Home Blog Page 5726

திமுக எம்.பி நடத்திய குடிநீர் ஆலைக்கு சீல்! சட்டவிரோதமாக செயல்பட்டதால் கலெக்டர் அதிரடி..!!

0

திமுக எம்.பி நடத்திய குடிநீர் ஆலைக்கு சீல்! சட்டவிரோதமாக செயல்பட்டதால் கலெக்டர் அதிரடி..!!

நிலத்தடி நீரை எடுப்பதற்காக சட்டப்படி உரிமம் பெறாத குடிநீர் ஆலைகளை மூடி சீல் வைக்கமாறு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் உரிமம் வாங்காத மற்றும் உரிமத்தை புதுப்பிக்காத குடிநீர் ஆலைகளுக்கு அரசு அதிகாரிகள் சீல் வைத்து வருகின்றனர்.

வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம், குடிநீர் ஆலை சம்பந்தமான கோர்ட்டின் உத்தரவிற்கு உடனடியாக செயல்பட்டு, மாவட்டம் முழுவதும் உள்ள குடிநீர் ஆலைகளை பற்றிய கணக்கெடுப்புக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து பொதுப் பணித்துறையின் நிலத்தடி நீர்மட்ட கோட்டப்பிரிவு அதிகாரிகள் ஒட்டுமொத்த மாவட்ட குடிநீர் ஆலைகளின் உரிமம் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டனர்.

வேலூர் மாவட்டத்தில் 3 ஆலைகள் மட்டுமே சட்டப்படி உரிமம் வாங்கியிருப்பதாவும், 37 குடிநீர் ஆலைகள் உரிமம் பெறாமல் இயங்கி வந்திருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதில், திமுக எம்.பி கதிர்ஆனந்த் சட்டவிரோதமாக நடத்தி வந்த குடிநீர் ஆலைக்கும் சேர்த்து சீல் வைக்கப்பட்டது. முதலில் 29 ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டது பின்னர், மீதமுள்ள 7 குடிநீர் ஆலைகளுக்கும் வருவாய்மதுறையினர் மற்றும் பொதுப்பணித்துறையினர் சீல் வைத்தனர்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் எவ்வித பாரபட்சமும் இன்றி உரிமம் பெறாத அனைத்து குடிநீர் ஆலைகளுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் எதிரொலி: திரைத்துறைக்கு ரூ.500 கோடி நஷ்டம்

0

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சீனாவில் மட்டும் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் இந்த கொரோனா வைரஸ் காரணமாக பலியாகி உள்ளனர் என்பதும் ஐம்பதாயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

சீனா மட்டுமின்றி அண்டை நாடுகளான ஜப்பான் தென்கொரியா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் இந்த கொரோனா வைரஸ் பரவி இருப்பதால் உலகம் முழுவதும் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட அனைத்து நாடுகளின் பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி அடைந்தது மட்டுமின்றி கச்சா எண்ணெயின் விலை வெகுவாக குறைந்துள்ளது

இந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகம் முழுவதும் திரைத்துறையில் ரூபாய் 500 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக அனைத்து தியேட்டர்களும் மூடப்பட்டு விட்டதாகவும் தயாரிப்புப் பணிகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது

அதேபோல் தென்கொரியா மற்றும் இத்தாலி போன்ற நாடுகளிலும் பார்வையாளர்கள் யாரும் திரையரங்குக்கு வருவதில்லை என்பதால் தியேட்டர்கள் மூடப்பட்டு உள்ளது.

டிக்-டாக் செய்வதற்காக தண்ணீரில் குதித்த இளைஞர் திரும்பி வரவேயில்லை! பரிதாபமான வீடியோ!! ராமதாஸ் எச்சரித்த காரணம்?

0

டிக்-டாக் செய்வதற்காக தண்ணீரில் குதித்த இளைஞர் திரும்பி வரவேயில்லை! பரிதாபமான வீடியோ!! ராமதாஸ் எச்சரித்த காரணம்?

