Home Blog Page 5633

அரசு பேருந்தை திருடி சொந்த மாநிலம் செல்ல முயன்ற வாலிபர்!

0

கொரோனா ஊரடங்கால் மாநிலங்களிடையே போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதையடுத்து, தங்கள் சொந்த ஊர் செல்ல பல்வேறு யுக்திகளை மக்கள் கையாண்டு வருகின்றனர்.

இதில் கர்நாடாகவை சேர்ந்து ஓர் இளைஞர் செய்தது தான் உச்சபட்சம்.

ர்நாடக மாநிலம் பெங்களூர் விஜயபுராவை சேர்ந்த முஜாமி கான் என்ற இளைஞர் ஆந்திர மாநிலம் அனந்தபூருக்கு ஊரடங்கு அமல் படுத்தப்படுவதற்க்கு முன் வந்துள்ளார்.

நீண்ட நாட்களாக ஊரடங்கினால் ஊருக்கு செல்ல முடியாமல் தவித்தவர் அனந்தப்பூர் மாவட்டம் தர்மவரத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தை திருடி அதை ஓட்டி கொண்டு தனது சொந்த ஊருக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

அனந்தபுரத்தில் உள்ள கியா கார் தொழிற்சாலை அருகே பேருந்தை மடக்கிய சிக்கப்பள்ளி காவல்துறையினர் அந்த இளைஞரை கைது செய்துள்ளனர். விசாரனையின் போது
ஊரடங்கு அமல் படுத்துவதற்க்கு முன்பு அனந்தப்புரத்திற்கு உறவினர் வீட்டிற்கு வந்ததாகவும், ஊரடங்கு காரணமாக ஊருக்கு செல்ல முடியாமல் தவித்தாகவும் கூறியவன், அதனால் அனந்தபுரத்தில் இருந்து தர்மவரம் வரை நடந்து வந்ததாகவும் அதன் பின்னர் பனிமலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தை எடுத்து அதில் பெங்களூரு செல்ல முயன்றதாகவும் தெரிவித்துள்ளான்.

RS பாரதிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கிய நீதிபதி

0

திமுக அமைப்புச் செயலாளர் இன்று ஆர்.எஸ் பாரதி அதிகாலை அவரது வீட்டில் சென்னை மத்திய குற்றப் பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

கடந்த பிப்ரவரி மாதம் தேனாம்பேட்டையில் நடைபெற்ற திமுக இளைஞரணி கூட்டத்தில் பேசிய RS.பாரதி, “தலித் மக்கள் கூட இன்று நீதிபதியாக முடியும் என்பது திராவிட இயக்கங்கள் போட்ட பிச்சை” என்றார். மேலும் பத்திரிக்கையாளர்களையும் அவர் கடுமையாக விமர்சித்தார்.

அவரின் அந்த பேச்சுக்கு அப்போதே கடும் கண்டனங்கள் கிளம்பியது. மேலும் அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.

இந்நிலையில் இன்று அதிகாலையில் திடீரென RS பாரதி வீட்டிற்குச் சென்ற மத்திய குற்றப் பிரிவு காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.

பின்னர் அவரிடம் விசாரணை மேற்கொண்ட மத்திய குற்றப் பிரிவு காவல்துறை அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ய அழைத்துச் சென்றனர்.

அதனைத் தொடர்ந்து சென்னை எழும்பூர் நீதிமன்ற நீதிபதி செல்வகுமார் வீட்டிற்கு அழைத்துச் சென்று ஆஜர்படுத்தினர். நீதிபதியின் வீட்டில் திமுகவின் வழக்கறிஞர்கள் ஆர்.எஸ்.பாரதியை பிணையில் விடுவிக்க வேண்டும் என்று வாதாடி வந்தனர்.

இதனையடுத்து ஜூன் 1ம் தேதி வரை அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் RS பாரதியின் கைதை கண்டித்து திமுகவினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். RS பாரதியை விடுவிக்க வலியுறுத்தி அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

T20 உலக கோப்பை – ஐசிசி முக்கிய முடிவு

0

கொரோனா நோய்த் தொற்று காரணமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் உட்பட பல விளையாட்டு போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும் 20 ஓவர் உலக கோப்பை இந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆஸிதிரேலியாவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தொடர்த்து உலகம் முழுவதும் கொரோனா பரவி வருவதால் திட்டமிட்டப்படி உலக கோப்பை போட்டிகள் நடைபெறுமா என்று விவாதம் எழுந்தது.

கொரோனா நோய் தொற்று காரணமாக ஆஸ்திரேலியாவின் எல்லைகள் செப்டம்பர் மாதம் வரை மூட அந்த நாட்டின் அரசு உத்தரவிட்டுள்ளது. உள்நாட்டு பயணிகளுக்கு இரண்டு வாரம் தனிமைப்படுத்து கொள்ள வேண்டும் என்ற சட்டவிதிமுறை நடைமுறை படுத்தப்பட்டிருப்பதால் ஆஸ்திரேலியாவில் 20 ஓவர் உலகக் கோப்பை தொடரை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது

இந்நிலையில் ஐசிசியை சேர்ந்த நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் காணொலி காட்சி மூலமாக இந்த வாரம் நடைபெற உள்ளது. இதில் இந்த போட்டிகள் குறித்து விவாதிக்கப்படுகின்றன.

அதில் இந்த 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியை அடுத்த வருடம் பிப்பரவரி அல்லது மார்ச் மாதத்தில் நடத்த ஆலோசிக்கப்பட உள்ளது. மேலும் ஐசிசியின் அடுத்த தலைவர் மற்றும் தேர்தல் நடத்தப்டும் தேதி உள்ளிட்டவற்றை பற்றியும் முடிவெடுக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

நல்ல செய்தி மக்களே – இந்த மருந்து கொரோனா வராமல் தடுக்கிறதாம்!

கொரோனா நோய் பரவலைத் தடுக்க பல முயற்சிகளை அரசு முன்னெடுத்து வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன் Arsenicum Album 30C எனும் ஹோமியோபதி மருந்தை ஆயுஷ் அமைச்சகம் நோய் எதிர்ப்பு சக்திக்கு பயன்படுத்தலாம் என பரிந்துரைக்க, தமிழக அரசு அந்த மருந்தை பொதுமக்கள் பயன்படுத்தலாம் என அறிவித்திருந்தது.

இந்நிலையில் இந்த மருந்தை பயன்படுத்துபவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், Arsenicum Album 30C நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சிறந்த முறையில் செயல்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து ஹோமியோபதி மருத்துவர் மோனலிஸா ஜான் கூறுகையில் “உலக அளவில் ஹோமியோபதி மருத்துவம் இரண்டாம் இடத்தில் உள்ளது. நோய்த் தொற்று பாதிப்பு அதிகம் இருக்கும் இடங்களில் ஆய்வு செய்யும்போது Arsenicum Album 30C மருந்தை உட்கொண்டவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்படவில்லை என ஆதாரப்பூர்வமாக மருத்துவ ஆய்வுகள் உள்ளது. எனவே கட்டாயம் இந்த மருந்தை எடுத்துக் கொள்ளலாம்” என்றார்.

இது குறித்து ஹோமியோபதி மருத்துவக் கவுன்சில் தலைவர் ஞானசம்பந்தம் ” Arsenicum Album 30C, மத்திய மாநில அரசால் அங்கீகாரம் பெற்ற மருந்து என்பதால் யார் வேண்டுமானாலும் இந்த மருந்தை உட்கொள்ளலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எந்த பயமும் இல்லாமல் எடுத்துக்கொள்ளலாம். மூன்று நாட்களுக்கு தினமும் 4 மாத்திரை சாப்பிட்டால் எந்த பக்கவிளைவும் இல்லாமல் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்” என தெரிவித்துள்ளார்.

மாஸ்க் அணியாமல் வாகனம் ஓட்டினாலோ, தெருவில் சுற்றினாலோ அபராதம் – காவல்துறை ஆணையர் அதிரடி உத்தரவு!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்ட போது பொதுமக்கள் நிலைமையை உணர்ந்து முக கவசம் அணிந்து வெளியே சென்று வந்தனர்.

