சனிக்கிழமை, அக்டோபர் 4, 2025
Home Blog Page 5674

இது எங்க ஏரியா!வொயிட்வாஷ் செய்து பழிதீர்த்த நியுசிலாந்து!

0

நியுசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 5 டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது.

ஆனால் அதன் பின் தொடங்கிய ஒருநாள் தொடர் இந்திய அணிக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக இல்லை. நடந்து முடிந்த இரு போட்டிகளிலும் இந்திய அணி தோல்வி அடைந்து தொடரை இழந்துள்ளது. இன்று பே ஓவல் மைதானத்தில் நடைபெறும் மூன்றாவது போட்டியிலாவது ஆறுதல் வெற்றி பெறுமா என்ற ஏக்கம் ரசிகர்கள் மனதில் எழுந்தது.இன்று காலை தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற நியுசிலாந்து கேப்டன் வில்லியம்சன் இந்தியாவை பேட் செய்ய பணித்தார். அதை அடுத்து களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் 1 ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். பின்னர் வந்த கேப்டன் கோலி 9 ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணி இக்கட்டான சூழலில் உள்ளது.

அதன் பின்னர் ஸ்ரேயாஸ் மற்றும் ராகுல் ஜோடி அணியை தூக்கி நிறுத்தினர். சிறப்பாக விளையாடிய ஸ்ரெயாஸ் ஐயர் 62 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அதன் பின்னர் மனிஷ் பாண்டேவுடன் ஜோடி சேர்ந்த ராகுல் சிறப்பாக விளையாடி சதமடித்தார். இதனால் இந்திய அணியின் ஸ்கோர் உயர்ந்தது. மனிஷ் பாண்டே 42 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 296 ரன்கள் சேர்த்தது.

இதையடுத்து களமிறங்கிய நியுசிலாந்து பேட்ஸ்மேன்கள் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பானத் தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். கப்தில் 61 ரன்களும் நிக்கோல்ஸ் 80 ரன்களும் சேர்த்து அவுட் ஆகினர். அதன் பின்னர் வந்த வில்லியம்ஸன் 21 ரன்களிலும் ராஸ் டெய்லர்(12), லாதம் (32) நீஷம் (32) ரன்களும் எடுத்து சீரான இடைவெளியில் அவுட் ஆகி வெளியேறினார். அதனால் வெற்றி வாய்ப்பு பாதிக்குப் பாதியாக இருந்தது. ஆனால் அந்த அணியின் காலின் டி கிராண்ட்ஹோம் இந்திய அணியின் ஒட்டுமொத்த நம்பிக்கையையும் சுக்கு நூறாக்கினார். அதிரடியாக விளையாடிய அவர் 28 பந்துகளில் 58 ரன்களை சேர்த்து 48 ஆவது ஓவரிலேயே வெற்றி இலக்கை எட்ட வைத்தார். இதன் மூலம் அந்த அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டி 20 தொடரில் தங்கள் சொந்த மண்ணில் வொயிட் வாஷ் ஆகி பட்ட அவமானத்தை ஒருநாள் தொடரின் மூலம் போக்கியுள்ளது நியுசிலாந்து அணி.

திமுக கையெழுத்து இயக்க போராட்டத்தில் இளைஞர் சரமாரி கேள்வி; பதில் தெரியாத உடன்பிறப்புகள் எஸ்கேப்..!!

0

திமுக கையெழுத்து இயக்க போராட்டத்தில் இளைஞர் சரமாரி கேள்வி; பதில் தெரியாத உடன்பிறப்புகள் எஸ்கேப்..!!

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அவர்கள் 2 கோடிக்கும் மேற்பட்ட பொது மக்களிடம் கையெழுத்தை வாங்கி வித்தியாசமான போராட்டத்தை முன்வைத்தார். இந்த போராட்டம் சம்பந்தமாக சில தினங்களுக்கு முன்பு சென்னையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான கையெழுத்து வாங்க திமுக மகளிர் பல இடங்களில் மக்களிடம் கையெழுத்து வாங்கினர்.

