Home Blog Page 5643

அச்சுறுத்தும் கொரோனா… அச்சத்தில் மக்கள்… தமிழகத்தில் 10 ஆயிரத்தை கடந்தது வைரஸ் தொற்று பட்டியல்..!!

0

சீனாவின் வூகான் மாநகரில் தொடங்கி தற்போது 210 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் தொற்றால் உலக நாடுகளில் உள்ள 300 கோடிக்கும் மேற்பட்டோர் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் கோரத் தாண்டவத்தால் இதுவரை 46 லட்சத்து 26 ஆயிரத்து 632 பேருக்கு மேல் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 11 ஆயிரத்தை கடந்துள்ளது, மேலும் 16 லட்சத்து 79 ஆயிரத்து 428 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் முதல் 35 இடங்களில் உள்ள நாடுகளின் விபரங்கள் பின்வருமாறு.

அச்சுறுத்தும் கொரோனா... அச்சத்தில் மக்கள்... தமிழகத்தில் 10 ஆயிரத்தை கடந்தது வைரஸ் தொற்று பட்டியல்..!!

இந்தியாவில் நோய் தொற்று ஏற்பட்டுள்ளோரின் மொத்த எண்ணிக்கை 85,940 ஐ கடந்துள்ளது, அதில் பலியானார்களின் மொத்த எண்ணிக்கை 2,752 ஆக தெரிகிறது. இதுவரை சிகிச்சை பெற்று 30,153 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மாநில அளவிலான விபரங்கள் பின்வருமாறு(நோய் தொற்று ஏற்பட்டுள்ளவர்கள் / இறந்தவர்கள்):

மகாராஷ்டிரா – 29,100/1,068
டெல்லி – 8,895/123
குஜராத் – 9,931/606
தமிழ்நாடு – 10,108/71
தெலுங்கானா – 1,454/34
கேரளா – 576/04
ராஜஸ்தான் – 4,727/125
உத்தரபிரதேசம் – 4,057/95
ஆந்திர பிரதேசம் – 2,307/48
கர்நாடகா – 1,056/36
மத்திய பிரதேசம் – 4,595/239
ஜம்மு & காஷ்மீர் – 1,013/11
மேற்கு வங்கம் – 2,461/225
பஞ்சாப் – 1,935/32
ஹரியானா – 818/11
பீகார் – 1,018/07
அசாம் – 90/02
சண்டிகர் -191/03
உத்தர்கண்ட் – 82/01
லடாக் – 43/0
அந்தமான் & நிக்கோபார் -33/0
சத்தீஸ்கர் – 66/01
கோவா – 15/0
இமாச்சல பிரதேசம் – 76/03
ஒடிசா – 672/03
பாண்டிச்சேரி – 13/01
மணிப்பூர் – 03/0
ஜார்க்கண்ட் – 203/03
மிசோரம் – 01/0
அருணாச்சலப் பிரதேசம் – 1/0
திரிபுரா – 156/0
நாகாலாந்து – 01/0/01
மேகாலயா – 13/01
தாத்ரா நகர் ஹாவலி – 01/0

தமிழகத்தில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 10,108 ஆக உயர்ந்துள்ளது. அதில் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 71 ஆக தெரிகிறது, பூரண குணமடைந்து 2,599 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

மாவட்டட்ட அளவில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை(நோய் தொற்று ஏற்பட்டவர்கள் / இறந்தவர்கள்);

இந்த தகவல்கள் வெவ்வேறு நாடுகளில் அதிகாரப்பூர்வமாக வெளியானதன் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.

ஆந்திராவில் ஏற்பட்டது போல தமிழகத்தில் நடந்து விட கூடாது என எச்சரிக்கும் ராமதாஸ்

0

சமீபத்தில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் செயல்பட்டு வரும் தென்கொரியாவைச் சேர்ந்த எல்.ஜி. பாலிமர்ஸ் நிறுவனத்தில் ஏற்பட்ட விபத்தை போல தமிழகத்திலும் ஏற்பட்டு விட கூடாது என்றும்,தமிழக அரசு எச்சரிக்கையாக செயல்பட வேண்டும் என்றும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் எச்சரித்துள்ளார்.

சென்னை மணலி பகுதியில் உள்ள பொதுத்துறை யூரியா நிறுவனத்திலிருந்து ஏற்பட்ட அம்மோனியா வாயுக்கசிவை காரணமாக கூறி தமிழக அரசிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது குறித்து இன்று அவர் “வாயுக்கசிவு ஆபத்து: அனைத்து இரசாயன ஆலைகளிலும் பாதுகாப்பு ஆய்வு மேற்கொள்க!” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது.