உத்திர பிரதேச மாநிலம் முசாபர் நகரைச் சேர்ந்த ராஜா என்ற இளைஞர் டிக்டாக் செய்வதில் மிகவும் ஆர்வமானவர். தினமும் வித்தியாசமான வீடியோக்களை பதிவேற்றி மகிழ்ச்சியடைந்த ராஜா, புதிதாக வீடியோ எடுக்க திட்டமிட்டார்.

நண்பர்களுடன் கடந்த வெள்ளிக்கிழமை அன்று கங்கா கால்வாயில் ராஜா குளிக்க சென்றார். அங்கு வழக்கம்போல ஏதாவது வீடியோ எடுக்கலாம் என்று நினைத்து, கால்வாயின் மேற்பகுதியில் இருந்து குதிக்க தயாரானார்.

இதை அவரது நண்பர்கள் வீடியோ எடுத்தனர். சில நொடிகளுக்கு பிறகு தலைகீழாக ராஜா குதித்தபோது அவரது தலை தண்ணீருக்கு அடியில் இருந்த பாறையில் மோதி, அங்கேயே உயிரிழந்தார். அவரது உடல்தண்ணீரில் மிதப்பதை பார்த்துவிட்டு நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர். அற்ப சாகசத்திற்காக ஒரு உயிர் பிரிந்துவிட்டது.

https://youtu.be/30w8ERDAyZs

சமீபத்தில் மதுரையில் கணவன் மிலிட்டரியில் இருப்பதால் வேறொரு நபருடன் சேட்டை செய்து டிக்டாக்கில் வெளியிட்ட பெண்ணை ஊரைவிட்டே பொதுமக்கள் வெளியேற்றிய சம்பவமும் குறிப்பிடத்தக்கது.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் 2019 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி டிக்-டாக் செயலியை தடை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். அவரது கருத்தினை எவரும் கண்டுகொள்ளாமல் விட்டதன் விளைவு, ஒரு இளைஞனின் உயிரையே பறித்துவிட்டது. டிக்டாக்கினால் மேலும் இதுபோன்ற கோரமான சம்பவங்கள் நடந்தாலும் அதை யாராலும் தடுக்கமுடியாத  சூழலில் இருக்கிறோம். இந்தியாவில் டிக்டாக்கை தடை செய்தால் பல்வேறு அசம்பாவிதங்களை தடுக்கலாம்.

சமூக வலைதளத்தை விட்டு வெளியேறலாம் என்று நினைக்கிறேன்! மோடி திடீர் முடிவு..!!

0

சமூக வலைதளத்தை விட்டு வெளியேறலாம் என்று நினைக்கிறேன்! மோடி திடீர் முடிவு..!!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளங்களில் இருந்து வெளியேற நினைக்கிறேன் என்று தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

உலக நடப்புகளை கையில் வைத்திருக்கும் ஒரே சாதனம் சமூக வலைதளங்கள் மட்டுமே என்பதை நன்கு அறிந்த பிரதமர் மோடி திடீரென இப்படி அறிவித்திருப்பது பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

தினசரி சமூகவலைதளத்தை ஆர்வமுடன் அணுகும் பிரதமர்மோடி அடிக்கடி அரசியல் மற்றும் பல்வேறு முக்கிய சம்பவங்களையும், நாட்டிற்கான கருத்துகளையும் முக்கிய வாழ்த்துகளையும் தனது டுவிட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூ டியூப் களில் வெளியிடுவதில் மிக ஆர்வமானவர்.

இவரை டுவிட்டரில் மட்டும் 5 கோடிக்கு மேலானவர்களும், முகநூலில் 4 கோடிக்கு மேலானவர்களும், இன்ஸ்டாகிராமில் 3 கோடிக்கும் மேலானவர்களும் மற்றும்
யூடியூப்-ல் பல லட்சக்கணக்கானோர் பின்பற்றி வரும் நிலையில் மோடியின் அறிவிப்பு அனைவரையும் திகைக்க வைத்துள்ளது.

