Home Blog Page 5627

ஜெயலலிதாவின் அதிகார்வபூர்வ வாரிசுகள்! – அதிரடி தீர்ப்பளித்த நீதிமன்றம்

சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டினை நினைவில்லமாகவும், அவ்விடத்தில் ஒரு பகுதியை முதலமைச்சர் அலுவலகமாகவும் மாற்ற அரசு சார்பில் கடந்த வருடம் வழக்கு தொடரப்பட்டது.

அவ்வழக்கின் தீர்ப்பு இன்று மே-27 இல் வெளியானது. ஜெயலலிதாவிற்கு சொந்த வாரிசுகள் இல்லாத நிலையில், இரண்டாவது வாரிசுகளாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவையும் , மகன் தீபக்கையும் அதிகாரப்பூர்வாக உயர்நீதிமன்றம் அறிவித்தது.

மேலும் போயஸ் கார்டனில் இருக்கும் ஜெயலலிதாவின் வீட்டை நினைவில்லமாகவும், ஒரு பகுதி முதலமைச்சர் அலுவலகமுமாக மாற்றுவது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அரசிற்கு உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சொத்துகுவிப்பு வழக்கு தீர்ப்பில் ஏற்பட்ட பரபரப்பு உயர்நீதிமன்ற அதிரடி தீர்ப்பினால் இன்றும் நிலவியது.

ஊரடங்கிற்கு பின் திரையரங்கு டிக்கெட் விலை குறைகிறதா?

0

கொரானா நோய்த்தொற்றுக் காரணமாக தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் முதல் மே மாத இறுதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டது‌. இந்த ஊரடங்கினால் பெரும் பின்னடைவை சந்தித்தது தமிழ் திரைப்படத்துறை. பிரபல நடிகர்களின் படங்களையும் வெளியிட முடியாமல் தயாரிப்பாளர்களும் விநியோகிஸ்தர்களும் தவித்தனர்.

இந்நிலையில் OTT தளத்தில் பிரபல நடிகையின் படம் ஒன்று வெளியாக உள்ளது. மற்ற திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் இந்நிலை ஏற்படுமோ என்று பலரால் பேசப்படுகிறது. மேலும் ஊரடங்கு முடிந்தாலும் திரையரங்குகள் இயல்புக்கு நிலைக்கு திரும்புமா என்பது சந்தேகம் தான். ஏனென்றால் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒன்று திரையரங்கம்.

இதனால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் பலர் ஒன்றிணைந்து தங்கள் பொருளாதார பின்னடைவை தடுக்க சில முடிவுகள் எடுத்ததாக கூறப்படுகிறது. அதில் முக்கியமாக தியேட்டர் டிக்கெட் விலை குறைக்கப்படும் என்று தமிழ் திரைத்துறை வட்டாரங்களால் கூறப்படுகிறது.

மக்கள் இருக்கும் பொருளாதார நிலையின் அடிப்படையிலும், திரை அரங்குகள் இயல்பு நிலைக்கு திரும்பவும் இந்த முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டால் மக்கள் அனைவராலும் வரவேற்கப்படும் என பலர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தனியார் பள்ளிகள் ஆன்லைனில் பாடம் எடுக்கலாமா? அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்ட புதிய அறிவிப்பு

0

ஊரடங்கு காலத்தில் தனியார் பள்ளிகள் ஆன்லைனில் பாடம் எடுக்கலாமா? என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கொரோனா வைரசின் பாதிப்பினால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தள்ளி வைக்கபட்டுள்ளது. இந்நிலையில் பள்ளிகள் திறப்பு ஆகஸ்ட் மாதத்தில் மேற்கொள்ள தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இதனால் பள்ளிகளிலும், வகுப்பறைகளிலும் மாணவர்களுக்கிடையே சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டுமென்பதால் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை காலையிலும் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பிற்பகலிலும் வகுப்புகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை பரிசீலனை செய்து வருகிறது.

மேலும், இதற்காக பாடத்திட்டங்களின் அளவை குறைக்கவும் பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகளை எடுக்கக் கூடாது என்றும், மீறி ஆன்லைன் வகுப்புகளை எடுக்கும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார். அமைச்சரின் இந்த திடீர் அறிவிப்பால் தனியார் பள்ளிகள் கடும் அதிர்ச்சியடைந்தன.

இந்நிலையில், அரசின் இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரி தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட அமைச்சர் செங்கோட்டையன், தனியார் பள்ளிகள் ஆன்லைனில் பாடம் எடுக்க தடையில்லை என்று அறிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து, ஜூன் 1 ஆம் தேதி முதல் தனியார் பள்ளிகள் ஆன்லைனில் பாடம் எடுக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஜெயலலிதாவின் இல்லத்தை முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லமாக மாற்ற உயர்நீதிமன்றம் பரிந்துரை

0

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் இல்லத்தை முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லமாக மாற்றலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

முன்னதாக மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் ரூ. 913 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை நிர்வகிப்பதற்காக நிர்வாகியை நியமிக்க வேண்டும் என கோரி அதிமுகவைச் சேர்ந்த புகழேந்தி மற்றும் ஜானகிராமன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

அவர்களை போலவே ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் மற்றும் ஜெ.தீபா உள்ளிட்டோர், ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு தங்களை நிர்வாகிகளாக நியமிக்க வேண்டும் என கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். இதனையடுத்து நடைபெற்ற இந்த வழக்கின் அனைத்து வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பானது ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு அவசர சட்டத்தை அண்மையில் பிறப்பித்தது.

vedha house - updatenews360

இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைக்கபட்டிருந்த ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்கக்கோரிய வழக்கின் தீர்ப்பை இன்று அறிவித்தது. அதில், ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு பதிலாக, முதல்வரின் அதிகாரப்பூர்வ அலுவலகம் மற்றும் இல்லமாக மாற்ற தமிழக அரசுக்கு நீதிபதிகள் பரிந்துரை செய்துள்ளனர்.

மேலும், ஜெயலலிதாவின் சொத்துக்களின் ஒரு பகுதியை அறக்கட்டளை மூலம் நிர்வகிக்கலாம் என்றும் கூறிய நீதிமன்றம், மேலும் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் மற்றும் ஜெ.தீபா ஆகியோர் இந்த சொத்துக்களின் 2 ஆம் நிலை வாரிசுகள் என்றும் தெரிவித்தது.

மேலும் இந்த தீர்ப்பின் மூலமாக ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் முடிவை மறுபரிசீலனை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ள நிலையில், இது தொடர்பாக தமிழக அரசு 8 வாரங்களுக்குள் பதிலளிக்கவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் வகுப்புகள் எடுத்தால் நடவடிக்கை – தமிழக அரசு

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளதால், பள்ளிகள் திறப்பதை மத்திய மாநில அரசுகள் தள்ளி வைத்துள்ளன.

பெரும்பாலும் ஜூன் முதல் வாரத்தில் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டு நடப்பு கல்வியாண்டு துவங்கிவிடும் என்பதால், மாணவர்களின் நேரம் வீணாவதைத் தடுக்கு ஆன்லைன் எனப்படும் இணையதளத்தின் மூலம் கல்வி கற்பிக்கும் முறையை அரசு பரிந்துரையின் பெயரில் பெரும்பாலான பள்ளிகள் தற்போதே துவக்கி விட்டன.

இந்நிலையில் தனியார் பள்ளிகள் ஆன்லைனில் பாடம் எடுக்க கூடாது என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ஊரடங்கு காலத்தில் தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு ஆன்லை எனப்படும் இணையத்தின் வாயிலாக வகுப்புகள் எடுக்கக் கூடாது. அவ்வாறு இணையவழி மூலம் பாடங்கள் எடுக்கும் பள்ளிகள் தமிழக அரசு மீது கடும் நடவடிக்கை எடுக்கும்.

ஊரடங்கின் போது கல்விக் கட்டணத்தை வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீதும் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் பாடத்திட்டத்தைக் குறைப்பது தொடர்பாக ஆய்வு செய்ய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது, பள்ளிகள் திறப்பது, சுழற்சி முறையில் வகுப்புகள் உள்ளிட்டவை குறித்து இந்த குழு தரும் அறிக்கையை பொருத்து முடிவெடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

நம் உடலில் கொரோனா உள்ளதா? பரபரப்பை கிளப்பும் விளக்கம்

கடந்த டிசம்பர் மாத இறுதியிலிருந்து உலகையே அச்சுறுத்தி வருகிறது கொரோனா நோய்த் தொற்ற . இந்நோயிலிருந்து தங்களை பாதுக்காத்துக் கொள்ள உலகநாடுகள் ஒவ்வொன்றும் ஊரடங்கை கடைபிடித்து வருகின்றனர்.

இந்த கொரோனா நோய்த் தொற்றானது மிகப்பெரிய பொருளாதார சரிவை ஏற்படுத்தி வருகிறது. ஆரம்ப கட்டத்தில் குறைந்த அளவிலான கொரோனா பாதிப்பே இருந்த நிலையில் தற்போது பாதிப்படைந்த நாடுகள் பட்டியலில் முதல் பத்து இடங்களுக்குள் உள்ளது.

எனவே இந்தியாவில் ஊரடங்கு மிகத்தீவிரமாக பின்பற்றப்பட்டு வருகிறது. பெரும்பாலானோர் தனிமை படுத்தப்பட்டுள்ளனர். ஊரடங்கு பின்பற்றப்பட்ட அதே நேரத்தில் பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் லட்சக்கணக்கான கொரோனா நோய்த் தொற்று சோதனைக் கருவிகள் பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு அறிகுறி தென்பட்ட அனைவருக்கும் நோய்த் தொற்று சோதனை செய்யப்பட்டன. அதில் பலருக்கு கொரோனா தொற்று உறுதியும் செய்யப்பட்டது.

இந்நிலையில் சமீபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் வெளியிட்ட காணொளி ஒன்றில் கொரோனா நோய்த் தொற்று ரைனோ நோய்த் தொற்று என்ற இனத்தை சார்ந்ததது என்றும், இந்த ரைனோ நோய்த் தொற்று தான் நம்மில் ஏற்படும் ஜலதோஷம், இருமலுக்கு காரணம் எனவும் தெரிவித்துள்ளார். இது எப்பொழுதும் நம்முள் இருக்கும் என்றும், இதனால் நமக்கு பாதிப்பு ஏதும் ஏற்படாது என்றும் தெரிவித்துள்ளவர் மருத்துவ சோதனையின் போது கொரோனா நோய்த் தொற்று உறுதி ஆவதற்கும் இது தான் காரணமென்றும் கூறியுள்ளார்.

மேலும் வீட்டை சுத்தம் செய்யும் போது பல நாட்களுக்கு முன் தொலைத்த பொருள் மறுபடியும் கிடைப்பது போல தான் இந்த கொரோனா நோய்த் தொற்று மருத்துவ சோதனையில் உறுதி செய்யப்பட்டு கொரோனா தனிப்பிரிவில் வைத்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது என விளக்கியுள்ளார்.

இதனால் தான் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து, ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு மக்கள் அனைவரும் பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்படுகிறார்கள் என்றும் அரசை குற்றம் சாட்டியுள்ளார்.

இக்காணொளி பெரும்பாலானோரால் வரவேற்கப்பட்டு சமூக வலைதளங்கலில் பகிரப்பட்டு வருகிறது. அதே சமயம் இந்த கொரோனா நோய்த் தொற்று சாதரணமானது என்றால் மக்கள் ஏன் இறக்கின்றனர்? எனவும் கேள்விகள் எழுப்பப்படுகிறது.

கொரோனா ஹாட் ஸ்பாட்டாக மாறும் அபாயத்தில் ATMகள்?

தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அரசு நோய் பரவலைத் தடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி 15,512 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சென்னையில் மட்டும் 9 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

தமிழகத்தை பொருத்த வரை கோயம்பேடு காயகறி சந்தை கொரோனா பரவலுக்குப் பெரியா ஹாட்ஸ்பாடாக விளங்கியது. இதனைத் தொடர்ந்து வங்கிகளின் அலட்சியப் போக்கால், இந்த வரிசையில் ATM மையங்களும் சேர வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. ங்கிக

குறுகிய இடத்தில் தொற்று பரவும் வாய்ப்புள்ள இடமாக விளங்கும், ATM மையங்கள் கவனிப்பாரின்றி கிடக்கிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முக்கிய பரிவர்த்தனைக்கு மட்டுமே வங்கிகள் செயல்பட்டு வருவதால், தினமும் ஏராளமானோர் ATM மையங்களைப் பயன்படுத்து வருகின்றனர். இதனால், இங்கு தொற்று பரவ வாய்ப்பு அதிகம்.

ஆனால், சம்பந்தப்பட்ட வங்கிகள் தங்களது, ATM மையங்களில் சுகாதார நடவடிக்கை மேற்கொள்வதில்லை. அரசு அறிவுறுத்தல் படி கிருமி நாசினி கொண்டு ATM மையங்களை சுத்தப்படுத்துவதோ, வாடிக்கையாளர்களுக்கு சானிடைசர்களை வைப்பதோ இல்லை. அதே போல் சமூக இடைவெளியை உறுதி செய்வதுமில்லை. இவ்வளவு ஏன் சில வங்களின் ATM மையங்களில் குப்பைகள் கூட கூட்டப்படுவது இல்லை.

இதனால் பண பரிவர்த்தனைக்காக வந்து செல்லும் வாடிக்கையாளரகளின் ஆரோக்கிய பாதுகாப்பு கேள்வி குறியாகியுள்ளது.

தங்கள் ATM மையங்களில் வங்கிகள் சுகாதார நடவடிக்கையை மேற்கொள்ளா விட்டால் அது கொரோனா தொற்று பரவ கூடிய இடமாக மாற அதிக வாய்ப்பிருப்பதால், அரசு அறிவுறுத்திய பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக அமல் படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

சகோதர சகோதரிகளே, நீங்கள் ATM மையங்களை பயன்படுத்தும் போது அங்கு அடிப்படை சுகாதார பாதுகாப்பு செய்யப்பட்டிருந்தால் மட்டும் அதனுள் செல்லுங்கள்.

பள்ளி, கல்லூரிகள் எப்போது திறப்பு?- மத்திய அரசு விளக்கம்

0

கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த மார்ச் மாதம் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன. தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால், 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை தேர்வின்றி அனைவரும் தேர்ச்சிபெற்றதாக தமிழக அரசு அறிவித்தது.

வரும் ஜுன் 15ம் தேதி பத்தாம் வகுப்பு பொது தேர்வுகளை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில் தேர்வை நடத்துவதற்கு கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. இதனை தொடர்ந்து அடுத்த கல்வி ஆண்டான 2020 – 21ல் பள்ளிகளை திறப்பது குறித்து முடிவு எடுக்க, கல்வி அதிகாரிகள் அடங்கிய ஆலோசனை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு பள்ளிகளை திறப்பது குறித்து முடிவெடுக்கவும், பாடங்களை தொழில்நுட்ப ரீதியாக நடத்தும் முறைகளை கண்டறியவும் அமைக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தில் மீண்டும் எப்போது பள்ளிகளை திறந்தால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன, 10வது மற்றும் 11-ம் வகுப்பு தேர்வுகளை முடிப்பது என்பது குறித்து சென்னை தலைமைசெயலகத்தில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று முக்கிய ஆலோசனை நடத்தினார்.

சமூக இடைவெளியை கடைபிடிக்க சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்தவும், காலை, மதியம் என இரண்டு வேளைகளில் வகுப்புகளை பிரித்து நடத்தவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன் படி 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த ஆலோசிக்கப்பட்டுள்ளது. 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்புகளுக்கு செப்டம்பர் மாதத்தில் வகுப்புகள் தொடங்கலாம் என்ற தகவல் வெளியானது.

இந்நிலையில் தனது டிவிட்டர் பக்கத்தில் இது குறித்து விளக்கமளித்துள்ள உள்துறை அமைச்சகம், இது வரை மத்திய அரசு எந்த மாநிலத்துக்கும் பள்ளி, கல்லூரிகள் திறக்க அனுமதியளிக்கவில்லை என்றும். நடப்பு கல்வியாண்டில் எப்போது பள்ளி, கல்லூரிகளை திறப்பது என்பதை பற்றியும் முடிவு செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளது.

#FactCheck
Claim: MHA permits all States to open schools.

Fact: No such decision taken by MHA. All Educational institutions are still prohibited to open, throughout the country.#FakeNewsAlert#COVID19#IndiaFightsCoronavirus pic.twitter.com/mSWfIDWwNs— Spokesperson, Ministry of Home Affairs (@PIBHomeAffairs) May 26, 2020

நடிகர் விஜய்யின் அடுத்த மூன்று படங்களுக்கான இயக்குனர்கள் யார்?

0

விஜய்யின் அடுத்து மூன்று படங்களுக்கு இயக்குனர்கள் யார் என்பது பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

தளபதி விஜயின் அடுத்த மூன்று படங்களில் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பு நிறுவனம் என்ன என்பது குறித்த தகவல்கள் தற்போது தெரிய வந்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய்.தனது 64 வது படமான மாஸ்டர் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார்.

இப்படம் வெளியாக இருந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக வெளியாகும் தேதி தள்ளி வைக்கப்பட்டது.

இந்த படத்தை தொடர்ந்து தனது 66 வது படத்தை முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாகவும் மேலும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

அதன் பின்னர் விஜய் மெர்சல் படத்தை தயாரித்த தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இன்னொரு படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்தை வெற்றி இயக்குனர்களில் ஒருவராக வலம் வரும் மகிழ்திருமேனி இயக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதுமட்டுமல்லாமல் தளபதி 67 படத்தை மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்க எக்ஸ்பி பிலிம் கிரேட்டர்ஸ் மற்றும் 7 ஸ்கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் எனவும் தகவல் வெளி வந்துள்ளன.

இந்திய மற்றும் சீன எல்லையில் போருக்கான பதற்றம்

0

லடாக் எல்லையில் சீனா – இந்தியா இடையே போர்கான சூழல் உள்ள நிலையில் எல்லையில் சாலை பணிகளை தொடர இந்தியா முடிவு செய்துள்ளது.

இந்தியா – சீனா எல்லைப்பகுதிகளான அருணாச்சல பிரதேசம் மற்றும் லடாக் மீது அடிக்கடி ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு வருகிறது சீனா. கடந்த ஆண்டு லடாக் யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டபோது சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. கிழக்கு லடாக்கின் பங்காங் சோ ஏரிப்பகுதி அருகே இந்தியா முக்கியமான சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. கல்வான் பள்ளத்தாக்கிலும் சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

இதற்கு சீனா கடும் எதிர்ப்பை தெரிவித்த நிலையில், கடந்த 5ம் தேதி சீனா இராணுவத்திற்கும், இந்திய இராணுவத்திற்கும் இடையே தாக்குதல் நடந்தது

எல்லைப்பகுதியில் கற்களை வீசி அவர்கள் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். பின்னர் 9ம் தேதி சிக்கிம் பகுதியிலும் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் எழுந்தது. அதை தொடர்ந்து இரு நாடுகளும் எல்லையில் தங்கள் இராணுவ பலத்தை அதிகப்படுத்தியுள்ளது.

இந்த பிரச்சினைக்கு காரணமான சாலை பணிகளை முழுவதுமாக முடிக்காமல் விடுவதில்லை என இந்தியா தீர்க்கமாக இருக்கிறது. லடாக், சிக்கிம், அருணாச்சல் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களின் எல்லைப்பகுதிகளில் நடைபெறும் கட்டமைப்பு பணிகளில் எந்த தொய்வும் இன்றி பணிகளை துரிதமாக மேற்கொள்ள ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளதாக அரசு வட்டாரங்களில் பேசி கொள்ளப்படுகின்றன.

இடையே இன்று பிரதமர் மோடி அவர்கள் அவசரகால ஆலோசனையை நடத்தவுள்ளார்.

இதற்கு இடையில் எல்லையில் படைகளை குவித்து போருக்கு தயாராக இருக்கும்படி சீன அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது