சனிக்கிழமை, அக்டோபர் 4, 2025
Home Blog Page 5660

கோடிக்கணக்கில் சொத்து இருந்தும் பிச்சை எடுக்கும் சுவீடன் தொழிலதிபர்!

0

சுவீடன் நாட்டைச் சேர்ந்தவர் கிம் என்ற தொழிலதிபர் பணக்கார வாழ்க்கையில் வெறுப்படைந்து எளிமையாக வாழ விரும்பினார். இதனால் இந்தியா வந்த அவர் கோவையில் உள்ள ஒரு தியான மையத்தில் தங்கினார். கையில் ஒரு ரூபாய் கூட இல்லாமல் மிக எளிய வாழ்க்கை வாழ்ந்து வரும் இவர் தனது உணவு மற்றும் அத்தியாவசிய தேவைக்கு கோவை ரெயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்தில் பொதுமக்களிடம் பிச்சை எடுத்து வருவதாக செதிகள் வெளிவந்துள்ளது

கோடிக்கணக்கான ரூபாய் மற்றும் பல கோடி சொத்துக்கு உரிமையாளரான கிம் இதுகுறித்து கூறுகையில், “நான் எளிமையாக வாழ விரும்பிதான் கோவையில் உள்ள தியான மையத்திற்கு வந்தேன். மனநிம்மதிக்காக மக்களிடம் பிச்சை பெற்று, அதில் கிடைக்கும் பணத்தில் உணவு வாங்கி சாப்பிட்டு வருகின்றேன். மன நிம்மதி இல்லாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் பணம் தான். பணம் இல்லையென்றால் வாழ்க்கையில் எந்த பிரச்சனையும் இல்லை என்று தத்துவ மழை பொழிகிறார்.

வெளிநாட்டுக்காரர் ஒருவர் நம்மூரில் பிச்சை எடுப்பதை கோவை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தாலும் அவருக்கு பலர் ஆவத்துடன் பணம் கொடுத்து வருகின்றனர். தனக்கு பிச்சை கொடுப்பவர்களை கிம் வணங்கி நன்றி சொல்கிறார்.

தீண்டாமை சுவர் கட்டும் குஜராத் அரசு! இது தான் குஜராத் மாடலா?

0

தீண்டாமை சுவர் கட்டும் குஜராத் அரசு! இது தான் குஜராத் மாடலா?

டிரம்ப் வருகைக்காக குஜராத்தில் கட்டப்பட்டு வரும் தீண்டாமை சுவர்  பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக குஜராத் அரசு ரூ.100 ஒதுக்கி தீவிரமாக ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெனிலா டிரம்ப் இருவரும் வரும் 24ம் தேதி முதன் முதலாக இந்தியா வருகின்றனர்.

பிரதமரின் சொந்த மாநிலமான குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில் டிரம்பிற்கு 22 கிலோ மீட்டர் தூரத்திற்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க உள்ளார் பிரதமர் மோடி. இரண்டு நாள் பயணமாக வரும் அதிபர் டிரம்ப் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். அகமதாபாத்தில் உள்ள சர்தார் படேல் அரங்கத்தை புதுப்பித்து கட்டப்பட்டுள்ள மொடேரா விளையாட்டு அரங்கத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் திறந்து வைக்கிறார்.

Modi And Trumph Visit in Gujarat-News4 Tamil Latest Online Tamil News
Modi And Trumph Visit in Gujarat-News4 Tamil Latest Online Tamil News

முன்னதாக புகழ்பெற்ற காந்தி ஆசிரமத்தை பார்வையிட உள்ளார் டிரம்ப். பின்னர் இரு தலைவர்களும் திறந்த வாகனத்தில் 22 கிலோ மீட்டர் தூரத்திற்கு செல்கின்றனர். குஜராத்தில் நடக்கும் பிரம்மாண்ட நிகழ்ச்சியில் டிரம்ப் உரையாற்ற உள்ளார்.

இதற்காக பிரமாண்ட சுவர் ஒன்று கட்டப்பட்டு வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த சுவருக்கு பின்னாள் பல ஆயிரம் குடிசைப்பகுதிகள் உள்ளன. டிரம்ப் வருகைக்காக குடிசைப் பகுதிகளை மறைப்பதாக குஜராத் அரசு மீது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளது.

பிரதமர் மோடியின் குஜராத் மாடல் இது தானா என சர்வதேச ஊடகங்கள் முதல் உள்ளூர் ஊடங்கள் வரை கேள்வி  எழுப்பியுள்ளது.

இந்தியன் 2 விபத்து: பலியானவர்களுக்கு ரூ.1 கோடி கொடுக்கும் கமல்!

0

கமல்ஹாசன் நடித்து வரும் ‘இந்தியன் 2’ படத்தின் நேற்று படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் ஷங்கரின் உதவியாளர் உள்பட மூன்று பேர் பரிதாபமாக பலியான சம்பவத்தால் படக்குழுவினர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் கமல்ஹாசன் மற்றும் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் ஆகிய இருவரும் சற்றுமுன் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் விபத்தில் பலியானவர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்த சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு வந்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் கமல்ஹாசன் பேசியதாவது:

’இந்தியன் 2’ படப்பிடிப்பில் நடந்த விபத்தை எனது குடும்பத்தில் நடந்ததாகவே நான் கருதுகிறேன். சினிமா துறையில் போதிய பாதுகாப்பு இல்லை என்பதையே இது காட்டுகிறது. படப்பிடிப்பு தளத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஒரு ரூபாய் நிதி ஒரு கோடி நிதியுதவி அளிக்கப்படும் என்றும் கமலஹாசன் தெரிவித்தார்.

இனிமேல் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் கடைநிலை ஊழியர்களுக்கும் பாதுகாப்பு மற்றும் இன்சூரன்ஸ் இருக்கும் வகையில் படத்தயாரிப்பு குழுவினர் ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வைப்பதாகவும் கமல் கேட்டுக்கொண்டார்

சிறப்பு வேளாண் மண்டல சட்டமசோதா நிறைவேற்றம்! வரலாற்றில் இடம்பெற்ற எடப்பாடி அரசு!!

0

சிறப்பு வேளாண் மண்டல சட்டமசோதா நிறைவேற்றம்! வரலாற்றில் இடம்பெற்ற எடப்பாடி அரசு!!

சேலம் கால்நடை வளர்ச்சி சம்பந்தமான அடிக்கல்நாட்டு விழாவில், காவிரி டெல்டா விவசாய பகுதிகளை சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் என்று அறிவித்திருந்தார். விவசாயிகளும் நீண்ட நாட்களாக அறிவிக்க வேண்டுமென்று வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுகோட்டை, அரியலூர், திருச்சி, கடலூர், கரூர் ஆகிய 8 மாவட்டங்களில் காவிரி டெல்டா பகுதிகளை உள்ளடங்கிய விவசாய நிலங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் சிறப்பு மண்டலமாக மாற்றப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பை மிக விரைவாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகரிடம் முக்கிய கோரிக்கையாக வைக்கப்பட்டது.

இதையடுத்து நேற்றைய சட்டசபை கூட்டத்தில் சிறப்பு வேளாண் மண்டலம் குறித்து நல்ல அறிவிப்பு வரும் என்று முதலவர் எடப்பாடி கூறியிருந்தார். அதுகுறித்த அமைச்சரவை கூட்டத்தை கூட்டி சிறப்பு வேளாண் மண்டல அறிவிப்புக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தனர். சொன்னதைப் போலவே இன்றைய சட்டப்பேரவையில் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலத்திற்காக சட்ட மசோதாவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்தார். இந்த அறிவிப்பை வெளியிட்டதற்கு நானும் ஒரு விவசாயி என்பதில் பெருமை கொள்வதாகவும், இந்த நேரத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை நினைவு கூறுவதாகவும் பேசினார்.

சட்டமசோதாவின் முக்கிய அம்சங்கள்:

  • முதல்வரை தலைமையாகக் கொண்டு 24 உறுப்பினர்களை கொண்ட அதிகாரக்குழு சிறப்பு வேளாண் மண்டலத்திற்கான அனைத்துப் பணிகளையும் மேற்கொள்ளும்.
  • இந்த அதிகார குழுவில், துணை முதல்வர், வேளாண்துறை, சட்டத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மீன்வளத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை, சுற்றுச்சூழல்துறை, தொழில்துறை போன்ற துறைகளின் அமைச்சர்களே அந்த அதிகாரக் குழுவின் முக்கிய உறுப்பினர்களாக செயல்படுவார்கள்.
  • இனி காவிரி டெல்டா பகுதிகளில்; இரும்பு ஆலை, துத்தநாக உருக்காலை, இரும்புத்தாது ஆலை, அலுமினியல் உருக்காலை, மீத்தேன் திட்டம், ஹைட்ரோ கார்பன் வாயு எடுக்கும் திட்டம், மற்ற எரிவாயு திட்டம் மற்றும் பூமியை துளைத்தெடுக்கும், கனிமங்களை பிரித்தெடுக்கும் எந்த திட்டத்திற்கோ, ஆய்வுகளுக்கு அனுமதி கிடையாது.

சிறப்பு வேளாண்மண்டல சட்ட மசோதா அறிவிப்பால், தமிழக காவிரி டெல்டா விவசாயிகளின் மனதில் மகிழ்ச்சியை முதல்வர் எடப்பாடி ஏற்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமைதியான சூழலைக் கெடுக்கப் பார்க்கிறார் மாரி செல்வராஜ்!கர்ணன் படத்தை தடை செய்ய புகார்!

0

அமைதியான சூழலைக் கெடுக்கப் பார்க்கிறார் மாரி செல்வராஜ்!கர்ணன் படத்தை தடை செய்ய புகார்!

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் நடிக்கும் கர்ணன் படத்தை தடை செய்ய வேண்டுமென முக்குலத்தோர் புலிப்படை சார்பாக காவல்துறையிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான படங்களில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்ற படங்களில் பரியேறும் பெருமாளும் ஒன்று. 2018 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட முக்கிய விருதுகளில் இப்படம் விருதுகளை அள்ளியது. இந்த படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் அனைத்துத் தரப்பு ரசிகர்களாலும் பாரட்டப்பட்டார். இதையடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனாக இருக்கும் தனுஷ் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தார்.

இதையடுத்து கடந்த ஓராண்டாக நடந்த திரைக்கதை அமைக்கும் பணிகள் முடிவுற்று இப்போது கர்ணன் எனப் பெயர் சூட்டப்பட்டு அந்த படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. மாஞ்சோலை கலவரத்தில் கொல்லப்பட்ட தொழிலாளர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படத்தில் தனுஷ் தேயிலை தோட்ட தொழிலாளியாக நடிப்பதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தை தடை செய்ய வேண்டுமென நடிகர் கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை எனும் அமைப்பைச் சேர்ந்த அமைப்புச் செயலாளர் பவானி வேல்முருகன் என்பவர் காவல்துறையில் புகார் மனு ஒன்றைக் கொடுத்துள்ளார். அந்த மனுவில் ’1991-ல் கொடியன்குளம் மணியாச்சி சாதி கலவரத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் கர்ணன் படத்தை தடை செய்ய வேண்டும். மற்றும் அந்த படத்தின் படப்பிடிப்பை திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் எடுப்பதற்கு தடை விதிக்க வேண்டும். தென்மாவட்டங்களில் அமைதியான சூழ்நிலை நிலவி வருகின்ற நிலையில் இதுபோன்ற திரைப்படங்களால் மீண்டும் ஒரு கலவர சூழ்நிலை ஏற்படுகிறது. ஆகையால் இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் மற்றும் அந்தத் திரைப்படத்தில் மணியாச்சி காவல்நிலையம் என்று பெயரிட்டு அந்த காவல்நிலையத்தை தனுஷ் தாக்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கிறது. இது காவல்துறை கண்ணியத்தையும் கெடுப்பதாக அமைகிறது.

குறிப்பாக அந்தத் திரைப்படத்தில் தேவர் சமூகத்தை மிகவும் விமர்சித்து வருகிற மாதிரி காட்சிகள் இடம்பெறுகிறது. தொடர்ந்து இதுபோன்ற திரைப்படஙகள் எடுத்து இரு சமூக மக்களிடையே சாதி கலவரத்தை தூண்டி வருகிற மாரி செல்வராஜை கைது செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளனர்.

சகாயம் தலைமையில் கூடும் இளைஞர்கள் – மதுரையில் நடக்கப் போகிறதா முதல் கூட்டம்?

0

சகாயம் தலைமையில் கூடும் இளைஞர்கள் – மதுரையில் நடக்கப் போகிறதா முதல் கூட்டம்?

கடந்த சில நாட்களாக தமிழகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ள விடயம் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணயத்தில் நடைபெற்ற முறைகேடுகள்.இது போட்டித்தேர்வுக்கு தயாராகி வரும் இலட்சக்கணக்கான இளைஞர்களிடையே மிகுந்த மனவேதனையை உண்டாக்கி இருந்தது.

.

எனினும் முறைகேடான தேர்வர்களை மட்டும் நீக்கி தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நேற்றைய தினம் குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்றவர்களை முதல்நாள் கலந்தாய்விற்கு அழைத்து பணிநியமன ஆணை வழங்கி உள்ளது.

கடந்தமாதம் குரூப்2a மற்றும் குரூப் 2 OT (oral test) ஆகிய இரு தேர்வுகளும் ஒருங்கினைக்கப் பட்டதாகவும், முதல்நிலை மற்றும் முதன்மை என இரு நிலைகளில் தேர்வு நடைபெரும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.முதல்நிலை தேர்வில் இருந்த பொதுத்தமிழ் பாடம் நீக்கப்பட்டு முழுவதும் பொது அறிவு கேள்விகள் மட்டுமே இடம்பெரும் என தெரிவிக்கப்பட்டது.

தற்போது குரூப்-4 தேர்வுக்கும் முதன்மை தேர்வு நடைபெரும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளதால் போட்டித்தேர்வுக்கு தயாராகும் இலட்சக்கணக்கான இளைஞர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு தொடர்ந்து தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணயம் தேர்வர்களை பரபரப்பான சூழ்நிலையிலேயே வைத்துள்ளது.தேர்வர்கள் ஒட்டுமொத்தமாக தங்களது கருத்துக்களை தெரிவிக்க ஒரு குழுவாக செயல்பட நினைத்தாலும் அதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படவில்லை.

இதனால் போட்டித்தேர்வு மையங்களின் கூட்டமைப்பு சார்பில் தேர்வர்கள் ஆலோசனைக் கூட்டம் மதுரையில் உள்ள தனியார் திருமண மணடபத்தில் நடைபெற உள்ளதாகவும் இதில் விருப்பம் உள்ள போட்டித் தேர்வர்கள் கலந்துகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சி திரு.சகாயம் IAS அவர்கள் தலைமையில் வருகின்ற ஞாயிறு அன்று மாலை 3 மணியளவில் நடைபெருவதாக தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்வில் பெரும் திரளான இளைஞர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது.

பெண்கள் கழிவறையில் செல்போனை மறைத்து வைத்த அதிர்ச்சி சம்பவம்! கையும் களவுமாக சிக்கிய பேராசிரியர்..!!

0

பெண்கள் கழிவறையில் செல்போனை மறைத்து வைத்த அதிர்ச்சி சம்பவம்! கையும் களவுமாக சிக்கிய பேராசிரியர்..!!

பெண்கள் கழிவறையில் தண்ணீர் குழாய்களுக்கு நடுவே செல்போனை மறைத்து வைத்து வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

சென்னை ஐஐடி பல்கலையில் விண்வெளி ஆராய்ச்சி துறையில் உதவி பேராசிரியராக பணியாற்றும் சுபம் பானர்ஜி என்பவர், பெண்கள் கழிவறையில் தனது செல்போனை தண்ணீர் குழாய்களுக்கு நடுவே மறைத்து வைத்து கழிவறைக்கு வரும் பெண்களை படம் எடுக்க முயற்சி செய்துள்ளார். செல்போனை வைத்துவிட்டு கழிவறையில் இருந்து சுபம் பானர்ஜி வெளியே வந்தபோது, அதே விண்வெளி ஆராய்ச்சி துறையை சார்ந்த மாணவி ஒருவர் இவரைக் கண்டு சந்தேகம் அடைந்துள்ளார்.

சந்தேகத்தின் அடிப்படையில் வேகமாக கழிவறைக்குள் சென்று பல இடங்களில் சோதனை செய்துள்ளார். அங்கு இரண்டு பைப்புகளுக்கு நடுவே ஒரு செல்போன் இருப்பதை கண்டு மாணவி அதிர்ந்து போனார். இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து மாணவி நிறுவனத்தில் புகார் அளித்தார். சுபம் பானர்ஜியை தேடியபோது அவர் ஆண்கள் கழிவறையில் தனக்கு சம்பந்தமே இல்லாதது போல் பயத்தில் மறைந்துள்ளார்.

இந்நிலையில், காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டு சுபம் பானர்ஜி உடனடியாக கைது செய்து விசாரித்து வருகின்றனர். உதவி பேராசிரியரின் தரக்குறைவான செயல்பாடு ஆராய்ச்சி மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே ஒரு நொடியில் உயிர் தப்பிய காஜல் அகர்வால்: அதிர்ச்சி தகவல்

0

நேற்று இரவு சுமார் 9 மணிக்கு இந்தியன்2 படப்பிடிப்பில் நடந்த விபத்தில் 3 பேர் பரிதாபமாக பலியாகினர் என்று செய்தி படக்குழுவினர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது

இந்த நிலையில் இந்த விபத்தில் இருந்து காஜல் அகர்வால் ஒரே ஒரு நொடி பொழுதில் விபத்திலிருந்து உயிர் தப்பியதாக செய்திகள் வெளியாகியுள்ளது

இந்தியன் 2’ படத்திற்காக மேக்கப் போடும் பணியில் காஜல் அகர்வால் இருந்த போதுதான் திடீரென கிரேன் விழும் சத்தம் கேட்டவுடன் காஜல் அகர்வாலும் அவருடைய மேக்கப் கலைஞரும் உடனடியாக அந்த இடத்தை விட்டு வெளியேறியதாக தெரிகிறது

காஜல் அகர்வால் உட்கார்ந்திருந்த இடத்தில் தான் அந்த கிரேன் விழுந்ததாகவும், அவர் உட்கார்ந்திருந்த சேர் கிரேனால் நசுங்கியதாகவும் கூறப்படுகிறது. ஒரே ஒரு நொடி பொழுதில் சுதாரித்த காஜல் அகர்வாலும் அவருடைய மேக்கப் கலைஞரும் இதனால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து காஜல் அகர்வால் தனது டுவிட்டரில் ’இந்த விபத்தின் அதிர்ச்சியிலிருந்து இன்னும் என்னால் மீண்டு வர முடியவில்லை. ஒரு நொடி என்பது வாழ்க்கையில் எவ்வளவு முக்கியம் என்பதை நேற்று நான் புரிந்து கொண்டேன். இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள் என்று தெரிவித்துள்ளார்

அமெரிக்க வேலையை உதறிவிட்டு கல்விக்காக வெப்சைட் தொடங்கிய இந்தியர்

0

குழந்தைகளை பள்ளி கல்லூரிகளில் சேர்ப்பது என்பது பெற்றோருக்கு ஒரு மிகப் பெரிய வேலையாக இருக்கிறது. நல்ல பள்ளி அமையவேண்டும், அப்படியே அமைந்தாலும் அந்த பள்ளியில் இடம் கிடைக்க வேண்டும், அந்த பள்ளியில் சேர்வதற்கு ரெகமெண்டேஷன் எல்லாம் செல்ல வேண்டும் என்பதே பெற்றோர்களின் கவலையாக உள்ளது. அது மட்டுமின்றி நல்ல பள்ளி எது என்பதை கண்டுபிடிப்பதில் பெற்றோர்களுக்கு பல்வேறு சிரமங்கள் உள்ளன

குறிப்பாக கல்லூரியில் சேரும் போது அந்த கல்லூரி உண்மையில் தரச்சான்றிதழ் பெற்ற கல்லூரிதானா? அரசின் அனுமதி பெற்ற கல்லூரி தானா என்பதில் பல குழப்பங்கள் பெற்றோர்களுக்கு உள்ளது. தரமில்லாத கல்லூரியில் சேர்ந்து படித்து பல மாணவர்கள் தங்கள் வாழ்க்கையை தொலைத்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் அமெரிக்காவில் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் ஒரு அருள்மீனா என்ற இளைஞர் தனது வேலையை உதறிவிட்டு இந்தியாவிற்கு திரும்பி, மாணவ மாணவிகள் தரமான பள்ளி கல்லூரிகளில் சேர்வதற்கான ஒரு பணியை செய்து வருகிறார். இவர் ’ஸ்கூல்மைகிட்ஸ்’ என்ற இணையதளத்தை உருவாக்கி அதில் இந்தியா முழுவதும் உள்ள தரமான மழலை பள்ளிகள் முதல் மருத்துவம் பொறியியல் கல்லூரிகள் வரை உள்ள விவரங்களை இந்த இணையதளத்தில் பதிவு செய்துள்ளார்

இந்த இணையதளத்தை மாதம் சுமார் 5 லட்சம் பேர் பார்வையிடுவதாகவும், இதனை இன்னும் அதிகப்படுத்த வேண்டும் என்பதே தனது இலக்கு என்றும் கூறுகிறார் இந்த இணையதளத்தில் சென்று பெற்றோர்கள் தங்கள் பகுதியில் உள்ள பள்ளி கல்லூரிகளின் தரம் மற்றும் சான்றிதழ் குறித்து அறிந்து கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

விபத்து நடந்ததே தெரியாமல் பலியான பயணிகள்: உயிர் தப்பித்த பயணி பேட்டி

0

விபத்து நடந்ததே தெரியாமல் பலியான பயணிகள்: உயிர் தப்பித்த பயணி பேட்டி

கேரள மாநில சொகுசு பேருந்து ஒன்று இன்று அதிகாலை கண்டெய்னர் லாரி ஒன்றின் மீது பயங்கரமாக மோதியதால் ஏற்பட்ட விபத்தில் 20 பேர் பரிதாபமாக பலியாகினர் என்ற செய்தி ஏற்கனவே தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த விபத்தில் பலியான 20 பேருக்கும் என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்வதற்கு முன்னரே இறந்து விட்டார்கள் என்று இந்த விபத்தில் காயமின்றி உயிர் தப்பிய பயணி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கண்ணிமைக்கும் நேரத்தில் இந்த விபத்து நடந்து விட்டதாகவும் விபத்து நடந்த அடுத்த நொடியே முன்பகுதியில் உட்கார்ந்திருந்த 20 பேரும் பலியாகி விட்டதாகவும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த விபத்து குறித்த முதல் கட்ட விசாரணையில் கண்டெய்னர் லாரி டிரைவர் லாரியை ஓட்டி கொண்டிருக்கும் போது தூங்கியதே காரணம் என்றும் தலைமறைவாகியுள்ள அவரை பிடிக்கும் பணியில் தீவிரமாக தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.