சனிக்கிழமை, அக்டோபர் 4, 2025
Home Blog Page 5671

ஆதீனத்தை நடந்து செல்ல வைத்த திராவிடர் கழகத்தினர்:பல்லக்குப் போராட்டம் வெற்றி!

0

ஆதீனத்தை நடந்து செல்ல வைத்த திராவிடர் கழகத்தினர்:பல்லக்குப் போராட்டம் வெற்றி!

பட்டினப்பிரவேசம் என சொல்லப்படும் பல்லக்கில் வைத்து ஆதீனத்தைத் தூக்கிச் செல்லும் நிகழ்ச்சிக்கு எதிராக போராடி பெரியாரியவாதிகள் நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் மடத்தின்  27 ஆவது ஆதீனகர்த்தராக மாசிலாமணி தேசிக சம்மந்தர் பொறுப்பேற்றுள்ளார். இதனை முன்னிட்டு இவர் அந்த ஆதினத்தின் ஆளுகைக்குள் உள்ள கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக நேற்று திருப்பனந்தாள் வந்து வழிபட்டார். அவர் செல்லும் கோயில்களில் எல்லாம் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக பட்டினப் பிரவேசம் எனப்படும் பல்லக்கில் வைத்து திருவீதிகளை சுற்றி கோயிலுக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. அவ்வாறு சென்ற அவர் மக்களுக்கு ஆசி வழங்கினார்.

இதன் அடுத்த கட்டமாக தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாளில் பிப்ரவரி 12ஆம் தேதி பட்டினப் பிரவேசம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் மனிதனை மனிதனே சுமந்து செல்லும் இந்நிகழ்வுக்கு திராவிடர் கழக தலைவர் கி வீரமணி எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து திருப்பனந்தாள் கடைவீதிகளில் திராவிடர் கழக அமைப்பைச் சேர்ந்தவர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள், நீலப்புலிகள் அமைப்பினர்களும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.

இந்த செய்தி அறிந்த ஆதீனம் நடந்தே செல்வதாகவும் பல்லக்கு வேண்டாம் எனவும் தெரிவித்தார். இந்த தகவல் காவல் துறையினர் மூலம் போராட்டக்காரர்களை அடைந்தது. போராட்டக்காரர்கள் இதைக் கேட்டு ‘பெரியார் வாழ்க, அம்பேத்கர் வாழ்க, ஆதீனத்துக்கு நன்றி’ என முழக்கமிட்டுக் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் திருப்பனந்தாள் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் உருவானது.

தனது வீட்டையே தானமாக கொடுத்த பாடகர்; வீடியோவில் இருக்கும் உண்மை தெரிந்தால் வியந்து போவீர்கள்!

0

தனது வீட்டையே தானமாக கொடுத்த பாடகர்; வீடியோவில் இருக்கும் உண்மை தெரிந்தால் வியந்து போவீர்கள்!

இந்திய திரையுலகில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆங்கிலம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் பாடி மக்கள் மனதை வென்றவர் எஸ்.பி.பி. ஒரே நாளில் 17 பாடல்கள் 20 பாடல்களை பாடி கின்னஸ் சாதனைகளை படைத்த சாதனையாளர்.
இவரின் பாடல் இல்லாத படங்களே இல்லை என்பது தமிழ் சினிமாவின் கடந்தகால வரலாறாகும். திரைப் பிண்ணனி பாடகர் மற்றும் நடிகராக இருந்துவரும் எஸ்பிபி ஆந்திரா நெல்லூரை பூர்வீகமாக கொண்டவர்.

எஸ்பிபி சினிமா பாடகர் என்பது ஒரு புறம் இருந்தாலும், அதீத கடவுள் பக்தியும் ஆன்மீகத்தின் மீதும் பெரிதும் நம்பிக்கை கொண்டவர். தற்போது சென்னையில் வசித்து வருவதால் இவரின் சொந்த ஊரில் பரம்பரை வீட்டை வேதபாட சாலை அமைப்பதற்காக காஞ்சி மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளிடம் தானமாக கொடுத்துள்ளார்.

முறைப்படி வீட்டில் பூஜை செய்யப்பட்டு தானமாக ஒப்படைக்கப்பட்டது. பூஜையின் போது மடாதிபதிகளின் முன் ஆன்மீக பாடலை பாடியது இணையத்தில் வெளியாகியுள்ளது. இவரின் கலைத்துறை சேவைக்காக மத்திய அரசு “பத்ம பூஷன்” வழங்கியது குறிப்பிடத்தக்கது.

ஆண்டவனே செய்தாலும் தவறு தவறுதான்! அமைச்சர் செல்லூர் ராஜூ அதிரடி பேட்டி..!!

0

ஆண்டவனே செய்தாலும் தவறு தவறுதான்! அமைச்சர் செல்லூர் ராஜூ அதிரடி பேட்டி..!!

சமீபத்தில், சினிமா துறையில் பைனான்ஸ் செய்துவரும் அன்புச்செழியன் வீட்டில் வருமான வரி சோதனையின் மூலமாக பலகோடி ரூபாய் கைப்பற்றியது வருமான வருமான வரித்துறை. அன்புச்செழியன் அதிமுகவின் மதுரை மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் பதவியில் இருந்து வந்தார்.

விஜய் வீட்டில் நடந்த வருமானவரி சோதனை குறித்து, அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டபோது; சற்றும் யோசிக்காமல் விஜய் மட்டுமல்ல “ஆண்டவனே தவறு செயதாலும் தவறு தவறுதான்” என்று ஒரு போடு போட்டார். தவறு செய்பவர்களுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது என்றும், அதுபோன்ற நடவடிக்கை விஷயங்களில் எங்கள் அரசு தலையிடாது என்றும் கூறினார்.

அமைச்சரின் பேட்டி சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் காதுகளுக்கு சென்றாகவும், அதற்கு அவர் கோடி கோடியாய் அரசியலில் சம்பாதித்து விட்டு மற்றவரை பற்றி பேசுவதா..? என்று கடுப்பாகியதாக தகவல் வந்துள்ளது. கடந்த சில நாட்களாக வரிமான வரிசோதனை தமிழகத்தில் திடீரென பல இடங்களில் நடைபெறுகிறது. இதனால் பல அரசியல்வாதிகள், பிரபல சினிமா நடிகர்களும் கலக்கம் அடைந்துள்ளனர்.

’கோவிட் 19’ தாக்குதல்:ஒரே நாளில் 242 பேர் பலி! சீனாவில் மீண்டும் பதற்றம்!

0

’கோவிட் 19’ தாக்குதல்:ஒரே நாளில் 242 பேர் பலி! சீனாவில் மீண்டும் பதற்றம்!

சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸால் ஒரே நாளில் 242 பேர் பலியாகியுள்ள நிலையில் பதற்றம் தொற்றிக்கொள்ள ஆரம்பித்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல்வேறு நாடுகள் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சீனாவுடனான தொடர்பைத் துண்டித்து வருகின்றன. இதுவரை சீனாவில் சுமார் 1115 பேர் இந்த வைரஸ் தாக்குதலால் இறந்துள்ளனர். 47000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப் பட்டுள்ளனர். இதனால் சீனாவின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று முன் தினம் மட்டும் சீனாவில் இந்த நோயால் நேற்று இறந்தவர்களின் எண்ணிக்கை 97 என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நோய் தொற்று வெகு விரைவாக ஒருவரிடம் இருந்து மற்றவருக்குப் பரவுதால் மக்கள் பீதிக்குள்ளாகியுள்ளனர். இந்த நோய் தொற்றால் கொரோனா பற்றி உலகத்துக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய மருத்துவரே இறந்துள்ளதால் மக்கள் முகமூடி அணிந்தே வெளியெ செல்கின்றனர். சீனா மட்டுமல்லாது உலகம் முழுவதும் கொரோனா என்ற பெயரே பீதியைக் கிளப்பி வருகிறது.

இந்த வைரஸ் தாக்குதலுக்கு கோவிட் 19 எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.  இந்நிலையில் இந்த வைரஸ் தாக்குதலால் நேற்று ஒரே நாளில் 242 பேர் பலியாகியுள்ளனர். இதை சீன அரசே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் சீனாவில் மீண்டும் பீதி அதிகமாகியுள்ளது. இதனால் கோவிட் 19 நோய்க்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 1300 ஐ தாண்டியுள்ளது.

தாலி கட்டும் முன்பே தாயான பெண்! குழந்தையை கொன்று நாடகமாடியது அம்பலம்..!!

0

தாலி கட்டும் முன்பே தாயான பெண்! குழந்தையை கொன்று நாடகமாடியது அம்பலம்..!!

விருதுநகர் மாவட்டம் திருமால் புதுப்பட்டியை சேர்ந்த அமல்ராஜ் என்பவரின் குழந்தை கடந்த 5 ஆம் தேதி மர்மமான முறையில் தண்ணீர் மூழ்கி இறந்து கிடந்தது. குழந்தையை தனது கணவர் அமல்ராஜ்தான் கொன்றார் என சுஷ்மிதா காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் துரிதமான விசாரணையை தொடங்கினர். குழந்தை இறப்பு பற்றி அமல்ராஜ் குடும்பத்தினரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடந்து வந்தது. விசாரணையின் முடிவில் சுஷ்மிதா குழந்தையை கொன்ற அதிர்ச்சி தகவல் வெளியானது, இச்சம்பவத்தை அறிந்த குடும்பத்தினர் மட்டுமல்லாது காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.

பள்ளிக் கூடத்தில் படித்த போது அமல்ராஜினுடன் பழக்கம் ஏற்பட்டு சுஷ்மிதா கர்ப்பமான காரணத்தால் பள்ளிக்கு அனுப்பாமல் நிறுத்திவிட்டனர். இதையடுத்து இருவருக்கும் உடனடியாக திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. தாலி கட்டும் போது சுஷ்மிதா 7 மாதம் கர்ப்பமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சில மாதங்களுக்கு பிறகு இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. திருமணம் ஆகிய சில மாதங்களிலே குழந்தை பிறந்ததால் அமல்ராஜிக்கு சந்தேகம் எழுந்தது.

மேலும், சுஷ்மிதா தனது உறவுக்காரர் ஒருவருடன் பழகிய சம்பவமும் அமல்ராஜ் காதுகளில் வந்து விழ, அவருடைய சந்தேகம் மேலும் வலுத்தது. இதன் விளைவாக அந்த குழந்தையை தொடாமல் புறக்கணித்து வந்தார். குழந்தையை கொன்றுவிடலாம் என்று கணவன் மனைவி இருவரும் திட்டம் தீட்டி, பாத்ரூம் பக்கெட்டில் நீரில் குழந்தையின் தலையை அமுக்கி கொன்றுள்ளனர்.

குழந்தை இறந்ததாக குடும்பமே நாடகமாடியது இறுதி விசாரணையில் துப்பு துலங்கியது. இந்த கொலைக்கு பிண்ணனியில் இவர்களின் குடும்பமே இருந்த காரணத்தால் மொத்த பேரையும் காவல்துறை கைது செய்தது. பச்சிளம் குழந்தையை கொல்ல இவர்களுக்கு எப்படித்தான் மனம் வந்ததோ என்று பலரும் கொந்தளித்து போயுள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் சமீப காலமாக இந்தியாவில் பெருகி வருவது வேதனையான ஒன்று.

50 ஓவர் போட்டி:35 ரன்களுக்குள் சுருண்ட அணி!மோசமான சாதனை!

0

50  ஓவர் போட்டி:35 ரன்களுக்குள் சுருண்ட அணி!மோசமான சாதனை!

நேபாளம் மற்றும் யு எஸ் ஏ ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் அமெரிக்கா 35 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்களையும் இழந்து மோசமான சாதனைப் படைத்துள்ளது.

கிரிக்கெட்டை உலகம் முழுக்க பரப்பும் விதமாக பல்வேறு முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து அமெரிக்கா போன்ற நாடுகள் இப்போது கிரிக்கட்டில் இப்போது ஆர்வம் காட்டி வருகின்றன. இதையடுத்து ஐசிசி உலகக் கோப்பைத் தொடர் லீக் 2 போட்டியில் நேபாளம் – யு.எஸ்.ஏ அணிகள் மோதின.

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த அமெரிக்க அணி வீரர்கள் வருவதும் பெவிலியன் திரும்புவதுமாக அணிவகுப்பு நடத்திக் கொண்டு இருந்தனர். அந்த அணியின் சேவியர் மார்செல் 15 ரன்கள் அடித்ததே அதிகபட்ச ரன்னாகும். நேபாளத்தைச் சேர்ந்த பவுலர் சுஷன் பாரி 16 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்களை வீழ்த்தினார். அமெரிக்க அணி மொத்தமே 12 ஓவர்களை மட்டுமே எதிர்கொண்டது. ஒருநாள் போட்டி வரலாற்றில் இதுவே மிகவும் சீக்கிரமாக முடிந்த போட்டியாகும்.

இதையடுத்து களமிறங்கிய நேபாள அணி 5.2 ஓவர்களில் வெற்றி இலக்கை 2 விக்கெட்கள் மட்டுமே இழந்து அடைந்தது. இந்த போட்டியின் மூலம் குறைந்த ரன்கள் அடித்த அணி என்ற மோசமான சாதனையை அமெரிக்கா பெற்றுள்ளது. இதற்கு முன்னதாக கனடா 36, ஜிம்பாப்வே 38, இலங்கை 43 ரன்கள் குறைந்தபட்ட ரன்களாகும்.

சைக்கோ படத்தை இரண்டு தடவைப் பார்க்கும் அளவுக்கு ஒரு **** இல்லை:ரசிகனைக் கலாய்த்த மிஷ்கின்!

0

சைக்கோ படத்தை இரண்டு தடவைப் பார்க்கும் அளவுக்கு ஒரு ….. இல்லை:ரசிகனைக் கலாய்த்த மிஷ்கின்!

பாரம் என்ற படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் மிஷ்கின் மேடையில் அநாகரீகமாகப் பேசியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

சைக்கோ படம் வெளியானதில் இருந்து விமர்சகர்களுக்கும் இயக்குனர் மிஷ்கினுக்கும் இடையிலான வார்த்தைப் போர் உச்சத்தைத் தொட்டு வந்தது. இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் ஹைத்ரி, நித்யாமேனன் உள்பட பலர் நடித்த ’சைக்கோ’ திரைப்படம் கடந்த ஜனவரி 24 ஆம் தேதி வெளியாகியது. இளையராஜாவின் இசை மற்றும் கேமரா ஆகியவற்றுக்காக படம் ரசிகர்களால் பரவலாக பாராட்டப்பட்டாலும், லாஜிக் ஓட்டைகள் கொண்ட திரைக்கதையை பெரிதும் விமர்சித்து வருகின்றனர். ஆனால் இதை ஏற்றுக்கொள்ளாத இயக்குனர் மிஷ்கின் இதற்குப் பல காரணங்களை சொல்லிக் கொண்டு வந்தார்.

இந்நிலையில் இப்போது சைக்கோ படம் தொடர்பாக தனக்கும் ரசிகருக்கும் இடையே நடந்த உரையாடல் ஒன்றை வெளிப்படுத்தி சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளார். இயக்குனர் ப்ரியா கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் தேசிய விருது பெற்றுள்ள தமிழ்த் திரைப்படம் பாரம். இந்த படத்தினை இயக்குனர் வெற்றிமாறன் ரிலிஸ் செய்கிறார். இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. விழாவில் இயக்குனர் மிஷ்கின் கலந்துகொண்டு பேசினார்.

விழாவில் அவர் பேசியது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. அவரது பேச்சில் ‘என்னுடைய சைக்கோ படத்தை ஒரு ரசிகர் ரெண்டு தடவை பார்த்ததாக சொன்னார். அவரிடம் ரெண்டு தடவைப் பார்ப்பதற்கு அந்த படத்தில் ஒரு முடியும் இல்லை. உனக்கு வேலையில்லையா எனக் கேட்டேன்’ எனக் கூறியது மேடையில் இருந்தவர்களையே முகம் சுளிக்க வைத்தது. வேறொரு படத்தின் விழாவில் இப்படி தன்னைப் பற்றியும் தன் படங்களைப் பற்றியுமே பேசிக் கொள்வதை இயக்குனர் மிஷ்கின் வழக்கமாகக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டாலின் மீண்டும் உளறல்: திமுகவை வச்சி செய்யும் அதிமுக ஐடி விங்..!!

0

ஸ்டாலின் மீண்டும் உளறல்: திமுகவை வச்சி செய்யும் அதிமுக ஐடி விங்..!!

தமிழக அரசின் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்பு விவசாயிகளை ஏமாற்றும் நாடக செயல் என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் உளறிக் கொட்டியுள்ளார். மேலும் வேளாண் மண்டலத்தை சிறப்பு பொருளாதார மண்டலமாக அறிவிக்க வேண்டுமென்று மாற்றி கூறியுள்ளார்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்காக 31 இடங்களில் கிணறுகள் தோண்டப்பட்டுள்ள நிலையில், அதிமுக அறிவித்திருப்பது அரசியலுக்கானது என்றும் விமர்சித்தார்.
ஸ்டாலின் பேசிய வீடியோவை அதிமுக ஐடி விங் தனது இணையப் பகுதியில் வெளியிட்டு கேலி, கிண்டலுக்கு ஆளாகி வருகிறது.

சென்னையில் திமுக நிர்வாகி ஒருவரின் திருமண விழா மேடையில் பேசிய ஸ்டாலின், டெல்டா மாவட்டங்களை வேளாண் மண்டலமாக மத்திய அரசு தான் அறிவிக்க வேண்டும் என்கிற சராசரி அறிவு கூட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு இல்லை என்று விமர்சித்தார். இதனையடுத்து எடப்பாடியின் அறிவிப்பை பார்த்து சிரிப்பதா, அழுவதா என்று கிண்டலாக பேசிய ஸ்டாலின் வீடியோ தற்போது அதிமுகவின் மூலம் பங்கமாக கலாய்க்கப்பட்டுள்ளதை பலர் இணையத்தில் பரப்பி வருகின்றனர்.

போயி வேற வேலை இருந்தா பாருங்கடா..! டுவிட்டரில் தெறிக்கவிட்ட விஜய்சேதுபதி!!

0

போயி வேற வேலை இருந்தா பாருங்கடா..!
டுவிட்டரில் தெறிக்கவிட்ட விஜய்சேதுபதி!!

நடிகர் விஜய் சேதுபதி மதம் மாறியதாக கூறப்பட்ட வதந்திக்கு நெத்தியடி அடித்தது போல் ஒரு டுவிட்டர் பதிவை போட்டுள்ளார் விஜய்சேதுபதி. நடிகர்கள் பலர் வெவ்வேறு மதம் மாறிவருவதாகவும், பணத்தின் மூலம் தனது நண்பர்களையும் சேர்த்து மதம் மாற்றி வருவதாகவும் விஜய் உள்ளிட்ட பலர் மீது விமர்சனம் எழுந்தது.

நடிகர் விஜய், ரமேஷ் கண்ணா, விஜய்சேதுபதி மற்றும் சில நடிகைகள் கிறித்தவ மதம் மாறியதாக சமூக வலைதளத்தில் வதந்தி மிக வேகமாக பரவியது. இந்த வதந்திகளை யார் பரப்புகிறார்கள் என்பதை நடிகர்கள் நிச்சயம் அறிந்திருக்க வாய்ப்புண்டு. இருப்பினும் தவறான தகவலை பரப்பும் நபர்களின் பெயரை எதுவும் குறிப்பிடாமல் “போயி வேற வேலை இருந்தா பாருங்கடா” என்று செவிட்டில் அறைந்தாற்போல் நடிகர் விஜய்சேதுபதி டுவிட்டரில் பதிவிட்டுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கிறித்தவ மதத்தை பரப்பி பல கோடி ரூபாய் வருமானம் ஈட்டியதாகவும், சரியான வருமானவரி கட்டாமல் போனதாலும் நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சம்பவம் விஜய் ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது, இதனையடுத்து நடிகர் விஜய் தனது பலத்தை காட்ட வேன் மற்றும் பேருந்து மீது ஏறி செல்பி எடுப்பது போன்ற வீடியோக்கள் பரப்பாக இணையத்தில் வைரலாக பரவியது.

மதமாற்றம் செய்வதாக நடிகர்களை மட்டும் குறிவைத்து பொய்யான தகவலை பரப்பியவர்களுக்கு எதிராகவும், அதே சமயம் விஜய்சேதுபதிக்கு ஆதரவாகவும் அவரது பதிவில் கருத்து பதியப்பட்டு வருகிறது. பலர் விஜய்சேதுபதியின் கருத்தை ஆதரித்தாலும் சிலர் எதிர்ப்பினை காட்டி வருகின்றனர். நடிகர் விஜயும், விஜய்சேதுபதியும் மாஸ்டர் படத்தில் ஒன்றாக நடித்து வருகின்றனர். இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் தஞ்சை பேட்டியில் நடிகர் விஜய் கிறித்தவ மதத்தை பரப்புவதாக குற்றச்சாட்டு வைத்தது குறிப்பிடத்தக்கது.

கடன் வாங்கிய தொழிலாளிக்கு கடவுள் காட்டிய கருணை! அடித்தது 12 கோடி ஜாக்பாட்.!!

0

கடன் வாங்கிய தொழிலாளிக்கு கடவுள் காட்டிய கருணை! அடித்தது 12 கோடி ஜாக்பாட்.!!

கேரள கூலித் தொழிலாளி ராஜன் என்பவருக்கு லாட்டரியில் 12 கோடி ஜாக்பாட் விழுந்துள்ளது. இவரது மகளின் திருமண செலவிற்காக வங்கியில் குறிப்பிட்ட தொகையை கடனாக வாங்கியுள்ளார். கூலித் தொழிலில் அதிக வருமானம் இல்லாத காரணத்தால் கடனை அடைக்க முடியாமல் வட்டிக்கு மேல் வட்டி ஏறி சுமார் 7 லட்சம் கடன் ஏறியுள்ளது.

இந்நிலையில், ராஜன் தனது அதிஷ்டத்தை நம்பி லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கியுள்ளார். வந்தால் வரட்டும் போனால் போகட்டும் என்று நினைத்துக் கொண்டு இருந்தவருக்கு கடவுள் கருணை காட்டியதுபோல் லாட்டரி சீட்டில் 12 கோடி ஜாக்பாட் அடித்திருந்தது. லாட்டரி சீட்டில் பரிசுத் தொகை விழுந்த விஷயத்தை முன்பே அவர் அறியவில்லை. வாங்கிய லாட்டரி சீட்டை எடுத்துக் கொண்டு சென்ற ராஜனுக்கு பெரும் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

இவர் வாங்கிய லாட்டரிக்கு 12 கோடி ரூபாய் பரிசுத் தொகை விழுந்ததை கேட்டவுடன் கூலித் தொழிலாளி ராஜன் நம்பமுடியாமல் மகிழ்ச்சியில் திளைத்தார். வெறும் 300 ரூபாய்க்கு வாங்கிய லாட்டரியில் 12 கோடி விழும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இதனை தன் குடும்பத்துடன் மகிழ்ந்து கடனை அடைத்துவிட்டு மகள்களை மேற்கொண்டு படிக்கவைக்க இருப்பதாக மகிழ்ச்சியுடன் கூறினார். லாட்டரி பரிசுத்தொகையால் கேரளாவில் லாட்டரியை ஆர்வத்துடன் வாங்கும் நபர்கள் மேலும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.