Home Blog Page 383

பொது பட்டியலிலிருந்து அதிரடி நீக்கம்.. மாநில அரசுக்கு மாற்றப்படும் கல்வி!! அதிபர் போட்ட அதிரடி உத்தரவு!!

0

Tamilnadu: தமிழகம் பல்வேறு ஆண்டுகளாக கல்வியை மாநில அரசிடம் முழுமையாக ஒப்படைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறது. இதில் ஆளும் கட்சி என தொடங்கி எதிர்க்கட்சி வரை தற்போது வந்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் உள்ளிட்ட பலரும் இது ரீதியான எதிர்ப்பை கொடுத்து வருகின்றனர். ஆனால்  வளர்ந்த நாடான அமெரிக்காவில் தற்போது இதனை அமலுக்கு டிரம்ப் கொண்டு வந்துள்ளார். அதாவது மத்திய கல்வி என்பதை தவிர்த்து விட்டு மாகாண அரசுகளிடம் கல்வி ஒப்படைக்கும்  அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதாவது ஒவ்வொரு முறை அரசு மாறும்போதும்  அது சார்ந்து கல்வியிலும் மாற்றத்தை கொண்டு வந்து விடுகின்றனர். இதனால் மாணவர் மற்றும் மாணவிகள் கல்வி ரீதியாக பல இன்னல்களைசந்திக்க வேண்டி உள்ளது. இதனை மாற்றும் பொருட்டு தற்பொழுது அமெரிக்காவில் இந்த நடைமுறையை ட்ரம்ப் கொண்டு வர உள்ளார். தமிழகத்தில் தொடங்கிய இந்த கோரிக்கை தற்பொழுது அமெரிக்காவில் வரை நடைமுறைக்கு வருவதை பார்க்கையில் சரியான கூற்று என்று பலரும் கூறினாலும், தற்போது இந்தியாவில் இது ஏன் நடைமுறைப்படுத்த முடியவில்லை என்று கேள்வி எழுந்துள்ளது.

அதுமட்டுமின்றி மாநில அரசுக்கு கல்வி முழுமையாக மாறும் பொழுது நீட் போன்ற தேர்வுகள் இருக்காது. இதையெல்லாம் வைத்து தான் மாநில அரசிடம் கல்வியை ஒப்படைக்க மத்திய அரசு முன் வரவில்லை. மாறாக மத்திய அரசு தனது சார் கல்வியை திணிக்கவே முயற்சிக்கிறது. அதன்படி தான் மும்மொழிக் கொள்கை என ஆரம்பித்து தற்பொழுது சிபிஎஸ்இ பள்ளிகள் நிறுவுவதற்கு கூட மாநில அரசிடம் உரிமை கேட்க தேவையில்லை எனக் கூறியுள்ளனர்.

எடப்பாடிக்கு ஆதரவு அளித்த ஓபிஎஸ்.. மீண்டும் கட்சிக்குள் இணைக்க மாஸ்டர் பிளான்!! பட்ஜெட்டில் நடந்த திடீர் திருப்பம்!!

0

ADMK: அதிமுகவில்  உட்கட்சி பனிப்போரானது சற்று கரைந்த வண்ணமாக உள்ளது. எடப்பாடி மற்றும் செங்கோட்டையன் இடையே இருந்த வந்த சஞ்சலமானது சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரும் போது சரியானது. அதே சமயம் தான் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி இடையே உள்ள கருத்து வேறுபாடும் குறைந்தது. சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்றிய போது, ஓபிஎஸ் குரல் வாக்கெடுப்பு மற்றும் டிவிஷன் வாக்கெடுப்பு உள்ளிட்டவற்றில் ஆதரவு அளித்திருந்தார். அதேபோல பட்ஜெட் தாக்கலின் போது தென்னரசுக்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.

அக்கணமே எடப்பாடியை ஆதரித்து பின்னணியில் இருந்து ஓபிஎஸ், அமைச்சருக்கு எதிராக பல கேள்விகளை எழுப்பினார். இவையனைத்தும் அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ் இணக்கமாவதற்கான   வழிபோல் உள்ளது என கூறுகின்றனர். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் மற்றும் சசிகலா தினகரன் உள்ளிட்ட அணியினருடன் கூட்டணி வைக்க  மாட்டேன் என்று பலமுறை கூறியுள்ளார். ஆனால் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் திமுகவை எதிர்க்க பக்கபலமான கூட்டணி தேவை. இதனின் முதற்கட்டமாக விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இது முடிவுக்கு வராத பொருட்டு ஓபிஎஸ் மீண்டும் கட்சிக்குள் இணைக்க அதிக வாய்ப்புள்ளது என கூறுகின்றனர். ஆனால் ஒருபோதும் சசிகலாவையோ அல்லது தினகரனையோ கட்சிக்குள் விடமாட்டேன் என்ற எண்ணத்தில் உள்ளாராம். அதேபோல அதிமுக பாஜகவுடன் நெருக்கம் காட்டும் என எண்ணி வந்தவர்களுக்கு தற்போது அவர்களுக்குள் நடக்கும் எதிரும் புதிரான போட்டியானது கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை என்பதை தான் உறுதிப்படுத்துகிறது.

இதை வைத்து பார்க்கையில் சட்டமன்றத் தேர்தலில் விஜய்யுடன் கூட்டணி அமையும் அல்லது மீண்டும் அதிமுகவை ஒருங்கிணைக்க எடப்பாடி அவர்கள் ஓபிஎஸ்-ஐ உள் கொண்டு வரலாம் எனக் கூறுகின்றனர். மேற்கொண்டு இருக்கும் நிர்வாகிகளை சிதற விடக்கூடாது என்பதற்காகவே செங்கோட்டையனிடம் இணக்கம் காட்டியுள்ளார் என்றும் கூறுகின்றனர்.

விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றக்கூடாது!! அமைச்சர் பி மூர்த்தி!!

0

தமிழக சட்டப்பேரவையில் அதிமுகவினரின் கேள்விக்கு பதில் அளித்த வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி அவர்கள் விவசாய நிலங்களை வீட்டுமனைகளாக விற்பனை செய்ய அனுமதி கிடையாது என தெரிவித்திருக்கிறார்.

தற்பொழுது தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கலை தொடர்ந்து கேள்வி நேரங்களும் ஒதுக்கப்பட்டு வருகிறது. இப்படி ஒதுக்கப்பட்ட கேள்வி நேரத்தில் அதிமுக உறுப்பினா் எம்.ராஜமுத்து வீரபாண்டி அவர்கள் நில வழிகாட்டி அளவானது அதிமுக இருந்த பொழுது 33 சதவீதம் குறைக்கப்பட்டது என்றும் ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த பின்பு 33 சதவீதம் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது என்றும் தெரிவித்ததோடு, 3 ஏக்கர் நிலங்களை அதாவது விவசாய நிலங்களை வைத்திருக்கக்கூடிய விவசாயிகள் தங்களுடைய நிலங்களில் இருந்து 5 , 10 செண்டுகளை வீட்டுமனைகளாக பத்திரப்பதிவு செய்வதற்காக சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு செல்லும் பொழுது அதற்கான விலையை அவர்களே நிர்ணயிக்கிறார்கள் என்றும் இதனால் விவசாயிகள் சிரமப்படுகிறார்கள் என்றும் தெரிவித்திருக்கிறார்.

இதற்கு பதிலளித்த வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி தெரிவித்திருப்பதாவது :-

விவசாய நிலங்களை பிரித்து வீட்டு மனைகளாக மாற்றிக்கொள்ள முடியாது என்றும் அதற்கான முறையான வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டியது மிகவும் அவசியம் எனவும் தெரிவித்தார். மேலும் 2012 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் இருந்த பொழுது என்ன விதிமுறைகளை பின்பற்றியதோ அதைத்தான் தற்பொழுது திமுக அரசும் பின்பற்றுகிறது என்றும் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

மேலும், பொது மக்களின் நலனுக்காக கிராம நத்தமாக இருக்கக்கூடிய பகுதிகளில் உள்ள நிலங்களை எந்த மாற்றமும் இல்லாமல் பதிவு செய்து கொடுப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். அதிலும் குறிப்பாக திமுக அரசு சட்ட திட்டங்களை பின்பற்றியே நிலங்களை வீட்டுமனைகளாக மாற்றுவதை கருத்துடன் கண்காணித்து பணியாற்றிய வருவதாகவும் கூறியிருக்கிறார்.

ரஜினியிடம் உள்ள பைத்தியக்காரத்தனம்!! திட்டி தீர்த்த இயக்குனர்!!

0

சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் இந்திய திரை உலகில் தற்பொழுது மிகப்பெரிய அளவில் ரசிகர்களை தன்னகத்தே கொண்டு இருக்கிறார். ஜாக்கிசானுக்கு பிறகு அதிக அளவு சம்பளத்தை பெற்ற நபராக இவர் பார்க்கப்படுகிறார்.

சினிமா துரை என்றாலே பலருக்கு வெற்றிகளும் இருக்கும் தோல்விகளும் இருக்கும் அப்படித்தான் நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கும் மிகப்பெரிய வெற்றி படங்களில் நடித்த தன்னுடைய திறமையை சினிமா துறையில் வெளிப்படுத்தியதால் மிகப்பெரிய ஆளுமையை பெற்றவராக இவர் திகழ்கிறார். எனினும் இடையில் சிறிது காலம் இவருடைய படங்கள் எதுவும் வெற்றி பெறவில்லை. அப்படிப்பட்ட தருணத்தில் தான் ஜெயிலர் திரைப்படம் திலிப் குமார் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய பிளாக் பஸ்டர் திரைப்படமாக ரஜினிகாந்தை மீண்டும் ரசிகர்கள் எதிர்பார்க்கும் இடத்திற்கு கொண்டு சேர்த்தது. அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் அவர்களின் கூலி மற்றும் திலீப் குமார் அவர்களின் ஜெயிலர் 2 திரைப்படங்கள் ஆனது இப்பொழுது எடுக்கப்பட்டு வருகிறது.

இதுபோன்ற ஒரு தருணத்தில் இயக்குனர் பார்த்திபன் ரஜினி குறித்து ஒரு முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது :-

நடிகர் ரஜினிகாந்த்தும் இயக்குனர் ஸ்ரீதரும் இணைந்து பணிபுரிந்த இளமை ஊஞ்சல் ஆடுகிறது திரைப்பட தளத்தில் நிகழ்ந்த நிகழ்வு ஒன்றை பகிர்ந்துள்ளார். சிலுவை ஊஞ்சலாடுகிறது திரைப்படத்தில் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் ரஜினிகாந்த் செல்போன் பேசும்பொழுது மூன்று படிகள் முன்னேறுவது மற்றும் உடனே கீழே இறங்குவது என மாற்றி மாற்றி செய்து கொண்டிருக்கிறார். அதை பார்த்த ஸ்ரீதர் அவர்கள் ஏன் பைத்தியம் பிடித்து விட்டதா ஒன்று மேலே நின்று பேச சொல்லுங்கள் அல்லது கீழே நின்று பேச சொல்லுங்கள் என தெரிவித்திருக்கிறார். உண்மையில் அந்த தருணத்தில் நடிகர் ரஜினி அவர்கள் செய்தது அனைவருக்கும் பைத்தியக்காரத்தனமாகவே தோன்றியிருக்கிறது என பார்த்திபன் பகிர்ந்திருக்கிறார்.

போக்குவரத்து துறையில் நடத்துனர், ஓட்டுனர் பணி!.. விண்ணப்பிக்க கடைசி நாள் எதுன்னு தெரியுமா?..

0

TN Govt jobs: தமிழக அரசின் துறைகளில் முக்கியமானது போக்குவரத்து துறை. பல ஆயிரம் பேருந்துகள் தமிழகமெங்கும் செயல்பட்டு வருகிறது. தனியார் பேருந்துகளை ஒப்பிடும்போது இதில் குறைவான டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அதேநேரம், அரசு பேருந்துகளிலும் சாதாரண காட்டண பேருந்து, டீலக்ஸ், சூப்பர் டீலக்ஸ், ஏசி என பல வகை இருக்கிறது.

இதில் எல்லாமே டிக்கெட் கட்டணங்கள் மாறுபடும். யாருக்கு எதில் விருப்பமிருக்கிறதோ அதில் பயணிப்பார்கள். ஒருபக்கம் பெண்களுக்கு கட்டணிமில்லா பேருந்துகளும் தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது. ஆனால், அது ஒரு குறிப்பிட்ட தூரங்களுக்கு மட்டுமே செல்ல முடியும். நெடுதூரம் பயணிக்க முடியாது.

ஒருபக்கம் போக்குவரத்து துறையில் ஆயிரக்கணக்கான நபர்கள் பணிபுரிந்து வருகிறார். போக்குவரத்து துறையில் பல பிரிவுகளும் இருக்கிறது. இதில், பெரும்பாலும் ஓட்டுனர்களும், நடத்துனர்களும் அதிக அளவில் பணியாற்றி வருகிறார்கள். அரசு ஓட்டுனர்களும், நடத்துனர்களும் ஒய்வு பெரும்போது புதிய ஊழியர்களை பணியமர்த்துவார்கள்.

அந்தவகையில், போக்குவரத்து கழகங்களில் 3274 ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. எனவே, இந்த பணியில் சேர விரும்புவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக போக்குவரத்துத்துறை அறிவித்திருக்கிறது. நாளை முதல் ஏப்ரல் 21ம் தேதி வரை இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அரசு பேருந்தில் பணியாற்ற விரும்புபவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். அதேநேரம், இது ஒப்பந்த  பணியா அல்லது நேரிடையான அரசு பணியா என்கிற முழு விபரம் இன்னும் வெளியாகவில்லை. இதுபற்றி விரைவில் போக்குவரத்து கழகம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த போராட்டத்திற்கு நாள் குறித்த அரசு ஊழியர்கள்!! கருணை காட்டுமா அரசு!!

0

மார்ச் 19 ஆகிய நேற்று அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் உடைய அமைப்பான ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் சார்பாக 10 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தப்பட்டது. இதற்கு அரசு எந்தவித பதிலும் அளிக்காத நிலையில் மீண்டும் அடுத்த அடுத்த போராட்டங்களுக்கான தேதிகளை குறித்து இருக்கிறது ஜாக்டோ ஜியோ அமைப்பு.

ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் முக்கிய கோரிக்கைகள் :-

✓ பழைய ஓய்வூதிய திட்டம்
✓ நிரந்தர வேலை வாய்ப்பு
✓ காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு
✓ 21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்
✓ சரண் விடுப்பு சலுகைகளை பணமாக மாற்றிக் கொள்வதற்கு அனுமதி வழங்க வேண்டும்
✓ பணி நிரந்தரத்தோடு காலம் முறை ஊதியம் வழங்க வேண்டும் போன்றவை.

நேற்று நடந்த போராட்டத்தை அடுத்து அரசு தரப்பில் இருந்து எந்த பதிலும் தெரிவிக்கப்படாத நிலையில் மீண்டும் போராட்டம் நடத்த இருப்பதாகவும் அதன்படி, மாவட்ட அளவில் அனைத்து அரசு ஊழியர் சங்கங்கள் ஒருங்கிணைப்பு கூட்டம் மார்ச் 24ஆம் தேதி நடத்த இருப்பதாகவும், அதனைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் வருகிற ஏப்ரல் 3 ஆம் தேதி அன்று நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மாநில அளவில் முழு நேர கோரிக்கை தர்ணா போராட்டம் போராட்டம் ஆனது அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் ஏப்ரல் 25 ஆம் தேதி மேற்கொள்ளப்படும் என்று அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் சங்க கூட்டமைப்பின் சார்பில் வெளியிட்டு தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றனர்.

இப்பவே தங்கம் வாங்கவில்லை என்றால் மிகவும் வருத்தப்படுவீர்கள்!! வீழ்ச்சியை சந்திக்கும் டாலர் மதிப்பு!!

0

அமெரிக்கா தொடுத்திருக்கக்கூடிய வர்த்தக போரின் காரணமாக தங்கத்தின் விலை ஆனது சமீப நாட்களாகவே எதிர்பாராத அளவு உச்சத்தை சந்தித்து வருகிறது. மேலும் உச்சத்தை சந்திக்க கூடிய புதிய முடிவு ஒன்றினை பெடரல் ஓபன் மார்க்கெட் கமிட்டி எடுத்திருக்கிறது.

ஃபெடரல் ஓப்பன் மார்க்கெட் கமிட்டி எடுத்திருக்கக் கூடிய புதிய முடிவானது தங்களுடைய நிதி விகித இலக்கை 4.25% லிருந்து 4.50% என அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பால் வட்டி விகிதமானது கூடவோ அல்லது குறையவோ செய்யாது என்றும் அதற்கு மாறாக அமெரிக்க டாலர்கள் வீழ்ச்சியை சந்திக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்திய பண மதிப்பும் வீழ்ச்சியை சந்தித்திருக்கக்கூடிய நிலையில் இப்பொழுது அமெரிக்க டாலர் மதிப்பு வீழ்ச்சியை சந்திக்க தொடங்கி இருப்பது வரலாறு காணாத அளவு தங்கத்தின் விலையை உயர்த்துவதற்கான அறிகுறி என்றும் தங்கம் வாங்க நினைப்பவர்கள் உடனடியாக தங்கங்களை பெற்று வைப்பது நிலையான பணமதிப்பை பெறுவதற்கான வழிவகையாக அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அமெரிக்காவில் 28 கிராம் தங்கம் அதாவது ஒரு அவுன்ஸ் எனப்படும் மூன்றரை பவுன் தங்கம் அவுன்ஸ் முறையில் அளக்கப்படுகிறது. இதன்படி பார்த்தால், அமெரிக்காவில் ஸ்பார்ட் தங்கம் ஒரு அவுன்ஸ்க்கு $3053.39 ஆக விலை உயர்ந்திருக்கிறது. எதிர்காலத்தில் இதன் மதிப்பானது $3199.60 மாற வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழகமே கொண்டாடிய பாட்டில் சந்தேகம் கேட்ட டி எம் எஸ்!! பொறுமையாக விளக்கிய கண்ணதாசன்!!

0

இயக்குனர் கே சங்கர் இயக்கத்தில் 1962 ஆம் ஆண்டு வெளியான பாதகாணிக்கை திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சாவித்ரி, சந்திரபாபு, கமல்ஹாசன், அசோகன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இந்த திரைப்படத்திற்கு அனைத்து பாடல்களையும் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் இயற்ற பாடகர் டி எம் எஸ் பாடி ரசிகர்களை பெரிதும் கவர்ந்திருக்கின்றனர்.

இந்த திரைப்படத்தில் கண்ணதாசன் அவர்களுடைய பாடலை பாட சென்ற பொழுது அதில் உள்ள ஒரு பாட்டில் தனக்கு சந்தேகம் ஏற்பட்டதாகவும் அந்த சந்தேகத்தை நேரடியாக சென்று கண்ணதாசனிடம் கேட்டு அதில் உள்ள ஒரு பாட்டில் தனக்கு சந்தேகம் ஏற்பட்டதாகவும் அந்த சந்தேகத்தை நேரடியாக சென்று கண்ணதாசனிடம் கேட்டு தெளிவு பெற்றிருக்கிறார். தமிழகமே கொண்டாடிய அந்த பாடல் ” வீடு வரை உறவு ” என்ற பாடல் தான்.

இன்று வரை இந்த பாடல்களை விரும்பாதவர்கள் என யாரும் இருக்க முடியாது இப்படிப்பட்ட பாடலை பாட சென்ற பொழுது தான் டி எம் சௌந்தரராஜன் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. உடனே நேரடியாக கண்ணதாசனிடம் சென்ற இவர் இந்த பாடலை எங்கோ கேட்டது போல் இருக்கிறது என கேட்க, இந்த பாடலை நான் பட்டினத்தார் பாடலிலிருந்து மொழிபெயர்த்து என்றும் அதாவது எளிய தமிழ் நடையில் மொழிபெயர்த்தேன் என்றும் அதே நேரத்தில் தன்னுடைய நெருங்கிய நண்பரின் மரணத்தில் நடந்த நிகழ்வுகளையும் நினைவில் வைத்து இந்த பாடலை இயக்கியதாக தெரிவித்திருக்கிறார்.

அப்பொழுது டீ எம் சௌந்தரராஜன் அவர்கள், பட்டினத்தார் அவர்கள் இறுதிவரை பாவமும் புண்ணியமும் தன்னுடன் இருக்கும் என எழுதி இருக்கும் நிலையில் நீங்கள் ஏன் கடைசிவரை யாரோ என குறிப்பிட்டு இருக்கிறீர்கள் என கேட்டிருக்கிறார். அதற்கு கண்ணதாசன் அவர்கள் ஒரு ஞானிகள் மட்டுமே கடைசிவரை பாவமும் புண்ணியமும் இருக்கும் என கூற முடியும் என்றும் நான் சாதாரண மனிதன் என்பதால் கடைசி வரை யாரோ என எழுதி இருப்பதாக விளக்கமளித்திருக்கிறார்.

பாஜகவின் கோட்டையாக மாறும் தமிழ் தொலைக்காட்சி துறை!! சினிமாவில் தான் அரசியல் என்பதை உணர்ந்ததால் அதிரடி!!

0

சமீபத்தில் விஜய் டிவி நீயா நானா நிகழ்ச்சிக்கு மும்மொழிக் கொள்கை குறித்த தலைப்பு எடுக்கப்பட்ட பொழுது அதனை தடை செய்து திடீரென வேறொரு தலைப்பு கொடுக்கப்பட்டு அதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. இது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்பொழுது நீயா நானா தொகுப்பாளரான கோபிநாத் அவர்களுக்கு திமுக முத்திரை குத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தை பொறுத்தவரை சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்தவர்கள் தான் மிகப்பெரிய அளவில் ஜெயித்திருக்கிறார்கள் என்றும் அந்த வரிசையில் தான் எம்ஜிஆர் ஜெயலலிதா என அனைவரும் தோன்றியிருப்பதாகவும் தெரிவிக்கும் பாஜகவினர் இதனை நன்கு உணர்ந்ததால் தான் தமிழகத்தில் இருக்கக்கூடிய தொலைக்காட்சிகளை தன் வசப்படுத்தி இருப்பதாகவும் தொலைக்காட்சிகளில் என்ன இருக்க வேண்டும் என்பதை பாஜகவினரே முடிவு செய்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே, பாஜகவிற்கு எதிராகவும் திமுகவிற்கு ஆதரவாகவும் செயல்படுகிறார் என புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பணிபுரிந்த குணசேகரன் என்பவரை நீக்கியது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது இதுபோன்ற ஒரு நிலைதான் விஜய் டிவி தொகுப்பாளர் ஆன கோபிநாத் அவர்களுக்கும் நிகழ்ந்திருக்கிறது.

தமிழகத்தில் அரசியல் செய்கிற அனைத்து கட்சிகளுக்கும் தங்களுக்கு என தனி தொலைக்காட்சிகள் இருப்பது மக்களிடம் நேரடியாக தங்களுடைய ஆளுமையை செலுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பதாக பாஜகவினரால் பார்க்கப்படுகிறது. இத்தகைய சூழலில் தான் தற்பொழுது விஜய் டிவி ஆனது பாஜகவினரால் மிரட்டப்பட்டுள்ளது. விஜய் டிவியில் தொகுப்பாளர் கோபிநாத் இருக்கும் வரையில் திமுக அரசிற்கு சாதகமாக மற்றும் பாஜகவிற்கு எதிரான விஷயங்கள்தான் ஒளிபரப்பப்படும் என நினைக்கும் பாஜகவினர் கோபிநாத் அவர்களை இந்த தொலைக்காட்சியை விட்டே வெளியேற்றுவதற்கான அழுத்தத்தை கொடுத்து வருகின்றனர்.

ஆனால் உண்மை அப்படி அல்ல, தமிழகத்தை பொறுத்தவரை தாய் மொழி மற்றும் இரண்டாவது மொழியாக ஆங்கிலம் என்பதே கற்பிக்கப்பட்டு வருகிறது. ஆனால் வட மாநிலத்தில் அப்படி அல்ல அங்கு ஆங்கிலம் என்பதே கிடையாது ஹிந்தி மட்டுமே ஒரே மொழியாக கற்பிக்கப்பட்டு வருகிறது. இப்படி இருக்கக்கூடிய சூழலில் அவர்களுடைய மொழியை ஏன் நாங்களும் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான் இங்கு நடைபெறக்கூடிய மூன்றாவது மொழித் திணிப்பாக பார்க்கப்படுகிறது.

அடிமேல் அடி வாங்கும் அரசு ஊழியர்கள்!! மத்திய அரசு வெளியிட்ட முக்கிய முடிவு!!

0

ஒருபுறம் பழைய ஓய்வூதிய திட்டத்தை கேட்கும் அரசு ஊழியர்கள் மறுபுறம் அதனை மறுத்து அரசு ஊழியர்களுக்கு மேலும் மேலும் கஷ்டத்தை கொடுக்கும் மத்திய மற்றும் மாநில அரசு.

தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் நிரந்தர பணி மற்றும் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என அனைத்தையும் எதிர்த்து ஜாக்டோ ஜியோ அமைப்பானது போராட்டம் நடத்த துணிந்த நிலையில் போராட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு சம்பளம் ரத்து செய்யப்படும் என தெரிவித்து மாநில அரசு அடாவடி காட்டியது. இது ஒரு புறம் இருக்க தற்பொழுது மத்திய அரசு பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு பதிலாக ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி ஓய்வுதியதாரர்களின் வயதை அதிகரிக்க முடியாத என நேரடியாக மறுத்திருக்கிறது.

இது குறித்து மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :-

ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டமானது வருகிற ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்றும் அரசு ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் என பலரும் ஓய்வூதியத்தை உயர்த்த சொல்லி கோரிக்கை வைத்த பொழுது அவர்கள் பணிபுரியக்கூடிய துறைகளை சார்ந்த ஓய்வுதிய வயதானது 58 முதல் 60 வயது வரை என மத்திய அரசு வெளியிட்டிருந்தது. ஆனால் தற்பொழுது பொதுவாக 62 வயதை ஓய்வூதிய வயதாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்ததை அடுத்து ஓய்வூதிய வயதில் எந்தவித மாற்றமும் ஏற்படுத்தப்பட மாட்டாது என நேரடியாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

இப்பொழுது இருக்கக்கூடிய அரசானது தங்களை மிகவும் கஷ்டமான சூழலுக்கு இழுத்த செல்வதாக இருக்கிறது என்றும் பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஒரு பணியாளரின் உடைய இறுதித் தொகையில் 50 சதவிகிதம் அரசால் வழங்கப்படும் ஆனால் இப்பொழுதுள்ள ஓய்வூதிய திட்டத்தின் கீழ் 38 சதவிகிதம் மட்டுமே வழங்கப்படுகிறது என்றும் தங்களுடைய கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்க மறுப்பது குறித்து அரசு ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் வேதனை தெரிவித்து இருக்கின்றனர்.