Home Blog Page 5734

பணியின் போது அடையாள அட்டையை கட்டாயம் அணிய வேண்டும்! தமிழக அரசு அதிரடி உத்தரவு!!

0

பணியின் போது அடையாள அட்டையை கட்டாயம் அணிய வேண்டும்! தமிழக அரசு அதிரடி உத்தரவு!!

தமிழக அரசுப் பணியாளர்கள் அனைவரும் அலுவலக வேலையின் போது அரசு வழங்கிய புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை அணிய வேண்டும் என்று உத்தரவு போடப்பட்டுள்ளது.

அரசு அலுவலகங்களில் பலர் வேலைக்கான அடையாள அட்டையை அணிவதில்லை என்று பல்வேறு புகார்கள் குவிந்த காரணத்தால், அரசு பணியாளர் நலன் மற்றும் சீர்திருத்தத்துறையின் மூலம் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

வேலை நேரத்தின் போது ஒவ்வொரு அரசு ஊழியரும் கட்டாயம் அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் அரசு ஊழியர்கள் அடையாள அட்டை அணிகிறார்களா இல்லையா என்பதை அந்தந்த துறை தலைவர்களும், மாவட்ட ஆட்சியர்களும் கண்காணிக்க வேண்டும்.

உத்தரவை பின்பற்றாமல் அடையாள அணியாமல் பணியாற்றினால், துறை ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பிரசாந்த் கிஷோர் மீது திருட்டு வழக்கு: திமுக அதிர்ச்சி

0

வரும் 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்காக பணிபுரியவுள்ள பிரசாந்த் கிஷோர், திடீரென திருட்டு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

பீகார் மாநிலத்தை சேர்ந்த கவுதம் என்பவர், காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில், தனது அரசியல் வியூகமான ‘பீகார் கி பாட்’ என்ற கருத்தை பிரசாந்த் கிஷோர் திருடி, ‘பாட் பீகார் கி’ என மாற்றியதாக கூறியுள்ளார். தன்னிடம் பணிபுரிந்த ஒருவரிடம் இருந்து அவர் இந்த ஐடியாவை பெற்றதாகவும், இதனால் பிரசாந்த் கிஷோர் மீது 420, 406 ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது

இந்த புகாரின் அடிப்படையில் பிரசாந்த் கிஷோர் மீது பீகார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். சமீபத்தில் நிதிஷ்குமாரின் கட்சியில் இருந்து விலகிய பிரசாந்த் கிஷோர், பீகார் இளைஞர்களை ஒன்றிணைக்கு வகையில் ‘பாட் பீகார் கி’ என்ற பிரச்சாரத்தை தொடங்கினார். அதுதான் தற்போது பிரச்சனைக்குரியதாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கருத்து திருட்டு வழக்கில் பிரசாந்த் கிஷோர் சிக்கியதால் திமுக அதிர்ச்சி அடைந்துள்ளது

எனது வழிகாட்டி நித்யானயானந்தா – சீமானின் பரபரப்பு பேச்சு.

0

எனது வழிகாட்டி நித்யானயானந்தா – சீமானின் பரபரப்பு பேச்சு.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது கட்சி நிர்வாகிகளிடையே இன்று உரையாற்றினார்.

அதில் அவர் கூறியதாவது:
நித்தியானந்தா தான் நமது வழிகாட்டி,ஒரு தீவின் விலை 200 கோடி தான்.இப்படியே நாம ஆட்சிக்கே வர முடியாத சூழ்நிலையே நீடித்தால் நித்தியானந்தா போல நாமும் ஒரு பத்து பதினைந்து தீவு வாங்கி தூய தமிழ் மட்டுமே பேசும் மக்களை அங்கு குடிவைக்கலாம் என்ற திட்டம் உள்ளதாக தெரிவித்தார்.

ரஜினிகாந்த் நடித்த சிவாஜி படத்தில் வருவது போல கொள்ளையடித்து வைத்துள்ள அரசியல்வாதிகளை ஆபீஸ் ரூமுக்குள் அழைத்துச் சென்று அவர்களிடத்தில் உள்ள பணத்தை எடுத்து தீவு வாங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் ரஜினிகாந்த் குறித்து தவறான முறையில் சமூக வலையதளங்களில் பதிய வேண்டாம் எனவும் தம்பிகளுக்கு அறிவுரை கூறினார்.ரஜினிகாந்த் கர்நாடக்த்திலோ மராட்டியத்திலோ சென்று கட்சி ஆராம்பித்தால் என்னை விட யாராலும் அவரை பாராட்ட முடியாது.ஏனெனில் அது அவரது மண் அந்த மண்ணை ஆள்வதற்க்கு அவருக்கு உரிமை உள்ளது.எங்கள் மண்ணை ஆளும் ஆசையை விட்டுவிடுங்கள் என்றும் எச்சரித்தார்.

மேலும் தனது திருமணத்திற்கு தமிழ்குமரன் மூலம் ரஜினிகாந்துக்கு அழைப்பிதழ் அளித்தேன்.அதற்கு அவர் தனது கைப்பட எழுதி வாழ்த்து மடல் அனுப்பியதாகவும் அந்த கடிதம் இன்றுவரை தன்னிடம் உள்ளதாகவும் தெரிவித்தார்.

தமிழையும் ஆங்கிலத்தையும் கலந்து பேசுபவர்களுக்கு சரியான தண்டனை தன்னுடைய ஆட்சியில் அளிக்கப்படும் என்றும் எச்சரித்தார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கினைப்பாளர் சீமான்.

சர்ச்சைக்கு பெயர் பெற்ற நித்தியானந்தா சாமியார் பெண்களுடன் தவறான தொடர்பை வைத்திருந்தார் என்று குற்றம் சாட்டப்பட்டவர்.அதேபோல சீமானின் மீதும் சமீபத்தில் விஜயலட்சுமி என்ற பெண்ணும் வீடியோ ஆதாரத்துடன் குற்றம் சாட்டியிருந்தார்.இந்த நிலையில் சீமானின் இந்த பேச்சு சமூக வலையதளங்களில் நெட்டசன்களால் கிண்டலடிக்கப்பட்டு வருகிறது

அரசு ஊழியர்களுக்கும் இனி அடையாள அட்டை: தமிழக அரசு உத்தரவு

0

தனியார் ஊழியர்கள் கழுத்தில் அடையாள அட்டையை அணிவது போன்று அரசு ஊழியர்களும் தங்கள் பணி நேரத்தில் அரசு வழங்கியுள்ள அடையாள அட்டைகளை அணிய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

அரசு ஊழியர்களுக்கு ஏற்கனவே அடையாள அட்டை கொடுக்கப்பட்ட போதிலும் யாரும் அதனை அணிவதில்லை என்று புகார் கூறப்பட்டது. இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2018ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பில், அரசு ஊழியர்கள் அனைவரும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை கட்டாயம் அணிய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. ஆனாலும் அரசு ஊழியர்கள் தாங்கள் பணிபுரியும் நேரத்தில் அடையாள அட்டைகளை அணிவதில்லை என்று புகார்கள் கூறப்பட்டது

இந்த நிலையில் தமிழக அரசு செயலாளர் சுவர்ணா இன்று வெளியிட்டுள்ள ஒரு சுற்றறிக்கையில் ‘அரசு ஊழியர்கள் அனைவரும் அடையாள அட்டை அணிவது கட்டாயம் என்றும், பணி நேரத்தில் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அணியாதவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து நாளை முதல் தனியார் ஊழியர்கள் போல் அரசு ஊழியர்களும் அடையாள அட்டையை அணிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ஸ்கை டைவிங் செய்தபோது விபரீதம்: திருமண நாளில் பலியான சோகம்

0

பிரிட்டனில் 55 நபர் ஒருவர் தனது திருமண நாளில் மனைவியை மகிழ்விக்க பாராசூட்டில் இருந்து குதித்தபோது எதிர்பாராமல் ஏற்பட்ட விபத்தால் மரணம் அடைந்தார்.

பிரிட்டனை சேர்ந்த 55 வயது நபர் கிறிஸ்டோபர் ஸ்வால்ஸ். இவர் தனது 30வது திருமணநாளை மனைவியுடன் கொண்டாட அங்கிருந்த சுற்றுலா தலம் ஒன்றுக்கு சென்றார். மனைவியை மகிழ்விக்க எண்ணி பாராசூட்டில் இருந்து உயரமான இடத்தில் இருந்து குதித்தார். ஆனால் திடீரென பாராசூட் ஓட்டையாகியதால் அவர் கீழே விழுந்தார்.

முதலில் அவருக்கு கால் எலும்பு முறிந்து மயக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதனையடுத்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் மருத்துவமனையில் சிகிச்சையின் பலனின்றி மரணம் அடைந்தார். திருமண நாளில் கிறிஸ்டோபர் மரணம் அடைந்தது அவரது மனைவியை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

மலிவான அரசியல் செய்ய வேண்டாம்:ரஜினிக்கு தமிழக பாஜக அறிவுரை!

0

மலிவான அரசியல் செய்ய வேண்டாம்:ரஜினிக்கு தமிழக பாஜக அறிவுரை!

ரஜினி நேற்று பாஜகவை பற்றி பேசியுள்ள கருத்துகள் சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில் அவருக்கு தமிழக பாஜக சார்பில் பொருளாளர் ஆர் எஸ் சேகர் பதிலளித்துள்ளார்.

டெல்லியில் கடந்த 3 நாட்களாக நடந்துவரும் கலவரத்தில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கலவரத்தை அடக்காமல் விட்டது தொடர்பாக டெல்லி போலிஸார், மாநில அரசு மற்றும் மத்திய அரசு மீது கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் டெல்லி விவகாரம் தமிழகத்திலும் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

டெல்லி கலவரம் தொடர்பாக நேற்று பத்திரிக்கையாளர்களை தனது வீட்டில் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் ’கலவரத்தை முன் கூட்டியே தெரிந்து கொண்டு அடக்காதது உளவுத்துறையின் தோல்வி. மத்திய அரசு சரியான நேரத்தில் செயல்பட தவறிவிட்டது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா வந்திருக்கும் நேரத்தில் இது போல அவர்கள் நடக்க விட்டிருக்கக் கூடாது.

போராடும் மக்களுக்கு நான் சொல்வது என்னவென்றால் குடியுரிமைத் திருத்த சட்டத்தை அவர்கள் திரும்ப பெறபோவதில்லை. இரு அவைகளிலும் அது தாக்கல் செய்யப்பட்டு விட்டது. அதனால் அதற்கு எதிராகப் போராட வேண்டாம். மதத்தை வைத்து அரசியல் செய்வதை தான் ஒருபோதும் விரும்பவில்லை. அப்படி செய்பவர்களை நான் கடுமையாக கண்டனம்  தெரிவிக்கிறேன். என்னை பாஜகவின் ஊதுகுழல் என மூத்த பத்திரிக்கையாளர்களே சொல்வது மிகவும் வேதனை அளிக்கிறது.’ எனக் கூறினார். முதன் முதலாக ரஜினி பாஜகவை விமர்சித்து பேசியது தமிழக்த்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பாஜக அரசு மீதான இந்த விமர்சனத்துக்கு தமிழக பாஜக பொருளாளர் விளக்கம் அளித்துள்ளார். அதில் ‘உளவுத்துறை தோல்வி என்றும் பாஜக அரசின் நிர்வாகக் குறைபாடு  என சொல்வதும் ரஜினியின் அறியாமை. மேலும் மற்றவர்களை போல மலிவான அரசியல் செய்வது ரஜினியின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல’ எனக் கூறியுள்ளார்.

டெல்லி வன்முறை: ஒரு பெண் உட்பட மேலும் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

0

டெல்லி வன்முறை: ஒரு பெண் உட்பட மேலும் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

டெல்லி வடகிழக்கு பகுதியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராகவும். ஆதரவாகவும் சென்ற பேரணியால் பெரும் கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரம் டெல்லி மக்களிடையே பெரும் பாதிப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது.

இந்த வன்முறையில் ஒரு காலர் உட்பட 30 பேர் இறந்திருந்தனர். கலவரத்தில் பாதிக்கப்பட்ட பல்வேறு நபர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி மேலும் 5 பேர் இறந்துள்ளனர். இதில் ஒரு பெண்ணும் அடங்குவார். இந்த சம்பவத்தில் 250 க்கும் மேற்பட்டோர் காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இறந்தவர்களை பற்றிய தகவலை ஜிடிபி மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர்.சுனில்குமார் அவர்கள் உறுதிபடுத்தியுள்ளார்.

பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை மற்றும் இறப்பு தகவல் :

  • ஜிடிபி மருத்துவமனையில் செவ்வாய் அன்று13 பேர் காயம், புதன்கிழமை 12 இறந்துள்ளதாகவும், மொத்தமாக 25 பேர் இறந்துள்ளதாகவும் தகவல்.
  • அல் ஹிந்த் மருத்துவமனையில், நான்கு பேர் உயிரிழப்பு.
  • துப்பாக்கி சூட்டின் மூலம் 7 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. கொடூரமாக தாக்கப்பட்ட நிலையில் 7 பேரும், கத்தியால் குத்தப்பட்டு 3 பேரும், தீ வைத்து 2 பேரும் இறந்துள்ளனர்.

இந்த கலவரத்தில் இறந்த காவலர் ரத்தன் லால் அவர்களின் குடும்பத்திற்கு டெல்லி முதல்வர் 1 கோடி ரூபாய் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் தொடர்பாக பல்வேறு கட்சி தலைவர்கள் டெல்லி அரசுக்கும் கண்டனம் தெரிவித்துள்ளனர். காவல்துறையின் மெத்தனபோக்குதான் காரணம் என்று நீதிபதிகளும் கூறியுள்ளனர்.

திருச்சி கோயிலில் கிடைத்த தங்க புதையல்.!!

0

திருச்சி கோயிலில் கிடைத்த தங்க புதையல்.!!

திருச்சி மாவட்டத்தில் புகழ் பெற்ற திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயிலில் தங்கப் புதையல் கிடைத்தது.

பஞ்சபூத ஆலயங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த ஸதலமாக ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி ஆலயம் விளங்குகிறது. சிவன் வழிபாட்டிற்கு ஏற்ற மிக முக்கிய தளமாக இது அமைந்துள்ளது. பல்வேறு ஊர்களில் இருந்து மக்கள் வழிபாட்டிற்காக இங்கு வருகின்றனர்.

இந்நிலையில், கோயிலின் வெளிப்புறம் மற்றும் தோட்டங்களை அவ்வப்போது சுத்தம் செய்வது கோயில் நிர்வாகத்தின் வழக்கம். இந்த கோயிலின் உள்ள பிரசன்ன விநாயகர் சிலைக்கு பின்பு சுத்தப்படுத்தும் வேலை நடந்து கொண்டிருந்தது. கோயிலின் தேவைக்காக அங்கு சிறிய குழி ஒன்று தோண்டும்போது, திடீரென வித்தியாசமான சத்தம் கேட்டுள்ளது.

இதனையடுத்து, முழுமையாக தோண்டி எடுத்தபோது பழைய செப்பு உலோகத்தில் செய்யப்பட்ட உண்டி ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் 3.8 கிராம் மற்றும் 3.5 கிராம் எடையில் உள்ள 504 தங்க காசுகள் இருந்தன. மேலும், 10 கிராம் எடை உள்ள தங்க நாணயமும் கிடைத்தது.

இந்த தங்க காசுகளின் மதிப்பு தற்போது 60 லட்சத்திற்கும் மேல் இருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது. இவை பழங்கால தங்க நாணயங்கள் என்பதால் இதன் மதிப்புகளை தொல்லியல் துறையினர்தான் மதிப்பிட வேண்டும் என்றும் கூறப்படுகிறது. இந்த தங்கப் புதையல் செய்தியால் ஜம்புகேஸ்வரர் கோயில் மக்களை அதிகம் ஈர்த்துள்ளது எனலாம்.

நாங்கள் ஜால்ரா போட்டதால்தான் 11 மருத்துவ கல்லூரிகள் கிடைத்தது; ஸ்டாலினை சுவிட்ச் ஆஃப் செய்த அமைச்சர்!

0

நாங்கள் ஜால்ரா போட்டதால்தான் 11 மருத்துவ கல்லூரிகள் கிடைத்தது; ஸ்டாலினை சுவிட்ச் ஆஃப் செய்த அமைச்சர்!

ஜெயலலிதா பிறந்தநாள் மற்றும் தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் சம்பந்தமான பொதுக்கூட்டம் திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் திமுகவை திரும்பி பேச முடியாத அளவிற்கு பதிலடி தரும் வகையில் பேசியுள்ளார்.

பொதுக்கூட்டர்தில் அமைச்சர் பேசியதாவது;
பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலத்திற்கு சட்டசபையில் அமைச்சரவை ஒப்புதலுடன் சட்டம் நிறைவேற்றப்பட்டது. மேலும் நிதிநிலை அறிக்கையை, பாமகவின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் ஜிகே வாசன் ஆகியோர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள், சங்கங்கள் வரவேற்றுள்ளன.

ஆனால், திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக அரசுக்கு அரசுக்கு அதிக கடன்சுமை இருப்பதாகவும், பட்ஜெட்டில் உருப்படியாக எதுவுமே இல்லை என்பது போல குறையை மட்டுமே கூறி வருகிறார். என்னமோ கருணாநிதி ஆட்சியில் சிறப்பான பட்ஜெட் போட்டதுபோல் பேசுகின்றார். சட்டப் பேரவையில் சிறுபான்மையினருக்கு எப்போதும் பாதுகாப்பாக இருப்போம் என்று தமிழக முதல்வரும், துணை முதல்வரும் தெரிவித்துள்ளனர். பட்ஜெட்டிலும் சிறுபான்மையின மக்களுக்கு பல திட்டங்கள் அறிவித்துள்ளதாக கூறினார்.

மேலும், அதிமுக அரசு மத்திய அரசுடன் கூட்டணி வைத்துள்ளதால் இஸ்லாமியர்களுக்கு எதிரானது போல் தொடர்ந்து பேசி வருகிறது. மத்திய அரசுக்கு அதிமுக ஜால்ரா போடுவதாக ஸ்டாலின் பேசுகிறார். ஆமாம், நாங்கள் ஜால்ரா போடுவதால்தான் தமிழகத்திற்கு 11 மருத்துவக் கல்லூரிகள் கிடைத்துள்ளது என்று ஆவேசமாக பேசினார். திமுக கட்சியினர் போராடுவதற்கு வேறு எந்த காரணமும் இல்லாததால் இஸ்லாமிய மக்களை தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பதாகவும், திமுகவின் நாடகத்தை இஸ்லாமியர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார். இந்த பேச்சு திமுகவினருக்கு சாட்டையடி பதிலாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வாடகைக்கு இருந்த வீட்டை அபகரிக்க முயன்றதாக பியூஷ் மானுஷ் கைது!

0

வாடகைக்கு இருந்த வீட்டை அபகரிக்க முயற்சி செய்ததோடு, வீட்டின் உரிமையாளரை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியதாக சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ் சேலத்தில் கைது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சேலத்தைச் சேர்ந்த பியூஸ் மானுஷ் சமூக ஆர்வலராக இருந்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் சமீபத்தில் வீட்டின் உரிமையாளரான பெண் ஒருவர் வீட்டை காலி செய்யும்படி பியூஸ் மானுஷ் இடம் கேட்டுக் கொண்டிருக்கிறார். அதற்கு பியூஸ் மானுஷ் அந்த பெண்ணை தகாத வார்த்தைகளில் பேசியதாகவும் இதனை அடுத்து பியூஸ் மானுஷ் மீது அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் தெரிகிறது

இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த போலீசார் பியூஸ் மானுஷிடம் இருந்து வாடகையை மட்டும் வசூல் செய்து கொடுத்தனர். மேலும் காலி செய்யும் விஷயத்தில் போலீஸ் தலையிட முடியாது என்றும் சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கும்படி வீட்டின் உரிமையாளருக்கு போலீஸ் அறிவுறுத்தியதாக தெரிகிறது

இந்த நிலையில் சமீபத்தில் சேலத்திற்கு முதல்வர் பழனிசாமி வந்தபோது வீட்டின் உரிமையாளரான பெண் நேரடியாக முதல்வரிடம் புகார் மனு கொடுத்ததாக தெரிகிறது. இந்த மனுவை விசாரணை செய்யும்படி முதல்வர் பரிந்துரை செய்ததாகவும் இதனையடுத்தே இந்த புகார் மீது காவல்துறை அதிரடியாக நடவடிக்கை எடுத்து பியூஸ் மானுஷை கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது