Home Blog Page 43

தினகரனை கைவிரித்த ஓபிஎஸ்.. இனிமே சோலோ ரூட் தான்!! டிடிவி திட்டவட்டம்!!

0

AMMK BJP: பாஜக கூட்டணியில் இருந்து வந்த டிடிவி தினகரன், ஓபிஎஸ் இருவரும் சில மாதங்களுக்கு முன்பு தற்போதைய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் செயல்பாடுகள் பிடிக்காத காரணத்தினாலும், கூட்டணியில் இபிஎஸ்க்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுப்பதாலும் பாஜக கூட்டணியை விட்டு விலகுவதாக அறிவித்தனர். இபிஎஸ் முதல்வர் வேட்பாளராக தொடரும் வரை பாஜகவில் இணைவதற்கு வாய்ப்பு இல்லை என்று டிடிவி தினகரன் ஆணி தனமாக கூறி வந்தார். கூட்டணியிலிருந்து ஓபிஎஸ் விலகியதால் அவர் தினகரனின் கட்சியான அமமுகவில் இணைந்து செயல் படுவார் என்று நினைத்த சமயத்தில், ஓபிஎஸ், செங்கோட்டையன், தினகரன், சசிகலா போன்ற நால்வரும் ஒரு அணியாக உருவெடுத்தனர்.

அதனால் இந்த அணி ஒன்றாக இணைந்து இபிஎஸ்யை வீழ்த்துவதற்கான பணிகளை செய்யும் என்று அனைவரும் எதிர்ப்பார்த்தனர். இந்த செய்தியெல்லாம் பொய் என்று நிரூபிக்கும் படி ஓபிஎஸ் ஒரு தகவலை கூறியுள்ளார். மீண்டும் NDA கூட்டணியில் இணைவதற்கான வேலைகள் நடந்து வருகின்றன என்று அவர் கூறியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவரின் இந்த கூற்று தினகரனை விட்டு விலகுவதற்கான அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது. ஏனென்றால், பாஜகவிலிருந்து விலகிய இருவரும், ஒன்றாக இணைந்து பயணிப்பார்கள் என்று அனைவரும் நினைத்தனர்.

அது மட்டுமல்லாமல், இபிஎஸ்யை முதல்வர் வேட்பாளராக ஏற்காத தினகரனின் கருத்துக்கு ஓபிஎஸ்யும் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வந்ததால், முதல்வர் வேட்பாளரை மாற்றும் வரை இருவரும் பாஜகவில் இணைய மாட்டார்கள் என்ற கருத்தும்  வலுப்பெற்றது. ஆனால் தற்போது பாஜகவில் இணைய வாய்ப்புள்ளது என்று ஓபிஎஸ் கூறியதால் இவர்கள் இருவரும் இன் தனி தனி பாதையில் பயணிக்க போகிறார்கள் என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். மேலும், இபிஎஸ் முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை, யார் பாஜகவில் இணைந்தாலும் தான் இணைய போவதில்லை என்பதில் தினகரன் உறுதியாக உள்ளார் என்று அமமுக வட்டாரங்கள் கூறுகின்றன. 

தவெக பக்கம் சாயும் அதிமுக எம்.பி.. கொண்டாட்டத்தில் விஜய்!! நடுக்கத்தில் இபிஎஸ்!!

0

TVK ADMK: 2026 சட்டமன்ற தேர்தலுக்காக தமிழக அரசியல் அரங்கு முழு வேகத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் பலரும் கட்சி மாறி மாறி இணைந்து வருகின்றனர். இதற்காக தொகுதி வாரியாக மாற்று கட்சியினரை தங்கள் கட்சியில் சேர்க்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில் திமுக, அதிமுக என அதிகமான தொண்டர்கள் இணைந்தாலும், திமுகவில் தான் முக்கிய தலைவர்கள் இணைந்து வருகின்றனர். இது திமுகவிற்கு லாபமாக அமைந்துள்ளது. அதிலும் முக்கியமாக அதிமுகவை சேர்ந்த முன்னணி தலைவர்கள் பலரும் திமுகவில் இணைந்து தற்போது முக்கிய பதவிகளில் உள்ளனர்.

அதனை முறியடிக்கும் வகையில் தவெக களமிறங்கியுள்ளது.  கரூர் சம்பவத்திற்கு பின் மக்கள் சந்திப்பை துரிதப்படுத்தாத விஜய், முதலில் சில டாப் தலைகளை கட்சிக்குள் கொண்டு வரும் பணியினை தீவிரப்படுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவிலிருந்து இபிஎஸ்யால் நீக்கப்பட்ட செங்கோட்டையன் தவெகவில் இணைய உள்ளதாக பலரும் கூறி வருகின்றனர். இந்நிலையில் தற்போது புதிதாக, 2018 இபிஎஸ்யால் நீக்கப்பட்ட எம்.பி. கே.சி பழனிசாமியை தவெகவில் இணைப்பதற்கான பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் இவருக்கு அதிக செல்வாக்கு உள்ளதால், ஒரு வேளை இவர் தவெகவில் இணைந்தால் அது விஜய்க்கு சட்டமன்ற தேர்தலில் சாதகமாக அமையும். மேலும் நீக்கப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்கவே மாட்டேன் என்று பிடிவாதமாக இருக்கும் இபிஎஸ்க்கு, இது பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் கணிக்கப்படுகிறது.

தவெகவில் இணையும் திமுகவின் முக்கிய புள்ளி.. அரசியல் விமர்சகரின் கருத்தால் பரபரப்பு!!

0

TVK DMK: அடுத்த வருடம் நடைபெற போகும் சட்டமன்ற தேர்தலுக்காக தமிழக அரசியல் களம் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறது. தேர்தல் நெருங்கும் சமயத்தில் பல சுவாரசியமான சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் அமைந்த நிகழ்வு தான் விஜய்யின் அரசியல் பிரவேசம். சுமார் ஒன்றரை வருடத்திற்கு முன்பு கட்சி ஆரம்பித்த விஜய்க்கு இப்போது வரை பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலும், முன்னணி கட்சிகளை சேர்ந்த சில தலைவர்கள் எதிர்த்தாலும், இன்னும் சிலர் விஜய்க்கு ஆதரவாகவே பேசி வருகின்றனர். அதோடு தவெகவில் இணைய ஆர்வம் காட்டியும் வருகின்றனர்.

அந்த வகையில் திமுகவின் முன்னாள் பேச்சாளரும், அரசியல் விமர்சகருமான நாஞ்சில் சம்பத் தவெகவில் இணைய போவதாக செய்திகள் பரவின. இது குறித்து பேசிய அவர், விஜய் என்னை அழைத்தால் நிச்சயம் தவெக கூட்டங்களுக்கு பேச செல்வேன் என்றும், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தமிழக அரசியலில் நிச்சயம் ஒரு மாற்றத்தை கொண்டு வரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். மேலும், எனக்கு கோடி ரூபாய் கொடுத்தாலும் விஜய்யை பற்றி ஒரு வார்த்தை கூட தவறாக பேச மாட்டேன் என்றும் கூறியுள்ளார்.

திமுகவில் பல  ஆண்டுகளாக இருந்து வரும் இவர், தவெக அரசியலுக்கு வந்ததிலிருந்தே அதற்கு தனது முழு ஆதரவையும் தெரிவித்து வருவது திமுகவிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன் ஒரு முறை திமுக சார்பில் அறிவு திருவிழா நடத்தப்பட்ட போது, நாஞ்சில் சம்பத்திற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அதற்கு காரணம் விஜய்க்கு ஆதரவு தெரிவிப்பது தான் என்று நாஞ்சில் சம்பத் கூறியது குறிப்பிடத்தக்கது. திமுகவிலிருந்து ஒதுக்கி வைக்கப்படுவதை உணர்ந்த அவர் தவெகவில் இணைய ஆர்வம் காட்டி வருவதாகவும் சில கூறுகின்றனர். நாஞ்சில் சம்பத்தின் இந்த கருத்து அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதிய கட்சி தொடங்கும் முன்னாள் முதல்வர்.. செம்ம ஷாக்கில் எதிர்க்கட்சி தலைவர்!!

