Home Blog Page 5730

அன்புமணி ராமதாஸ் தான் தமிழக முதல்வர்! வெளியான அதிரடி அறிவிப்பு

0

அன்புமணி ராமதாஸ் தான் தமிழக முதல்வர்! வெளியான அதிரடி அறிவிப்பு

இன்று பாமக சார்பாக மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களை சந்தித்தார். இந்நிலையில் முன்னால் பாமக நிர்வாகியும் தற்போது தினகரன் அணியில் இருப்பவருமான பொங்கலூர் மணிகண்டன் அன்புமணி ராமதாஸ் முதல்வராக வர வேண்டும் என தன்னுடைய ஆதரவை தெரிவித்துள்ளார். ஏற்கனவே அன்புமணி ராமதாஸ் மாவட்ட வரியாக இளைஞர்கள் அனைவரையும் சந்தித்து வரும் நிலையில் இவருடைய இந்த கருத்து தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பொங்கலூர் மணிகண்டன் அவர்கள் சமூக வலைத்தளமான முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது.

முதல்வர் அன்புமணியை எல்லோரும் சந்தித்தார்கள் என்ற செய்தி வர வேண்டும் என்று பாமகவில் இல்லாத எனக்கும் அந்த ஆசை உண்டு. தமிழகத்தில் ஏதாவது அரசியல் மாற்றம் நிகழ்ந்தோ,மகாராஷ்டிரா -கர்நாடகாவைப் போன்று அரசியல் மாற்றம் உருவாகியோ கூட்டணி மந்திரி சபை அமைந்தோ அன்புமணி ராமதாஸ் அவர்கள் முதல்வராக வந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.

பூரண மதுவிலக்கு,விவசாயத்துக்கு முன்னுரிமை,நீர் மேலாண்மை,
வேலைவாய்ப்பு,இயற்கை விவசாயம்,நிலங்கள் பாதிப்பில்லா தொழில்வளர்ச்சி,சமூக நீதி,எளிய மக்களின் வாழ்க்கை மேம்பாடு இன்னும் தமிழகத்துக்கான விடிவு காலத்திட்டங்களை நிறைவேற்ற பாமக தலைமையில் அன்புமணி முதல்வரானால் மட்டுமே நடக்கும்.எனவே தான் படித்தவர் என்பதாலோ,நான் அந்தக் கட்சியில் இருந்தவன் என்பதாலோ அன்புமணி மீது அக்கறை கொண்டு இதை சொல்லவில்லை.

அன்புமணி ராமதாஸ் தான் தமிழக முதல்வர்! வெளியான அதிரடி அறிவிப்பு

தமிழகம் எப்படி இருக்க வேண்டும் என்ற கற்பனை செய்து வைத்து கனவு கொண்டு தமிழகத்தை தலை சிறந்த மாநிலமாக மாற்ற வேண்டும் என்று துடிப்பவர், துணிவானவர், எல்லா சமுதாயங்களையும் நேசிப்பவர். நிர்வாகத் திறமை-சாதாரண மக்களின் கஷ்டங்களை புரிந்து கொண்டவர் ஆளுமை திறனுடையவர்.

அரசுத்துறை அதிகாரிகள்,ஆட்சிப்பணி,காவல் பணி அதிகாரிகளை
மிக சரியாக மக்களின் உணர்வுகளை புரிந்து நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட வைக்கும் ஆற்றலுடையவர் அன்புமணி என்பதை உணர்ந்தவன் என்ற முறையில் சொல்கிறேன். மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் தமிழகத்தின் முதல்வராக வரவேண்டும் என்றே கொங்கு மண்டலத்தை சேர்ந்த ஒருவர் முதல்வராக இருக்கும் போதும் பாமகவில் இணைந்தேன்.

ஆனால் நாங்கள் அன்புமணி முதல்வராக வேண்டும் என்று விரும்பிய போது இவர்கள் எடப்பாடியை முதல்வராக்க சென்று விட்டார்களே என்ற கோபம் அப்போது இருந்தது.ஆனால் இன்று சிந்திக்கிற போது தமிழகத்தின் மிகப் பெரிய தீமை திமுகவை ஆட்சிக்கு வர முடியாமல் செய்து விட்டார்கள் என்பதில் மகிழ்ச்சியும் உண்டு.

என்னை பொறுத்தவரை ”கூட்டணி அமைத்தது” என்ன சூழ்நிலையாக இருந்தாலும் அன்புமணி முதல்வராகும் வாய்ப்பை உருவாக்கினால் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வேன். பாமகவில் இருந்த போது எனது சொந்த செலவில் தான் கட்சிப்பணியை செய்தேன்.அங்கே மட்டுமல்ல எங்கேயும் எப்போதும் யாரிடமும் ஒரு பைசா பெற்றதுமில்லை.

மற்றவர்கள் என்னை பற்றி என்ன சொன்னாலும் எனக்கு கவலை இல்லை.நான் பாமகவில் இருந்த போது கட்சி வளர வேண்டும் என்பதை தவிர வேறு நோக்கமே இல்லாமல் தான் உண்மையாகவும் நேர்மையாகவும் பணியாற்றி இருக்கிறேன். மருத்துவர் அய்யா அவர்களுக்கும் மிக நன்றாக தெரியும்.

பொதுவாழ்வில் அரசியலில் எப்படி இருந்தாலும் தனிப்பட்ட முறையில் யாரையும் அவமதித்துப் பேசியதே இல்லை.கொள்கை அளவிலேயே விமர்சனம் செய்ததுண்டு.உண்மையில் வன்னிய சகோதரர்கள் என்னை தங்கள் குடும்பத்தில் ஒருவராக கருதியே என்னிடம் பழகினார்கள்.பாசம் வைத்து அன்பு செலுத்தினார்கள் என்பதை நான் எப்போதும் மறைத்து பேசியதே இல்லை.ஓரிரண்டு கசப்பான அனுபவங்கள் இருந்தாலும் நான் அவர்களோடு பணியாற்றிய காலங்கள் என் வாழ்வில் மறக்கவே முடியாதவைகள் தான்.

அய்யாவும் என் மீது அளவு கடந்த அன்பை அரசியல் கடந்து வைத்து இருந்தார்கள் என்பதும் மறக்கவே முடியாதவை.பாமகவில் நான் இப்போது இல்லை என்றாலும் அது தான் எனது தாய் இயக்கம் என்பது எப்போது மாறாது. அந்த அளவில் தான் எனக்கு மருத்துவர் அய்யா அவர்கள் மீதுள்ள அன்பில் ”தமிழகத்தில் ஒரு மாற்றம் வர வேண்டும் ” சமூக நீதியின் அடிப்படையில் ஒரு பெரிய சமுதாயம்,முதன்மையான சமுதாயம் வன்னியர் சமுதாயம் முதல்வர் பொறுப்பில் அமரவேண்டும் என்றே பொதுக்கூட்ட மேடைகளில் பேசியவன் நான்.

அப்படி வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களே அதற்குப் பொருத்தமானவர் என்று நான் முன்னர் பேசிய கருத்தை இப்போதும் எப்போதும் ஆதரிக்கிறேன்.ஏற்கிறேன். காலம் தான் அதை தீர்மானிக்க வேண்டும்.எல்லாமே காலத்தின் கையிலேயே இருக்கிறது என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் தெரிந்தால் போதும் மாதம் எழுபதாயிரம் சம்பாதிக்கலாம்? வேலைவாய்ப்பை உருவாக்கும் பாடலாசிரியர்..!!

0

தமிழ் தெரிந்தால் போதும் மாதம் 70 ஆயிரம் சம்பாதிக்கலாம்? வேலைவாய்ப்பை உருவாக்கும் பாடலாசிரியர்..!!

தமிழ் மொழியை நன்கு தெரிந்தவர்களுக்கு மாதம் எழுபதாயிரம் சம்பளம் வாங்கும் அளவிற்கு வேலைவாய்ப்பை உண்டாக்கி தருவதாக பிரபல திரைப்பட பாடலாசிரியர் மதன் கார்க்கி தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளமான முகநூல், அமேசான், கூகுள் உள்ளிட்ட உலகளாவிய இணைய நிறுவனங்களுக்கு, தமிழில் தகவல்களை உருவாக்கக் கூடிய வேலைப்பாடுகளுக்கு முன்னுரிமை தரும் வகையில் ஆட்களை சேர்த்து வருவதாக கூறியுள்ளார்.

பிரம்மாண்டமான முறையில் இயக்கி வசூலை குவித்த பாகுபலி படத்தில் காளகேயர்கள் பேசும் கிளிக்கி மொழியை முதல் முதலாக மதன் அறிமுகப்படுத்தினார். அந்த வித்தியாசமான மொழியினை தாய்மொழி தினத்தன்று இயக்குனர் ராஜமெளலி வெளியிட்டிருந்தார். இந்த கிளிக்கி மொழியின் வடிவமைத்த எழுத்து மற்றும் எண்களை கற்றுக்கொள்ள புதிய ஆராய்ச்சி நிறுவனத்தையும் தொடங்கியுள்ளார்.

இந்த மொழியை கற்பதற்கு மிகவும் எளிதாகவும் விரைவில் கற்க முடியும் என்று வெளியீட்டின் போது கூறப்பட்டது.
தமிழ் திரைப்பட பாடலாசிரியர்களில் அதிக விருதுகளை குவித்த கவிஞர் வைரமுத்து அவர்களின் மகன்தான் மதன் கார்க்கி என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினி? விஜய்? யார் பக்கம் சாய்வார் லோகேஷ் கனகராஜ் !

0

ரஜினி? விஜய்? யார் பக்கம் சாய்வார் லோகேஷ் கனகராஜ் !

லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக விஜய் அல்லது ரஜினி இருவரில் யாரை இயக்குவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

மாநகரம் படத்தின் வெற்றியை அடுத்து கார்த்தி நடித்த கைதி படத்தை இயக்கினார் லோகேஷ் கனகராஜ். அந்த படத்தின் இமாலய வெற்றி உச்ச நட்சத்திரங்களின் பார்வையை லோகேஷ் மேல் பட வைத்தது. இதையடுத்து விஜய்க்கு அவர் சொன்ன கதை பிடித்து போக மாஸ்டர் திரைப்படம் உருவானது. சமீப காலங்களில் விஜய் நடித்து குறைந்த காலத்தில் உருவான திரைப்படம் மற்றும் கம்மியான செலவில் எடுக்கப்பட்ட திரைப்படம் என்ற பெருமையை மாஸ்டர் பெற்றுள்ளது.  இந்த படம் ஏப்ரல் மாதத்தில் வெளியாக உள்ள நிலையில் லோகேஷ் அடுத்து யாரை இயக்க போகிறார் என்பதே இப்போதைய மில்லியன் டாலர் கேள்வி.  ஏனென்றால் ரஜினி, விஜய் ஆகிய இரு சூப்பர் ஸ்டார் நடிகர்களும் அவர் இயக்கத்தில் நடிக்க விரும்புகின்றனர்.

ரஜினி? விஜய்? யார் பக்கம் சாய்வார் லோகேஷ் கனகராஜ் !

கைதி படத்தின் வெற்றியைப் பார்த்த கமல், லோகேஷிடம் கதை கேட்க ரஜினிக்காக தயார் செய்து வைத்திருந்த ஒரு கதையை சொன்னார் லோகேஷ். அதை கமல் தயாரிப்பில் ரஜினி நடிப்பதாக முடிவாயிற்று. ஆனால் ரஜினி சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் இப்போது முடக்கப்பட்டுள்ளார். அதை முடித்துவிட்டு வர எப்படியும் இந்த ஆண்டு இறுதியாகிவிடும் என சொல்லப்படுகிறது.

ரஜினி? விஜய்? யார் பக்கம் சாய்வார் லோகேஷ் கனகராஜ் !

இதற்கிடையில் தனது 65 ஆவது படத்தையும் லோகேஷையே இயக்க சொல்லி விஜய் கேட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஒரு வேளை ரஜினி படம் திட்டமிட்டப்படி தொடங்கவில்லை என்றால் நாம் சீக்கிரமாக ஒரு படம் பண்ணலாம் என அவர் லோகேஷிடம் சொல்லியுள்ளாராம். ஒருவேளை ரஜினி படம் தொடங்கப்பட்டு விட்டால் சுதா கொங்கராவின் கதையில் நடிக்கலாம் என்றிருக்கிறாராம். அதனால் அடுத்து ரஜினியா? விஜய்யா? என்பது லோகேஷ் எடுக்க வேண்டிய முடிவு.

மகளுடன் ஷாலினி அஜித் பார்த்த திரைப்படம்: வைரலாகும் புகைப்படம்

0

நேற்று வெளியான திரௌபதி திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்று திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஷாலினி அஜீத்தின் சகோதரர் ரிச்சர்ட்ஸ் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். ரூபாய் 90 லட்சத்தில் தயாரான இந்த திரைப்படம் முதல் நாளே ரூபாய் 2 கோடி தமிழகம் முழுதும் வசூல் செய்துள்ளதாகவும் இன்னும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருப்பதால் ஒரே வாரத்தில் ரூபாய் 5 கோடி வரை வசூலிக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் இன்று சென்னை ரோகினி திரையரங்கில் தல அஜித்தின் மனைவி ஷாலினி அஜித், தனது மகள் அனுஷ்காவுடன் இந்த படத்தை பார்க்க வந்துள்ளார். அவரை வரவேற்ற திரையரங்கு உரிமையாளர் அவரை புகைப்படம் எடுத்து தனது டுவிட்டரில் போட்டு அசத்தியுள்ளார்

தல அஜித்தின் மனைவி ஷாலினி அஜித் தங்கள் தியேட்டருக்கு வந்து படம் பார்த்தது தங்களுக்கு பெருமையாக இருப்பதாகவும் அவர் அந்த டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். ஷாலினி அஜித் தனது சகோதரர் நடிப்பை பார்த்து ரசித்ததாகவும், இந்த படம் தன்னை மிகவும் கவர்ந்ததாகவும் படம் முடிந்து வெளியே வந்தபோது பேட்டி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

சூப்பர் ஸ்டார் நடிகருக்கு கொரோனா பாதிப்பா? ரசிகர்கள் அதிர்ச்சி !

0

சூப்பர் ஸ்டார் நடிகருக்கு கொரோனா பாதிப்பா? ரசிகர்கள் அதிர்ச்சி !

பிரபல சூப்பர் ஸ்டார் நடிகர் ஜாக்கி சானுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பரவிய செய்தியால் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல்வேறு நாடுகள் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சீனாவுடனான தொடர்பைத் துண்டித்து வருகின்றன. இதுவரை சீனாவில் சுமார் 2000 பேரருக்கும் மேல் இந்த வைரஸ் தாக்குதலால் இறந்துள்ளனர். 80000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப் பட்டுள்ளனர். இதனால் சீனாவின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்றுதான் இந்த வைரஸ் மூலம் நடக்கும் தாக்குதலுக்கு கோவிட்-19 எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆசியாவின் சூப்பர் ஸ்டார் நடிகரான ஜாக்கி சானுக்கு கோவிட் 19 பாதிப்பு இருப்பதாக செய்திகள் வெளியானதால் பரபரப்பு உருவானது. மேலும் அவர் தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாகவும் சொல்லப்பட்டது. இது உலகெங்கும் உள்ள அவர் ரசிகர்களுக்குள் அதிர்ச்சியை ஏற்படுத்த இந்த தகவல் பொய்யானது என இப்போது தெரியவந்துள்ளது.

