சனிக்கிழமை, அக்டோபர் 4, 2025
Home Blog Page 5669

தடுப்பூசி போட்ட குழந்தை நேர்ந்த சோகம்!மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்!

0

தடுப்பூசி போட்ட குழந்தை நேர்ந்த சோகம்!மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்!

திருவண்ணாமலை அருகே தடுப்பூசி முகாமில் குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் உடல்நலமில்லாமல் குழந்தை இறந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுனரான சீரஞ்சீவி. இவரது மனைவி தமிழரசி. இத்தம்பதிகளுக்கு லித்தீஷ் என்ற அழகான 5 மாதக் குழந்தை உள்ளது. குழந்தையை புதுப்பட்டு கிராமத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமில் தடுப்பூசி போட்டுள்ளனர்.

இந்நிலையில் தடுப்பூசி போட்டதில் இருந்தே குழந்தை மிகவும் சோர்வாகவும் ஆகாரம் எதுவும் எடுத்துக் கொள்ளாமலும் இருந்துள்ளது. இதைப் பார்த்த பெற்றோர் தடுப்பூசியின் வீரியம் காரணமாக இப்படி இருக்கலாம் என நினைத்துள்ளனர். மறுநாள் சரியாகாவிட்டால் மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லலாம் என நினைத்து தூங்க வைத்துள்ளனர். ஆனால் காலையில் எழுந்து பார்த்த போது குழந்தை அசைவற்று உடல் ஜில்லிட்டுக் கிடந்துள்ளது.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சிரஞ்சீவியும் தமிழரசியும் மருத்துவமனைக்கு அவசரமாக அழைத்து சென்றுள்ளனர். அப்போது குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக சொல்லியுள்ளனர். இதைக் கேட்ட அவர்களுக்கு தலையில் இடியே விழுந்த மாதிரி இருந்துள்ளது.

இந்த விஷயம் அறிந்த உறவினர்கள் தடுப்பூசி போட்டாததால்தான் குழந்தை இறந்ததாக கூறி ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டனர். இந்த தகவல் அறிந்து வந்த போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி முறையான விசாரணை நடத்தப்படும் என சொல்லியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரு இளம் வீரர்களும் சொதப்பல்!தொடக்க ஆட்டக்காரர் யார்?இந்திய அணியில் குழப்பம்!

0

இரு இளம் வீரர்களும் சொதப்பல்!தொடக்க ஆட்டக்காரர் யார்?இந்திய அணியில் குழப்பம்!

இந்திய அணி சார்பாக நியுசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கப் போவது யார் என்ற குழப்பம் எழுந்துள்ளது.

நியுசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 5 டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று வொயிட் வாஷ் சாதனையை நிகழ்த்தியது. ஆனால் அந்த சந்தோஷத்தின் சுவடு மறைவதற்குள அடுத்த வாரத்திலேயே ஒருநாள் போட்டிகளில் நியுசிலாந்து இந்தியாவை 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று வொயிட்வாஷ் செய்துள்ளது.

இந்திய அணியின் மோசமான பீல்டிங் மற்றும் பவுலிங் ஆகியவற்றால்தான் மாபெரும் தோல்வி கிடைத்துள்ளதாக விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதன் மூலம் இந்திய அணி ஒருநாள் தொடரை முற்றிலுமாக இழப்பது 30 ஆண்டுகளுக்குப் பின் இதுவே முதல் முறையாகும். கோலியின் தலைமையில் பல்வேறு சாதனைகளைப் படைத்து வரும் இந்திய அணிக்கு இது மாபெரும் கரும்புள்ளியாக அமைந்துள்ளது.

இந்நிலையில் அடுத்ததாக தொடங்க இருக்கும் டெஸ்ட் தொடரில் வெற்றி பெற இந்திய அணி கடுமையாக போராட வேண்டியிருக்கும் எனத் தெரிகிறது. ஆனால் தொடக்க ஆட்டக்காரரான ரோஹித் ஷர்மா இல்லாதது மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது. இதையடுத்து பிருத்வி ஷா மற்றும் சுப்மன் கில் ஆகிய இருவரில் யார் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கப் போவது என்ற கேள்வி எழுந்துள்ளது. இன்று தொடங்கிய பயிற்சி ஆட்டத்தில் இருவருமே டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்துள்ளனர். ஆனால் ஹனுமா விஹாரி சதம் அடித்துள்ளார். ஏற்கனவே அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரானப் போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக இறங்கியுள்ளார் என்பதால் அவருக்கும் வாய்ப்பளிக்கப்படும் எனத் தெரிகிறது.

டுவிட்டரில் டிரெண்டிங் ஆன மூன்று விஷயங்கள்! அதிகம் பேசப்படும் புல்வாமா தாக்குதல்..!!

0

டுவிட்டரில் டிரெண்டிங் ஆன மூன்று விஷயங்கள்! அதிகம் பேசப்படும் புல்வாமா தாக்குதல்..!!

சம்பவம் 1 : 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதி நெடுஞ்சாலையில் மத்திய சேமக் படையினர் சென்று கொண்டிருந்த வாகனங்களில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் 40 பாதுகாப்பு இராணுவ வீரர்களுடன், தற்கொலை தீவிரவாதியும் இறந்தனர். இந்த தாக்குதலுக்கு ஜெய்சு இ முகமது என்ற தீவிரவாதக் குழு பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.

ஜம்முவில் தேசிய நெடுஞ்சாலை வழியாக இராணுவ வீரர்கள் சென்ற போது ஸ்கார்பியோ வகை வண்டி ஒன்று படையினரின் வாகனத்தின் மீது மோதி வெடித்தது. அந்த சிறிய வாகனத்தில் 350 கிலோ வெடிமருந்து இருந்ததாக கூறப்பட்டது.

சம்பவம் 2 : நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகை விஜயலட்சுமி என்பவருடன் இருந்த அந்தரங்க வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், இன்று புதிய வீடியோவில் சீமானை விமர்சிக்கும் விதமாகவும், அவர் பேட்டியில் சிரித்துக் கொண்டு சமாளிப்பதாகவும் நடிகை விஜயலட்சுமி வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த சம்பவங்களின் விளைவாக டுவிட்டரில் பொம்பள பொறுக்கி சீமான் என்று டிரெண்டிங் ஆகியது.

வளர்ந்து வரும் கட்சிக்கு முட்டுக்கட்டை போடுவது போல் வீடியோ சோதனை பரவியுள்ளது. இப்படி ஒரு சோதனையா என்று சீமானின் தம்பிகள் சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றனர். செய்தியாளர்கள் வீடியோ பற்றி கேட்டபோது: என்னை எதிர்ப்பவர்கள் எதிரி கிடையாது, நான் யாரை எதிர்க்கிறேனோ அவர்தான் என் எதிரி என்று சிரித்தபடி சினிமா டயலாக் பேசினார்.

சம்பவம் 3 : பிப்ரவரி 14 இன்று காதலர்கள் தனது காதலன், காதலிகளுக்கு அன்பு நிறைந்த பரிசுகளை வாரி வழங்கிய நாளாக அமைந்துள்ளது. சமூக வலைதளங்களில் காதலர்களின் கவிதைகளும் வாழ்த்துகளும் மழையாக பொழிந்த வண்ணமாக உள்ளது. பலர் காதலர் தின கொண்டாட்டத்தை முன்னிட்டு காணொளிகளை வெளியிட்டு மகிழ்ந்தனர்.

எப்படி இருக்கிறது விஜய்யின் குட்டி கத பாடல் – கொலவெறி ரீமிக்ஸா ?

0

எப்படி இருக்கிறது விஜய்யின் குட்டி கத பாடல் – கொலவெறி ரீமிக்ஸா ?

விஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தின் ஒரு குட்டிக் கத பாடல் இணையதளத்தில் வெளியாகி பரவலானக் கவனத்தை ஈர்த்துள்ளது.

தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, மாளவிகா மேனன் உள்பட பலர் நடித்து வரும் ‘மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை மாநகரம் மற்றும் கைதி படங்களின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். படம் கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது.  ஏற்கனவே இந்த படத்தின் மூன்று போஸ்டர்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றன.

இடையில் நடந்த ரெய்டு பிரச்சனைகளால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது. இதையடுத்து இன்று காதலர் தினத்தை முன்னிட்டு படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு குட்டி கத என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. அனிருத் இசையில் விஜய் பாடியுள்ள இந்த பாடல் மாலை 5 மணிக்கு வெளியானது.

வழக்கமாக விஜய் பாடும் பாடல்கள் வேகமான மெட்டு கொண்டதாக இருக்கும். ஆனால் இந்த பாடல் மிக மெதுவாக செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அது மட்டும் இல்லாமல் பாடல் முழுவதுமே ஆங்கில வார்த்தைகளால் நிரம்பியுள்ளது. அதனால் சிலர் கேட்பதற்கு கொலவெறி பாடல் போல இருப்பதாக சொல்லி வருகின்றனர்.

தன் உயிரை துச்சமாக நினைத்து, பள்ளி மாணவிகளின் உயிரை காப்பாற்றிய ஆட்டோ டிரைவர்!

0

தன் உயிரை துச்சமாக நினைத்து, பள்ளி மாணவிகளின் உயிரை காப்பாற்றிய ஆட்டோ டிரைவர்!

தூத்துக்குடி: பள்ளி மாணவிகளை ஏற்றிவந்த ஆட்டோ டிரைவர் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு உயிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்டேட் வங்கி காலனியில் வசித்து வந்த ராமலிங்கம் என்பவர், தினந்தோறும் காலையில் ஆட்டோவில் மாணவிகளை ஏற்றிச் சென்று பள்ளியில் விடுவதும், மீண்டும் மாலை நேரத்தில் மாணவிகளை ஏற்றிச்சென்று வீட்டின் அருகே இறக்கி விடுவார். ஆட்டோ ஓட்டுவதை பல வருடங்களாக ராமலிங்கம் செய்து வந்தார்.

இந்நிலையில் பள்ளி மாணவிகளை ஏற்றிக் கொண்டு வரும் போது, திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இந்த கடுமையான சூழலில் மாணவிகளை வேறு வாகனத்தில் அனுப்பி வைக்க திட்டமிட்டார் ஆனால், எந்த வாகனமும் அந்த வழியாக வராத காரணத்தால் வலியை பொறுத்துக் கொண்டு ஆட்டோவை இயக்கினார். பின்னர், சிறிது தூரம் கடந்து வந்த போது நெஞ்சு வலி அதிகரித்ததால் ஆட்டோவை ஓரமா நிறுத்தினார்.

ஆட்டோவை நிறுத்தியதும் மாணவிகளுக்கு பயம் ஏற்பட்டு உதவிக்கு பக்கத்தில் இருந்தவர்களை அழைத்துள்ளனர். அதற்குள் ஆட்டோ டிரைவர் ராமலிங்கம் மயங்கிய நிலைக்கு சென்றுவிட்டார். பிறகு உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடலை பரிசோதித்த மருத்துவர்கள் , அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியதால் பள்ளி மாணவிகள் அழ ஆரம்பித்தனர்.

தன் உயிரை துச்சமாக நினைத்து பள்ளி மாணவிகளை காப்பாற்றிய ஆட்டோ டிரைவரின் இறப்பு பள்ளி மாணவிகள் மற்றும் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

மது ஆலைகளை மூடுவதாக சொன்ன திமுகவின் வாக்குறுதி என்னாச்சி.? திமுகவை விளாசிய ராமதாஸ்..!!

0

மது ஆலைகளை மூடுவதாக சொன்ன திமுகவின் வாக்குறுதி என்னாச்சி.? திமுகவை விளாசிய ராமதாஸ்..!!

தமிழகத்தில் மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்த கோரி பாமக நெடுங்காலமாக பல்வேறு போரட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இந்நிலையில், திமுகவினர் நடத்தும் மது ஆலைகளின் எண்ணிக்கையில் ஒன்று கூடிவிட்டது என்றும், மது ஆலைகளை மூடுவதாக 2016 ஆம் ஆண்டு திமுக வாக்குறுதி அளித்திருந்தது, திமுக கொடுத்த வாக்குறுதி என்னாச்சி என்று ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த கேள்விக்கு திமுகவிடம் இருந்து பதில் வருமா என்று தெரியவில்லை.

மேலும், தமிழகத்தில் மூடப்பட்ட 400 மதுக்கடைகளை மீண்டும் திறக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. மதுக்கடைகளை படிப்படியாக மூடி மதுவிலக்கை அமல்படுத்துவது தான் தமிழக அரசின் கொள்கையாக இருக்க வேண்டுமே தவிர, மதுக்கடைகளை திறப்பது அல்ல என்றும் ராமதாஸ் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

ஜப்பான் கப்பலில் சிக்கி தவிக்கும் தமிழர்கள் உள்ளிட்ட இந்தியரைமீட்க வேண்டும் என்ற ராமதாஸின் டுவிட்டர் கோரிக்கைக்கு, மத்திய வெளியுறவு இணையமைச்சர் முரளிதரன் நடவடிக்கை எடுப்பதாக கூறி தமிழில் டுவிட்டர் செய்திருந்தார். பதில் கொடுத்த வெளியுறவு அமைச்சருக்கு ராமதாஸ் நன்றி தெரிவித்தது மட்டுமல்லாமல், கப்பலில் சிக்கி தவிக்கும் தமிழக சொந்தங்கள் சொந்த ஊர் திரும்பும் நாளே மகிழ்ச்சியான நாள் என்று குறிப்பிட்டுள்ளார்.

பனை மரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி! கதறி அழுத குடும்பம்..!!

0

பனை மரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி! கதறி அழுத குடும்பம்..!!

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பனைமரத்தை அடிப்படையாக கொண்டு சில குடும்பங்கள் தொழில் செய்து வருகின்றனர். இந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகேயுள்ள வெள்ளையம்பதி கிராமத்தில் ராமர் என்பவரின் மகன்  செல்லபாண்டி என்பவர் பனையேறும் தொழிலாளியாக இருந்து வந்தார். படதாசம்பட்டி என்னும் பக்கத்து கிராமத்தில் பதநீர் இறக்க மரம் ஏறியபோது தவறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இறந்துபோன செல்லப்பாண்டிக்கு அழகான குடும்பமே உள்ளது. சகுந்தலா என்ற மனைவியும் மற்றும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். யாரும் எதிர்பாராமல் நடந்த இச்சம்பவம் வெள்ளையம்பதி கிராம மக்களிடையே பெரும் சோகத்தை உண்டாக்கியுள்ளது. இதனையடுத்து அப்பகுதி கிராம மக்கள் உயிரிழந்த தொழிலாளிக்கு அரசு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

வெள்ளையம்பதி கிராமம் மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் பனையேறும் தொழிலை பிரதான வேலையாக பல்வேறு குடும்பங்கள் செய்து வருகிறது. பனையில் இருந்து கிடைக்கும் நுங்கு மற்றும் வெல்லத்தை காய்ச்சி கருப்பட்டி செய்வது போன்றவற்றின் மூலம் கணிசமான வருமானத்தை ஈட்டி வருகின்றனர். வட மாவட்டங்களை விட தென்மாவட்டங்களில் பனைத் சார்ந்த தொழில் அதிகம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக பட்ஜெட் தாக்கல்: பல்வேறு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு..!!

0

தமிழக பட்ஜெட் தாக்கல்: பல்வேறு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு..!!

வரும் நிதியாண்டுக்கான (2020-2021) நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) துணை முதல்வர் ஓ.பன்னீா்செல்வம் இன்னும் சற்று நேரத்தில் தாக்கல் செய்கிறார்.

துறை ரீதியான நிதி ஒதுக்கீடுகள்:

*  தமிழ் வளர்ச்சித்துறைக்கு 74.08 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
* வேளாண்மைத் துறைக்கு 15,894 கோடி ஒதுக்கீடு.
*  தொல்லியல்துறைக்கு 32.13 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
*  மருத்துவத்துறைக்கு 15,863 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
* கீழடி அகழ்வாராய்ச்சியில் வரலாற்று சான்றுகளை வெளிப்படுத்தும் பொருட்களைக் காட்சிப்படுத்த அகழ் வைப்பகம் கட்ட 12.21 கோடி ஒதுக்கீடு.
*  தமிழக அரசு ஊழியர்களுக்கான ஊதியம் 64,208.55 கோடி ரூபாய் ஒதுக்கீடு, ஓய்வூதியத்திற்கு 33,009.35 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
*  விசைப்படகுகளில் நவீன தகவல் தொடர்பு டிரான்ஸ்ஃபான்டர் பொருத்த 18 கோடி ரூபாய் ஒதுக்கீடு
* அரசு பேருந்துகளில் சிசிடிவி கேமரா பொருத்துவதற்காக 75.02 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
* ஊரக உள்ளாட்சி மேம்பாட்டு அமைப்புகளுக்கு 6,754 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
* நகராட்சி நிர்வாக மேம்பாட்டிற்கு 18,540 கோடி ரூபாய் ஒதுக்கீடு
* சிறைச்சாலை துறைக்கு 392 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
* கால்நடை துறைக்கு 199 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
* பொது விநியோக திட்டத்தை மேம்படுத்த 400 கோடி மானியம், உணவு மானியத்திற்கு 6500 கோடி ரூபாயும் ஒதுக்கீடு.

தேசிய வளர்ச்சி விகிதத்தை விட தமிழக மாநிலத்தின் வளர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. மாநிலங்களுக்கான நிதிப்பகிர்வில் தமிழகத்துக்கான நிதி 4.023% இலிருந்து 4.189 % ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த வருடத்தின் நிதிநிலை அறிக்கையில் தமிழகத்தின் வருவாயை உயா்த்தவும், கடன் அளவினை குறைத்து கட்டுக்குள் வைக்க திட்டம் வகுக்கப்படும் என்று பெரும்பாலும் எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தின் 15 வது சட்டப் பேரவையின் முழுமையான பட்ஜெட் தாக்கலாக இது இருக்கிறது. மேலும் தமிழக வளர்ச்சிக்கு உதவும் பல்வேறு சிறப்பம்சம்களை கொண்ட பட்ஜெட் வருமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பதில் சட்ட சிக்கல் – தலைமை செயலாலர் தலைமையில் அவசர கூட்டம்

0

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பதில் சட்ட சிக்கல் – தலைமை செயலாலர் தலைமையில் அவசர கூட்டம்

கடந்த நாடாளுமன்றத்தேர்தலில் பாமக அதிமுக இடையே கூட்டணி ஏற்படும் போது பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர்.ராமதாஸ் அவர்களால் 10 அம்ச கோரிக்கை முன்வைக்கப்பட்டது அதில் பிரதானமான கோரிக்கை தஞ்சை டெல்டா பகுதியை பாதுக்காக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட வேண்டும் என்பது.இதனை நிறைவேற்றும் விதமாக தஞ்சை உட்பட 8 மாவட்டங்களை சமீபத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி.கே.பழனிச்சாமி அவர்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தார்.அதாவது விவசாயம் சாராத எந்த துறைக்கும் அங்கு அனுமதி இல்லை என்பதே அதன் பொருள்.ஆனால் கடந்த திமுக ஆட்சியின் போது 2011 ல் எண்ணெய் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டது.எண்ணெய் நிறுவனங்கள் மத்திய பட்டியலில் உள்ளதால் அதன் மீது மாநில அரசு சட்டம் இயற்றுவதில் சட்டசிக்கல் உள்ளது என மூத்த வழக்கறிஞர்கள் தெரிவித்ததால் தலைமை செயளாலர் திரு.சண்முகம் தலைமையில் மூத்தவழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது.எனினும் பிப்ரவரி 18 அன்று சட்டமன்றத்தில் இது தொடர்பான மசோதா தாக்கல்செய்வதில் அதிமுக அரசு முனைப்பு காட்டுவதாக தலைமைசெயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மாஸ்டரை ஹெட்மாஸ்டர் ஆக்கிவிடாதீர்கள்!சர்ச்சையைக் கிளப்பிய விஜய்ரசிகரின் மற்றொரு போஸ்டர்!

0

மாஸ்டரை ஹெட்மாஸ்டர் ஆக்கிவிடாதீர்கள்!சர்ச்சையைக் கிளப்பிய விஜய்ரசிகரின் மற்றொரு போஸ்டர்!

புதுக்கோட்டையைச் சேர்ந்த விஜய் ரசிகரான ஸ்டாலின் மாஸ்கோ என்பவர் அடித்து ஒட்டியுள்ள போஸ்டர் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

விஜய் நடித்த பிகில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் பைனான்சியர் அன்புச்செழியன் ஆகியோரின் அலுவலகங்களில் நேற்று வருமான வரிச்சோதனை நடந்தது. இதையடுத்து விஜய் வீட்டிலும் சோதனை நடத்தும் பொருட்டு ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்புக்கு வந்த வருமானத் துறை விஜய்யை சென்னைக்கு அழைத்துச் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து விஜய் ரசிகர்களுக்கும் பாஜக ஆதரவாளர்களுக்கும் இடையே காரசாரமான விவாதம் சமூக வலைதளங்களில் நடந்து வருகிறது. இது மாஸ்டர் படப்பிடிப்புத் தளம் வரை சென்றுள்ளது. பாஜகவினர் விஜய்க்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய ஆயிரக்கணக்கில் குவிந்தனர் விஜய் ரசிகர்கள். இந்த சர்ச்சைகள் இதோடு நில்லாமல் மீண்டும் விஜய்யின் அரசியல் வருகை குறித்த எதிர்பார்ப்பு வரை சென்றுள்ளது.

இந்நிலையில் அரசியல்வாதிகளை சீண்டும் வகையில் புதுக்கோட்டையைச் சேர்ந்த் விஜய் ரசிகரான ஸ்டாலின் மாஸ்கோ என்பவர் அடித்து ஒட்டியுள்ள போஸ்டர் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. அந்த போஸ்டரில் ‘ரசியல்வாதிகளுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். விஜய் எங்களுக்கு மாஸ்டர் ஆகவே இருக்க விரும்புகிறோம். தயவு செய்து உங்களுக்கு ஹெட் மாஸ்டர் ஆக்கிவிடாதீர்கள்… இப்படிக்கு மெய்வேலியாய் நிற்கும் ரசிகர்கள்’ என எழுதப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் புதுக்கோட்டை நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது.

ஏற்கனவே இதுபோன்ற போஸ்டர் ஒன்றை மதுரையைச் சேர்ந்த விஜய் ரசிகர்கள் ஒட்டி சர்ச்சையைக் கிளப்பியது குறிப்பிடத்தக்கது. அந்த போஸ்டரில் அதில் விஜய்யின் இருபுறமும் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகனும் அரசியல் ஆலோசகர் பிரஷாந்த் கிஷோரும் ‘ஆந்திராவை நாங்கள் காப்பாற்றி விட்டோம். லங்கி நிற்கும் தமிழ்நாட்டை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் . மக்கள் நலன் கருதி களமிறங்குங்கள்’ எனக் கூறுவது போல அமைந்திருந்தது.

எப்படியோ தேரை இழுத்து தெருவில் விட்டுவிட்டார்கள்…. அது எங்கு போகப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.