தற்போது ஊரடங்கில் தளர்வு ஏற்பட்ட பின்னர், கொரோனா தீவிரத்தை உணராத மக்கள் முக கவசத்தை அணியாமல் வெளியில் சுற்றி வருகின்றனர்.
குறிப்பாக வாகன ஓட்டிகள் பலர் இருசக்கர வாகனங்களில் முககவசம் அணியாமல் சுற்றி திரிந்து வருகின்றனர்.

ஏற்கெனவே சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவின் படி முககவசம் அணியாமல் சாலைகளில் இரு சக்கர வாகனத்தில் செல்வோரிடம் 100 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் இன்று முதல் சென்னையில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் முககவசம் அணியாமல் சென்றால் 500 ரூபாயும், நடந்து சென்றால் 100 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என சென்னை காவல்துறை ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வரக் கூடாது எனவும் தேவையில்லாமல் வெளியே வருவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இருசக்கர வாகனத்தில் முக கவசம் அணியாமல் வந்தால் 500 ரூபாய் , நடந்து வந்தால் 100 ரூபாய் அபராதமாக இன்று முதல் வசூலிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.மேலும் கொரோனா பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் தீவிரமாக பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என பொது மக்களிடம் கேட்டு கொண்டார்.

திருவள்ளூரை சேர்ந்த மது பிரியர்களுக்கு நற்செய்தி!

மூன்றாம் கட்ட ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்த தமிழக அரசு மே 7ம் தேதியிலிருந்து மதுக்கடைகள் திறப்பதாக தமிழக அரசு அறிவித்தது. இதற்க்கு உயர்நீதி மன்றம் தடை விதிக்க, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது தமிழக அரசு.

அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், உயர்நீதி மன்றம் விதித்த தடையை நீக்கியது. இதையடுத்து, தமிழகத்தில் கடந்த 16ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திற்கபட்டன.

அதிக அளவிலான கொரோனா பரவல் காரணமாக சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டும் மதுக்கடைகள் திறக்கப்படவில்லை.

இந்நிலையில் இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 76 டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் காஞ்சிபுரம் வடக்கு பகுதியில் 147 மதுபானக் கடைகள் உள்ள நிலையில், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்திற்குட்பட்ட 14 டாஸ்மாக் கடைகள் இன்று முதல் திறக்கப்படுகிறது

முக கவசம் மற்றும் குடையுடன் வருபவர்களுக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்படும் என்றும், சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு அனுமதி இல்லை எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

உத்தரவை மீறி மது வாங்க வருபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காவல்துறை அவசர உதவி எண் தற்காலிகமாக மாற்றம்

0

காவல்துறையினரை தொடர்பு கொள்ள உதவும் அவசர உதவி எண் தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பிஎஸ்என்எல் தொலைதொடர்பு நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக காவல்துறை உதவி என்னான 100 மற்றும் 112 தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அந்த எண்கள் ஆனது 044-46100-100 மற்றும் 71200100 ஆகும். பொதுமக்கள் இந்த எண்களை தொடர்பு கொண்டு அவசர உதவிகளை பெறலாம் என்று காவல்துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் மீண்டும் இந்திய மற்றும் பாகிஸ்தான் ராணுவப் படைகள் இடையே தாக்குதல்

0

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச், ரஜௌரி மாவட்ட எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினா் போா் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி துப்பாக்கியால் சுட்டும், ராக்கெட் குண்டுகளை வீசியும் நேற்று தாக்குதல் நடத்தினா்.

இது தொடா்பாக ராணுவ செய்தித் தொடா்பாளா் கூறியதாவது:

இன்று காலை 7.20 மணியளவில் ரஜௌரி மாவட்டதின் நௌஷேரா பகுதியைக் குறி வைத்து பாகிஸ்தான் ராணுவத்தினா் திடீரென தாக்குதல் நடத்தினா். இதில் துப்பாக்கியால் சுட்டும், ராக்கெட் குண்டுகளை வீசியும் அவா்கள் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டனா்.

இதனையடுத்து இந்தியத் தரப்பிலிருந்தும் பாகிஸ்தான் எல்லையைக் குறிவைத்து அவர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தப்பட்டன. இரு தரப்புக்கும் இடையே நடைபெற்ற இந்த தாக்குதலில் சேதம், உயிரிழப்பு ஏற்பட்டதா என்பது குறித்து தகவல் இன்னும் கிடைக்கவில்லை.

மேலும் இது தவிர பூஞ்ச் மாவட்டத்தின் கிருஷ்ணா காட்டி பகுதியிலும் இன்று அதிகாலை 3.30 மணியளவில் சிறிய ரக குண்டுகள் மற்றும் ஆயுதங்களைப் பயன்படுத்தி பாகிஸ்தான் ராணுவத்தினா் தாக்குதலில் ஈடுபட்டனா்.

இதற்கும் இந்திய இராணுவத்தினர் தரப்பில் உரிய பதிலடி தரப்பட்டது. அண்மைக் காலமாக பாகிஸ்தான் ராணுவத்தினா் தொடர்ந்து எல்லையில் தாக்குதல் நடத்தி வருகின்றனா் என்றும் இந்திய ராணுவம் சார்பாக தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில் இந்திய ராணுவத்தினா் தான் தங்கள் பகுதியில் அத்துமீறி தாக்குதல் நடத்துவதாகக் கூறி இஸ்லாமாபாதில் உள்ள இந்திய தூதரக அதிகாரியை அழைத்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளன.

பாகிஸ்தான் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்

0

நேற்று பாகிஸ்தானில் லாகூரில் இருந்து 99 பயணிகளுடன் கராச்சி வந்த பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் ஏர்பஸ் ஏ 320 பயணிகள் விபத்துக்குள்ளானது. இந்த விமானம் கராச்சி ஜின்னா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் போது, விமான நிலையத்துக்கு அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், விமானம் முழுவதும் எரிந்து சாம்பலானது . இதில் பயணம் செய்த 99 பயணிகள் 8 ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் இந்த விபத்தில் பலியானார்கள்.இந்த தகவலை கராச்சி மேயர் உறுதிப் படுத்தினார்.

இந்நிலையில், பாகிஸ்தானில் ஏற்பட்ட இந்த விமான விபத்து காரணமாக உயிர் இழப்பு ஏற்பட்டது மிகுந்த வருத்தம் அளிப்பதாகவும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாகவும், மேலும் விமான விபத்தில் காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய வேண்டுகிறேன் என்றும் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

யாரையோ திருப்தி படுத்த என் மீது கைது நடவடிக்கை என ஆர் எஸ் பாரதி விமர்சனம்

0

யாரையோ திருப்தி படுத்த என் மீது கைது நடவடிக்கை என ஆர் எஸ் பாரதி தன்னுடைய கைது குறித்து விமர்சித்துள்ளார்

சென்னையில் இன்று காலை திடீரென்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை காவல் துறையினர் கைது செய்தனர். சென்னை ஆலந்தூரில் வசித்து வந்த நிலையில் அவரை வீட்டில் வைத்து அதிகாலையில் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

நீதிபதிகள் மற்றும் பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக திமுக அமைப்பு செயலாளர் மீது ஆதித்தமிழர் மக்கள் கட்சித் தலைவர் கல்யான் குமார் என்பவர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.அந்த புகாருக்கு நடவடிக்கை எடுக்கும் வகையில் ஆர்.எஸ்.பாரதியை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். 

இந்த நிலையில் காவல் துறையினரின் இந்த கைது நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்த ஆர்.எஸ் பாரதி, கொரோனா தடுப்பு பொருட்கள் வாங்கியதில் முறைகேடு என கூறியதால் தான் என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  மேலும் சென்னையில் பிப்ரவரி 15 ஆம் தேதி நான் பேசிய கருத்து திரிக்கப்பட்டு சமூக ஊடகங்களில் வெளியானது.  

கொரோனா ஊரடங்கு நேரத்தில் தனிமைப்படுத்திக் கொண்டிருந்த நிலையில் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சீப்பை மறைத்து வைத்து விட்டால் கல்யாணம் நிற்காது. கொரோனா விவகார ஊழல் பற்றி புகாரளிக்கப்படும். யாரையோ திருப்திப்படுத்த என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் இந்த கைது விவகாரம் குறித்து விமர்சித்துள்ளார்.