சூப்பர் ஸ்டார் நடிகருக்கு கொரோனா பாதிப்பா? ரசிகர்கள் அதிர்ச்சி !

தனது டிவிட்டர் பக்கத்தில் இதுபற்றி தெரிவித்த ஜாக்கி சான் ‘அனைவரின் அன்புக்கும் நன்றி. நான் நலமாகவும் பத்திரமாகவும் இருக்கிறேன்.அதுபோல தனிமை படுத்தப்படவில்லை. எல்லோரும் நலமாகவும் பாதுகாப்பாகவும் வாழ ஆசைப்படுகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

வக்கீல்சாப் ஆன நேர்கொண்ட பார்வை: வியக்க வைக்கும் பவன் கல்யாண் சம்பவம் !

0

வக்கீல்சாப் ஆன நேர்கொண்ட பார்வை: வியக்க வைக்கும் பவன் கல்யாண் சம்பவம் !

தெலுங்கில் ரீமேக் ஆக இருக்கும் நேர்கொண்ட பார்வை படத்தின் தலைப்பு வக்கீல் சாப் என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

அமிதாப் பச்சன் மற்றும் டாப்சி நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பிங்க். அந்த திரைப்படம் பெண்ணிய கருத்துகளை ஆணி அடித்தாற்போல சொல்லிய நிலையில் அதை தமிழில் ரீமெக் செய்ய விரும்பினார் அஜித். இதையடுத்து ஹெச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிக்க நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் அந்த படம் வெளியானது.

அஜித்துடன் ஸ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியானது. மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் பெண்கள் கூட்டம் அஜித் படத்துக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு அதிகளவில் குவிந்தது.  இந்த படத்தின் வெற்றியால் தெலுங்கு சினிமா தயாரிப்பாளர்கள் இந்த படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய ஆசைப்பட்டனர். மேலும் அரசியலுக்காக சில ஆண்டுகளாக சினிமாக்களில் நடிக்காமல் இருந்த பவன் கல்யாணை அந்த படத்தில் நடிக்க வைக்க முயற்சி செய்தனர்.

நீண்ட வற்புறுத்தலுக்குப் பிறகு தனது அரசியல் இமேஜுக்கு உதவும் என்பதால் இந்த படத்தில் நடிக்க சம்மதித்தார் பவன். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் நடந்து வருவதாக சொல்லப்படும் நிலையில் படத்திற்கு ‘வக்கீல் சாப்’ எனப் பெயர் வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்துக்காக பவன் கல்யாணுக்கு 50 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டது தெலுங்கு சினிமா உலகை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

திரௌபதி படத்தை பார்க்க ஆவலுடன் காத்திருக்கும் பாலிவுட் பிரபலம் : இன்ப அதிர்ச்சியில் படக்குழுவினர்

0

கடந்த ஒன்றரை மாதங்களுக்கு மேலாக திரௌபதி பட டீசர் வெளியான நாளில் இருந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இது திரைத்துறையில் இருந்து அரசியல் தலைவர்கள் வரை அனைவரையும் உற்று பார்க்க வைத்துள்ளது.

அதன் பிறகு பல்வேறு பரபரப்பான நிகழ்வுகளை கடந்து தணிக்கை முடிந்து ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. அதிலும் சர்ச்சை இல்லாமல் இல்லை, இரண்டு முறை தணிக்கை செய்யப்பட்ட பிறகே ரிலீஸ் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று ரிலீஸ் ஆன திரௌபதி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வெற்றியால் படக்குழுவினர் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்துள்ளனர்.

இந்த மகிழ்ச்சியான தருணத்தில் படக்குழுவினரை மேலும் குஷிப்படுத்தும் விதமாக ஒரு தகவல் கிடைத்துள்ளது. பாலிவுட் பிரபலமான விவேக் ஓபராய் பார்க்க ஆவலாய் உள்ளார் என்பதே அந்த தகவல்.

தமிழ் சினிமா வினியோகஸ்தர் கோபி என்பவர் விவேக் ஓபராய் பார்க்க ஆவலுடன் இருப்பதாக தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த செய்தி திரௌபதி படக்குழு மற்றும் அதன் ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது.

பேட்டிங் மோசம்:பவுலிங் படுமோசம் !முதல் நாளில் முழுதாக ஆதிக்கம் செலித்திய கிவிஸ்

0

பேட்டிங் மோசம்:பவுலிங் படுமோசம் !முதல் நாளில் முழுதாக ஆதிக்கம் செலித்திய கிவிஸ்

கிறைஸ்ட்சர்ச்சில் நடக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியுசிலாந்து அணி முதல் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் சேர்த்துள்ளது.

நியுசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 5 டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. அதன் பின் நடந்த ஒருநாள் தொடரை நியுசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியை நியுசிலாந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.

பேட்டிங் மோசம்:பவுலிங் படுமோசம் !முதல் நாளில் முழுதாக ஆதிக்கம் செலித்திய கிவிஸ்

இதையடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டி கிரைஸ்ட்சர்ச் மைதானத்தில் இன்று காலை தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியுசிலாந்து கேப்டன் வில்லியம்சன முதலில் இந்தியாவை பேட் செய்ய பணித்தார். இந்திய அணியின் இளம் தொடக்க ஜோடியான பிருத் வி ஷா மற்றும் மயங்க் அகர்வால் ஆகிய இருவரும்  இறங்கினர். மயங்க் அகர்வால், கோலி, ரஹானே ஆகியோர் மோசமான ஷாட்கள் விளையாடி அவ்ட் ஆகி ஏமாற்றம் அளிக்க பிருத்வி ஷா (54), புஜாரா(55) மற்றும் ஹனுமா விஹாரி (51) ஆகியோர் அரைசதம் அடித்தனர்.

ஆனால் பின் வரிசையில் வந்த பண்ட் மற்றும் ஜடேஜா ஆகியோர் வந்த வேகத்தில் சென்றனர். கடைசி நேரத்தில் பூம்ரா மற்றும் ஷமி ஆகியோர் அதிரடியாக விளையாடி 10 மற்றும் 16 ரன்கள் சேர்த்ததால் இந்தியா ஓரளவு கௌரவமான ஸ்கோரான 242 ரன்கள் சேர்த்தது. ஒரு கட்டத்தில் நல்ல நிலையில் இருந்த இந்தியாவை நியுசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜேமிஸன் 5 தகர்த்தார். அவர் வரிசையாக ஹனுமா விஹாரி, புஜாரா, பண்ட், ஜடேஜா ஆகியோர்களின் விக்கெட்களை வீழ்த்தி அசத்த்னார். மேலும்  சவுத்தி மற்றும் போல்ட் தலா 2 விக்கெட்களையும் வேக்னர் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

பேட்டிங் மோசம்:பவுலிங் படுமோசம் !முதல் நாளில் முழுதாக ஆதிக்கம் செலித்திய கிவிஸ்

இதையடுத்து நியுசிலாந்து அணி தற்போது தங்கள் முதல் இன்னிங்ஸை ஆரம்பித்து விளையாடியது. பேட்டிங்கில் சொதப்பியது போல இந்திய அணி பவுலீங்கிலும் விக்கெட் எடுக்க முடியாமல் தடுமாறியது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பூம்ரா, ஷமி மற்றும் ஜடேஜா என யாராலும் விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை. கிட்டத்தட்ட 23 ஓவர்கள் ஆடிய நியுசிலாந்து அணி ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் சேர்த்தது. டாம் லாதம் 27 ரன்களுடனும் பிளண்டல் 29 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.

மீண்டும் பிரதமர் பதவிக்கு காய் நகர்த்தும் மகாதீர் மொஹம்மத்

0

மலேசிய பிரதமர் மலேசிய பிரதமர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட்டணியில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக பதவி விலகிய நிலையில் தற்போது அவர் மீண்டும் பிரதமர் பதவியேற்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

கூட்டணி கட்சியினர் திடீரென காலை வாரி விட்டதால் மலேசிய பிரதமர் மகாதீர் மொஹம்மத் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் தற்போது மற்ற அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் ஒரு முக்கிய கட்சி தான் பிரதமர் அவருக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் மகாதீர் மொஹம்மத் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இதனையடுத்து மீண்டும் தனது தலைமையிலான அரசை மலேசியாவில் அமைக்க முயற்சித்து வருவதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் மகாதீர் மொஹம்மத் கூறியுள்ளார்

கடந்த 2018 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று உலகின் மிக அதிக வயதான பிரதமர் என்ற பெருமையோடு பதவியேற்ற மகாதீர் மொஹம்மத், இரண்டு ஆண்டுகளில் பதவி விலகியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், அவர் விரைவில் மீண்டும் பிரதமர் பதவி ஏற்பார் என்ற செய்தி அந்நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக் கட்டிய கொலைகார மனைவி! அம்மிக் கல்லால் ஆயுளை முடித்த கொடூரம்..!!

0

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக் கட்டிய கொலைகார மனைவி! அம்மிக் கல்லால் ஆயுளை முடித்த கொடூரம்..!!

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளியை கள்ளக்காதலனுடன் சேர்ந்து அம்மிக்கல்லை போட்டு கொன்ற கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

கரும்பு வெட்டும் கூலித் தொழிலாளியான படவெட்டிக்கு நளா என்கிற மனைவியும், இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். நேற்று முன்தினம் தனது கணவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல் நிலையத்திற்கு நளா அதிர்ச்சியுடனர புகார் கூறியுள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், கொலைப்பற்றிய பிண்ணனியை தொழிலாளி படவெட்டி குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். கணவர் குடித்துவிட்டு இரவில் சண்டைபோட்டதாக நளா கூறினார்.

மது போதையில் மகளிடமே தவறாக நடக்க முயன்றதாகவும், அதனால் தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காக மகளே அம்மிக்கல்லை தூக்கி தந்தையின் தலையில் போட்டதாகவும் வாக்குமூலம் தெரிவித்தனர். இரவு 11 மணிக்கு நடந்த சம்பவத்தை தடுக்காமல் இருந்துவிட்டு காலையில் புகார் தெரிவித்த காரணத்தால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. பின்னர் இந்த சம்பவம் குறித்து உறவினர்களிடம் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சியான தகவல்கள் வெளியானது.

படவெட்டி கரும்பு வேலைக்காக வெளியூர் செல்லும்போதெல்லாம், நளா தனது அக்கா மருமகனான ரங்கசாமியுடன் கள்ள உறவில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனை அறிந்த படவெட்டி கோபத்துடன் மனைவியை கண்டித்துள்ளார். இருவருக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்படவே தாயார் வீட்டிற்கு நளா சென்று அங்கேயே கூலி வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். மாமியார் வீட்டிற்கும் சென்றும் பனவெட்டி பிரச்சினை செய்துள்ளார்.

இந்நிலையில் தனது கள்ளக்காதலுக்கு தடையாக இருக்கும் கணவரை தீர்த்துக்கட்ட தனது மகளை பகடை காயாக பயன்படுத்தியது முழு விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல் துறையினர் நளா மற்றும் அவரது கள்ளக்காதலரான ரங்கசாமி இருவரையும் கைது செய்தனர். தவறான உறவிற்காக தாலி கட்டிய கணவனையே தீர்த்துக்கட்டிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.