Home Blog Page 5640

விரைவில் திருப்பதி கோவிலில் தரிசனம்! – புதிய கட்டுபாடுகள் என்ன தெரியுமா?

0

கடந்த மார்ச் மாத இறுதியில் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து மக்கள் கூடும் கோயில்கள், வழிபாட்டுத்தலங்கள், திரையரங்குகள், கடற்கரை, பூங்காக்கள், வணிக வளாகங்கள் அனைத்தும் மூடப்பட்டன.

கடந்த 120 ஆண்டுகளில் மூடப்படாத திருப்பதி, திருமலையில் உள்ள வேங்கடாசலபதி கோயிலுக்குள் நுழைய பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது 4வது ஊரடங்கு நடைமுறையிலுள்ள நிலையில் விரைவில் வழிபாட்டு தலங்களில் பக்தர்களை அனுமதிப்பதற்க்கான தளர்வை மத்திய மாநில அரசுகள் அறிவிக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதனையடுத்து அரசு தளர்வை அறிவித்தால் எவ்வாறு அதை கையாளலாம் என திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் ஆலோசனையை மேற்கொண்டு வருகிறது.

இதன் முதற்கட்டமாக ஏழுமலையான் சுவாமிக்கு நைவேத்தியமாக படைத்த லட்டு மற்றும் வடை பிரசாதங்களை திருப்பதியில் உள்ள பிரசாத மையத்தில் பக்தர்களுக்கு விற்பனை செய்யலாம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்தது. இதனையடுத்து 500 லட்டு மற்றும் 500 வடை பிரசாதங்களை தேவஸ்தானம் நேற்று விற்பனை செய்தது.இதை அறிந்த பக்தர்கள் பிரசாத மையத்தில் திரண்டனர். அக்னி வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் நின்ற பக்தர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து நின்று பிரசாதத்தை வாங்கிச் சென்றனர். பலர் பிரசாதம் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இதனை தொடர்ந்து கட்டுபாட்டு விதிகளுடன் தேவஸ்தானத்திற்க்கு சொந்தமான கோயில்களை திறக்க நிர்வாகம் ஆலோசித்து வருகிறது,

அதன்படி கீழ் கண்ட கட்டுபாட்டு விதிகள் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • திருமலை நுழைவாயிலில் காய்ச்சல் பரிசோதனைக்கு பின்னரே பக்தர்களை அனுமதிப்பது.
  • தினமும் 14 மணி நேரம் மட்டும் பகதர்களை தரிசனத்திற்க்கு அனுமதிப்பது.
  • ஒரு மணி நேரத்திற்க்கு 500 பக்தர்களை மட்டும் அனுமதிப்பது.
  • தினமும் 7000 பக்தர்களை மட்டுமே அனுமதிப்பது.
  • 100 ரூபாய் டிக்கட்டுகளை மட்டுமே ஆன்லைன் மூலம் தேதி நேரம் குறிப்பிட்டு விற்பது. கொரோனா கட்டுக்குள் வரும் வரை பொது தரிசனத்திற்க்கு அனுமதி இல்லை.
  • கோவிலுக்கு சொந்தமான தங்கும் அறைகளில் தவிர்க்க முடியாத காரணம் இருந்தால் மட்டும் இரண்டு பேருக்கு மட்டுமே அனுமதி தருவது.

மேலும் திருமலையில் நுழைவதற்கே நாள் ஒன்றுக்கு இத்தனை வண்டிகள் மட்டுமே, அதுவும் தரிசனத்திற்க்கு 3 மணி நேரம் முன்னர் மட்டுமே அனுமதிப்பது என்றும் தரிசனம் முடிந்தவுடன் உடனடியாக அவர்கள் திரும்ப அறிவுறுத்தப்படுவார்கள் என கூறப்படுகிறது.

மே 17ம் தேதி முதல் சோதனை முயற்ச்சியாக கோவில் ஊழியர்களை தரிசனத்துக்கு அனுமதிப்பது. தொடர்ந்து 15 நாட்களுக்கு திருப்பதி, திருமலையில் வசிக்கும் உள்ளூர் மக்களை அனுமதிப்பது, அதன் பின்னர் சித்தூர் மாவட்டத்தில் உள்ள மக்களை அனுமதிப்பது, அதனை தொடர்ந்து வெளியூர் பக்தர்களை அனுமதிப்பது என்ற முடிவை தேவஸ்தான நிர்வாகம் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று 1 லட்சத்தை எட்டியது : நீளும் பட்டியலால் பதற்றத்தின் உச்சத்தில் மக்கள்..!!

0

சீனாவின் வூகான் மாநகரில் தொடங்கி தற்போது 210 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் தொற்றால் உலக நாடுகளில் உள்ள 300 கோடிக்கும் மேற்பட்டோர் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் கோரத் தாண்டவத்தால் இதுவரை 47 லட்சத்து 86 ஆயிரத்து 672 பேருக்கு மேல் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 17 ஆயிரத்தை கடந்துள்ளது, மேலும் 17 லட்சத்து 76 ஆயிரத்து 641 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் முதல் 35 இடங்களில் உள்ள நாடுகளின் விபரங்கள் பின்வருமாறு.

இந்தியாவில் கொரோனா தொற்று 1 லட்சத்தை எட்டியது : நீளும் பட்டியலால் பதற்றத்தின் உச்சத்தில் மக்கள்..!!

இந்தியாவில் நோய் தொற்று ஏற்பட்டுள்ளோரின் மொத்த எண்ணிக்கை 96,169 ஐ கடந்துள்ளது, அதில் பலியானார்களின் மொத்த எண்ணிக்கை 3,029 ஆக தெரிகிறது. இதுவரை சிகிச்சை பெற்று 36,824 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மாநில அளவிலான விபரங்கள் பின்வருமாறு(நோய் தொற்று ஏற்பட்டுள்ளவர்கள் / இறந்தவர்கள்):

மகாராஷ்டிரா – 33,053/1,198
டெல்லி – 10,054/160
குஜராத் – 11,379/659
தமிழ்நாடு – 11,224/78
தெலுங்கானா – 1,597/35
கேரளா – 630/04
ராஜஸ்தான் – 5,202/131
உத்தரபிரதேசம் – 4,605/118
ஆந்திர பிரதேசம் – 2,474/50
கர்நாடகா – 1,246/37
மத்திய பிரதேசம் – 5,236/252
ஜம்மு & காஷ்மீர் – 1,289/15
மேற்கு வங்கம் – 2,825/244
பஞ்சாப் – 1,980/37
ஹரியானா – 928/14
பீகார் – 1,391/09
அசாம் – 107/02
சண்டிகர் -196/03
உத்தர்கண்ட் – 93/01
லடாக் – 43/0
அந்தமான் & நிக்கோபார் -33/0
சத்தீஸ்கர் – 93/01
கோவா – 38/0
இமாச்சல பிரதேசம் – 90/03
ஒடிசா – 876/04
பாண்டிச்சேரி – 18/01
மணிப்பூர் – 07/0
ஜார்க்கண்ட் – 223/03
மிசோரம் – 01/0
அருணாச்சலப் பிரதேசம் – 1/0
திரிபுரா – 167/0
நாகாலாந்து – 01/0/01
மேகாலயா – 13/01
தாத்ரா நகர் ஹாவலி – 01/0

தமிழகத்தில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 11,760 ஆக உயர்ந்துள்ளது. அதில் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 81 ஆக தெரிகிறது, பூரண குணமடைந்து 4,406 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

மாவட்டட்ட அளவில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை(நோய் தொற்று ஏற்பட்டவர்கள் / இறந்தவர்கள்);

இந்தியாவில் கொரோனா தொற்று 1 லட்சத்தை எட்டியது : நீளும் பட்டியலால் பதற்றத்தின் உச்சத்தில் மக்கள்..!!

இந்த தகவல்கள் வெவ்வேறு நாடுகளில் அதிகாரப்பூர்வமாக வெளியானதன் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.

மதம் குறித்த அவதூறு பதிவு – அரேபியாவில் வேலையை விட்டு நீக்கப்பட்ட இந்தியர்

0

கடந்த சில வருடங்களாக மற்ற மதத்தை இழிவுபடுத்தி சமூக வலைத்தளங்களில் பகிர்வதை சில விஷமிகள் செய்து வருகின்றனர்.

சமீபத்தில் இஸ்லாம் மதம் குறித்து இந்தியர்கள் சிலர் பதிவு செய்வதை குறித்து அரபு நாட்டை சேர்ந்த ஆட்சியாளர்கள் கண்டனம் தெரிவித்தனர். இது போன்ற இழிவான செயல்கள் அவர்கள் நாட்டில் அதிக அளவில் வேலை பார்க்கும் இந்தியர்களை பாதிக்கும் எனவும் கூறியிருந்தனர்.

இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன் மதம் குறித்த அவதூறான பதிவால் அரேபிய அரசு நிறுவனத்தில் வேலை செய்து வந்த இந்தியர் வேலையை விட்டு தூக்கப்பட்டு இந்தியாவிற்குத் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்சிலுள்ள ராஸ் அல் கைமா எனும் இடத்திலுள்ள சுரங்க நிறுவனத்தில் பணி செய்து வந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த பிரஜ்கிஷோர் தனது ஃபேஸ் புக் பதிவால் வேலை இழந்துள்ளார்.

அவர் தனது ஃபேஸ்புக் பதிவில் இந்தியாவில் கொரோனா பரவியதற்க்கு சிலர் தான் காரணம் என்று குறிப்பிட்டிருந்தவர், டில்லியில் நடந்த வன்முறையை ‘தெய்வீக நீதி’ என கூறியிருக்கிறார்.

இதனையடுத்து இவரை வெலையிலிருந்த் நீக்கியுள்ள நிர்வாகம் “சகிப்புத்தன்மை, சமத்துவம் ஆகியவற்றை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு ஊக்குவித்து வருகிறது. இதுகுறித்து, அனைத்து ஊழியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. எந்த மதம், இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, இதுபோன்ற நடத்தையை நிறுவனம் ஏற்றுக் கொள்ளாது. மீறினால், பதவி நீக்கம் செய்யப்படுவர்” என்று கூறியுள்ளது.

வேலைக்கு சென்ற நாட்டில் அதை மட்டும் செய்து வந்தால் இந்த நிலை வந்திருக்குமா?

அந்த போட்டியில் நான் சச்சினுடன் விளையாடி இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்! விராட் கோலி ஓபன் டாக்

0

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கருடன் விளையாடிய போட்டிகள் குறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி ருசிகரமான பதிலை கூறியுள்ளார்.

இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரியுடன் இன்ஸ்டாகிராமில் லைவ்வாக கோலி பேசியபோது, சச்சின் குறித்து தன்னுடைய அபிமானத்தை தெரிவித்தார். இதில் கேள்வி ஒன்றுக்கு கோலி பதில் அளித்தது சுவாரஸ்யமாக இருந்துள்ளது.
நான் இந்த போட்டியில் விளையாடி இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்த போட்டி எது என்ற கேள்விக்கு, 1998 ஆம் ஆண்டு கோக கோலா கப் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டி என்று கோலி கூறினார்.

உடனே, இறுதி போட்டியா.? அல்லது அதற்கு முந்தைய போட்டியா என்று சுனில் சேத்ரி இடையில் கேள்வியெழுப்ப, நாம் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய போட்டி என்று கோலி பதிலளித்தார். மேலும் அந்த விறுவிறுப்பான போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 284 ரன்களை குவித்தது. இதையடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி வீரர்கள் சரசரவென விக்கெட்டுகளை இழக்க தெண்டுல்கர் மட்டும் தனியாக 131 பந்துகளில் 143 ரன்களை விளாசினார்.

இந்த சுவாரஸ்யமான போட்டியில் இந்திய அணி தோற்றாலும், இதற்கு பின்னர் நடந்த இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி வெற்றிக்கனியை இந்தியா சுவைத்தது குறிப்பிடத்தக்கது. விராட் கோலியின் விருப்பமான கிரிக்கெட் பதில் இணையத்தில் பேசப்பட்டு வருகிறது.

இந்திய அணி கிரிக்கெட் வீரார்களுக்கு மத்திய அரசு தளர்வு! ரசிகர்கள் உற்சாக வரவேற்பு!!

0

ஊரடங்கு அறிவித்த போதும் இந்திய கிரிக்கெட் வீரருக்கான பயிற்சி முகாம் துவங்கியது என அறிவிக்கப்பட்டுள்ளது கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்தது இதனால் இந்திய கிரிக்கெட் அணி பயிற்சிகளில் பங்கேற்கவில்லை.

13வது ஐபிஎல் தொடரும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இந்திய கிரிக்கெட் வீரர்கள் தங்களது வீடுகளில் உடற்பயிற்சியில் கவனம் செலுத்தி வருகின்றனர் இதனிடையே நான்காவது கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன இதன்படி ரசிகர்கள் இல்லாமல் கிரிக்கெட் போட்டியில் நடத்துவது தொடர்பாக அனுமதி தரப்பட்டது.

இதனால் இந்திய வீரர்கள் பயிற்சி முகாம் துவங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்பொழுது பயிற்சிக்கு வாய்ப்பில்லை என தெரிகிறது. இது குறித்து இந்திய கிரிக்கெட் போர்ட் பிசிசிஐ பொருளாளர் கூறியது மே 31-ஆம் தேதி வரை விமான போக்குவரத்து மற்றும் மக்கள் நடப்பதற்கான சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் இந்திய அணியின் வீரர்கள் பங்கேற்கும் பயிற்சி முகாம் நடத்துவது பிசிசிஐ அவசரம் காட்டவில்லை காத்திருக்க முடிவு செய்துள்ளோம் என்று கூறியுள்ளார்.

அதேநேரம் மாநில கிரிக்கெட் சங்கங்கள் ஏற்பாடு செய்ய உள்ளது. இதற்கு தேவையான உதவிகளையும் தயாரித்து வருகிறோம் தற்போதுள்ள சூழலில் நல்ல முறையில் முன்னேற்றம் ஏற்பட்டதும் இந்திய அணிக்கு நல்ல திட்டத்தை தயாரிக்க பிசிசிஐ முயற்சித்து வருகிறது. ஏனெனில் அவசரப்பட்டு எடுக்கும் முடிவுகள் வீரர்கள் பயிற்சியாளர்கள் பணியாளர்கள் பாதுகாப்புகளுக்கு எந்தவித குறைபாடுகளும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே சற்று காத்திருப்போம் இந்தியா எடுக்கும் முயற்சிகளுக்கு இடையூறு ஏற்படாமல் உறுதுணையாய் இருப்போம் என கூறினார்.

ஒரு லட்சம் மக்களில் இத்தனை பேருக்கு தான் கொரோனா – நம்பிக்கை தரும் சுகாதார அமைச்சகம்

0

கடந்த ஜனவரி மாத இறுதியில் இந்தியாவில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்திய அளவில் 96,169 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது வரை 36,824 பேர் கொரோனாவிலிருந்து மீண்டும், 3,029 பேர் இறந்துள்ளனர்.

உலக அளவில் இந்தியா கொரோனா தொற்று பாதித்த நாடுகளின் வரிசையில் 11வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் முதலில் அங்கொன்றும் இங்கொன்றுமாக பரவ துவங்கிய கொரோனா தொற்று தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் மக்களுக்கு ஆறுதல் தரும் விதமாக மத்திய சுகாதார அமைச்சகம் கொரோனா தொற்று குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் “ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் இதுவரை ஊக்கமளிக்கும் முடிவுகளையே காட்டியுள்ளன. இந்தியாவில் தற்போது இரட்டிப்பு விகிதம் அடைய 7 நாட்கள் என்ற அளவில் உள்ளன. தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டவர்களின் விகிதம் 38.29 சதவீதமாக உள்ளது. இந்திய மக்கள் தொகையில் ஒரு லட்சம் பேரில் 7.1 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு உள்ளது” என்று கூறியுள்ளது.

இது மக்களுக்கு ஆறுதலையும், நிம்மதியையும் தந்துள்ளது.

மூன்று மாதங்களுக்கு 144 தடை நீட்டித்த மாநில அரசு! கொரோனாவை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கை.!!

0

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் மேலும் மூன்று மாதங்களுக்கு 144 தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சத்தீஸ்கரில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வகையில் அம்மாநில அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக மாநில உள்துறை அமைச்சகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் சமர்பித்த அறிக்கையின்படி நிலைமை இன்னும் சரியான கட்டுப்பாட்டில் வரவில்லை என்றும், மேலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் மே 31 ஆம் தேதி வரை சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள உணவகங்கள், பார்கள், கிளப்புகள், உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் வளாகங்கள் போன்ற மக்கள் அதிகம் கூடும் பகுதிகள் அடுத்த உத்தரவு வரும்வரை மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

அடுத்த மூன்று மாதங்களுக்கு 144 தடை நீட்டிக்கப்படுவதாகவும் அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 92 பேராக அதிகரித்துள்ளது. 33 பேர் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் 55 பேர் மருத்துவ சிகிச்சையின் மூலம் குணமடைந்து வீட்டிற்கு சென்றது குறிப்பிடத்தக்கது.

கொரோனா சோகத்தில் மத்திய அரசு விவசாயிகளுக்கு கொடுத்த ஷாக்

0

தமிழகத்தில் விவசாயிகள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வந்தாலும் அவர்களுக்கு ஆறுதலளிக்கும் விதமாக தமிழக அரசு இலவச மின்சாரத்தை வழங்கி உதவி செய்து வருகிறது. இந்நிலையில் விவசாயிகளுக்கு வழங்கி வரும் இலவச மின் திட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசு மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதாவது மாநில அரசால் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சார திட்டத்தை ரத்து செய்யுமாறு மாநில அரசுகளை மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. அதேபோல் மத்திய அரசு செயல்படுத்த போகும் புதிய மின்சார சட்டம் நடைமுறைக்கு வந்தால், தமிழ்நாட்டில் 21 லட்சம் விவசாயிகள் இலவச மின் திட்டத்தை பயன்படுத்தி வரும் நிலையில் அவர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது மட்டுமின்றி தற்போது மாநில அரசால் குடிசைகள் மற்றும் பசுமை வீடுகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம், வீடுகளுக்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரம், நெசவாளர் உள்ளிட்ட சில தொழில் பிரிவினருக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் உள்ளிட்ட சலுகைகளும் நிறுத்தப்படும்.

ஒரு வேளை மாநில அரசு வழங்கும் இலவச மின்சாரத்தால் தற்போது பயனடைந்து வரும் இந்த பிரிவினருக்கு உதவ மாநில அரசு நினைத்தால், அவர்கள் பயன்படுத்தும் மின்சாரத்திற்கான தொகையை மானியமாக அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தலாம்.

மேலும் தற்போதுள்ள இந்த இலவச மின்சார திட்டத்தை அனைத்து மாநிலங்களும் வரும் 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் ரத்து செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் குறைந்தபட்சம் ஒரு மாவட்டத்திலாவது இதை செயல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு மாநில அரசுகளை அறிவுறுத்தியுள்ளது. மத்திய அரசு வெளியிட்டுள்ள இச்செய்தி விவசாயிகள் மட்டுமின்றி மாநில அரசு வழங்கி வரும் இலவச மின்சாரத்தை பயன்படுத்தி வரும் பல சிறு குறு நெசவு தொழிலாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

படைப்பு சுதந்திரத்தை கேள்விக்குறியாக்கும் தலித் ஆதரவு அரசியல்

கடந்த சில தினங்களுக்கு முன்பு திமுக எம்பிக்கள் தலைமை செயலாளர் சண்முகத்தை சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது கொரோனா நிவாரண உதவிக்காக திமுக நடத்திய ஒன்றிணைவோம் வா திட்டத்தின் வழியாக பொதுமக்களிடம் பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை திமுகவை சேர்ந்த தயாநிதிமாறன் மற்றும் டி.ஆர்.பாலு உள்ளிட்ட எம்பிக்கள் தலைமை செயலாளர் சண்முகத்திடம் கொடுத்தனர். இந்த நிகழ்வின் போது திமுக எம்பிக்களுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கவில்லை என்ற குற்றசாட்டு எழுந்தது.

இது குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது திமுக எம்பி தயாநிதிமாறன் தலைமை செயலாளர் சண்முகத்தின் மீது பல்வேறு குற்றசாட்டுக்களை முன் வைத்தார். அப்போது அவர் தலைமை செயலாளரை விமர்சனம் செய்வதாக எண்ணி நாங்கள் என்ன தாழ்த்தப்பட்டவர்களா? என்று கேள்வி எழுப்பினர்.சாதி ஒழிப்பு மற்றும் பெரியார் கொள்கைகளை பின்பற்றுவதாக கூறிக் கொள்ளும் திமுகவிடருந்து இப்படி ஒரு விமர்சனத்தை யாரும் எதிர்பார்த்திருக்கவே முடியாது. குறிப்பாக விசிக மற்றும் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட தலித் ஆதரவுடைய கட்சிகளை கூட்டணியில் வைத்து கொண்டு தயாநிதிமாறன் இவ்வாறு தாழ்த்தப்பட்ட மக்களை புண்படுத்தும் வகையில் பேசியது கடும் விமர்சனத்திற்குள்ளானது.

இதனையடுத்து விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் இது குறித்து தன்னுடைய கருத்தை ட்விட்டரில் பதிவு செய்திருந்தார். அதில் “தலைமைச்செயலாளர் குறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியது சரி. ஆனால்,அந்தவேகத்தில் ‘நாங்கள் தாழ்த்தப் பட்டவர்களா’என்றது அதிர்ச்சியளிக்கிறது. அதில் உள்நோக்கமில்லை; என்றாலும் இம்மண்ணின் மைந்தர்களின் உள்ளத்தைப் பாதித்திருக்கிறது.இது தோழமை சுட்டுதல்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் திமுக கூட்டணி கட்சி என்பதால் தாழ்த்தப்பட்ட மக்களை புண்படுத்தும் வகையில் பேசியிருந்தும் திருமாவளவன் இதை கண்டு கொள்ளாமல் கடந்து செல்வதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரவலாக குற்றசாட்டு எழுந்தது. மேலும் இது குறித்து சமூக வலைத்தளங்களில் திமுக மற்றும் விசிக மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து மீம்ஸ் மற்றும் கார்ட்டூன்கள் வெளியாகின.

https://twitter.com/VarmaCartoonist/status/1261563470329217024

இதில் தலித் தலைவர்கள் திமுக தலைவரின் காலில் விழுந்து அவரின் ஷூவை நாக்கால் நக்குவது போல வெளியான கார்ட்டூன் கடும் சர்ச்சையை எழுப்பியது.குறிப்பாக இது சாதிய கண்ணோட்டத்துடன் வெளியிட்டதாகவும் தலித் ஆதரவு அரசியல் தலைவர்கள் குற்றம் சாட்டினர்.இதனையடுத்து Varma cartoonist-வர்மா கார்ட்டூனிஸ்ட் என்ற பெயரில் வெளியான இந்த கார்ட்டூனை வெளியிட்ட நபரை காவல் துறையினர் தற்போது கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த கால தமிழக அரசியல் வரலாற்றில் கார்ட்டூனில் மோசமாக சித்தரிக்கப்படாத அரசியல் தலைவர்கள் என்று யாருமேயில்லை. இந்திய பிரதமர் மோடி,தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி,துணை முதல்வர் ஒ. பன்னீர்செல்வம் மற்றும் பிரபல அரசியல் தலைவர்களான பாமகவின் ராமதாஸ்,அன்புமணி ராமதாஸ்,நாம் தமிழர் கட்சியின் சீமான் என அனைவரையும் தங்களுடைய கற்பனைக்கு ஏற்ப படு மோசமாக சித்தரித்து கார்ட்டூன் வெளியிட்டுள்ளனர்.

No photo description available.
No photo description available.
Image may contain: 3 people, text
Image may contain: text
Image may contain: 1 person

குறிப்பாக சமீபத்தில் தமிழக முதல்வரையே ஆடையில்லாமல் கார்ட்டூன் வரைந்து வெளியிட்டனர். அப்போதெல்லாம் இதை வரைந்தது பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் ஆதரவு பெற்றவர்கள் என்று தெரிந்திருந்தும் இதை கருத்து சுதந்திரம் என்று அந்தந்த அரசியல் கட்சி தலைவர்கள் பெருந்தன்மையோடு கடந்து சென்றனர்.

ஆனால் தற்போது தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய திமுக எம்பி தயாநிதிமாறனை கண்டிக்காத தலித் தலைவர்களை விமர்சிக்கும் வகையில் உண்மையை கார்ட்டூன் வரைந்து வெளிப்படுத்தியதை பெரும்பாலோனோர் வரவேற்றுள்ளனர். இந்நிலையில் தலித் ஆதரவு அரசியல்வாதிகள் இதை சாதிய கண்ணோட்டத்துடன் அணுகி அவரை கைது செய்திருப்பது படைப்பாளிகள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.கூட்டணி கட்சியின் எம்பி தயாநிதிமாறன் தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதை ஏற்று கொண்ட இவர்கள் அதை கண்டுக்காமல் போனவர்களை குறித்து கார்ட்டூன் வெளியிட்ட நபர் மீது குற்றம் சாட்டுவது ஏன்?

