Home Blog Page 5674

செல்போனில் அடிக்கடி சிரித்து பேசிய மனைவி! ஆத்திரத்தில் ஆயுளை முடித்த கணவன்! திருவள்ளூரில் நடந்த திகில் சம்பவம்

0

செல்போனில் அடிக்கடி சிரித்து பேசிய மனைவி! ஆத்திரத்தில் ஆயுளை முடித்த கணவன்! திருவள்ளூரில் நடந்த திகில் சம்பவம்

வீட்டில் இருந்தபோது செல்போனில் சிரித்து பேசிய மனைவியை சந்தேகத்தின் பேரில் கொலை செய்த சம்பவம் திருவள்ளூரில் நடந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஜிஆர் கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவர், கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவருக்கு புஷ்பா என்கிற மனைவியும், இரண்டு மகள்கள், ஒரு மகனும் உள்ளனர். மகள் இருவருக்கும் திருமணமாகி அவரவர் கணவன் வீட்டில் உள்ளனர். மகன் பிளஸ் 2 படித்து வருகிறார்.

சில மாதங்களாக புஷ்பா செல்போனில் யாருடனோ அடிக்கடி சிரித்து பேசி வந்துள்ளார் இதனைப்பார்த்த ரமேஷ் யாருடன் பேசுகிறாய் என்று கூறி அடிக்கடி தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் புஷ்பா வேறொருவருடன் தனிமையில் உல்லாசமாக இருந்ததாக ரமேஷுக்கு தெரியவந்தது.

இந்நிலையில் இவர்களது மகன் நேற்று முன்தினம் உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்ட நிலையில், அன்று இரவு ரமேஷ் தனது மனைவி புஷ்பாவுடன் வாய்த் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனைவி மீது ஆத்திரத்தில் இருந்த ரமேஷ் நேற்று அதிகாலை மூன்று மணியளவில் எழுந்து, அயராது தூக்கத்தில் இருந்த மனைவி புஷ்பாவின் கழுத்தில் கத்தியால் கொடூரமாக குத்தியுள்ளார். இதனால் வலிதாங்க முடியாத புஷ்பா கத்தியதில் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்தனர்.

ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த புஷ்பாவை பார்த்தி அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த உடலை கைப்பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதன் பின்னர் கொலையாளி ரமேஷை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளாடை இல்லாமல் வீடியோ போட்ட பிரபல பாலிவுட் நடிகை : கடுப்பில் கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

0

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி கோரத்தாண்டவம் ஆடி வருவதால் பிரதமர் மோடி மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்துள்ளார். இந்த உத்தரவால் நாடு முழுவதும் பிரபலங்கள், முன்னணி தொழிலதிபர்கள், சினிமா நட்சத்திரங்கள் என பலரும் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டது.

ஊரடங்கால் வீட்டில் இருக்கும் சினிமா நட்சத்திரங்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள் என்று ரசிகர்கள் ஆர்வமாக கேட்டு வந்தனர். இதனால் முன்னணி நட்சத்திரங்கள் பலர் தங்கள் வீட்டில் அன்றாடம் செய்யும் செயல்களை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.

பிரபல நடிகர்களை போலவே அமெரிக்காவை சேர்ந்தவரும் பிரபல பாலிவுட் நடிகையுமான பத்மா லட்சுமி வீட்டில் சமையல் செய்யும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்தார். இந்த நடிகை திருமணம் ஆன பிறகும் மேலாடை இல்லாமல் நடிப்பது, நிர்வாணமாக போட்டோ ஷூட் எடுப்பது என்று பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியலேயே இருந்து வந்தார்.

ஊரடங்கு அமலில் இருக்கும் இந்த சமயத்தில் நடிகை பத்மாலக்ஷ்மி இந்திய உணவுகளை சமைத்து வீடியோவாக பதிவிட்டு வந்தார். அதில் பெரும்பாலான வீடியோக்களில் ப்ரா அணியாமல் ஆடைகளை மட்டும் அணிந்துள்ளது கண்கூடாக தெரிந்ததை ரசிகர்கள் கண்டுபிடித்து விட்டனர்.

இதை இன்ஸ்டாகிராமில் பார்த்த நெட்டிசன்கள் இப்படி உள்ளாடை இல்லாமலா வீடியோ போடுவது என்று மாறி மாறி கழுவி ஊற்றி வருகின்றனர். நடிகை பத்மா இதற்கெல்லாம் அலட்டிக் கொள்வதாக தெரியவில்லை, ஆனால் அவரின் ரசிகர்கள் வீடியோக்களை பார்த்து ஜொள்ளு வடிப்பதை மட்டும் நிறுத்தவில்லை.

https://www.instagram.com/tv/B-YHYSZBH_A/?utm_source=ig_web_copy_link
https://www.instagram.com/tv/B-qGJznBRh_/?utm_source=ig_web_copy_link
https://www.instagram.com/tv/B-iXk5Nh5Ky/?utm_source=ig_web_copy_link

அமெரிக்காவில் 6 லட்சம் கொரோனா பாதிப்பு! மூன்று கட்டங்களாக இயல்பு நிலைக்கு கொண்டு வரப்படும்! – டொனால்ட் டிரம்ப்

0

அமெரிக்காவில் 6 லட்சம் கொரோனா பாதிப்பு! மூன்று கட்டங்களாக இயல்பு நிலைக்கு கொண்டு வரப்படும்! – டொனால்ட் டிரம்ப்

கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கும் அமெரிக்காவில் 3 கட்டங்களாக இயல்பு நிலைக்கு கொண்டு வரப்படும் என்று அந்நாட்டு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

சீனாவில் தொடங்கிய கொரோனா உலக நாடுகளுக்கு பரவி பெரும் உயிரிழப்பை உண்டாக்கியுள்ளது. உலகளவில் அமெரிக்கா நாட்டில்தான் அதிகளவு பாதிப்பு ஏற்பட்டது. இதுவரை அமெரிக்காவில் 6 லட்சத்திற்கு அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக அங்கு ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து வருகிறது.

அதிக காலம் நாடு முடக்கப்பட்டுள்ளதால் பொது சுகாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் இதன் காரணமாக உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்சினைகள் மற்றும் போதைப் பொருட்கள் பிரச்சினைகள் அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளார்.

முதல் கட்டம்: தேவையற்ற பயணங்கள் மற்றும் கூட்டமாக கூடுவதற்கு தடை உள்ள நிலையில் வழிபாட்டு தலங்கள், உணவகங்கள் மற்றும் விளையாட்டு அரங்குகள் தீவிர மனித இடைவெளி கடைபிடிப்புடன் இயங்கலாம் என்று கூறியுள்ளார்.

இரண்டாம் கட்டம்: பயணங்களுக்கான தடைவிதிப்பு, பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மதுபானக் கடைகள் விதிமுறைகளுடன் இயங்க அனுமதி வழங்கப்படும்.

மூன்றாம் கட்டம்: கொரோனா பாதிப்பு ஏற்படாத பகுதிகளில் தனிமனித இடைவெளி கடைபிடிப்புடன் மனிதர்கள் கூடவும், நிறுவனங்களில் கட்டுப்பாடு இன்றி ஊழியர்கள் பணிபுரியலாம். மேலும் மருத்துவமனைகளுக்கு செல்லவும், மதுபான கடைகள் முழுமையாக இயங்கவும் முழுமையான அனுமதி அளிக்கப்படும் என்று டிரம்ப் தெரிவித்தார்.

கொரோனா விருந்து: கும்பகோணத்தில் கும்பலாக கறி விருந்து! கொக்கிபோட்டு தூக்கிய போலீசார்..!!

0

கும்பகோணத்தில் கும்பலாக கறி விருந்து! கொக்கிபோட்டு தூக்கிய போலீசார்..!!

கொரோனா பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் நண்பர்களுடன் சமூக இடைவெளி இல்லாமல் கும்பலாக கொரோனா கறிவிருந்துக்கு ஏற்பாடு செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக போடப்பட்ட இருந்த 21 நாட்கள் முடிவடைந்தது. மகாராஷ்டிரா, ஒடிசா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகம் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா தொற்று மேலும் அதிகரித்து வருகிறது. இதனைத்தொடர்ந்து ஊரடங்கு உத்தரவை வரும் மே 3 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக மோடி அறிவித்தார். இதன் அடிப்படையில் இரண்டாவது ஊரடங்கு உத்தரவு சற்று கடினமாக இருக்கும் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் தியாக சமுத்திரம் என்ற கிராமத்தில், சிவகுரு என்கிற இளைஞர் சுமார் 30 நண்பர்களுடன் சேர்ந்து சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் கறிவிருந்து வைத்துள்ளார். ஒரே இலையில் சிக்கன் உட்பட உணவுகளை கொட்டி அருகருகே உட்கார்ந்து சாப்பிட்டுள்ளனர். கறிவிருந்து நடத்திய புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி போலீசாரின் கண்ணில் பட்டது. இதையடுத்து ஊரடங்கு உத்தரவை பின்பற்றாமல் விருந்து ஏற்பாடு செய்த சிவகுரு என்ற இளைஞர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். விருந்தில் கலந்துகொண்ட மற்ற இளைஞர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.

ஊரடங்கு நேரத்தில் உள்ளே புகுந்து தனிமை! லோடுமேன் வீட்டில் லோக்கல் போலீஸ் செய்த காரியம்! கதவை தட்டியபோது தகராறு.!

0

ஊரடங்கு நேரத்தில் உள்ளே புகுந்து தனிமை! லோடுமேன் வீட்டில் லோக்கல் போலீஸ் செய்த காரியம்! கதவை தட்டியபோது தகராறு.!

ஊரடங்கு நேரத்தில் அடுத்தவர் மனைவியுடன் வீட்டில் தனிமையில் இருந்த எஸ்எஸ்ஐ காவலரை தட்டிக்கேட்ட சம்பவம் திருச்சியில் அரங்கேறியுள்ளது.

திருச்சி மாவட்டம் சங்கிலியாண்டபுரம் அருகே உள்ள ராமமூர்த்தி நகரைச் சேர்ந்த லோடுமேன் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில்; எனக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். நான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு துபாயில் வேலைபார்த்து வந்தேன். அப்போது என் மனைவிக்கும் இன்னொருவருக்கும் தொடர்பு இருப்பதாக ரகசிய தகவல் எனக்கு வந்தது.

இதனால் துபாயில் இருந்து திருச்சி வந்த பிறகு மனைவியிடம் இதுகுறித்து கேட்டபோது, எனக்கும் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து காவல்துறையில் புகார் அளித்தேன், அவர்கள் எங்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவங்களுக்கு பிறகு என் மனைவியை பிரிந்து தனியாக லோடுமேனாக வேலை செய்து வருகிறேன். இந்நிலையில் நேற்றிரவு வழக்கம்போல வேலைக்கு செல்வதற்காக என் மனைவியின் வீட்டு வழியாக சென்றபோது யாரோ ஒருவர் வீட்டில் நுழைவதை பார்த்து கதவை தட்டினேன். அப்போது கதவை திறந்து என்மனைவியும், காவல்துறை பணியில் இருக்கும் நபரும் சேர்ந்து என்னை தாக்கினர். அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த புகார் குறித்து போலீசார் கூறுகையில்; புகார் அளித்தவரின் மனைவிக்கும், மாநகர காவல்துறையில் எஸ்எஸ்ஐ பதவியில் இருப்பவருக்கும் 7 ஆண்டாக தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. மனைவியின் வீட்டை நள்ளிரவில் கதவை தட்டியதால் ஏற்பட்ட தகராறு குறித்து விசாரித்து வருவதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

புதுச்சேரி: கொரோனாவை கட்டுப்படுத்திய புதுவை அரசு! 5 பேருக்கு மட்டுமே சிகிச்சை! கைதட்டி வழியனுப்பிய மகிழ்ச்சி சம்பவம்.!!

0

புதுச்சேரி: கொரோனாவை கட்டுப்படுத்திய புதுவை அரசு! 5 பேருக்கு மட்டுமே சிகிச்சை! கைதட்டி வழியனுப்பிய மகிழ்ச்சி சம்பவம்.!!

புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு நபர்களின் எண்ணிக்கை 5 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இரவு பகல் பாராமல் சிகிச்சை அளித்துவந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் கடின உழைப்பு காரணம் என்று கூறப்படுகிறது.

புதுவையில் கொரோனா தொற்று பாதிப்பால் 8 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த எட்டு நபர்களில் 72 வயதான மருத்துவ சிகிச்சை பெற்றதில் குணமாகி கடந்த வாரம் உடல்நலத்துடன் வீட்டுக்கு சென்றார். மற்றொரு 71 வயதான முதியவர் ஒருவர் கொரோனா பாதிப்பில் சிகிச்சை பலனின்றி கடந்த 11 ஆம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஒட்டுமொத்தமாக இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில் 6 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அரியாங்குப்பம் சொர்ணா பகுதியைச் சேர்ந்த ஒருவர் சிகிச்சை பெற்று குணமாகியதால் அவரை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் உட்பட கைதட்டி வழியனுப்பி அனுப்பி வைத்தனர்.

புதுச்சேரியில் தற்போது 5 பேர் மட்டுமே கொரோனா பாதிப்பில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களின் உடல்நலமும் மிக நன்றாக இருப்பதாக மருத்துவர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுவையில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வர அயராது பாடுபடும் மருத்துவர்கள், செவிலியர்களின் முழு ஒத்துழைப்பே காரணம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் கொரோனா முற்றிலும் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறமுடியாத சூழலே இருந்து வருகிறது. மேலும் நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு நீட்டிப்பு செய்துள்ளது. அதுவரை அனைவரும் பாதுகாப்புடன் இருப்போம் என்று மாவட்ட ஆட்சியர் அருண் வேண்டுகோள் வைத்துள்ளார்.

சமூக இடைவெளி கடைபிடிக்க சொல்லும் தமிழ் வெண்பா : அன்றே எழுதப்பட்ட ஆச்சர்ய தகவல்..!!

0

கொரோனா வைரஸ் தொற்று மற்றும் சமூக இடைவெளி கடை பிடிக்க வேண்டும் என்பது பற்றி முற்காலத்திலேயே எழுதப்பட்ட வெண்பா பாடல் பற்றிய தகவல் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழர்கள் பண்பாட்டில் உள்ள அறுபது வருடங்களில் ஒன்றான விகாரி(கடந்த ஆண்டு) வருடம் பற்றி முற்காலத்திலேயே சொல்லப்பட்ட வருஷாதி வெண்பா பாடலில் தான் அவ்வாறு குறிப்பிட்ட பட்டுள்ளது. அந்த வெண்பா பாடல் பின்வருமாறு;

‘பாரவிகாரி தனிற் பாரண நீருங்குறையும்
மாரியில்லை வேளாண்மை மத்தியமாம்- சேரார்
பயம் அதியமுண்டாம் பழையோர்கள் சம்பாத்
தியவுடமை விற்றுண்பார் தேர்’.

இந்த பாடலின் விளக்கம்;

விகாரி வருடத்தில் மழை குறைவு ஏற்பட்டு குளம், கிணறு, ஆறு போன்றவை வற்ற தொடங்கும். இதனால் பயிர்கள் பாதிக்கப்பட்டு விளைச்சல் குறையும். விவசாய தொழில் திருப்திகரமாக இருக்காது. ‘நண்பர்களுடன் உறவு குறையும். மக்கள் ஒருவரோடு ஒருவர் பழகுவதில் சிக்கல் ஏற்பட்டு பயம் உண்டாகும்’. பண தட்டுப்பாடு காரணமாக நம் முன்னோர்கள் மற்றும் பெற்றோர்கள் சேர்த்து வைத்த சொத்துக்கள் கரையும் சூழ்நிலை உருவாகும்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி கோரத்தாண்டவம் ஆடிவருவதால் பிரதமர் மோடி ஏற்கனவே அறிவித்த ஊரடங்கை மே 3ஆம் தேதி வரை நீட்டித்தள்ளார். இந்த ஊரடங்கு காலத்தில் சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று தீவிர பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டது நாம் அனைவரும் அறிந்ததே.

மேலே வழங்கப்பட்டுள்ள வெண்பா பாடலில் சொல்லப்பட்டது போல நம்மால் உறவினர்கள், நண்பர்களிடம் நட்பு குறைவு ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் ஒருவரோடு ஒருவர் சேர்ந்து பழகுவதில் பயம் உண்டாகும் என்று கடந்த விகாரி ஆண்டை பற்றி தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தகவல் பரவி அனைவரிடமும் பரவி ஆச்சர்யத்தை ஏற்படுத்தி வருகிறது.

22 லட்சத்தை நெருங்குகிறது கொரோனா தொற்று : பதற வைக்கும் பட்டியல்!

0

சீனாவின் வூகான் மாநகரில் தொடங்கி தற்போது 210 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் தொற்றால் உலக நாடுகளில் உள்ள 300 கோடிக்கும் மேற்பட்டோர் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் கோரத் தாண்டவத்தால் இதுவரை 21 லட்சத்து 81 ஆயிரத்து 308 பேருக்கு மேல் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 45 ஆயிரத்தை கடந்துள்ளது, மேலும் 5 லட்சத்து 47 ஆயிரத்து 69 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் முதல் 35 இடங்களில் உள்ள நாடுகளின் விபரங்கள் பின்வருமாறு.

22 லட்சத்தை நெருங்குகிறது கொரோனா தொற்று : பதற வைக்கும் பட்டியல்!

இந்தியாவில் நோய் தொற்று ஏற்பட்டுள்ளோரின் மொத்த எண்ணிக்கை 12,759 ஐ கடந்துள்ளது, அதில் பலியானார்களின் மொத்த எண்ணிக்கை 420 ஆக தெரிகிறது. இதுவரை சிகிச்சை பெற்று 1,344 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மாநில அளவிலான விபரங்கள் பின்வருமாறு(நோய் தொற்று ஏற்பட்டுள்ளவர்கள் / இறந்தவர்கள்):

மகாராஷ்டிரா – 3,202/187
டெல்லி – 1,640/32
தமிழ்நாடு – 1,267/15
தெலுங்கானா – 698/18
கேரளா – 388/03
ராஜஸ்தான் – 1,023/03
உத்தரபிரதேசம் – 773/13
ஆந்திர பிரதேசம் – 534/14
கர்நாடகா – 277/11
குஜராத் – 929/36
மத்திய பிரதேசம் – 1120/53
ஜம்மு & காஷ்மீர் – 300/04
மேற்கு வங்கம் – 213/07
பஞ்சாப் – 186/12
ஹரியானா – 205/03
பீகார் – 70/01
அசாம் – 33/01
சண்டிகர் -21/0
உத்தர்கண்ட் – 37/0
லடாக் – 17/0
அந்தமான் & நிக்கோபார் -11/0
சத்தீஸ்கர் – 33/0
கோவா – 07/0
இமாச்சல பிரதேசம் – 35/01
ஒடிசா – 60/01
பாண்டிச்சேரி – 07/0
மணிப்பூர் – 02/0
ஜார்க்கண்ட் – 27/02
மிசோரம் – 01/0
அருணாச்சலப் பிரதேசம் – 1/0
திரிபுரா – 02/0
நாகாலாந்து – 01/0/01

தமிழகத்தில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 1,267 ஆக உயர்ந்துள்ளது. அதில் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 15 ஆக தெரிகிறது, பூரண குணமடைந்து 180 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

மாவட்டட்ட அளவில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை(நோய் தொற்று ஏற்பட்டவர்கள் / இறந்தவர்கள்);

சென்னை – 217/04
கோயம்புத்தூர் – 127/0
திருப்பூர் – 80/0
திண்டுக்கல் – 65/0
நெல்லை – 58/0
ஈரோடு – 70/01
திருச்சி – 43/0
நாமக்கல் – 50/0
ராணிப்பேட்டை – 39/0
செங்கல்பட்டு – 50/0
மதுரை – 44/01
கரூர் – 41/0
தேனி – 41/01
தூத்துக்குடி – 26/01
விழுப்புரம் – 24/01
கடலூர் – 20/0
சேலம் – 24/0
திருவள்ளூர் – 41/0
திருவாரூர் – 15/0
விருதுநகர் – 17/0
தஞ்சாவூர் – 17/0
நாகப்பட்டினம் – 38/0
திருப்பத்தூர் – 17/0
திருவண்ணாமலை – 12/0
கன்னியாகுமரி – 16/0
காஞ்சிபுரம் – 08/0
சிவகங்கை – 11/0
வேலூர் – 19/01
நீலகிரி – 09/0
தென்காசி – 09/0
கள்ளக்குறிச்சி – 03/0
ராமநாதபுரம் – 10/1
அரியலூர் – 02/0
பெரம்பலூர் – 01/0

இந்த தகவல்கள் வெவ்வேறு நாடுகளில் அதிகாரப்பூர்வமாக வெளியாதன் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.

மாஸ்க் கூட அணிய தெரியாத ஸ்டாலினால் மாற்றத்தை எப்படி உருவாக்க முடியும்! இணையத்தில் எழும் விமர்சனங்கள்.!!

0

மாஸ்க் கூட அணிய தெரியாத ஸ்டாலினால் மாற்றத்தை எப்படி உருவாக்க முடியும்! இணையத்தில் எழும் விமர்சனங்கள்.!!

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் அனைத்து கட்சி கூட்டத்தை ஆன்லைன் மூலம் நடத்தினார்
அப்போது கொரோனா பாதிப்பை தடுக்கும் வகையில் முகத்தில் N95 மாஸ்க்கை தவறாக ஸ்டாலின் அணிந்திருந்தார். இது தற்போது இணையத்தில் விமர்சனமாக எழுந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த எடப்பாடி அரசு பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த ஏப்ரல் 30 வரை ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி அறிவித்தார். இதையடுத்து பிரதமர் மோடி மே 3 வரை ஊரடங்கை நீட்டிப்பதாக தனது உரையில் தெரிவித்தார்.

இந்நிலையில் தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக செயல்படுத்தி வரும் நிலையில், ஆன்லைன் மூலம் அனைத்துகட்சி கூட்டத்தை நடத்திய ஸ்டாலின் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார். இந்த கூட்டத்தின் போது தான் அணிந்திருந்த முககவசத்தை தவறாக அணிந்திருந்தார். எப்போதுமே பயன்படுத்தாத பொதுமக்கள் பலரும் சரியான பயன்படுத்தி வரும் சூழலில் மக்களுக்கு விழிப்புணர்வு தரும் விதமாக இருக்க வேண்டிய ஸ்டாலின் தவறாக மாஸ்க் அணிந்திருப்பது சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. பொது விழிப்புணர்வு சம்பந்தமான செயல்களில் முதலில் நாம் இருக்கிறோமா என்று சுய பரிசோதனை செய்வதே சரியான தொடக்கம் என்றும் பலர் கருத்து தெரிவிக்கின்றனர். கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு ஒரு கோடி வழங்க வேண்டும் என்று ஸ்டாலின் பேசியதற்கும் விமர்சனம் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

கொரோனா நிவாரண நிதியாக 6 லட்சம் வழங்கிய பிரபல நடிகை!

0

கொரோனா நிவாரண நிதியாக 6 லட்சம் வழங்கிய பிரபல நடிகை!

கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு மே மாதம் 3 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. சினிமா திரைப்பட ஷூட்டிங் வேலைகளும் முற்றிலும் முடங்கி இருப்பதால் பெஃப்சி நிறுவன ஊழியர்கள் பலரும் தவித்து வருகின்றனர். தமிழக சினிமா ஊழியர்களுக்கு மட்டும் கோரிக்கையின் சார்பில் நடிகர்கள் அரிசி மூட்டைகள் மற்றும் நிதியுதவி அளித்து வந்தனர். இந்த இக்கட்டான சூழலில், நடிகை நயன்தாரா ரூ.20 லட்சம் வழங்கியதோடு, பல்வேறு முண்ணனி நடிகைகளும் எவ்வித உதவியும் செய்யாமல் இருந்தனர்.

தெலுங்கு சினிமா நடிகர்கள் பிரபாஸ், பவன கல்யாண் மற்றும் மகேஷ்பாபு போன்ற பலர் லட்சக்கணக்கிலும், கோடிக்கணக்கிலும் கொரோனா நிவாரணநிதி அளித்தனர். மேலும் தெலுங்கு சினிமா தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் நிவாரண நிதி அமைப்பினை உருவாக்கியுள்ளனர். நடிகர் சிரஞ்சீவி மற்றும் பிலிம் சேம்பர் இணைந்து உருவாக்கிய இதன் மூலம் பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. தெலுங்கில் நடிகர்கள் மட்டுமே உதவி செய்து வருவதாக விமர்சனம் எழுந்தது.

தெலுங்கு சினிமாவில் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகைகள் யாரும் நிதி உதவி அளிக்கவில்லை என்கிற விமர்சனம் அதிகரித்துவந்த நிலையில், தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா முண்ணனி நடிகையான காஜல் அகர்வால் கொரோனா நிவாரண நிதியாக உதவி வழங்கியுள்ளார். பெஃப்சி்அமைப்பிற்கு 2 லட்சம், தெலுங்கு திரையுலகிற்கு 2 லட்சம், மகாராஷ்டிரா முதல்வர் நிவாரண நிதிக்கு 1 லட்சம், பிரதமரின் நிவாரண நிதிக்கு 1 லட்சமும் வழங்கியுள்ளார். தற்போது இயக்குனர் சங்கரின் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.