Home Blog Page 5642

ஆபத்தை மறைக்க மறைக்க அது பேராபத்தாக மாறும்! தமிழக அரசுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை

0

பூனை, கண்ணை மூடிக்கொண்டால், பூலோகம் இருண்டு போகுமோ – என்றொரு சொலவடை உண்டு. தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் அ.தி.மு.க அரசும் அப்படித்தான் கண்ணை மூடிக்கொண்டு பகல் கனவு கண்டு கொண்டிருக்கிறது. கொரோனா நோய்த் தொற்றுப் பரிசோதனைகளைக் குறைத்துக் கொள்வதன் மூலமாக, நோய்த் தொற்று குறைந்து வருகிறது அல்லது நோய்த்தொற்றே இல்லை என்று போலியாக வெளி உலகத்திற்குக் காட்ட நினைக்கிறது தமிழக அரசு.

தமிழகத்தில் மே 7 ம் தேதி 14,102 என்ற அளவில் இருந்த பரிசோதனைகளின் அளவானது, படிப்படியாகக் குறைக்கப்பட்டு நேற்றைய ( 16.5.2020) தகவலின்படி, 8,270 எனக் குறைந்துள்ளது. பரிசோதனை செய்யும் அளவை அரசு கிட்டத்தட்ட 40 சதவிகிதம் குறைத்துள்ளது. அதனால் நோய்த் தொற்று எண்ணிக்கையும் குறைந்து வருவதாகக் காட்டுகிறார்கள். பரிசோதனைகளைப் பரவலாக அதிகப்படுத்திய பிறகும், நோய்த் தொற்று இல்லை என்று நிரூபிப்பதுதான் நேர்மையான அரசாங்கத்தின் நெறியாக இருக்க முடியுமே தவிர, பரிசோதனையே செய்யாமல் நோயே இல்லை என்று காட்ட முயற்சி செய்வது, விபரீதத்தையே விளைவிக்கும். சாதனை அல்ல, வேதனையே!

சென்னை மாநகரத்திலேயே முறையான நடவடிக்கைகளின் மூலம், கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் கைபிசைந்து நிற்கும் அ.தி.மு.க அரசு, மாநிலம் முழுதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையைச் செயற்கையாகக் குறைத்துக் காட்டுவதற்காக, பரிசோதனை செய்யப்படும் நபர்களின் எண்ணிக்கையை படிப்படியாகக் குறைத்து, நாடகமாடி வருவதைப் போன்ற மக்கள் துரோகச் செயல் வேறு எதுவும் இருக்க முடியாது.

“காண்ட்ராக்ட் போலி கணக்கை கொரோனா சோதனையிலும் காட்டுவதா?” - அ.தி.மு.க அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

கொரோனா பரிசோதனைக்கான கருவிகளை வாங்கியதிலேயே ஊழல் செய்தது ஆளும் அ.தி.மு.க அரசு. இவர்களால் நோயையும் கட்டுப்படுத்த முடியவில்லை. கோயம்பேடு சந்தை மூலம் கொரோனா பரவலை அதிகப்படுத்திப் பார்த்துக் கொண்டிருந்த அ.தி.மு.க அரசு, இப்போது டாஸ்மாக் கடைகளின் மூலமாக அந்தக் காரியத்தைச் செய்யத் தொடங்கி உள்ளது. கோயம்பேடு சந்தைக்குள் வருபவர்களுக்கு டோக்கன் கொடுத்து, தக்க பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்தி, முறைப்படுத்த முன்யோசனையற்ற இந்த அரசு; இப்போது அதே காரியத்தை டாஸ்மாக் கடைகளுக்கு மட்டும் அக்கறையுடன் செய்து வருகிறது.

கொரோனா தொற்றுப் பரவல் குறித்த அச்சம் சிறிதும் குறையாத ஊடரங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் எதற்கு என்று பொதுமக்களும், குறிப்பாகப் பெண்களும் ‘வாட்ஸ் அப்பில்’ அனுப்பி வைக்கும் வீடியோ பதிவுகளைப் பார்த்தபிறகும் முதலமைச்சருக்கு விழிப்புணர்ச்சி ஏற்படவில்லை. டாஸ்மாக் கடைகளைத் திறப்பதற்காக, மற்ற அனைத்துக் கடைகளையும் திறந்துவிட்டார்கள். இதோ கொரோனாவே இல்லை என்ற தோற்றத்தை சில நாட்களாக உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதற்காகத்தான் நாள்தோறும் செய்யப்பட்டு வந்த பரிசோதனைகளையும் குறைத்துவிட்டார்கள்.

பரிசோதனைகளை அதிகமாக நடத்தியதால் தான் தொற்று உறுதியானவர் எண்ணிக்கையும் அதிகமாகத் தெரியவந்தது. கடந்த சில நாட்களாகப் பரிசோதனையைக் குறைத்து, தொற்று உறுதியானவர் எண்ணிக்கையையும் குறைத்துக் காட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.

தமிழக அரசால் அமைக்கப்பட்ட மருத்துவர் குழுவுடன் கடந்த 14ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார். கொரோனா தொற்றுக்கான சிகிச்சை வழிமுறைகள் குறித்து ஆராயவும், சர்வதேச அளவில் நிலவும் தடுப்பு முறைகளைக் கண்காணித்து அரசுக்குச் சொல்லவும் இக்குழு அமைக்கப்பட்டுள்ளது. 19 மருத்துவர்கள் இதில் இருக்கிறார்கள்.

“காண்ட்ராக்ட் போலி கணக்கை கொரோனா சோதனையிலும் காட்டுவதா?” - அ.தி.மு.க அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஐ.சி.எம்.ஆர். டாக்டர் பிரதீப் கவுர், டாக்டர் குகநாதன் ஆகிய இருவர் கலந்து கொண்டுள்ளார்கள். அவர்கள் இருவரும் தலைமைச் செயலகத்தில் பேட்டி கொடுத்தார்கள். அவர்கள் என்ன சொல்லி இருக்கிறார்கள் என்பதை முதலமைச்சரோ, அமைச்சரோ, அதிகாரிகளோ ஊன்றிக் கவனித்தார்களா என்பதே தெரியவில்லை.

”தமிழகத்தில் அதிக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. இந்த பரிசோதனையைக் குறைக்கவே கூடாது. ஆனால் கூட்டலாம் என்று அரசுக்குப் பரிந்துரை செய்திருக்கிறோம். அதிகச் சோதனைகளால் தான் தொற்றுப் பரவலைக் கண்டறியமுடியும். தொற்று அதிகமாக இருப்பதினால் பயப்படக்கூடாது. ஆனால் எங்கே அதிகமாக இருக்கிறது என்பதைக் கவனித்து அங்கே மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை முடிவு செய்ய வேண்டும்.

கொரோனா தொற்று அறிகுறி உள்ளவர்களைச் சீக்கிரமாகக் கண்டறிந்துவிட்டால் இறப்பைத் தடுத்துவிடலாம். சில நேரங்களில் தொற்று அதிக அளவில் அலையாக எழும்; சில நேரங்களில் குறைவாக எழும். அதிகம் பரவும் நேரங்களில் இந்த நடைமுறைகளைப் பின்பற்றினால் பரவாமல் கட்டுப்படுத்திவிடலாம்” என்று அந்த நிபுணர்கள் சொல்லி இருக்கிறார்கள்; இதனை அரசுக்குச் சொன்னதாகவும் சொல்லி இருக்கிறார்கள். இவ்வளவு தெளிவாக அவர்கள் சொன்னதற்குப் பிறகும், பரிசோதனைகளை அரசாங்கம் குறைக்கிறது என்றால் இந்த நிபுணர் குழு எதற்காக? கண்துடைப்பு நாடகத்தை அனைவருக்கும் காட்டுவதற்குத் தானே ? மக்களின் உயிரோடு இப்படியா பொறுப்பற்று விளையாடுவது?

மரபணு மாற்றத்துக்குட்படும் கொரோனா வைரஸ் புதிய வடிவில் மீண்டும் தாக்குதலைத் துவங்கும் என்றும், கனமழை காரணமாகவும் நோய் பரவும் விகிதம் கூடும் என்றும் சில நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

“காண்ட்ராக்ட் போலி கணக்கை கொரோனா சோதனையிலும் காட்டுவதா?” - அ.தி.மு.க அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

இதனையும் மீறி பரிசோதனைகளைக் குறைப்பது எவ்வளவு அபத்தமானது, ஆபத்தானது என்பதைத் தமிழக அரசு உணர்ந்ததாகத் தெரியவில்லை. இப்பரிசோதனை செய்வதற்கான ஆர்.டி.பி.சி.ஆர். உபகரணங்கள் போதுமான அளவு இல்லையா? துரித பரிசோதனைக் கருவிகளான ரேபிட் கிட்டுகள் இல்லையா? அல்லது கருவிகள் அனைத்தும் இருந்தும் பரிசோதனை செய்ய வேண்டாம் என்று கெடுபிடி செய்துகொண்டு இருக்கிறார்களா? பரிசோதனைகள் செய்யாமல் கொரோனா நோய்ப் பரவல் இல்லை என்று சொல்லிக் கொள்வது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வது; விளக்கைப் பிடித்துக்கொண்டு ஆழமான கிணற்றில் இறங்குவதைப் போன்றது. ஆபத்தை மறைக்க மறைக்க மறைக்க, அது பேராபத்தாக மாறும் என்று மீண்டும் மீண்டும் எச்சரிக்கிறேன்.

பரிசோதனைகளை அதிகப்படுத்துங்கள். மாவட்ட வாரியாக தினந்தோறும் பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையை ஒளிவு மறைவின்றி வெளியிடுங்கள். அதன்மூலம் நோய்ப்பரவல் இல்லை என்பதை நிரூபியுங்கள். காண்ட்ராக்ட்டுகளில் போலிக் கணக்குகள் எழுதுவதைப் போல, கொரோனாவிலும் பொய்க்கணக்கு எழுதி பொழுது போக்காதீர்கள்; அப்பாவிப் பொது மக்களை ஏமாற்றாதீர்கள்; வரலாற்றுப் பழியை வாங்கிச் சுமக்காதீர்கள் என்று தமிழக அரசுக்கு எச்சரிக்கை செய்கிறேன் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

கடன்தாரர்களை கசக்கிப் பிழியும் தனியார் வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்க மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை!

0

ரிசர்வ் வங்கி உத்தரவை மதிக்காமல் கடன்தாரர்களை கசக்கிப் பிழியும் தனியார் வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

இந்தியா முழுவதும் அனைத்துத் தரப்பு மக்களும் வாழ்வாதாரம் இழந்து தவிப்பதைக் கருத்தில் கொண்டு, கடன் தவணைகளை செலுத்த இந்திய ரிசர்வ் வங்கி 3 மாத கால அவகாசம் வழங்கியுள்ள நிலையில், அதை மதிக்காமல் வாகனக் கடன் தவணைகளை உடனடியாக செலுத்தும்படி கடன்தாரர்களுக்கு தனியார் வங்கிகளும், நிதி நிறுவனங்களும் நெருக்கடி கொடுத்து வருகின்றன. சில நிதி நிறுவனங்கள் வழக்க்கம் போலவே வாடிக்கையாளர்களுக்கு மிரட்டல் விடுத்து வருவது கண்டிக்கத்தக்கது ஆகும்.

கொரோனா வைரஸ் பரவல் அச்சம் மற்றும் ஊரடங்கு ஆணை காரணமாக அமைப்பு சாரா தொழில் துறையினர் அனைவரும் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர். அவர்களின் நிலையைக் கருத்தில் கொண்டு பாட்டாளி மக்கள் கட்சி தான், பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட அனைத்து வகையான கடன்களுக்குமான மாதத் தவணைகளை 3 மாதங்களுக்கு ஒத்தி வைக்கும்படி மத்திய அரசுக்கும், இந்திய ரிசர்வ் வங்கிக்கும் முதன்முதலில் கோரிக்கை விடுத்தது. அதைத் தொடர்ந்து அனைத்து வகையான கடன்களுக்குமான மார்ச், ஏப்ரல், மற்றும் மே மாத தவணைகளை செலுத்தத் தேவையில்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது. ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு தொடர்பான விமர்சனங்கள் ஒருபுறம் இருந்தாலும் கூட, அந்த அறிவிப்பு, வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மக்களுக்கு மாதாந்திர கடன் தவணை செலுத்தும் சுமையிலிருந்து தற்காலிக விடுதலை அளித்தது என்பது உண்மை.

ஆனால், தனியார் வங்கிகள் மற்றும் வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களில் கடன் பெற்றவர்களுக்கு அந்த விடுதலை கூட கிடைக்கவில்லை. ரிசர்வ் வங்கி அறிவிப்பின்படி அனைத்து வகையான கடன் தவணைகளும் 3 மாதங்களுக்கு தானாக ஒத்திவைக்கப்பட்டிருக்க வேண்டும்; ரிசர்வ் வங்கி அறிவித்த சலுகை தங்களுக்குத் தேவையில்லை என்றும், கடன் தவணையை தொடர்ந்து செலுத்துவதாகவும் எவரேனும் கடிதம் கொடுத்தால் அவர்களிடம் மட்டும் தான் கடன் தவணை தொடர்ந்து வசூலிக்கப்பட வேண்டும். பெரும்பான்மையான பொதுத்துறை வங்கிகள் இந்த அணுகுமுறையைத் தான் பின்பற்றுகின்றன. ஆனால், தனியார் வங்கிகளும், நிதிநிறுவனங்களும் இதை பின்பற்றாமல் அனைத்து தவணைகளையும் செலுத்தும்படி கட்டாயப்படுத்துகின்றன. இதனால் கடன்தாரர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் ஒருவர் அவரது தாயாரின் மருத்துவச் செலவுகளுக்காக காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து பெற்ற தொகை அவரது வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்ட அடுத்த நிமிடமே, அவரது வாகனக்கடன் தவணைக்காக தனியார் வங்கியிடமிருந்து தன்னிச்சையாக எடுக்கப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. வங்கிக் கணக்குகளில் பணம் இல்லாத கடன்தாரர்கள் கடன்தவணை செலுத்தத் தவறி விட்டதாக அறிவித்து, அவர்களை கடன் வசூல் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் தினமும் தொலைபேசியில் அழைத்து மிரட்டல் விடுத்து வருகின்றனர். அடுத்தக்கட்டமாக வீடுகளுக்கு தனியார் வங்கிகளும், நிதி நிறுவனங்களும் குண்டர்களை அனுப்புமோ என்ற அச்சத்தால் தனியார் நிறுவனங்களிடம் வாகனக்கடன் பெற்ற மக்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

வங்கிகளிடம் வாகனக்கடன் பெற்றவர்கள் வாகனங்களை இயக்குவதன் மூலம் கிடைக்கும் வாடகை வருமானத்தைக் கொண்டு தான் கடன் தவணையை செலுத்த வேண்டும். ஊரடங்கு காரணமாக வாகனங்களை இயக்க முடியாத நிலையில், கடன்தாரர்களிடம் பணம் இல்லை; அதனால் அவர்களால் தவணை செலுத்த முடியாது என்பதை உணர்ந்ததால் தான் அவற்றை ரிசர்வ் வங்கி ஒத்திவைத்தது. கடன் தவணை ஒத்திவைப்புக்காக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள வழிமுறைகளின்படி ஒத்திவைக்கப்படும் கடன் தவணைகளுக்கான மொத்த தொகை எவ்வளவோ, அதை செலுத்துவதுடன், அதற்கான கூடுதல் வட்டியாக 3 முதல் 5 மடங்கு தொகையை செலுத்த வேண்டியிருக்கும். இது மிக அதிகமான தொகை என்றாலும் கூட, உடனடியாக கடன் தவணை செலுத்துவதிலிருந்து விடுதலையாக இதைத் தவிர வேறு வழியில்லை என்பதால் தான் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள திட்டத்தை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

அத்தகைய சூழலில், வருமானமே இல்லாதவர்களிடம் கடன் தவணையை செலுத்தும்படி மிரட்டுவதும், மருத்துவச் செலவுகளுக்காக காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து பெற்ற காப்பீட்டு தொகையை தனியார் வங்கிகள் தன்னிச்சையாக பறித்துக் கொள்வதும் மிகக்கொடிய மனித உரிமை மீறலாகும். ஏற்கனவே வருமானமின்றி வறுமையில் வாடும் மக்களுக்கு இது கூடுதல் மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. வாடகை வாகன உரிமையாளர்களின் பொருளாதார நிலைமை கருத்தில் கொண்டு தான் சாலைவரி உள்ளிட்ட வரிகளை செலுத்துவதற்கான காலக்கெடுவை தமிழக அரசு நீட்டித்திருக்கிறது. ஆனால், அரசுக்கு இருக்கும் கருணை கூட தனியார் வங்கிகளுக்கு இல்லை. இது இரக்கமற்ற செயலாகும்.

எனவே, இவ்விஷயத்தில் மத்திய அரசு தலையிட்டு, வாகனக்கடன் பெற்றவர்களிடம் கடன் தவணையை கட்டாயப்படுத்தி வசூலிக்கும் தனியார் வங்கிகள் மற்றும் வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 3 மாத கால கடன் தவணை ஒத்திவைப்புக்கான வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், எந்த விதமான கூடுதல் கட்டணமும் இன்றி மார்ச் 31-ஆம் தேதியன்று எவ்வளவு நிலுவைத் தொகை உள்ளதோ, அதை மட்டும், மாதக் கடன் தவணைத் தொகையை அதிகரிக்காமல் வசூலிக்குமாறும் வங்கிகளுக்கு மத்திய அரசு ஆணையிட வேண்டும் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் 5000 ரூபாய் நிவாரணம் – அலைபேசி அழைப்பின் மூலம் 1,28,000 ரூபாய் கொள்ளை

ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் 5000 ரூபாய் நிவாரணம் – அலைபேசி அழைப்பின் மூலம் 1,28,000 ரூபாய் கொள்ளை

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சின்னேரி கிராமத்தில் உள்ள இருளர் பழங்குடியினரைச் சேர்ந்த 45 பேருக்கு இது பேரழிவு தரும் நாளாக அமைந்துள்ளது. இந்தியா முழுவதும் லட்ச கணக்கானவர்களைப் போன்ற குடும்பங்கள் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் வீழ்ச்சியிலிருந்து வெளிவர முயற்சித்து கொண்டிருக்கும் இந்நேரத்தில், ​​அடையாளம் தெரியாத ஒரு மோசடி பேர்வழி இருளர் இன மக்களின் வாழ்நாள் சேமிப்பைக் கொள்ளையடித்துள்ளான்.

இருளர் இன பழங்குடியினத்தைச் சேர்ந்த சுமார் 45 நபர்கள் ஒரு மோசடி பேர்வழி பல ஆண்டுகளாக சேமித்த வைத்திருந்த சுமார் 1,28,000 ரூபாயை இழந்துள்ளனர். அவளின் அலைபேசி எண்ணிற்க்கு அழைந்துள்ள அந்த ஆசாமி பாரத பிரதமர் மோடி கொரோனா நிவாரண நிதியாக ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் 5000 ரூபாய் செலுத்துவதாக கூறி அவர்களின் டெபிட் கார்ட் தகவல்களை பெற்று அவர்கள் வங்கி கணக்கிலிருந்த மொத்த பணத்தையும் சுருட்டியிருக்கிறான்.

சின்னேரி கிராமத்தில் வசிப்பவரும், பெண்களின் சுய உதவிக்குழுவின் (சுய உதவிக்குழு) உறுப்பினருமான ராணிக்கு அடையாளம் தெரியாத ஒருவரிடமிருந்து அழைப்பு வந்துள்ளது. இது குறித்து அவர் தெரிவிக்கையில் “அவன் தான் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவிலிருந்து அழைப்பதாகவும், பிரதமர் மோடியால் தொடங்கப்பட்ட திட்டம் குறித்து அவருடன் பேச விரும்புவதாகவும் கூறினான். கோவிட் -19 க்கு நிவாரணப் பணமாக இருளர் குடும்பத்திற்கு ரூபாய் 5000 வழங்குவதாக அவர் கூறினான், மேலும் எனது டெபிட் கார்டு விவரங்களை என்னிடம் கேட்டான். அவர் என்னை அறிந்திருப்பதால் அவர் விவரங்களையும் CVV எண்ணையும் அவருடன் பகிர்ந்து கொண்டேன். நான் இதைப் பற்றி கிராம மக்களுக்குத் தெரிவித்தேன், ஏனென்றால் எனக்கு மட்டும் நன்மை கிடைத்தாலும் அது நன்றாக இருக்காது” எனறார்.

சனிக்கிழமை காலை 6 மணியளவில் தொடங்கிய அலைபேசி அழைப்பு காலை 11.30 மணி வரை நீடித்துள்ளது, ஏனெனில் ராணி தன்னைச் சுற்றியுள்ள மற்றவர்களை அழைத்து அவர்களை அவனுடன் பேச வைத்துள்ளார். அவற்றில் சிலவற்றிலிருந்து ஒன் டைம் கடவுச்சொற்கள் (OTP கள்) உட்பட அனைத்து விவரங்களையும் அவர் சேகரித்துள்ளான்.

அவர்கள் அனைவருக்கும் தங்கள் வங்கி விவரங்களை பகிர்ந்த சில நிமிடங்களில் தங்கள் வங்கிகளிடமிருந்து குறுஞ்செய்திகள் கிடைத்தாலும், அங்குள்ள யாருருக்கும் ஆங்கிலம் படிக்கத் தெரியாததால், அவர்களின் கணக்குகளிலிருந்து பணம் எடுக்கப்பட்டத்டை யாரும் புரிந்து கொள்ளவில்லை. கிராமத்தைச் சேர்ந்த ஒருவர், தனது முதலாளியின் உதவியுடன், தனது கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டதை உணர்ந்த பிறகுதான், மற்றவர்கள் தங்கள் சேமிப்பிலிருந்து கொள்ளையடிக்கப்பட்டதை புரிந்துகொண்டனர்.

இது தொடர்பாக கிராம அதிகாரி செல்வம் கூறுகையில் “மதியம் 1.15 மணியளவில் கிராமத்தைச் சேர்ந்த இன்னொருவரிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது, அவர் அவசரநிலைக்கு இங்கு வரச் சொன்னார். நான் இங்கு வந்தபோது, ​​ஒரு மரண வீட்டில் இருந்ததைப் போல மக்கள் அழுவதை நான் காண முடிந்தது. நான் அந்த மனிதனை ஒரு கிராமவாசி என்ற போர்வையில் திரும்ப அழைக்க முயன்றபோது, ​​அவன் எந்த கிளையிலிருந்து அழைக்கிறான் என்று அவரிடம் கேட்டபோது, ​​அவர் பதிலளிக்கவில்லை, மாறாக அழைப்பை துண்டித்து விட்டான். அப்போதிருந்து அந்த தொலைபேசி எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. சுமார் 89 இருளர் குடும்பங்கள் இங்கு வசிக்கின்றனர். அவர்கள் அனைவரும் பல ஆண்டுகளாக கூலி வேலைகளைச் செய்வதன் மூலம் இந்த பணத்தை சம்பாதித்துள்ளனர், வங்கிக் கணக்குகளில் ரூ .100 வைத்திருந்தவர்கள் கூட தங்கள் பணத்தை பறிக்கொடுத்துள்ளனர். கிராமவாசிகள் காவல்துறைக்கு உத்தியோகபூர்வ புகார் அளித்துள்ளனர், மேலும் இது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது” என தெரிவித்துள்ளார்.

இது நாளைக்கும் நமக்கும் நடக்கலாம், எனவே யாரேனும் அலைபேசி மூலம் உங்கள் வங்கி தகவலை கேட்டால் தந்து விடாதீர்கள்.

வங்கக்கடலில் புதிதாக உருவாகி உள்ள ஆம்பன் புயல்! இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

0

வங்க கடலில் உருவான புயல் அதி தீவிர புயலாக மாறியுள்ளது எனவும் வடமேற்கு திசையில் மணிக்கு 6 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்கிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வங்கக்கடலில் கடந்த 4 நாட்களுக்கு முன்னர் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது இந்த புயலின் பெயர்
ஆம்பன் என தாய்லாந்து பெயர் சூட்டியுள்ளது.

வங்கக்கடலில் புதிதாக உருவாகி உள்ள ஆம்பன் புயல்! இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

அது மேலும் வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகரத் தொடங்கியுள்ளது தற்போது ஆம்பன் புயல் மிகவும் தீவிரமாக ஆவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆம்பன் புயல் காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு வங்க கடலின் மத்தியப் பகுதியின் தெற்கு பகுதியில் மணிக்கு 85 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் எனவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆம்பன் புயல் வருகிற 20-ஆம் தேதி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் ஒட்டி கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆம்பன் புயல் உருவாகி உள்ளதால் நாகை, காரைக்கால், பகுதிகளில் உள்ள துறைமுகத்தில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதேபோல் சென்னை, கடலூர், பாம்பன், தூத்துக்குடி, புதுச்சேரி, உள்ளிட்ட 9 துறைகளிலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை சேர்ந்த கோவில்களில் நாம் அறிந்திடாத அற்புதங்கள்!

0

பல வழிபாட்டுத் தலங்களில் ஏற்படும் அற்புதங்களைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். நமக்கு அருகாமையில் இருக்கும் கோவில்களில் நிகழும் அற்புதங்களைப் பார்த்திருக்கிறீர்களா?

  • திருநெல்வேலி பாளையங்கோட்டை அருகே திருச்செந்தூர் சாலையில் உள்ள சிரட்டை பிள்ளையார் கோவிலில் விநாயகருக்கு விடலை போடும்போது சிரட்டையும், தேங்காயும் பிரிந்து சிதறுகிறது.
  • ஸ்ரீரங்கம் கோவிலில் ஸ்ரீ ராமானுஜரின் உடல் 1000 வருடங்களாக கெடாமல் அப்படியே உள்ளது.
  • தஞ்சை பிரகதீஸ்வர் கோவிலில் 72 டன் கல் கோபுர உச்சியில் வைக்கப்பட்டுள்ளது. கருவறை குளிர்காலத்தில் வெப்பமாகவும் வெயில் காலத்தில் குளிராகவும் இருக்கிறது.
  • தாராபுரம் ஐராவதீஸ்வரர் கோவிலில் உள்ள இசைப்படிகளில் தட்டினால் சரிகமபதநி என்ற இசை வருகிறது.
  • கடலுக்கு 3500 அடி உயரத்தில் வெள்ளியங்கிரி மலையில் சிவனின் பஞ்சவாத்திய ஒலி கேட்கிறது.
  • கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே கோட்டையூரில் நூற்றி ஒன்று சாமிமலை குகையில் ஓரடி உயரம் கொண்ட கல்லால் ஆன அகல் விளக்கில் இளநீர் விட்டு தீபமேற்றினால் பிரகாசமாக எரியும் அதிசயம் நடக்கிறது.
  • சென்னை வியாசர்பாடி ரவீஸ்வரர் கோயிலில் தினமும் சூரிய ஒளி மூலவர் மீது விழுகிறது. (காலை மதியம் மாலை என மும்முறை ).
  • சுதந்திரம் சிவன் கோவிலில் ஒரு சிற்பத்தின் காதில் குச்சியை நுழைத்தால் மறு காதுவழியாக வருகிறது.
  • திருப்பூரில் உள்ள குண்டடம் வடுக நாத பைரவர் கோவிலில் குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் பொழுது, குழந்தை இந்த மாதத்தில் இந்த வடிவத்தில் இந்த விதமான நிலையில் இருக்கும் என்பதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கல்லில் சிற்பங்களாக வடித்து வைத்துள்ளார்கள் நம் முன்னோர்கள்.
  • செங்கம் ஊரில் உள்ள ஸ்ரீ அனுபாம்பிகை உடனுறை ரிஷபேஸ்வரர் கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை, பங்குனி மாதம் மூன்றாம் நாள், மாலை சூரிய அஸ்தமனத்தின் பொழுது, நந்தியம் பெருமான் மீது சூரிய ஒளி விழும் பொழுது, அவர் தங்க நிறத்தில் ஜொலிப்பார்.
  • வட சென்னையில் ஐயாயிரம் ஆண்டுகள் பழமையான வியாசர்பாடி ரவீஸ்வரர் சிவன் கோவிலில் 3 வேளையும் சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது மாலை போல் வந்து விழுகிறது.
  • ஜெயங்கொண்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில் உள்ள கிணற்றிற்கு அருகில் ஒரு சிங்கத்தின் சிற்பம் இருக்கும். சிங்கத்தின் வாயில் ஒரு கதவு தென்படும். அதன் மூலம் கீழே இறங்கினால் கிணற்றில் குளிக்கலாம். ஆனால் மேலேயிருந்து பார்த்தால் நாம் குளிப்பது தெரியாது.
  • ஈரோடு காங்கேயத்துக்கு அருகில், மடவிளாகம் சிவன்கோவில் குளத்தில், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு மண் பானை நிறைய விபூதி தோன்றுகிறது.
  • மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெப்பக்குளத்தில் மீன்கள் வளராது.
  • சேலம் தாரமங்கலம் பெருமாள் கோவிலில் ஸ்ரீராமர் சிற்பம் இருக்கும் இடத்திலிருந்து வாலி சிற்பம் இருப்பதை பார்க்க முடியும். ஆனால் வாலி சிற்பம் இருக்கும் இடத்திலிருந்து ஸ்ரீராமரைப் பார்க்க முடியாத வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.
  • சென்னை முகப்போில் காிவரதராஜப்பெருமாள் கோவிலில் விளக்குகளை அணைத்து விட்டால் பெருமாள் நம்மை நோில் பார்ப்பது போல் இருக்கிறது.
  • தென்காசி அருகில் புளியங்குடியில் சுயம்பு நீரூற்று வற்றி தண்ணீர் இல்லாமல் இருக்கும்போது பிரார்த்தனை செய்து பால் அல்லது இளநீர் விட்டால் மறுநாள் ஊற்றில் நீர் வந்துவிடுகிறது.
  • தூத்துக்குடி மாவட்டம் செட்டியாபத்து கிராமத்தில் பெரியசாமி கோவிலில் கோவிலுக்கு நேர்ந்து விடப்படும் பன்றி கொடை விழாவின்போது அங்குள்ள நீருள்ள தொட்டிக்குள் தலையை தானாகவே மூழ்கி இறந்து விடுகிறது.
  • குளித்தலை அருகில் ரத்தினகிாி மலை மேல் காகங்கள் பறப்பதில்லை.
  • தேனி அருகில் உள்ள சிவன்கோவிலில் அவரவர் உயரத்தில் சிவலிங்கம் காட்சி தருகிறது.
  • தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டிய புரத்தில் அம்மன் கோவில் கொடை விழாவின் போது மண்பானையில் வைக்கப்படும் கத்தி சாமி கோவிலை வலம் வந்து சேரும் வரை செங்குத்தாக நிற்கிறது.
  • விருதுநகரில் மகான் திருப்புகழ்சாமி கோவில் திருவிழாவின்போது சுவாமிக்கு படைக்கப்பட்ட சாதத்தில் வேல் வைத்து பூஜை செய்கின்றனர். அதன் பின் எவ்வளவு பக்தர்கள் வந்தாலும் உணவு குறையாமல் வந்துகொண்டே இருக்கிறது.இதுபோல் உணவு தட்டாமல் வருவது அத்திாி மலையிலும் நடைபெறுகிறது.
  • திருமந்திரநகா் சிவன்கோவிலில் சித்திரைத் தேர்த்திருவிழாவின் போது தோ் ஓடும் ரத வீதி மட்டும் சுடுவதில்லை.
  • சென்னிமலை முருகனுக்கு அபிஷேகம் செய்யப்படும் தயிர் புளிப்பதில்லை.
  • சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகில் கல்லுடை திருநாகேஸ்வரமுடையாா் கோவிலில் மீனாட்சி அம்மன் 2 மாதங்களுக்கு ஒரு முறை நிறம் மாறுகிறது.
  • திருநெல்வேலி கடையநல்லூர் அருகில் சுந்தரேஸ்வரபுரம் சுந்தரேஸ்வரர் கோவிலில் பிரகாரத்தில் உள்ள விளக்குகளை அணைத்து விட்டால் வெளியே உள்ள ஒளி மூலவர் மீது விழுவதைக் காணலாம்.
  • ஸ்ரீவில்லிப்புத்தூரில் சிவராத்திரியன்று கொதிக்கும் எண்ணெய்யில் கையைவிட்டு வடை சுடுகிறார் ஒரு பாட்டி.
  • திருநல்லூர் கல்யாண சுந்தரேஸ்வரர் (பஞ்சவர்ணேஸ்வரர்) திருக்கோவிலில் சிவலிங்கம் 6 நாழிகைக்கு ஒரு வர்ணத்திற்கு மாறுகிறது.
  • காசியில் கருடன் பறப்பதில்லை. மாடு முட்டுவதில்லை. பிணம் எரிந்தால் நாற்றம் எடுப்பதில்லை. பூக்கள் மணம் வீசுவதில்லை.
  • திண்டுக்கல் அருகே திருமலைக்கேணி முருகன் கோவிலில் அருகருகே உள்ள தெய்வானை சுனையின் நீர் எப்போதும் குளிர்ந்த நீராகவும், வள்ளி சுனையின் நீர் இரவு பகல் எந்நேரமும் வெந்நீராகவும் இருக்கிறது.
  • திருக்கழுக்குன்றத்தில் தெப்பக்குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு தோன்றுகிறது. சிவனுக்குப் படைக்கப்பட்ட பிரசாதத்தை கழுகு உண்ணும் அதிசயம் நடைபெற்றது.
  • திருநாகேஸ்வரம் சிவன் கோவிலில் ராகு காலத்தில் மட்டும் சிவபெருமானுக்கு செய்யப்படும் அபிஷேக பால் நீலநிறமாகிறது.
  • சிக்கல் சிங்கார வேலர் கோவிலில் சூரசம்ஹாரத்திற்காக முருகன் அம்பிகையிடம் வேல் வாங்கும் போது முருகனின் திருமேனி முழுவதும் வியர்வை பெருகுகிறது. அர்ச்சகர் பட்டுத்துணியால் ஒற்றி எடுக்க துணி தெப்பலாக நனைந்துவிடுகிறது.
  • நாகர்கோவில் கேரளபுரம் சிவன் கோவிலில் உள்ள ஒரு விநாயகர் ஆறுமாதகாலம் கருப்பாகவும், ஆறுமாதம் வெண்மைநிறமாகவும் காட்சி தருகிறார். அது சமயம் நாகர்கோவில் நாகராஜா கோவிலில் கொடுக்கப்படும் மண் கருப்பாகவோ வெள்ளையாகவோ இருக்கிறது.

நேற்று மட்டும் டாஸ்மாக் விற்பனை எத்தனை கோடி தெரியுமா? விபரங்கள் உள்ளே!!

0

மே 7-ஆம் தேதி தமிழகத்தில் அரசு உத்தரவின் படி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது உயர் நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து மே 8 ஆம் தேதி மதுக்கடைகள் மீண்டும் மூடப்பட்டது.

உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின் படி தமிழக அரசு சென்னை திருவள்ளூர் மாவட்டம் தவிர தமிழகத்தில் அணைத்து பகுதியிலும் மதுக்கடைகள் நேற்று திறக்கப்பட்டது. மதுபிரியர்கள் நேற்று நீண்ட வரிசையில் நின்று மதுபானங்களை வாங்கியுள்ளனர். மதுபானங்கள் வாங்க நாள் ஒன்றிற்கு 500 டோக்கன் வீதம் கொடுக்கப்பட்டது. குறிப்பாக கடலூரில் 1 மணிக்கே 500 டோக்கன்கள் முடிந்து வீட்டதாக தகவல்கள் வெளியானது.

தமிழகத்தில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதால் நேற்று மட்டும் 163 கோடிக்கு மது விற்பனை ஆகி உள்ளது. மதுரை மண்டலத்தில் 44.7 கோடியும், சேலம் மண்டலத்தில் 41.07 கோடியும், திருச்சியில் 40.5 கோடியும், கோவையில் 33.05 கோடிக்கும் மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சொந்த மாநிலங்களுக்கு செல்லும் தொழிலாளர்களுக்கு தமிழக முதல்வர் வெளியிட்ட புதிய அறிவிப்பு

0

கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கபட்டிருப்பதால் தொழில் நிறுவனங்கள் அனைத்தும் முடங்கியுள்ளன. இந்நிலையில் வெளிமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் அனைவரும் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கபட்டிருந்தனர்.

இதனையடுத்து வெளிமாநிலத்தில் இவ்வாறு தங்க வைக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள் அவர்களது சொந்த மாநிலங்களுக்கு செல்ல அந்தந்த மாநில அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது

இவ்வாறு வெளிமாநில தொழிலாளர்கள் அவர்களது சொந்த மாநிலங்களுக்கு ரெயில் மூலம் செல்ல தமிழக அரசு ஏற்பாடு செய்வதால், அவர்கள் யாரும் தன்னிச்சையாக செல்ல வேண்டாம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது.

வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்து பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்களை அவர்கள் விருப்பத்தின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியுடன் அந்தந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க அனைத்து விதமான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது.

6-ந் தேதியில் இருந்து 15-ந் தேதிவரை 55 ஆயிரத்து 473 வெளிமாநில தொழிலாளர்கள் 43 ரெயில்களில் பீகார், ஒடிசா, ஜார்கண்ட், ஆந்திரா, மேற்கு வங்காளம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

தினந்தோறும் சுமார் 10 ஆயிரம் வெளிமாநில தொழிலாளர்களை அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அனைத்து வெளிமாநில தொழிலாளர்களும் அவர் தம் விருப்பத்தின் பேரில் படிப்படியாக சம்பந்தப்பட்ட மாநிலங்களின் அனுமதியோடு அவர் தம் மாநிலங்களுக்கு செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும், ரெயில்வே கட்டணம் உட்பட அனைத்து பயணச் செலவுகளையும் தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொள்வதால், வெளிமாநில தொழிலாளர்கள் தன்னிச்சையாக நடை பயணமாகவோ, பிற வாகனங்களின் மூலமாகவோ செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். அதுவரை, வெளிமாநில தொழிலாளர்கள் தற்போது தங்கியிருக்கும் முகாம்களிலேயே தொடர்ந்து இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவர் அதில் கூறியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனாவிலிருந்து மீளும் 11 மாவட்டங்கள் – பொதுமக்கள் நிம்மதி

கடந்த மார்ச் மாத இறுதியில் சென்னையில் பரவ துவங்கிய கொரோனா தொற்று, வேகமாக தமிழகம் முழுவதும் பரவியது.தமிழக அரசு, மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறையுடன் இனைந்து கொரோனாவை கட்டுப்படுத்த தீவிரமாகப் போராடி வருகிறது.

தமிழகத்தில் சென்னை கொரோனா தொற்றில் முதலிடம் வகுத்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக தமிழக மாவட்டங்கள் மெல்ல கொரோனாவின் பிடியிலிருந்து விடுபட்டு வருகிறது.

கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்கள் முழுவதுமாக கொரோனா தொற்றிலிருந்து விடுபட்டுள்ள நிலையில் திருச்சி, அரியலூர், இராமநாதபுரம், கரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் புதியதாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் இந்த மாவட்டங்களும் விரைவில் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக ஆகிவிடும்.

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட ஆறு மாவட்டங்களுக்கு ஊரடங்கு தளர்வு இல்லை?!

மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கு மே 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது வரை இரண்டு முறை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதற்கு முன் மாநில முதல்வர்கள் மற்றும் நிபுணர்களுடன் ஆலோசனையை கடந்த 11ம் தேதி மேற்கொண்டார் பிரதமர் மோடி.

அதனைத் தொடர்ந்து 3வது ஊரடங்கு அமலிலுள்ள நிலையில் பொது முடக்கம் நீட்டிப்பது குறித்தும் ஏற்கனவே மத்திய அரசு 17 தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. தமிழகத்திலும் கடந்த திங்கட்கிழமை முதல் 34 வகையான கடைகளைத் திறக்க அனுமதிக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த 11ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் மாநில முதல்வர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்குபெற்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தங்கள் அரசு கோரியிருந்த 2000 கோடி ரூபாய் விரைவில் விடுவிக்குமாறு கோரிக்கை வைத்தார். மேலும் மே 31ம் தேதி வரை தமிழகத்தில் ரயில், விமானங்களை இயக்க வேண்டாம் என்றும் கோரிக்கை வைத்தார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முக்கியமாக ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பைப் பற்றி பிரதமர், முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார். பிரதமர் அந்த கூட்டத்தில் பேசியது அறிக்கையாக வெளியிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து முதல்வர் மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவக் குழுக்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதன் படி மே 31ம் தேதி வரை தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிக்க ஆலோசனை வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர் மற்றும் அரியலூர் தவிர மற்ற மாவட்டங்களில் கட்டுப்படுத்தப்பட்ட பேருந்து போக்குவரத்து உள்ளிட்ட சில தளர்வுகளை அறிவிக்கலாம் எனவும் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இது குறித்து இன்று அதிகார்வபூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிகிறது.

இந்திய அணி கிரிக்கெட் விளையாட அனுமதி! ஐசிசி அறிவிப்புக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு!!

0

தற்பொழுது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தோற்று பேரழிவை ஏற்படுத்தி கொண்டிருக்கும் நிலையில் பல உயிரிழப்புகளும் நடந்தவண்ணம் உள்ளது. இதன் காரணமாக கடந்த மார்ச் மாதம் நடைபெறவிருந்த சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் எதுவும் நடைபெற வில்லை.

ஐபிஎல் போட்டியும் காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கிரிக்கெட் போட்டி எதுவும் நடைபெறாத நிலையில் ஐசிசி வாரிய அட்டவணையின்படி இந்திய கிரிக்கெட் அணி வரும் ஜூலை மாதத்தில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்தது.

அதில் மூன்று ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாட இருந்தது ஆனால் கொரோனா தொற்று காரணமாக காலவரையின்றி அனைத்து போட்டிகளையும் தள்ளி வைத்தது கொரோனா தாக்கம் இன்னும் கட்டுக்குள் வராததால் இலங்கைப் பயணம் குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் இன்னும் இறுதி முடிவு எடுக்காமலேயே இருந்து வந்தது.

இதற்கிடையில் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் சார்பில் எழுதப்பட்ட கடிதத்தில் தனிமைப்படுத்துதல் வழிமுறைகள் உட்பட அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிக்கவும் ரசிகர்கள் இன்று பூட்டியே ஆடுகளத்தில் போட்டி தொடரை நடத்தவும் தயாராக இருக்கிறோம் என இலங்கை கிரிக்கெட் வாரியம் அதில் கூறியுள்ளது. ஆகையால் இந்திய கிரிக்கெட் அணி ஜூலை மாதம் இறுதியில் இலங்கை வந்து ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டி தொடரில் விளையாட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இந்தநிலையில் இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கைக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் சாதகமாக பதிலை அளித்துள்ளது மத்திய அரசு இந்திய அணி கிரிக்கெட் விளையாட அனுமதித்தால் இலங்கை சென்று விளையாட முழு சம்மதத்தை தெரிவித்துள்ளது. இதற்கு மத்திய அரசின் பதில் என்னவென்று தெரிந்து கொள்ள ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.