தலித் ஆதரவு படைப்பாளிகள் எழுதுவதை கருத்து சுதந்திரமாக ஏற்று கொள்ளும் இவர்களுக்கு மற்ற சமூகத்தை சேர்ந்தவர்கள் எழுதுவது மட்டும் எப்படி சாதிய அவமதிப்பாக தெரிகிறது, தலித் ஆதரவு என்ற போர்வையில் ஒருதலைப்பட்சமாக இந்த அரசியல் கட்சி தலைவர்கள் படைப்பாளிகளின் கருத்து சுதந்திரத்தை தொடர்ந்து நசுக்கி வருவதாகவும், கேள்விக்குறியாக்கி வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

தமிழக அரசின் இந்த கைது நடவடிக்கையை கண்டித்து பாஜகவின் தேசிய செயலாளர் H.ராஜா விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது.

பிரதமர் மோடிஜி அவர்களை இழிவுபடுத்தி கார்ட்டூன் வரைந்து கண்காட்சி நடத்திய லயோலா கல்லூரி முதல்வரை கைது செய்யாத காவல்துறை திருமாவளவனின் திமுக அடிமை தனத்தை சித்தரித்து கார்ட்டூன் வரைந்த கார்டூனிஸ்ட் வர்மாவை கைது செய்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது. காவல்துறையில் திமுக கருப்பாடுகள் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

மேலும் மாண்புமிகு பிரதமர் மோடி ஜி அவர்களை இழிவுபடுத்தி கார்ட்டூன் வரைந்த முகிலனை கைது செய்யாத காவல்துறை திருமாவளவனை விமரிசித்து கார்ட்டூன் வரைந்த கார்ட்டூனிஸ்ட் வர்மாவை கைது செய்தது ஏன்? காவல்துறையில் உள்ள திமுக கருப்பாடுகளை அரசு அடையாளம் காண வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து அவர் பதிவிட்டுள்ளார்.

திட்டமிட்டது போல பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுமா? ஆரம்பித்தது அடுத்த சிக்கல்

0

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்படுவதால் பன்னிரண்டாம் வகுப்பிற்கான தேர்வுகள் மட்டும் முடிவடைந்த நிலையில், பத்தாம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பிற்கான மீதமுள்ள தேர்வுகளையும் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில் வரும் ஜூன் 1 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார். இதே போல எஞ்சிய 11 ஆம் வகுப்புக்கான தேர்வு ஜுன் 2 ஆம் தேதி நடத்தப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. மேலும் இத்துடன் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகளையும் மே 27 ஆம் தேதி தொடங்க தமிழக அரசு முடிவு செய்திருந்தது.

இதனிடையே கொரோனா பாதிப்பானது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஜுனில் பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டதை தள்ளி வைக்கக்கோரி நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. ஆனால், தேர்வு எழுதும் மாணவர்களின் பெற்றோர்களே வழக்கு தொடராத நிலையில், இந்த மனுவை ஏற்க முடியாது என நீதிமன்றம் தெரிவித்தது. இதையடுத்து, ஏற்கனவே திட்டமிட்டபடி, வரும் ஜுன் 1 ஆம் தேதி முதல் தேர்வை நடத்துதவற்கான நடவடிக்கைகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், உரிய போக்குவரத்து வசதி இல்லாததால் வரும் ஜுன் 1 ஆம் தேதி ஆரம்பிக்கவுள்ள 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளி வைக்கக்கோரி தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க தலைவர் மாயவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தற்போதுள்ள ஊரடங்கு நேரத்தில் பொதுத்தேர்வு தேர்வு நடத்தப்பட்டால், மாணவர்களும், ஆசிரியர்களும் பாதிக்கப்படுவார்கள் என ஆசிரியர் சங்கம் சார்பில் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே அறிவித்துள்ளது போல வரும் ஜுன் 1 ஆம் தேதி தேர்வை நடத்த தமிழக பள்ளிக் கல்வித்துறை தயாராகி வருவதால், இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.