சனிக்கிழமை, அக்டோபர் 4, 2025
Home Blog Page 5672

மாமூல் கேட்ட ரவுடிக்கு மாவுக்கட்டு போட்ட காவல்துறை; விழுப்புரத்தில் விதி விளையாடியது!

0

மாமூல் கேட்ட ரவுடிக்கு மாவுக்கட்டு போட்ட காவல்துறை; விழுப்புரத்தில் விதி விளையாடியது!

விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே கடைகளில் மாமூல் கேட்டு மிரட்டிய ரவுடிக்கு கால் உடைந்து மாவுக்கட்டு போட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. நீண்ட நாட்களாக மாமூல் கைவரிசையை காட்டிவந்த ரவுடி உதயன் என்பவன், கத்தியை காட்டி வியாபாரிகளிடம் பண வசூல் வழக்கில் தேடப்பட்டவன். இன்று ரவுடி உதயன் இருக்கும் இடம் போலீசாருக்கு ரகசிய தகவலின் மூலம் தெரிய வர ரவுடியை தேடி காவல்துறை தனிப்படை முடுக்கிவிடப்பட்டது.

விழுப்புரம் குயிலாப்பாளையத்தை சேர்ந்த மாமூல் ரவுடி சில நாட்களுக்கு முன்பு, ஒரு வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி பண வசூல் கேட்டதாகவும், பணம் தர மறுத்ததால் கடை உரிமையாளரின் வாகன கண்ணாடியை உடைத்ததாகவும் புகார் கொடுக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் மாட்டுக்காரன் சாவடி அருகே நீர்தேக்க தொட்டியின் மேலே மறைந்திருப்பதாக காவல்துறைக்கு தகவல் வந்ததை அடுத்து, நீர் தேக்கத் தொட்டியை நெருங்கிய காவல்துறை ரவுடி மேலே இருப்பதை உறுதி செய்து கொண்டு இரும்பு படிக்கட்டின் வழியாக மேலே ஏறினர்.

போலீசார் தன்னை பிடிக்க வருவதை அறிந்து கொண்ட ரவுடி என்ன செய்வதென்று தெரியாமல் திடீரென நீர்தேக்க தொட்டியின் மேலிருந்து கீழே குதித்தான். இதனால் அவனது காலில் எலும்பு முறிவுகள் ஏற்பட்டன. ரவுடியின் பரிதாப நிலையை பார்த்த காவல் துறையினர் பொறுப்புடன் அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்து மாவுக்கட்டு போட்டனர். மாமூல் ரவுடி உதயனிடம் இருந்து சில ஆயுதமும் அவனுடைய இருசக்கர வாகனத்தையும் காவல் துறையினர் கைப்பற்றினர். சமீப காலங்களாக சமூகத்தில் தவறு செய்யும் பலர் பாத்ரூமில் வழுக்கிவிழுந்து மாவுக்கட்டு போடுவது வழக்கமாகி வருகிறது.

வேர்க்கடலையா… வெடிமருந்தா..? விமான நிலையத்தில் அதிர்ச்சியை உண்டாக்கிய கடத்தல் சம்பவத்தின் வைரல் வீடியோ..!!

0

வேர்க்கடலையா… வெடிமருந்தா..? விமான நிலையத்தில் அதிர்ச்சியை உண்டாக்கிய கடத்தல் சம்பவத்தின் வைரல் வீடியோ..!!

டெல்லியின் சர்வதேச விமான நிலையத்தில் வேர்க்கடலையில் வெளிநாட்டு பணத்தை நூதன முறையில் கடத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது. வெளிநாட்டிலிருந்து டெல்லி விமான நிலையம் வந்திறங்கிய விமான பயணிகளை வழக்கம் போல் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.

சோதனையின் போது முரட் ஆலம் என்னும் வெளிநாட்டு பயணியின் பையில் அயல்நாட்டு பிஸ்கட்டுகளும், வேர்க்கடலைகளும் இருப்பது சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகத்தை கிளப்பியது. சந்தேகத்தின் பேரில் பயணியின் பொருட்களை தீவிர சோதனை செய்யப்பட்டது. வேர்க்கடலையை உரித்துப் பார்த்த போது அதில் வெளிநாட்டு படங்கள் சிறிய உருளையாக கட்டிவைக்கப்பட்டு இருந்தது. இதைப் பார்த்தவுடன் சுங்கத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும், பிஸ்கட் பாக்கெட்டுகளையும் சோதனை செய்த போது, பிஸ்கட்டுகளின் நடுவே ஓட்டை போடப்பட்டு அதில் பணத்தை லாவகமாக அடைத்து கடத்தியது தெரிய வந்தது. கடத்தப்பட்ட பணங்களின் மதிப்பு 40 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என்று சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தின் பிண்ணனி குறித்து விசாரணை நடந்து வருகிறது.

திமுக ஜெயிக்கும் வரை செருப்பு போட மாட்டேன்! உடன்பிறப்பு சபதம்..!!

0

திமுக ஜெயிக்கும் வரை செருப்பு போட மாட்டேன்! உடன்பிறப்பு சபதம்..!!

கட்சிக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும் தொண்டர்கள் தமிழ்நாட்டில் எல்லா கட்சியிலும் உண்டு. அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே வீரளூர் கிராமத்தை சேர்ந்த காளியப்பன் என்பவர் திமுக கட்சியின் மீது தீராத பற்று கொண்டவர். தமிழக அரசியலில் எந்த சட்டமன்றத் தொகுதியும் ஒரு கட்சியின் கோட்டையாக இருக்க முடியாது.

கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதி பல ஆண்டுகளாக திமுகவின் அசைக்கமுடியாத கோட்டையாக இருந்தது. திமுகவின் விசுவாசிகள் அதிகம் நிறைந்த சட்டமன்ற தொகுதியில் கலசப்பாக்கமும் ஒன்றாகும். ஒருகாலத்தில் கொடிகட்டிப் பறந்த திமுகவின் அரசியல் பலம் கடந்த நான்கு தேர்தல்களாக சரிந்ததால் அதிமுகவின் செல்வாக்கு உயர்ந்து திமுகவின் வெற்றிக்கனி தேர்தலின் மூலம் பறிக்கப்பட்டுள்ளது. கூட்டணி கட்சிக்கு தொகுதி கொடுக்கப்பட்டதால் தொடர்ந்து திமுக தோல்வியை தழுவியதாக கூறப்படுகிறது.

தமிழக அரசியல் சமூக வலைதளங்களில் சூடு பிடித்து மக்களிடம் இருந்து உடனடி விமர்சனங்கள் வைக்கப்படுகிறது. திமுகவின் தொண்டர் காளியப்பனை பிற கட்சி தொண்டர்கள் அரசியல் ரீதியாக தொடர்ந்து கேலி செய்து வந்த காரணத்தால் காளியப்பன் வெறுப்பின் உச்சகட்டத்தை அடைந்து, தனது சட்டமன்ற தொகுதியில் திமுக எப்போது வெற்றி பெறுகிறதோ அப்போதுதான் காலில் செருப்பு போடுவேன் என்றும், அதுவரை செருப்பு போடாமல் வெறும் காலில் நடப்பேன் என்று சபதம் எடுத்துள்ளார். இவர் ஏற்கனவே பல ஆண்டுகளாக செருப்பு அணிவதில்லை என்றும் சொல்லப்படுகிறது.

நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் ஒன்றியக் குழு பதவிக்கு போட்டியிட்டு காளியப்பன் வெற்றி பெற்றது ஒருபக்கம் இருந்தாலும், திமுக மாவட்ட நிர்வாகிகள் பலர் காளியப்பனை செருப்பு போட சொல்லி வருவது குறிப்பிடத்தக்கது.

காயத்துக்குப் பின் தொடர் சொதப்பல் – தரவரிசையில் பூம்ராவின் இடம் !

0

காயத்துக்குப் பின் தொடர் சொதப்பல் – தரவரிசையில் பூம்ராவின் இடம் !

நியுசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஒரு விக்கெட் கூட வீழ்த்தாத இந்தியாவின் பூம்ரா தரவரிசையில் இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

நியுசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியின் தோல்விக்கு மோசமான பந்துவீச்சு ஒரு முக்கியக் காரணமாக சொல்லப்பட்டு வருகிறது. அதிலும் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான பூம்ரா மூன்று போட்டிகளிலும் சேர்ந்து ஒரு விக்கெட் கூட வீழ்த்தாதது மிகப்பெரிய பலவீனமாக அமைந்தது.

இந்நிலையில் ஒருநாள் தரவரிசையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு தனது முதல் இடத்தை இழந்துள்ளார். நியுசிலாந்தின் ட்ரண்ட் போல்ட் முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளார். ஒருநாள் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்கள் தரவரிசை:-

  1. போல்ட் – 727
  2. பும்ரா – 719
  3. முஜீப் – 701
  • ரபடா – 674
  • கம்மின்ஸ் – 673
  • வோக்ஸ் – 659
  • அமீர் – 656
  • ஸ்டார்க் – 645
  • ஹென்றி – 643
  • ஃபெர்குசன் – 638

பேட்டிங்கைப் பொறுத்தவரை கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் முதலிடத்தில் உள்ளனர்.

  1. கோலி – 869
  2. ரோகித் – 855
  3. பாபர் – 829
  • டெய்லர் – 828
  • டூப்ளெசிஸ் – 803
  • வார்னர் – 796
  • டி காக் – 782
  • கானே வில்லியம்சன் – 773
  • ஜோ ரூட் – 770
  • ஃபின்ச் – 769

எனக்குக் கொரோனா இருக்கிறது அருகில் வராதீர்கள் –ஆந்திர விவசாயி பீதியில் எடுத்த விபரீத முடிவு !

0

எனக்குக் கொரோனா இருக்கிறது அருகில் வராதீர்கள் –ஆந்திர விவசாயி பீதியில் எடுத்த விபரீத முடிவு !

ஆந்திராவில் தனக்குக் கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பதாக நினைத்த விவசாயி தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல்வேறு நாடுகள் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சீனாவுடனான தொடர்பைத் துண்டித்து வருகின்றன. இதுவரை சீனாவில் சுமார் 1115 பேர் இந்த வைரஸ் தாக்குதலால் இறந்துள்ளனர். 47000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப் பட்டுள்ளனர். இதனால் சீனாவின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்றுதான் இந்த வைரஸ் மூலம் நடக்கும் தாக்குதலுக்கு கோவிட்-19 எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

வைரஸ் தாக்குதல் சீனாவில் மட்டுமே இருந்தாலும், அந்த வைரஸ் சம்மந்தமான பீதி உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பாவி விவசாயி ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூரை அடுத்துள்ள பகுதி தொட்டம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணையா என்ற விவசாயி. இவர் சிறுநீரக தொற்று காரணமாக அவதிப்பட்டுள்ளார். அதனால் காய்ச்சலும் இருந்துள்ளது. இது சம்மந்தமாக மருத்துவர்கள் மருந்துகள் கொடுத்து பாதுகாப்புக்காக முகமூடி அணிந்து வெளியே செல்ல சொல்லியுள்ளனர்.

ஆனால் காய்ச்சல் குறையாததால் தனக்குக் கொரோனா வைரஸ் தாக்குதல் உள்ளதாக அவரே கற்பனை செய்து கொண்டுள்ளார். இதனால் குடும்பத்தினர் யாரும் தன்னருகில் வராமல் இருக்க அவர்களை விட்டு விலகி இருந்துள்ளார். மீறி வந்தாலும் கற்களால் அடித்து விரட்டி இருக்கிறார். குடும்பத்தினர் கொரோனா பற்றி எடுத்து சொல்லியும் அதை அவர் கேட்க மறுத்துள்ளார். இந்நிலையில் குடும்பத்தினருக்கு நோய் பரவி விடக் கூடாது என்பதற்காக வீட்டுக்கு அருகில் இருந்த மரத்தில் தூக்கு மாட்டித் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதைப்பார்த்த அவரது குடும்பம் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது.

விஜய்க்காக கொந்தளித்த விஜய்சேதுபதி: பரபரப்பு டுவீட்

0

சமீபத்தில் தளபதி விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடியாக ரெய்டு செய்தனர் என்பது தெரிந்ததே. இந்த ரெய்டு குறித்து அரசியல் தலைவர்கள் மற்றும் ஊடகங்கள் பல்வேறு செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

அவ்வாறு ஒரு ஊடகம் வெளியிட்ட செய்தியில் விஜய், விஜய் சேதுபதி உள்பட பல திரையுலக பிரபலங்கள் மதமாற்ற பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் அதற்காக அவர்கள் திரையுலகில் கிடைக்கும் கருப்பு பணத்தை பயன்படுத்தி வருவதாகவும் இதனை அறிந்து தான் மத்திய அரசு தகுந்த ஆவணங்களுடன் விஜய் வீட்டிலும் ஏஜிஎஸ் மற்றும் அன்புச்செழியன் வீட்டிலும் ரெய்டு செய்ததாகவும் செய்தி வெளியிட்டிருந்தது

இந்த செய்தியை பார்த்த விஜய்சேதுபதி தனது டுவிட்டர் தளத்தில் ”போய் வேற வேலை இருந்தா பாருங்கடா” என்று காட்டமாக விமர்சனம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் சேதுபதி மட்டுமின்றி நடிகை ஆர்த்தியும் தனது டுவிட்டர் தளத்தில் இந்த செய்தியை வெளியிட்ட ஊடகத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

மல்யுத்த களத்தில் இறங்கும் பிரபல பாலிவுட் நடிகரின் மகள்!

0

பிரபல ஹாலிவுட் நடிகர் டுவெய்ன் ஜான்சன் என்ற ராக் டபிள்யூ.டபிள்யூ.ஈ என்னும் மல்யுத்தப் போட்டியில் பங்குபெற்று புகழ் பெற்று இருந்தார் என்பது தெரிந்ததே. இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்

இந்த நிலையில் மல்யுத்த போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பின் அவர் ’ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்’ உள்பட பல திரைப்படங்களில் முன்னணி கேரக்டர்களில் நடித்து வந்தார். திரையுலகுக்கு வந்த பின்னும் இவருக்கு ரசிகர்கள் குவிந்துள்ளனர்

இந்த நிலையில் ராக் மகள் சிமோன் ஜான்சன் என்பவர் தற்போது தந்தை வழியில் மல்யுத்த போட்டியில் களமிறங்க உள்ளார். 18 வயதாகும் இவர் சமீபத்தில் மல்யுத்தப் போட்டியில் விளையாட ஒப்பந்தம் ஆகி, தற்போது பயிற்சியை தொடங்க உள்ளதாகவும் விரைவில் இவர் தனது முதல் போட்டியை சந்திப்பார் என்றும் கூறப்படுகிறது

இது குறித்து சீமான் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது: ‘எனது குடும்பத்திற்கு மல்யுத்தத்துடன் இருக்கும் தொடர்பு தொடர்ந்து வருகிறது என்பதை உணர்வது எனக்கு அத்தனை முக்கியமான விஷயம். தற்போது அதனைத் தொடர எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. மல்யுத்தம் செய்வதற்கு மட்டுமல்ல, ஒரு பெரிய பாரம்பரியத்தை தொடர்வதற்கும்தான்’ என்று தெரிவித்துள்ளார்.

குழந்தையே இல்லாமல் 80 ஆண்டு வாழ்க்கை! அன்பின் இலக்கணமாக வாழும் காதல் ஜோடி..!!

0

குழந்தை இல்லாமல் 80 ஆண்டு வாழ்க்கை! அன்பின் இலக்கணமாக வாழும் காதல் ஜோடி..!!

அமெரிக்கா நாட்டின் ஆஸ்டின் நகரின் அருகேயுள்ள லான்ஹார்ன் கிராமத்தில் வசிக்கும் ஜான் மற்றும் சார்லோட் ஹென்டர்சன் தம்பதி உலகில் வாழும் அதிக வயதான தம்பதியராக கின்னஸ் சான்றிதழ் மூலம் கடந்த ஆண்டு அங்கீகரிக்கப்பட்டு காதலுக்கு பெருமை சேர்த்தனர்.
இவர்கள் இருவரும் முதன்முதலாக, 1934 ம் ஆண்டு டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் சந்தித்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

ஜான் தனது காதலை வெளிப்படுத்த சார்லோட்டிடம் மலர்கொத்தை கொடுத்து அன்பை பரிமாறிக்கொண்டார். இருவரும் இரண்டாம் உலகப்போரின் தொடக்க காலத்தில் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் காதல் வாழ்க்கை 100 வயதுகளை தாண்டி உண்மையான அன்பை பறைசாற்றுகிறது.

இன்னும் இணைபிரியாத தம்பதியர்களாக வாழும் இவர்கள், தங்களது 80 ஆவது திருமண நாளை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொண்டாடினர். திருமண பந்தம் நீடித்து தொடர்வதற்கான ரகசியமாக இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்வதை முக்கிய காரணமாக சொல்கிறார்கள். இவர்களின் காதல் வாழ்க்கையை கடந்த ஆண்டு அமெரிக்க ஊடகங்கள் மிக அழகாக வர்ணித்து வெளியிட்டிருந்தன.

இந்த அழகான காதல் ஜோடி அடிக்கடி கடந்தகால நிகழ்வுகளை பேசி மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதாக ஜோடியை பற்றி அறிந்தவர்கள் கூறியிருந்தனர்.
தனது காதல் வாழ்க்கையை அன்பால் நிரப்பி இருவரும் விட்டுக்கொடுத்து வாழ்ந்துவந்த இவர்களுக்கு கடவுள் குழந்தை பாக்கியத்தை தராமல் போனது துரதிஷ்டமே. குழந்தை இல்லாததை ஒரு பெரிய குறையாக நினைக்காமல் இருவரும் அன்போடு 80 ஆண்டுகாலத்தை கடந்தது வியப்பான ஒன்றுதான்.

கடந்த ஆண்டு இவர்களின் காதலை உலகமே போற்றியது. உலகமே அன்பால்தான் இயங்குகிறது என்பதற்கு, இவர்களின் காதல் வாழ்க்கையும் ஒரு எடுத்துக்காட்டாகும்.

எச்சில் துப்பி பீட்சா டெலிவரி செய்த நபர்: விசாரணையில் அதிர்ச்சி காரணம்

0

வாடிக்கையாளருக்கு பீட்சாவை டெலிவரி செய்யும் முன்னர் அதன் மீது எச்சில் துப்பி டெலிவரி செய்த டெலிவரி பாய் ஒருவருக்கு இரண்டரை ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

துருக்கியில் பீட்சா டெலிவரி செய்யும் நபர் ஒருவர் வாடிக்கையாளர் ஒருவருக்கு பீட்சா டெலிவரி செய்தார். அவர் டெலிவரி செய்த பீட்சாவின் பேக்கிங் சற்று வித்தியாசமாக இருந்ததை பார்த்து சந்தேகமடைந்த அந்த வாடிக்கையாளர் உடனே அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியை பார்த்தார். அப்போது டெலிவரி பாய் பீட்சாவை ஓபன் செய்து அதில் எச்சில் துப்பி இருந்தது தெரிய வந்தது.

உடனடியாக இது குறித்து வாடிக்கையாளர் போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்த விசாரணையில் அந்த வாடிக்கையாளர் இதற்கு முன்னர் பீட்சா டெலிவரி செய்த போது தன்னை ஏளனமாக பேசியதாகவும் அதற்காக அவரை பழிவாங்கும் வகையில் அடுத்தமுறை பீட்சா டெலிவரி செய்யும் போது எச்சில் துப்பியதாகவும் வாக்குமூலம் கொடுத்தார். இதனையடுத்து அந்த டெலிவரி நபருக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

உலகக்கோப்பை இறுதி ஆட்டம்:மோதிக் கொண்ட இருநாட்டு வீர்ரகள்!ஐசிசி அளித்த தண்டனை!

0

உலகக்கோப்பை இறுதி ஆட்டம்:மோதிக் கொண்ட இருநாட்டு வீர்ரகள்!ஐசிசி அளித்த தண்டனை!

தென் ஆப்பிரிக்காவில் கடந்த ஒரு மாதமாக 19 வயதுக்குட்பட்டோருக்கான ஜூனியர் உலகக்கோப்பை தொடர் நடைபெற்று வந்தது. இதில் தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய இந்திய அணி எளிதாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. அதேப்போல வங்கதேசமும் முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி கடந்த 9 ஆம் தேதி நடந்தது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் இந்தியாவை பேட் செய்ய பணித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய வீரர்கள் அனைவரும் சொதப்ப ஜெய்ஸ்வால் மட்டுமே அதிகபட்சமாக 88 ரன்களை சேர்த்தார். அதன் பின்னர் ஆடிய வங்கதேச அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தாலும் ஒருவழியாக போட்டியை வென்று முதல் முறையாகக் கோப்பையைக் கைப்பற்றியது.

கோப்பையைக் கைப்பற்றிய கொண்டாட்டத்தில் ஓய்வறையில் இருந்த வீரர்கள் அனைவரும் மைதானத்துக்குள் ஓடிவந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அப்போது அவர்களின் செய்கை இந்திய வீரர்களை சீண்டும் விதமாகவும் பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைக்கும் விதமாகவும் இருந்தது. இதற்கு இந்திய வீரர்களான ரவி பிஷ்னாய் மற்றும் ஆகாஷ் சிங் ஆகியோர் எதிர்வினையாற்றினார். இதனால் மைதானத்தில் கைகலப்பு உருவாகும் சூழல் ஏற்பட்டது. பின்னர் போட்டி நடுவர்கள் தலையிட்டு வீரர்களை அனுப்பி வைத்தனர்.

ஆனாலும் பின்னர் இதுபற்றி போட்டி நடுவர்கள் மற்றும் பிசிசிஐ சார்பில் ஐசிசியிடம் முறையிடப்பட்டது. இதையடுத்து வங்கதேச அணி வீரர்களான தோஹித் ஹிர்தாய், ஷமிம் ஹொசைன் ஆகியோருக்கு தலா 6 தகுதி இழப்பு புள்ளிகளையும், ராகிபுல் ஹசனுக்கு 5 தகுதி இழப்பு புள்ளிகளையும் வழங்கி ஐசிசி உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்திய வீரர்களான ஆகாஷ் சிங் 5 புள்ளிகளும் ரவி பிஷ்னோய் 7 தகுதியிழப்புப் புள்ளிகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த தகுதியிழப்புப் புள்ளிகள் இனிவரும் போட்டிகளில் வீரர்களுக்குக் கணக்கிடப்படும் எனத் தெரிகிறது. தகுதியிழப்பு புள்ளிகள் கொடுக்கப்பட்டவர்கள் அனைவரும். குறைந்தது 6 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.