கொரோனாவிலிருந்து விடுபடும் மற்றொரு மாவட்டம்!

0
225

கடந்த மார்ச் மாத இறுதியில் சென்னையில் பரவ துவங்கிய கொரோனா தொற்று, வேகமாக தமிழகம் முழுவதும் பரவியது.தமிழக அரசு, மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறையுடன் இனைந்து கொரோனாவை கட்டுப்படுத்த தீவிரமாகப் போராடி வருகிறது.

தமிழகத்தில் சென்னை கொரோனா தொற்றில் முதலிடம் வகுத்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக தமிழக மாவட்டங்கள் மெல்ல கொரோனாவின் பிடியிலிருந்து விடுபட்டு வருகிறது.

கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், நீலகிரி, திருச்சி, அரியலூர், இராமநாதபுரம், கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் முழுவதுமாக கொரோனா தொற்றிலிருந்து விடுபட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த 11-ம் தேதிக்கு பின்னர் தருமபுரி மாவட்டத்தில் புதிதாக யாருக்கும் கரோனா தொற்று பாதிப்பு ஏற்படவில்லை. இருப்பினும், இறுதியாக கடந்த 11ம் தேதி பெண் காவலருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

அந்த நாளில் இருந்து 14 நாட்கள் வரை யாருக்கும் தொற்று ஏற்படவில்லை என்ற நிலை நீடித்தால் அதன் பின்னர் தருமபுரி மாவட்டம் பச்சை மண்டலமாக அறிவிக்கப்படும்.

Previous articleசமையல் எண்ணெய் சில்லறை விற்பனைக்கு தடை விதித்த தமிழக அரசு – அதிர்ச்சியில் வியாபாரிகள்
Next articleகோவில்கள் திறப்பு – அறநிலை துறை விளக்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here