Home Blog Page 5675

ஸ்டாலினுக்கு நாக்கு நீளுது : கிழித்து தொங்கவிடும் ஹச்.ராஜா…!!

0

திருப்பூரை அடுத்துள்ள பெருமாநல்லூர் என்ற ஊரில் சேவா பாரதி அமைப்பினர் ஆதரவற்றோருக்கு உணவு தயாரித்து வழங்கி வந்துள்ளனர். இந்த அமைப்பினர் பெருமாநல்லூரில் உள்ள அங்காளம்மன் கோவிலில் உணவை சமைத்து கணக்காம்பாளையம், ஈட்டிவீராம்பாளையம் பகுதிகளில் வழங்கி வந்துள்ளனர்.

சேவா பாரதி அமைப்பினரை அதே பகுதியைச் சேர்ந்த ஊராட்சி துணைத் தலைவரும் திமுகவின் கிளை செயலாளருமான வேலுசாமி, உணவு வழங்க கூடாது என்று தடுப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் அவர்கள் சமைக்கும் உணவில் 130 பொட்டலங்களை தங்களுக்கு வழங்கும்படி வற்புறுத்தியதாக கூறுகின்றனர்.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பாஜகவின் ஒன்றிய தலைவர் ஜெகதீஷ் கூறுகையில்; ‘கடந்த ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து சேவா பாரதி அமைப்பினர் பாஜகவினருடன் இணைந்து உணவு வழங்கி வருகின்றனர்.

இவர்கள் பெருமாநல்லூர் உள்ள அங்காளம்மன் கோயிலில் உணவை தயாரித்து அரசு அனுமதியுடன் வழங்கி வந்தனர். இந்த அமைப்பினரை உணவு வழங்க கூடாது என்று தடுத்தும் தங்களுக்கும் உணவு பொட்டலங்கள் வழங்கும்படி கேட்டும் பிரச்சனை செய்துள்ளார் வேலுசாமி’ என்று கூறினார்.

இது பற்றி வேலுசாமியிடம் காரணம் கேட்டபோது அரசு சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பின்படி இவர்கள் அனுமதியில்லாமல் உணவு வருகின்றனர். மேலும் தங்களுக்கு என உணவு பொட்டலங்கள் எதுவும் கேட்கவில்லை என்று கூறினர்.

இந்தநிலையில் பாஜகவின் தேசிய செயலாளர் ஹச்.ராஜா டுவிட்டரில் ‘திமுக ஒருநாளும் திருந்தாது. இந்த லட்சணத்தில் ஸ்டாலினுக்கு நாக்கு நீளுது’ என்று விமர்சித்து அது பற்றி செய்தி தாளில் வந்த ஒரு படத்தையும் பதிவிட்டுள்ளார்.

கூட்டத்தில் கொரோனா அறிகுறி உள்ளவர்களை கண்டறிய புதிய செயலி

கூட்டத்தில் கொரோனா அறிகுறி உள்ளவர்களை கண்டறிய புதிய செயலி

உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான நாடுகளை கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கிய கொரோனா வைரஸ் பாதிப்பானது இந்தியாவிலும் ஆரம்பித்து நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்தியாவில் இந்த கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும் நோய் அறிகுறி உள்ளவர்களை எளிதாக கண்டறிய போதுமான கருவிகள் இல்லாமல் சுகாதாரத்துறை ஊழியர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியிருந்தனர்.

இந்நிலையில் கோவை ஶ்ரீசக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் நியூநெட்ஸ் டெக்னாலஜி நிறுவனம் ஆகியவை இணைந்து சிசிடிவி கேமரா மற்றும் மொபைல் கேமரா மூலமாக, கொரோனா வைரஸ் தாக்குதலின் முதன்மையான அறிகுறியான காய்ச்சலை கண்டறியும் தெர்மல் செயலியை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்த செயலியை அறிமுகப்படுத்த நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக  உள்ளாட்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இந்த தொழில் நுட்ப வசதியை வழங்கும் செயலியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன் குமார்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மருத்துவர்களுக்கு பயனுள்ளதாக அமைந்த இந்த புதிய செயலியின் தொழில்நுட்பம் குறித்து நியூநெட்ஸ் தலைமை செயல் அதிகாரி ஜெய் கீர்த்தி கூறியதாவது, பொது மக்கள் அதிகமாக ஒன்று கூடும் இடங்களில் தனித்தனியாக கொரோனா அறிகுறியான காய்ச்சல் பாதித்தவரைக் கண்டறியும் முறை அதிக நேரம் எடுக்கும். மேலும் இது போன்ற சோதனைகளால் மருத்துவப் பணியாளர்களுக்கு அதிக ரிஸ்க்கும் உண்டு.

எனவே, இந்த புதிய தொழில்நுட்பமானது காய்ச்சலைக் கண்டறிய உதவியாக இருக்கும். குறிப்பாக இந்த செயலியில் பயன்படுத்தும் சிசிடிவி தெர்மல் ஸ்கேனிங் போன்ற பெரிய கருவிகளின் வழியாக ஒரு விநாடிக்கு 15 முதல் 20 பேரின் உடல் வெப்பத்தை பரிசோதனை செய்து, மேலும் கூட்டமாக இருக்கும் பகுதியில் இந்த கருவியை பயன்படுத்தி காய்ச்சல் இருப்பவரை எளிதாக கண்டறிய முடியும். மேலும் பாதிக்கப்பட்டவர்களை புகைப்படம் எடுத்து, அதை சர்வரிலும் சேமிக்கலாம்.

மேலும், பாதிக்கபட்ட நபர்கள் நடமாடிய பகுதியில் இருந்த மற்ற நபர்களைக் கண்டறிந்து, பரிசோதித்து, இதன் மூலமாக அவர்களை தனிமைப்படுத்த முடியும். மொபைல் கேமரா தெர்மல் ஸ்கேனிங் தொழில்நுட்பம் மூலம் விநாடிக்கு 3 பேர் வரை பரிசோதிக்க முடியும். ‘ஆர்டிஃபிஷியல் இண்டலிஜென்ஸ்’ (Artificial Intelligence) எனப்படும் அதிநவீன தொழில்நுட்பத்தின் வழியாக இந்த செயலியானது செயல்படுகிறது என்று ஜெய் கீர்த்தி கூறியுள்ளார்.  கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கவும், அதன் தாக்கத்தை அறியவும், வைரஸ் பாதிப்படைந்தவர்களை குணப்படுத்த தடுப்பு மருந்து கண்டு பிடிக்கவும் பலர் முயற்சிக்கிற இந்த நேரத்தில், இது போன்ற புதிய செயலி தமிழகத்திற்கு கிடைத்துள்ளது மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வீட்டில் 4 இளைஞர்கள் சேர்ந்து செய்த கேவலமான செயல் : மானத்த வாங்காதீங்கடா என திட்டும் நெட்டிசன்கள்!

0

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி கோரத்தாண்டவம் ஆடிவருவதால் பிரதமர் மோடி ஏற்கனவே அறிவித்த ஊரடங்கை மே 3ஆம் தேதி வரை நீட்டித்தள்ளார். இதில் இரண்டாம் கட்டமாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில்தான் நாம் கவனமாக இருந்து நோய்த் தொற்றுக்கு எதிரான போரில் வெல்ல வேண்டும் என்றும் கூறினார்.

ஊரடங்கு அமலில் இருக்கும் சமயத்தில் மக்கள் அத்தியாவசிய தேவைகளை தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் பொது இடங்களில் கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கால் மற்றவர்கள் பாதிக்கப்பட்டார்களோ இல்லையோ மது பிரியர்கள் சாராயம் கிடைக்காமல் அல்லாடி வருகின்றனர்.

இதற்கிடையில் சாராயம் கிடைக்காத விரக்தியில் குடிமகன்கள் சிலர் தற்கொலை செய்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர். மேலும் சிலர் போதைக்காக கண்ட ரசாயனங்களையும் குடித்து இறந்து வருகின்றனர். கொரோனா பலியோடு குடிமகன்கள் இறப்பும் உயர்வதால் அரசு செய்வதறியாது தவித்து வந்தது.

இந்த நிலையில் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்துள்ள அண்ணாமலை நகர் பகுதியில், இளைஞர்கள் சிலர் சாராயம் கிடைக்காத விரக்தியால் விபரீத முடிவு ஒன்றை எடுத்துள்ளனர். ஒரு வீட்டில் 4 இளைஞர்கள் சேர்ந்து யூடியூப் வீடியோவை பார்த்து சாராயம் காய்ச்சி குடித்துள்ளனர்.

அந்த இளைஞர்கள் எதிர்பார்த்தபடியே சரியான பதத்தில் வந்ததும், அதனை குடித்து பார்த்து நண்பர்களிடம் சொல்லி பெருமை அடைந்துள்ளனர். இதனை நண்பர்கள் தங்களுக்கும் கேட்டதால், அவ்விளைஞர்கள் தெரிந்தவர்கள் வட்டாரத்தில் விற்பனை செய்து வந்துள்ளனர்.

இதுபற்றி தகவல் அறிந்த போலீஸ் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இளைஞர்களை மஃப்டியில் சென்று கையும் களவுமாக பிடித்துள்ளனர். அவர்களிடம் சாராயம் எவ்வாறு காய்ச்சினார்கள் என்று விசாரித்த போது, வீட்டிலேயே யூடியூபை பார்த்து குக்கரை பயன்படுத்தி காய்ச்சியதாக திடுக்கிடும் தகவல் அளித்துள்ளனர்.

குற்றத்தை ஒப்பு கொண்டதால் சம்பந்தப்பட்ட இளைஞர்களை கைது செய்த காவல்துறை, அவர்கள் வீட்டிலிருந்த 220 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர். இந்த தகவலை இணையதளத்தில் பார்த்த நெட்டிசன்கள் சிலர் ‘ஏண்டா இப்படி பண்ணி நம்ம ஊர் மானத்தை வாங்குறீங்க’ என்று திட்டி தீர்த்து வருகின்றனர்.

கொரோனாவில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம்! திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை

0

கொரோனாவில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம்! திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை

கொரோனா வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் திமுக தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் காணொளிக் காட்சி வாயிலாக நடத்தப்பட்டது. இதில் கொரோனாவில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று காணொலிக் காட்சி வழியாக நடைபெற்ற தி.மு.க. தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட மற்ற தீர்மானங்கள்

இரங்கல் தீர்மானம்:

“கோவிட்-19” என்ற கொடுமையான “கொரோனா நோய்த்” தாக்குதலுக்கு உள்ளாகி இதுவரை ஒட்டுமொத்தமாக உலக நாடுகளில் 1,34,720 பேரும், இந்தியாவில் 414 பேரும், தமிழ்நாட்டில் மட்டும் 14 பேரும் மரணமடைந்துள்ளனர். மரணமுற்றோர் அனைவர்க்கும்; அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் ஆழ்ந்த இரங்கலையும்; அவர்தம் குடும்பத்தார்க்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம்: 1

கொரோனாவில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம்

இயற்கைப் பேரிடரா அல்லது மனிதப் பேரிடரா என்று பிரித்துப் பார்க்க முடியாத அளவிற்கு, ஒட்டுமொத்த மனித குலத்தையே சவாலுக்கு அழைத்து, பல்லாயிரக்கணக்கான உயிர்களைப் பறித்துக் கொண்டிருக்கும் கொரோனா நோய்த் தொற்றினால் தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை 1242 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்; இந்த நோயால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு பரிவுத் தொகையாக தலா ஒரு கோடி ரூபாய் வழங்கி மனித நேயம் காத்திட வேண்டும் என்று அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம்: 2

பணியாளர்களுக்கு சிறப்பு ஊதியம், ஊதிய உயர்வுகள்; உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம்

வரலாறு காணாத இந்தக் கொடிய நோயின் கோரப் பிடியிலிருந்து மக்களை மீட்டுப் பாதுகாக்க, மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், வருவாய்த்துறை ஊழியர்கள், கூட்டுறவுப் பணியாளர்கள், காவல்துறையினர் என தங்களின் இன்னுயிர் பற்றிக் கிஞ்சித்தும் கவலை கொள்ளாமல் தன்னலமற்ற சேவை புரிந்து வருவோருக்கு அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் மனப்பூர்வமான நன்றியையும், பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.

தூய்மைப் பணியாளர்களை வாகனங்களில் அழைத்துச் செல்லும் போது உரிய சமூக இடைவெளி விட்டு அமர வைப்பதில்லை என்றும், அவர்களுக்கு முகக்கவசம் உள்ளிட்ட உரிய தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுகிறது. எனவே, கொரோனா நோய்த் தடுப்பு மற்றும் சிகிச்சைப் பணிகளில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் உரிய – தரமான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும், அவர்களுக்கு சிறப்பூதியம் மற்றும் சிறப்பு ஊதிய உயர்வுகள் வழங்கப்பட வேண்டும் என்றும், பணியின் போது உயிரிழக்க நேரிடும் ஒவ்வொரு ஊழியரின் குடும்பத்திற்கும் தற்போது அரசு அறிவித்துள்ள 10 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை மிக மிக குறைவு என்பதால் – ஒரு கோடி ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட வேண்டும் என்றும் அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம்: 3

உபகரணங்கள் கொள்முதலில் மேலும் தாமதத்தைத் தவிர்த்திடுக!

நாளுக்கு நாள் கொரோனா நோய்த் தொற்று அதிகரித்து – மக்கள் அச்சத்தில் இருப்பதால், தற்போது முதலமைச்சர் கூறியுள்ள 32,371 தனிமை வார்டுகளும், 5,934 அவசரச் சிகிச்சை வார்டுகளும் போதாது என்றும், மேலும் இந்த நோயின் பிரச்சினையே “மூச்சுத்திணறல்” என்பதால் 3,371 வென்டிலேட்டர்கள் முற்றிலும் போதாது என்றும் இக்கூட்டம் கருதுகிறது. மருத்துவ உட்கட்டமைப்பு குறித்து மருத்துவர்களும், நிபுணர்களும்கூட இது தொடர்பாக எச்சரிக்கை விடுத்த வண்ணம் இருக்கிறார்கள். ஆகவே மாவட்டந்தோறும், காலியாக உள்ள பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், திருமண மண்டபங்கள் ஆகியவற்றில் கொரோனா நோய்த் தொற்று படுக்கைகள் தயார் நிலையில் வைப்பது மிக அவசியமும் – அவசர முக்கியத்துவம் வாய்ந்ததும் ஆகிறது. ஜனவரியில் கொள்முதல் செய்யப்பட்ட மருத்துவ உபகரணங்களையும், ஆரம்ப கட்ட நோய் அறிகுறியைக் கண்டுபிடிக்கும் “விரைவு பரிசோதனை கருவிகள்” (Rapid Test Kits)”களையும் இதுவரை அரசு பெற முடியவில்லை என்பதும் – அந்தக் கொள்முதலில் ஏற்படும் காலதாமதம் நோய்த் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை முழுமையாக முடக்கியுள்ளது என்பதும் வேதனையளிக்கிறது. “தனிநபர் இடைவெளியை கடைப்பிடித்தல்” “தனிமைப்படுத்திக் கொள்ளுதல்” “ஊரடங்கு” போன்றவை மட்டும் கொரோனா நோய்த் தொற்றுக்கான தீர்வல்ல என்பதையும் – “அதிக எண்ணிக்கையில் பரிசோதனை – நோயால் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பு கொண்டவர்களை முழுவதுமாகக் கண்டறிவது” ஆகியவையும் நோய்ப் பரவல் தடுப்பிற்கு உரிய தீர்வு என்பதையும் உலக சுகாதார நிறுவனம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் இரண்டாவது கட்டமாக 03.05.2020 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள இந்த சூழ்நிலையிலும், மருத்துவ உபகரணங்களுக்காகவும், நோய் கண்டறியும் கிட்ஸ்களுக்காகவும் தமிழக அரசு மாநில உரிமைகளை விட்டுக்கொடுத்து கால வரையறையின்றிக் காத்திருப்பதும் – அதை மத்திய அரசும் வேடிக்கை பார்ப்பதும் மிகுந்த கவலையளிக்கிறது. ஆகவே தமிழகத்திற்குத் தேவையான மருத்துவ உபகரணங்களை, போர்க்கால அடிப்படையில் மாநில அரசே கொள்முதல் செய்யவும், இதுவரை கொள்முதல் செய்யப்பட்டவற்றை உடனே பெறவும் மத்திய – மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம்: 4

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் சிறப்பு நிவாரணமாக 5,000 ரூபாய் வழங்கிடுக!

கொரோனா நோய்த் தொற்று அண்டை மாநிலமான கேரளாவில் முதலில் ஜனவரி 30-ஆம் தேதியும் – தமிழ்நாட்டில் முதல் கொரோனா நோய்த் தொற்று 07.03.2020 அன்றும் கண்டுபிடிக்கப்பட்டும், அ.தி.மு.க அரசு இந்த நோய்த் தொற்றின் கடுமை குறித்து எவ்வித கவலையும் கொள்ளாமல் – மார்ச் மாதம் முதல் மாவட்டந்தோறும் கூட்டத்தைக் கூட்டி அரசு விழாக்களை நடத்துவதில் ஆர்வம் காட்டி வந்தது. பிரதான எதிர்க்கட்சி கோரிக்கை விடுத்தும், “சுய ஊரடங்கு” கடைப்பிடிக்கப்பட்ட பிறகும்கூட – அரசு, பல லட்சம் மாணவர்களை “பிளஸ் டூ” தேர்வு எழுத வைத்தது. நோய்த் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதற்கு ஜனவரி மாதத்திலிருந்து அரசுக்குப் போதிய கால அவகாசம் இருந்தும் அலட்சியப் போக்குடன் செயல்பட்டு வந்தது வேதனைக்குரியது. பின்னர், மார்ச் 22-ஆம் தேதியன்று கடைப்பிடிக்கப்பட்ட “சுய ஊரடங்கு”, மார்ச் 25-ஆம் தேதி முதல் “21 நாட்கள் ஊரடங்காக”த் தொடரப்பட்டது.

ஊரடங்கு காலத்தில் முதலமைச்சரின் கணக்குப்படி 35.89 லட்சம் அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மற்ற வெளி மாநிலத் தொழிலாளர்கள் ஆகியோருக்கு ஏற்பட்ட வருமான, வாழ்வாதார இழப்பு, ஏழை – எளிய – நடுத்தர மக்கள் படும் இன்னல்கள், சிறு குறு தொழில்கள் உள்ளிட்ட அனைத்து வகை தொழில்களுக்கும் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பு – இவற்றால் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்கும் ஏற்பட்டுள்ள பேராபத்து – பெரும் பின்னடைவு ஆகியவற்றை இந்த அரசு உரிய அளவு புரிந்து கொள்ளவில்லை என்பதை அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் மிகுந்த வேதனையுடன் பதிவு செய்கிறது.

கடந்த காலப் பேரிடர்களில் நிதி கேட்டு மத்திய அரசுக்குக் கடிதம் எழுதி விட்டு, எப்படி அ.தி.மு.க அரசு “வரும்போது வரட்டும்” என்று அமைதி காத்ததோ அதைப்போலவே, கொரோனா நோய்த் தொற்று விஷயத்திலும், பாய்ந்து காரியம் ஆற்றுவதை விடுத்து, மத்திய பா.ஜ.க. அரசிடம் பயந்து பதுங்கி ஒடுங்கியிருப்பது மிகுந்த கவலையளிக்கிறது. மத்திய அரசிடம் கொரோனா நோய்த் தடுப்புப் பணிகளுக்காக 15 ஆயிரம் கோடி ரூபாய் “சிறப்பு மானியமாக”க் கோரி விட்டு, வெறும் 870 கோடியே 88 லட்சம் ரூபாய் மட்டும் அளித்துள்ள மத்திய அரசிடம் “கோரிய நிதியைப் பெற முடியாமலும்” – நியாயத்தைத் தட்டிக் கேட்க முடியாமலும் தவிப்பதற்கு இந்தக் கூட்டம் வருத்தம் தெரிவிப்பதுடன்; தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து – கலந்தாலோசனைக் கூட்டத்தை நடத்தி – மத்திய அரசிடமிருந்து போதிய நிதியைப் பெறுவதற்கும் – நோய்த் தடுப்புப் பணிகளில் அனைவரையும் அரவணைத்து ஒற்றுமையுடனும் முனைப்புடனும் செயல்படுவதற்கும் கூடத் தாமதித்துத் தயங்கி நிற்கும் அ.தி.மு.க அரசின் செயலுக்கு இந்தக் கூட்டம் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

முதல் ஊரடங்கினால் பாதிக்கப்பட்டவர்களுக்கே முழு நிவாரணமும் போய்ச் சேராத சூழலில், தற்போது 03.05.2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கினால் விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் மேலும் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். ஆகவே அவர்களின் குறைந்தபட்ச வாழ்க்கைத் தேவையை ஈடுகட்ட அனைத்து ரேசன் கார்டுதாரர்களுக்கும் தலா 5,000 ரூபாய் சிறப்பு நிவாரண உதவியாக வழங்கிட வேண்டுமென்றும், ஊரடங்கினைச் சரியாக நடைமுறைப்படுத்திடும் வகையில் அனைவருக்கும் அத்தியாவசியப் பொருட்களை வீட்டிற்கே கொண்டு சென்று வழங்கிட வேண்டும் என்றும் இந்த கூட்டம் தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறது.

மாநில அரசு கோரியுள்ள 15 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை உடனடியாக மத்திய அரசு வழங்கிட வேண்டும் என்றும்; அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தலா 5 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிவாரண உதவி வழங்குவதற்கு ஏற்ற நிதி உதவியை மத்திய அரசு வழங்கிட முன்வர வேண்டுமென்றும்; அனைத்துக் கட்சிகளின் இந்தக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம்: 5

உணவு வழங்க அனுமதித்த உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு வரவேற்பு!

“உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பொது நல அமைப்புகள், அரசியல் கட்சிகள் வழங்கலாம்” என்று உயர்நீதிமன்றம் அளித்துள்ள மனித நேய உத்தரவினை இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் மனதார வரவேற்கிறது. பொதுவாக, பேரிடரின் போது பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவது மனித குணம். “உடுக்கை இழந்தவன் கைபோல” மற்றவர் இடுக்கண் களைவது தமிழர் பண்பு. அரசு அறிவித்த நிவாரணங்கள் ஒரு குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்கான குறைந்தபட்ச தேவைகளைக்கூட நிறைவு செய்ய இயலாத சூழலில், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், பொதுநல அமைப்புகளும், அரசியல் கட்சிகளும், பாதிக்கப்படும் மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளைச் செய்வது நம் நாட்டில் தொடரும் நடைமுறை. இந்நிலையில், “உணவுப் பொருட்கள், அத்தியாவசிய சமையல் பொருட்கள் எதையும் நேரடியாக வழங்கக்கூடாது” என்று அரசு தடுப்பதும், மீறி வழங்கினால் “நடவடிக்கை” என்று அச்சுறுத்துவதும் மனிதநேயம் ஆகாது; ஜனநாயகம் அனுமதிக்காது. அ.தி.மு.க அரசின் உள்நோக்கம் கொண்ட இந்த செயலை ஒரு போதும் யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. 12.4.2020 அன்று பிறப்பித்த தடையுத்தரவிற்கு “விளக்கம்” என்ற பெயரில் முதலமைச்சர் 13.4.2020 அன்று ஒரு அறிக்கை வெளியிட்டாலும், ஏற்கனவே போட்ட தடையையே அந்த அறிக்கையும் சுட்டிக்காட்டிய நிலையில், கருணை அடிப்படையிலான உதவியைச் செய்திட உயர்நீதிமன்றத்தை அணுகியதன் அடிப்படையில், தற்போது வெளிவந்துள்ள தீர்ப்பு- அல்லல்படும் மக்களை அரவணைக்கும் அருமருந்தாகும். அரசியல் கட்சிகளும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், உயர்நீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ள நிபந்தனைகளை மனதில் நிலை நிறுத்தி – குறிப்பாக கொரோனா தொற்றின் தன்மை உணர்ந்து – மக்களின் பாதுகாப்பு விஷயத்தில் வழக்கத்தைவிட மிக அதிகமான கவனத்துடன் “தனிமனித விலகலை” (Physical Distancing) கடைப்பிடித்து உணவு மற்றும் அத்தியாவசிய சமையல் பொருட்களைத் தேவைப்படும் இடங்களில் வழங்கிட வேண்டும் என்று அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம்: 6

மத்திய – மாநில அரசுகளுக்கான அணுகுமுறைகள்:

2019 டிசம்பர் மாதத்தில் “கொரோனா நோய்” தாக்குதலுக்கு சீன தேசம் உள்ளான போதும், 2020 ஜனவரி மாதத்தில் உலக சுகாதார நிறுவனம் “பொது சுகாதார” நெருக்கடி நிலைப்பிரகடனத்தை அறிவித்த பின்னரும், அவற்றை எச்சரிக்கை மணிகளாக எடுத்துக்கொள்ளாமல், மத்திய பாஜக அரசு அமைதி காத்தது. கொரோனா நோய் பாதிப்பிற்கு உள்ளானவர் முதன் முதலில் ஜனவரி 30-ஆம் தேதி கேரளாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிறகும்கூட, இந்த நோயின் கொடூரத்தை மத்திய அரசு உணர்ந்து – நோய்த் தொற்று பரவி விடாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட முன்வரவில்லை. அமெரிக்க அதிபரின் இந்திய வருகை கொண்டாட்டத்திலும், மத்திய பிரதேச ஆட்சிக் கவிழ்ப்புக்காகக் காத்திருந்தும் – முக்கியமான காலகட்டத்தை முறையாகப் பயன்படுத்திக் கொள்ளாமல், நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட ஒத்திவைக்க மறுத்து – இறுதியில் தேசியவாத காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் போன்ற எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற புறக்கணிப்பை அறிவித்த பிறகே நாடாளுமன்றத்தை முன் கூட்டியே முடித்துக் கொள்ள மத்திய பா.ஜ.க. அரசு தாமதமாக முடிவு செய்தது.

மார்ச் 19-ஆம் தேதிதான் “சுய ஊரடங்கை” அறிவித்து – கொரோனா நோய்த் தொற்றின் தீவிரத்தை சிறிது சிறிதாகப் புரிந்து கொள்ள மத்திய அரசு முயற்சித்தது. ஆனாலும் “கை தட்டுவதிலும்” “லைட் வெளிச்சம் ஏற்படுத்துவதிலும் – ஒலி, ஒளிக் காட்சிகளில் காட்டிய ஆர்வத்தை, மாநிலங்கள் கோரும் நிதியை ஒதுக்குவதிலோ, நாடு முழுவதும் உள்ள சாலையோர வியாபாரிகள், தினக்கூலி தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றுவதிலோ காட்டவில்லை என்பதை அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் மிகுந்த கவலையுடன் பதிவு செய்கிறது.

நாடாளுமன்றம் அனுமதித்து – உச்சநீதிமன்றமும் அங்கீகரித்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தை இரு வருடங்களுக்கு மத்திய அரசு நிறுத்தி வைத்திருப்பது சட்டவிரோதமானது மட்டுமின்றி நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமையை பறிக்கும் இந்த ஜனநாயக விரோத செயல் கண்டனத்திற்குரியது. எனவே, நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த நிதியை தத்தமது தொகுதியில் கொரோனா நோய் ஒழிப்பு நடவடிக்கைக்கும் – தொகுதியில் உள்ள மக்களின் பாதுகாப்பிற்காகவும் செலவிட அனுமதிக்க வேண்டும் என்று அனைத்துக் கட்சிகளின் இந்த கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

கொரோனா நோயால் இந்தியாவின் மொத்த உள்நாட்டு வளர்ச்சி 1.5 சதவீதமாக குறையும் என்று தெற்காசிய நாடுகளுக்கான உலக வங்கி அறிக்கை எச்சரித்துள்ளது. இது கடந்த 29 வருடங்களில் இல்லாத அளவிற்கான இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சி. ஏற்கனவே 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 6.1 சதவீதமாக இருந்த வேலை இல்லாத் திண்டாட்டம் தற்போதைய ஊரடங்கால் 23.4 சதவீதமாக அதிகரித்து விட்டதாக ஆய்வுகள் கூறுகின்றன. இவ்வளவு தீவிரமான – கொடூரமான – மனித உயிர்களைக் கொத்துக் கொத்தாகப் பறிக்கும் தன்மை கொண்ட கொரோனா நோயை கட்டுப்படுத்துவதற்கோ – பொருளாதாரச் சீரழிவை நிமிர்த்துவதற்கோ – மாநில அரசுகளுக்கு தகுந்த உதவி செய்வதற்கோ, மத்திய அரசு தொலை நோக்குப் பார்வையின்றி, இன்னும் தயங்கி நிற்பது ஏன் என்று வல்லுநர்கள் சரமாரியாகக் கேள்விகளை எழுப்புகிறார்கள். இந்த நோயை சமாளிக்கத் தேவையான சுகாதார உட்கட்டமைப்புகளை ஏற்படுத்த அறிவிக்கப்பட்ட 15 ஆயிரம் கோடி ரூபாய், டிசம்பர் மாதம் வரையிலான மாநிலங்களின் பங்கான ஜி.எஸ்.டி நிதி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிதி, உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி என எதையும் மத்திய அரசு உரிய காலத்தில் விடுவிக்காமல் மாநில அரசுகளை, வரலாறு காணாத இந்த நெருக்கடியிலும் வஞ்சித்து வருகிறது. மாநிலப் பேரிடர் நிதியிலிருந்து “பெயரளவிற்கு” 510 கோடி ரூபாயை மட்டும் தமிழகத்திற்கு வழங்கியிருக்கும் மத்திய அரசு – முதல் கட்டமாக மாநிலங்களுக்குத் தேவைப்படும் நிதியை ஒதுக்க மறுத்து வருகிறது. “மோசமான சுகாதாரப் பேரிடரை” மாநிலங்களே சமாளித்துக் கொள்ளட்டும் என்று கூட்டாட்சித் தத்துவத்தை கைவிட்டுள்ள மத்திய பா.ஜ.க. அரசு, கொரோனா நோய் சிகிச்சைக்கான மருத்துவ உபகரணங்களை மட்டும் நாங்களே மையப்படுத்தி கொள்முதல் செய்து தருகிறோம் என்று கூறி – முதல் ஊரடங்கு முடியும் வரை எவ்வித மருத்துவ உபகரணங்களும் மாநிலங்களுக்கு வழங்காமல் இருப்பதற்கு அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம், கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது.

ஆகவே மத்திய அரசிடம் உள்ள மாநிலங்களின் நிலுவைத் தொகை, மாநில பேரிடர் நிதி, சுகாதார பேரிடருக்கு ஒதுக்கப்பட்ட 15 ஆயிரம் கோடி நிதி உள்ளிட்டவற்றை மட்டுமின்றி – தமிழ்நாடு கேட்கும் நிதியுதவிகளை, மாநிலங்களிடையே பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் – ஆளாத மாநிலங்கள் என்ற பாகுபாடு காட்டாமல், நியாயமான முறையில் அளித்திடவும், மற்றும் கோரும் கடன் தொகை, சிறப்பு மானியங்கள் போன்றவற்றை, அரசியல் லாப – நட்டக் கணக்குப் பார்க்காமல் வழங்கிடவும் மத்திய அரசு உடனடியாக முன்வந்து அனைத்து மாநில மக்களும் இந்திய மக்களே – ஒரு தாய்ப் பிள்ளைகளே – எமது மக்களே என்ற பரந்த சிந்தனையுடன் மத்திய அரசு செயல்பட வேண்டும் என்று அனைத்துக் கட்சி தலைவர்களின் இந்தக் கூட்டம் அன்புடன் கேட்டுக் கொள்கிறது.

ஒரு குறிப்பிட்ட குழுவினரை மட்டும் தனிமைப்படுத்தாமல், அனைத்து மக்களுக்கும் சோதனை செய்து, நோய் தடுப்பு நடவடிக்கையை முழுமையாக மேற்கொள்ள வேண்டும். இதுபோன்ற சிக்கலான சூழ்நிலையில் வெறுப்புப் பிரச்சாரங்கள் மேற்கொள்வது மனிதாபிமானமற்ற செயல்கள் ஆகும். இதுபோன்ற நோயின் பார்வையில் மனிதர்கள் அனைவரும் சமம் என்ற எண்ணத்தோடு, நமது அணுகுமுறை இருக்க வேண்டும்.

கொரோனா நோய் பாதிப்பிலிருந்து கேரள மாநிலத்தை மீட்க அம்மாநில அரசு 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கி – அதற்கான செயல்திட்டத்தைத் தயாரித்து, முற்போக்கான வழியில், செயல்படுத்தி, மாதிரி மாநிலமாக உருவாகி வருகின்ற வேளையில்; தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்காத மத்திய அரசை தட்டிக் கேட்கத் தைரியம் இல்லாமல் – யானைப் பசிக்கு சோளப்பொரி என்பது போல், வெறும்

3,280 கோடி ரூபாய் நிவாரணத் தொகையை ஒதுக்கி விட்டு முற்றிலும் செயலிழந்து நிற்பதற்கு அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் மிகுந்த வேதனையை தெரிவித்து, மாநிலத்திற்குத் தேவையான நிதியை உடனடியாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்துப் பெற வேண்டும் என்றும், ஊரடங்கு 03.05.2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் அனைத்துப் பிரிவு மக்களுக்கும் தேவையான நிவாரண உதவிகளைச் செய்திடவும், மாநிலத்தின் பொருளாதாரத்தை மீட்டிடவும் உடனடியாகக் குறைந்த பட்சம் முதல் கட்டமாக 35 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அதற்கான செயல் திட்டம் ஒன்றை மாநில அரசு அறிவிக்க வேண்டும் என்றும் அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம்: 7

அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அனுமதி மறுத்ததற்கு கண்டனம்!

முதலமைச்சரும், அமைச்சர்களும், அதிகாரிகளும், ஆய்வு – ஆலோசனைக் கூட்டங்கள் என்ற பெயரில், “கூட்டம் கூட்டமாக” அமர்ந்து நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்; கேட்டால் அரசு தலைமைச் செயலகம் என்பார்கள்; அங்கே மட்டும் நோய்த் தொற்றுக்குத் தடை விதிக்கப் பட்டிருக்கிறதோ! ஆனால் அதே நேரத்தில் “ஊரடங்கை”யும், கொரோனா தொற்றையும் காரணம் காட்டி, தி.மு.க. தலைமையில் நடைபெறவிருந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்குத் தடை விதித்திருப்பதற்கு, இந்தக் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. உரிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, கூட்டம் நடைபெறும் என்று உத்தரவாதம் கொடுத்ததையும், உள்நோக்கத்துடன் ஏற்க மறுத்து- கூட்டத்திற்கு அனுமதி மறுத்தது, வன்மம் நிறைந்த, ஜனநாயக விரோத செயலாகும். கடந்த காலங்களில் அதிமுக ஆட்சியில் நடைபெற்ற “2015 சென்னை பெருவெள்ளம்” “2016 வர்தா புயல்” “2017 ஒகி புயல்” “2018 கஜா புயல்” உள்ளிட்ட பேரிடர்களின்போது செய்த மலிவான “அரசியலை” , இந்த “கொரோனா பேரிடரிலும்” அ.தி.மு.க. தொடர்ந்து செய்துவருகிறது. ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் ஒரே காரணத்தினாலே, “ஊரடங்கு உத்தரவு தனக்கோ, தன் அமைச்சர்களுக்கோ, அ.தி.மு.க.,விற்கோ இல்லை; அது எதிர்க்கட்சிகளுக்கு மட்டும்தான்” என்ற அடிப்படையில் – சர்வாதிகார மனப்பான்மையுடன் முதலமைச்சர் செயல்படுவது, யாராலும் ஏற்றுக் கொள்ளமுடியாத, ஆரோக்கியமற்ற அணுகுமுறை ஆகும். ஆகவே முதலமைச்சர், பேரிடர் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளில்- அரசியலை நுழைக்காமல்- அனைத்துக் கட்சிகளையும், பொதுநல அமைப்புகளையும், தொண்டு நிறுவனங்களையும் – அனைத்துத் தரப்பினரையும் அரவணைத்து, ஒற்றுமையுடன் ஒரே நோக்கில், மக்கள் பணியாற்றிட வேண்டும் என்று இந்தக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம்: 8

நிவாரண- பொருளாதார உதவிக்கு புதிய செயல் திட்டம் உருவாக்கிடுக!

விவசாயிகள், நெசவாளர்கள், வணிகர்கள், மீனவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் ஊரடங்கு உத்தரவால் கடும் பாதிப்புக்குள்ளாகி – வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு நிற்கிறார்கள். மத்திய – மாநில அரசுகளின் நிவாரணம் அவர்களின் வருமான இழப்பை எவ்விதத்திலும் “தற்காலிகமாக” ஈடுகட்டும் விதத்தில் கூட இல்லை. விளை பொருட்களை விற்க முடியவில்லை. நேரடி கொள்முதல் நிலையங்கள் விவசாயிகளின் நண்பனாக இல்லை. அத்தியாவசியப் பொருட்கள் மட்டுமின்றி – அனைத்துப் பொருட்களின் விலையும் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து நிற்பதால் தாய்மார்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அரசுக்கு செலுத்த வேண்டிய மின் கட்டணம், சொத்து வரி, வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய மாதாந்திர கடன் தொகைகள் செலுத்த முடியவில்லை. வாடகைக்குக் குடியிருப்போர் வாடகை செலுத்த இயலவில்லை. பதிவு செய்யப்படாத அமைப்புசாரா தொழிலாளர்கள், வியாபாரிகள் அல்லது பதிவை புதுப்பிக்கத் தவறியவர்கள் எல்லாம் எந்த உதவியும் இன்றி தவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே அன்றாட வாழ்வு பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும், நலிவடைந்துள்ள சிறு, குறு தொழில்களுக்கும் தேவையான நிவாரண உதவிகள், சிறப்பு மானியங்கள் அளித்திடவும், மாநிலத்தில் தேக்க நிலையை எட்டி விட்ட தொழில் வளர்ச்சியை மீண்டும் முடுக்கி விடவும், தேவையான ஒரு விரிவான “நிவாரண- பொருளாதார” உதவிக்கான செயல் திட்டத்தை அ.தி.மு.க. அரசு உடனடியாக வகுக்க வேண்டும் என்று இந்த கூட்டம் கேட்டுக் கொள்கிறது. அதோடு, மத்திய அரசின் அறிவிப்பின் அடிப்படையில் வங்கிகள் ஒத்தி வைத்துள்ள கடன்களுக்கான வட்டியை முழுமையாக ரத்து செய்வது, 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்து, அனைவரும் தேர்வு பெற்றதாக அறிவிப்பது, தமிழகத்தில் வாழும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு அளித்து உணவுகள் வழங்குவது, வெளிநாடுகளிலிருந்தும் – வெளி மாநிலங்களிலிருந்தும் தமிழகம் திரும்ப விரும்புவோர்களுக்கு உரிய ஏற்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக செய்து கொடுப்பது, அகதிகளாக தமிழக முகாம்களில் வாழ்ந்து வரும் ஈழத் தமிழர்களுக்கு உரிய நிவாரணங்கள் வழங்குவது, விசைத்தறித் தொழிற்சாலைகள் உள்ளிட்ட சிறு, குறு தொழில் நிறுவனங்களில் பணிபுரிந்து – வேலையின்றி தவித்து வரும் ஏறத்தாழ 50 லட்சம் தொழிலாளர்களுக்கு உரிய நிதி உதவிகளை வழங்குவது, தமிழகத்தில் பட்டினிச்சாவுகள் நிகழாமல் தடுப்பதற்குத் தேவையான திட்டங்கள் உள்ளிட்ட நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்து அனைத்துத் தரப்பு மக்களையும் காப்பாற்றிட வேண்டும் எனவும், ஊரடங்கு நேரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அனைத்தையும் எவ்வித காலதாமதமும் இன்றி உடனடியாக விடுவிப்பதோடு – இனிவரும் நாட்களில் வாகனங்களைப் பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளை அ.தி.மு.க. அரசு கைவிட வேண்டும் என்றும் இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம்: 9

“கொரோனாவின் கோரப் பிடியிலிருந்து விரைந்து விடுபடுவீர்” தமிழக மக்களுக்கு வேண்டுகோள்!

கடந்த மூன்று வாரங்களை அடுத்து, இரண்டாவது கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள இந்த சூழ்நிலையில் – “தனிமனித சுகாதாரப் பாதுகாப்பு” “சமுதாயப் பாதுகாப்பு” ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில், “ஊரடங்கு உத்தரவினை முழுமையாகக் கடைப்பிடித்து காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்குவது”, “நோய்த் தொற்று அறிகுறி இருந்தால் உடனே மருத்துவர்களுக்குத் தெரிவிப்பது”, “சோப்பு மற்றும் சோப்பு நீர் கொண்டு கை கால்களை தொடர்ந்து சுத்தம் செய்வது”, “வெளியில் செல்லும் போது தவறாமல் முகக்கவசம் அணிந்து கொள்வது” “ரேசன் கடை, காய்கறி, மளிகைக் கடைகளுக்கும், அத்தியாவசியப் பொருட்கள் வாங்க பொது வெளியில் செல்லும் போதும், தங்கள் இல்லத்தில் உள்ள சுப துக்க நிகழ்வுகளிலும் கட்டாயம் தனிநபர் இடைவெளியை கடைப்பிடிப்பது” உள்ளிட்ட அனைத்துப் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், கொரோனா நோய்த் தொற்று குறித்து மத்திய – மாநில அரசுகள் அவ்வப்போது வழங்கிடும் நல்வாழ்வுக்கான அறிவுரைகளையும் முழுமையாகக் கடைப்பிடித்து தங்களையும், தங்கள் குடும்பத்தினரையும், நாட்டையும் கொரோனா நோயின் கோரப்பிடியிலிருந்து விடுவித்துப் பாதுகாத்திட முன்வர வேண்டும் என்று தமிழக மக்கள் அனைவரையும் அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் அன்புடன் கேட்டுக் கொள்கிறது.

பிட்சா டெலிவரி செய்தவருக்கு கொரோனா பாதிப்பு! தொடர்புடைய 72 வீடுகள் தனிமைபடுத்தப்பட்டு கண்காணிப்பு

0

பிட்சா டெலிவரி செய்தவருக்கு கொரோனா பாதிப்பு! தொடர்புடைய 72 வீடுகள் தனிமைபடுத்தப்பட்டு கண்காணிப்பு

உலகம் முழுவதும் தீவிரமாக பரவி வரும் கரோனா வைரஸ் பாதிப்பினால் தற்போது வரை 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த கொரோனா வைரஸ் பாதிப்பினால் உலகம் முழுவதும் 1.34 லட்சம் பேர் மரணமடைந்துள்ளனர். ஏறக்குறைய 5.1 லட்சம் பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு குனமடைந்துள்ளனர்.

இவ்வாறு தீவிரமாகப் பரவி வரும் கரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக உலகம் முழுவதும் முடங்கியுள்ளது. குறிப்பாக அத்தியாவசிய சேவைகள் தவிர்த்து மற்ற பெரும்பாலான சேவைகள் மற்றும் தொழில்கள் அனைத்தும் முடங்கியுள்ளது.

இந்த கொரோனா வைரசின் கொடூர தாக்குதலானது இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இதுவரை இந்தியாவில் இந்த வைரஸ் பாதிப்பினால் 12,000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 400 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 1400 க்கும் மேற்பட்டோர்கள் இந்த வைரஸ் தாக்குதலிருந்து மீண்டுள்ளனர்.

இவ்வாறு இந்தியாவில் தீவிரமாகும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்த நாடு முழுவதும் கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு அறிவித்தது.  இதனையடுத்து இந்த ஊரடங்கு உத்தரவானது 21 நாட்களுக்கு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் தேவையில்லாமல் வீட்டிற்கு வெளியே நடமாட தடை விதிக்கப்பட்டது.

இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையிலும் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமுடன் செயலாற்றி வருகின்றன. இந்நிலையில் நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.

இதனையடுத்து நாட்டு மக்களுக்காக உரையாற்றிய பிரதமர் மோடி நிலைமையை உணர்ந்து ஊரடங்கு உத்தரவை வரும் மே 3 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். குறிப்பாக அதற்கு முன்பே நாட்டில் பெரும்பாலான மாநிலங்கள் இந்த மாத இறுதி வரை தற்போதுள்ள ஊரடங்கு உத்தரவை நீட்டிதுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வளவு தீவிரமாக செயல்பட்டு வரும் இந்நிலையில் டெல்லியில் பிட்சா டெலிவரி செய்யும் நபர் ஒருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் உள்ள 72 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து டெல்லி சுகாதார துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கூறுகையில், ” சட்டர்பூரில், பிட்சா டெலிவரி செய்யும் நபர் ஒருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவருடன் வேலை சம்பந்தமாக தொடர்புடைய 17 மற்ற டெலிவரி செய்யும் நபர்கள், 72 வீடுகளில் பாதிக்கப்பட்ட இந்த நபரிடம் பிட்சா வாங்கிய நபர்கள் உள்ளிட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்” என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஒருமாதமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த அந்த நபர், மருத்துவரிடம் சென்றபோது சாதாரண இருமல், சளி என நினைத்து மருத்துவர் சிகிச்சையளித்துள்ளார். ஆனால் தொடர்ந்து உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து, அந்த நபருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு கரோனா வைரஸ் தொற்று உள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

குடிபோதையில் பாமக நிர்வாகியை தாக்கிய காவல் ஆய்வாளருக்கு முக்கிய பதவி வழங்குவதா? மருத்துவர் ராமதாஸ் காட்டம்

0

குடிபோதையில் பாமக நிர்வாகியை தாக்கிய காவல் ஆய்வாளருக்கு முக்கிய பதவி வழங்குவதா? மருத்துவர் ராமதாஸ் காட்டம்

கடந்த வாரம் சின்ன சேலம் பாமக ஒன்றிய செயலாளர் சக்திவேல் என்பவரை அப்பகுதியை சேர்ந்த காவல் ஆய்வாளர் சுதாகர் என்பவர் குடிபோதையில் வந்து கொலை வெறி தாக்குதல் நடத்தியது அப்பகுதி மக்கள் மட்டுமல்லாமல் தமிழக மக்கள் அனைவரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த நேரத்தில் மதுக்கடைகள் உள்ளிட்ட எதுவும் இயங்காத நிலையில் சட்டத்தை காப்பாற்ற வேண்டிய ஒரு காவல்துறை அதிகாரியே சட்ட விரோதமாக மதுவை குடித்துவிட்டு சமூக வலைத்தளத்தில் தான் மாமூல் வாங்கியதை பற்றிய தகவலை எழுதியதற்காக இரவு நேரத்தில் வீடு புகுந்து கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளார்.

ஆரம்பத்தில் இதை கண்டுகொள்ளாத மூத்த அதிகாரிகள் இந்த செயலுக்கு எதிராக தமிழகம் முழுவதும் எழுந்த கடுமையான எதிர்ப்பு காரணமாக செய்வதறியாது குற்றவாளியான அந்த காவல் ஆய்வாளர் சுதாகரை ஆயுதப்படைக்கு பணியிடமாற்றம் செய்தனர். அப்போதே அதை எதிர்த்து காவல் துறையினர் குற்றம் செய்தால் பணியிடமாற்றம் தான் தண்டனையா என பொது மக்கள் விமர்சித்து வந்தனர். இந்நிலையில் தான் அவர் மீண்டும் கடலூர் மாவட்டம் பெண்ணாடம் காவல்நிலைய ஆய்வாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தான் இதை கண்டிக்கும் விதமாக குடிபோதையில் பா.ம.க. நிர்வாகியை தாக்கிய காவல் ஆய்வாளருக்கு முக்கிய
பதவி வழங்குவதா? என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகளில் கூறியுள்ளதாவது.

1. வெகுமதி
சின்னசேலம் பா.ம.க. ஒன்றிய செயலர் சக்திவேலை குடி போதையில், ஊரே வேடிக்கை பார்த்த நிலையில் வீடுபுகுந்து தாக்கிய காவல் ஆய்வாளர் சுதாகர் முதலில் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டு அனைத்து மரியாதையுடன் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அமரவைக்கப்பட்டார்.

2. ஆய்வாளர் சுதாகர் மனித உரிமை மீறலுக்காக தண்டிக்கப்பட்டவர். அவர் மீது மேலும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவரது கடந்த கால பின்னணி மிக மிக மோசமானது. அவர் மீதான புகாருக்கு விசாரணையின்றியே தண்டிக்க முடியும். ஆனால், வீடியோ ஆதாரம் வெளியாகியும் நடவடிக்கை இல்லை.
https://twitter.com/drramadoss/status/1250664303620796416

3. 4 நாட்கள் ஆயுதப்படையில் இருந்த சுதாகருக்கு இப்போது அடுத்த வெகுமதியாக கடலூர் மாவட்டம் பெண்ணாடம் காவல்நிலைய ஆய்வாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மனித உரிமை மீறல் குற்றவாளிக்கு இப்படி மகுடம் சூட்டப்படுவதற்கு உபயதாரர் யார்?

செய்தியாளர்களை சந்திக்காத காரணம் என்ன? அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்

0

செய்தியாளர்களை சந்திக்காத காரணம் என்ன? அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஆரம்பித்தது முதல் தற்போது வரை நாளுக்கு நாள் அதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே வருகிறது. இந்நிலையில் ஏற்கனவே அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவை வரும் மே 3 ஆம் தேதி வரை நீட்டித்து பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

தமிழகத்திலும் இந்த வைரஸின் தாக்கமானது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸால் பாதிக்கபட்ட மாநிலங்களில் 3 வது இடத்தில் தமிழகம் உள்ளது. வைரஸ் பரவலை கட்டுபடுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் சூழலில் பொது மக்களும் இது குறித்த செய்திகளை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

ஆரம்ப காலத்தில் தமிழக அரசின் சார்பில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த தகவல்களையும், தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் செய்தியாளர்களை சந்தித்து வெளியிட்டு வந்தார். சமீக காலமாக அமைச்சர் விஜயபாஸ்கரின் செயல்பாடுகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் சூழலில் இந்த கொரோனா தடுப்பு நடவடிக்கைகளிலும் இவருக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

இதனையடுத்து இவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் “தமிழகத்தை காக்க வந்த போதி தர்மர்,நாளைய முதல்வர்” என எடப்பாடி தரப்பை ஆட்டி பார்க்கும் வகையில் மீம்ஸ்கள் வெளி வந்தன. இதனையடுத்து சுதாரித்து கொண்ட எடப்பாடி தரப்பு என்ன மாயம் செய்ததோ தெரியவில்லை திடீரென்று அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்திப்பதை தவிர்த்து வந்தார். மேலும் அவரை பாராட்டி யாரும் மீம்ஸ் போட வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதனையடுத்து அவர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் ஓரங்கட்டப்பட்டார் என வதந்திகள் பரவி வந்தன. இந்நிலையில் அவருக்கு பதிலாக சுகாதார துறை சார்பாக அந்த துறையின் செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களை சந்தித்தார்.அவரும் அமைச்சர் செயல்பட்டது போல சிறப்பாக செயல்பட்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.

இந்நிலையில் தமிழகத்தில் தொடர்ந்து கோரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டிய பொறுப்பு அரசிற்கு தான் உள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்திக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. இந்நிலையில் கடும் சர்ச்சைகளுக்கு பிறகு அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் தெளிவான விளக்க அளித்தார். மேலும் இந்த சந்திப்பின் போது கடந்த 15 நாட்களாக ஏன் செய்தியாளர்களை சந்திக்கவில்லை என்று பத்திரிக்கையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் விஜயபாஸ்கர் ” நான் செய்தியாளர்களை நேற்று கூட சந்தித்தேன். துறையின் செயலாளர் என்ற முறையில் முதல்வரின் ஆலோசனையின் பேரில் புள்ளி விவரங்களை அவர் தெரிவித்து வருகிறார். அமைச்சர் என்ற முறையில் நான் மருத்துவமனைகளில் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறேன். அதனால் தான் செய்தியாளர்களை சந்திக்க முடியவில்லையே தவிர நீங்களா வேறு எதுவும் கற்பனை செய்து கொள்ள வேண்டாம் என அனைத்து சர்ச்சைகளுக்கும் முற்று புள்ளி வைத்துள்ளார்.

21 லட்சத்தை நெருங்குகிறது கொரோனா தொற்று : அதிர்ச்சியூட்டும் உலக நாடுகளின் பட்டியல்!

0

சீனாவின் வூகான் மாநகரில் தொடங்கி தற்போது 210 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் தொற்றால் உலக நாடுகளில் உள்ள 300 கோடிக்கும் மேற்பட்டோர் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் கோரத் தாண்டவத்தால் இதுவரை 20 லட்சத்து 82 ஆயிரத்து 822 பேருக்கு மேல் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 34 ஆயிரத்தை கடந்துள்ளது, மேலும் 5 லட்சத்து 10 ஆயிரத்து 46 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் முதல் 35 இடங்களில் உள்ள நாடுகளின் விபரங்கள் பின்வருமாறு.

21 லட்சத்தை நெருங்குகிறது கொரோனா தொற்று : அதிர்ச்சியூட்டும் உலக நாடுகளின் பட்டியல்!

இந்தியாவில் நோய் தொற்று ஏற்பட்டுள்ளோரின் மொத்த எண்ணிக்கை 11,933 ஐ கடந்துள்ளது, அதில் பலியானார்களின் மொத்த எண்ணிக்கை 392 ஆக தெரிகிறது. இதுவரை சிகிச்சை பெற்று 1,344 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மாநில அளவிலான விபரங்கள் பின்வருமாறு(நோய் தொற்று ஏற்பட்டுள்ளவர்கள் / இறந்தவர்கள்):

மகாராஷ்டிரா – 2,801/178
டெல்லி – 1,561/30
தமிழ்நாடு – 1,242/14
தெலுங்கானா – 624/17
கேரளா – 387/03
ராஜஸ்தான் – 1,034/03
உத்தரபிரதேசம் – 735/11
ஆந்திர பிரதேசம் – 503/09
கர்நாடகா – 277/11
குஜராத் – 695/30
மத்திய பிரதேசம் – 730/50
ஜம்மு & காஷ்மீர் – 300/04
மேற்கு வங்கம் – 213/07
பஞ்சாப் – 176/12
ஹரியானா – 199/03
பீகார் – 70/01
அசாம் – 33/01
சண்டிகர் -21/0
உத்தர்கண்ட் – 37/0
லடாக் – 17/0
அந்தமான் & நிக்கோபார் -11/0
சத்தீஸ்கர் – 33/0
கோவா – 07/0
இமாச்சல பிரதேசம் – 33/01
ஒடிசா – 60/01
பாண்டிச்சேரி – 07/0
மணிப்பூர் – 02/0
ஜார்க்கண்ட் – 27/02
மிசோரம் – 01/0
அருணாச்சலப் பிரதேசம் – 1/0
திரிபுரா – 02/0
நாகாலாந்து – 01/0/01

தமிழகத்தில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 1,242 ஆக உயர்ந்துள்ளது. அதில் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 14 ஆக தெரிகிறது, பூரண குணமடைந்து 118 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

மாவட்டட்ட அளவில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை(நோய் தொற்று ஏற்பட்டவர்கள் / இறந்தவர்கள்);

சென்னை – 214/04
கோயம்புத்தூர் – 126/0
திருப்பூர் – 79/0
திண்டுக்கல் – 65/0
நெல்லை – 43/0
ஈரோடு – 70/01
திருச்சி – 43/0
நாமக்கல் – 45/0
ராணிப்பேட்டை – 39/0
செங்கல்பட்டு – 50/0
மதுரை – 41/01
கரூர் – 41/0
தேனி – 41/01
தூத்துக்குடி – 26/01
விழுப்புரம் – 23/01
கடலூர் – 20/0
சேலம் – 22/0
திருவள்ளூர் – 49/0
திருவாரூர் – 15/0
விருதுநகர் – 17/0
தஞ்சாவூர் – 17/0
நாகப்பட்டினம் – 31/0
திருப்பத்தூர் – 17/0
திருவண்ணாமலை – 12/0
கன்னியாகுமரி – 16/0
காஞ்சிபுரம் – 08/0
சிவகங்கை – 11/0
வேலூர் – 16/01
நீலகிரி – 09/0
தென்காசி – 09/0
கள்ளக்குறிச்சி – 03/0
ராமநாதபுரம் – 07/1
அரியலூர் – 02/0
பெரம்பலூர் – 01/0

இந்த தகவல்கள் வெவ்வேறு நாடுகளில் அதிகாரப்பூர்வமாக வெளியாதன் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.

காய்கறிகளை சாலையில் கொட்டிய விவசாயி : தேடி பிடித்து போலீஸ் நடவடிக்கை!

0

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி கோரத்தாண்டவம் ஆடி வருவதால் பிரதமர் மோடி மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்துள்ளார். மேலும் இது போன்ற இக்கட்டான நேரத்தில் தான் நாம் கவனமாக இருக்க வேண்டும், அப்போதுதான் நாம் கொடிய வைரஸுக்கு எதிரான போரில் வெல்ல முடியும் என்று கூறினார்.

முன்னதாக முதல்வர் பழனிசாமி அத்தியாவசிய தேவைகளை தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் மக்கள் பொது இடங்களுக்கு வரவேண்டாம் என்று அறிவுறுத்தி இருந்தார். இவ்வாறான நெருக்கடியான சூழலில் வாகனங்கள் கிடைக்காத காரணத்தால் விலை பொருட்களை சந்தைக்கு கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது.

இதற்கிடையில் திருவள்ளூர் மாவட்டத்தில் காய்கறிகளை சந்தைக்கு கொண்டு செல்ல வாகனம் கிடைக்காததால் விவசாயி ஒருவர் தானே வண்டி வைத்து கொண்டு செல்ல முயன்றுள்ளார். இந்த விவசாயி அனுமதி பெறாததால் போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளார், இதனால் விரக்தியில் காய்கறிகளை சாலையில் வீசி சென்றுள்ளார்.

இதனை கேட்டு தெரிந்து கொண்ட திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி அரவிந்த் ஐ.பி.எஸ் பாதிப்புக்குள்ளான விவசாயியின் வீட்டிற்கு தேடி சென்று மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும் சம்மந்தப்பட்ட விவசாயிக்கு இழப்பீடு வழங்கி ஆறுதல் கூறியுள்ளார்.

இந்த விவசாயியை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் மீதும் நடவடிக்கை எடுப்பதாக எஸ்.பி அரவிந்த் ஐ.பி.எஸ் கூறி நம்பிக்கை அளித்துள்ளார். இந்த நடவடிக்கையால் விவசாயிகள் மற்றும் அப்பகுதி மக்கள் காவல்துறையினரை வெகுவாக பாராட்டியுள்ளனர்.

திருமணம் ஆன பிறகும் நாடக காதல் செய்யும் வாலிபர் : பல பெண்கள் சீரழியும் அதிர்ச்சி பின்னணி!

0

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த கார் ஓட்டும் ஆக்டிங் டிரைவர் உமர் ஷெரீப் தம்பிக். டாக்சி டிரைவரான உமருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன.

அதே பகுதியில் ஆன்லைன் விற்பனை செய்து வரும் பெண் ஷர்மிளா என்கிற ஹைரூநிஷா. கணவரால் கைவிடப்பட்ட ஷர்மிளா தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

உமர் டிக்டாக்கில் விதவிதமான காதல் பாடலுக்கு சினிமா ஹீரோக்களை போல நடித்து வீடியோ வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இவரின் டிக்டாக் வீடியோக்களை ரசித்து பார்த்து வந்த ஷர்மிளாவிடம் தனக்கு திருமணம் ஆனதை மறைத்து நட்பாக பழகியுள்ளார்.

ஆரம்பத்தில் இருவரும் ஒன்றாக இணைந்து டிக் டாக்கில் வீடியோ பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். இந்த பழக்கத்தால் இவர்கள் இருவருக்குள்ளும் நெருக்கம் அதிகமாகி பெட்ரூம் வரை கொண்டு சென்றுள்ளது.

இதனால் சர்மிளா தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அவரிடம் கேட்டுள்ளார். இதற்கு உமர் சில மாதங்கள் போகட்டும் என்று கூறி அவருடனான உறவை தொடர்ந்து வந்துள்ளார்.

இதற்கிடையில் பொறுமை இழந்த சர்மிளா தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி உமரை வற்புறுத்தியுள்ளார். இதற்கு உமர் 10 பவுன் நகை மற்றும் 20,000 ரூபாய் பணத்தை கொண்டு வந்தால் தான் திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார்.

திருமணம் செய்ய வேண்டும் என்ற ஆசையில் சர்மிளா அவர் கேட்டபடியே பணத்தையும் நகையையும் கொடுத்துள்ளார். அதை வாங்கிக் கொண்ட உமர் கம்பி நீட்டிவிட்டு ஷர்மிளாவுக்கு தெரியாமல் தலைமறைவாகிவிட்டார்.

அதன் பிறகு ஷர்மிளாவிடம் போனில் பேசுவதையும் நேரில் பார்ப்பதையும் உமர் தவிர்த்து வந்துள்ளார். உமரின் நடவடிக்கை மீது சந்தேகம் வந்து விசாரித்தபோது அவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளது ஷர்மிளாவுக்கு தெரியவந்தது.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ஷர்மிளா உமருக்கு போன் போட்டு தன்னுடைய நகைகளை தரச் சொல்லி கேட்டுள்ளார். இதற்கு உமர் ‘பணத்தை கேட்டால் நீயும் நானும் படுக்கையில் நெருக்கமாக இருந்த படங்களை இணையத்தில் வெளியிட்டு விடுவேன்’ என்று மிரட்டியுள்ளார்.

இதனால் செய்வதறியாது தவித்த ஷர்மில ஈரோடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை விசாரித்து காவல்துறை உமர் ஷெரீப் தம்பிக்கை சுற்றி மடக்கி பிடித்துள்ளனர்.

உமரையும் ஷர்மிளாவையும் விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் உமர் பல பெண்களுடன் பழகி இவ்வாறு நாடக காதல் செய்து மிரட்டி வந்ததாக தெரிகிறது.

டிக்டாக்கில் வீடியோ போடும் உமர் பல பெண்களுடன் ஒரே மாதிரியான பாடலுக்கு டூயட் பாடுவது வழக்கமாம். அவ்வாறு தன்னுடன் நட்பாக பேசும் பெண்களிடம் முதலில் விவரங்களை கேட்டு தெரிந்து கொள்வாராம்.

அதன் பிறகு தன்னுடைய இன்னொரு ஃபேக் ஐடி மூலம் அதே பெண்களிடம் தான் திருமணம் ஆகாத இளைஞன் என்று கூறி பழகுவாராம். பின்னர் இதே பாணியில் அந்தப் பெண்களிடம் உறவு வைத்துக் கொண்டு அதனை வீடியோவாக எடுத்து பணம் கேட்டு மிரட்டுவது வழக்கமாம் என்று தெரியவந்துள்ளது.

ஷர்மிளாவை போல தைரியமாக புகார் அளித்ததால் இதுபோன்ற மோசடி பேர்வழிகள் சிக்குகிறார்கள் என்று காவல்துறையினர் கூறிவருகின்றனர். டிக் டாக்கில் பொழுதுபோக்க சென்று அதற்கு அடிமையாகும் பெண்கள் இவரைப்போன்ற நாடக காதல் புள்ளிங்கோவிடம் சிக்கி சீரழிவது வேதனையாக உள்ளது என்று பெற்றோர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.