Home Blog Page 382

‘பெண்ணின் மார்பகங்களை தொடுவதும், கீழாடை நாடாவை அவிழ்ப்பதும் பலாத்கார முயற்சி அல்ல’..!! பரபரப்பை கிளப்பிய ஐகோர்ட் தீர்ப்பு..!!

0

ஒரு பெண்ணின் மார்பகங்களை தொடுவதும், கீழாடை நாடாவை அவிழ்ப்பதும் பலாத்கார முயற்சியாக பார்க்க முடியாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டில் 11 வயது சிறுமியை பாலத்துக்கு அடியில் இழுத்துச் சென்று 2 இளைஞர்கள் அவரின் மார்பகங்களில் கை வைத்தும், பைஜாமா நாடாவையும் அறுத்துள்ளனர். இதையடுத்து, குற்றம்சாட்டப்பட்ட பவன், ஆகாஷ் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதாவது, குற்றம் சாட்டப்பட்ட இருவரும் சிறுமிக்கு லிப்ட் கொடுத்தபோது, இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது, அவ்வழியாக சென்ற நபர்கள் உடனே சென்று சிறுமியை காப்பாற்றியுள்ளனர். சிறுமியின் மார்பகத்தை தொட்டு, ஆடையை அவிழ்க்க முயன்றுள்ளனர். ஆனால், அதற்குள் சிறுமி காப்பாற்றப்பட்டார். இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம் அதிர்ச்சி தரும் உத்தரவை பிறப்பித்துள்ளது. குற்றம்சாட்டப்பட்ட  இருவரும், குற்றத்தை செய்யவில்லை என்றும் குற்றம் செய்வதற்காக தயாராகி வந்ததாகவும் வாதம் முன்வைக்கப்பட்டது. இதை தாக்குதல் முயற்சியாக கருதலாமே தவிர, பலாத்கார முயற்சியாக கருத முடியாது என்றும் வாதிடப்பட்டது.

இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட அலகாபாத் உயர்நீதிமன்றம், ”பெண் ஒருவரின் மார்பகங்களை தொடுவதோ, அவரின் பைஜாமா, கீழாடையின் நாடாவை அவிழ்ப்பதோ பலாத்கார முயற்சியாக கருத முடியாது. சிறுமி பலாத்காரம் செய்வதற்கு முன்பே காப்பாற்றப்பட்டுள்ளார். பலாத்கார முயற்சி என்ற குற்றத்தை செய்வதற்கும், அதற்கு தயாராவதற்கும் வேறுபாடுகள் உள்ளன. இந்த சம்பவத்தில் பலாத்கார முயற்சி நடந்ததாக உறுதியாக நிரூபிக்கப்படவில்லை. எனவே, இந்த வழக்கில் பிரிவு 354 and 354(b) மட்டுமே பதியலாம் என்றும் போக்சோ வழக்கு பதிய வேண்டியதில்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

போடா.. நீ இல்லனா நானே ஹீரோவா நடிக்கிறேன்!! டி ராஜேந்திரன் நடிகராக களமிறங்கிய கதை தெரியுமா!!

0

அடுக்கு மொழியில் வசனங்கள் பேசுவது மட்டுமல்லாது தன்னுடைய பாடல்களிலும் எதுகை மோனைகளை பயன்படுத்தி அதிக அளவு அடுக்கு மொழி பேசக் கூடியவராகவும் தன்னுடைய தனித்திறமைகளாக இசையமைப்பாளர் பாடல் ஆசிரியர் இயக்குனர் தயாரிப்பாளர் என சினிமா துறையின் முக்கிய இடங்களில் தடம் பதித்த டி ராஜேந்திரன் அவர்கள் நடிகராக தடம் பதித்ததற்கு பின் ஒரு சுவாரசியமான மற்றும் அவருக்கு வருத்தமளிக்கக்கூடிய கதை ஒன்று உள்ளது.

டி ராஜேந்திரன் அவர்கள் ரஜினி அவர்களை மனதில் நினைத்து எழுதிய கதை தான் உயிர் உள்ளவரை உஷா. இந்த திரைப்படத்திற்கு டி ராஜேந்திரன் அவர்கள் தன்னுடைய காதல் மனைவியின் பெயரை வைத்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினியை நினைத்து எழுதப்பட்ட கதை என்பதால் இத்திரைப்படத்தில் நடிப்பதற்காக ரஜினியிடம் பலமுறை சென்று கதையை கூறியிருக்கிறார். கதையைக் கேட்டு விருப்பம் உள்ளது இல்லை என நேரடியாக கூறாமல் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் டி ராஜேந்திரன் அவர்களை அலையவிட்டு இருக்கிறார். பல நாட்களுக்குப் பின்பு எனக்கு நிறைய படங்களில் நடிக்க வேலை இருப்பதால் நீங்கள் வேறு ஒரு ஹீரோவை பார்த்துக் கொள்ளுங்கள் என்பதுபோல கூறி தட்டிக் கழித்திருக்கிறார்.

இதனால் கோபமடைந்தால் டி ராஜேந்திரன் அவர்கள் இத்திரைப்படத்தில் நானே நடிக்கிறேன் என முடிவு செய்த முதன் முதலில் நடிப்பதற்காக களமிறங்கிய படம் தான் உயிருள்ளவரை உஷா. இந்த திரைப்படத்தில் இவர் நடிகராக இயக்குனராக மட்டுமல்லாது தயாரிப்பாளராகவும் இருந்திருக்கிறார். பெண்களை தொடாமல் நடிப்பதில் இவரை இன்றுவரை யாராலும் முந்திச் செல்ல முடியவில்லை.

ரயிலில் இனி இவர்களுக்கெல்லாம் சிறப்பு சலுகை வழங்கப்படும்!! அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்!!

0

ரயிலின் பயணம் செய்யும் பொழுது முதியவர்கள் கர்ப்பிணிகள் மற்றும் 45 வயதை கடந்தவர்கள் நடுவரிசை மற்றும் மேல் வரிசை படுகைகளில் தங்களுடைய டிக்கெட் இடம்பெற்று இருப்பதால் சிரமப்படுவதாகவும் இதற்கான சில முக்கிய மாற்றங்களை உருவாக்கி இருப்பதாகவும் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து தேசிய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருப்பதாவது :-

ரயிலில் பயணம் செய்யும்பொழுது முதியவர்கள் கர்ப்பிணிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்றவர்கள் கீழ் வரிசை படுக்கைக்காக கெஞ்ச வேண்டிய நிலை உள்ளது என்றும் அதனை மாற்றுவதற்காக புதிய வசதி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

அதன்படி, இனி முன்பதிவு செய்யும்பொழுது அந்த ரயிலில் உள்ள கீழ் வரிசை படுகைகள் முதியவர்கள் கர்ப்பிணிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்படும் என்றும் முன்பதிவின் பொழுது இவை குறிப்பிடப்படவில்லை என்றால் கூட டிக்கெட் சிஸ்டம் ஆனது அதனை தானாகவே காலியாக இருக்கக்கூடிய கீழ் வரிசை படுக்கைக்கு டிக்கெட்டை மாற்றிவிடும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

குறிப்பாக இந்த வசதி பயன்பாட்டிற்கு வந்த பிறகு யாரிடமும் கெஞ்ச வேண்டி இருக்காது என்றும் சில நேரங்களில் ஒரு சிலர் புரிந்து கொண்டு தங்களுடைய இருக்கைகளை மாற்றிக் கொள்வதாகவும் ஆனால் ஒரு சிலர் விடாப்படியாக தான் இதனை முன் பதிவு செய்தேன் எனவே இந்த இருக்கை தனக்கானது என்று அடாவடியாக பேசி விடுவதாகவும் சுட்டிக்காட்டி இருக்கிறார்

எங்க மேல என்ன காண்டு துரைமுருகனுக்கு? மார்க்சிஸ்ட் கட்சியினர் கொந்தளிப்பு!

0

திருமணமாகாத திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் துரைமுருகனின் உத்தரவால் கட்சி தொண்டர்கள் பெரும் சிக்கலில் உள்ளனர் என்று மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம் தெரிவித்து உள்ளார். சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, பொதுமக்கள் பயன்படுத்தும் இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என தீர்ப்பு வழங்கியது. இதனை ஏற்று, தி.மு.க. நிர்வாகிகளுக்கு துரைமுருகன் அறிவுரை வழங்கியுள்ளார்.

இந்த முடிவால் கட்சித் தொண்டர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக சண்முகம் குற்றச்சாட்டு வெளியிட்டுள்ளார். “மாநில அரசே இந்த தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும். இல்லை என்றால், குறைந்தபட்சம் தமிழக அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி, ஒரு தீர்வை கண்டுபிடிக்கலாம். ஆனால், எந்த முன்வழியும் மேற்கொள்ளப்படவில்லை. நேரடியாக கட்சித் தொண்டர்களே கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என கூறியுள்ளனர்,” என்று அவர் விமர்சித்தார்.

இதைத் தொடர்ந்து, “12 வாரங்களுக்குள் கொடிக்கம்பங்கள் அகற்றப்படாவிட்டால், போலீசாரே அதை அகற்றி, அதன் செலவை கட்சியிலிருந்து வசூலிக்க வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதிபதிகள் அரசியல் கட்சிகளை குறிவைத்து நடவடிக்கை எடுக்கிறார்களா? ஏன் இத்தகைய தீர்ப்புகள் மட்டும் கட்சிகளுக்கு எதிராக வருகின்றன?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும், “நாம் 10 கொடிக்கம்பங்களை வைத்திருந்தால், அவர்களுக்கு 150 கொடிக்கம்பங்கள் உள்ளன. அரசியல் கட்சிகளுக்கு கொடியை ஏற்ற அனுமதி உண்டு. போக்குவரத்திற்கு இடையூறாக இருந்தால் அதை நாங்கள் ஏற்கிறோம். ஆனால், துரைமுருகன் ஒரு தீர்வு குறித்து ஆலோசிக்காமல், கட்சி தொண்டர்களுக்கு நேரடியாக ஆணை பிறப்பித்திருக்கிறார். இது சரியான அணுகுமுறையா?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

RBI இன் உத்தரவால் கந்து வட்டியை தேடி செல்லும் மக்கள்!! நகைகளை மீட்க முடியாமல் தவிப்பு!!

0

இந்தியன் ரிசர்வ் வங்கி ஆனது நகைகளை அடகு வைத்திருக்கக் கூடிய வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கக்கூடிய வகையில் புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் படி அடகு வைக்கப்பட்டிருக்கக்கூடிய நகைகளை புதுப்பிக்க வேண்டும் என்றால் வட்டியுடன் முழு அசலையும் கொடுத்து அதன் பின்பு தான் மறு அடகு வைக்க முடியும் என அறிவித்திருந்தது.

இந்தியன் ரிசர்வ் வங்கியின் இந்த உத்தரவால் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் தங்களிடம் நகைகளை அடகு வைத்த வாடிக்கையாளர்களிடம் மறு அடகு வைப்பது மற்றும் நகையை புதுப்பிப்பது போன்ற விஷயங்களுக்கு கறார் காட்டி வருவதால் வேறு வழி இன்றி மக்கள் கந்துவட்டியை நோக்கி செல்லக்கூடிய அவல நிலை ஏற்பட்டு இருப்பதாக குற்றம் சாட்டியிருக்கின்றனர்.

தென் மாவட்டங்களில் இருக்கக்கூடிய மக்கள் பெரும்பாலும் விவசாயம் தொழில் மற்றும் மருத்துவ செலவு போன்றவற்றிற்காக தங்களுடைய நகைகளை குறைந்த வட்டியில் அரசு மற்றும் தனியார் வங்கிகளில் அடகு வைத்து இருந்த நிலையில் தற்போது இந்தியன் ரிசர்வ் வங்கி புதிய விதியால் வேறு வழியில்லாமல் வெளியில் அதிக வட்டிக்கு கடன் வாங்கி தங்களுடைய நகைகளை மீட்டு மறு அடகு வைத்து வருவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த புதிய விதியை இந்தியன் ரிசர்வ் வங்கியானது மீண்டும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் இது மீட்டர் வட்டி ஸ்பீடு வட்டி போன்ற வட்டிக்காரர்களுக்கு நன்மை பயப்பதாக அமைகிறது தவிர விவசாயிகள் நடுத்தர மக்கள் போன்றவர்களுக்கு இது மிகப்பெரிய கஷ்டத்தையே கொடுப்பதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.

‘இனி சிபிஎஸ்இ பள்ளியில் படித்தாலும் தமிழை கட்டாயம் படிக்க வேண்டும்’..!! அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி

0

1 முதல் 10ஆம் வகுப்பு வரை படிக்கக் கூடிய மாணவர்கள், எந்த பள்ளியில் படித்தாலும் தமிழை கட்டாயம் படிக்க வேண்டுமென அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

தேசிய கல்விக் கொள்கை மற்றும் மும்மொழி கொள்கையை எதிர்த்து தமிழ்நாட்டில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதற்கிடையே, மும்மொழி கொள்கையை ஏற்றால் தான், தமிழ்நாட்டிற்கு நிதி வழங்க முடியும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியிருந்தார். ஆனால், மார்ச் 14ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யபட்ட பட்ஜெட்டின்போது பேசிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, மாநில அரசு ரூ.2,000 கோடி நிதியை இழந்தாலும், இருமொழிக் கொள்கையை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

இதற்கிடையே, அரசுப் பள்ளி, தனியார் பள்ளி என்கிற வித்தியாசமின்றி, அனைத்து குழந்தைகளுக்கும் சமமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக பாஜக சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. ஒரு கோடி பேர் கையெழுத்து என்ற இலக்கு வைத்து தொடங்கப்பட்டுள்ளது. மேலும், சமக் கல்வியான மும்மொழிக் கல்வியை, நம் குழந்தைகள் பயிலும் தமிழக அரசுப் பள்ளிகளிலும் கொண்டு வருவோம் என அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “2025ஆம் ஆண்டில் 1 முதல் 10ஆம் வகுப்பு வரை படிக்கக் கூடிய மாணவர்கள், எந்த பள்ளியில் (சிபிஎஸ்இ) படித்தாலும் தமிழை கட்டாயம் படிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார். மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை ஒருபோதும் ஏற்க மாட்டோம் என்ற நிலைப்பாட்டில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ள நிலையில், தற்போது அன்பில் மகேஷ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடுப்பான வேல்முருகன்.. திமுக கூட்டணியே வேண்டாம்!! பாமக வுடன் ஐக்கியமாக பலே திட்டம்!!

0

DMK TVK: திமுக கூட்டணியிலிருந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி விலகப் போவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. சமீபத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேல்முருகன் மற்றும் திமுகவிற்கிடையே சில கருத்து வேறுபாடுகள் இருந்து வருகிறது. இதற்கு முன்னதாகவே தனது எம்எல்ஏ பதவியை துறப்பதாகவும் வேல்முருகன் கூறியுள்ளார். ஆனால் சில சமாதானங்களுக்கு பிறகு கட்சியில் இருக்க சம்மதித்தார். இப்படி இருக்கையில் நேற்று கூட பாலியல் வன்கொடுமை நடக்க பெண்களின் ஆடை தான் காரணம் என்றும் பேசினார்.

இது இணையத்தில் பெரும் வைரலாகி பல கண்டனங்கள் முன்வைக்கப்பட்டது. இதனையடுத்து உடனடியாக இன்று நடந்த பட்ஜெட் கூட்டு தொடரில் சபாநாயகருக்கு முன்பாக குரல் உயர்த்தி கடுமையாக பேசியுள்ளார். இதன் உச்சகட்டமாக அமைச்சர் சேகர்பாபு மற்றும் வேல்முருகன் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அக்கணமே இதனைக் கண்டு முதல்வர் ஸ்டாலின் கண்டித்துள்ளார். அதுமட்டுமின்றி இவர் மீது நடவடிக்கை எடுக்கும் படியும் சபாநாயகர் அப்பாவுவிடம் கோரிக்கையும் வைத்தார்.

ஆனால் சபாநாயகர் இதனை ஒரு முறை மன்னித்து விடுவதாக கூறிவிட்டார். இப்படி கூட்டணி கட்சிக்குள் இருப்பவர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்ததால் இனி திமுகவுடன் கை கோர்க்க வாய்ப்பே இல்லை எனக் கூறுகின்றனர். மாறாக பாமக உடன் கூட்டணி வைக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. சமீபத்தில் பாமகவின் நிதி நிழல் அறிக்கையை கூட நிர்வாகிகள் இவரிடம் கொடுத்துள்ளனர். அதுமட்டுமின்றி இவரும் பாமக வுடன் இணைவதில் சற்று ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் திமுகவின் கூட்டணியை துண்டித்து விட்டு பாமக உடன் இணைந்து 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வார் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

தமிழக டாஸ்மாக் ஊழல் வழக்கு.. “ED” க்கு தடை போட்ட உயர் நீதிமன்றம்!! இனி சோதனை நடத்தக் கூடாது!!

0

தமிழக டாஸ்மாக் ரீதியாக, கூடுதல் மது விற்பனை, அதிகாரிகளுக்கு கொள்முதல் மது ஆலைகளிலிருந்து லஞ்சம் கொடுத்தது அதேபோல ஆலைகளிலிருந்து கொள்முதல் எடுக்கும் பாட்டில்களின் மாறுபட்ட கணக்கு என பல குளறுபடி குறித்து புகார்கள் அமலாக்கத்துறைக்கு வந்துள்ளது. இது ரீதியாக அமலாக்கத்துறை டாஸ்மாக் தலைமையகம் அதன் நிர்வாகிகள் ஊழியர்கள் என பலரது வீடுகளிலும் சோதனை செய்துள்ளனர்.

மேற்கொண்டு ஆயிரம் கோடி ரூபாய் வரை தமிழக அரசு ஊழல் செய்ததாகவும் அறிவிப்பை வெளியிட்டனர். இது அனைத்தும் ஆளும் கட்சியான திமுகவிற்கு அடுத்த அடுத்த இடியை இறக்கியது போல இருந்தது. இது ரீதியாகத்தான் தற்பொழுது டாஸ்மாக் சார்பாக உயர் நீதிமன்றத்தில் மூன்று மனுக்கள் கொடுத்துள்ளனர். அதில் மாநில அரசு அனுமதியின்றி எப்படி அமலாக்க துறையால் சோதனை செய்ய முடியும்?? இரண்டாவதாக இந்த சோதனையின் மூலம் பல ஊழியர்கள் இன்னல் பட்டு வருகின்றனர்? அதேபோல யாருடைய அனுமதியுமின்றி சோதனையின் பேரில் எப்படி அனைத்து ஆவணங்களையும் எடுத்துச் செல்ல முடியும் என்று கேள்வி எழுப்பி இதையெல்லாம் தடை செய்யும்படி கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த வழக்கானது இன்று அமர்வுக்கு வந்து நீதிபதிகள் முன்னிலையில் வாதாடப்பட்டது. தமிழக டாஸ்மாக் தலைமைக்கு வாதாடிய வக்கீல், பல உள்நோக்கங்கள் கொண்டு இந்த சோதனை நடத்துவதாக முறையிட்டுள்ளார். அதுமட்டுமின்றி ஆயிரம் கோடி வரை மோசடி என கூறியது யுகத்தின் அடிப்படியில் தான் என்றும் கூறியுள்ளார். இதனை விசாரணை செய்த நீதிபதிகள் வழக்கை இம்மாதம் 25ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர். அதுமட்டுமின்றி மேற்கொண்டு அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை விதித்துள்ளனர். அதேபோல வரும் 25ஆம் தேதி அமலாக்கத்துறை எப்படி அனுமதியின்றி சோதனை நடத்தப்பட்டது என்பது குறித்து விவரிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

ஓங்கும் உதயநிதி பவர்! ஒடுக்கப்படும் சீனியர்கள்: உதயநிதி ஆதரவாளர்கள் கட்சி பதவிகளில் திணிப்பு!

0

தி.மு.க.வில் உதயநிதி ஆதரவாளர்கள் அதிகமாக பதவிகள் பெறுவதால், கோஷ்டி பூசல் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் ஈரோடு, திருப்பூர், விழுப்புரம், மதுரை மாவட்டங்களில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டன. புதுக்கோட்டை மாநகர செயலராக ராஜேஷின் நியமனம் எதிர்ப்புக்கு உள்ளாக, கட்சி தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கட்சி அமைப்பின் மாவட்டப் பிரிப்பு வேலைகள் முடியாததால், நிர்வாகத்தில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

உதயநிதியின் ஆதரவாளர்களை கட்டாயமாக முன்னிறுத்தும் நிலைமை, மாவட்ட அளவில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரத்தில், புதிய மாவட்ட செயலர் லட்சுமணனுக்கு ஒத்துழைப்பு இல்லை, அமைச்சர் பொன்முடி அவருக்கு அலுவலக அனுமதி தரவில்லை. இதனால் மாவட்ட நிர்வாகத்தில் குழப்பம் நிலவுகிறது. ராணிப்பேட்டையில், அமைச்சர் காந்தியின் உடல்நிலை காரணமாக புதிய செயலரை நியமிக்க கோரிக்கைகள் வந்தும் தீர்வு காணவில்லை.

தர்மபுரியில், கலெக்டர், எஸ்.பி.யை மிரட்டும் வகையில் பேசியதால், தர்மச்செல்வன் நீக்கப்பட்டு, மணி எம்.பி. பொறுப்பேற்றார். இதுவும் கோஷ்டிகளை அதிகரித்தது. புதுக்கோட்டை மாவட்டத்தில், உதயநிதியின் ஆதரவாளர் நியமிக்கப்பட்டதை எதிர்த்து போராட்டம் நடந்தது. தேர்தல் அனுபவமில்லாதவர்களை பொறுப்பில் அமர்த்துவது, கட்சி வெற்றியை பாதிக்கும் என நிர்வாகிகள் எச்சரிக்கின்றனர்.

மொத்தத்தில், கட்சி, ஆட்சி இரண்டிலும் கவனம் செலுத்தும் உதயநிதியின் முடிவுகள் குழப்பத்தை உருவாக்கியுள்ளன. கட்சியின் நிலைமை சீர் செய்ய, முதல்வர் ஸ்டாலின் நேரடியாக தலையிட வேண்டும் என நிர்வாகிகள் எதிர்பார்க்கின்றனர்.

’என் உடலை தானம் செய்கிறேன்’..!! ’இதயத்தை மட்டும் அவர்களிடம் கொடுத்து விடுங்கள்’..!! உருக்கமாக பதிவிட்ட நடிகர் ஷிஹான் ஹுசைனி..!!

0

மருத்துவம், உடற்கூறியல் மற்றும் ஆராய்ச்சிக்காக ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை மற்றும் பல்கலைக்கழகத்திற்கு எனது உடலை தானம் செய்வதாக நடிகர் ஷிஹான் ஹுசைனி அறிவித்துள்ளார்.

கடந்த 1986ஆம் ஆண்டு பாலச்சந்தரின் ‘புன்னகை மன்னன்’ திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர்  ஷிஹான் ஹுசைனி. இவர், கராத்தே மாஸ்டராக வலம் வந்த நிலையில், நடிப்பிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வந்தார். விஜய் நடித்த ‘பத்ரி’ படத்தின் மூலம் தான் இவர் பெரியளவில் அறியப்பட்டார். இதுவரை இவர், சுமார் 400-க்கும் மேற்பட்ட வில்வித்தை வீரர்களுக்கு பயிற்சி அளித்துள்ளார்.

இந்நிலையில் தான், தனக்கு ரத்தப் புற்றுநோய் இருப்பதாகவும், நான் ஒருநாள் வாழ்வதற்கு 2 யூனிட் ரத்தம் மற்றும் பிளேட்லெட்ஸ் தேவைப்படுவதாகவும் ஷிஹான் ஹுசைனி கூறியிருந்தார். மேலும், இந்த புற்றுநோயில் இருந்து மீண்டு வருவேன் என்றும் அவர் வெளியிட்டிருந்த வீடியோவில் பேசியிருந்தார். இது திரையுலகினர் மற்றும் அவரது மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், ஷிஹான் ஹுசைனி தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மருத்துவம், உடற்கூறியல் மற்றும் ஆராய்ச்சிக்காக எனது உடலை தானம் செய்கிறேன். நான் இறந்த 3 நாள்களுக்குப் பிறகு ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை மற்றும் பல்கலைக்கழகத்திற்கு என் உடலை தானம் செய்ய விரும்புவதாக அறிவித்துள்ளார். மேலும், இக்கல்லூரியின் நிறுவனர் ஸ்ரீ ராமசாமி உடையார், எனது இந்திய கராத்தே சங்கத்தின் தலைவராக இருந்தவர்.  எனது ‘Snake Bite World Record’ நிகழ்வுக்கும் தலைமை தாங்கியவர்.

என் இதயத்தை மட்டும் பாதுகாப்பதற்காக, என் வில்வித்தை மற்றும் கராத்தே மாணவர்களிடம் ஒப்படைக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இதைப் படிக்கும் கல்லூரியின் அதிகாரி உடனே வந்து, என்னுடைய அதிகாரப்பூர்வ ஒப்புதலையும், எனது கையொப்பத்தையும் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.