Home Blog Page 5641

சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க காரணம் என்ன? மருத்துவர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் கொரோனா பரவல் ஓரளவுக்கு கட்டுக்குள் வந்த நிலையில் திடீரென்று சென்னையில் நாளுக்கு நாள் பாதிப்பு அதிகமாகி கொண்டே வருகிறது. இந்நிலையில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க காரணம் என்ன என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் ஆதாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் “சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தவறியது ஏன்? மக்கள் அச்சத்தைப் போக்க வேண்டும்!” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

சென்னையில் புதிய கொரோனா வைரஸ் தொற்றுகளின் எண்ணிக்கை கடந்த 4 நாட்களாக குறைந்து வந்த நிலையில், நேற்று கணிசமாக அதிகரித்து 482 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது சென்னையில் ஒரே நாளில் பதிவான நான்காவது அதிகபட்ச அளவு ஆகும். கொரோனா பரவல் நாளுக்கு நாள் குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிகரிக்கத் தொடங்கியிருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் ஒரு கட்டத்தில் வெகு சிறப்பாக கட்டுப்படுத்தப்பட்டு வந்தது. கடந்த ஏப்ரல் 27-ஆம் தேதி நிலவரப்படி தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையை விட, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. அன்றைய நாளில் மொத்தம் 1937 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், 1,101 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருந்தனர். அப்போது குணமடைந்தோர் விகிதம் இந்தியாவிலேயே, கேரளத்துக்கு அடுத்தப்படியாக, 56.84% என்ற இரண்டாவது அதிகபட்ச அளவாக இருந்தது. அடுத்த சில நாட்களில் தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து, இந்தியாவில் கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு தமிழ்நாடு முன்னேறியிருக்கிறது. தமிழகத்தில் குணமடைந்தோர் விகிதம் 38% என்ற அளவுக்கு சரிந்திருக்கிறது. இது தேசிய சராசரியை விட சற்று குறைவு ஆகும்.

தமிழகத்தில் கொரோனா தொற்று உச்சத்தை அடைந்ததற்கு சென்னை கோயம்பேடு சந்தையிலிருந்து பரவிய நோய்த் தொற்று தான் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், கோயம்பேடு சந்தையால் பாதிக்கப்பட்ட திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கொரோனா பரவல் வேகமாக கட்டுப்படுத்தப்பட்டு விட்ட நிலையில், சென்னையில் மட்டும் நோய்ப்பரவல் கட்டுப்படுத்தப்படாதது ஏன்? என்பதைத் தான் புரிந்து கொள்ள முடியவில்லை. சென்னையில் நோய்த்தடுப்பு பணிகள் திறம்பட மேற்கொள்ளப்படவில்லையோ? என்ற ஐயத்தை தான் இது ஏற்படுத்துகிறது. அவ்வாறு நம்புவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன.

கோயம்பேடு சந்தையிலிருந்து ஏப்ரல் மாத இறுதியில் தான் அதிக எண்ணிக்கையில் தொற்றுகள் பரவத் தொடங்கின. உடனடியாக நோய்த்தொற்றுகளைக் கண்டறியும் பணி தொடங்கப்பட்டதுடன், மே ஒன்றாம் தேதியே சென்னை மாநகராட்சிக்கான கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக ஜே.இராதா கிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். கோயம்பேடு சந்தையும் மே 4-ஆம் தேதியுடன் மூடப்பட்டு விட்டது. நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் ஏப்ரல் 30-ஆம் தேதி தொடங்கப்பட்டதாக வைத்துக் கொண்டால், அடுத்த 14 நாட்களில், அதாவது மே 13-ஆம் தேதிக்குள் சென்னையில் கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருக்க வேண்டும். ஆனால், நோய்ப்பரவல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

சென்னையில் கடந்த மே ஒன்றாம் தேதி கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1082 மட்டும் தான். அது தற்போது 6750 ஆக அதிகரித்திருக்கிறது. அதாவது 17 நாட்களில் 5668 பேருக்கு புதியத் தொற்றுகள் ஏற்பட்டுள்ளன. சோதனைகள் அதிகரிக்கப்படுவது தான் நோய்ப்பரவல் அதிக எண்ணிக்கையில் கண்டுபிடிக்கப்படுவதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. அது ஓரளவுக்கு உண்மை தான் என்றாலும் கூட, 14 நாட்களுக்குப் பிறகும் கூட தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கு காரணம் அதிக சோதனைகள் அல்ல…. நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்துவதில் நிர்வாகம் கோட்டை விட்டு விட்டது தான். இப்புகாரை நிரூபிக்க ஏராளமான ஆதாரங்களை பட்டியலிட முடியும்.

கோயம்பேடு சந்தை மூலம் நோய்த்தொற்று பரவத் தொடங்குவதற்கு முன் கோடம்பாக்கம் மண்டலத்தில் இரட்டை இலக்கத்திலும், வளசரவாக்கம் மண்டலத்தில் ஒற்றை இலக்கத்திலும் தான் நோய்த்தொற்றுகள் இருந்தன. இராயபுரம், திருவிக நகர், தண்டையார் பேட்டை ஆகிய மண்டலங்கள் தான் முன்னணியில் இருந்தன. ஆனால், கோயம்பேடு நொய்ப்பரவல் தொடங்கிய சில நாட்களில், சந்தையை ஒட்டியுள்ள பகுதிகளில் நோய்ப்பரவல் வேகமாக அதிகரித்து, கோடம்பாக்கம் மண்டலம் முதலிடத்தைப் பிடித்தது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கோடம்பாக்கம் மண்டலத்தில் ஆயிரத்திற்கும் அதிகமாகவும், வளசரவாக்கம் மண்டலத்தில் 500&க்கும் அதிகமாகவும் உயர்ந்தது. அந்த மண்டலங்களில் இப்போது நோய்ப்பரவல் கட்டுக்குள் வந்து விட்டது. அதன்படி கோயம்பேடு மூலமான தொற்று கட்டுக்குள் வந்து விட்டது என்று வைத்துக் கொண்டாலும் இராயபுரம் மண்டலம் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் நோய்ப்பரவல் மீண்டும் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. நோய்ப்பரவலில் இராயபுரம் மண்டலம் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சென்னையில் நோய்ப்பரவல் நடவடிக்கைகளில் பெரும் ஓட்டை விழுந்துள்ளது; அதுதான் நோய்ப்பரவல் அதிகரித்திருப்பதற்கு காரணம் என்ற உண்மையை எவரும் மறுக்க முடியாது.

சென்னை மாநகராட்சிக்கான நோய்த்தடுப்பு சிறப்பு அதிகாரியாக இராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்ட போது, கொரோனா விரைவில் கட்டுக்குள் வரும் என்று நம்பினேன்; அதை வெளிப்படுத்தவும் செய்தேன். ஆனால், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில், அந்த மாவட்டங்களின் ஆட்சியர்கள், பிற அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் கொரோனாவை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியுள்ள நிலையில், சென்னையில் சிறப்பு அதிகாரி, மாநகராட்சி ஆணையர், மண்டல பொறுப்பு அதிகாரிகள் என ஏராளமான மூத்த இ.ஆ.ப. அதிகாரிகள் இருந்தும் கொரோனா வைரஸ் நோயைக் கட்டுப்படுத்த முடியாதது பொதுமக்கள் மத்தியில் இதுவரை நிலவி வந்த நம்பிக்கையை குலைத்துள்ளது.

சென்னையில் கடந்த 10-ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த பொறுப்பு அதிகாரி இராதாகிருஷ்ணன், அடுத்த 5 நாட்களில், அதாவது 15-ஆம் தேதிக்குள் நோய்ப்பரவல் குறையத் தொடங்கும் என்று கூறினார். மே 13-ஆம் தேதி தனியார் ஆங்கிலத் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் கோயம்பேடு சந்தையுடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் கொரோனா சோதனை செய்து முடிக்கப்பட்டு விட்டதாகவும், அவர்களில் 2600 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாகவும் கூறினார். ஆனால், அதன்பிறகும் நோய்ப்பரவல் கட்டுக்குள் வரவில்லை என்றால் நோய்த்தடுப்பு அணுகுமுறையில் என்ன தவறு? எந்த இடத்தில் தவறு நடந்தது? கோயம்பேடு நோய்ப்பரவல் கட்டுப்படுத்தப்பட்டு விட்டால், இப்போது வேறு எந்த ஆதாரத்திலிருந்து நோய் பரவுகிறது என்பதை அதிகாரிகள் கண்டுபிடித்து சரி செய்ய வேண்டும்.

சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க காரணம் என்ன? மருத்துவர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

சென்னையில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மத்திய அரசின் சார்பில் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகரும், இ.ஆ.ப அதிகாரியுமான திருப்புகழ் தலைமையிலான உயர்நிலைக்குழு சென்னைக்கு வந்து 5 நாட்கள் தங்கியிருந்து கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனைகளை நடத்தி அறிவுரைகளை வழங்கியது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் ஒவ்வொரு நாளும் கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து காலையில் தலைமைச் செயலகத்திலும், மாலையில் அவரது இல்லத்தில் உள்ள முகாம் அலுவலகத்திலும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். கொரோனா வைரஸ் நோய் தடுப்பில் முதலமைச்சர் பழனிச்சாமி காட்டும் அக்கறை பாராட்டத்தக்கது. ஆனால், களத்தில் கொரோனாவைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் போதிய நடவடிக்கை மிகவும் கவலையளிக்கிறது.

சென்னை மாநகராட்சி 200 வார்டுகளைக் கொண்டிருந்தாலும் சென்னை மாவட்டத்தில் உள்ள 107 வார்டுகளில் மட்டும் தான் நோய்ப்பரவல் மிகவும் அதிகமாக உள்ளது. புறநகர் பகுதிகளில் அதிக பாதிப்பு இல்லை. இத்தகைய சூழலில் கூடுதல் அதிகாரிகளை நியமித்து, மண்டல அளவில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக வார்டு அளவில் கவனம் செலுத்துவது பயனளிக்கக் கூடும். இதுபோன்ற அணுகுமுறைகளை பயன்படுத்தி கொரோனாவை கட்டுக்குள் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொரோனாவை கட்டுப்படுத்தும் விஷயத்தில் நம்பிக்கை வார்த்தைகள் மட்டுமே பயனளித்து விடாது. கொரோனாவால் மும்பை, தில்லி ஆகிய நகரங்களுக்கு அடுத்தப்படியாக சென்னை தான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையான 6750 என்பது, இந்தியாவில் மொத்தமுள்ள 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அளவை விட அதிகமாகும். இதனால் மக்களிடம் அச்சம் அதிகரித்துள்ள நிலையில், இன்னும் நம்பிக்கை வார்த்தைகளை மட்டும் பேசிக்கொண்டிருப்பது நம்பிக்கையைத் தராது; மாறாக சலிப்பை மட்டுமே ஏற்படுத்தும். எனவே, இனியும் கொரோனா தடுப்பு பணிகளை வார்த்தைகளில் காட்டாமல் செயலில் காட்ட வேண்டும். சென்னையில் வெகு விரைவில் கொரோனா பரவலை முற்றிலுமாக கட்டுப்படுத்தி மக்களிடம் நிலவும் அச்சத்தை மன நிறைவாகவும், மகிழ்ச்சியாகவும் மாற்ற வேண்டும் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

கார்ட்டூனிஸ்ட் வர்மா கைது விவரகத்தில் வெடிக்கும் சர்ச்சை : சிக்கும் திமுக கூட்டணி கட்சிகள்..!!

0

தலைமை செயலாளர் திமுக எம்பிக்களை நடத்திய விதம் குறித்து தயாநிதி மாறன் பத்திரிக்கையாளர்களிடம் கூறிய வார்த்தை தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இது குறித்து மென்மையான கண்டனங்களை தெரிவித்த திருமாவளவளன் எம்.பிக்கு பலதரப்பட்ட மக்களிடமிருந்து எதிர்ப்புகளும் அவர் மீது சில விமர்சனங்களும் முன் வைக்கப்பட்டது.

இந்த நிலையில் வர்மா எங்கிற கார்ட்டூனிஸ்ட் ஒருவர், திருமாவளவன் எம்.பி அவர்கள் திமுக தரப்பிடம் மட்டும் மென்மையான போக்கை கடைபிடிப்பதற்கு அவர் வகித்து வரும் பதவியே காரணம் என்று குறிப்பிடும் விதமாக கார்ட்டூன் படம் ஒன்றினை கடந்த 16ம் தேதி வெளியிட்டிருந்தார்.

அதே நாளில்  பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசை கார்ட்டூன் படத்தை வைத்து விமர்சனம் செய்த விசிக நிர்வாகி வன்னியரசுக்கு தண்டனைகள் எதுவும் கிடையாதா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மூன்றாம் தர குடிமக்கள் என்று கூறிய தயாநிதி மாறன் மீது நடவடிக்கை எடுக்காத அரசு, கார்ட்டூனிஸ்ட் வர்மா மீது மட்டும் ஏன் என்று ட்வீட்டரில் கேள்விகள் குவிகின்றன.

கைது செய்யப்பட்டுள்ள கார்டூனிஸ்ட் வர்மாவுக்கு நீதி வேண்டும் என்று பலதரப்பிலுமிருந்து கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளது.

இது குறித்து பதிவிட்டவர்களின் சில பதிவுகள்.

உயரும் கொரோனா பலி… உயிர் பயத்தில் மக்கள்… இந்தியாவில் 90 ஆயிரத்தை கடந்தது..!!

0

சீனாவின் வூகான் மாநகரில் தொடங்கி தற்போது 210 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் தொற்றால் உலக நாடுகளில் உள்ள 300 கோடிக்கும் மேற்பட்டோர் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் கோரத் தாண்டவத்தால் இதுவரை 47 லட்சத்து 10 ஆயிரத்து 614 பேருக்கு மேல் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 15 ஆயிரத்தை கடந்துள்ளது, மேலும் 17 லட்சத்து 32 ஆயிரத்து 344 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் முதல் 35 இடங்களில் உள்ள நாடுகளின் விபரங்கள் பின்வருமாறு.

உயரும் கொரோனா பலி... உயிர் பயத்தில் மக்கள்... இந்தியாவில் 90 ஆயிரத்தை கடந்தது..!!

இந்தியாவில் நோய் தொற்று ஏற்பட்டுள்ளோரின் மொத்த எண்ணிக்கை 90,927 ஐ கடந்துள்ளது, அதில் பலியானார்களின் மொத்த எண்ணிக்கை 2,872 ஆக தெரிகிறது. இதுவரை சிகிச்சை பெற்று 34,109 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மாநில அளவிலான விபரங்கள் பின்வருமாறு(நோய் தொற்று ஏற்பட்டுள்ளவர்கள் / இறந்தவர்கள்):

மகாராஷ்டிரா – 30,706/1,135
டெல்லி – 9,333/129
குஜராத் – 10,988/625
தமிழ்நாடு – 10,585/74
தெலுங்கானா – 1,509/34
கேரளா – 587/04
ராஜஸ்தான் – 4,960/126
உத்தரபிரதேசம் – 4,258/104
ஆந்திர பிரதேசம் – 2,355/49
கர்நாடகா – 1,092/36
மத்திய பிரதேசம் – 4,789/243
ஜம்மு & காஷ்மீர் – 1,121/12
மேற்கு வங்கம் – 2,576/232
பஞ்சாப் – 1,946/32
ஹரியானா – 887/13
பீகார் – 1,179/07
அசாம் – 92/02
சண்டிகர் -191/03
உத்தர்கண்ட் – 88/01
லடாக் – 43/0
அந்தமான் & நிக்கோபார் -33/0
சத்தீஸ்கர் – 67/01
கோவா – 17/0
இமாச்சல பிரதேசம் – 78/03
ஒடிசா – 737/03
பாண்டிச்சேரி – 13/01
மணிப்பூர் – 07/0
ஜார்க்கண்ட் – 217/03
மிசோரம் – 01/0
அருணாச்சலப் பிரதேசம் – 1/0
திரிபுரா – 167/0
நாகாலாந்து – 01/0/01
மேகாலயா – 13/01
தாத்ரா நகர் ஹாவலி – 01/0

தமிழகத்தில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 10,585 ஆக உயர்ந்துள்ளது. அதில் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 74 ஆக தெரிகிறது, பூரண குணமடைந்து 3,538 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

மாவட்டட்ட அளவில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை(நோய் தொற்று ஏற்பட்டவர்கள் / இறந்தவர்கள்);

உயரும் கொரோனா பலி... உயிர் பயத்தில் மக்கள்... இந்தியாவில் 90 ஆயிரத்தை கடந்தது..!!

இந்த தகவல்கள் வெவ்வேறு நாடுகளில் அதிகாரப்பூர்வமாக வெளியானதன் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.

அனுஷ்கா சர்மா பந்துவீச விராட் கோலி பேட்டிங் செய்யும் காட்சி.! வைரல் வீடியோ உள்ளே!!

0

கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டதால் இந்தியாவின் கிரிக்கெட் திருவிழாவான ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் போட்டி கொரானா தொற்று காரணமாக காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

ஐபிஎல் தொடரில் எப்போதும் பிசியாக இருக்கும் வீரர்கள் அனைவரும் தற்போது சமூக வலைதளங்களில் வீடியோக்களையும் புகைப்படங்களையும் பதிவிட்டு வீட்டில் இருக்கும் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர்.

https://www.instagram.com/p/CAQfhgQgxcS/?utm_source=ig_web_copy_link

இதுபோன்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா இருவரும் அவரது வீட்டு மொட்டை மாடியில் கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக உள்ளது அந்த வீடியோவில் அனுஷ்கா ஷர்மா பந்து வீச விராட் கோலி பேட்டிங் செய்கிறார்.

தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு! அதிர்ச்சியளிக்கும் இன்றைய நிலவரம்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டுமே 639 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது வரை தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையானது 11,224 ஆக உயர்ந்துள்ளது. 

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்துள்ள நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதாவது கடந்த மூன்று தினங்களாக 500 க்கு குறைவான கொரோனா தொற்றே கண்டறியப்பட்டது. ஆனால் இன்று 639 பேருக்கு கொரோனா நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது பாதிப்பு எண்ணிக்கையானது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் தற்போது வரை கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 11224 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் இன்று மட்டும் 450 பேருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று வரை சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையானது 6750 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு! அதிர்ச்சியளிக்கும் இன்றைய நிலவரம்

குணமடைந்தோர் விவரம்:

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா பாதிப்பிலிருந்து 234 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் 4172 பேர் குணமடைந்துள்ளனர்.

இன்று கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 4 பேர் உயிழந்துள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் மொத்த எண்ணிக்கையானது 78 ஆக உயர்ந்துள்ளது. 

தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு! அதிர்ச்சியளிக்கும் இன்றைய நிலவரம்

மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரம்:

இன்று அரியலூரில் புதிதாக 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 353 ஆக உயர்ந்துள்ளது. இதுபோல் இன்று செங்கல்பட்டில் புதிதாக 28 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இங்கு மொத்த பாதிப்பானது 498 ஆக உயர்ந்துள்ளது.கடலூரில் இன்று ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டதால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 417 ஆக உயர்ந்துள்ளது.

கள்ளக்குறிச்சியில் இன்று 3 பேருக்கு பாதிப்பு உறுதியானாதால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 95 ஆக உயர்ந்துள்ளது. காஞ்சிபுரத்தில் 5 பேருக்கு புதியதாக பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 186 ஆக உயர்ந்துள்ளது.

இதேபோல் மதுரையில் 10 பேருக்கும் (மொத்தம் 160), நாகப்பட்டினத்தில் ஒருவருக்கும் (மொத்தம் – 50), திருவள்ளூரில் (மொத்தம் 546) 18 பேருக்கும்,திருவண்ணாமலையில் (மொத்தம் 151) 3 பேருக்கும், தூத்துக்குடி (மொத்தம் 70) மற்றும் திருநெல்வேலியில் (மொத்தம் 194), தலா ஒருவருக்கும் என கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Best Payout Online Casino

0

Would you want to try your luck at a reputable online casino that offers excellent payouts? If that’s the case, you should check out Cobra Casino Online. This casino has a collection of over 500 games and offers huge incentives to its patrons. In addition, its 97% payout rate is among the greatest in the business, meaning you’ll keep more of what you earn. In this in-depth study, we will compare and contrast the features of Cobra Casino Online to those of competing establishments. If you want to learn more about this well regarded virtual gambling establishment, keep reading!

 

AUD deposit instructions

With only a few clicks in the banking section after logging in, Australian Dollars may be added to your Cobra Casino Online account. Next, pick Australian Dollars as your currency and pay using your preferred method, which may be a credit card, debit card, or electronic wallet. Just follow the on-screen instructions to make a payment and start playing immediately! Enjoy! Do you want to find a reputable online gambling site with generous payouts? It might be challenging to discover a trustworthy and prompt online casino that pays out. You shouldn’t spend your time at a casino that is sluggish to pay out winnings or has poor odds. Try your luck at cobracasino.bet now! Our payout rates are among the best in the business, guaranteeing that you always receive your money’s worth. Withdrawals and deposits are processed quickly and safely using our streamlined payment system. Why hold off? Join Cobra Casino Online now and begin your journey to accumulating massive winnings.

 

Money Put In And Money Taken Out

We appreciate your consideration of Cobra Casino Online. Withdrawals and deposits may be made quickly and safely via us. If you have any inquiries about making a deposit or a withdrawal, our support staff is here for you around the clock. Don’t be shy about getting in touch with us if there’s anything we can do to assist you. As always, we appreciate your visit to CobraCasinoOnline.com.

 

Best-selling video games

Some of the most played games can be found at Cobra Casino Online. Play everything from video slots and jackpots to your favorite traditional table and card games. Our user-friendly website will have you immersed in the action in no time. Give us a go right now, and you’ll see why we’re considered one of the best online casinos there is.

-In the online casino, popular games include: 

-Video Slots

-Poker Video 

-Game of Roulette 

-Black Jack 

-Baccarat   

– Craps 

-You may play Keno and a lot of other games too!

 

Methods of Banking

We would like to thank you for visiting the Online Cobra Casino. Multiple banking options are available, allowing for quick and safe deposits and withdrawals. Visa, Mastercard, Skrill, Neteller, Trustly, and dozens of additional payment methods are all available to you. Our high-tech encryption methods ensure the security of all financial dealings. If you have any questions or need assistance deciding which banking option is best for you, please don’t hesitate to get in touch with us. Welcome to the Cobra Casino, where the fun never stops!

 

How do I check if I am on an online casino?

0

If you’re like most people, you sometimes love a good bet. What, though, if you’re unsure of the security of the casino you intend to visit? We’ll discuss how to verify whether you’re on an online casino’s blacklist in this blog article, as well as how to avoid frauds. A list of casinos that have been banned will also be available for your perusal. Find out if the casino is authorized and overseen by a respectable gaming regulator as your initial step. If it isn’t, the casino is probably not functioning lawfully and could even be a hoax. Usually, the casino’s website or customer care may provide this information.

 

Mobile casinos with small deposits

Black Diamond Casino is the ideal alternative for you if you’re seeking for a top-notch online casino that provides cheap deposit possibilities. We have a huge selection of thrilling games that work on mobile devices, and our players may benefit from a choice of bonuses and promotions. Therefore, join Black Diamond Casino immediately and start playing to ensure that you don’t miss out on any of the action! It might be difficult to determine whether you are playing at a reliable and secure online casino. It’s difficult to identify secure online casinos since so many of them are scammers. Without ever having the opportunity to play, you can wind up losing your money. A trustworthy and secure online casino is https://blackdiamondcasino.bet online. You may feel confident knowing that you’re in excellent hands thanks to the vast range of games, round-the-clock customer service, and a secure website.

