் இருக்கின்ற குறைவான கலோரி உடல் எடையை குறைக்க உதவுகிறது.

நார்ச்சத்து நிறைந்த கோவைக்காய் செரிமானப் பிரச்சனையை சரி செய்கிறது.கோவைக்காயில் இருக்கின்ற பொட்டாசியம் சத்து இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.தினமும் கோவைக்காய் ஜூஸ் பருகி வருபவர்களுக்கு இருதய நோய் அபாயம் ஏற்படாமல் இருக்கும்.

ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் மற்றும் வைட்டமின் சி சத்து நிறைந்த கோவைக்காயை அடிக்கடி உணவாக சாப்பிட்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.சிறுநீரக கல்லை கரைக்க கோவைக்காய் சாறு பருகலாம்.

சிறுநீர் பாதையில் உருவாகிய தொற்றுக் கிருமிகளை அழிக்க கோவைக்காய் ஜூஸ் செய்து குடிக்கலாம்.தொப்பை கொழுப்பை கரைக்க கோவைக்காய் சாப்பிடலாம்.பல் சம்மந்தபட்ட பிரச்சனைகள் குணமாக கோவைக்காய் சாப்பிடலாம்.கண் தொடர்பான பிரச்சனைகளுக்கு அருமருந்தாக கோவைக்காய் திகழ்கிறது.

அல்சர் புண்களை குணமாக்கி கொள்ள கோவைக்காய் சாறை வெறும் வயிற்றில் பருக வேண்டும்.வாய்ப்புண்,வயிற்றுப்புண் பாதிப்பு குணமாக கோவைக்காய் சாப்பிடலாம்.கோவைக்காய் இலையை நெயில் வதக்கி குழைத்து சருமத்தில் பூசினால் சொறி சிரங்கு,தேமல் போன்ற தோல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாகும்.

உடல் சூடு குறைய கோவைக்காய் வற்றலை தயிரில் கலந்து சாப்பிடலாம்.தீப்புண்கள் மீது கோவை இலை சாறு தடவினால் சீக்கிரம் குணமாகும்.

இந்த விதையை பொடித்து சூடான நீரில் கலந்து குடிக்க.. முழங்கால் வலி விட்டொழியும்!!

0

இளம் வயது நபர்கள் முழங்கால் வலி பிரச்சனையால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.முதியவர்களைவிட இளம் வயதினருக்கு முழங்கால் வலி அதிகமாக இருக்கிறது.இந்த பாதிப்பில் இருந்து முழுமையாக குணமாக வெந்தய சூரணம் சாப்பிடுங்கள்.

தேவைப்படும் பொருட்கள்:-

1)வெந்தயம் – 50 கிராம்
2)தேன் – ஒரு தேக்கரண்டி
3)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

கிண்ணத்தில் 50 கிராம் வெந்தயத்தை போட்டு தண்ணீர் ஊற்றி இரண்டு,மூன்று முறை அலசிக் கொள்ள வேண்டும்.

பிறகு வெந்தயத்தை நாள் முழுவதும் ஊறவைக்க வேண்டும்.வெந்தய விதை நன்கு ஊறி வந்ததும் தண்ணீரை வடித்துவிட்டு ஒரு காட்டன் துணியில் பரப்பி வெயிலில் இரண்டு நாட்களுக்கு காய வைக்க வேண்டும்.

பிறகு இவற்றை வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுக்க வேண்டும்.பிறகு மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.இந்த வெந்தய சூரணத்தை காற்றுப்புகாத டப்பாவில் கொட்டி சேகரித்துக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பின்னர் இந்த தண்ணீரில் ஒரு தேக்கரண்டி வெந்தய சூரணம் சேர்த்து இனிப்பு சுவைக்காக தேன் கலந்து பருகலாம்.

இந்த வெந்தய சூரண பானத்தை தினமும் ஒரு கிளாஸ் அளவில் குடித்து வருபவர்களுக்கு முழங்கால் வலி பிரச்சனை அறவே ஏற்படாது.

வெந்தய சூரண பானம் பருகுவதால் கிடைக்கும் வேறு நன்மைகள்:

மலச்சிக்கல்,அஜீரணக் கோளாறு நீங்கும்.இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.எலும்பு வலிமை அதிகரிக்கும்.நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.அல்சர் புண்கள் சீக்கிரம் குணமாகும்.வயிறு எரிச்சல்,நெஞ்செரிச்சல் போன்ற பாதிப்புகள் குணமாகும்.

வெந்தய சூரணத்தை அளவிற்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் வயிற்றுப்போக்கு அபாயம் ஏற்படும்.எனவே தினமும் ஒரு கிளாஸ் வெந்தய சூரணம் மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் வெந்தய சூரணம் எடுத்துக் கொள்ளும் முன்பு மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.

இந்த கீரையை ஒரு கையளவு வெறும் வயிற்றில் சப்பிட்டால்.. வாய்ப்புண் குடல்புண் அப்படியே குணமாகிவிடும்!!

0

மோசமான உணவை சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் முழுமையாக கெட்டு நோய் பாதிப்புகள் உண்டாகிறது.உணவு தவிர்த்தல்,காரமான உணவு,ஆரோக்கியம் இல்லாத உணவுகள் சாப்பிடுதல் போன்றவற்றை தொடர்ச்சியாக செய்து வருபவர்களுக்கு வாய் மற்றும் வயிற்றில் புண்கள் உருவாகி மோசமான ஆபத்து ஏற்படும்.இதில் இருந்து மீள மணத்தக்காளி கீரையை உட்கொள்ளலாம்.

தீர்வு 01:

1)மணத்தக்காளி கீரை – ஒரு கையளவு
2)சீரகம் – ஒரு தேக்கரண்டி
3)தண்ணீர் – ஒரு கிளாஸ்

மணத்தக்காளி கீரையை பொடியாக நறுக்கி தண்ணீரில் போட்டு அலசி எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு ஒரு தேக்கரண்டி சீரகம் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஜூஸ் பதத்திற்கு அரைக்க வேண்டும்.

இந்த மணத்தக்காளி ஜூஸை வடிகட்டி காலை நேரத்தில் வெறும் வயிற்றில் பருகி வந்தால் வாய்ப்புண்,வயிற்றுப்புண் பிரச்சனை நீங்கும்.

தீர்வு 02:

1)மணத்தக்காளி கீரை – ஒரு கப்
2)சின்ன வெங்காயம் – நான்கு
3)தக்காளி – ஒன்று
4)எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
5)வெள்ளைப்பூண்டு பல் – இரண்டு
6)உப்பு – தேவையான அளவு
7)கடுகு – கால் தேக்கரண்டி
8)சீரகம் – கால் தேக்கரண்டி
9)தேங்காய் துருவல் – கால் கப்

முதலில் மணத்தக்காளி கீரையை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு தக்காளி மற்றும் சின்ன வெங்காயத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு இரண்டு பூண்டு பற்களை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.இப்பொழுது அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு கடுகு,சீரகம் சேர்த்து பொரியவிட வேண்டும்.

அடுத்து நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயம்,பூண்டு சேர்த்து வதக்க வேண்டும்.அதன் பிறகு நறுக்கிய தக்காளி பழத்தை போட்டு வதக்கி எடுக்க வேண்டும்.

இப்பொழுது பொடியாக நறுக்கி வைத்துள்ள மணத்தக்காளி கீரையை போட்டு வதக்க வேண்டும்.அதன் பிறகு கால் கப் தேங்காய் துருவலை சேர்த்து கிளற வேண்டும்.இறுதியாக தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து இறக்க வேண்டும்.இந்த மணத்தக்காளி கீரை பொரியலை சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண்,குடல் புண் சீக்கிரம் குணமாகும்.