Home Blog Page 5727

நாளை இரண்டு மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை: அதிரடி அறிவிப்பு

0

தமிழகத்தில் அவ்வப்போது உள்ளூர் திருவிழாக்கள் நடக்கும்போது அந்தந்த மாவட்டங்களுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவிப்பது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ் பெற்று விளங்கும் அய்யா வைகுண்டசாமி அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு நாளை இந்த இரு மாவட்டங்களிலும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது

நாளை மார்ச் 3ஆம் தேதி அய்யா வைகுண்டசாமி அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். இதனையடுத்து இந்த இரு மாவட்டங்களிலும் உள்ள பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது

இருப்பினும் இந்த விடுமுறையை ஈடுகட்டும் வகையில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகிற மார்ச் 14ம் தேதி பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள் செயல்படும் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

அதேபோல் நாளைய விடுமுறையை ஈடுகட்டும் வகையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மார்ச் 25ம் தேதி வேலை நாள் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே அவர்கள் அறிவித்துள்ளார்

பெண்களே இல்லாத பன்றிக்கு நன்றி சொல்லி: தமிழ் சினிமாவில் புது முயற்சி !

0

பெண்களே இல்லாத பன்றிக்கு நன்றி சொல்லி: தமிழ் சினிமாவில் புது முயற்சி !

விரைவில் வெளியாக இருக்கும் பன்றிக்கு நன்றி சொல்லி என்ற திரைப்படத்தில் ஒரே ஒரு பெண் கூட நடிக்கவில்லை என அதன் இயக்குனர் பாலா அரண் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் இணையத்தில் வெளியான பன்றிக்கு நன்றி சொல்லி என்ற திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே கவனம் ஈர்த்தது. காரணம் அந்த டிரைலர் காட்டிய நகைச்சுவை கதாபாத்திரங்களும் கதைக்களனுமே. குறும்படங்கள் இயக்கிய பாலா அரண் இயக்கி இருக்கும் இந்த படத்தில் நிஷாந்த், விஜய் சத்யா, நக்கலைட்ஸ் செல்லா, வியன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு விக்னேஷ் செல்வராஜ் ஒளிப்பதிவு செய்ய சுரேன் விகாஷ் இசையமைத்துள்ளார்.

விரைவில் திரைக்கு வரவுள்ள இந்த படத்தில் ஒரே ஒரு பெண் கதாபாத்திரம் கூட இல்லை என இயக்குனர் பாலா அரண் தெரிவித்துள்ளார். அதுகுறித்து கேட்டபோது ‘கி பி 10ம் நூற்றாண்டில் மகாபலிபுரம் வரும் சீன் துறவி ஒருவரிடம் பன்றி சிலை ஒன்று இருக்கிறது. அது எதிர்பாராத விதமாக காணாமல் போகவே அதை அவர் தேடிக் கண்டுபிடிப்பதே கதை. அதனால் இந்த படத்தில் பெண் கதாபாத்திரங்கள் தேவைப்படவில்லை.’ எனக் கூறியுள்ளார்.

இதுமாதிரி பெண்களே இல்லாமல் தமிழ் படம் ஒன்று வருவது இதுவே முதல்முறை. உலக அளவில் இதுபோல் சில படங்கள் வெளியாகியுள்ளன என்று சொல்லப்படுகிறது. விரைவில் வெளியாக உள்ள் இந்த திரைப்படம் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது

விஷோலோடு மோதி சிம்புவிடம் ஐக்கியமான மிஷ்கின்: உருவானது புதிய கூட்டணி !

0

விஷோலோடு மோதி சிம்புவிடம் ஐக்கியமான மிஷ்கின்: உருவானது புதிய கூட்டணி !

சிம்பு நடிக்கும் புதிய படத்தை இயக்குனர் மிஷ்கின் இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

சிம்பு நடிப்பில் ‘மாநாடு’ என்ற படத்தை தயாரிக்க திட்டமிட்ட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்ச. சிறுபட தயாரிப்பாளராக இருந்த அவருக்குப் பலரும் சிம்பு படம் வேண்டாம் என எச்சரிக்கை விடுத்தனர். ஆனாலும் துணிந்து இறங்கினார் சுரேஷ் காமாட்சி. ஆரம்பகட்ட பணிகளுக்காகவே ஒருசில கோடிகளை செலவு செய்தார். ஆனாலும் சிம்புவால் காலதாமதம் ஏற்பட்டு படத்தை டிராப் செய்வதாக அறிவித்தார். அதன் பின் சிம்பு மீண்டும் அந்த படத்தில் நடிப்பதற்கு சம்மதம் தெரிவிக்க ஒருவழியாக படம் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டு தற்போது படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இந்நிலையில் மாநாடு படத்தை முடித்ததும் சிம்பு தனது அடுத்த படத்தை இயக்க முன்னணி இயக்குனர் ஒருவரை தேர்ந்தெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அவர் வேறு யாருமில்லை பிக்பாஸ் மூலம் மீண்டும் பிரபலமான இயக்குனர் சேரன் தான். அவர் சொன்ன கதை சிம்புவுக்கு மிகவும் பிடித்ததால் அவருக்கே அடுத்த படத்தின் கால்ஷீட்டை அவர் கொடுத்துள்ளார் கடந்த வாரம் ஒரு செய்தி வெளியானது. இந்த படத்தில் சிம்புவோடு விஜய் சேதுபதியும் நடிக்க இருப்பதாக சொல்லப்பட்டது.

ஆனால் இப்போது மாநாடு படத்துக்குப் பின்னர் மிஷ்கின் இயக்கும் புதிய படத்தில் சிம்பு நடிக்க சம்மதம் சொல்லியுள்ளதாக சொல்லப்படுகிறது. மிஷ்கின், விஷாலை வைத்து இயக்கிய துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது இயக்கி வந்தார். ஆனால் லண்டன் படப்பிடிப்பின் போது விஷால் மற்றும் மிஷ்கின் தரப்புக்கு இடையே எழுந்த மோதலால் படத்தில் இருந்து அவர் விலகினார். மீதிப்படத்தை விஷாலே இயக்க உள்ளார். இந்நிலையில் இப்போது மிஷ்கினோடு சிம்பு கைகோர்த்துள்ளதால் அந்த படத்தின் மீதானப் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

திருவொற்றியூர் குடியாத்தம் இடைத்தேர்தல் எப்போது? அதிரடி அறிவிப்பு

0

சமீபத்தில் திருவொற்றியூர் திமுக எம்எல்ஏ கேபிபி சாமி அவர்களும் குடியாத்தம் திமுக எம்எல்ஏ காத்தவராயன் அவர்களும் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார்கள் என்ற செய்தியை பார்த்தோம். இந்த நிலையில் இந்த இரண்டு தொகுதிகளும் காலியானதாக சட்டசபை செயலாளர் செயலகம் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளது

இந்த கடிதத்தை ஏற்றுக்கொண்டுள்ள தேர்தல் ஆணையம் சற்று முன்னர் திருவொற்றியூர் குடியாத்தம் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகள் காலியானதாக அறிவித்துள்ளது. மேலும் இந்த இரண்டு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்குமா? அல்லது 2021 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுடன் தேர்தல் நடக்குமா என்ற கேள்வி பலரிடமும் இருந்தது. ஆனால் இன்னும் பொதுத்தேர்தல் நடைபெற ஒரு ஆண்டுக்கு மேல் இருப்பதால் இந்த இரண்டு தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற வேண்டும் என்று தேர்தல் விதி கூறுவதால் அதிவிரைவில் திருவொற்றியூர் குடியாத்தம் இடைத் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

ஏற்கனவே திமுக இந்த இரண்டு தொகுதிகளையும் கைப்பற்றி இருந்த நிலையில் அந்த இரண்டு தொகுதிகளை மீண்டும் திமுக கைப்பற்றுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

மைதானத்தில் கட்டுப்பாட்டை இழந்த கோலியின் செயல்: நிரூபரின் கேள்வியால் மேலும் ஆத்திரம் !