 

Long-term rewards for players

A trustworthy and secure online casino is Black Diamond Casino. You may feel confident knowing that you’re in excellent hands thanks to the vast range of games, round-the-clock customer service, and a secure website. Our long-term player benefits are one of the biggest reasons to play at Black Diamond Casino. These incentives are intended to keep you playing longer and increase your chances of striking it rich.

For our gamers, we provide a range of benefits, including:

– Up to $5000 in welcome bonuses

– Up to $500 in reload bonuses

– A bonus of up to $200 for referrals.

 

How Do I Deposit Money at a Casino With A$?

We appreciate you choosing Black Diamond Casino as your preferred online casino! We’re thrilled to have you here, and we know you’ll enjoy your stay with us. You must first register an account before you can make a deposit. It simply takes a few minutes to complete this fast and simple procedure. Once you’ve registered for an account, you may deposit money using one of our easy payment options. After that, choose your preferred deposit method and complete the necessary blanks. Before starting the transaction, make sure your A$ is prepared!

 

Gamers at casinos

We appreciate your reaching out to us. Your interest in working as an auditor for our online casino makes us delighted. If your credentials match our requirements, we would love to talk with you more about the opportunity. You need to have previous expertise in the casino gaming business and a thorough grasp of how online casinos operate in order to work as an auditor for Black Diamond Casino. You will be in charge of auditing our games to make sure they adhere to all rules and are fair. In order for us to enhance our games, you will also need to report back to us on your findings.

 

 

 

 

Avis sur Le Roi Johnny

0

Il y a un afflux constant de nouveaux casinos en ligne français, et aujourd’hui nous allons nous pencher sur l’un d’entre eux : Le Roi Johnny. Le Roi Johnny est un site très récent, qui vient d’ouvrir ses portes virtuelles en 2022. La société Rabidi N.V., basée sur l’île de Curaçao, est à l’origine du casino. Le casino présente un charmant motif grec ancien qui a été utilisé sur l’ensemble du site. Le thème est subtil et intégré dans les visuels et les fonctionnalités du site sans distraire les joueurs. La première impression du site est aussi celle d’une grande qualité. Le Roi Johnny est une destination de jeu en ligne complète, offrant à ses clients non seulement un casino en ligne traditionnel et un casino avec croupier en direct, mais aussi des paris sportifs, des courses de chevaux et des paris virtuels. Près d’une centaine de développeurs de jeux différents ont contribué à l’impressionnante bibliothèque de jeux de casino du site. Les personnes plus intéressées par les jeux de casino trouveront que Kasito, avec son adhésion VIP, est une excellente option. La licence de Curaçao du site est un inconvénient car elle limite son audience. C’est normal si le bailleur de fonds est un résident de Curaçao, mais il n’en reste pas moins qu’un joueur français devra déclarer ses gains à l’administration fiscale et en reverser une partie aux caisses de l’Etat. Mis à part ce petit problème, tout le reste des offres du casino semble fonctionner correctement. Examinons la structure sous-jacente du casino.

Ce que vit Le Roi Johnny

Nous allons maintenant en apprendre davantage sur les mécanismes de la plateforme de jeu Le Roi Johnny et sur le type d’expérience à laquelle les joueurs peuvent s’attendre. La bibliothèque de jeux Le Roi Johnny plus d’infos leroijohnny.fr supérieure à la moyenne, est un autre aspect positif. Les joueurs ont la possibilité de parier sur des sports réels, des sports virtuels et des courses de chevaux, en plus des centaines et des milliers de machines à sous disponibles. Lorsqu’il s’agit d’interpréter l’expérience des joueurs sur Le Roi Johnny, ces deux facteurs sont les plus importants. Les joueurs sont agréablement surpris par les différentes méthodes disponibles pour transférer des fonds. Certains joueurs se sont plaints des exigences de mise des bonus du casino, qui s’élèvent à 35 fois le dépôt initial du joueur plus le bonus. Cela se traduit par un taux de mise stupéfiant de 70 fois, ce qui est pratiquement impossible à respecter. Cependant, la majorité des commentaires sur le casino sont optimistes et encourageants. Maintenant que nous savons à quoi nous attendre, changeons de page et voyons comment le site se comporte réellement !

Service utile Le Roi Johnny

La réputation de l’excellent service clientèle Le Roi Johnny est à la hauteur de celle des casinos en ligne de Rabid. Les options de chat en direct et d’assistance par e-mail sont disponibles pour tous les joueurs. Le site dispose également d’une brève section Foire aux questions, mais elle ne couvre que les sujets les plus fondamentaux. C’est pourquoi il convient de contacter le casino pour toute question concrète. Comparé aux normes modernes, le service clientèle Le Roi Johnny est exceptionnel. Une assistance rapide et fiable, disponible 24 heures sur 24, est un argument de vente majeur pour les joueurs qui visitent le site.

L’application officielle du casino Le Roi Johnny et le site mobile

Il n’est pas surprenant que les jeux de casino sur mobile aient gagné en popularité au cours des dernières années. Grâce au développement rapide des jeux et des connexions réseau, les appareils mobiles sont désormais capables de fournir des expériences de jeu presque identiques à celles des ordinateurs de bureau. Comme beaucoup d’autres casinos mobiles, Le Roi Johnny ne propose pas d’application dédiée à ses utilisateurs mobiles. Quoi qu’il en soit, il s’agit également d’une option fantastique pour les jeux mobiles.

En conclusion

En ce qui concerne les jeux de casino et de paris, le nouveau casino en ligne Le Roi Johnny se démarque définitivement. Il y en a pour tous les goûts et personne ne sera déçu. La société derrière le casino, Rabidi N.V., est à l’origine d’un certain nombre d’autres sites de jeu réputés. Le Roi Johnny est donc un site de jeu solide et sûr. Malheureusement pour les joueurs français, la société a son siège sur l’île de Curaçao, et tous les gains seront donc soumis à l’impôt français.

