Home Blog Page 5728

கொரானோ வைரஸ்: பலி எண்ணிக்கை 3,000ஆக உயர்ந்ததால் அதிர்ச்சி

0

சீனாவில் கடந்த சில வாரங்களாக கொரானோ வைரஸ் தாக்குதல் அதிகம் இருந்து வரும் நிலையில் இந்த வைரஸால் பலியாகி வரும் நபர்களின் எண்ணிக்கை தினமும் நூற்றுக்கணக்கில் அதிகரித்து வருவது அதிர்ச்சியை அளித்துள்ளது

இந்த நிலையில் இதுவரை கொரானோ வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2912 இருந்த நிலையில் தற்போது 3010 என 3000க்கும் அதிகமாக உயர்ந்துள்ளதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது நேற்று ஒரே நாளில் 98 பேர் கொரானோ வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் மரணம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்தநிலையில் கொரானோ வைரஸினால்பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சமாக அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. சீனாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் இந்த வைரஸ் பரவி உள்ளதால் இந்த வைரசை கட்டுப்படுத்த விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்கள் திணறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இளம் நகைச்சுவை நடிகருக்கு பக்கவாதம்.. அள்ளிக்கொடுத்த நெட்டிசன்கள் !

0

இளம் நகைச்சுவை நடிகருக்கு பக்கவாதம்.. அள்ளிக்கொடுத்த நெட்டிசன்கள் !

இளம் நகைச்சுவை நடிகரான லோகேஷ் பாப் என்பவருக்கு கடந்த வாரம் பக்கவாத நோய் தாக்கப்பட இப்போது அவருக்கான சிகிச்சைக்குப் பணம் கிடைத்துள்ளது.

நகைச்சுவை தொலைக்காட்சியான ஆதித்யா தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் ’மொக்க ஆஃப் த டே’ என்ற நகைச்சுவை நிகழ்ச்சி பிரபலமான நிகழ்ச்சி. இதில் கலந்துகொண்டு நிகழ்ச்சியை நகைச்சுவையாக நடத்தி வருபவர்கள் லோகேஷ் பாப் மற்றும் குட்டி கோபி.

இந்த தொடரின் பிரபலத்தால் நடிகர் லோகேஷ் பாப்க்கு ’நானும் ரௌடிதான்’ படத்தில் விஜய் சேதுபதியோடு நடிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் அவர் நடித்திருந்த உடல் இயங்காத கதாபாத்திரம்

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னதாக பக்கவாதம் ஏற்பட்டுள்ளது. அதற்கான சிகிச்சைக்காக மருத்துவர்கள் 7 லட்சம் ரூபாய் கேட்க, அதற்கான நிதியை சமூகவலைதளங்களின் மூலம் திரட்ட முடிவு செய்தார் குட்டி கோபி.  அவரது பதிவில் ‘ நண்பர்களே நமது நண்பர், லோகேஷ் பாப் அவரது இடது காலிலும், இடது கையிலும் பக்கவாதம் வந்து செயல் பட முடியாத நிலையில் எம் ஜி எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது சிகிச்சைக்கு 5 முதல் 7 லட்சம் வரை தேவைப்படுகிறது. யாரால் முடியுமோ அவர்கள் தயவு செய்து பண உதவி செய்யுங்கள்’ எனக் கூறி இருந்தார். இந்நிலையில் இப்போது மீண்டும் ஒரு வீடியோ பதிவை அவர் வெளியிட்டுள்ளார்.

அதில் ‘சிகிச்சைக்ய்கு தேவையான பணம் கிடைத்துவிட்டது. இனிமேல் யாரும் பணம் அனுப்ப வேண்டாம் எனவும் அந்த பதிவைப் பகிர வேண்டாம்’ எனவும் குட்டி கோபி வீடியோ வெளியிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.

அரசுக் கல்லூரிகளில் சுழற்சி முறை இல்லை – கல்லூரி கல்வி இயக்குநரகம் அறிவிப்பு.

0

அரசுக் கல்லூரிகளில் சுழற்சி முறை இல்லை – கல்லூரி கல்வி இயக்குநரகம் அறிவிப்பு.

தமிழ்நாட்டில் கல்வித் துறையில் பெரும் மாற்றங்கள் சமீப காலமாக நிகழ்ந்த வண்ணம் உள்ளது. பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாணவர்களின் திறனை மேம்படுத்தவும் மத்திய அரசுத் தேர்வுக்குத் தயாராகும் வகையில் பாடத்திட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.இரண்டு தேர்வுகளாக நடத்தப்பட்டு வந்த மொழிப்பாடம் தற்போது ஒரே தேர்வாக மாற்றப்பட்டுள்ளது.

சமீபத்தில் ஐந்தாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.இதனை அடுத்து பல்வேறு அரசியல் கட்சியினரும் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் அந்த முடிவில் இருந்து பின்வாங்காத அரசு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர்.இராமதாஸ் அவர்களின் அறிக்கையை அடுத்து பொதுத்தேர்வு ரத்து செய்வதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்.

இதனை அடுத்து தற்போது கல்லூரிக்கல்வி இயக்குநரகமும் சீர்திருத்தங்களை மேற்கொள்ள முயற்சித்து வருகிறது. தமிழகத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரிகளில் சமார் 70 சதவீதம் சுழற்சி முறை(ஷிப்ட்) முறையில் இயங்குகிறது.

அதாவது காலை வேளையில் 8:30 – 1:15 வரையலும் மாலை வேளையில் 1:30 முதல் 6 மணி வரையிலும் இயங்குகிறது.இவ்வாறு இயங்குவதால் மாணவர்கள் கல்வியில் பெரும் முன்னேற்றம் காணப்படவில்லை எனவும் தெரிகிறது.

இவ்வாறு சுழற்சி முறை கல்லூரியில் காலை வேளையில் அரசு பேராசியர்களும், மாலை வேளையும் கௌரவ விரிவுரையாளர்களும் பணிபுரிகின்றனர். இதன் காரணமாக மாலை நேர வகுப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை.இதில் மாணவர்கள்படும் சிரமங்கள் உள்ளதை உணர்ந்த கல்லூரிக்கல்வி இயக்குநரகம் இனி சுழற்சி முறை இரத்து செய்யப்பட்டு காலை 10 – 4 என முழுவேளையாக இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதனால் கல்லூரிகளில் செய்யப்பட வேண்டிய உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

டெஸ்ட்டிலும் வொயிட்வாஷ் ஆன இந்தியா – நியுசிலாந்து அணி அபார வெற்றி !

0

டெஸ்ட்டிலும் வொயிட்வாஷ் ஆன இந்தியா – நியுசிலாந்து அணி அபார வெற்றி !

இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட்டிலும் இந்தியா தோற்று வொயிட்வாஷ் ஆகியுள்ளது.

நியுசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 5 டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. அதன் பின் நடந்த ஒருநாள் தொடரை நியுசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியை நியுசிலாந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.

நியுசிலாந்து அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டி கிரைஸ்ட்சர்ச் மைதானத்தில் கடந்த 18 ஆம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியுசிலாந்து கேப்டன் வில்லியம்சன முதலில் இந்தியாவை பேட் செய்ய பணித்தார். முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 242 ரன்களை சேர்த்தது. அதன் பின்னர் ஆடிய நியுசிலாந்து பூம்ரா மற்றும் ஷமியின் அபார பந்துவீச்சால் 235 ரன்களுக்கு சுருண்டது. இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் இந்தியா 7 ரன்கள் முன்னிலை பெற்றது.

டெஸ்ட்டிலும் வொயிட்வாஷ் ஆன இந்தியா – நியுசிலாந்து அணி அபார வெற்றி !

இதையடுத்து தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி பேட்ஸ்மேன்கள் பொறுப்பற்ற முறையில் விளையாடி விக்கெட்களைத் தாரை வார்த்தனர். மூன்றாம் நாள் ஆட்டமுடிவில் 90 ரன்களை சேர்த்து 6 விக்கெட்களை இழந்துள்ளனர். இதையடுத்து இன்று மீண்டும் களமிறங்கிய இந்தியா மேற்கொண்டு வெறும் 34 ரன்களே சேர்த்து 124 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் நியுசிலாந்து அணிக்கு 132 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இதன் பின்னர் களமிறங்கிய நியுசிலாந்து அணி இலக்கை எளிதாக எட்டியது. 3 விக்கெட்கள் இழப்புக்கு 132 ரன்களை சேர்த்து இந்தியாவை டெஸ்ட் தொடரிலும் வொயிட்வாஷ் செய்தது. இதன் மூலம் கோலி தலைமையிலான இந்திய அணி மிக மோசமான சாதனையை நியுசிலாந்து மண்ணில் பெற்றுள்ளது.

திமுக மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு: அதிர்ச்சியில் உதயநிதி?

0

திமுக தலைவர் முக ஸ்டாலின் சற்றுமுன்னர் மாநிலங்களவை திமுக வேட்பாளர்களை அறிவித்தார். ஏற்கனவே மாநிலங்களவை உறுப்பினர்களாக இருக்கும் திருச்சி சிவா மற்றும் என்.ஆர். இளங்கோ ஆகியோர் மீண்டும் வேட்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டிருக்கும் நிலையில் புதிதாக அந்தியூர் செல்வராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்

அந்தியூர் தொகுதியில் ஏற்கனவே எம்எல்ஏவாகவும், அமைச்சராகவும் இருந்த அந்தியூர் செல்வராஜ், திமுகவின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது திமுக இளைஞர் அணிக்கு இம்முறை எம்பி பதவிக்கான வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்பட்டது இதை பிரசாந்த் கிஷோர் பரிந்துரை செய்தார் என்றும் கூறப்படுகிறது இருந்தும் திமுக-தலைவர் அந்தியூர் செல்வராஜை தேர்வு செய்ததில் அரசியல் இருக்கும் என கருதப்படுகிறது

திமுக மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு: அதிர்ச்சியில் உதயநிதி?

தலித் வேட்பாளர் ஒருவர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் திமுக தலைவர் அந்தியூர் செல்வராஜை தேர்வு செய்ததாக திமுக வட்டாரங்கள் கூறுகின்றன

பாறை மீது பயிர் செய்து பரவசமூட்டும் குமரி விவசாயி..! மாத்தி யோசி.!!

0

பாறை மீது பயிர் செய்து பரவசமூட்டும் குமரி விவசாயி.! மாத்தி யோசி..!!

பாறைகளின் மீது நெல்பயிரை விவசாயம் செய்து முப்போகம் நல்ல விளைச்சலை ஈட்டி விவசாயி ஒருவர் அசத்தி வருகிறார்.

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே ஐத்துள்ளி என்ற பகுதியில் இருக்கும் கல்குவாரியில் எங்கு பார்த்தாலும் ரப்பர் மற்றும் தென்னை மரங்கள் அதிகம் காணப்பட்டது. ஆனால், ஒரு பகுதியில் மட்டும் பாறைகளின் மீது நெல்விளைச்சல் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

தனக்கு சொந்தமான கல்குவாரியை நடத்தி வரும் விவசாயி ராஜ்குமார் என்பவர், நீண்ட நாட்களாக கல்குவாரி செயல்படாமல் போனதால் அந்த இடத்தில் ஏதாவது புதியதாக தொழில் செய்ய முயற்சித்து, பாறைகளின் மீது வளமான மண்ணை கொட்டி நிரப்பியுள்ளார். பின்னர், நெல் விவசாயத்தை பயிரிட முதல் முயற்சி செய்தார். தண்ணீரை பிளாஸ்டிக் டிரம்மில் தேக்கி வைத்து, குழாய்களின் வழியாக நெற்பயிர்களுக்கு சீரான தண்ணீரை பாய்ச்சுகிறார்.

இதன் பயனாக முதலில் அறுவடை செய்த போது கிடைத்த அமோக விளைச்சல் விவசாயி ராஜ்குமாருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அவர் நினைத்ததை விட கூடுதல் விளைச்சல் கிடைத்ததால், எப்போதாவது நெல்லை பயிரிட நினைத்தவர் தனது முடிவை மாற்றி யோசித்து எப்போதுமே நெற்பயிரை விளைவிக்க முற்பட்டார். முதலில் 10 சென்ட் பகுதியில் மட்டுமே உரமிட்டு விவசாயம் செய்தவருக்கு கைமேல் லாபம் கிடைத்த காரணத்தால் மேலும் பத்து சென்ட் பரப்பளவில் மண்ணிட்டு பாறைகளின் மீது விவசாயம் செய்ய ஆரம்பித்தார். மழை காலங்களில் குவாரியில் தேங்கும் நீரை அப்படியே வீணாக்காமல் நெல் பயிருக்காக பயன்படுத்தி லாபமீட்டுகிறார்.

இயற்கை வழிமுறையில் விவசாயம் செய்வதால் நல்ல விலை கிடைப்பதாகவும், தனக்கு போக மீதம் இருக்கும் நெல்லை விற்பனை செய்வதாகவும் கூறுகிறார். தண்ணீர் வளமுள்ள இடங்களில் பணப்பயிர்களான ரப்பர் மற்றும் தென்னை வளர்ப்பை தவிர்த்து இயற்கை முறையில் நெற்பயிரை விளைவிக்க வேண்டும் என்பதே அவரது அன்பான கோரிக்கையாக முன்வைக்கிறார்.

என்னையும் படுக்கைக்கு அழைத்தனர்: பிரபல வாரிசு நடிகை புகார் !

0

என்னையும் படுக்கைக்கு அழைத்தனர்: பிரபல வாரிசு நடிகை புகார் !

பிரபல நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி திரையுலகில் நுழைந்த போது தனக்கும் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக சொல்லியுள்ளார்.

கடந்த 2012ஆம் ஆண்டு ‘போடா போடி’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி இந்த 8 ஆண்டுகளில் நடிகை வரலட்சுமி தாரை தப்பட்டை, சர்கார், சண்டக்கோழி, மாரி 2 உள்ளிட்ட 25 படங்களில் நடித்து முடித்துள்ளார். விரைவில் வெளிவரவுள்ள ‘வெல்வெட் நகரம்; திரைப்படம் தான் அவரது 25வது திரைப்படம். இது சம்மந்தமான விளம்பர நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டு வருகிறார்.

இந்நிலையில் அவர் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் ‘நான் சினிமா பிரபலத்தின் மகள் என தெரிந்தும் வாய்ப்புக்காக சில தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் படுக்கைக்கு அழைத்தனர். அட்ஜெஸ்ட் செய்யும்படி கேட்டார்கள். இது சம்மந்தமான ஆடியோ ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. பெண்கள் எல்லாம் முடிந்தபின் புகார் சொல்வது சரியாக இருக்காது. தங்களை தாங்கள்தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

என்னையும் படுக்கைக்கு அழைத்தனர்: பிரபல வாரிசு நடிகை புகார் !

இவரது இந்த பேட்டியை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த அவரது தந்தையின் மனைவி வரலட்சுமியைப் பாராட்டியுள்ளதோடு ‘உனக்க்கு இன்னும் சக்திகள் கிடைக்கட்டும்’ எனக் கூறியுள்ளார். வரலட்சுமி சரத்குமார் திரைப்படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல் தொலைக்காட்சிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் மி டூ மிகப்பெரிய இயக்கமாக உருவான போது இதை சொல்லாமல் இப்போது சொல்கிறாரே என கேள்வியும் எழுந்துள்ளது.

பேட்ஸ்மேன்கள் மேல் பழி சொல்ல விரும்பவில்லை: பூம்ரா பெருந்தன்மை !

0

பேட்ஸ்மேன்கள் மேல் பழி சொல்ல விரும்பவில்லை: பூம்ரா பெருந்தன்மை !

இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் மோசமாக விளையாடி வரும் நிலையில் அவர்களை குறை சொல்ல விரும்பவில்லை என பூம்ரா தெரிவித்துள்ளார்.

நியுசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 5 டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. அதன் பின் நடந்த ஒருநாள் தொடரை நியுசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியை நியுசிலாந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.

நியுசிலாந்து அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டி கிரைஸ்ட்சர்ச் மைதானத்தில் கடந்த 18 ஆம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியுசிலாந்து கேப்டன் வில்லியம்சன முதலில் இந்தியாவை பேட் செய்ய பணித்தார். இந்திய அணியின் பிருத்வி ஷா (54), புஜாரா(55) மற்றும் ஹனுமா விஹாரி (51) ஆகியோர் அரைசதத்தால் இந்தியா 242 ரன்கள் சேர்த்தது. இதன் பின்னர் நியுசிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 235 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் லாதம் 52 ரன்களும் ஜேமிசன் 49 ரன்களும் சேர்த்தனர். சிறப்பாக பந்து வீசிய ஷமி 4 விக்கெட்களும், பூம்ரா 3 விக்கெட்களும், ஜடேஜா 2 விக்கெட்களும் உமேஷ் யாதவ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன் மூலம் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 7 ரன்கள் முன்னிலைப் பெற்றது.

ஆனால் அதன் பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி பேட்ஸ்மேன்கள் பொறுப்பற்ற முறையில் விளையாடி விக்கெட்களைத் தாரை வார்த்தனர். மூன்றாம் நாள் ஆட்டமுடிவில் 90 ரன்களை சேர்த்து 6 விக்கெட்களை இழந்துள்ளனர். இதுகுறித்து பேசியுள்ள பூம்ரா ‘நாங்கள் எங்கள் பேட்ஸ்மேன்களின் பழி சுமத்த விரும்பவில்லை. இது எங்கள் அணியின் பழக்கம். சில நேரம் எங்களால் (பவுலர்களால்) விக்கெட் வீழ்த்த முடியாமல் போகும் போது அவர்களால் சுதந்திரமாக பேட் செய்ய முடியாது.  எங்களுடைய இரண்டு பேட்ஸ்மேன்கள் (விஹாரி, ரிஷப் பண்ட்) இன்னும் களத்தில் உள்ளனர். நாளை சிறப்பாக விளையாடி நல்ல நிலைக்கு திரும்ப முயற்சிப்போம். எதிர்பார்த்ததை விட அதிக விக்கெட்களை இழந்துவிட்டோம். இருந்தாலும் குறைகூறும் விளையாட்டை விளையாட விரும்பவில்லை’ எனக் கூறியுள்ளார்.

சூர்யா & ஹரி வீசும் ’அருவா’! மீண்டும் இணைந்த வெற்றிக் கூட்டணி !

0

சூர்யா & ஹரி வீசும் ’அருவா’! மீண்டும் இணைந்த வெற்றிக் கூட்டணி !

சூர்யாவின் 39 ஆவது படத்தை அவரின் ஆஸ்தான இயக்குனர் ஹரி இயக்க, ஆஸ்தான தயாரிப்பாளர் ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிக்க இருக்கிறார்.

சூர்யா கடைசியாக சிங்கம் 2 படத்தின் மூலம் வெற்றிக்கனியை ருசித்தார். அதன் பின் பல ஆண்டுகளாக அவரது படங்கள் சோபிக்காமல் உள்ளன. இந்நிலையில் எப்படியாவது வெற்றிப் படம் கொடுக்க வேண்டும் என்று சூரரைப் போற்று திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ஏப்ரல் மாதம் ரிலிஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சூர்யாவின் 39 ஆவது படத்தை இயக்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்தது.

இதற்காக அஜித்தை வைத்து வரிசையாக ஹிட் படங்களை இயக்கிய சிறுத்தை சிவா ஒப்பந்தமானார். ஆனால் அவர் ரஜினியின் அண்ணாத்த படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததால் சூர்யாவை டீலில் விட்டு சென்றார். இதனால் சூர்யாவின் படத்தை இயக்கப்போவது யார் என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் இப்போது சூர்யாவின் ஆஸ்தான இயக்குனரான ஹரி சூர்யா 39 படத்தை இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சூர்யா, ஹரி கூட்டணியில் ஆறு, வேல், சிங்கம்1, சிங்கம் 2, சிங்கம் 3 ஆகிய 5 படங்கள் வெளியாகியுள்ளன. இதில் சிங்கம் 3 ஐ தவிர மற்ற படங்கள் எல்லாம் வெற்றி படங்களாக அமைந்தன. இப்போது இருவருக்கும் ஒரு ஹிட் தேவைப்படும் நிலையில் அருவா எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் மூலம் இணைந்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பி  ஏப்ரல் மாதம் தொடங்கி தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ஸ்டுடியோ க்ரீன் சார்பில் ஞானவேல் தயாரிக்க, இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்க இருக்கிறார். 

திருநங்கைகளுக்கு வீடு கட்ட உதவிய அக்க்ஷய்குமார்! ராகவா லாரன்ஸிடம் 1.5 கோடி நிதியுதவி வழங்கினார்!

0

திருநங்கைகளுக்கு வீடு கட்ட உதவிய அக்க்ஷய்குமார்! ராகவா லாரன்ஸிடம் 1.5 கோடி நிதியுதவி வழங்கினார்!

இந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர் அக்‌ஷய்குமார் திருநங்கைகளுக்காக சொந்தமாக வீடுகளை கட்டித் தருவதற்கு 1.5 கோடி பணத்தை இயக்குனர் ராகவா லாரன்ஸ்சிடம் வழங்கினார்.

தமிழ் திரையுலகில் வித்தியாசமான டான்ஸ்களை அறிமுகப்படுத்தியவரும், காஞ்சனா, முனி போன்ற திகில் படங்களை இயக்கிய டைரக்கடர், நடிகர், தயாரிப்பாளர், சமூக சேவகர் போன்ற பன்முகமாக இருக்கும் ராகவா லாரன்ஸ்சிடம் திருநங்கைகளுக்கு வீடு கட்டுவதற்காக ஒன்றரை கோடி பணத்தை பாலிவுட் நடிகர் அக்க்ஷய்குமார் வழங்கியுள்ளார்.

பல்வேறு குழந்தைகள், முதியோர்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் பல்வேறு வகையில் ராகவா லாரன்ஸ் தனது டிரஸ்ட் மூலம் சமூக சேவைகளை செய்து வருகிறார். குறிப்பாக இதய அறுவை சிகிச்சை போன்ற மருத்துவ உதவிகளை நேரடியாக பண உதவிகளை செய்து பலரது உயிரை காப்பாற்றியுள்ளார். இவரது சேவையில் அடுத்தகட்டமாக திருநங்கைகளுக்கு வீடுகட்ட நிதியுதவி பெற்றுள்ளார்.

தன்னுடையே டிரஸ்ட்டின் 15 வது தொடக்க ஆண்டினை முன்னிட்டு ஆதரவற்ற திருநங்கைகளுக்கான வீடுகட்ட தொடங்கவுள்ளார். சமுதாயத்தில் பலரால் புறக்கணிக்கப்படும் திருநங்கைகளின் வாழ்க்கையிலும், மனதிலும் ராகவா லாரன்ஸ் தனி இடம் பிடித்துவிட்டார்.