Home Blog Page 42

இந்த ஒரு பழத்தை சாப்பிட்டாலே போதும்! உடல்ல இருக்க பாதி நோய் காணாம போய்டும்!

0

சீதாப்பழத்தில் கால்சியம் சத்து, வைட்டமின் ‘சி’ சத்து அதிகமாக உள்ளது.. இப்பழத்தில் நீர்சத்து அதிகம் காணப்படுகிறது. இது தவிர மாவுச்சத்தும் , தாது உப்புகள், புரதம், கொழுப்பு,நார்ச்சத்து,இரும்புச்சத்து, பாஸ்பரஸ், போன்றவை இப்பழத்தில் உள்ளன.

மூச்சுக்குழாய் அழற்சி பிரச்சனைகளுக்கு சீதாப்பழத்தை சப்பிடிடுவதால் மூச்சுக்குழாய் உள்ள  அழற்சி சரியாகும். மேலும் ஆஸ்துமா நோய் வாராமல்   பாதுகாக்கும். சீதாப்பழம் உடலில் உள்ள  சூட்டை குறைத்து உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.

உடல் உஷ்ணத்தால் ஏற்படும் உடல் சோர்வுகளை குணப்படுத்தும் தன்மை இந்த சீதாப்பழத்திற்கு உள்ளது. குடற்புண் குணமாக சீதாப்பழத்துடன் சிறிது ஊற வைத்து எடுத்த வெந்தயத்தை சேர்த்து சாப்பிட்டால் குடற்புண் வெகு விரைவில் குணமாகும். சீதாப்பழத்தை உடம்பில்  ஊளைச்சதை உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஊளைச்சதை குறையும்.  சீதாப்பழத்தை சாப்பிட்டால்  விரைவில் செரிமானம் ஏற்படும். மேலும் சீதாப்பழத்தில் உள்ள  பல சத்துக்கள் இதயத்தைப் பலப்படுத்தும்.

இதயம்  சீராக இயங்கச் செய்யும் மற்றும் சீதாப்பழத்தை சாப்பிட்டால்  இதயம் சம்பந்தமான எந்த நோய்களும் வராமல் இதயத்தை பாதுகாக்கும். சீதாப்பழத்தை அரைத்து சீதாப்பழச்சாறு குடித்து வந்தால் சருமதில் ஏற்பப்டும் வறட்சி நீங்கி சரும பொழிவு ஏற்ப்பட்டு சருமம் இயல்பு நிலைக்கு வரும்.

சீதாப்பழத்தில் சிறிதளவு வைட்டமின் ‘சி’ உள்ளதால் அதிகம் சாபிட்டால் விரைவில்  சளி  பிடிக்காது. சீதாப்பழ விதைகளை பொடியாக்கி சம அளவு பொடியுடன் பைத்த மாவு கலந்து தலை முடியில் தேய்த்து குளித்து வந்தால் முடி மிருதுவாகும். பெண்களுக்கு  பேன்கள் தொல்லை இருக்காது.

புற்றுநோயை குணப்படுத்தும் ஒரே பழம் இது தான்! விரைந்து உண்ணுங்கள்!

0

தக்காளி என்பது ஏதோ குழம்பு வைப்பதற்குத் தேவையான ஒன்று என்றே அனைவரும் நினைகின்றனர்.தக்காளியும் பழவகைகளில் ஒன்றுதான் என்பதை அறிந்துக்கொள்ள வேண்டும்.பழங்களை சாப்பிடுவதை போலவே தக்காளிப் பழத்தையும் அப்படியே சாப்பிட்டால் உடலிற்கு வளத்தையும் நல்ல பலத்தையும் தரும்.தக்காளி பழத்தை அப்படியே சாப்பிடுவது என்பது டானிக் குடுப்பதற்கு சமமாகத்தான் இருக்கும்.

ஆனால் தக்காளிபழத்தை  எப்படி பக்குவப்படுத்தி சாப்பிட்டாலும் அதிலுள்ள சத்துக்கள் அனைத்தும் அப்படியே கிடைக்கும்.தக்காளி பழத்தில் அதிகபட்சமாக வைட்டமின் ஏ சத்து 91 மில்லி கிராம் உள்ளது.வைட்டமின் பி1 சத்தானது 34மில்லி கிராமும் உள்ளது.மேலும் தக்காளிக்கு இரத்தத்தை சுத்திகரிக்கும் ஆற்றல் உண்டு.இது இரத்தத்தை உற்பத்தி செய்யக் கூடியது.நல்ல இரத்தத்திற்கு வலி செய்வதால் இதன் ஓட்டமும் சீராக இருக்க உதவுகிறது.

பொதுவாக இரத்த ஓட்டம் சீராக இருந்தாலே உடலில் நோய் தொற்று ஏற்படுவது மிகவும் குறைத்து காணப்படும்.தக்காளி பழத்தை காலை மாலை என இரு நேரமும் சூப் வைத்து குடித்து வந்தால் சருமம் அதிக அளவு ஆரோக்கியமாக இருக்கும்.புரோஸ்டேட் கேன்சர் என்பது ஆண்களை அதிக அளவு தாக்கக் கூடியது.குறிப்பாக 50 வயதிற்கு மேற்பட்ட ஆண்களை அதிக அளவு தாக்குவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றனர்.

புரோஸ்டேட் புற்றுநோய் எனப்படுவது ஆண்களின் இனைய சுரப்பித் திரள்களால் ஆன பெருஞ்சுரப்பியை தாக்குகிறது.இதனால் ஆண்களின் சிறுநீரக மண்டல் பாதிக்கப்படுகிறது.இதனுடன் விளைவானது அவர்களை அடிக்கடி சிறுநீர் கழிக்க தோன்றும்.அதுமட்டுமின்றி சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் மற்றும் ரத்த போக்கு ஏற்படும்.

இந்த புரோஸ்டேட் புற்றுநோயை குணமாக்கும் ஆற்றல் தக்காளி பழத்திற்கு உண்டு என ஆராய்ச்சியில் கூறுகின்றனர்.தக்காளியில் லைக்கோபின் என்ற பொருள் உள்ளதால் இது புற்றுநோய்க்கு எதிராக செயல்படுகிறது என கூறுகின்றனர்.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மைகளா!!

0

இந்த அவசர காலத்தில் மனிதர்கள் அவர்களின் உடல் நலனில் அக்கறை காட்டுவது குறைந்துகொண்டே வருகிறது. இந்த கால நவீன வேலைகளின் காரணமாக உடல் உழைப்பும் குறைந்து புதிய புதிய நோய்களும் உருவெடுக்க தொடங்கி உள்ளது. இதற்கிடையில் நம் உடல் ஆரோக்கியத்தில் சிறிதளாவது அக்கறை காட்டுவது அவசியம்.

இதற்காக நாம் பெரிதும் கஷ்டப்பட தேவையில்லை. சிறு சிறு வாழ்வியல் மாற்றம் மட்டும் போதும். எடுத்துக்காட்டாக தினமும் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது உடலுக்கு எவ்வளவு நன்மை என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்?

இந்த சிறு பழக்கம் உடலுக்கு எத்தனை எத்தனை நன்மைகளை தரும் என்பதை பார்ப்போம்.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் ஏற்படும் நன்மைகள்

குடல் சுத்தம் ஆகும். குடலில் தேங்கியுள்ள கழிவுகள் முழுமையாக வெளியேறும்.

மலச்சிக்கல் பிரச்சனை குணமாகும்.

தண்ணீர் குடிப்பதால் சிறுநீரகத்தின் வழியாக உடலில் உள்ள கிருமிகள்  வெளியேறி சருமம் மிகவும் அழகாக பளபளப்பாக மாறும்.

வாய் துருநற்றம், பல் பிரச்சினைகள் குணமாகும்.

தலைவழியல் அவதி படுபவர்களும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிதால் தலைவலி குணமாகும்.

வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து உடலின் ஆற்றல் அதிகரிக்கும்.

வளர்சிதை மாற்ற விகிதம் சுமார் 25 சதவிகிதம் அதிகரிக்கிறது.இதனால் அஜீரண பிரச்சினைகள் குறையும்.

உடல் எடையை குறைக்க உவுகிறது.

இளமை கூடும். சரும பிரச்சனைகளுக்கள் குறையும்.

சிறுநீரக கல், சிறுநீரகப்பை தொற்று, அல்சர் போன்ற பிரச்சினைகள் தடுக்கிறது.

நோய் எதர்ப்புசக்தியை அதிகரிக்கிறது.

கருவுற்ற தாய்மார்களுக்கு உடலில் அரோகியம் அகிதரிக்கும்.

எனவே அனைவரும் தினமும் காலையில் ஒரு டம்ளர் தண்ணீரை வெறும் வயிற்றில் குடித்தால் ஆரோக்கியமும் அழகும் மேம்பாடும்.

தவெகவில் இணையும் செங்கோட்டையன்.. நிர்மல் குமார் சொன்ன பகீர் தகவல்!

0

TVK: அடுத்த வருடம் நடைபெறும் சட்டமன்ற தேர்தலுக்காக தேர்தல் களம் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த விறுவிறுப்பை மேலும் மெருகேற்றும் வகையில் தமிழ் திரையுலகின் மிக பிரபல நடிகராக அறியப்பட்ட விஜய் முதன் முதலாக சட்டமன்ற தேர்தலை சந்திக்க போகிறார். அண்மை காலமாகவே விஜய் பற்றிய செய்தி தான் அனைத்து ஊடகங்களிலும் முக்கிய செய்தியை உள்ளது. கட்சி ஆரம்பித்த ஒன்றரை  வருடங்களில் இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்திய விஜய் 2026 தேர்தல் முடிவுகளில் நிச்சயம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் கட்சியில் இணைய பலரும் ஆர்வம் காட்டி வரும் நிலையில், அதிமுகவின் மிக முக்கிய தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் தவெகவில் இணைய உள்ளதாக தகவல் பரவி வருகிறது. அதிமுக ஒன்றிணைய வேண்டுமென கூறியதற்காக இபிஎஸ் அவரை கட்சியை விட்டு நீக்கினார். இதற்கு பின் செங்கோட்டையனின் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற விவாதம் அரசியல் களத்தில் எழுந்தது. இந்நிலையில் இவர் தவெகவில் இணைய போகிறார் என்ற செய்தி பரவியது.

இந்த  தகவலுக்கு விஜய் தரப்பிலிருந்தும், செங்கோட்டையன் தரப்பிலிருந்தும் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. இதனால் இவர் தவெகவில் இணைய போகிறார் என்பது உறுதி என கூறப்பட்டது. இதனை மேலும் மேலும் உறுதிப்படுத்தும் வகையில், தவெகவை சேர்ந்த நிர்மல் குமார் ஒரு கருத்தை கூறியுள்ளார். செங்கோட்டையன் தவெகவில் இணைவது குறித்து கேட்ட கேள்விக்கு அதனை பற்றி பிறகு பேசலாம் என்று. பதிலளித்துள்ளார். இந்த கருத்து செங்கோட்டையன் தவெகவில் இணைய போகிறார் என்பதை மறைமுகமாக கூறியுள்ளார் என்றே பார்க்கப்படுகிறது.

செங்கோட்டையனுக்கு தவெகவில் இவ்வளவு பெரிய பதவியா.. ஆச்சரியத்தில் இபிஎஸ்!!

0

TVK ADMK: இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. அதற்காக தேர்தல் ஆணையம் தொடங்கி மாநில கட்சிகள் வரை அனைத்தும் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளது. இதற்கிடையில் மத்திய அரசு கொண்டு வந்த SIR பணிகளும் முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்த SIR சீர்திருத்தத்தை அதிமுக ஆதரிக்க, திமுக எதிர்த்து வருகிறது. இது ஒரு புறம் இருக்க அதிமுகவை சேர்ந்த பலரும் திமுகவில் இணைந்து வருவது வாடிக்கையாகிவிட்டது. திமுகவில் மட்டுமல்லாது புதிய கட்சியான தவெகவிலும் இணைந்து வருகின்றனர். இது அதிமுகவிற்கு தேர்தலில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இதனை அறிந்த இபிஎஸ் தனக்கு தலைமை தான் முக்கியமென்று பிரிந்தவர்களை கட்சியில் சேர்க்காமல் உள்ளார்.

இந்நிலையில் பிரிந்தவர்களை ஒன்றிணைக்க வேண்டுமென அதிமுக தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய செங்கோட்டையனை கட்சியின் அடிமட்ட தொண்டன் உள்ளிட்ட அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கினார். இதனை தொடர்ந்து நால்வர் அணியாக உருவான செங்கோட்டையன், அடுத்த என்ன செய்ய போகிறார் என்று அரசியல் களமே ஆவலுடன் எதிர்பார்த்த சமயத்தில், 2 தினங்களாக அவர் தவெகவில் இணைய போவதாக ஊடகங்கள் கூறி வருகின்றன. மேலும் தவெகவை சேர்ந்த ஆதவ் அர்ஜுனா செங்கோட்டையனை சந்தித்து பேசியதாகவும் கூறப்பட்டது. இது குறித்து விஜய் செங்கோட்டையனிடம்  போனில் பேசியதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்நிலையில் செங்கோட்டையன் தவெவில் இணைந்தால் அவருக்கு துணை முதல்வர் பதவி தர அதிக வாய்ப்புள்ளது என்ற கருத்து வலுப்பெறுகிறது. செங்கோட்டையன் மிகுந்த அரசியல் அனுபவம் வாய்ந்த நபர் என்பதாலும், ஈரோடு தொகுதியில் பலமுறை வெற்றி பெற்றவர் என்ற அடிப்படையிலும் இவருக்கு துணை முதல்வர் பதவி வழங்குவது சரியாக இருக்கும் தவெக தலைமை நினைக்கிறது. மாற்று கட்சியை சேர்ந்தவர்களுக்கு துணை முதல்வர் பதவி தருவதற்கு தவெகவை சேர்ந்த பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்கியது அதிமுகவிற்கு எந்த விதத்திலும் பாதிப்பு இல்லையென்று கூறி வந்த இபிஎஸ்க்கு இது பேரதிர்ச்சியாக இருக்கும் என்றும் கணிக்கப்படுகிறது.

சசிகலாவை நடுக்காட்டில் விட்ட நால்வர் அணி.. மூவர் அணியாக மாற போகுதா!!

0

ADMK: 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாத காலமே இருக்கும் நிலையில், அரசியலில் பல்வேறு திருப்பங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. ஆளுங்கட்சியாக இருக்கும் திமுக மேல், மக்களுக்கு அதிருப்தி ஏற்படும் வகையில், திமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் மீது ஊழல் புகார் எழுந்துள்ளது. எதிர்க்கட்சியான அதிமுகவின் மேல் ஏற்கனவே மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்ட நிலையில், அதனை மேலும் வலுப்படுத்தும் வகையில், சில சம்பவங்கள் ஏற்பட்டிருக்கிறது. திராவிட கட்சியான அதிமுக முன்பு போல இல்லாமல் தற்போது செயலிலந்து காணப்படுகிறது. அதற்கு இபிஎஸ்யின் தலைமை தான் காரணம் என்று கூறப்படுகிறது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் தான் இபிஎஸ்யின் செயல்பாடுகளும் உள்ளது. அதில் ஒன்று தான் அதிமுகவின் முக்கிய தலைவர்களின் நீக்கம். எடப்பாடி பழனிசாமியால் நீக்கப்பட்ட முக்கிய தலைவர்கள் ஒன்றிணைந்து நால்வர் அணியாக உருவெடுத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பசும்பொன்னில் நடந்த தேவர் ஜெயந்தி விழாவில் இந்த நிகழ்வு அரங்கேறியது. அப்போது டிடிவி தினகரன், ஓபிஎஸ், செங்கோட்டையன் என மூவரும் ஒன்றாக இணைந்து பேட்டியளித்த நிலையில் சசிகலா மட்டும் அவர்களுடன் இல்லை. ஆனால் தினகரன், சசிகலாவும் எங்கள் அணியில் தான் இருக்கிறார் என்று கூறினார்.

பலரும் இதனை சசிகலா தனித்து விடப்பட்டுள்ளார் என்று விமர்சித்து வந்தனர். தற்சமயம் அது உறுதியாகியுள்ளது. ஏனென்றால், செங்கோட்டையன் தவெகவில் இணைய உள்ளதாகவும், ஓபிஎஸ் தனி கட்சி ஆரம்பிக்க போவதாகவும், தினகரன் கூடிய விரைவில் கூட்டணியை அறிவிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இவ்வாறு இவர்கள் மூவரும் ஒரு பாதையில் சென்று கொண்டிருக்க சசிகலாவின் நிலைப்பாடு மட்டும் என்னவென்றே தெரியவில்லை. மூவரில் ஒருவருடன் கூட சசிகலா தென்படாததால் இவர் நால்வர் அணியிலிருந்து புறக்கணிப்பட்டுள்ளார் என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். இதனால் சசிகலாவை ஒதுக்கி விட்டு கூடிய விரைவில் மூவர் அணி உருவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

திராவிட வாடையே வேண்டாம்.. விஜய் எடுத்த அசத்தலான முடிவு!! யாரும் தவெக பக்கமே வரக்கூடாது!!

0

TVK ADMK: இன்னும் 6 மாதத்தில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. அதற்காக மாநில கட்சிகள் அனைத்தும் தங்களது தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களுடன் கூட்டணி குறித்த ஆலோசனையும் நடைபெற்று வருகிறது. இந்த சட்டமன்ற தேர்தலில் களம் காண இருக்கும் விஜய் தமிழக அரசியலையே மாற்றும் அளவுக்கு வலுப்பெற்று வருகிறார். இவர் கட்சி ஆரம்பித்து சுமார் ஒன்றரை வருடங்களுக்கு மேலாண நிலையில், அனைத்து ஊடகங்களிலும் தவெக தான் தலைப்பு செய்தியாக உள்ளது.

இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்திய விஜய் எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பார் என்பது தான் தற்போதைய கேள்வியாக உள்ளது. தனது முதல் தேர்தலிலேயே ஆளுங்கட்சியாக இல்லாவிட்டாலும், எதிர்க்கட்சி அந்தஸ்த்தை பெறும் அளவு தவெகவுக்கு ஆதரவு உள்ளது. இந்நிலையில் இபிஎஸ் அதிமுகவின் தலைமை பதவியை ஏற்றதிலிருந்தே தொடர் தோல்விகளை சந்தித்து வரும் அதிமுக, இந்த முறையும் எதிர்க்கட்சி அந்தஸ்த்தை தக்க வைத்து கொள்ள வேண்டுமானால் அதற்கு விஜய் கூட்டணி அவசியம்.

இல்லையென்றால் அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்படும். இதையறிந்த இபிஎஸ் விஜய் கூட்டணியில் சேர்க்க முயற்சித்தும் அது நடக்கவில்லை. விஜய்யை முதல்வர் வேட்பாளராக ஏற்காதது தான் அவர் அதிமுக கூட்டணியில் சேராததற்கு காரணம் என்று கூறப்பட்டது. இந்நிலையில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் தவெகவில் சேரப்போவதாக தகவல் பரவி வருகிறது. இந்த தகவல் பொய் என்று தவெகவை சேர்ந்த பலர் கூறி வருகின்றனர். அதற்கு காரணம் விஜய் கட்சி ஆரம்பித்த போதே திராவிட கட்சிகளுக்கு மாற்று என்ற கொள்கையுடன் தான் இருந்தார்.

இதனால், திராவிட வாடை உள்ள எவரையும் கட்சியில் சேர்க்க கூடாது என்பதில் விஜய் தெளிவாக உள்ளார் என்று நம்ப தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றனர். இப்படி இருக்க திராவிட வாடை உள்ளவர்களை கட்சியில் சேர்த்தால், அது தவெகவின் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு குந்தகம் விளைவிக்கும் செயல் என்று விஜய் நினைப்பதாகவும் சில கூறுகின்றனர். அதனால் செங்கோட்டையன், சசிகலா, டிடிவி தினகரன் என யாரையும் தவெகவில் சேர்க்க கூடாது என்பதில் விஜய் தெளிவாக உள்ளதாக தவெகவை சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.

விஜய் உங்க பொறுப்பு.. செங்கோட்டையனுக்கு பாஜக கொடுத்த அசைமெண்ட்!! தவெகவுக்கு வைத்த செக்!!

0

TVK BJP: நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்திலிருந்தே அவர் யாருடன் கூட்டணி அமைப்பார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் மேலோங்கி உள்ளது. விஜய் தனது முதல் மாநாட்டிலேயே தவெகவின் கொள்கை எதிரி பாஜக, அரசியல் எதிரி திமுக என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார். ஆனால் பாஜக தவெகவை கூட்டணியில் சேர்ப்பதற்கான வேலையை செய்து வந்தது. இது கரூர் சம்பவத்தில் நன்றாக தெரிந்தது. ஆனாலும் கொள்கை எதிரியுடன் கூட்டணி அமைக்க முடியாது என்ற முடிவில் விஜய் தெளிவாக உள்ளார் என்பது தெரிகிறது.

கரூர் சம்பவத்தில் பாஜக விஜய்க்கு நேரடியாக ஆதரவு தெரிவித்தும், பாஜக, திமுகவை தவிர வேறு எந்த கட்சியாக இருந்தாலும் கூட்டணி வைக்க தயார் என்று தவெகவை சேர்ந்த அருண்ராஜ் கூறினார். இந்நிலையில் அதிமுக மட்டுமே பாஜக கூட்டணியில் இருப்பது பாஜகவிற்கு போதாது. அதனால் விஜய்யை எப்படியாவது கூட்டணியில் சேர்க்க வேண்டுமென முயற்சித்து வரும் பாஜக தலைமை, அதனை செங்கோட்டையன் மூலம் நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது.

இபிஎஸ்யால் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் முதலில் நால்வர் அணியாக உருவெடுத்த நிலையில், தற்போது விஜய் உடன் இணைய போவதாக பல்வேறு ஊடகங்களும் கூறுகின்றன. முதலில் தவெகவில்  செங்கோட்டையன் இணைந்த பின்னர், மெல்ல மெல்ல விஜய்யை பாஜக பக்கம் சேர்ப்பதற்கான பணியை செங்கோட்டையனுக்கு பாஜக கொடுத்துள்ளதாக பாஜக வட்டாரங்கள் கூறுகின்றனர். அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் 2 முறை அமித்ஷாவை சந்தித்த செங்கோட்டையன், இதை பற்றி தான் பேசியுள்ளார் என்று பலரும் கூறுகின்றனர்

நான் தான் முதல்வர் வேட்பாளர்.. ஆடம் பிடிக்கும் எக்ஸ் சி.எம்!! குழப்பத்தில் பாஜக!!

0

ADMK BJP: பீகாரில் மாபெரும் வெற்றி பெற்ற பாஜக அடுத்ததாக தமிழக தேர்தலை நோக்கி அடியெடுத்து வைத்துள்ளது. இதற்காக தமிழகத்தில் மிகப்பெரிய திராவிட கட்சியான அதிமுக உடன் ஒரு வருடத்திற்கு முன்பே கூட்டணி அமைத்து விட்டது. அதிமுக மட்டுமல்லாது, அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்களும் NDA கூட்டணியில் இருந்தது பாஜகவிற்கு மிகப்பெரிய பலமாக இருந்தது. ஆனால் அதிமுக பாஜகவில் இணைந்த பிறகு இது கொஞ்சம் கொஞ்சமாக சிதற ஆரம்பித்தது. முதலில் நயினாரின் செயல்பாடுகள் பிடிக்கவில்லை என்றும், பிரதமரை சந்திக்க அனுமதி அளிக்கவில்லை என்றும் கூறி ஓபிஎஸ் விலகினார்.

பின்னர், முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்க முடியாது என்று கூறி டிடிவி தினகரனும் விலகினார். இதனால் இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து பயணிப்பார்கள் என்று கூறப்பட்ட சமயத்தில் நால்வர் அணி உருவானது. இந்நிலையில் ஓபிஎஸ் திடீரென தனி கட்சி ஆரம்பிக்க போவதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த கட்சி தொடங்கப்பட்ட உடன் பாஜக உடன் கூட்டணியில் இணைய போவதாகவும் ஓபிஎஸ்யின் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். பாஜகவில் ஓபிஎஸ் கட்சியும் இணைந்தால், அந்த கூட்டணியில் இரண்டு கட்சி இருக்கும்.

இதனை வைத்து இபிஎஸ்யை வீழ்த்த, முதல்வர் வேட்பாளராக நான் தான் நிற்பேன் என்று ஓபிஎஸ் பாஜகவிடம் வலியுறுத்த போவதாக தகவல் கிடைத்துள்ளது. பாஜக தமிழகத்தில் நிலைப்பெற வேண்டுமானால் அதற்கு இபிஎஸ் ஆதரவு மட்டும் போதாது. அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களின் ஆதரவும் தேவை. இப்படி இருக்க இவர்கள் அனைவரும் பாஜகவில் இருந்தால் தான் பாஜகவால் வெற்றி பெற முடியும். இந்நிலையில், ஓபிஎஸ்-இபிஎஸ் இடையே இவ்வாறான கருத்து மோதலும், முதல்வர் வேட்பாளருக்கான சண்டையும் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தால் அது பாஜகவிற்கு பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். இதனால் பாஜக எந்த காலத்திலும் தமிழகத்தில் காலூன்ற முடியாத நிலை ஏற்படும் என்று பாஜக மேலிடம் நினைக்கிறது.

கூட்டணியில் இருந்தாலும் பாஜக தான் ஆட்சி அமைக்கும்.. சுளீரென்று பேசிய பாஜக தலைவர்!!

0

ADMK BJP: அடுத்த வருடம் நடைபெறும் சட்டமன்ற தேர்தலுக்காக தேர்தல் களம் பரபரப்பாக செயல்பட்டு வருகிறது. அதோடு கூட்டணி கணக்குகளும், தொகுதி பங்கீடும் கூட்டணி கட்சிகளிடம் கலந்துரையாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆரம்பத்தில் இருந்தே தமிழகத்தில் காலூன்ற முடியாமல் தவிக்கும் பாஜக இந்த முறை பீகாரில் பெற்ற வெற்றியை மையப்படுத்தி தமிழ்நாட்டில் நுழைந்து விட வேண்டுமென கடுமையான முயற்சிகளை கையில் எடுத்துள்ளது. அதில் ஒன்று அதிமுக உடனான கூட்டணி.

இரண்டு கட்சிகளுக்கு இடையேயும் சில முரண்பாடுகள் இருந்தாலும் தேர்தலை கணக்கில் கொண்டு கூட்டணி அமைத்துள்ளது. ஒரு வேலை இவர்களின் கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்றால் யார் ஆட்சி அமைப்பது என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்தது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் இபிஎஸ் மற்றும் அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் பலரும், ஆட்சியில் பங்கு என்ற மரபே தமிழகத்தில் கிடையாது. அதிமுக வெற்றி பெற்றால் அதற்கு இபிஸ் தான் தலைமை தாங்குவார்.

ஆட்சி அதிகாரம் முழுவதும் அவரிடத்தில் தான் இருக்கும் என்று தெளிவாக கூறி வந்தனர். ஆனால் பாஜகவை சேர்ந்தவர்களோ, கூட்டணி ஆட்சி அமைக்கப்படும் என்பதை மறைமுகமாக கூறி வந்தனர். இதனை மேலும் வலுப்படுத்தும் வகையிலும், பாஜக தான் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்பதை, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

2026 சட்டமன்ற தேர்தலுக்காக தமிழகம் தலை நிமிர, தமிழனின் எழுச்சிப் பயணம் என்ற தலைப்பில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நயினார், தேனி பங்களாமேடு திடலில் பேசும் போது, வரும் தேர்தலில் NDA கூட்டணி வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இவரின் இந்த கருத்து வெற்றி பெரும் வரை தான் அதிமுக கூட்டணி, பிறகு தமிழகத்தில் பாஜக தான் ஆட்சியில் இடம் பெறும் என்பதை தெளிவாக எடுத்து காட்டியிருக்கிறது.