0

ADMK: அதிமுக தற்போது பல பிரிவுகளாக பிரிந்திருப்பதால் அக்கட்சியின் மேல் மக்களுக்கு இருந்த நம்பிக்கை குறைந்ததோடு, அதிருப்தியும் ஏற்பட்டுள்ளது. அதில் முக்கியமாக செங்கோட்டையனின் நீக்கம் அதிகளவில் பேசப்பட்டது. அதிமுக தலைமைக்கு எதிராக செயல்படுபவர்களுடன் செங்கோட்டையன் இணைந்ததால் அவரை கட்சியிலிருந்து நீக்கியதாக இபிஎஸ் கூறினார். இந்நிலையில் இபிஎஸ்க்கு எதிராக ஓபிஎஸ், டிடிவி தினகரன். சசிகலா, செங்கோட்டையன் போன்ற நால்வரும் ஒரு அணியாக திரண்டனர். இவர்கள் நால்வரும் இபிஎஸ்யால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் என்பதால் இது அதிமுகவிற்கு வாக்கு வங்கியில் பேசிய மாற்றத்தை உண்டாக்கும் என்று அதிமுகவை சேர்ந்தவர்களே கூறி வந்தனர்.

நால்வர் அணியை சமாளிக்க முடியாத இபிஎஸ்க்கு தற்போது புதிதாக ஓபிஎஸ் உருவில் ஒரு பூகம்பம் வெடித்துள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிமுக ஒருங்கிணைப்பு குழு ஒன்றை ஆரம்பித்த ஓபிஎஸ், அதிமுக ஒன்றிணையவில்லை என்றால், புதிய கட்சி துவங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். ஓபிஎஸ் தலைமையில், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய ஓபிஎஸ், சில சர்வாதிகாரிகளின் பிடியில் சிக்கியுள்ள அதிமுக, கடந்த 11 தேர்தல்களில் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது.

தவறான தலைமை, தவறான பொதுக்குழு, தவறான பாதையில் செல்லும் கழகத்தை மீண்டும் ஒன்றன்றிணைக்க வேண்டும். இல்லையென்றால் நாங்கள் வேறு முடிவை நோக்கி நகர வேண்டியிருக்கும் இருக்கும் என்று கூறியுள்ளார். இவரின் வேறு முடிவு என்ற பேச்சு புதிய கட்சியை தோற்றுவிப்பதற்கான முன்னறிவிப்பாக பார்க்கப்படுகிறது. இவருக்கு பின் பேசிய வைத்தியலிங்கம் இதனை நேரடியாகவே கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இபிஎஸ் தலைமைக்கு எதிராக கழக குரல் ஓங்கி வரும் நிலையில், இதனை அவர் எப்படி சமாளிப்பார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

முதல்வராகும் செங்கோட்டையன்.. யாரும் எதிர்பாரா ட்விஸ்ட்!! கலக்கத்தில் எடப்பாடி!!

0

ADMK TVK: அதிமுகவை ஒருங்கிணைப்பு வேண்டும் என்று யார் கொடி தூக்கினாலும் அவர்களை கட்சியை விட்டு எடப்பாடி வெளியேற்றி விடுகிறார். அந்த வகையில் கொங்கு பகுதியில் மிகவும் முக்கிய புள்ளியாக பார்க்கப்படும் செங்கோட்டையனும் தற்போது கட்சியை விட்டே நீக்கிவிட்டார். எம்ஜிஆர் காலத்திலிருந்து அதிமுகவை பார்த்து வரும் இவருக்கே கட்சிக்குள் இந்த நிலைமையா என்று பலரும் வசைப்பாடி வருகின்றனர்.

ஆனால் இவரை கடந்து அதிமுக செயல்படுவது என்பதும் சற்று கடினம் தான். கொங்கு மணடலத்தில் இவருக்கு உள்ள செல்வாக்கை வைத்து எளிமையாக ஓட்டுக்களை பெற்றுவிடலாம். ஆனால் இவருக்கு மாற்று என போட்டால் கள அளவில் அதிக வேலை செய்ய வேண்டி இருக்கும்.

மேலும் கட்சிக்குள் தனது குரல் எடுபடாததால் அவருக்கு எதிராக பலத்த கூட்டணி அமைக்க வேண்டும் என செங்கோட்டையன் விரும்புகிறார். அதனால் பலரும் இவருடன் கூட்டு பேச்சுவார்த்தனை நடத்தி வந்தனர். ஆனால் கரூர் அசம்பாவிதத்திற்கு பிறகு விஜய்க்கு இப்படி ஒரு அரசியல் பிரவேசம் அமையும் என்று எதிர்பார்க்கவில்லை. வரும் மாதத்தில் விஜய்யுடன் கட்சியில் இணைந்து செயல்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

எப்படி அதிமுகவிலிருந்து வெளியேறி தேமுதிகவின் விஜயகாந்த்திற்கு பண்ருட்டி ராமச்சந்திரன் ஓர் வழிகாட்டியாக இருந்தாரோ, அதேபோல கத்துக்குட்டிக்கு சொல்லிக் கொடுத்த பெரிய பொறுப்பில் அமர நினைக்கிறார். ஆனால் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு சென்றாலும் இவருக்கென்று அந்தஸ்தான பதவி அதாவது (முதல்வர்) பொறுப்பில் சம பங்கு கேட்டுள்ளாராம்.

ஆண்மையை அதிகரிக்கும் அற்புத கீரைகள்! பெண்கள் பிரச்சனைகளுக்கும் செம தீர்வு இருக்கு!

0

உடல் உழைப்பு இல்லாமல் போன ஆன்லைன் உழைப்பில் அதிக அளவில் ஏற்படும் மனச்சோர்வு, மன உளைச்சல் உள்ளிட்ட காரணங்களால் தாம்பத்தியம் என்பது திருப்தி அளிக்க கூடிய ஒன்றாக இல்லாமல் மாறி வருகிறது. முறையான உணவு பழக்கம் இல்லாமை, நல்ல தூக்கம், மன அழுத்தம், வேலைப்பளு, பொருளாதார ரீதியான அழுத்தங்கள் ஆகியன இன்றைய காலத்தில் ஆண்களுக்கு ஆண்மை குறைபாடு, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இருதய கோளாறுகளையும், பெண்களுக்கு நீர்கட்டி, வெள்ளைப்படுதல், உடல் சூடு அதிகரிப்பு, ரத்த சோகை உள்ளிட்ட பிரச்சனைகளும் அதிகம் ஏற்பட காரணமாக அமைகிறது.

இப்படி ஆண், பெண் என இரு பாலினத்தவரும் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கிறது பல வகை கீரைகள். நாம் அன்றாடம் உணவில் என்ன மாதிரியான கீரைகளை எடுத்துக் கொண்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை தற்போது காணலாம்…

முருங்கைக்கீரை– நீரிழிவை நீக்கும், கண்கள், உடல் பலம்பெறும்.

வல்லாரை கீரை– மூளைக்கு பலம் தரும்.

முடக்கத்தான்கீரை– கை, கால் முடக்கம் நீக்கும் வாயு விலகும்.

குப்பைகீரை– பசியைத்தூண்டும்.வீக்கம் வத்தவைக்கும்.

அரைக்கீரை– ஆண்மையை பெருக்கும்.

புளியங்கீரை– சோகையை விலக்கும், கண்நோய் சரியாக்கும்.

பிண்ணாருக்குகீரை– வெட்டையை, நீர்கடுப்பை நீக்கும்.

பரட்டைக்கீரை– பித்தம், கபம் போன்ற நோய்களை விலக்கும்.

பொன்னாங்கன்னி கீரை– உடல் அழகையும், கண்ஒளியையும் அதிகரிக்கும்.

அகத்திக்கீரை– ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும்.

காசினிக்கீரை– சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும்.

சிறுபசலைக்கீரை– சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குணமாக்கும்.

பசலைக்கீரை– தசைகளை பலமடையச் செய்யும்.

கொடிபசலைக்கீரை– வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும்.

துத்திக்கீரை– வாய், வயிற்றுப்புண் அகற்றும். வெள்ளை மூலம் விலக்கும்.

காரகொட்டிக்கீரை– மூலநோயை போக்கும். சீதபேதியை நிறுத்தும்.

மூக்கு தட்டைகீரை– சளியை அகற்றும்.

நருதாளிகீரை– ஆண்மையைப் பெருக்கும், வாய்ப்புண் அகற்றும்.

மஞ்சள் கரிசலை– கல்லீரலை பலமாக்கும், காமாலையை விலக்கும்.

சுக்கா கீரை– ரத்த அழுத்தத்தை சீர்செய்யும், சிரங்கு மூலத்தை போக்கும்.

வெள்ளை கரிசலைக்கீரை– ரத்தசோகையை நீக்கும்.

புண்ணக்கீரை– சிரங்கும், சீதளமும் விலக்கும்.

புதினாக்கீரை– ரத்தத்தை சுத்தம் செய்யும், அஜீரணத்தை போக்கும்.

நஞ்சுமுண்டான் கீரை– விஷம் முறிக்கும்.

தும்பைகீரை– அசதி, சோம்பல் நீக்கும்.

கல்யாண முருங்கைகீரை– சளி, இருமலை துளைத்தெரியும்.

முள்ளங்கிகீரை– நீரடைப்பு நீக்கும்.

பருப்புகீரை– பித்தம் விலக்கும், உடல் சூட்டை தணிக்கும்.

புளிச்சகீரை– கல்லீரலை பலமாக்கும், மாலைக்கண் நோயை விலக்கும், ஆண்மை பலம் தரும்.

மணலிக்கீரை– வாதத்தை விலக்கும், கபத்தை கரைக்கும்.

மணத்தக்காளி கீரை– வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாக்கும், தேமல் போக்கும்.

முளைக்கீரை– பசியை ஏற்படுத்தும், நரம்பு பலமடையும்.

சக்கரவர்த்தி கீரை– தாது விருத்தியாகும்.

வெந்தயக்கீரை– மலச்சிக்கலை நீக்கும், மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும். வாத, காச நோய்களை விலக்கும்.

தூதுவலை– ஆண்மை தரும். சருமநோயை விலக்கும். சளித்தொல்லை நீக்கும்.

தவசிக்கீரை– இருமலை போக்கும்.

சாணக்கீரை– காயம் ஆற்றும்.

வெள்ளைக்கீரை– தாய்பாலை பெருக்கும்.

விழுதிக்கீரை– பசியைத்தூண்டும்.

கொடிகாசினிகீரை– பித்தம் தணிக்கும்.

துயிளிக்கீரை– வெள்ளை வெட்டை விலக்கும்.

மாதவிடாயின் போது ஏற்படும் வயிற்று வலியை போக்க அருமையான மருந்து

0

மாதவிடாயின் போது பெண்கள் பெருமளவு துன்பத்தை அனுபவிக்கிறார்கள்.அதுமட்டுமின்றி அந்த சமயங்களில் அவர்களுக்கு அதிக அளவு ஓய்வு தேவைப்படும்.ஆனால் இந்த காலக்கட்டத்தில் பெண்களுக்கு ஓய்வு எடுக்க நேரமே இல்லாமல் போய்விடுகிறது.அதனால் இந்த நேரங்களில் பெண்கள் வலியை பொறுத்துக் கொள்வதற்காக பலவகை மாத்திரைகளை உட்கொள்கின்றனர்.அது தற்போது வலியை குறைத்தாலும்,நாளடைவில் அதிக கெடுதலை கொடுக்கும்.

ஆகையால் இந்த டிப்ஸை பயன்படுத்துங்கள்,கண்டிப்பாக உங்களுக்கு நிரந்தர தீர்வைத் தரும்.

மாதவிடாய் பிரச்சனைகளை தீர்க்க டிப்ஸ்:

மாதவிடாய் சீராக மாதந்தோறும் நடக்க புதினா இலையின் சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து குடிக்கலாம்.

மாதவிடாயின் போது ஏற்படும் வயிற்று வலி நீங்க ஆவாரம் பூவின் பட்டையை பொடி செய்து கஷாயம் காய்ச்சி குடித்து வர எப்போதும் வயிற்று வலியே வராது. அதனையடுத்து அத்திப்பழத்தை தேனில் ஊறவைத்தும் சாப்பிட்டு வரலாம்.

மாதவிலக்கானது பலருக்கு சிறிதளவே வரும் அவர்கள் இலந்தைப்பூ மற்றும் வெற்றிலை சுண்ணாம்பு சேர்த்து மோரில் கலந்து குடித்து வர தடைப்பட்ட மாதவிடாய் சரியான முறையில் ஏற்படும்.

மாதவிடாய் நேரங்களில் அதிக அளவு உடல் சோர்வு ஏற்படும்.அந்த உடல் சோர்வு நீங்க கோதுமையை கஞ்சி போல் செய்து குடித்து வரலாம்.

அன்னாசிபழம் சாப்பிடுவதன் மூலம் வெள்ளைப்படுதல் குறையும்.அதுமட்டுமின்றி மாதவிடாய் நேரங்களில் சிலருக்கு மாதவிடாய் துர்நாற்றம் வரும். அதை தடுக்க அந்த நேரங்களில் முட்டை மற்றும் மாமிசத்தை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

அதற்கு பதிலாக அதிக அளவு பழச்சாற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.அது உடலிற்கு அதிக அளவு புத்துனர்ச்சியையும்,வலிமையையும் கொடுக்கும்.

மேலும் படிக்க : நாள்பட்ட வராமல் இருந்த மாதவிடாய்(Irregular Periods) ஒரே நாளில் வந்து விடும்!

மேலும் தகவல்களுக்கு:

வயிற்று வலி நீங்க பாட்டி வைத்தியம்,மாதவிடாய் வலி கவிதைகள்,மாதவிடாய் கட்டியாக வர காரணம்,மாதவிடாய் meaning in english,மாதவிடாய் சுழற்சி,மாதவிடாய் காலத்தில் சாப்பிட கூடாத உணவுகள்,பெண்கள் வயிறு வலி,பெண்களின் வயிற்றுவலி,மாதவிடாய் English meaning,மாதவிடாய் என்றால் என்ன,மாதவிடாய் காலங்களில்,மாதவிடாய் கவிதைகள்,சாப்பிட்டால் வயிற்று வலி,வயிற்று பொருமல் பாட்டி வைத்தியம்,மாதவிடாய் வருவதற்கான அறிகுறி,பெண்களுக்கு வயிற்று வலி,மாதவிடாய் வலியை போக்கும் உணவுகள்,வயிற்று வலி நீங்க பாட்டி வைத்தியம்,மாதவிடாய் வலி நிற்க மாத்திரை,மாதவிடாய் முதுகு வலி,மாதவிடாய் மருத்துவம்,அடி வயிறு வலிக்க காரணம் என்ன,மாதவிடாய் வலியை குறைக்க மருந்து,மாதவிடாய் துர்நாற்றத்தை போக்க மருந்து,மாதவிடாய் துர்நாற்றத்தை போக்க டிப்ஸ்,மாதவிடாய் குறைவாக வர காரணம்,மாதவிடாய் கட்டியாக வர காரணம்,மாதவிடாய் குறைவான உதிரப்போக்கு,அதிக உதிரப்போக்கு நிற்க பாட்டி வைத்தியம்,மாதவிடாய் சீராக வர என்ன சாப்பிட வேண்டும்,தீட்டு நிற்க,மாதவிடாய் நிற்பதற்கான அறிகுறிகள்,இறுதி மாதவிடாய்,மாதவிடாய் அதிக நாட்கள்,அதிக மாதவிடாய் இரத்தப்போக்கு,மாதவிடாய் குறைவாக வந்தால்,மாதவிடாய் கருப்பாக வர காரணம்,மாதவிடாய் வெளியேற,மாதவிடாய் கட்டியாக வர காரணம்,மாதவிடாய் குறைவான உதிரப்போக்கு,மாதவிடாய் குறைவாக வர காரணம்,மாதவிடாய் அதிக நாட்கள் வர காரணம்,மாதவிடாய் ஏற்பட்டால் எத்தனை நாட்கள்,மாதவிடாய் வலியை போக்கும் உணவுகள்,மாதவிடாய் காலத்தில் வயிற்று வலி வருவது ஏன்,மாதவிடாய் காலத்தில் சாப்பிட கூடாத உணவுகள்,மாதவிடாய் வயிற்று வலி நீங்க பாட்டி வைத்தியம்.

தொப்பையை குறைக்க எளிய வழி! இப்படி செஞ்சி பாருங்க எடை குறைவதை கண்கூடாக பார்க்கலாம்!

0

இந்த பரபரப்பான காலங்களில் அனைவருக்கும் அரோகியம் மீதான கவனம் போய்விட்டது. இந்த கம்ப்யூட்டர் காலங்களில் ஐடி யில் வேலை பார்ப்பவர்களுக்கு மட்டும் அல்லாமல் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு கூட எடை அதிகரிக்கும் பிரச்சினை உள்ளது. தொப்பை போட முக்கியமான காரணம் இரவு நேரகளில்  கண் விழிப்பது மற்றும் உண்ட உணவு செரிப்பதற்கு முன்பு மீண்டும் உண்பது.

இவை இரண்டு பழக்கங்களையும் மாற்றிக் கொண்டாலே பாதி பிரச்சினை தீர்ந்து விடும். உடல் எடை அதிகரிக்க பெரும் பங்காற்றுகிறது துரித உணவுகள். பாஸ்ட் புட் உணவுகள் மிகவும் ஆபத்தானவை இதை அடியோடு அகற்றினால் தான் உடல் ஆரோக்கியம் மேம்படும் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை. உடல் எடையை குறைக்கவும் தொப்பை போடுவதை தவிர்க்கவும் சில எளிமையான குறிப்புகளை பார்க்கலாம் வாங்க.

நாட்டு முட்டை:

உடல் எடையை குறைக்க நாட்டு  முட்டை மிகவும் உதவும். நாட்டு முட்டையில் புரதம் கொழுப்பு கனிம சத்துக்கள் அத்தியாவசிய விட்டமின்கள் உள்ளதால் இது உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவும்.

பாசி பருப்பு:

பாசி பருப்பில் உள்ள புரதம் கொழுப்பை கரைக்கவும் தொப்பை போடாமல் பார்த்துக்கொள்ளவும் உதவுகிறது. எனவே முடிந்த வரை தினமும் பாசி பருப்பை சேர்த்துக்கொள்ளுங்கள்.

பீன்ஸ்:

பீன்ஸில் உள்ள நார்ச்சத்துக்கள் காரணமாக தொப்பை போடமலும் மலச்சிக்கல் பிரச்சினையையும் சரி செய்கிறது. இவற்றை அன்றாட வாழ்வில் சேர்த்து வந்தால் தொப்பை பிரச்சனை காணாமல் போகும்.

இதை செய்தால் 100% நரைமுடி பிரச்சனை தீரும்!

0

இந்தக் காலக்கட்டத்தில் சிறு வயதிலேயே நரைமுடி பிரச்சனை வந்துவிடுகிறது.இதற்கு காரணம் சத்து குறைபாடே காரணம்.அதுமட்டுமின்றி இந்த கால கட்டத்தின் உணவு முறைகளும் இதற்கு காரணமாக அமைகிறது.இதற்காக அனைவரும் மருத்துவமனைகளை நாடி செல்கின்றனர். அதுமட்டுமின்றி இக்காலத்தில் உபயோக்கிக்கும் ஷாம்பு போன்ற இதர இரசாயன பொருட்களாலும் நரைமுடி வருவதை சிறுவயதிலேயே சந்திக்கின்றனர்.

இதற்கு பாட்டி வைத்தியம் தான் நிரந்தர தீர்வு.மனநெல்லிக்காயை உணவில் அதிக அளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.மூகரட்டை எனப்படும் மூலிகைய பாலுடன் அரைத்து சாப்பிட்டு வர இளம் நரை ஏற்படாது.முடி கருப்பாக மாற கற்றாளை சாறு,நெல்லிக்காய் சாறு,தேங்காய் எண்ணையில் காய்ச்சி தடவி வர வேண்டும்.

நரைமுடி கருப்பாக கையாந்த கரைசாறு,பசு நெய்,தயிர் கலந்து சாப்பிட்டு வர நல்ல பலனைக் காண முடியும்.நெல்லிக்காயை எடுத்து அதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாற்றை சேர்த்து தலையில் தடவி வர இளம் நரை முற்றிலும் குறையும்.அதன்பின் தலைகுளிக்கும் போது அதிக அளவு கெமிக்கல் இல்லாத ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும்.இதை வாரம் இருமுறை செய்ய இளம் நரை குறைவதை பார்க்க முடியும்.

அடுத்ததாக செக்கில் ஆட்டிய எண்ணையை எடுத்துக் கொள்ள வேண்டும்.அதை  அடுப்பில் சூட்டேற்றி  அதனுடன் சிறிதளவு கருவேப்பிலையையும்  சேர்த்து சூடு செய்து தலையில் தேய்த்து வர இளம் நரை முற்றிலும் காணமல் போகிவிடும்.அதிக அளவு சீயக்காயை பயன்படுத்துவதால் முடி நீளமாகவும்,கருமையாகவும் வளரும்.

உடல் உஷ்ணத்தை குறைக்கும் வெந்தய சூப் செய்வது எப்படி?        

0

உடல் உஷ்ணத்தை குறைக்கும் வெந்தய சூப் செய்வது எப்படி?

வெந்தயம் உடல் உஸ்ணத்தைச் சம நிலையில் வைத்திருக்க உதவும். குழந்தைகளுக்கு ஏற்படும் பேதி, சீதபேதி ஆகியவற்றைக் குணமாக்கும்.இரும்பல்,தாகம்,குடல் கோளாறுகள் போன்றவற்றை குணமாக்கும்.அன்றாடம் உணவோடு வெந்தயத்தையும் சேர்த்து வந்தால் உடல் ஆரோக்கியமாகவும், நல்ல கட்டுகொப்புடனும் இருக்கும்.

வெந்தய சூப்    

தேவையான பொருட்கள்:   

புளி.

உப்பு – 2 தேக்கரண்டி.

வெந்தயம்- 1/4 தேக்கரண்டி.

துவரம் பருப்பு- 1 தேக்கரண்டி.

மிளகாய் வற்றல் – 8.

மிளகு – 10.

நெய்- 1 தேக்கரண்டி.

தேங்காய்.

கறிவேப்பிலை.

கொத்தமல்லித்தழை.

தேங்காய் துருவல்.

கடுகு.

வெங்காயம்.

செய்முறை:   

அறை லிட்டர் நீரில், புளியைப் போட்டு கரைத்து அறை மணி நேரம் வைத்திருக்க வேண்டும்.பிறகு இதில் உப்பு போட்டு அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.

வெந்தயம், துவரம் பருப்பு, மிளகாய் வற்றல் 6 மிளகு ஆகியவற்றை நாலெண்ணை விட்டு வறுத்துக் கொண்டு பிறகு தேங்காய் துருவலைச் சேர்த்து அம்மியில் வைத்து வெண்ணெய் போல அரைத்து கொள்ள வேண்டும்.

அரைத்த விழுதை சிறிதளவு நீரில் கரைத்து கொதித்து கொண்டிருக்கும் போது புளி நீரில் கொட்டி நன்றாக கலக்கி விடவும்.கறிவேப்பிலையை தனலில் வாட்டி சூப்பில் போடவும். பத்து கொத்தமல்லித்தழையைக்  கிள்ளிப் போடவும். ஒரு கரண்டியில் நெய்யை விட்டு காய்ந்ததும் , மிளகாய் வற்றல் 2, கடுகு போட்டுத் தாளித்து சூப்பில்  கொட்டவும். சிறிதளவு பெருங்காயத்தை நீரில் கரைத்து தெளிவை மட்டும் கொட்டி இறக்கி சூடாக பரிமாறவும்.