Home Blog Page 5629

ஊரடங்கு சமயத்தில் 9 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை!

0

கொரோனா பாதிப்பினால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சமயத்தில் திருச்சி மாவட்டத்தில் 9 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தலால் கொலை செய்துள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கிருஷ்ணசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் ராஜாங்கம். 9 வயதாகும் இவருடைய மகள் வீ.பூசாரிபட்டியில் உள்ள அரசு பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் அந்த சிறுமி அவரது வீட்டின் அருகே உள்ள ஒரு மல்லிகை பூந்தோட்டத்தில் தலையில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். சிறுமி இவ்வாறு அடிப்பட்டு கிடப்பதை பக்கத்து வீட்டு 14 வயது சிறுவன் பார்த்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் கூறியுள்ளான்.

Girl murdered by Young Boy in Trichy-News4 Tamil Online Tamil News
Girl murdered by Young Boy in Trichy-News4 Tamil Online Tamil News

இதனையடுத்து சிறுமியை மீட்டு உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த மணப்பாறை காவல் துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தியதில் அங்கு ரத்தக்கறை படிந்த நிலையில் கிடந்த ஒரு உடையை கைப்பற்றியுள்ளனர். மேலும் இது பற்றி விசாரித்த போது சிறுமியின் வீட்டிற்கு அருகிலுள்ள வீட்டில் வசிக்கும் 14 வயது சிறுவனின் சட்டை தான் இது என்பது தெரிய வந்துள்ளது.

பின்னர் இது குறித்து சிறுவனிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் சிறுமியை கொலை செய்ததை ஒப்பு கொண்டுள்ளான். விளையாடுவதற்காக சிறுமியை அருகிலுள்ள தோப்பிற்கு அழைத்து சென்ற அந்த சிறுவன் செல்போனில் ஆபாச படத்தை காட்டி பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளான்.

இதை சற்றும் எதிர்பார்க்க அந்த சிறுமி இதை அம்மாகிட்ட சொல்லிவிடுவேன் என்று அழுதிருக்கிறார். இதனால் பயந்த சிறுவன் செய்த தவறை மறைக்க சிறுமியை கீழே கிடந்த கல்லை எடுத்து அடித்துள்ளார். இதனால் படுகாயம் அடைந்த சிறுமி ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்துள்ளார்.

Girl murdered by Young Boy in Trichy-News4 Tamil Online Tamil News
Girl murdered by Young Boy in Trichy-News4 Tamil Online Tamil News

பின்னர் அந்த சிறுவன தான் அணிந்திருந்த சட்டையை கழற்றி சிறுமியின் மீது போட்டுவிட்டு  வீட்டுக்கு சென்றுள்ளான். அதன் பிறகு தான் எதுவும் தெரியாதது போல் தோட்டத்தில் சிறுமி இரத்த வெள்ளத்தில் கிடப்பதாக  அக்கம் பக்கமுள்ளவர்களிடம் கூறி நாடகம் ஆடினேன் என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இதையடுத்து காவல் துறையினர் அந்த சிறுவனை கைது செய்தனர். 9 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தலை தடுத்ததால் 14 வயது சிறுவன் அடித்து கொலை செய்துவிட்டு எதுவுமே தெரியாதது போல நாடகம் ஆடி மக்களையும் காவல் துறையினரையும் ஏமாற்றிய சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இதனையடுத்து அந்த சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து உள்ளனர்.

ஊரக வேலை நாட்களை 200 ஆக உயர்த்த வேண்டும் என மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை

0

வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் ஊரக வேலை நாட்களை 200 ஆக உயர்த்த வேண்டும் என மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது.

தமிழ்நாடு தொடர்பாக வெளியாகியிருக்கும் இரு புள்ளி விவரங்கள், இனி வரும் நாட்களில் தமிழகத்தில் வேலைவாய்ப்பு நிலைமை எப்படி இருக்கும் என்பதை படம் பிடித்துக் காட்டியிருக்கின்றன. அந்த புள்ளி விவரங்கள் காட்டும் சூழலை புரிந்து கொண்டு, மக்களின் வாழ்வாதாரத்தை அரசு உறுதி செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டில் கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் உருவாக்கப்பட்ட புதிய வேலைவாய்ப்புகள் தொடர்பான புள்ளிவிவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் சேர்க்கப்பட்ட புதிய பணியாளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் புதிய வேலைவாய்ப்புகள் கணக்கிடப்பட்டுள்ளன. அதன்படி பிப்ரவரி மாதத்தில் மொத்தம் ஒரு லட்சத்து 32,499 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால், மார்ச் மாதத்தில் 58,948 வேலைவாய்ப்புகள் மட்டும் தான் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மார்ச் மாதத்தில் மட்டும் புதிய வேலைவாய்ப்புகள் 56% குறைந்திருப்பதை இந்த புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. ஏப்ரல் மாதத்திலும், மே மாதத்தில் இன்று வரையிலும் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான ஊரடங்கு கடுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதாலும், தொழில் நிறுவனங்கள் அதிகபட்சமாக 33% ஊழியர்களுடன் இயங்கி வருவதாலும் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருக்க வாய்ப்புகள் இல்லை. அடுத்த சில மாதங்களிலும் அமைப்பு சார்ந்த துறைகளில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படாது என்பதே எதார்த்தம்.

மற்றொரு புறம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலை பெறுவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கிறது. ஊரக வேலைத் திட்டத்தின் கீழ் 100% பணியாளர்கள் பணியாற்ற அனுமதிக்கப்பட்ட 24 மாவட்டங்களில், 10 மாவட்டங்களில் நடப்பு மே மாதத்தில் பணிக்கு வந்தவர்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டு மே மாதத்தில் பணிக்கு வந்தவர்களின் எண்ணிக்கையை விட 4 மடங்கு வரை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதத்தில் சராசரியாக பணிக்கு வந்தவர்களை விட இப்போது திருவாரூர் மாவட்டத்தில் 187 விழுக்காட்டினரும், திருநெல்வேலி – தென்காசி மாவட்டத்தில் 159 விழுக்காட்டினரும், மதுரை மாவட்டத்தில் 156 விழுக்காட்டினரும் கூடுதலாக பணிக்கு வந்துள்ளனர்.

தஞ்சாவூர், நாகப்பட்டினம், இராமநாதபுரம், சிவகங்கை, திருப்பூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களிலும் அதிக எண்ணிக்கையிலானவர்கள் பணிக்கு வந்துள்ளனர். இந்த மாவட்டங்களையெல்லாம் விஞ்சும் வகையில் விழுப்புரம் – கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த ஆண்டு பணிக்கு வந்ததைப் போன்று 400% மக்கள் இந்த மாதத்தில் பணிக்கு வந்திருக்கின்றனர். இது கடந்த காலங்களில் இல்லாத உயர்வாகும்.

மேற்கண்ட இரு புள்ளிவிவரங்களும் சொல்லும் உண்மை என்னவெனில் அமைப்பு சார்ந்த தொழில்களில் வேலைவாய்ப்பு முற்றிலுமாக குறைந்து விட்டது. அடுத்த சில மாதங்களுக்கு அங்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக வாய்ப்புகள் இல்லை. அமைப்புசாராத துறைகள் எப்போது முழுவீச்சில் செயல்படத் தொடங்கும்; அங்கு எப்போது வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்பதும் தெரியவில்லை. இப்போதைய நிலையில், வருவாய் இல்லாத மக்களுக்கு ஒற்றை வாழ்வாதாரமாக உருவெடுத்திருப்பது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தான். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பணியாற்றி, வேலை இழந்த மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்குத் திரும்பி ஊரக வேலைத் திட்டத்தின் கீழ் பணியாற்றி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் பணியாற்றுவோரின் எண்ணிக்கை 4 மடங்கு அதிகரிக்க இதுவே காரணமாகும்.

மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டம் இப்போது தான் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது என்பதால், இனிவரும் நாட்களில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல குடும்பங்கள் இரு வேளையாவது பசியாறுவதற்கு இந்தத் திட்டம் தான் காரணமாகும். அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்பு சாராத வேலைவாய்ப்பு சந்தை புத்துயிர் பெறுவதற்கு இன்னும் பல வாரங்கள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் பல லட்சம் மக்களின் வாழ்வாதாரம், இத்திட்டமாகவே இருக்கும்.

ஆனால், இத்திட்டத்திற்காக தமிழகத்திற்கு நடப்பாண்டில் இதுவரை ரூ.1436.81 கோடி மட்டுமே நிதி ஒதுக்கியுள்ள நிலையில், அதைக்கொண்டு இத்திட்டத்தின்படியான வேலைவாய்ப்புத் தேவைகளை நிறைவேற்ற முடியாது. இத்திட்டத்தின்படி சராசரியாக ஒரு குடும்பத்திற்கு மாதம் 6 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப் படுகிறது; தினமும் ரூ.256 ஊதியம் வழங்கப்பட வேண்டிய நிலையில் சாராசரியாக ரூ.200 மட்டுமே வழங்கப்படுகிறது. அவ்வாறு இருந்தும் கூட, இத்திட்டத்தின் கீழ் அதிகம் பேர் வேலை கோரும் போது, மத்திய அரசு ஒதுக்கியுள்ள நிதியைக் கொண்டு வேலை வழங்குவது சாத்தியமில்லை என்பதே உண்மை.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் வறுமையை ஒழிப்பதற்காக வேலை வழங்கும் திட்டம் மட்டுமல்ல; கிராமப்புற பொருளாதாரத்திற்கு புத்துயிரூட்டி, இந்திய பொருளாதாரத்தை வளர்ச்சி அடையச் செய்ய வைக்கும் திட்டமாகும். இத்திட்டத்திற்காக செலவிடப்படும் தொகை உடனடியாக நுகர்வோர் சந்தைக்குச் சென்று பணப்புழக்கத்தை அதிகரிக்கச் செய்யும். ஆகவே இத்திட்டத்திற்கு எவ்வளவு அதிக நிதி ஒதுக்கப்படுகிறதோ, அவ்வளவு அதிகமாக இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சியடையும் வாய்ப்புள்ளது.

தேசிய ஊரக வேலை திட்டத்திற்கு நிதிநிலை அறிக்கையில், ரூ.61 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், கடந்த வாரம் கூடுதலாக ரூ.40,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அத்துடன் கூடுதலாக இன்னொரு ரூ.40,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டால், இத்திட்டத்தின் கீழ் வேலை வழங்கப்படும் நாட்களின் எண்ணிக்கையை 200 ஆக உயர்த்த முடியும். அதன் மூலம் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் மக்களுக்கு இத்திட்டத்தின் கீழ் வேலை வழங்க முடியும். அது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் வழி வகுக்கும். எனவே, தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலை வழங்கப்படும் நாட்களின் எண்ணிக்கையை 200 நாட்களாக மத்திய அரசு உயர்த்த வேண்டும்; இக்கோரிக்கையை தமிழக அரசும் வலியுறுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆகஸ்டில் பள்ளிகளை திறக்க தமிழக அரசு திட்டம்! – முக்கிய விதிமுறைகள் குறித்து முடிவு

கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த மார்ச் மாதம் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன. தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால், 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை தேர்வின்றி அனைவரும் தேர்ச்சிபெற்றதாக தமிழக அரசு அறிவித்தது.

வரும் ஜுன் 15ம் தேதி பத்தாம் வகுப்பு பொது தேர்வுகளை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில் தேர்வை நடத்துவதற்கு கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது

இதனை தொடர்ந்து அடுத்த கல்வி ஆண்டான 2020 – 21ல் பள்ளிகளை திறப்பது குறித்து முடிவு எடுக்க, கல்வி அதிகாரிகள் அடங்கிய ஆலோசனை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு பள்ளிகளை திறப்பது குறித்து முடிவெடுக்கவும், பாடங்களை தொழில்நுட்ப ரீதியாக நடத்தும் முறைகளை கண்டறியவும் அமைக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தில் மீண்டும் எப்போது பள்ளிகளை திறந்தால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன, 10வது மற்றும் 11-ம் வகுப்பு தேர்வுகளை முடிப்பது என்பது குறித்து சென்னை தலைமைசெயலகத்தில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று முக்கிய ஆலோசனை நடத்தினார்.

சமூக இடைவெளியை கடைபிடிக்க சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்தவும், காலை, மதியம் என இரண்டு வேளைகளில் வகுப்புகளை பிரித்து நடத்தவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதன் படி 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த ஆலோசிக்கப்பட்டுள்ளது.

1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்புகளுக்கு செப்டம்பர் மாதத்தில் வகுப்புகள் தொடங்கலாம் என்று கூறப்படுகிறது.

உளவு பார்க்க அனுப்பப்பட்டு இந்திய எல்லையில் சிக்கிய புறா

0

இந்திய காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினரும், பயங்கரவாதிகள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதற்கு இந்திய ராணுவத்தினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் காஷ்மீரின் கதுவா மாவட்டத்தின் ஹிரா நகர் பகுதியில் உள்ள மன்யாரி எனும் கிராமத்துக்குள் புறா ஒன்று வந்து விழுந்துள்ளது. அதனைப் பார்த்து சந்தேகமடைந்த கிராமத்தினர் அதனை உடனடியாக காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். அது பாகிஸ்தானிலிருந்து அது பறந்து வந்ததாக அந்த கிராம மக்கள் தெரிவித்தனர்.

அந்த புறாவின் காலில் சில எண்கள் குறியீடு அடங்கிய மோதிரம் ஒன்று இருந்ததாகவும், அதனை கைப்பற்றி அதில் எழுதப்பட்டிருக்கும் சங்கேத குறீயிடுகளாக இருக்கும் ரகசிய தகவல் என்னவென்று பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்துவருவதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் இந்த புறா உளவு பார்க்கும் பயிற்சியை பாகிஸ்தானில் பெற்றிருக்கலாம் என்றும் அவர்கள் கூறினர்.

இந்தியாவுக்குள் ஊடுருவ ஏராளமான பயங்கரவாதிகள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தயாராக இருப்பதாக ஏற்கனவே உளவுத்துறை எச்சரித்து வரும் நிலையில், தற்போது ரகசிய குறியீட்டை சுமந்துகொண்டு பாகிஸ்தானிலிருந்து உளவு புறா ஒன்று இந்திய எல்லைக்குள் புகுந்திருப்பது சந்தேகத்தை கிளப்பி உள்ளது.

அந்த ரகசியத் தகவல் இந்தியாவில் பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகளுக்கு அனுப்பப்பட்டிருக்கலாம் என்ற கண்ணோட்டத்தில் பார்க்கப்படுகிறது.

ராகவா லாரன்ஸ் நடத்தும் விடுதியில் கொரோனா தொற்று

0

பிரபல நடன இயக்குனர், இயக்குனர், நடிகர் என பன்முகம் கொண்டவர் ராகவா லாரன்ஸ்.

சமூக சேவை மீது பெரும் ஆர்வம் கொண்டவர் சொந்தமாக அறக்கட்டளை நிறுவி குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்டோருக்கு விடுது நடத்தி வருகிறார். தனது சொந்த செலவில் ஏழை குழந்தைகளுக்கு மருத்து உதவி மற்றும் இருதய அறுவை சிகிச்சைகளை செய்துள்ளவர் பல்வேறு நலத் திட்டங்களை முன்னெடுத்து வருகிறார்.

சென்னை வெள்ளம் முதல் தற்போது கொரோனா பாதிப்பு வரை பல பாதிப்புகளுக்கு தாமாக முன்வந்து கோடிக் கணக்கில் அரசுக்கு நிவாரண உதவியளித்துள்ளார்.

இவர் நடத்தி வரும் விடுதியில் அங்கு பணிபுரியும் பணி பெண்கள் உட்பட 20 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து பாதிப்படைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மற்றவர்கள் தனியார் கல்லூரியில் தனிமைப்பப்டுத்தப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நிபந்தனைகளுடன் ஆட்டோ, டாக்சிகளுக்கு அனுமதியளித்த தமிழக அரசு

கொரோனா ஊரடங்கு அமல் படுத்தப்பட்டதிலிருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆட்டோ மற்றும் டாக்சிகளை இயக்க தடை செய்யப்பட்டிருந்தது.

தற்போது 4வது ஊரடங்கு அமலில்லிருக்கும் நிலையில் மத்திய அரசு ஒப்புதலுடன் மாநில அரசுகள் தொடர்ந்து சில தளர்வுகளை அறிவித்து வருகிறது.

கடந்த சில நாட்களுக்கும் சென்னை மற்றும் பிற கொரோனா கட்டுபடுத்தப்பட்ட பகுதிகளை தவிர மற்ற இடங்களில் நிபந்தனைகளுடன் ஆட்டோக்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டிருந்து.

இந்நிலையில் தற்போது பயணிகள் ரயிகள் மற்றும் விமானங்கள் இயக்கம் துவங்கியுள்ள நிலையில், பயணிகள் ரயில் மற்றும் விமான நிலையங்களில் பொது போக்குவரத்து வசதி இல்லாமல் அவதி படுவதால் ரயில் நிலையம் மற்றும் விமான நிலையங்களுக்கு பயணியரை ஏற்றிச் செல்ல ஆட்டோ மற்றும் டாக்சிகளுக்கு அனுமதி அளித்து அரசானை வெளியிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து கட்டுப்படுத்த பட்ட பகுதிகளிலிருந்தும் விமான நிலையம் மற்றும் ரயில் நிலையங்களுக்கு பயணியரை ஏற்றிச் செல்ல ஆட்டோக்கள், டாக்சிகள், சைக்கிள் ரிக் ஷாக்கள் செல்ல தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

திருப்பதி கோவில் சொத்து ஏலம் – அதிரடியாக களமிறங்கிய ஆந்திர அரசு

0

திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு பக்தர்கள் பணம், தங்கம், இடம் என பெருவாரியாக நன்கொடை வழங்குவது வழக்கம். அப்படி தேவஸ்தானத்துக்குப் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய அசையா சொத்துகளில், பயன்படாத, பராமரிக்க இயலாத சொத்துகளை மட்டுமே ஏலம் விடப்போவதாக, நிர்வாகம் அறிவித்தது.

இதற்கு உலகெங்கிலும் உள்ள பக்தர்கள் கடும் கண்டனத்தைத் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் இந்த தீர்மானத்தை மீண்டும் பரிசீலிக்க வேண்டும். அப்போது வரை ஏலத்தை நிறுத்திவைக்க வேண்டும் என்று ஆந்திர பிரதேச அரசாங்கம், திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் அசையா சொத்துக்கள் விற்பனை குறித்து மறுபரிசீலனை செய்து வருவதாக தெரிவித்துள்ளது.

திருமலை திருப்பதி பக்தர்களின் எதிர்ப்பலைகளை மனதில் கொண்டு திருமலை திருப்பதி தேவஸ்தானம் அசையா சொத்துக்களை விற்கும் எண்ணத்தை மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினருடனும் கலந்துரையாடி தீர்மானம் எடுக்க வேண்டும் என்றும் ஆந்திரப் பிரதேச அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

இந்த சொத்துக்களை ஆலயங்களின் நிர்மாணத்திற்கும் தர்ம பிரச்சாரத்திற்கும் இதர மத காரியங்களுக்கும் உபயோகிக்கலாமா என்பதை தீர்மானிப்பதற்கு மத பெரியவர்களையும், இதுகுறித்து தீர்மானிக்கக்கூடிய அறிஞர்களையும் பக்தர்களின் குழுக்களையும் பிற பல்வேறு முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாட வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளது.

இந்த விஷயம் ஒரு முடிவுக்கு வரும் வரை திருமலை திருப்பதி தேவஸ்தானம் 50 அசையா சொத்துக்களை விற்கும் எண்ணத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் அதற்கு தொடர்பான திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி தேவையான செயல்களை உடனடியாக தொடங்க வேண்டும் என்றும் அது குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பயன்படுத்த தடை – உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு

0

கொரோனா நோய் தொற்றுக்கு அறிகுறிகள் அடிப்படையிலேயே தற்போது வரை சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனாவுக்கான மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி உலக அளவில் நடைபெற்று வரும் நிலையில் மலேரியா நோயை கட்டுப்படுத்தும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து கொரோனாவை கட்டுப்படுத்துவதாகத் தகவல் வெளியானது.

இதனையடுத்து இந்தியாவிலிருந்து ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்தது. அமெரிக்க அதிபர் டிரம்ப் தங்கள் நாட்டுக்கு தேவையான அளவு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை இந்தியா தரா விட்டால், இந்தியாவுடனான உறவுகளை அமெரிக்கா பரிசீலனை செய்ய வேண்டியிருக்கும் என மிரட்டும் தொனியில் அறிவிக்க, இந்தியா அதற்கு அடி பணிந்தது.

இந்தியாவில் மருத்துவரின் பரிந்துரை இருந்தால் மட்டுமே ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை வழங்க வேண்டும் என மருந்து கடைகளுக்கு அறிவிப்புகள் அனுப்பபட்டன.

இந்நிலையில் இறப்பு விகிதம் அதிகம் ஏற்படுத்துவதால், கோரோனா சிகிச்சைக்காக ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பயன்படுத்துவதை உலக சுகாதார அமைப்பு (WHO) தடை செய்துள்ளது.

இது குறித்து உலக சுகாதார அமைப்பை சேர்ந்த டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் “பாதுகாப்பு குழு தரவு பாதுகாப்பு கண்காணிப்பு வாரியத்தால் மதிப்பாய்வு செய்யப்படும்போது, ​​ஒற்றுமை சோதனைக்குள் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் கையின் தற்காலிக இடைநிறுத்தத்தை நிர்வாக குழு செயல்படுத்தியுள்ளது. சோதனையின் மற்ற மருந்துகள் தொடர்கின்றன” என்றும் டெட்ரோஸ் தெரிவித்துள்ளார்.

ஒரு பெரிய ஆய்வின்படி, ஆண்டிவிமலரியல் மருந்து ஹைட்ராக்ஸி குளோரோகுயின் உடன் கொரோனாவுக்கு சிகிச்சை ஆண்டிபயாடிக் அஜித்ரோமைசினுடன் அல்லது இல்லாமல், COVID-19 நோயாளிகளுக்கு எந்த நன்மையும் அளிக்காது. அண்மையில் தி லான்செட் இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆராய்ச்சி, COVID-19 நோயாளிகளிடமிருந்து தரவுகளை பகுப்பாய்வு செய்தது, அவர்கள் குளோரோகுயின் அல்லது அதன் அனலாக் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் ஆகியவற்றைப் பயன்படுத்தி பெற்றுள்ளனர்.

இது அஜித்ரோமைசின் அல்லது கிளாரித்ரோமைசின் மற்றும் 81,000 கட்டுப்பாடுகள் கொண்ட நுண்ணுயிர் எதிர்ப்பிகளுடன் எடுக்கப்பட்ட தகவல் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது உள்ளவர்கள் அதிக அளவில் கொரோனாவுக்கு பலியாகிறார்கள் – எச்சரிக்கும் சுகாதார துறை அமைச்சர்

0

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது எந்த அறிகுறியும் இல்லாமல் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. மேலும் கொரோனா தொற்றுக்கு பலியானவர்களில் 84% பேருக்கு ஏற்கனவே உடல்நிலையில் பாதிப்புள்ளதாக சுகாதார துறை அமைச்சர் விஜய் பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கொரோனா நோய்பரவலை தடுக்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா நோய் தொற்று தமிழகத்தில் முதலில் தோன்றிய போது அறிகுறிகள் அடிப்படையில் நோயாளிகள் கண்டறியப்பட்டார்கள். ஆனால் தற்போதோ எந்த அறிகுறியுமில்லாமல் கொரோணா தொற்று பரவி வருகிறது.

இது தொடர்பாக அவர் “தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில், 88 சதவீதம் பேருக்கு எவ்வித அறிகுறியும் இல்லாமல் தொற்று ஏற்பட்டுள்ளது. அனுமதிக்கப்படுவோரில், வயதானோர், நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட, நாள்பட்ட நோய் பாதிப்புள்ள, 84 சதவீதம் பேர் உயிரிழக்கின்றனர். இதைத் தவிர்க்க அவர்கள், உரிய நேரத்தில், மாத்திரைகள் சாப்பிட்டு, தனிமைப்படுத்திக் கொண்டு, கவனமாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி – பிரிட்டன் நிறுவனத்துடன் இனைந்து மருந்து தயாரிக்கும் இந்திய நிறுவனம்

0

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை கண்டுபிடிப்பதற்கான முயற்சி உலகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தியாவுக்கு கொரோனா மருந்து தயாரிக்க வாய்ப்பு கிடைத்தால் உடனடியாக அனுமதி வழங்கப்படும் என மத்திய உயிரி தொழில்நுட்பத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய உயிரி தொழில்நுட்பத் துறை சார்பில் ரேணு ஸ்வரூப் “கொரோனா நோய்த் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி தயாரிக்க, பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. தற்போதைய நிலையில், எட்டு வகையான தடுப்பூசிகள், பல்வேறு கட்ட பரிசோதனை நிலையில் உள்ளன.

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்றவை, தடுப்பூசி தயாரிப்பதற்காக, மருந்து நிறுவனங்களுடன் தொடர்ந்து பேச்சு நடந்து வருகின்றன. கோடிக்கணக்கான பணத்தையும் செலவிட்டு வருகின்றன.கொரோனா நோய்த் தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை தயாரிக்கும் முனைப்பில், பல்வேறு இந்திய நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன. சமீபத்தில், மகாராஷ்டிர மாநிலம் புனேயைச் சேர்ந்த, ‘செரம்’ என்ற மருந்து தயாரிப்பு நிறுவனம், பிரிட்டன் மருந்து தயாரிப்பு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

இவ்வாறு பல இந்திய நிறுவனங்கள், தடுப்பூசியை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் பெறும் முயற்சியில் உள்ளன.இந்த நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் கிடைத்து, அந்த தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டால், அதை வரவேற்க உயிரி தொழில்நுட்பத் துறை தயாராக உள்ளது. மருத்துவப் பரிசோதனை வசதிகள் மற்றும் நிர்வாக ஒப்புதல்கள் அளிப்பதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன” என தெரிவித்துள்ளார்.