சென்னையின் புறநகர் பகுதியான மணலியில் உள்ள பொதுத்துறை யூரியா நிறுவனத்திலிருந்து ஏற்பட்ட அம்மோனியா வாயுக்கசிவு, அப்பகுதியில் உள்ள மக்களுக்கு பல்வேறு வகையான உடல்நலக் கேடுகளையும், பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இதுபோன்ற நிகழ்வுகள் பிற வேதிப்பொருள் ஆலைகளிலும் நிகழ்ந்தால் மோசமான பாதிப்புகள் ஏற்படும் என்பதைக் கருத்தில் கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

மணலி பகுதியில் வியாழக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட வாயுக்கசிவு காரணமாக அப்பகுதியில் உள்ள வீடுகளிலும், வீட்டு மாடிகளிலும் உறங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு மூச்சுத் திணறல், கண் எரிச்சல், தோல் அரிப்பு, வாந்தி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. அடுத்த சில மணி நேரங்களில் இப்பாதிப்புகள் குறைந்து விட்டன என்ற போதிலும் நேற்றிரவு வரை அப்பகுதிகளில் தாங்க முடியாத துர்நாற்றம் வீசியுள்ளது. திறந்த வெளிகளில் காய வைக்கப்பட்டிருந்த துணிகள் பயன்படுத்த முடியாத அளவுக்கு நாசமடைந்துள்ளன.

மணலி பகுதியில் அம்மோனியா வாயுக்கசிவு ஏற்பட்டதற்கு காரணம், அப்பகுதியில் செயல்பட்டு வரும் யூரியா தொழிற்சாலை பராமரிப்பு பணிகளுக்காக நேற்று மூடப்பட்ட போது, போதிய பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படாதது தான். யூரியா தொழிற்சாலையிலிருந்து மிகக் குறைந்த அளவிலேயே அம்மோனியா வாயு கசிந்ததால் பெரிய அளவில் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. விசாகப்பட்டினத்தில் எல்.ஜி. பாலிமர்ஸ் நிறுவனத்தில் ஏற்பட்டது போன்று அதிக நச்சுத்தன்மை கொண்ட வாயுக்கள், மிக அதிக அளவில் கசிந்து இருந்தால், நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு பாதிப்புகள் ஏற்பட்டிருக்கும் என்பதை மறுக்க முடியாது.

Dr Ramadoss Warns TN Govt in Chemical Company Opening-News4 Tamil Online Tamil News
Dr Ramadoss Warns TN Govt in Chemical Company Opening-News4 Tamil Online Tamil News

இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் வேதிப்பொருள் ஆலைகள் செயல்பட்டு வரும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாகும். இந்தியாவின் வேதிப்பொருள் உற்பத்தியில் 6% தமிழகத்தில் தான் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் 2588 வேதிப்பொருள் ஆலைகள் செயல்பாட்டில் உள்ளன. அதிக எண்ணிக்கையில் வேதிப் பொருள் ஆலைகள் கொண்ட மாநிலங்கள் பட்டியலில் மராட்டியம், குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. இத்தகைய சூழலில் தமிழகத்தில் உள்ள வேதி ஆலைகளில் வாயுக்கசிவு உள்ளிட்ட எந்த விபத்துகளும் ஏற்படாமல் தடுக்க வேண்டியது மாநில அரசின் கடமை ஆகும்.

தமிழ்நாட்டில் ஊரடங்கு காரணமாக முடக்கி வைக்கப்பட்டிருந்த வேதிப்பொருள் ஆலைகள் செயல்படுவதற்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டு விட்ட போதிலும், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஆலைகள் மட்டுமே செயல்படத் தொடங்கியுள்ளன. மீதமுள்ள ஆலைகள் அடுத்து வரும் வாரங்களில் தான் உற்பத்தியைத் தொடங்கவுள்ளன. இதுவரை மூடப்பட்டிருந்த ஆலைகள் செயல்படத் தொடங்கும் போதோ, செயல்பட்டு வரும் ஆலைகள் உற்பத்தியை அதிகரிக்கும் போதோ வாயுக்கசிவு போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் செயல்பட்டு வரும் தென்கொரியாவைச் சேர்ந்த எல்.ஜி. பாலிமர்ஸ் நிறுவனம், ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த 7&ஆம் தேதி மீண்டும் உற்பத்தியைத் தொடங்கியது. அப்போது பாதுகாப்பு விதிகள் முறையாக கடைபிடிக்கப்படாததன் காரணமாக, அந்த ஆலையில் 2000 டன் ஸ்டைரின் வேதிப்பொருள் திரவம் இருப்பு வைக்கப்பட்டிருந்த பகுதியில் வெப்பநிலை அதிகரித்து ஆவியாகத் தொடங்கியது. ஸ்டைரின் திரவம் வாயுவாக மாறி பரவத் தொடங்கியதால், ஆலையைச் சுற்றி 3 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மக்கள் கடுமையான பாதிப்புகளுக்கு ஆளானார்கள். இந்த வாயுக்கசிவால் 13 பேர் உயிரிழந்த நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் மருத்துவம் பெற்றார்கள்.

தமிழ்நாட்டில் பெரும்பான்மையான மாவட்டங்களில் வேதி ஆலைகள் உள்ளன. குறிப்பாக திருவள்ளூர், கடலூர், நாகப்பட்டினம், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் ஆபத்தான வேதிப்பொருள் ஆலைகள் உள்ளன. எனவே, தமிழகத்தின் எந்தப் பகுதிகளிலும் வாயுக்கசிவு உள்ளிட்ட வேதி விபத்துகள் நடக்காமல் தடுக்க, இதுவரை செயல்படத் தொடங்காத ஆலைகளிலும், செயல்படத் தொடங்கிய ஆலைகளிலும் பாதுகாப்பு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் இந்த ஆய்வுகளை நடத்தி, அதன் மூலம் வேதி விபத்துகளைத் தடுக்க வேண்டும்; தமிழ்நாட்டு மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

#LatestNews #BreakingNews

வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தும் திருச்செந்தூர் ஆலயத்தின் கொடிமர பூஜை!

0

வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தும் திருச்செந்தூர் ஆலயத்தின் கொடிமர பூஜை!

உங்கள் வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்பட வேண்டுமா? திருச்செந்தூர் கொடிமர பூஜையில் கலந்து கொள்ளுங்கள் என்று கூறுகிறார்கள். அப்படி என்ன திருச்செந்தூர் ஆலய கொடிமர பூஜையில் விசேஷம் உள்ளது என யோசிக்கின்றீர்களா?

திருச்செந்தூர் ஆலயத்தில் தினமும் மூலவர் நடை திறப்பதற்கு முன்பாக முதன்முதலில் ஆலயத்தின் கொடிமரத்துக்குத்தான் பூஜை நடைபெறும் . இந்த கொடி மரம் பொதிகை. மலையிலிருந்து வரப்பெற்ற சந்தன மரமாகும். இந்த கொடிமரம் சந்தன கொடிமரம் என்பது பல பேருக்கு தெரியாது.

இந்த கொடிமரம் திருச்செந்தூர் ஆலயத்திற்கு வந்த வரலாற்றைப் பற்றித் தெரிந்து கொள்வோமா?

திருச்செந்தூருக்குக் கொடிமரம் வந்த கதை! முன்னொரு காலத்தில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழா நடைபெறவில்லை. காரணம் அங்குக் கொடிமரம் இல்லை.

ஆகவே திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குக் கொடிமரம் வைக்க வேண்டுமென்று ஊர் கூடி பேசி முடிவெடுத்தனர். உடனே ஆறுமுகம் ஆசாரி என்பவர் தலைமையில் 21 பேர் கொண்ட குழு காக்காச்சி மலைக்கு (மேற்கு தொடர்ச்சி மலை) கொடி மரம் வெட்ட கிளம்பினர். திருச்செந்தூர் மந்தை அருகே உள் அம்மன் கோயிலில் அந்தக் குழுவினர் வேண்டச்சென்றனர். அம்மன் கோயில் முன்பு மற்றவர்கள் நின்று கொண்டனர். அம்மனை வணங்க ஆறுமுகம் ஆசாரி மட்டும் கருவறைக்குள் நுழைந்து அம்மனை வணங்கினார். அப்போது அம்மன் கண்களிலிருந்து நீர் வழிந்தது.

பயந்து போய் படபடத்துப் போன ஆசாரி, அம்மனே! ஏன் இந்த நிலை. தங்கள் கண்களில் நீர் வழியக் காரணம் தான் என்ன? என்று கேட்டார்.அம்மன் ‘மகனே நீங்கள் செய்யும் பணி நல்ல பணி தான். ஆனால் அந்த பணியில் ஈடுபடும் உன்னை தவிர வேறு யாரும் உயிரோடு திரும்ப மாட்டார்கள். அதை நினைத்து தான் எனக்கு வருத்தமாக உள்ளது. இதை நீ அவர்களிடம் சொல்லிவிடாதே. இது ஆண்டவன் கட்டளை. இந்த நிலை தெரிந்த காரணத்தினால் தான் என் கண்களில் கண்ணீர் வந்தது என்று கூறினார்.

உடனே அதிர்ந்து போன ஆறுமுகம் ஆசாரி அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தார். இதை வெளியே உள்ளவர்களிடமும் சொல்லக்கூடாது. சொன்னால் தெய்வக்குற்றமாகி விடும். அதே நேரம் நம்பி நம்மோடு வருபவர்களைக் காப்பாற்ற வேண்டும். என்ன செய்ய என்று குழம்பினார்.

ஆயினும் கலங்காமல் முருகன் மீது பாரத்தைப் போட்டு விட்டு களக்காடு அருகே உள்ள ஏர்வாடிக்கு வந்தார். அங்கு சின்னதம்பி மரக்காயர் என்ற மந்திரவாதி ஒருவரை சந்தித்தார். அவரிடம் முருகப் பெருமானுக்கு கொடிமரம் வெட்ட வந்த கதையை கூறி உதவிக்கு கூப்பிட்டனர். சின்னதம்பி மரக்காயரின் மனைவி பாத்திமாபீவி அவரை தடுத்தார்.

“நான் நேற்று முன்தினம் இரவு பயங்கர கனவு கண்டேன். அதில் உமது உயிருக்கு ஆபத்து உள்ளதாக அறிகுறி காட்டுகிறது. எனவே கொடிமரம் வெட்ட நீங்கள் செல்ல வேண்டாம்” என்று கூறினாள். ஆனால் சின்னதம்பி மரக்காயர் கேட்கவில்லை.மனைவி உடனே அழுதாள், “நமது குடும்பம் உம்மை நம்பித்தான் உள்ளது. தயவு செய்து செல்ல வேண்டாம்” என்று தடுத்து கூறியும் சின்னதம்பி மரக்காயர் கேட்கவில்லை. விதி யாரை விட்டது.

அவர் ஆறுமுகம் ஆசாரி குழுவினருடன் களக்காட்டு மலைக்கு சென்றார். அவர்கள் திருச்செந்தூரிலிருந்தே 21 மாட்டு வண்டிகளில் வந்து இருந்தார்கள். அந்த வண்டிகள் அணிவகுத்து களக்காடு மலையை நோக்கிச் சென்றது. ஆனால் அவர்களுக்கு தேவையான கொடிமரம் கிடைக்கவில்லை.

அலைந்து திரிந்து பார்த்தார்கள் பக்கத்தில் எந்த இடத்திலும் சரியான மரம் கிடைக்கவில்லை. எனவே காக்காச்சி மலை என்று அழைக்கப்படும் மேற்குத் தொடர்ச்சி மலையான பொதிகை மலை உச்சிக்கு சென்றனர்.

அங்கு அற்புதமான நல்ல உயரமான சந்தனமரமொன்று இருந்தது.

“ஆகா இந்த மரம் தான் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு ஏற்ற கொடிமரம்” என்றார்.ஆறுமுக ஆசாரி.

அவர், சின்னதம்பி மரக்காயரிடம் இம்மரத்தைப் பற்றி கேட்கிறார். ரம்மியமான வாசனையுடன் இருக்கும் அந்த அற்புத மரத்தை குறித்து மை போட்டு பார்க்கிறார் மாந்திரிகரான சின்ன தம்பி மரக்காயர். அப்போது அந்த மரத்தில் அடி மரத்தில் சுடலைமாடனும், மேல் முனையில் சங்கடகாரனும் உள்பட 21 தேவதைகள் இருந்தது தெரிய வந்தது.

அந்த 21 தேவதைகளையும் விரட்டி விட்டு தான் மரத்தினை வெட்ட வேண்டும் என்பதால் அதற்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தனர். முதலில் மந்திரம் மூலம் தேவதைகளை விரட்ட மை போட்டார் மரக்காயர். மற்றவர்களை கோடாரி கொண்டு வெட்ட சொன்னார்.

கோடாரி மூலம் வெட்டப்பட்ட மரம் கோடாரியை திருப்பி விட்டது. உடனே அந்த கோடாரி மரத்தை வெட்டிய 20 பேர்களின் கழுத்தில் பட்டது. அலறியபடி 20 பேரும் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். அதை தொடர்ந்து அவர்கள் மரணம் அடைந்தனர். இதனால் ஆறுமுக ஆசாரி அதிர்ச்சி அடைந்தார்.

ஐயோ நான் என்ன செய்வேன்? என்று மந்திரவாதி சின்னதம்பி மரக்காயரிடம் சென்ற போது அவரும் ரத்தம் கக்கி இறந்து இருந்தார். அடுத்த வினாடி ஆறுமுக ஆசாரிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. இதற்கிடையில் அந்த மரத்திலிருந்த 21 மாட தேவதைகளும் மரத்தை விட்டு கீழே இறங்கி ஆறுமுக ஆசாரியை விரட்டியது. உயிருக்குப் பயந்த அவர் காக்காச்சி மலையை விட்டு ஓடினார். அடுத்து பொதிகை மலைக்கு வந்தார். அந்த இடத்தை விட்டு கீழே இறங்கி ஓட ஆரம்பித்தார்.

இறுதியில் தாமிரபரணி ஆற்றங்கரையில் சொரிமுத்து அய்யனார் கோவிலில் வந்து அய்யனார் காலை பற்றிக் கொண்டு காப்பாற்றக் கூறி கத்தினார்.சொரிமுத்து அய்யனார் 21 மாடதேவதைகளையும் அழைத்து சமாதானம் செய்தார்.

“முருகன்.. எனது சகோதரன் தான்.. அவன் கோவிலுக்கு தானே கொடிமரம் செல்கிறது. பிறகு ஏன் தடுக்கிறீர்கள்” என்று கூறினார்.

அதற்கு சுடலைமாடன், சங்கடகாரன் உள்பட 21 மாட தேவதைகளும் நாங்கள் வசிப்பதற்கு இது போன்ற வேறு சந்தன கொடிமரம் இல்லை என்றும்,திருச்செந்தூர் ஆலயத்தில் இந்த கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்ட பின்பு தங்களை தொடந்து இந்த கொடி மரத்திலேயே வாசம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்றும்,தங்களுக்கு முதல் பூஜை நடத்திய பின்பே மூலவருக்கு பூஜைகள் நடத்த வேண்டும் என்று சொரி முத்தையானாரிடம் வேண்டினர்.

சொரி முத்தையானாரும் அவர்களது வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு சுடலைமாடன், சங்கடகாரன் உள்பட 21 மாட தேவதைகளும் அந்த சந்தன மரத்தை அவர்களே வெட்டி அதை திருச்செந்தூரில் கொண்டு சேர்த்து ஆலயத்தில் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்றும் அவர்களை அந்த கொடிமரத்திலேயே தொடர்ந்து வாசம் செய்து கொள்ளும்படியும் உத்தரவிட்டார்.

அதன்படி சுடலைமாடன், சங்கடகாரன் உள்பட 21 மாட தேவதைகளும் அந்த சந்தன மரத்தை வெட்டினார்கள். பின் 21 மாட்டு வண்டியையும் ஒன்றாக கட்டினர். அந்த சந்தன மரத்தை அப்படியே தூக்கி வைத்து திருச்செந்தூர் நோக்கி கொண்டு சென்றார்கள். அம்மரமே தற்போது திருச்செந்தூரில் கொடி மரமாக வைக்கப்பட்டுள்ளது. சொரி முத்தையானார் உத்திரவின்படி சுடலைமாடன், சங்கடகாரன் உள்பட 21 மாட தேவதைகளும் இந்த கொடிமரத்தில. வாசம் செய்து வருகின்றனர்.

இப்போதும் திருச்செந்தூர் ஆலயத்தில் மாசித் திருவிழா நடைபெறும் போது ஆடு வெட்டி சுடலை மாடனுக்கும், சங்கடகரகாரனுக்கும் படைத்து விட்டுத்தான் தேர் ஓட வேண்டிய வேலைகளைச் செய்வார்கள். மாசி திருவிழா தேர் ஓடும் போது அதிலேயும் சங்கடகரகாரன் தேர் மேல் ஏறி “சரி போகலாம்” என்று கூறியவுடனே தான் தேர் நகரும்.

மேற்கண்ட தகவலை “கொடி மரக்காவியம்” என்றும் வில்லுப்பாட்டு கதையிலிருந்து தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் அருகில் உள்ள கிளாக்குளம் கிராமத்து வில்லுப்பாட்டு கலைஞர் சண்முக சுந்தரம் கூறியுள்ளார்.

இந்த கதை நெஞ்சைப் பதற வைப்பது போல் உள்ளது அல்லவா? திருச்செந்தூர் ஆலயத்தில் உள்ள கொடிமரம் பிரமாண்டமானது. அதை 21 மனிதர்கள் கொண்டு வருவது என்பது இயலாதது. ஆனால் சுடலைமாடன், சங்கடகாரன் உள்பட 21 மாட தேவதைகளும் சேர்ந்து அந்த மரத்தினை வெட்டி 21 மாட்டு வண்டியையும் ஒன்றாகக் கட்டி அதில் தூக்கி வைத்து வந்த சம்பவம் ஒரு மலைப்பான விசயமாக இருப்பதாலும் இதை நம்பியே தீர வேண்டும். ஏன் என்றால் இப்போது போல் முன்பு போக்குவரத்து வசதி எல்லாம் கிடையாது. எனவே 21 மாட்டு வண்டி நேராக திருச்செந்தூர் நோக்கி வரும் போது சாலையில் தடை எதுவும் இருந்திருக்காது.

சொரிமுத்து அய்யனாரின் ஆசியுடன் சுடலைமாடன், சங்கடகாரன் உள்பட 21 மாட தேவதைகளும் இன்றளவும் வாசம் செய்து வரும் பொதிகை மலையிலிருந்து கொண்டு வரப்பட்ட சந்தனமரமே தற்போது திருச்செந்தூரில் கொடிமரமாக இருப்பதால் இந்த கொடி மரத்திற்கு முதலில் பூஜைகள் நடைபெற்ற பின்னரே மூலவருக்கான நடை திறக்கப்பட்டு நிர்மால்யம், அபிஷேகம் மற்ற பூஜை எல்லாம் நடைபெற்று வருகிறது. தினமும் காலை ஐந்து மணிக்குக் கொடிமரத்துக்குப் பூஜைகள் நடைபெறும்போது, இரண்டு பேர் மந்திரத்தைப் பகிர்ந்து சொல்ல அவர்களுடன் சேர்ந்து மற்றவர்கள் ஒவ்வொரு மந்திரத்தின் முடிவிலும் நமஸ்காரம் செய்வார்கள்.

இதற்கான அனுமதி இலவசம்.

அதிகாலையில் நடைபெறும் இந்த கொடிமர பூஜையில் கலந்து கொண்டால் சுடலைமாடன், சங்கடகாரன் உள்பட 21 மாட தேவதைகளின் ஆசிகள் கிடைக்கப்பெற்று உங்கள் வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படுவது என்பது உறுதி!

இந்த கொடிமர பூஜையில் நீங்கள் கலந்துகொண்டால் உங்கள் வாழ்க்கையில் நிச்சயமாக நல்ல திருப்பம் உண்டாகும்.

நம்பிக்கையுடன் இந்த கொடிமர பூஜைக்கு போய் தான் பாருங்களேன்!

தண்ணீர் லாரியில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது

0

கொரோனா பாதிப்பினால் நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவினால் தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதை சாதகமாக பயன்படுத்தி பெரும்பாலான மக்கள் குடிப்பழக்கத்தை விட்டு விடுபட்டு வருகின்றனர். ஆனால் சிலர் இதிலிருந்து விடுபடாமல் வேறு வகையான போதை பொருட்களை தேடிச் செல்கின்றனர்.

இந்நிலையில் அந்தவகை நபர்களுக்கு விற்பதற்காக தண்ணீர் லாரியில் கஞ்சா கடத்திய 3 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து ஐந்து கிலோ கஞ்சா, பணம், தண்ணீர் லாரி மற்றும் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதியில் கஞ்சா கடத்தி வருவதாக திருப்பூர் வடக்கு காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் அப்பகுதிக்கு சென்ற காவல்துறையினர், சந்தேகத்தின் அடிப்படையில் அங்கிருந்த தண்ணீர் ஏற்றி கொண்டு செல்லும் லாரியை மறித்தனர்.

பின்னர் அந்த லாரியிலும், அதனருகே இருந்த இருசக்கர வாகனத்திலும் இருந்த 5 கிலோ கஞ்சா, 3 ஆயிரம் ரூபாய் பணத்தையும் காவல் துறையினர் கைப்பற்றினர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி மற்றும் இரு சக்கர வாகனத்தையும் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்தனர்.

மேலும் இவ்வாறு தண்ணீர் லாரியில் கஞ்சா கடத்திய மதுரையை சேர்ந்த சுந்தர மகாலிங்கம், கோவையை சேர்ந்த முகமது யாசின் மற்றும் சிவகங்கையை சேர்ந்த பாண்டிபிரபு ஆகிய மூவரையும் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பத்தாம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு

0

கொரோனா வைரஸ் பாதிப்பால் நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் தள்ளி வைக்கப்பட்ட 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வருகின்ற ஜூன் 1 முதல் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளன. இதைப்போலவே 11 ஆம் வகுப்புக்கான தள்ளி வைக்கப்பட்ட தேர்வு வரும் ஜூன் 2 ஆம் தேதியில் நடத்தப்படும் என்றும், மேலும் இதைப்போலவே 12 ஆம் வகுப்பு தேர்வை எழுத முடியாமல் போன மாணவர்களுக்கு ஜூன் 4 ஆம் தேதி தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ள இந்த முடிவினால் தமிழக அரசை பல்வேறு தரப்பினரும் கடுமையாக விமர்சனம் செய்தனர். ஆனால் தேர்வெழுத போகும் மாணவர்களுக்கு தேவையான பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த தேர்வுகள் நடத்தப்படும் என தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.

இந்நிலையில் சொந்த ஊரை விட்டு வெளியூரில் தங்கியுள்ள மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு வந்து 10 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுத அவர்களுக்கு இ-பாஸ் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார்.

TN Govt Announcement for SSLC Students-News4 Tamil Online Tamil News2
TN Govt Announcement for SSLC Students-News4 Tamil Online Tamil News2

மேலும் இந்த தேர்வுக்காக வெளி மாவட்டம் மற்றும் தனியார் பள்ளி விடுதிகளில் தங்கிப் படித்து வரும் மாணவர்களை 3 நாட்களுக்கு முன்பே அழைத்து வருவதற்கும் ஏற்பாடு செய்யப்படும், மேலும் மாணவர்களுக்கு உணவு வசதியும் செய்து தரப்படும், இதற்காக பள்ளிக் கல்வித்துறையில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் தேர்வுப் பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அமைச்சர் அறிவித்துள்ள போல இ-பாஸ் பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு சார்பாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாணவர்களின் பெற்றோர்கள் இ-பாஸ் பெறுவதற்கான இணையதள லிங்கையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 

https://tnepass.tnega.org/#/user/pass என்ற இணையதள லிங்கை பயன்படுத்தி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் இ-பாஸ் பெறலாம் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த தொழிலாளர்களுக்கு 2000 ரூபாய் நிதியுதவி – முதல்வர் எடப்பாடி அறிவிப்பு

கடந்த 50 நாட்களாக வேலையில்லாமல் தவிக்கும் முடி திருத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கு 2000 ரூபாய் நிதி உதவி அறிவித்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. நல வாரியத்தில் பதிவு செய்யாத முடி திருத்தும் தொழிலாளர்களும் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் மனுக்கள் சமர்ப்பித்து இந்த நிதியுதவி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:

“தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று தடுப்புப் பணிகளை தமிழக அரசு தீவிரமாக மேற்கொள்ளும் வகையில், கடந்த 24.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது.

இந்த ஊரடங்கின் காரணமாக பல்வேறு தரப்பு தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு பல்வேறு அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் நிவாரண உதவித்தொகை உட்பட பொது விநியோகத் திட்டத்தின் மூலம், அரிசி, பருப்பு, சர்க்கரை, சமையல் எண்ணெய் போன்றவற்றை இலவசமாக வழங்கி வருகிறது. இதன் மூலம் பொதுமக்களும், பல்வேறு தொழிலாளர்களும் பயனடைந்து வருகின்றனர்.

முடி திருத்துவோர் நல வாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள 14 ஆயிரத்து 667 நபர்களுக்கு இரண்டு தவணைகளாக தலா ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஊரடங்கு காலத்தில் முடிதிருத்தும் தொழிலை மேற்கொள்ள மத்திய அரசின் வழிமுறைகள் இடமளிக்காததால், நலவாரியத்தில் பதிவு செய்யாத நபர்கள் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, தமிழ்நாடு அரசு நிவாரண உதவித்தொகை வழங்க வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

முடி திருத்தும் தொழிலாளர்களின் கோரிக்கையினை கனிவுடன் பரிசீலித்த தமிழக முதல்வர் முடி திருத்துவோர் நல வாரியத்தில் பதிவு பெறாத தொழிலாளர்களுக்கும் இதர அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டதைப் போன்றே நிவாரணத் தொகை வழங்க முடிவு செய்துள்ளது.

அதன்படி, முடிதிருத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள பதிவு பெறாத தொழிலாளர்கள், கிராமப்புறங்களில் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களிடமும், பேரூராட்சிப் பகுதிகளில் சம்பந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாக அலுவலர்களிடமும், நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பகுதிகளில் கடைகள் இருக்கும் இடத்தின் மண்டல அலுவலர்களிடமும் மனுவாக சமர்ப்பிக்க வேண்டும்.

அம்மனுக்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, தகுதியான மனுக்களை மாவட்ட ஆட்சியர்களுக்குப் பரிந்துரை செய்ய வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் அம்மனுக்களின் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து, ஏற்கெனவே முடி திருத்துவோர் நல வாரிய உறுப்பினர்களுக்கு இரண்டு தவணையாக ரூ.2,000 ரொக்கமாக வழங்கியது போன்று, நல வாரிய உறுப்பினர் அல்லாதவர்களுக்கும் ரூ.2,000 ரொக்கமாக வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை வருவாய் நிர்வாக முதன்மை ஆணையர் வழங்குவார்”. என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டோக்கன்களை கலர் ஜெராக்ஸ் எடுத்து பிடிபட்ட மதுப்பிரியர்கள்!

கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட மதுக்கடைகள், ஊரடங்கை தளர்த்தியதையடுத்து சுமார் 45 நாட்களுக்குப் பிறகு கடந்த 7ம் தேதி திறக்கப்பட்டன.

மதுக்கடைகளில் நிதிமண்ற அறிவுறுத்திய கொரோனா தடுப்பு நடவடிக்கை எதையும் பின்பற்றப்படவில்லை என கூறி சென்னை உயர்நீதிமன்றம் மதுக்கடைகளை மூட உத்தரவிட்டது. இதையடுத்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

அதனைத் தொடர்ந்து அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட உரிமையில்லை என கூறிய உச்ச நீதிமன்றம் உயர்நீதி மன்றம் விதித்த தடையை நீக்கி உத்தரவிட்டது. இதனையடுத்து இன்று முதல் கொரோனா பரவல் அதிகமுள்ள சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட சில பகுதிகளைத் தவிர்த்துப் பிற இடங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

ஒரு நாளைக்கு ஒரு கடையில் 500 பேருக்கு மட்டுமே மது விறக்கடும் என்று உச்சநீதிமன்றத்து தமிழக அரசு உறுதியளித்துள்ளது. இதனால் மதுபானத்தை வாங்க டோக்கன் முறையை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. எனவே, மதுக்கடைகளில் குவிந்த மதுப்பிரியர்களுக்கு கிழமை வாரியாக பல வண்ணங்களில் டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ள கிழமை மற்றும் நேரத்தில் மதுவை வாங்கி செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், டோக்கனுக்காக மது பிரியர்கள் மணி கணக்கில் காத்து கிடக்கும் நிலையில், கடலூரில் டோக்கன் வாங்கிய சிலர் அதை கலர் ஜெராக்ஸ் எடுத்து விற்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனை அறிந்த காவல்துறை உடனடியாக மோசடியில் ஈடுபட்ட 16 பேரை கைது செய்து செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ப்ரேக்கப் செய்த கவின் – லாஸ்லியா?!

0

விஜய் தொலைக்காட்சியின் மூலம் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். பிக் பாஸ் முதல் சீசனில் ஜுலி, காயத்ரி சண்டை மூலம் பிரபலமடைந்தது. இரண்டாவது சீர்சன் ஐஸ்வர்யா தத்தாவால் பரபரப்பு ஏற்ப்பட்ட நிலையில், மூன்றாவது சீசனில் கவின், லாஸ்லியா காதலால் விஜய் தொலைக்காட்சிக்கு நல்ல தீனி கிடைத்தது.

சேரனை தனது அப்பா போல் இருப்பதாக கூறி சேரப்பா என்று அழைத்த லாஸ்லியா, கவினால் நிறைய சந்தர்ப்பங்களில் அவரை மனதளவில் காயப்படுத்தினார். இந்நிலையில் கவினும் லாஸ்லியாவும் வெளியே வந்தவுடன் அதே போல் காதலர்களாக வலம் வந்து பின்னர் திருமணம் செய்து கொள்வார்கள் என அவர்களின் ரசிகர்கள் கனவிலிருந்தனர்.

ஆனால் பிக் பாஸ் முடிந்தவுடன் இருவரை பற்றியும் எந்த தகவலுமில்லை. கவின் ‘லிஃப்ட்’ எனும் படத்தில் நடிப்பதாக வெளியானது. லாஸ்லியா ஆரி நடிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் இருவரும் பிரிந்து விட்டதாக தகவல் வெளியானது. தற்போது இருவரின் இன்ஸ்டாகிராம் பதிவு அதனை உறுதிப்படுத்துவது போல் அமைந்துள்ளது.

கண்ணாடி முன் புது ஆடையுடன் படமெடுத்து செல்ஃபி எடுத்துள்ள கவின் “எடுக்காத டிரஸ்ல போட்டோ எடுத்து வச்சுகிட்டா எப்பயாவது உதவும்” என்று பதிவிட்டிருந்தார்.

இதற்குப் பதிலடி கொடுப்பது போல் லாஸ்லியா அதே போன்ற செல்ஃபி எடுத்து “வாழ்க்கை உங்களுக்கு எதாவது கற்பிக்க நினைக்கிறது. அதனால் உங்களை கண்ணாடியில் பார்த்து அதை சரி செய்துக் கொள்ள முயற்சியுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

இது இவர்களின் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அலைபேசி மூலம் கொரோனா பரவும் ஆபத்து – எச்சரிக்கும் எய்ம்ஸ் மருத்துவர்கள்

AIMS என அழைக்கப்படும், அகில இந்திய மருத்துவ விஞ்ஞான நிறுவனத்தின் மருத்துவமனை இந்திய அளவில் புகழ்பெற்ற மருத்துவமனையாகும். இதன் ராய்பூர் மருத்துவமனையிலுள்ள ஐந்து மருத்துவர்கள், BMJ Global Health Journal எனும் இதழில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளனர். அதில் அலைபேசி மூலம் கொரோனா தொற்று பரவ வாய்ப்பிருப்பதை குறித்து குறிப்பிட்டு எச்சரித்துள்ளனர்.

அந்த கட்டுரையில் கூறியிருப்பதாவது :

அலைபேசியின் மேற்பரப்பு, கொரோனா பரவலுக்கு அதிக வாய்ப்பு கொண்டது. அலைபேசி பேசும்போது, நமது முகம், காது, கண், வாய் ஆகியவற்றை ஒட்டியே வைத்திருப்போம். எனவே, எளிதாக வைரஸ் பரவும். என்னதான் கைகளை முறையாக கழுவினாலும், அலைபேசி கொரோனா பரவலுக்கு வழிவகுக்கும்.

ஒரு ஆஸ்பத்திரியில் நடத்தப்பட்ட ஆய்வில், 15 நிமிடத்திலிருந்து 2 மணி நேரத்துக்கு ஒரு தடவை சுகாதார பணியாளர்கள் அலைபேசி பயன்படுத்துவது தெரிய வந்தது. ஏறத்தாழ 100 சதவீதம் பேரும் அலைபேசி பயன்படுத்தினாலும், 10 சதவீதம் பேர் மட்டுமே அவ்வப்போது அலைபேசியை துடைக்கின்றனர்.

சுகாதார பணியாளர்களுக்கு முக கவசம், தொப்பி ஆகியவை போல், அலைபேசியும் உடலுடன் ஒட்டியே இருக்கிறது. ஆனால், முக கவசம், தொப்பி ஆகியவற்றை துவைப்பதுபோல், அலைபேசிகளை துவைக்க முடியாது. கையின் நீட்சியாக அலைபேசி இருப்பதால், அலைபேசியில் இருக்கும் எல்லாமே கைக்கு மாறும்.

மேலும், அலைபேசிகள், பாக்டீரியாக்கள் குடியிருக்க வாய்ப்புள்ளவை. கை சுத்தத்தாலும் அதை தடுக்க முடியாது. எனவே, மருத்துவமனைகளில், தகவல் பரிமாற்றத்துக்கு அலைபேசிகள் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக, ஹெட்போன்கள், இன்டர்காம் தொலைப்பேசி ஆகியவற்றை பயன்படுத்தலாம்.

மேலும், அலைபேசிகளை பல இடங்களுக்கு எடுத்துச் செல்வதன்மூலம், கிருமி பரவும் என்பதால், வெளியிடங்களிலும் அதை பயன்படுத்துவதை கைவிட வேண்டும். அலைபேசிகளை யாருடனும் பகிர்ந்து கொள்ளக்கூடாது.

இதுதொடர்பாக, அரசு அமைப்புகளும், உலக சுகாதார நிறுவனமும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

மசூதிகளில் ஒலி பெருக்கி பயன்படுத்த தடை – நீதிமன்றம் உத்தரவு

0

பொதுமக்களுக்குத் தொந்தரவாக அமைவதால் இனி மசூதிகளில் ஒலி பெருக்கிப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மசூதிகளில் அதிகாலையில் ஒலி பெருக்கி மூலம் பாங்கு ஓதுவதால் அது சுற்றுப்புறத்திலிருக்கும் மக்களின் தூக்கத்தைக் கெடுப்பதால் அதை தடை விதிக்க கோரி அலகாபாத் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.

இதனை விசாரித்த நீதிபதி, மசூதிகளில் ஒலிபெருக்கிகள் மூலம் பாங்கு ஓதக்கூடாது. இது மற்றவர்களின் தூக்கத்தை பறித்து, தொந்தரவு செய்து உரிமைகளில் தலையிடுகிறது. பாங்கு ஓதுவது இஸ்லாத்தின் முறையாக இருந்தாலும், ஒலிபெருக்கிகள் மூலம் அழைக்க வேண்டும் என இஸ்லாம் சொல்லவில்லை. ஒருவருடைய செயல் மற்றவர்களின் மனித உரிமைகளை, அடிப்படை உரிமைகளை மீறக்கூடாது. . ஒலிபெருக்கிகள் இல்லாமல் பள்ளிவாசல்களின் கோபுரத்திலிருந்து முஅத்தின் இனி தொழுகைக்கு அழைக்க வேண்டும் என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவு இஸ்லாமிய மக்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மற்றொரு புறம் இதை மேற்கோள் காடி மற்ற மாநிலங்களும் இதைப் பின்பற்ற வேண்டும் என்ற குரலும் ஒலிக்கிறது.