Grand choix de machines à sous dans les casinos en ligne Le Roi Johnny

Des avantages hebdomadaires tels que des remises en argent et des tours gratuits sont offerts aux joueurs en plus des bonus de bienvenue. Les conditions de bonus du casino peuvent être un peu onéreuses, avec une exigence de mise de 70x sur les bonus de dépôt et de 40x sur les tours gratuits. Le fait que les joueurs puissent contacter le casino à tout moment par e-mail ou par chat en direct est un avantage majeur. Lorsque l’on fait l’éloge du casino, il est impossible de ne pas mentionner les nombreuses options de dépôt et de retrait qu’il propose. Toutes les principales cartes de crédit, portefeuilles électroniques et systèmes de paiement mobiles sont acceptés comme méthodes de dépôt au casino. Zimpler offre également aux joueurs des retraits rapides comme l’éclair. Le casino dispose d’une excellente collection de jeux. Les machines à sous et les jeux en direct se comptent par milliers et peuvent être représentés par trois développeurs différents. L’absence de pots progressifs de plusieurs millions d’euros est un inconvénient mineur. Le Roi Johnny Casino est un excellent site dans l’ensemble, avec plusieurs points positifs et quelques inconvénients. 

Plus d’informations ici : https://theconversation.com/ca-fr/topics/pokies-794?page=2

மத்திய அரசு மாநிலங்களின் கடன் பெறும் அளவை 5 சதவீதமாக உயர்த்தி அறிவித்தது

0

பல்வேறு மாநில அரசுகளின் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு நடப்பு நிதியாண்டில் மாநிலங்களின் உள்நாட்டு மொத்த உற்பத்தியில் கடன் வாங்கும் அளவை 3 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக அதிகரித்து இன்று உத்தரவிட்டுள்ளது.

இதன் மூலமாக மாநில அரசுகளுக்கு கூடுதலாக அதிகபட்சம் ரூ.4.28 லட்சம் கோடி வரை கடன் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனாவால் வீழ்ந்த இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்த பிரதமர் மோடி ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சுயசார்பு பொருளாதாரத் திட்டங்களை அறிவித்தார். பிரதமர் அறிவித்துள்ள சுயசார்பு பொருளாதாரத்துக்காக தற்போது வரை ஐந்து கட்டங்களாகத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

முன்னதாக மாநில முதல்வர்கள் பிரதமர் மோடியுடனான ஆலோசனையின் போது மாநிலங்களின் கடன் பெறும் அளவை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று சுயசார்பு பொருளாதாரத் திட்டத்திற்கான 5 ஆம் கட்ட அறிவிப்புகளை வெளியிடும் போது மாநில அரசுகளுக்கான கடன் பெறும் அளவை அதிகரித்து அறிவித்துள்ளார்.

நடப்பு நிதியாண்டில் மாநில அரசுகள் உள்நாட்டுமொத்த உற்பத்தியில் கடன் வாங்கும் அளவானது 3 சதவீதத்திலிருந்து 5 சதவீதம் என்ற அளவில் உயர்த்தப்படுகிறது. இந்த அறிவிப்பின் மூலமாக மாநிலங்கள் கடன் பெறுவதற்கான உச்சவரம்பு உயர்த்தப்படுவதன் மூலம் அதிகபட்சமாக ரூ.4.28 லட்சம் கோடி வரை கூடுதல் கடனாக மாநிலங்களுக்குக் கிடைக்கும். மேலும் மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துவதன் மூலமாக மாநிலங்களுக்கான கடன் பெறும் உச்சவரம்பு படிப்படியாக உயர்த்தப்படும்.

மேலும் கொரோனா பாதிப்பினால் மாநிலங்களை போலவே மத்திய அரசும் பெரிய அளவில் வருவாய் இழப்பை சந்தித்துள்ளது. இருந்தாலும், மாநிலங்களுக்கு உதவி தேவைப்படும் இந்த நேரத்தில், மாநில அரசுக்கான ஆதரவை மத்திய அரசு தொடர்ந்து வழங்கி வருகிறது. மாநிலங்களுக்கான வரிப்பகிர்வு ரூ 46,038 கோடி கடந்த ஏப்ரலில் முழுமையாக வழங்கப்பட்டது. மேலும் வருவாய் பற்றாக்குறை மானியங்களாக மாநில அரசுகளுக்கு ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் ரூபாய் 12, 390 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.

இத்துடன் மாநிலங்களுக்கு பேரிடர் நிவாரண நிதியை முன்கூட்டியை ரூபாய் 11,092 கோடி ஏப்ரல் முதல் வாரத்திலேயே கரோனா வைரஸுக்கு எதிரான பணிகளைத் தொடங்க விடுவிக்கப்பட்டது. இது தவிர மத்திய சுகாதாரத்துறை சார்பாக ரூ.4,113 கோடியும் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று மாநில அரசு ஓவர் டிராப்ட் மூலம் கடன் பெறும் நாட்களை ரிசர்வ் வங்கி 14 லிருந்து 21 நாட்களாக உயர்த்தியுள்ளது. நடப்பு நிதியாண்டில் மாநில அரசுகள் மாநில உள்நாட்டு உற்பத்தியின் மூலம் அதிகபட்சமாக ரூ.6.14 லட்சம் கோடி வரை கடன் பெற முடியும்.

இவ்வாறு மாநிலங்கள் தங்கள் கடன் பெறும் தகுதியில் இதுவரை வெறும் 14 சதவீதத்தை மட்டுமே பயன்படுத்தியுள்ளன. மீதமுள்ள 86 சதவீதத்தை மாநில அரசுகள் பயன்படுத்தவில்லை. குறிப்பாக மாநில அரசுகளின் கோரிக்கையை ஏற்றுக் கடன் பெறும் சதவீதமும் 3 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

மே 31 வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு – எந்த மாவட்டத்திற்க்கு தளர்வுகள்?

மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கு மே 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது வரை இரண்டு முறை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதற்கு முன் மாநில முதல்வர்கள் மற்றும் நிபுணர்களுடன் ஆலோசனையை கடந்த 11ம் தேதி மேற்கொண்டார் பிரதமர் மோடி.

அதனைத் தொடர்ந்து 3வது ஊரடங்கு அமலிலுள்ள நிலையில் பொது முடக்கம் நீட்டிப்பது குறித்தும் ஏற்கனவே மத்திய அரசு 17 தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. தமிழகத்திலும் கடந்த திங்கட்கிழமை முதல் 34 வகையான கடைகளைத் திறக்க அனுமதிக்கப்பட்டது.

கடந்த 11ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் மாநில முதல்வர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்குபெற்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தங்கள் அரசு கோரியிருந்த 2000 கோடி ரூபாய் விரைவில் விடுவிக்குமாறு கோரிக்கை வைத்தார். மேலும் மே 31ம் தேதி வரை தமிழகத்தில் ரயில், விமானங்களை இயக்க வேண்டாம் என்றும் கோரிக்கை வைத்தார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முக்கியமாக ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பைப் பற்றி பிரதமர், முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார். பிரதமர் அந்த கூட்டத்தில் பேசியது அறிக்கையாக வெளியிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து முதல்வர் மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவக் குழுக்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்நிலையில் தமிழ்நாட்டில் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக இன்று முதலவர் எடப்பாடி பழனிசாமி வெளியுட்டுள்ள அறிக்கையில்:

“கடந்த 13 ஆம் தேதி நடந்த மாவட்ட ஆட்சித்தலைவர்கள் கூட்டத்தில் பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில், தேசிய வேலை உறுதியளிப்பு திட்டத்தில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட 33 சதவீதம் பணியாளர்கள் அளவை 50 சதவீதம் வரை உயர்த்தியும், சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளைத் தவிர, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி,பேரூராட்சி மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து தொழிற்சாலைகள் (ஜவுளித் தொழிற்சாலைகள், விசைத்தறி உட்பட) 50 சதவீத தொழிலாளர்களைக் கொண்டு இயங்கவும், சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளைத் தவிர தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரகப் பகுதிகளில்உள்ள 50 சதவீத தொழிலாளர்களை கொண்டு இயங்கவும் அனுமதி அளிக்கப்பட்டு அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.13.5.2020 அன்று நடத்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களின் காணொலிக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையிலும்; மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்கள் குழுவுடன் 14.5.2020 அன்று நடத்தப்பட்டகூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையிலும், மூத்தஅமைச்சர்களுடன் கலந்து ஆலோசித்து எடுத்த முடிவுகளின் அடிப்படையிலும், கரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு 31.5.2020 நள்ளிரவு 12 மணி வரை ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு வரைமுறைகளுடனும், தளர்வுகளுடனும் நீட்டிப்பு செய்யப்படுகிறது.

ஏற்கனவே நடைமுறையில் உள்ள கீழ்க்காணும் செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும்வரை தொடர்ந்து அமலில் இருக்கும்.

  1. பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்கள்.
  2. வழிபாட்டுத் தலங்களில் பொது மக்கள் வழிபாடு மற்றும் அனைத்து மதம் சார்ந்த கூட்டங்கள்.
  3. பொதுமக்கள் அதிக அளவில் கூடும் திரையரங்குகள், கேளிக்கைக் கூடங்கள், மதுக்கூடங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், கடற்கரை, சுற்றுலாத் தலங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், நீச்சல் குளங்கள்,விளையாட்டு அரங்குகள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள் போன்ற இடங்கள்.
  4. அனைத்து வகையான சமய, சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார நிகழ்வுகள், விழாக்கள், கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள்.
  5. பொது மக்களுக்கான விமானம், இரயில், பேருந்து போக்குவரத்து, மாநிலங்களுக்கு இடையேயான இரயில் போக்குவரத்து, சென்னை மாநகரத்திலிருந்து பிற பகுதிகளுக்கான இரயில் போக்குவரத்து ஆகியவற்றிற்கு அனுமதி கிடையாது. ( மத்திய / மாநில அரசின் சிறப்பு அனுமதி பெற்று இயக்கப்படும் விமானம், இரயில், பொதுப்பேருந்து போக்குவரத்து மட்டும் அனுமதிக்கப்படும்.)
  6. டாக்ஸி, ஆட்டோ, சைக்கிள் ரிக் ஷா.
  7. மெட்ரோ இரயில் / மின்சார இரயில்.
  8. தங்கும் விடுதிகள் (பணியாளர் விடுதிகள் தவிர), தங்கும் ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள்.
  9. இறுதி ஊர்வலங்களில் 20 நபர்களுக்கு மேல் பங்கேற்கக்கூடாது.
  10. திருமண நிகழ்ச்சிகளுக்கு, தற்போது உள்ள நடைமுறைகள் தொடரும்.

ஏற்கெனவே நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள்:

  • சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய 12 மாவட்டங்களில் ஏற்கனவே நடைமுறையில் எந்த மாற்றமும் இல்லாமல் தொடரும். தளர்வுகள் ஏதும் இல்லை.
  • நீலகிரி, கொடைக்கானல் மற்றும் ஏற்காடு சுற்றுலா தலத்திற்கு வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்படுகிறது
  • தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போது உள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்.
  • பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில்நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர பிற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுக்கு மட்டும் அனுமதி தொடரும்.
  • பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகள் தவிர தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர, பிற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுக்கு அனுமதி தொடரும்.

புதிய தளர்வுகள்ஊரடங்கை படிப்படியாக விலக்குவதற்கு பரிந்துரை செய்ய அமைக்கப்பட்ட உயர்நிலைக்குழுவின் பரிந்துரையின்படி கீழ்க் கண்டதளர்வுகள் அறிவிக்கப்படுகிறது:

  • கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், திண்டுக்கல், புதுக்கோட்டை, திருச்சி, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மற்றும் நீலகிரிஆகிய 25 மாவட்டங்களுக்கு மட்டும் கீழ்க்கண்ட சில தளர்வுகள்வழங்கப்படுகின்றன.
  • அந்தந்த மாவட்டங்களுக்குள் போக்குவரத்து இயக்கத்திற்கு மட்டும் இ- பாஸ் இல்லாமல் இயக்க தளர்வு அளிக்கப்படுகிறது.
  • மாவட்டத்திற்குள் நோய் தொற்று பரவாமல் தடுக்க பொதுமக்கள் அனுமதிக்கப்பட்ட பணிகளுக்கும், அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் சென்று வர போக்குவரத்தை பயன்படுத்திக்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
  • ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்திற்கு சென்றுவரஇ-பாஸ் பெற்றுச் செல்லும் தற்போதைய நடைமுறையே தொடரும்.
  • அரசுப் பணிகள் மற்றும் தனியார் தொழிற்சாலைகளுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டு இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் அதிகபட்சமாக 20 நபர்களும், வேன்களில் 7 நபர்களும், பெரிய வகை கார்களில் 3 நபர்களும், சிறிய கார்களில் 2 நபர்களும் (வாகன ஓட்டுநர் தவிர)செல்ல அனுமதிக்கப்படுகிறது.
  • மாவட்டங்களுக்குள் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ள 25 மாவட்டங்களில் இ பாஸ் இல்லாமல் வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்களை அத்தியாவசிய பணிகளுக்கான வேளாண்மை, வியாபாரம், மருத்துவம் போன்ற பணி நிமித்தம் பயணம் செய்ய மட்டும் பயன்படுத்தப்பட வேண்டும்.தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியில் செல்வதை கண்டிப்பாக பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.
  • தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டம் – தற்போதுள்ள 50 சதவீத பணியாளர்களை 100 சதவீத பணியாளர்களாக உயர்த்துவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
  • சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளைத் தவிர தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் தற்போதுள்ள தளர்வுபடி 50 நபர்களுக்கு குறைவாக பணிபுரியும் தொழிற்சாலைகளில் 100 சதவீதம் பணியாளர்களும், 50 நபர்களுக்கு மேல் பணியாளர்களின் எண்ணிக்கை உள்ள தொழிற்சாலைகளில் 50 சதவீதம் பணியாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்ட நிலையில், இதை மேலும் தளர்வு செய்து 100 நபர்களுக்கும் குறைவாக பணிபுரியும் தொழிற்சாலைகளில், 100 சதவீதம் பணியாளர்களும், 100 நபர்களுக்கு மேல் பணியாளர்களின் எண்ணிக்கை உள்ள தொழிற்சாலைகளில், 50 சதவீதம் பணியாளர்கள் அல்லது குறைந்தபட்சம் 100 பணியாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
  • ஊரடங்கு காலத்தில் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் தனியார் மற்றும் வியாபார நிறுவனங்களின் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகளுக்காக மட்டும் குறைந்தபட்சம் பணியாளர்களுடன் இயங்குவதற்கு அனுமதி.
  • 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத் தாள்களை திருத்தும் பணி மட்டும் நடைபெற விலக்களிக்கப்படுகிறது.
  • தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளுக்கு தனி பயிற்சியாளர் மூலம் பயிற்சி பெறுவது மட்டும் விலக்களிக்கப்படுகிறது. இதற்காக சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவரிடமும், சென்னை மாநகர ஆணையரிடமும் அனுமதி பெற வேண்டும்.
  • மாவட்டங்களுக்குள் போக்குவரத்து அனுமதிக்கப்படாத 12 மாவட்டங்களில் இ-பாஸ் உடன் மருத்துவ சிகிச்சைக்கு மட்டும் சென்று வர பயன்படுத்தப்படும் டாக்ஸி, ஆட்டோவுக்கு மட்டும் விலக்களிக்கப்படுகிறது.

அனைத்து மாவட்ட ஆட்சியர்களும், மாநகராட்சி ஆணையர்களும் அரசால் அறிவுறுத்தப்பட்ட, முக கவசங்களை அணியவும், சமூக இடைவெளியினை பின்பற்றவும், சோப்பை உபயோகப்படுத்தி அடிக்கடி கைகளை கழுவும் நடைமுறையை பின்பற்றவும், போதுமான கிருமிநாசினிகளை பயன்படுத்தவும், பணியாளர்கள், மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பாக பணிபுரிவதை கண்காணிக்கவும், அரசால் வெளியிடப்பட்டுள்ள நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை தீவிரமாக கடைபிடிப்பதை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்படுகிறது.

ஊரடங்கு உத்தரவு தொடர்வதால், பொது இடங்களில், ஐந்து நபர்களுக்கு மேல் மக்கள் கூடாமல் இருப்பதை கண்காணிக்கவும் அறிவுறுத்தப்படுகிறது. நோய்த் தொற்றின் பரவலை தமிழ்நாடு அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. நோய்த் தொற்று குறையக் குறைய, தமிழ்நாடு அரசு மேலும் தளர்வுகளை அறிவிக்கும்.வெளிநாட்டிலிருந்து தாயகம் திரும்புவதற்கு முடியாமல் உள்ள தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களை மத்திய அரசின் “வந்தே பாரத்” திட்டத்தின் கீழ் 10 சிறப்பு வானூர்திகள் மூலம் 1,665 நபர்களும், 2 கப்பல்கள் மூலம் 264 நபர்களும் தமிழ்நாடு திரும்பியுள்ளனர். வெளிநாட்டிலிருந்து தமிழ்நாடு திரும்ப விரும்பும் மேலும் பல தமிழர்களின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு மத்தியஅரசுடன் ஒருங்கிணைந்து அவர்களையும் அழைத்து வர உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும், பிற மாநிலங்களிலிருந்து தமிழ்நாடு திரும்ப முடியாமல் தவிக்கும்தமிழர்களை சிறப்பு இரயில் மூலம் படிப்படியாக அழைத்து வர விரைவான நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அதேபோல், தில்லியில் இருந்து இந்த வாரம் இரண்டு முறை ராஜதானி விரைவு இரயில் இயக்கப்பட்டுள்ளது. வரும் நாள்களில் வாரத்திற்கு 2 நாள்கள் இந்த விரைவு இரயில் இயக்க மத்திய அரசின் அனுமதி பெற்று நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அறிக்கையில் தெரவிக்கப்பட்டுள்ளது.