திமுக மகளிர் தொண்டர், ஒரு இளைஞரை அழைத்து கையெழுத்து போடும்படி கூறினார். அருகில் வந்த இளைஞர் எதற்காக கையெழுத்து வாங்குறிங்க..? என்ன காரணம்..? சரியான விளக்கம் தரமுடியுமா என்று சரமாரியாக கேள்விகளை தொடுத்தார். இதை சற்றும் எதிர்பாராத திமுக பெண் தொண்டர்கள் விழிபிதுங்கி நின்றனர்.

பின்னர், மோடி அரசினால் ஏற்படுக்கு நஷ்டத்திற்கு எதிராக கையெழுத்து வாங்குவதாக சமாளித்தனர். அந்த இளைஞர் மீண்டும் விடாமல் கேள்விகேட்டதால், நீ கையெழுத்து போடவே வேண்டாம் போ” என்று கூறினர். நீங்கள்தானே கூப்பிட்டிங்க கேள்விகேட்டால் பதில் சொல்லாம இருந்தா என்ன அர்த்தம் என்று இளைஞர் மீண்டும் கேள்வியெழுப்பவே… திமுகவின் மற்றொரு தொண்டரை விளக்கம் தர அழைத்தனர்.

அழைக்கப்பட்ட உடன்பிறப்புக்கும் குடியுரிமை திருத்த சட்டத்தை பற்றி தெரியவில்லை என்பதால் அவரும் பதில் சொல்ல முடியாமல் முழித்தார். இதைப்பார்த்த கேள்விகேட்ட இளைஞர் புண்முறுவலுடன் சிரிக்க ஆரம்பித்தார். கடைசியாக நாங்கள் டெல்லிக்கு சென்று பேசுவோம் என்று ஏதோ ஒரு வகையில் சமாளித்து கேள்வி கேட்ட இளைஞரிடம் இருந்து திமுக தொண்டர்கள் எஸ்கேப் ஆயினர். இதேபோல் திருவண்ணாமலை போன்ற பகுதிகளில் பொதுமக்களை வழிமறித்து கட்டாயமாக கையெழுத்து வாங்கியதாகவும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

நெல்லை மாவட்டத்தில் பிரியாணி போட்டு பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கியதாக புகார் வந்ததும் குறிப்பிடத்தக்கது.

மதுபான கூடத்தை தனியாக பூட்டிய சிங்கப்பெண்; கதவை உடைத்து தலைதெறிக்க ஓடிய குடிமகன்கள்..!!

0

மதுபான கூடத்தை தனியாக பூட்டிய சிங்கப்பெண்; கதவை உடைத்து தலைதெறிக்க ஓடிய குடிமகன்கள்..!!

தமிழகத்தில் மதுக்கடைகளுக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் மது விற்பனை செய்யக் கூடாது என்று தமிழக அரசு ஏற்கனவே விதிமுறையை அமல்படுத்தியுள்ளது. இந்த சட்ட விதிமுறைகளை மீறி சில இடங்களில் மது விற்பனை செய்ப்பட்டு வருகிறது.

சென்னை பட்டாபிராம் காவல் நிலையத்தின் எதிரே இருந்த ஒரு மதுபானக் கூடத்தில், மதுக்கடைக்கான விற்பனை நேரத்தை கடைபிடிக்காமல் அதிக நேரம் மது விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதைக் கண்ட தேசிய பெண்கள் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவராக இருக்கும் கலைச்செல்வி என்பவர் அதிக நேரம் மது விற்பனை செய்த பட்டாபிராம் மதுக் கூடத்தினை தைரியமாக பூட்டை போட்டு பூட்டினார். பூட்டிய சாவியை மதுக்கடைக்கு எதிரே இருந்த பட்டாபிராம் காவல்நிலைய அதிகாரிகளிடம் சாவியை ஒப்படைத்தார்.