முகநூல், டுவிட்டர், யூ டியூப், இன்ஸ்டாகிராம் மற்றும் பல்வேறு சமூக இணையதள பக்கங்கள்தான் இன்று சிறிய விசயங்களை கூட டிரெண்டிங் லெவலுக்கு மாற்றியிருக்கிறது. சமூகவலைதளங்கள் இல்லாமல் இன்றைய உலகமே என்கிற நிலை உருவாகியுள்ளது. மோடி எல்லோரது கவனத்தையும் ஈர்ப்பதற்காக இப்படி செய்கிறாரா என்றும் சில கேள்விகள் எழுகிறது.

மாதம் 1 லட்சம் சம்பளம் வாங்கியும் நிம்மதி இல்லாததால் குடும்பத்தை கொன்று தானும் தற்கொலை செய்த இன்ஜினியர்!!

0

மாதம் 1 லட்சம் சம்பளம் வாங்கியும் நிம்மதி இல்லாததால் குடும்பத்தை கொன்று தானும் தற்கொலை செய்த இன்ஜினியர்!!

சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர் பணச்சிக்கல் காரணமாக குடும்பத்தோடு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் எல்.பி நகர் அருகேயுள்ள ஹஸ்தினாபுரம் பகுதியில் குடும்பத்தோடு வசித்து வந்த மென்பொருள் இன்ஜினியர் பிரதீப் என்பவர், வீட்டின் கதவை அடைத்துக் கொண்டு தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளையும் விஷம் கொடுத்து கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இரவு நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. மறுநாள் சனிக்கிழமை முழுவதும் கதவு திறக்காத காரணத்தால் அக்கம் பக்கத்தினர் சந்தேகத்தின் பேரில் காவல் நிலையில் புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே பார்த்த போது இன்ஜினியர் அவரது மனைவி சுவாதி மற்றும் அவரது குழந்தைகளான கல்யாண் கிருஷ்ணா, ஜெய கிருஷ்ணா ஆகிய நால்வரும் வீட்டின் அறையில் இறந்து கிடந்தனர்.

மேலும், இன்ஜினியர் பிரதீப் மாதம் ஒரு லட்சம் சம்பளம் வாங்கியும் அவரது வீட்டில் பணச்சிக்கல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவத்தில் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பத்தோடு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நரம்பு புடைக்க டயலாக் பேசிய சீமான் தம்பி! காங்கிரஸ் கட்சியினர் காவல் நிலையத்தில் புகார்..!!

0

நரம்பு புடைக்க டயலாக் பேசிய சீமான் தம்பி! காங்கிரஸ் கட்சியினர் கவால் நிலையத்தில் புகார்..!!

ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் டிக்டாக் செய்த நாம்தமிழர் கட்சியின் துரைமுருகனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யுமாறு காங்கிரஸ் கட்சியினர் புகார் கொடுத்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தின் முக்கியமான இடங்களில் ராஜீவ்காந்தியின் நினைவிடமும் ஒன்றாகும். இங்கு தினமும் நூற்றுக் கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். நினைவிடத்திற்கு சென்ற சீமானின் தம்பி துரைமுருகன், தனது அண்ணன் மேல் இருக்கும் தீராத பாசத்தால் அவர் மேடையில் பேசிய டயலாக்கை டிக்டாக் மூலம் ராஜீவ்காந்தி நினைவிடத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

அவர் பேசிய வசனம் இதுதான்; என் இனத்திற்கென்று ஒரு பெருமை உண்டு எனவும், நீ எப்பேர்பட்ட கொம்பனாக இரு, எந்த நாட்டுக்கு அதிபராகவும் இரு என் இனத்தை தொட்டால் இதுதான் கதி என்று ராஜீவ் காந்தியின் உருவபடத்தை சுட்டிக்காட்டி சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். தான் எங்கு என்ன பேசுகிறோம் என்பதை கூட யோசிக்காமல் ஆர்வத்தில் பேசி தனது வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதைக்கண்ட காங்கிரஸ் கட்சியினர் கொந்தளிப்புடன், தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நாதகவின் துரைமுருகனை கைது செய்ய வேண்டும் என்று புகார் கொடுத்துள்ளனர்.

ராதிகா எனது அம்மா இல்லை, ஆன்ட்டி தான்: வரலட்சுமி பரபரப்பு பேட்டி

0

சரத்குமாரின் இரண்டாவது மனைவி ராதிகாவை சரத்குமாரின் முதல் மனைவியின் மகள் வரலட்சுமி ஆன்ட்டி என்று தான் அழைத்து வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து கேட்கப்பட்ட கேள்வி ஒருவருக்கு பதிலளித்த வரலட்சுமி, ‘ராதிகா எனது அம்மா இல்லை என்பதால் அவரை ஆன்ட்டி என்று அழைக்கிறேன். எனக்கு அம்மா என்று சாயா என்பவர் இருக்கிறார். ஒரு நபருக்கு ஒரு ஒருவர்தான் அம்மாவாக இருக்க முடியும். எனவே எனக்கு ஏற்கனவே உண்மையான அம்மா இருப்பதால் நான் அவரை மட்டுமே அம்மா என்று அழைக்க முடியும். ராதிகாவை எப்படி அம்மா என்று அழைக்க முடியும்? என்று கூறினார்.

இருப்பினும் ராதிகா மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. எனது தந்தை அவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டாலும் எனது தந்தை மீது எனக்கு எந்த கோபமும் இல்லை. ஏனெனில் அவர் எனக்கு ஒரு நல்ல அப்பாவாக தான் இன்றுவரை இருந்து கொண்டிருக்கிறார்.

ராதிகாவும் நானும் நல்ல உறவில் தான் இருக்கிறோம். எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. ஆனால் வேலை வெட்டி இல்லாத நாய்கள் சிலர் இதுகுறித்து குலைஒத்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு வேலை வெட்டி இருந்தால், இதைப் பற்றி ஏன் பேசப் போகிறார்கள்? என்று கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

8 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா வொயிட் வாஷ்: டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்?

0

8 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா வொயிட் வாஷ்: டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்?

இந்திய அணி டெஸ்ட் தொடரில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வொயிட் வாஷ் அவமானத்தை சந்தித்துள்ளது.

நியுசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 5 டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. அதன் பின் நடந்த ஒருநாள் தொடரை நியுசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியை நியுசிலாந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.

நியுசிலாந்து அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டி கிரைஸ்ட்சர்ச் மைதானத்தில் கடந்த 18 ஆம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியுசிலாந்து கேப்டன் வில்லியம்சன முதலில் இந்தியாவை பேட் செய்ய பணித்தார். முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 242 ரன்களை சேர்த்தது. அதன் பின்னர் ஆடிய நியுசிலாந்து பூம்ரா மற்றும் ஷமியின் அபார பந்துவீச்சால் 235 ரன்களுக்கு சுருண்டது. இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் இந்தியா 7 ரன்கள் முன்னிலை பெற்றது.

இதையடுத்து தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி பேட்ஸ்மேன்கள் பொறுப்பற்ற முறையில் விளையாடி விக்கெட்களைத் தாரை வார்த்தனர். மூன்றாம் நாள் ஆட்டமுடிவில் 90 ரன்களை சேர்த்து 6 விக்கெட்களை இழந்துள்ளனர். இதையடுத்து இன்று மீண்டும் களமிறங்கிய இந்தியா மேற்கொண்டு வெறும் 34 ரன்களே சேர்த்து 124 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் நியுசிலாந்து அணிக்கு 132 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இதன் பின்னர் களமிறங்கிய நியுசிலாந்து அணி இலக்கை எளிதாக எட்டியது. 3 விக்கெட்கள் இழப்புக்கு 132 ரன்களை சேர்த்து இந்தியாவை டெஸ்ட் தொடரிலும் வொயிட்வாஷ் செய்தது. கடைசியாக இந்திய அணி ஆஸ்திரேலியாவில் 2011-2012 ஆம் ஆண்டில் 0-4 என்ற கணக்கில் அனைத்து போட்டிகளையும் தோற்று வொயிட்வாஷ் ஆனது. அதன் பின்னர் 8 ஆண்டுகள் கழித்து இந்த அவமானகரமான தோல்வியை சந்தித்துள்ளது. ஆனால் இந்த தோல்விகளால் இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் தனது முதல் இடத்தை இன்னும் இழக்கவில்லை.

இந்திய அணி 7 வெற்றி, 2 தோல்வி, 360 புள்ளிகள் முதல் இடத்திலும் ஆஸ்திரேலியா 296 புள்ளியுடன் 2-வது இடத்திலும், நியூசிலாந்து 180 புள்ளியுடன் 3-வது இடத்திலும், இங்கிலாந்து 146 புள்ளியுடன் 4-வது இடத்திலும் பாகிஸ்தான் 140 புள்ளியுடன் 5-வது இடத்திலும் உள்ளன. அதற்கடுத்த இடங்களில் இலங்கை, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் வஙகதேசம் ஆகிய அணிகள் உள்ளன.

ஆபாசப் பட நடிகையாக முயற்சித்த பிரபல இயக்குனரின் மகள் அதிரடி கைது!

0

உலகப் புகழ் பெற்றது ஜூராசிக் பார்க் என்ற சூப்பர்ஹிட் படத்தை இயக்கிய ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் அவர்களின் மகள்களில் ஒருவரான மைக்கலா என்பவர் சமீபத்தில் தான் ஆபாச படத்தை படத்தில் நடிக்க இருப்பதாகவும் அந்த படத்தை தானே தயாரிக்க இருப்பதாகவும் அறிவித்தார். அவருடைய இந்த அறிவிப்புக்கு அவரது தந்தை ஸ்டீபன் ஸ்பீல்பர்க் முழு ஆதரவும் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

தந்தையின் அனுமதியுடன் ஆபாச படத்தை தயாரித்து அதில் நடிக்க திட்டமிட்டிருந்த மைக்கேலா, திடீரென நேற்று போலீசாரால் கைது செய்யப்பட்டார். மைக்கேலாவின் குடும்பத்தில் ஒரு சிறு பிரச்சனை ஏற்பட்டதாகவும் இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது. இருப்பினும் ஒரு சில மணி நேரத்தில் அவரது குடும்பத்தினர் அந்த புகாரை வாபஸ் பெற்றதால் அவர் விடுதலை செய்யப்பட்டார்

இது குறித்து மைக்கேலாவின் வருங்கால கணவர் கூறிய போது குடும்ப உறுப்பினர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் இந்த குழப்பம் ஏற்பட்டு விட்டதாகவும் இதனை அடுத்து புரிதல் இல்லாமல் கொடுக்கப்பட்ட புகார் என்றும் கூறினார். இருப்பினும் என்ன காரணத்துக்காக புகார் அளிக்கப்பட்டது என்பது குறித்து கருத்து தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

தமிழக முதல்வரை கிண்டல் செய்த ரஜினி-கமல் பட நாயகி!

0

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோருடன் இணைந்து நடித்த நடிகைகளில் ஒருவர் ஸ்ரீபிரியா. கடந்த 80களில் இவர் தமிழ் திரையுலகின் முன்னணி ஹீரோயினாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது அவர் கமலஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சியின் முக்கிய பொறுப்பாளராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகை ஸ்ரீபிரியா தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை கிண்டல் செய்து ஒரு டுவிட்டை பதிவு செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தமிழக முதல்வரை கிண்டல் செய்த ரஜினி-கமல் பட நாயகி!

சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பேட்டி ஒன்றில் ’கமல்ஹாசன் யாரோ எழுதிக் கொடுத்ததை படிக்கிறார். அவருக்கு ஒன்றும் தெரியாது’ என்று கூறியிருந்தார். இது குறித்து கருத்து கூறிய நடிகை ஸ்ரீபிரியா ’ஐயோ ராமாயணம் எழுதியது யார் சொல்லுங்க பார்ப்போம்’ என்று கிண்டலடித்துள்ளார்

ஏற்கனவே கூட்டமொன்றில் பேசிய தமிழக முதல்வர் ’ராமாயணத்தை எழுதியவர் சேக்கிழார்’என்று கூறியது அனைவருக்கும் நினைவிருக்கலாம். இதனை வைத்தே ஸ்ரீபிரியா தற்போது கிண்டல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது