Home Blog Page 5630

ஒரு குளு குளு செய்தி! – இந்த 19 மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மழை இருக்காம்

கோடை வெயில் தமிழகத்தை வாட்டி வரும் நிலையில், இன்று தமிழத்தை சேர்ந்த 19 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “தமிழகத்தில், வெப்பச்சலனம் காரணமாக, அடுத்த, 48 மணி நேரத்தில், கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருப்பத்துார், திருவண்ணாமலை, தேனி, தென்காசி மாவட்டங்களில் மழை பெய்யும்.

மேலும், விருதுநகர், ராமநாதபுரம், துாத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும், ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. அதில், விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, துாத்துக்குடி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கன மழை பெய்யலாம்.

கரூர், ஈரோடு, வேலுார், ராணிப்பேட்டை, மதுரை, திருச்சி மற்றும் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில், அதிகபட்ச வெப்ப நிலை, 42 டிகிரி செல்ஷியஸ் வரை உயரும். இதனால், அடுத்த இரண்டு நாட்களுக்கு அனல் காற்று வீசும். எனவே, இந்த மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள், பகல், 11:30 முதல், பிற்பகல், 3:30 வரை வெளியில் செல்ல வேண்டாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மே, 4ல் துவங்கிய அக்னி நட்சத்திரம், நாளை முடிவுக்கு வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில், நேற்று அதிகபட்சமாக, கரூர் மாவட்டம் பரமத்தி, வேலுார், திருச்சி, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஆகிய இடங்களில், 42 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது. சேலத்தில், 41;மதுரையில், 40 டிகிரிசெல்ஷியசாக வெப்ப நிலை இருந்தது.சென்னை நுங்கம்பாக்கத்தில், 38; மீனம்பாக்கத்தில், 39 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது” என தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று – புதிய உச்சத்தை தொட்ட தமிழகம்

தமிழகத்தில் கொரோனா பரவ துவங்கிய சில நாட்கள் மிகவும் குறைந்த அளவிலான எண்ணிக்கையிலேயே பாதிப்புகள் இருந்தன. ஆனால் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது

நேற்று தமிழகத்தில் புதிய உச்சமாக ஒரே நாளில் 805 பேர் கொரோனால் பாதிக்கப்பட்டுள்ளனர், 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17,082 ஆகவும், பலி எண்ணிக்கை 118 ஆகவும் அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது “தமிழகத்தில் இன்று 805 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 491 ஆண்கள், 314 பெண்கள். மொத்த பாதிப்பு 17082 ஆக அதிகரித்துள்ளது. இன்று மேலும் 7 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 118 ஆக உயர்ந்துள்ளது.

இதில், 5 பேர் அரசு மருத்துவமனையிலும், 2 பேர் தனியார் மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இன்று மொத்தம் 407 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 8,731 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் குணமடைந்தோர் விகிதம் 51.11 சதவீதமாகவும், உயிரிழப்பு விகிதம் 0.69 சதவீதமாகவும் உள்ளது.

இந்தியாவிலேயே அதிகபட்ச மாதிரிகள் சோதனையிட்ட மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இதுவரை 4,21,480 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. தமிழகத்திற்குள் இ-பாஸ் பெற்றுக்கொண்டு வெளிமாநிலத்திலிருந்து வருபவர்களால் கொரோனா எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இது புது சவாலாக இருக்கிறது. அந்தவகையில் இன்று மட்டும் 93 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. வெளிமாநிலத்திலிருந்து தமிழகம் வந்தவர்களில் இதுவரை 942 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 726 பேரும், குஜராத்திலிருந்து வந்தவர்கள் 26 பேரும் உள்ளனர்.

கொரோனா பாதித்தவர்களில் 88 சதவீதத்தினருக்கு எந்த அறிகுறியும் இல்லை. விமானத்தின் மூலம் தமிழகம் வரும் பயணிகளில் அறிகுறி இருப்பவர்களை உடனடியாக பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் கையில் தனிமைப்படுத்தலுக்கான அச்சிடப்பட்டு, 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்த அறிவுறுத்தப்படுகின்றனர். தமிழகத்திலிருந்து வெளிமாநிலம் செல்பவர்களும் பரிசோதனை செய்யப்பட்டே அனுப்பப்படுகிறார்கள்” என்று கூறினார்.

திமுக தலைவராக தலித்தை நியமிப்பீர்களா? திமுக கூட்டணியில் விரிசலை உண்டாக்கும் ஹச்.ராஜா

0

சமீபத்தில் தமிழகத்தில் நடந்து முடிந்த விக்கிரவாண்டி இடைந்தேர்தலின் போது பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் திமுகவிற்கு எதிராக எழுப்பிய முரசொலி அலுவலக மூலப்பத்திர விவகாரம் முதல் தற்போது தயாநிதிமாறன் தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய விவகாரம் வரை பாஜக தீவிரமாக திமுகவை எதிர்த்து வருகிறது.

இந்நிலையில் திமுக அமைப்பு செயலாளர் எஸ்.ஆர்.பாரதி தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதற்காக கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஆர்.எஸ்.பாரதியின் கைதை பாஜகவின் தேசிய செயலாளர் ஹச்.ராஜா வரவேற்பதாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.மேலும் அடுத்த கைது தயாநிதிமாறன் என்ற வகையில் சூசகமாக தெரிவித்திருந்தார்.

இவ்வாறு தாழ்த்தப்பட்ட மக்களுக்காக குரல் கொடுப்பது போல திமுகவையும் அதன் கூட்டணி கட்சி தலைவரான திருமாவளவனையும் பாஜகவின் தேசிய செயலாளர் ஹச்.ராஜா கடுமையாக விமர்சித்து வருகிறார்.இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாஜகவின் மாநில தலைவராக முருகன் நியமிக்கப்பட்டது குறித்து விளக்கம் அளிக்குமாறு திருமாவளவன் ட்விட்டரில் கேள்வி எழுப்பியிருந்தார்.

இது தொடர்பாக பதிவிட்ட ட்விட்டர் பதிவில், “சகோதரர் முருகன் அவர்களை பாஜகவின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக நியமித்தது, அவர் தலித் சமூகத்தைச் சார்ந்தவர் என்பதற்காகவா? அல்லது கட்சியை வழிநடத்தும் தலைமைக்குரிய தகுதி படைத்தவர் என்பதற்காகவா? இதுபற்றி பாஜக விளக்கம் தருமா?,” என்று அவர் கேட்டிருந்தார்.

இதனையடுத்து அதற்கு பதிலளித்த பாஜக தேசிய செயலாளர் ஹச்.ராஜா, “பாஜக திறமையைப் பார்த்தே பொறுப்பு தருகிறது. ஏற்கனவே பங்காரு லக்ஷ்மண் அவர்களை தேசிய தலைவராக நியமித்தோம். தமிழகத்தில் Dr.கிருபாநிதியை அடுத்து சகோதரர் முருகன் நியமிக்கப் பட்டுள்ளார். ஆனால் கூட்டணி கட்சி என்ற முறையில் திமுக தலைவராக ஒரு தலித்தை நியமிக்க வற்புறுத்துவீர்களா?,” என தொல் திருமாவளவனுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது.

கொரோனா பாதிப்பில் உலக அளவில் முன்னேறும் இந்தியா! வெளியான அதிர்ச்சி தகவல்

0

கொரோனா வைரஸ் பாதிப்பினால் இந்தியாவில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் கொரோனா பாதிப்பானது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமேயுள்ளது.

சீனாவின் உகான் நகரில்  முதன் முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் பரவி அனைத்து நாடுகளுக்கும் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.உலகம் முழுவதும் சுமார்  196  நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ், மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கையை முடக்கியுள்ளது. 

முதன் முதலாக கண்டறியப்பட்ட சீனாவில் இந்த கொரோனா வைரஸ் நோய்த்தொற்று ஓரளவு கட்டுப்படுத்தப்பட்ட போதிலும் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட வல்லரசு நாடுகளை கொரோனா வைரஸ் கடுமையாக பாதித்துள்ளது. 

தற்போது வரையில் அமெரிக்காவில்  மட்டும் 16,86,436 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கையானது  ஒருலட்சத்தை நெருங்கியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து 4,51,702- பேர் குணமடைந்துள்ளனர். அமெரிக்காவை போலவே, பிரேசில், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளும் கொரோனா வைரசால் அதிகம் பாதித்த நாடுகளின் வரிசையில் அடுத்தடுத்த இடம் பெற்றுள்ளன.

இந்நிலையில் இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பானது சராசரியாக 6 ஆயிரத்திற்கும் மேல் பதிவாகி வருகிறது. இதனையடுத்து உலக அளவில் கொரோனா அதிகம் பாதித்த முதல் 10 நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம் பிடித்துள்ளது. 

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது  1.38 லட்சமாக உள்ளது. மேலும் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 4021 ஆக உயர்ந்துள்ளது. 

உலக அளவில் கொரோனா வைரசால் அதிகம் பாதிப்படைந்த முதல் 10 நாடுகள்:
அமெரிக்கா – 1,686,436 பிரேசில்- 365,213 ரஷியா- 344,481 ஸ்பெயின்- 282,852 பிரிட்டன்- 259,559 இத்தாலி- 229,858 பிரான்ஸ்- 182,584 ஜெர்மனி-180,328 துருக்கி-156,827 இந்தியா-138,845.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மருத்துவமனையில் அனுமதி! அதிர்ச்சியில் அதிமுகவினர்! வெளியானது முக்கிய தகவல்

0

திடீரென்று ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் உள்ள எம்.ஜி.எம் தனியார் மருத்துவமனையில் இன்று காலை சேர்க்கப்பட்டுள்ளார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், ஓபிஎஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்துள்ள நிலையில் அவர் முழு உடல் பரிசோதனைக்காக தங்களது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என எம்ஜிஎம் மருத்துவமனை நிர்வாகம் தகவல் வெளியிட்டு உள்ளது.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மருத்துவமனையில் அனுமதி! அதிர்ச்சியில் அதிமுகவினர்! வெளியானது முக்கிய தகவல்
640

இன்று காலை திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக சென்னை சூளைமேடு பகுதியில் இருக்கும் நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்ஜிஎம் தனியார் மருத்துவமனையில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அனுமதிக்கப்பட்டது அதிமுகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து இன்று மதியம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள துணை முதல்வரை சந்தித்து நலம் விசாரித்துள்ளார். இதனால் துணை முதல்வர் ஓபிஎஸ்க்கு என்ன ஆனது என பல்வேறு விதமான கேள்விகள் எழுந்தன.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மருத்துவமனையில் அனுமதி! அதிர்ச்சியில் அதிமுகவினர்! வெளியானது முக்கிய தகவல்

இந்த நிலையில் துணை முதல்வர் அனுமதிக்கப்பட்டுள்ள எம்ஜிஎம் மருத்துவமனை நிர்வாகம் ஓபிஎஸ் உடல்நலம் குறித்து முக்கிய தகவலை வெளியிட்டு உள்ளது.

அதில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம முழு உடல் பரிசோதனை செய்யவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். மேலும் அவரை மருத்துவர்கள் குழு பரிசோதனை வருவதாகவும், அவர் நலமாக இருக்கிறார் என்றும் தெரிவித்துள்ளனர்.

வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் காப்பீட்டுக்கு மத்திய அரசு அறிவித்த சலுகை

0

வாகன ஓட்டுநர் உரிமம், காப்பீடு போன்றவைகளுக்கு வரும் ஜூலை 31 ஆம் தேதி வரையில் கால அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது.

கொரோனா வைரஸ் பதிப்பால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள இந்த ஊரடங்கு வரும் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 17 ஆம் தேதியிலிருந்து வரும் 31 ம் தேதி வரை சில தளர்வுகளுடன் இந்த ஊரடங்கு உத்தரவு செயல்பாட்டில் உள்ளது.

தற்போது நடைமுறையிலுள்ள இந்த ஊரடங்கால் வாகன ஓட்டுநர் உரிமம் புதுப்பிப்பு, பொது போக்குவரத்து வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணத்தை கட்டுவது உள்ளிட்டவைகளுக்கு சிரமம் ஏற்பட்டது. மேலும் இந்த ஊரடங்கு காலத்தில் ஆர்டிஓ அலுவலகத்திற்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் இது போன்ற பணிகளை செய்ய முடியாமல் உள்ளனர்.

இந்நிலையில் இவர்களுக்கு எல்லாம் ஆறுதல் அளிக்கும் விதமாக மத்திய அரசு தற்போது ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின் படி, இன்சுரன்ஸ் மற்றும் லைசன்ஸ் உள்ளிட்ட அனைத்து விதமான மோட்டார் வாகன சம்பந்தப்பட்ட விவகாரங்கள் வரும் ஜூன் 30 ஆம் தேதி வரையில் செல்லுபடியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

தற்போது அவற்றை ஜூலை 31 வரையில் நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து எந்த வித அபராத கட்டணம் இன்றி நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என்றும் இது குறித்து மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஸ்டாலின் முன் ஜாமீன் எடுத்து கொள்வது நல்லது – H ராஜா

0

பாஜகவை சேர்ந்த H ராஜா சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு பிரபலமானவர். சமீக காலமாக தமிழகத்தில் தங்கள் கட்சியின் ஒரே எதிரியாக பாவிக்கப்படும் திமுக பற்றி தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்.

நேற்று காரைக்குடியில் செய்யார்களுக்கு அளித்த பேட்டியில் திமுகவை தமிழகத்தை பிடித்த கொரோனா வைரஸ் என விமர்சித்துள்ளவர் பேசியதாவது :_

“திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன் ஜாமீன் எடுத்து வைத்துக்கொண்டால் நல்லது. ஏனென்றால் முரசொலி அலுவலகம் மூலப்பத்திரம் பிரச்சனை உள்ளது. ஸ்டாலினுக்கு பட்டியல் சமூகத்தின் மீது நவீன தீண்டாமை உள்ளது

திமுக தமிழகத்தை பிடித்த கொரோனா வைரஸ். இதை முழுமையாக ஒழிக்காமல் தமிழகத்தில் எந்த சமுதாயமும் மரியாதையாக நடமாட முடியாது. திமுகவினர் அவ்வளவு மோசமான தீயசக்திகள். பட்டியல் சமூகத்தைப் பற்றி R.S.பாரதி பேசியதாக நான் நினைக்கவில்லை. திமுக, திக அமைப்பு, நீதிக்கட்சியின் DNAவிலேயே பட்டியல் சமூகத்தின் விரோதப் போக்கு இருக்கின்றது.

தயாநிதி மாறன் R.S.பாரதியை குண்டாசில் கைது செய்ய வேண்டும். திமுகவின் ஒன்றிணைவோம் வா ஒரு பப்ளிசிட்டி தான். பிரதமரைப் பற்றி அவதூறு பேசினால் அவர்களுக்குப் புரியும் பாஷையில் அதே மாதிரி திருப்பி அடிப்போம். ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். விரைவில் நல்ல முடிவு விரைவில் எடுப்பார்கள்” என கூறியுள்ளார்.

தமிழகத்தில் ஊரடங்கை மேலும் நீட்டிக்க முடிவு?

கொரோனா நோய் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாத இறுதியில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கு, நான்காவது முறையாக வரும் மே 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதற்கு முந்தைய ஊரடங்கை போல் அல்லாமல் கொரோனா நோய் தொற்று அதிகமுள்ள இடங்களைத் தவிர பிற இடங்களில் பல ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் வரும் 31ம் தேதியுடன் ஊரடங்கு முடிவுக்கு வருவதையடுத்து கொரோனா சிகிச்சையை மேம்படுத்தவும், கொரோனா பரவலை தடுக்க அரசுக்கு ஆலோசனைகளை வழங்கவும் அமைகப்படுள்ள சிறப்பு மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் நாளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கூட்டத்தில் சுகாதார துறை அமைச்சர் விஜய பாஸ்கர், முக்கிய அமைச்சர்கள் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர், கொரோனா சிறப்பு அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என தெரிகிறது.

நாள் தோறும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிக்க இந்த குழு பரிந்துரைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த குழுவுடனான ஆலோசனைக்கு பின்னர் முதல்வரிடமிருந்து மேலும் சில முக்கிய அறிவிப்புகள் வெளிவர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

கொரோனா பாதிப்பு – இந்தியாவிடம் கடன் கேட்கும் இலங்கை

0

கொரோனாவால் உலகம் முழுவதுமுள்ள நாடுகள் பொருளாதார சிக்கலை சந்தித்து வருகிறது. இதனால் நிதி நெருக்கடியிலிருக்கும் நாடுகள் உலக வங்கி மற்றும் பிற நாடுகளிடம் கடனுதவி கேட்டு வருகிறது.

இந்தியாவின் அண்டை நாடான இலங்கை கொரோனா பாதிப்பால் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பை சமாளிக்கும் வகையில், 8,360 கோடி ரூபாய் கடன் வசதி அளிக்க வேண்டும் என இந்தியாவிடம் கடனுதவி கேட்டு கோரிக்கை வைத்துள்ளது.

கொரோனா நோய் தொற்று மற்றும் ஊரடங்கு பிரச்னைகளை சமாளிப்பது குறித்து இலங்கை அதிபர், கோத்தபய ராஜபக்சேவுடன், பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் தொலைபேசி மூலம் பேசினார். அந்த உரையாடலின் போது பல்வேறு பிரச்னைகள் பற்றி இரு தலைவர்களும் பேசினர். அப்போது ஊரடங்கினால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கலை சமாளிக்க தேவையான உதவிகளை இந்தியா செய்வதாக, மோடி உறுதி அளித்தார்.

அவர்கள் உரையாடலின் போது இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, ‘கரன்சி ஸ்வாப்’ எனப்படும் செலாவணி பரிமாற்ற முறையின் கீழ் இந்திய ரூபாயின் மதிப்பில் 8360 கோடி ரூபாய் கடனுதவி வழங்க வேண்டும் என, கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து இலங்கை உயரதிகாரிகள் கூறுகையில் ‘SAARC’ எனப்படும் தெற்காசிய நாடுகளுக்கான ஒத்துழைப்பு அமைப்பின் மூலம், இந்திய ரூபாய் மதிப்பில் 3,040 கோடி ரூபாய் கடன் வழங்கும்படி இந்தியாவிடம் இலங்கை ஏற்கனவே கேட்டுள்ளது.

தற்போது, அதைத் தவிர கூடுதலாக, 8,360 கோடி கடன் வழங்க வேண்டும் என, அவர் கேட்டுள்ளார். பொருளாதார சிக்கல்களால், நாட்டின் ரொக்க இருப்பு குறைந்து வருவதை சமாளிக்க இந்த உதவியை செய்யுமபடி இலங்கை அதிபர் கோத்தபய கேட்டுள்ளார்.

இதைத் தவிர, இலங்கையில் நிறுத்தப்பட்ட துறைமுகப் பணிகளை இந்தியா விரைவில் துவக்க வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளையும் அவர் முன்வைத்தார்” என்று தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் வழங்கப்படும் இலவச மின்சார திட்டத்தில் எந்த மாற்றமும் இருக்காது-அமைச்சர் பி.தங்கமணி

0

தமிழக விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சார திட்டத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்றும்,தொடர்ந்து வழங்கப்படும். இது குறித்து தேவையில்லாமல் பதற்றம் வேண்டாம் என்று தமிழக மின்சார வாரியத்துறை அமைச்சர் பி.தங்கமணி கூறியுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் ஆரம்பிக்கப்பட்ட கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தை தமிழக மின்சார வாரியத்துறை அமைச்சர் பி.தங்கமணி திறந்து வைத்தார். மாவட்ட ஆட்சியர் மெகராஜ், ஈரோடு மண்டல தலைமைப்பொறியாளர் சந்திரசேகரன் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சி முடிந்த பின்னர் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அமைச்சர் பி.தங்கமணி இது குறித்து கூறியதாவது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் புதிய மின் இணைப்பு பெறுவோருக்கு மீட்டர் பொருத்தப்படும் என்று வெளியானது தவறான தகவல். தமிழகத்தை பொறுத்தவரை முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். கொண்டு வந்த இலவச மின்சார திட்டம் முழுமையாக தொடர வேண்டும் என்பதுதான் முதலமைச்சரின் எண்ணமும் ஆகும்.

இந்நிலையில் தான் புதிய மின்சார திட்டம் அறிவிப்பு வந்தபோது கூட அது குறித்து பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். இதனையடுத்து தமிழகத்தில் உள்ள இலவச மின்சார திட்டம் எந்த காரணத்தை கொண்டும் ரத்து செய்ய கூடாது என்றும் முதலமைச்சர் அறிவித்து உள்ளார்.

தட்கல் முறையில் மின் இணைப்பு பெறுவோர்களுக்கு மட்டுமே ரீடிங் எடுப்பதற்காக மீட்டர் பொருத்தப்பட்டது. தற்போது அதற்கும் மீட்டர் பொருத்த வேண்டாம் என்று முதல்வர் உத்தரவிட்டு உள்ளார்.

மேலும் நிலத்தடி நீர் அதிக ஆழத்திற்கு சென்றதால் அதிக குதிரைத்திறன் உடைய மின் மோட்டார்களை பயன்படுத்தும் விவசாயிகள் இதற்காக விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம். இதற்கான கால அவகாசம் வரும் ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்து யாரும் பதற்றப்பட வேண்டியதில்லை. மீட்டரும் வைக்கப்படாது. தமிழகத்தில் வழங்கும் இலவச மின்சார திட்டத்திலும் எந்த பாகுபாடும் இருக்காது என்றும் அவர் அப்போது தெரிவித்துள்ளார்.