பின்னர், அரசு வழங்கிய குறிப்பிட்ட நேரத்தை விட, அதிக நேரம் மது விற்பனை செய்வதாக புகார் ஒன்றையும் கொடுத்தார். இப்புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாக காவல்நிலைய தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பூட்டப்பட்ட மதுக் கூடத்தின் கதவை உடைத்துக் கொண்டு குடிமகன்கள் வெளியேறினர்.
இதுபோன்று பல்வேறு மதுக் கடைகளில் விதிகளை மீறி விற்பனை செய்யும் நேரத்தில் தனது செல்போன் மூலம் நேரடியாக கலைச்செல்வி வீடியோவில் பேசியுள்ளார்.

மதுக்கடைகள் நண்பகல் 12 மணியில் இருந்து இரவு 10 மணி வரை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்று அரசு கூறியுள்ளது. ஆனால், பல்வேறு இடங்களில் எப்போதுமே மது விற்பனை செய்வதாகவும் இதான் இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் மதுவிற்கு அடிமையாகி தமது எதிர்கால வாழ்க்கையை இழக்கிறார்கள் என்றும், அரசு இதுபோன்ற பிரச்சினைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கலைச்செல்வி கூறினார்.

ஆட்டத்திலேயே இல்லாத காங்கிரஸ்:டெல்லி தேர்தல் நிலவரம்!ஆட்சி அமைக்க இருக்கும் ஆம் ஆத்மி!

0

ஆட்டத்திலேயே இல்லாத காங்கிரஸ்:டெல்லி தேர்தல் நிலவரம்!ஆட்சி அமைக்க இருக்கும் ஆம் ஆத்மி!

டெல்லித் தேர்தல் முடிவுகள் ஆம் ஆத்மி மற்றும் பாஜக ஆகிய இருக் கட்சிகளுக்கு இடையே மட்டுமே நடந்தது போன்ற முடிவை கொடுத்து வருகின்றன.

டெல்லி சட்டமன்றத்துக்கான தேர்தல் கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி நடந்தது. அதையடுத்து வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இதில் ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே கடுமையானப் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் சில இடங்களைப் பெற்று மூன்றாவது இடம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. காங்கிரஸ் ஆதரவளிக்கும் கட்சிதான் ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அனைத்தையும் பொய்யாக்கும் விதமாக வாக்கு எண்ணிக்கையில் ஆரம்ம முதலே ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகித்து வந்தது. சற்று முன்பு வரை ஆம் ஆத்மி 58 தொகுதிகளில் முன்னிலைப் பெற்றுள்ளது. பாஜக 12 இடங்களில் முன்னிலைப் பெற்று வருகிறது. காங்கிரஸுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. இதன் மூலம் டெல்லி மக்கள் காங்கிரஸை முழுமையாக தங்கள் மனதில் இருந்து தூக்கி வீசிவிட்டார்களோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுதொடர்பாக காங்கிரசின் செய்தித் தொடர்பாளர் ஷர்ம்ஸ்தா முகர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில், “ டெல்லி சட்டமன்றத் தேர்தலில் எங்கள் கட்சி மீண்டும் அழிக்கப்பட்டுவிட்டதை ஒப்புக் கொள்கிறேன். இதில் நானும் எனது பங்கை ஏற்றுக்கொள்கிறேன் ”என்று அவர் கூறியுள்ளார். மேலும் டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி ‘பாஜக தொண்டர்கள் கவலைப்பட வேண்டாம்.  27 இடங்களில், ஆம் ஆத்மி கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையில் 1,000 வாக்குகள் மட்டுமே ஏற்றத்தாழ்வு நிலவுகிறது’ எனக் கூறியுள்ளார்.

ஒட்டுமொத்தமாக காங்கிரஸ் எனும் கட்சியை டெல்லி மக்கள் மொத்தமாகப் புறக்கணித்துள்ளனர் என்பது இந்த தேர்தலின் மூலம் தெளிவாகியுள்ளது.

ராகுலின் மாஸ்டர் இன்னிங்ஸ்: இந்தியா 296 ரன்கள் சேர்ப்பு! வெற்றி பவுலர்கள் கையில்!

0

ராகுலின் மாஸ்டர் இன்னிங்ஸ்: இந்தியா 296 ரன்கள் சேர்ப்பு! வெற்றி பவுலர்கள் கையில்!

நியுசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 5 டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது.

ஆனால் அதன் பின் தொடங்கிய ஒருநாள் தொடர் இந்திய அணிக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக இல்லை. நடந்து முடிந்த இரு போட்டிகளிலும் இந்திய அணி தோல்வி அடைந்து தொடரை இழந்துள்ளது. இன்று பே ஓவல் மைதானத்தில் நடைபெறும் மூன்றாவது போட்டியிலாவது வெற்றி பெற்று இந்திய அணி கௌரவத்தைக் காப்பாற்றிக் கொள்ளுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இன்று காலை தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற நியுசிலாந்து இந்தியாவை பேட் செய்ய அழைத்தது. அதை அடுத்து களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் 1 ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். பின்னர் வந்த கேப்டன் கோலி 9 ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணி இக்கட்டான சூழலில் உள்ளது.

அதன் பின்னர் ஸ்ரேயாஸ் மற்றும் ராகுல் ஜோடி அணியை தூக்கி நிறுத்தினர். சிறப்பாக விளையாடிய ஸ்ரெயாஸ் ஐயர் 62 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அதன் பின்னர் மனிஷ் பாண்டேவுடன் ஜோடி சேர்ந்த ராகுல் சிறப்பாக விளையாடி சதமடித்தார். இதனால் இந்திய அணியின் ஸ்கோர் உயர்ந்தது. மனிஷ் பாண்டே 42 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 296 ரன்கள் சேர்த்தது.

இதையடுத்து களமிறங்கிய நியுசிலாந்து பேட்ஸ்மேன்கள் நிதானமாக விளையாடி வருகின்றனர். 21 ஓவர்கள் முடிந்துள்ள நிலையொல் 124 ரன்கள் சேர்த்து ஒரு விக்கெட்டை இழந்துள்ளனர். விக்கெட்களை விழ்த்த முடியாமல் இந்திய பவுலர்கள் திணறி வருகின்றனர்.

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை:ஆட்சி அமைக்குமா ஆம் ஆத்மி?

0

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை:ஆட்சி அமைக்குமா ஆம் ஆத்மி?

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியுள்ள நிலையில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை பெற்றுள்ளது.

டெல்லி சட்டமன்றத்துக்கான தேர்தல் கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி நடந்தது. அதையடுத்து வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இதில் ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே கடுமையானப் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லியில் உள்ள 70 தொகுதிகளில் ஆட்சியமைக்க 36 தொகுதிகள் தேவை. இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு இடையில் காலை வாக்கு எண்ணிக்கை ஆரம்பமானது. இந்த வாக்கு எண்ணிக்கையில் ஆரம்ம முதலே ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகித்து வந்தது. சற்று முன்பு வரை ஆம் ஆத்மி 53 தொகுதிகளில் முன்னிலைப் பெற்றுள்ளது.

பாஜக 16 தொகுதிகளிலும் , காங்கிரஸ் 1 தொகுதியிலும் முன்னிலை வகித்து வருகின்றது. இதனால் தனிப் பெரும்பான்மையாக ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமித்ஷா மற்றும் மோடி ஆகியோரின் தீவிரப் பிரச்சாரங்களுக்கு இடையில் ஆம் ஆத்மி வெற்றி பெறுவது அக்கட்சிக்கு மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கையேக் காட்டுகிறது.

இந்த தேர்தலில் குடியுரிமைத் திருத்தச் சட்டம், டெல்லி பல்கலைக் கழக மாணவர்கள் தாக்கம், எனப் பல காரணிகள் பாஜகவுக்கு எதிராக அமைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. மக்களவைத் தேர்தல் வெற்றிக்குப் பின் பாஜக சட்டமன்றத் தேர்தல்களில் வரிசையாக தோற்றுவருவது வாடிக்கையாக உள்ளது.

டெல்லியில் மீண்டும் ஆம் ஆத்மி ஆட்சி: 3வது முறை முதல்வராகும் அரவிந்த் கெஜ்ரிவால்

0

டெல்லியில் பிப்ரவரி எட்டாம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் இந்த தேர்தலில் காங்கிரஸ், பாஜக ஆகிய இரண்டு தேசிய கட்சிகளுக்கு இடையே ஆம் ஆத்மி என மும்முனை போட்டி நடைபெற்றது

இந்த தேர்தல் முடிவடைந்தவுடன் அனைத்து கருத்துக் கணிப்புகளும் ஆம் ஆத்மி மிக அபாரமாக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்றே கூறப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

முதல் கட்ட வாக்கு எண்ணிக்கையிலேயே அதிக அளவிலான தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகித்து வந்தது. இந்த நிலையில் சற்றுமுன் கிடைத்த தகவலின்படி டெல்லியில் ஆம் ஆத்மி 53 இடங்களிலும் பாஜக 16 இடங்களிலும் காங்கிரஸ் கட்சியில் ஒரே ஒரு தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

டெல்லியில் மொத்தம் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளில் 36 தொகுதிகளில் வெற்றி பெற்றாலே ஆட்சி அமைக்கலாம் என்ற நிலையில் தற்போது ஆம் ஆத்மி 53 தொகுதிகளில் முன்னிலையில் இருப்பதால் அக்கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்ததாகவே கருதப்படுகிறது ஏற்கனவே இரண்டு முறை முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் மூன்றாவது முறையாக முதல்வர் ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆம் ஆத்மி வெற்றியை அடுத்து அக்கட்சிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

நெய்வேலியை மொய்க்கும் ரசிகர்கள் கூட்டம்:இயக்குனருக்கு விஜய் கொடுத்த புது ஐடியா!

0

நெய்வேலியை மொய்க்கும் ரசிகர்கள் கூட்டம்:இயக்குனருக்கு விஜய் கொடுத்த புது ஐடியா!

படப்பிடிப்புத் தளத்துக்கு தினமும் வந்து காத்திருக்கும் ரசிகர்கள் குஷிப்படுத்தும் விதமாக மாஸ்டர் படக்குழு ஒரு செயலை செய்யவுள்ளது.

விஜய் நடித்த பிகில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் பைனான்சியர் அன்புச்செழியன் ஆகியோரின் அலுவலகங்களில் நேற்று வருமான வரிச்சோதனை நடந்தது. இதையடுத்து விஜய் வீட்டிலும் சோதனை நடத்தும் பொருட்டு ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்புக்கு வந்த வருமானத் துறை விஜய்யை சென்னைக்கு அழைத்துச் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நெய்வேலி ஷூட்டிங்கில் இருந்து பாதியிலேயே அவர் வந்து விட்டதால் மீண்டும் எப்போது ஷுட்டிங் தொடங்கும் எனத் தெரியாது என செய்திகள் வெளியான நிலையில் அடுத்த நாளே நெய்வேலியில் ஷூட்டிங் தொடங்கியது. இந்நிலையில் படப்பிடிப்புத் தளத்தில் கூட்டமாக சென்ற பாஜகவினர் ஆர்ப்பாட்டம் செய்து படப்பிடிப்புக்கு இடையூறு செய்தனர். இதையடுத்து போலிஸார் பாதுகாப்போடு படப்பிடிப்புத் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் படப்பிடிப்பை முடித்துவிட்டு வெளியே வந்த விஜய், ரசிகர்களை நோக்கி கையசைத்து படப்பிடிப்பு குழுவினர்களின் வேன் ஒன்றின் மீது தனது மொபைல் போனை எடுத்து ரசிகர்களுடன் அவர் செல்பியும் எடுத்துக் கொண்டார். அந்த செல்பி சமூக வலைதளங்களில் வைரல் ஆக, இப்போது ரசிகர்களை குஷிப்படுத்தும் இன்னொரு விஷயத்தையும் செய்ய உள்ளது படக்குழு.

படப்பிடிப்பு தளத்துக்கு தினமும் கூட்டமாக வரும் ரசிகர்களைப் படம் பிடித்து அதனைப் படத்தில் இடம்பெறும் பாடலில் வைத்துக் கொள்ளும்படி இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளருக்கு விஜய் அறிவுரை வழங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்காக படத்துக்கு பயன்படுத்தும் கேமராக்களையே பயன்படுத்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே தலைவா படத்தில் இதுபோல காட்சி ஒன்று இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

மூன்றாவது போட்டி:சொதப்பிய கோலி!கைகொடுக்குமா ஸ்ரேயாஸ்&ராகுல் கூட்டணி?

0

மூன்றாவது போட்டி:சொதப்பிய கோலி!கைகொடுக்குமா ஸ்ரேயாஸ்&ராகுல் கூட்டணி?

இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியா முதலில் பேட் செய்து வருகிறது.

நியுசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 5 டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது.

ஆனால் அதன் பின் தொடங்கிய ஒருநாள் தொடர் இந்திய அணிக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக இல்லை. நடந்து முடிந்த இரு போட்டிகளிலும் இந்திய அணி தோல்வி அடைந்து தொடரை இழந்துள்ளது. இன்று பே ஓவல் மைதானத்தில் நடைபெறும் மூன்றாவது போட்டியிலாவது வெற்றி பெற்று இந்திய அணி கௌரவத்தைக் காப்பாற்றிக் கொள்ளுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இன்று காலை தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற நியுசிலாந்து இந்தியாவை பேட் செய்ய அழைத்தது. அதை அடுத்து களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் 1 ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். பின்னர் வந்த கேப்டன் கோலி 9 ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணி இக்கட்டான சூழலில் உள்ளது.

இதையடுத்து பிருத்வி ஷாவுடன் ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ் ஐயர். இருவரும் நிதானமாக விளையாட, பிருத்வி ஷா சிறப்பாக விளையாடி அரைசதத்தை நெருங்கினார். ஆனால் 40 ரன்களில் இருந்த போது அவர் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார். இதையடுத்து வந்த ராகுல் ஸ்ரேயாஸ் ஐயரோடு இப்போது களத்தில் விளையாடி வருகிறார். தற்போது வரை இந்திய அணி 16 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 83 ரன்களை சேர்த்துள்ளது. ராகுல் 13 ரன்களுடனும் ஸ்ரேயாஸ் 19 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

ஒட்டகத்தில் ஊர்வலம் வந்த மணமகன் கையில் சிஏஏ எதிர்ப்பு பதாகை: கேரளாவில் பரபரப்பு

0

கேரளாவில் சிஏஏ சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த மணமகன் ஒருவர் நூதனமாக போராட்டம் நடத்தியது என்ற அந்த பகுதியில் உள்ளவர்களை பரபரப்பில் ஆழ்த்தியது

திருமணம் நடக்கவிருக்கும் மண்டபம் இருக்கும் பகுதிக்கு 20 கிலோ மீட்டர் ஓட்டகத்தில் வந்த மணமகன் கையில் சிஏஏவுக்கு எதிரான பதாகைகளை காண்பித்துக் கொண்டு வந்தார். இதனைப் பார்த்த அந்த பகுதி மக்கள் ஆச்சரியமடைந்தனர். மணமகனுடன் அவருடைய நண்பர்களும் ஒட்டகத்தில் வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மணமகனும் அவரது நண்பர்களும் சிஏஏவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் போட்டவாறு 20 கிமீ ஒட்டகத்தில் வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த சில வாரங்களாகவே கேரளாவில் சிஏஏவுக்கு எதிராக பல இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் அரசியல் கட்சி அமைப்புகள் போராட்டம் செய்து வரும் நிலையில் ஒட்டகத்தில் நூதனமான முறையில் மணமகன் திருமணத்தன்று செய்த போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து மேலும் சில இளைஞர்கள் தங்களுடைய திருமண தினத்தன்றும் இதேபோல் ஒட்டக ஊர்வலம் வர முடிவு செய்துள்ளனர்.

மேலும் திருமணம் முடிந்த பின்னர் மணமகள் கையில் சிஏஏ சட்ட நகல் ஒன்றை கொடுத்து சிஏஏவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க மணமகளிடமும் மணமகன் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது