ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 7, 2025
Home Blog Page 41

குஷியோ குஷி..மாணவர்களும் வெளியான குட் நியூஸ்; பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

0

தென்மேற்கு பருவ மழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தற்போது மழை பெய்து வருகின்றது. அதில் நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் பள்ளிகளுக்கு இறுதித் தேர்வு முடிவடைந்து 45 நாட்களுக்கும் மேலாக கோடை விடுமுறை விடப்பட்டது.

அதன் பிறகு ஜூன் இரண்டாம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில் மழையின் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆனால் வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை மட்டுமே விடுமுறை கிடைப்பதால் மாணவர்களும், ஆசிரியர்களும் சற்று கவலை அடைந்து வந்த நிலையில் இந்த வாரத்தில் விடுமுறை கிடைக்குமா என எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.

தென்மேற்கு பருவமழை தற்போது வெளுத்து வாங்கி வரும் நிலையில் மாணவர்கள் விடுமுறை கிடைக்கும் என கூறப்பட்டது. இந்நிலையில் கோவை, நீலகிரி, நெல்லை, தென்காசி, மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகின்றது.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறுகையில் நீலகிரி மாவட்டத்தில் ஒரு இடங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் மிக கனமழையும், திருநெல்வேலி மாவட்டம் மலைப்பகுதியிலும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதனால் நீலகிரி மாவட்டத்தில் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

கூடலூர், பந்தலூர் சுற்றுப்பகுதிகளில் காற்றுடன் கூடிய மழையால் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்படைந்துள்ள நிலையில் உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர், உள்ளிட்ட நான்கு தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கோவையில் வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. 

2026 தேர்தல் கூட்டணி; விஜயை பாஜக பக்கம் கொண்டுவர சீக்ரெட் பிளான்!

0

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் இவர் சினிமாவில் இருக்கும் பொழுதே பல்வேறு நலத்திட்ட உதவிகளை மக்களுக்காக செய்து வந்த நிலையில் அண்மையில் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினார்.

இந்த கட்சியின் மூலம் தற்போது பல்வேறு நலத்திட்ட உதவிகள் மக்களுக்காக செய்து வருகின்றனர். மேலும் 2026 தேர்தல் தான் தனது குறிக்கோள் என விஜய் கூறிவரும் நிலையில் அதற்கு தனது கட்சியை தயார் செய்து வருகின்றார் தற்போது தமிழக வெற்றிக் கழகம் எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கும் என மிகப் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. மேலும் திமுக தான் அரசியல் எதிரி என விஜய் கூறியுள்ள நிலையில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு இருப்பதாக பலரும் பேசி வந்தனர்.

அதிமுக தற்போது மீண்டும் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள நிலையில் விஜயை தங்கள் கூட்டணிக்கு இழுக்க வேண்டும் என முயற்சியை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகின்றது. ஆனால் பாஜக இருக்கும் கூட்டணியில் விஜய் சேர்வாரா என்பது கேள்விக்குறியாக நிற்கின்றது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பித்து விஜய்யுடன் கூட்டணி அமைப்பார் என்றும் அதற்கு ரஜினி ஆதரவு தர வாய்ப்புள்ளதாகவும் செய்திகள் பரவி வருகின்றது.

விஜய் தலைமையிலான ஒரு புதிய கூட்டணி உருவாகும் எனவும் அதில் தேமுதிக, அதிமுக, பாமக, மதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைய அதிக வாய்ப்பிருப்பதாகவும் பேசப்படுகின்றது. வரும் 2026 தேர்தல் விஜயை மையப்படுத்தி இருக்கும் என மிகப் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. விஜய்க்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ள நிலையில் அரசியரைப் பொறுத்தவரை அவர் ஒரு புது முகாம். அரசியல் தந்திரங்கள் தெரியாது அவர் ஒரு போராட்டத்தை கூட களத்தில் இறங்கி நடத்தவில்லை எனவும் மக்களை சந்திக்கவில்லை என விமர்சனங்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றது.