0

மைதானத்தில் கட்டுப்பாட்டை இழந்த கோலியின் செயல்: நிரூபரின் கேள்வியால் மேலும் ஆத்திரம் !

நியுசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 5 டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. அதன் பின் நடந்த ஒருநாள் தொடரை நியுசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியை நியுசிலாந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.

அதையடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் மோசமான பேட்டிங்கால் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது. இதனால் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் குறிப்பாக விராட் கோலியின் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. அவர் மொத்தமாக 4 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 38 ரன்களே சேர்த்தார்.

இந்நிலையில் இன்று அவர் மைதானத்தில் நடந்துகொண்ட விதம் மேலும் அவருக்கு எதிரான கண்டனங்களை அதிகமாக்கியுள்ளது. இன்று காலை நியூசிலாந்து அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, வில்லியம்சனின் விக்கெட்டின் போது விராட் கோலி ஆக்ரோஷமாக கூச்சலிட்டு கொண்டாடினார். அதே போல மற்றொரு பேட்ஸ்மேனான டாம் லாதம் விக்கெட்டின் போது பார்வையாளர்களை நோக்கி ஆக்ரோஷமாக கெட்ட வார்த்தைகளை உதித்தார். இது மைதான திரையில் ஒளிப்பரப்பான போது அனைவரும் கோலியின் செயலால் முகம் சுளித்தனர்.

போட்டிக்கு பின்னர் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பிலும் இந்த சர்ச்சை எதிரொலித்தது. பேட்டியின் போது ஒரு நிரூபர் ‘இந்திய கேப்டனாக களத்தில் நீங்கள் சிறந்த உதாரணமாக இருக்கவேண்டும் என நீங்கள் ஏன் நினைப்பதில்லை?’ எனக் கேட்டார். அதற்கு பதிலளித்த கோலி ‘மைதானத்தில் சரியாக என்ன நடந்தது என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். அரைகுறை கேள்விகளுடன் வரக்கூடாது. அதுபற்றி நான் நடுவரிடம் பேசிவிட்டேன். அவருக்கு அதில் எந்த பிரச்னையும் இல்லை. நன்றி’ என கூறினார். கோலியின் இந்த அனுகுமுறையானது மேலும் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

ஒரே கோவிலில் இந்து முஸ்லிம் கிறிஸ்டின் கடவுள்கள்: பிரபல நடிகரின் முயற்சி

0

இந்து முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவவர்கள் வழிபடும் வகையில் மூன்று கடவுள்களையும் கொண்ட கோயில் ஒன்றை கட்டும் முயற்சியில் நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் ஈடுபட்டுள்ளார்

இந்த முயற்சி ஆரம்பகட்டத்தில் இருப்பதாகவும் விரைவில் இதுகுறித்த கட்டுமான பணிகள் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது

ஒரே கோவிலில் இந்து முஸ்லிம் கிறிஸ்டின் கடவுள்கள்: பிரபல நடிகரின் முயற்சி

உண்மையான மதச்சார்பின்மை என்றால் என்ன என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த கோவில் இருக்கும் என்று கூறப்படுகிறது. இது நடந்தால் உலகிலேயே முதல் முறையாக இந்து முஸ்லிம் கிறிஸ்டின் கோயில் ஒரே இடத்தில் இருக்கும் அதிசயம் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

இந்தியா போன்ற மதச்சார்பின்மை நாட்டில் மதச்சார்பின்மை என்று பேசிக்கொண்டிருந்தால் போதாது, இதுபோன்ற புதிய முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

திரௌபதி பட இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் நடிக்க நடிகர் ரஜினிகாந்த் அழைப்பு

0

திரௌபதி பட இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் நடிக்க நடிகர் ரஜினிகாந்த் அழைப்பு

நாடக காதல் மற்றும் ஆணவக் கொலைகளின் பின்னணி என்ன? அதன் பின்னால் நடக்கும் அரசியல் என்ன என்பது பற்றி வட சென்னையில் உள்ள ஒரு சார்பதிவாளர் அலுவலகத்தில் நடத்த முறைகேடான பதிவு திருமண வழக்கை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தான் திரௌபதி. உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தில் உள்ள ஒவ்வொரு கட்சிகளும் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் வாழும் பல்வேறு தரப்பட்ட மக்களின் நிஜ வாழ்க்கையுடன் ஒன்றிணைந்துள்ளதால் படத்திற்கு தமிழகம் முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது.

பெரும்பாலான இடங்களில் பொது மக்கள் குடும்பம் குடும்பமாக வருவதால் திரையரங்கு நிரம்பி வழிகிறது. பெரிய நடிகர்களுக்கு கொடுப்பதைப் போன்ற முக்கியத்துவம் இந்த படத்திற்கும் கொடுத்துள்ள இளைஞர்கள் பெரும்பாலான பகுதிகளில் திருவிழா போல கொண்டாடி வருகின்றனர். திரையிட்ட எல்லா இடங்களிலும் வசூல் சாதனையையும் இந்த திரௌபதி திரைப்படம் நிகழ்த்தி வருகிறது.

பழைய வண்ணாரப்பேட்டை படத்தை இயக்கிய மோகன்.ஜி அவர்களின் இரண்டாம் படைப்பான வெளியான இந்த படத்தில் ஷாலினியின் சகோதரர் ரிச்சர்ட் மற்றும் டூ லெட் பட கதாநாயகி ஷீலா ராஜ்குமார் நடித்துள்ளனர். பழைய வண்ணாரப்பேட்டை படத்திற்கு இசையமைத்த ஜூபின் இந்த படத்திற்கும் இசையமைத்துள்ளார். இவர்களுடன் நடிகர் கருணாஸ்,மறுமலர்ச்சி படத்தின் இயக்குனர் பாரதி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இவ்வாறு குறைத்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட திரௌபதி படத்திற்கு தமிழகம் முழுவதும் மக்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருவது தமிழ் திரையுலகத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த திரௌபதி படத்திற்கு கிடைத்த வரவேற்பை புரிந்து கொண்ட பிரபலங்கள் இந்த படத்தின் இயக்குனர் மோகன்.ஜி இயக்கத்தில் நடிக்க ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. இதை உறுதி செய்யும் விதமாக நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் மோகன்.ஜி அவர்களின் இயக்கத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து விசாரிக்கையில் தற்போது நடிகர் ரஜினிகாந்த் தரப்பிலிருந்து முதல்கட்ட பேச்சு வார்த்தை மட்டுமே நடத்தப்பட்டுள்ளதாகவும், உறுதியாகும் பட்சத்தில் இது குறித்து அதிகாரபூர்வமாக தகவல் தெரிவிக்கப்படும் என்றும் தகவல்கள் கசிந்துள்ளது.

இரும்பு ஸ்கேலால் அடித்த ஆசிரியர்: பார்வை பறிபோய் பரிதாப நிலையில் மாணவர், சென்னையில் பரபரப்பு

0

ஆசிரியர்கள் சிலர் மாணவர்களை கண்மூடித்தனமாக அடிப்பதால் மாணவர்களுக்கு உயிரிழப்பு உட்பட பல விபரீதங்கள் ஏற்பட்டு வருவது குறித்த செய்திகள் அவ்வப்போது நாடு முழுவதும் வெளிவந்து கொண்டிருக்கின்றன

இந்த நிலையில் சென்னை அரசு பள்ளியில் இரும்பு ஸ்கேலால் மாணவர் ஒருவரை பின்மண்டையில் ஆசிரியர் தாக்கியதாக தெரிகிறது. இதனை அடுத்து மயக்கமடைந்த அந்த மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்

இந்த நிலையில் மருத்துவர்கள் தெரிவித்த தகவலின்படி இரும்பு ஸ்கேலால் அடிபட்ட மாணவரின் பார்வை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மாணவரின் பெற்றோர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். மாணவனை கண்மூடித்தனமாக அடித்தஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவனின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது குறித்து போலீசார் விசாரணை செய்து தகுந்த நடவடிக்கை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் திருமணமான இளம் நடிகை திடீர் தற்கொலை! யார் காரணம்?

0

சென்னையில் 23 வயது இளம் நடிகை ஒருவர் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தமிழ் திரைப் படங்களில் துணை நடிகையாக இருந்து வரும் பத்மஜா என்ற இளம்பெண் கணவரை பிரிந்து தனியாக திருவொற்றியூர் பகுதியில் வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் அவருடைய வீட்டிற்கு வாலிபர் ஒருவர் அடிக்கடி வந்து சென்றதால் வீட்டின் உரிமையாளர் உடனடியாக பத்மஜாவிடம் வீட்டை காலி செய்யும்படி கூறியிருக்கிறார்

இதனால் அதிர்ச்சி அடைந்த பத்மஜா தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. தற்கொலைக்கு முன் அவர் பதிவு செய்த வீடியோவில் அழுது கொண்டே தனது தற்கொலைக்கான காரணத்தை தெரிவித்துள்ளார். இதனை அடுத்து இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் வீட்டின் உரிமையாளரிடமும் அவருடன் தங்கியிருந்த வாலிபர் யார்? அவர் எங்கே இருக்கிறார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்

மேலும் பத்மஜாவின் கணவருக்கும் தகவல் அனுப்பி உள்ளனர். பத்மஜாவுடன் தங்கி இருந்த வாலிபர் பிடிபட்டால் அவரது மரணத்திற்கான காரணம் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

மக்களை முத்தம் கொடுக்காதீர்கள் என சொன்ன அரசு: காரணம் கொரோனா வைரஸா ?

0

மக்களை முத்தம் கொடுக்காதீர்கள் என சொன்ன அரசு: காரணம் கொரோனா வைரஸா ?

கொரோனா வைரஸ் பீதி அதிகமாகியுள்ள பிரான்ஸ் நாட்டில் மக்கள் ஒருவருக்கு முத்தம் கொடுத்துக் கொள்ள கூடாது என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல்வேறு நாடுகள் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சீனாவுடனான தொடர்பைத் துண்டித்து வருகின்றன. இதுவரை சீனாவில் சுமார் 2800 பேரருக்கும் மேல் இந்த வைரஸ் தாக்குதலால் இறந்துள்ளனர். 80000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப் பட்டுள்ளனர். இதனால் சீனாவின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்றுதான் இந்த வைரஸ் மூலம் நடக்கும் தாக்குதலுக்கு கோவிட்-19 எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

வைரஸ் தாக்குதல் சீனாவில் மட்டுமே இருந்தாலும், அந்த வைரஸ் சம்மந்தமான பீதி உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸ் தாக்குதல் 25க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பீதியைக் கிளப்பி வருகிறது. சமீபத்தில் பிரான்ஸ் நாட்டில் இந்த நோய் தாக்குதல் 100க்கும் மேற்பட்டோருக்கு இருப்பதாகக் கண்டுபிடிக்கபப்ட்டுள்ளது. இது அந்நாட்டு மக்களையும் அரசையும் பீதிக்குள்ளாக்கியுள்ளது. இந்நிலையில் வைரஸ் பரவலைத் தடுக்க சுகாதாரத்துறை சில ஆலோசனைகளை கூறியுள்ளது.

அதன் படி ‘மக்கள் அதிகமாக ஒரு இடத்தில் கூடுவதைத் தவிருங்கள். மேலும் சந்திப்பின் போது மரியாதை நிமித்தமாக கட்டிப்பிடிப்பது, கைகுலுக்குவது மற்றும் கன்னங்களை உரசி முத்தமிடுதல் ஆகியவற்றைத் தவிருங்கள்’ என கூறியுள்ளது. முத்தம் கொடுத்தல் மற்றும் தொடுதல் மூலம் இந்த வைரஸ் தாக்குதல் பரவும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக சொல்லப்படுவதால் இந்த அலோசனைகளை வழங்கியுள்ளது.