இந்நிலையில் அண்மையில் மதுரை வந்த அமித்ஷா தனது கட்சி பிரமுகர்களிடம் எப்படியாவது விஜயை நமது கூட்டணிக்கு கொண்டு வந்து விடுங்க. அவர் இருந்தால் தான் திமுகவை வீழ்த்த முடியும் என உத்தரவிட்டதாக கூறப்படும் நிலையில் அதற்கான ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் கூறுகின்றனர்.

ரேஷன் கடைகளில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய மாற்றம்; இனி பொருட்கள் வாங்குவது இவ்வளவு சுலபமா!

0

தமிழகத்தில் ரேஷன் கார்டு என்பது மிக முக்கிய ஆதாரமாக பார்க்கப்படுகின்றது மேலும் ரேஷன் கார்டு மூலம் மக்களுக்கு மலிவு விலையில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. ரேஷன் கார்டு வைத்திருந்தால் மட்டுமே அரசு வழங்கக்கூடிய திட்டங்களை பெற உதவியாக இருக்கும்.

மேலும் தமிழக முழுவதும் 37 ஆயிரத்து 328 ரேஷன் கடைகள் உள்ள நிலையில் அதில் 26 ஆயிரத்து 618 முழு நேர கடைகளும், 10,710 பகுதி நேர கடைகளும் செயல்படுகின்றது இவற்றின் மூலம் பொருட்கள் விநியோகம் சீராக நடைபெற்று வரும் நிலையில் அதனை உறுதி செய்ய பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் கைரேகை அங்கீகார வீதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் பொதுமக்கள் ரேஷன் பொருட்களை விரைவாக பெற்று செல்ல முடியும். ரேஷன் கடைகளில் பொருட்கள் விநியோகம் செய்வதற்கு தற்போது மின்னணு விற்பனை கருவி பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த கருவியின் மூலம் குடும்ப அட்டை உறுப்பினர்கள் தங்கள் கைரேகையை பதிவு செய்வது அவசியம். இந்த கைரேகை ஆதார் அட்டையில் உள்ள கை ரேகையுடன் பொருந்தினால் மட்டுமே அவர்களுக்கு பொருட்கள் வழங்கப்படும்.

முன்பிருந்த விதிகளின்படி கைரேகை 40 சதவீதம் துல்லியமாக இருந்தால் பொருட்கள் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது 90% துல்லியமாக இருக்க வேண்டும் எனவும் விதியை மாற்றி அமைத்துள்ளனர். ஒரு சில நேரங்களில் கைரேகை சரியாக பதிவாக விட்டால் கருவிழி பதிவு கருவி மூலம் சரிபார்க்கப்படும். இதன் மூலம் பொருட்கள் தர தாமதம் ஏற்படுகின்றது. அதனால் கூட்டுறவுத்துறை மத்திய உணவுத்துறையிடம் வேண்டுகோள் வைத்து கைரேகை பதிவின் 90 சதவீதம் துள்ளியத்தை தற்போது 70% ஒத்துப் போனால் பொருட்கள் வழங்கும் வகையில் மாற்றியமைத்துள்ளது. அதனால் பொதுமக்கள் விரைவாக ரேஷன் பொருட்களை பெற்று செல்கின்றனர். 

சுய உதவிக் குழுவில் இருக்கீங்களா; லட்ச கணக்கில் பணம் பெறலாம் எப்படி தெரியுமா!

0

தமிழக அரசு சார்பாக பெண்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் நடப்பு ஆண்டில் ஈரோடு மாவட்டத்தில் மகளிர் சுய உதவி குழுக்களின் மூலம் 1,168 கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் விழா ஈரோடு வேளாளர் கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் 996 குழுக்களுக்கு 296.20 கோடி வங்கி கடன் உதவி வழங்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் 8867 மகளிர் சுய உதவி குழுக்களின் மூலம் 94,281 உறுப்பினர்கள் உள்ள நிலையில் 10% பேர் மகளிர் சுய உதவி குழுவில் இருக்கின்றனர்.

மீதமுள்ள மகளிருக்கு இந்த திட்டத்தில் இணைந்து தங்கள் குடும்பத்தையும் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டு மகளிர் குழுக்களின் வங்கி கடன் இணைப்புக்கு 1120 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அவை வழங்கப்பட்டது. அதேபோல இந்த ஆண்டும் மகளிர்களுக்கு சுய உதவி குழுவின் வங்கி இணைப்பு, வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் 9 பயனாளிகளுக்கு 31 லட்சம் கடன் உதவி மற்றும் 67 பயனாளிகளுக்கு 62 லட்சம் தொழில் முனைவோர் கடன் உதவி என மொத்தம் 96.20 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் ஈரோடு எம்பி, சட்டப்பேரவை உறுப்பினர்கள், நகரமன்ற தலைவர்கள், மகளிர் திட்ட அலுவலர்கள், தொழிலாளர் உதவி ஆணையர், மாவட்டம் முன்னோடி ,வங்கி மேலாளர், உதவி மகளிர் திட்ட அலுவலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதெல்லாம் நம்ம இருக்க நிலைமைக்கு தேவையா? வீண் பிரச்சனையில் மாட்டப்போகும் ரவி மோகன்?

0

ஜெயம் ரவிக்கு கொஞ்ச மாதங்களாகவே நேரம் சரிஇல்ல என்று தான் சொல்லணும். மனைவியுடன் விவாகரத்து பிரச்சனை அதை தொடர்ந்து பாடகி கெனிஷாவுடன் காதல் என தொடர்ந்து எதாவது வதந்தியில் சிக்கிக்கிட்டு தான் இருக்கிறார். அதுமட்டுமல்ல அண்மையில் ஜெயம் ரவி என்று இருந்த தன்னுடைய பெயரை ரவி மோகன் என மாற்றிவிட்டார்.

இவருடைய மனைவி ஆர்த்தி விவாகரத்துக்கு சம்மதம் தெரிவிக்க வேண்டுமென்றால் நீங்க எனக்கும், என் பிள்ளைகளுக்கும் மாதாமாதம்40 லட்சம் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார். இந்த பிரச்சனைகளுக்கு நடுவில் ஜெயம் ரவி தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார்.

அந்த தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் முதல் படத்தில் ஜெயம் ரவியும், SJ சூர்யாவும் சேர்ந்து நடிக்க உள்ளனர். அதுமட்டுமில்லாமல் தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனத்தில் தயாரிக்கும் ரெண்டாவது படத்தில் யோகி பாபுவை ஹீரோவாக களமிறக்க உள்ளார் ஜெயம் ரவி.

இவரு நடிக்கிற படமே ஓடலைன்னு இவங்க மாமியார் கம்பளைண்ட் பண்ணிக்கிட்டு இருக்கு, இதுல இவரே தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிச்சு அதுல நடிச்சா மாமியார் நிலைமை தான் இவருக்கும் வரும் என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர்.

குடும்ப பிரச்சனையால் குழப்பத்தில் பாமக தொண்டர்கள்! இதெல்லாம் எங்கபோய் முடியப்போகுதோ?

0

கடந்த சில வருடங்களாகவே பாட்டாளி மக்கள் கட்சியில் ராமதாசுக்கும், அன்புமணிக்கும் இடையே மிகப்பெரிய போர் நடந்து வருகிறது. தலைவர் ராமதாசுக்கோ அதிமுக கட்சியுடன் கூட்டணி வைக்கணும்னு ஆசை. ஆனால் மகனுக்கோ பாஜக கட்சியுடன் கூட்டணி சேரணும்னு விருப்பம். அண்மையில் மேடையிலேயே இருவரும் வாய்க்கு வந்தபடி பேசியதை நம் அனைவரும் தொலைக்காட்சியில் பார்த்திருப்போம்.

இதனால் இருவரும் தங்களுக்கு சாதகமான ஆட்களுக்கு தொடர்ந்து பதவிகளை மாறி மாறி கொடுத்து வருகின்றனர். இவங்க பிரச்சனையால் பாதிக்கப்பட்டது என்னமோ பாவம் அப்பாவி தொண்டர்கள் தான். அப்பாவுடன் போவதா, இல்லை மகனுடன் தங்கள் கட்சி பணியை தொடர்வதா என்று கட்சி தொண்டர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர்.

தற்போது விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 50 பாட்டாளி மக்கள் ஆட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிமுக ஆட்சியில் தங்களை இணைத்துக்கொண்டுள்ளனர். இப்படியே நிலைமை எல்லை மீறிப்போனால் பாட்டாளி மக்கள் கட்சி இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும் என அரசியல் விமர்சகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

ஜாக்பாட் அடிக்கப்போகும் லோகேஷ்! எல்லாத்துக்கும் காரணம் கூலி படம் தான்!

0

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து கூலி படத்தை எடுத்து முடித்து விட்டார். படம் ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த கூலி படத்தில் தெலுங்கு முன்னணி நடிகர் நாகார்ஜூனா, கன்னட நடிகர் உபேந்திரா, சத்யராஜ், ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமீர் கான் போன்ற முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த கூலி படம் LCU விற்குள் வராது என ஏற்கனவே லோகேஷ் அறிவித்துவிட்டார். இந்த படத்தின் முதல் பாதியை அண்மையில் பார்த்த ரஜினிகாந்த் படம் அருமையாக வந்துள்ளது. படம் பக்கா மாஸ் என லோகேசை வெகுவாக பாராட்டியுள்ளார் ரஜினிகாந்த்.

அதேபோல லோகேசுடன் வேலை செய்த அமீர் கானுக்கு லோகேசூடன் வேலை செய்வது ரொம்ப பிடித்து விட்டதாம். தனது அடுத்த படத்தை லோகேஷ் தான் இயக்க வேண்டும் என்று லோகேசை புக் செய்துவிட்டார் ஆமீர் கான். லோகேஷ் மற்றும் ஆமீர் கான் இணையும் படத்திற்கான வேலைகள் அடுத்த வருடம் தொடங்கும் என அண்மையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்துள்ளார் லோகேஷ். இந்த லோகேஷ் அமீர் கான் கூட்டணியில் உருவாகும் படம் சூப்பர் ஹீரோ subject என்றும் சொல்லப்படுகிறது.

விஜய் பிறந்தநாளில் ரசிகர்களை குஷிப்படுத்த எதுவும் இல்லையா? உண்மை இதுதான்!

0

நடிகர் விஜய் தற்போது அரசியல் கட்சி தொடங்கியதால் ஜனநாயகன் படம் தான் விஜய் சினிமாவில் நடிக்கப்போகும் கடைசி படம் என்கிற தகவலை விஜய் ஏற்கனவே வெளியிட்டார். நடிகர் விஜய்யின் பிறந்தநாள் ஜூன் 22.

பொதுவாக விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அன்றைய தினத்தில் விஜய் நடிப்பில் வெளியாகும் அடுத்த படத்தின் ட்ரைலர், டீஸர் அல்லது பாடல் வெளியாகும். இந்நிலையில் ஜனநாயகன் தளபதியின் கடைசி படம் என்பதால் படத்தின் டீசரோ ட்ரைலரோ வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஜனநாயகன் படம் வெளியாவதற்கு இன்னும் 6 மாதங்கள் இருப்பதால் படத்தின் ட்ரைலர், டீசெர் அல்லது பாடலை இப்போதே வெளியிடுவது ரசிகர்களின் எதிர்பார்ப்பையம், படத்தின் மீதான ஆர்வத்தையும் குறைத்துவிடும் என படக்குழுவினரும், விஜய்யும் நினைத்துள்ளனர். இதனால் விஜய் பிறந்தநாளில் எந்த அப்டேட்டும் வெளியிட வேண்டாம் என முதலில் முடிவெடுத்திருந்தனர்.

தளபதி பிறந்தநாளில் எந்த அப்டேட்டும் வெளியிடாவிட்டால் அது ரசிகர்களை சோர்வடைய செய்யும் என்பதால் படம் தொடர்பான சிறு glimpseஒன்றை படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

முருக பக்தர்கள் மாநாட்டில் இடம்பெறும் ஆறுபடை வீடுகள்; உயர் நீதிமன்றம் எடுத்த முடிவு!

0

மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு மாநாட்டு வளாகத்தில் மாதிரி ஆறுபடை வீடுகள் அமைக்க வேண்டும் என எதிர்பார்ப்பு அதிகரித்து இருந்தது. மதுரை சுற்றுச்சாலை அம்மா திடலில் இந்து முன்னணி சார்பாக ஜூன் 22ஆம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது.

மாநாடு வளாகத்தில் ஆறுபடை வீடுகளின் மாதிரி அமைத்து அங்கு பூஜை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் மாதிரி ஆறு படை வீடுகள் அமைக்க போலீசார் அனுமதி மறுத்து உத்தரவிட்டனர் .அதனைத் தொடர்ந்து ஆறு படை வீடுகள் அமைக்க அனுமதி மறுத்த போலீசார் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யவும், முருக பக்தர்கள் மாநாட்டுக்கு அனுமதி வழங்க வேண்டும் என இந்து முன்னணி சார்பாக உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி பி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு சார்பாக முருகு பக்தர்கள் மாநாட்டுக்கு 52 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் மாதிரி ஆறுபடை வீடுகளுக்கு மூன்று நாட்களுக்கு அனுமதி வழங்கலாம் என கூறப்பட்ட நிலையில் இந்து முன்னணி தரப்பிலிருந்து முருக பக்தர்கள் மாநாட்டுக்கு 52 நிபதனைகள் போடப்பட்டுள்ள நிலையில் போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர்.

இந்த மாநாட்டிற்கு பைக்கில் வரக்கூடாது, வாகனங்களில் மாநாட்டுக்கு வர உள்ளூர் காவல் நிலையத்தில் அனுமதி பெற வேண்டும். மாதிரி ஆறுபடை வீடுகள் அமைக்க அனுமதி மறுத்து போலீசார் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. மாநாடு நடைபெறக்கூடிய வளாகத்தில் மாதிரி ஆறுபடை வீடுகள் அமைக்கப்பட்டு பூஜை செய்யலாம். இந்த மாநாட்டில் தமிழக மட்டுமின்றி பிற மாநிலங்களை சேர்ந்தவர்களும் பங்கேற்க வாய்ப்பிருப்பதால் தமிழகத்தில் உள்ள மண்டலங்கள் வெளி மாநிலங்களில் இருந்து வருவோருக்கு வண்ண நிறத்தில் அனுமதி பாஸ் வழங்க வேண்டும். தனித்தனி பார்க்கின் வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்.

விஐபி மேடையில் பங்கேற்பவர்களுக்கென பார்க்கிங் வசதிகளை உருவாக்க வேண்டும் எனவும் போலீசார் தரப்பில் கூறப்பட்டது. மேலும் மாநாட்டில் பங்கேற்கும் ஆண், பெண்களுக்களை மெட்டல் டிடெக்டர் கருவிகள் மூலம் பரிசோதனை செய்த பிறகு உள்ளே அனுமதிக்க வேண்டும். மருத்துவ குழுக்கள், ஆம்புலன்ஸ், குடிநீர் தொட்டிகள், கழிப்பறைகள், உள்ளிட்டவை ஏற்படுத்தி தரவேண்டும். மாநாட்டு மேடை மற்றும் நுழைவாயில் உள்ளிட்ட பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க வேண்டும்.

பார்க்கிங்கில் நிறுத்திய வாகனங்களை தன்னார்வலர்களை கொண்டு கண்காணிக்க வேண்டும். வெளிமாவட்டம் மற்றும் மாநிலங்களிலிருந்து வரும் வாகனங்களின் எண்ணிக்கையை கண்காணிக்க வேண்டும். அதனை பட்டியலிட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. மாநாட்டு திடலில் ஆறுபடை வீடுகளின் மாதிரி கோயில்களை அமைக்க முறையாக சம்பந்தப்பட்ட கோயில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் அனுமதி பெறுவது அவசியம்.

ரிங்கு ரோடு என்பதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தாமல் காவல் துறையினர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட 52 நிமிடங்கள் விதிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளின் வங்கி கணக்கை தேடி வரும் பணம்; வெளியான முக்கிய அறிவிப்பு!

0

மத்திய அரசு மக்களுக்காகவும் விவசாயிகளுக்காகவும் பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகம் செய்து செயல்படுத்தி வருகின்றது. இந்நிலையில் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதியோஜனா திட்டத்தின் மூலம் தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இத்திட்டத்தின் மூலம் நேரடி பலன் பரிமாற்றங்கள் மூலம் இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு நிதி உதவி தொடர்ந்து வழங்கப்பட்டு வரும். இந்த திட்டத்தின் மூலம் 2000 ரூபாய் 19 தவணையாக வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இருபதாவது தவணைத் தொகை எப்போது வழங்கப்படும் என விவசாயிகள் மிகவும் எதிர்பார்ப்பில் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் இந்த திட்டம் தொடர்பாக முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அடுத்த வாரம் இந்த திட்டத்தின் இருபதாவது தவணை தொகையாக சுமார் 2000 ரூபாய் விவசாயிகளின் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதனால் லட்சக்கணக்கான விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த திட்டத்தின் இருபதாவது தவணை எப்போது டெபாசிட் செய்யப்படும் என்பது குறித்து அதிகாரபூர்வ தகவல் வெளியாகவில்லை. ஜூன் 20ஆம் தேதி அன்று விவசாயிகளின் வங்கி கணக்குகளில் இந்த பணம் வரவு வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகள் நிதி உதவி பெறுவதற்கு விவசாயிகளின் வங்கி கணக்கை ஆதார் எண்ணுடன் இணைப்பது அவசியம். ஆதார் எண் மற்றும் வங்கி கணக்கு நிலையை சரிபார்க்க வேண்டும். ஆதார் எண் மற்றும் வங்கி கணக்கில் உள்ள நேரடி பரிமாற்ற விருப்பத்தை செயலில் வைத்திருக்க வேண்டும்.

கேஒய்சி சரிபார்ப்பை முடிக்க வேண்டியது அவசியம். மேலும் பிஎம் கிசான் வெப்சைட்டில் உள்ள know you are status வசதியின் கீழ் ஆதார் எண் மற்றும் வங்கி கணக்கு நிலையை சரி பார்த்துக் கொள்ளலாம். இந்தத் திட்டத்தின் பயனாளிகளின் பட்டியலில் பெயர் உள்ளதா என்பதை https://pmkisan.gov.in/ என்ற வெப்சைட்டில் சென்று பார்த்துக் கொள்ளலாம். தங்களுடைய முழு விவரங்களையும் நிரப்ப வேண்டும்.

அதில் மாநிலம், மாவட்டம், வட்டம் மற்றும் கிராம பஞ்சாயத்தை தேர்வு செய்ய வேண்டும். அதன் பிறகு ஷோ பட்டனை கிளிக் செய்தால் தங்களுடைய விவரங்கள் காண்பிக்கப்படும். மேலும் கேஒய்சி சரி பார்ப்பை சரியாக முடித்த பயனாளிகளுக்கு மட்டுமே பிஎம் கிசான் திட்டத்தின் மூலம் பணம் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்படும். ஆதார் எண், மொபைல் எண் மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் சரியாக இருக்க வேண்டியது அவசியம்.