Home Blog Page 5735

மோசமான பேட்டிங்: கோலி அடைந்த சரிவு! ஐசிசி தரவரிசை பட்டியல் வெளியீடு !

0

மோசமான பேட்டிங்: கோலி அடைந்த சரிவு! ஐசிசி தரவரிசை பட்டியல் வெளியீடு !

நியுசிலாந்து அணிக்கு எதிராக மிக மோசமான ஆட்டத்தால் கோலி தன் முதல் இடத்தை இழந்துள்ளார்.

ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்களின் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் சில ஆண்டுகளாக கோலோச்சி வருகிறார். அவருக்கு ஒராண்டு தடை விதிக்கப்பட்ட போது அவரது முதலிடத்தை இந்திய கேப்டன் கோலி பிடித்தார். பின்னர் ஓராண்டு தடை முடிந்து ஆஷஸ் தொடரில் கலந்துகொண்ட அவர் சிறப்பாக விளையாடி தனது முதல் இடத்தை மீட்டெடுத்தார்.

பின்னர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் வங்கதேச அணிகளோடு சிறப்பாக சதமடித்த கோலி மீண்டும் நம்பர் 1 ஆனார். இதைப் போல இவர்கள் இருவரும் மாறி மாறி முதல் இரண்டு இடங்களை பிடித்து வருகின்றனர். இந்நிலையில் இப்போது நியுசிலாந்து தொடரில் முதல் போட்டியில் இரு இன்னிங்ஸிலும் மோசமாக ஆடிய இந்திய கேப்டன் கோலி மீண்டும் முதலிடத்தை இழந்துள்ளார்.

அவர் 906 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் இருக்க, ஸ்மித் 911 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். அடுத்த இடங்களில் வில்லியம்சன்(853), லபுஷேன்(827) மற்றும் பாபர் அசாம்(800), டேவிட் வார்னர் (793), ஜோ ரூட் (764), ரகானே (760), புஜாரா (757), மயங்க் அகர்வால் (727) ஆகியோர் உள்ளனர்.

டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் பேட் கம்மின்ஸ் முதல் இடத்தில் உள்ளார். அதனையடுத்த இடங்களில் நீல் வாக்னர், ஹோல்டர், ரபாடா மற்றும் ஸ்டார்க் ஆகியோர் உள்ளனர்.

ஆற்றில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 24 பேர் பலி! திருமணம் சம்பந்தமான பயணத்தில் நடந்த கோர சம்பவம்.!!

0

ஆற்றில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 24 பேர் பலி! திருமணம் சம்பந்தமான பயணத்தில் நடந்த கோர சம்பவம்.!!

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆற்றில் மேல் சென்று கொண்டிருந்த பேருந்து திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே 24 பேர் உயிரிழந்தனர்.

சுவாமி மாதோபூர் மாவட்டத்தில் திருமண நிகழ்வு சம்பந்தமாக, குடும்பத்தினர் மற்றும் மணமகனின் நண்பர்கள் உட்பட 40 பேர் பேருந்தில் பயணம் செய்தனர். நல்லபடியாக சென்று கொண்டிருந்த பேருந்து,

பூண்டி மாவட்டம் கோட்டா லால்சேட் என்னும் நெடுஞ்சாலையில் இருந்த பாலத்தின் மீது பேருந்து சென்று கொண்டிருந்தது. யாரும் எதிர்பாராத வகையில் திடீரென பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் இருந்து கீழே தண்ணீரில் விழுந்தது. பேருந்து தண்ணீரில் மூழ்கியதால் வெளியே வரமுடியாமல் மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே 24 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் காயம் அடைந்துள்ளனர்.

இந்த கோர விபத்தை அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து பத்திரமாக மீட்டு வருகின்றனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், பாலத்தில் பக்கவாட்டு தடுப்பு சுவர் என்பதும் விபத்துக்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. இது சம்பந்தமாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் சம்பந்தமான பயணத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

34 வருடங்களுக்கு முன்னர் கமல் கொடுத்த முத்தம்:இப்போது கிளம்பும் சர்ச்சை !

0

34 வருடங்களுக்கு முன்னர் கமல் கொடுத்த முத்தம்:இப்போது கிளம்பும் சர்ச்சை !

புன்னகை மன்னன் படத்தில் இடம்பெற்ற காட்சி ஒன்றுக்காக நடிகர் கமல் ரேகாவை அவரது அனும்தி இல்லாமல் முத்தமிட்டது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

புன்னகை மன்னன் திரைப்படத்தில் கமல் ரேகா இருவரும் முத்தமிட்டுக் கொள்ளும் காட்சி தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிச்சயமானதுதான். காதலர்கள் இருவரும் தற்கொலை செய்து கொள்ளும் முன் கொடுத்துக் கொள்ளும் அந்த முத்தத்தை எந்த விரசமும் இல்லாமல் படமாக்கி இருப்பார்கள். ஆனால் இப்போது அந்த காட்சிக்காக கமல் மற்றும் பாலச்சந்தர் இருவரையும் இணைய உலகம் கண்டித்துள்ளது. அதற்குக் காரணம் நடிகை ரேகா.

அவர் சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில், ‘அந்த முத்தக் காட்சி பற்றி இயக்குனரோ, கமல் சாரோ என்னிடம் எதுவுமே சொல்லவில்லை. அந்த ஷாட்டுக்கு முன்னதாக ‘கமலிடம், பாலச்சந்தர் நான் சொன்னது ஞாபகம் இருக்கிறதா என்று கேட்டார்.?’. அவர் ஆக்‌ஷன் சொல்லி,  ஒன்-டூ-த்ரீ சொன்னதும் கமல் முத்தம் கொடுத்துவிட்டார். அதை எதிர்பார்க்காத  நான் அதிர்ச்சியடைந்துவிட்டேன். 

34 வருடங்களுக்கு முன்னர் கமல் கொடுத்த முத்தம்:இப்போது கிளம்பும் சர்ச்சை !

அப்போது பாலச்சந்தரின் உதவியாளர்களாக இருந்த சுரேஷ் கிருஷ்ணா மற்றும் வசந்த் ஆகிய இருவரிடமும் இதுபற்றிக் கேட்டேன்.  இந்த பாடலில் அந்த காட்சி ஹைலைட்டாக இருக்கும். அந்த காட்சி நன்றாக இல்லை என்றால் சென்ஸாரில் இருந்து தூக்கிவிடுவார்கள் என்றார்கள். நான் ’சென்சார் என்றால் என்ன ?’ எனக் கேட்டேன்.  ஏனென்றால் அப்போது எனக்கு 16 வயதுதான்’ எனக் கூறினார்.

அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரகாக,  16 வயது பெண்ணிடம் அவர் அனுமதி இல்லாமல் இப்படி நடந்து கொண்டது தவறு என கமல் மற்றும் பாலச்சந்தர் ஆகிய இருவருக்கும் கண்டனங்கள் எழுந்துள்ளன. மேலும் இது சம்மந்தமாக ரேகாவிடம் கமல், சுரேஷ் கிருஷ்ணா மற்றும் வசந்த் ஆகியோர் மன்னிப்புக் கேட்கவேண்டும் எனக் குரல்கள் எழுந்துள்ளன.

கிரேன் என் மீது விழுந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் – ஷங்கரின் சோகமான டிவிட் !

0

கிரேன் என் மீது விழுந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் – ஷங்கரின் சோகமான டிவிட் !

இந்தியன்  2 படப்பிடிப்பு தளத்தில் நடந்த விபத்து குறித்து இறந்தவர்களுக்கு ஆதரவு தெரிவித்து இயக்குனர் ஷங்கர் டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

கடந்த 19 ஆம் தேதி பூந்தமல்லி ஈ வி பி பிலிம் ஸ்டூடியோவில் இந்தியன் 2 படப்பிடிப்பு நடந்து வந்தது. அதில் கமல், காஜல் அகர்வால் ஆகியோர் நடித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக கிரேன் அறுந்து விழுந்ததில் உதவி இயக்குனர் கிருஷ்ணா, உதவி ஒளிப்பதிவாளர் மது மற்றும் உணவு தயாரிப்பாளர் சந்திரன் ஆகிய  3 தொழிலாளர்கள் பலியானார்கள். மேலும் இந்த 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நடிகர் கமலஹாசன், இயக்குனர் ஷங்கர் மற்றும் நடிகை காஜல் அகர்வால் நூலிழையில் உயிர் தப்பினர். காயமடைந்தவர்கள் சவிதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் இந்த விபத்து குறித்து இயக்குனர் ஷங்கர் முதன் முறையாக மௌனம் கலைத்துள்ளார். தனது டிவிட்டரில் ‘மிகுந்த வருத்தத்துடன் ட்வீட் செய்கிறேன். மோசமான விபத்து நடந்த நாளிலிருந்து நான் அதிர்ச்சியில் இருக்கிறேன். எனது உதவி இயக்குநர், குழுவைச் சேர்ந்தவர்களின் மரணத்தை நினைத்து தூக்கம் வருவதில்லை. நூலிழையில் அந்த கிரேன் விபத்திலிருந்து தப்பித்தேன். ஆனால் அது என் மீது விழுந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். அந்த குடும்பங்களுக்கு என் மனமார்ந்த இரங்கல் மற்றும் பிரார்த்தனைகள்” எனத் தெரிவித்துள்ளார்.

சம்மந்தப்பட்ட ஸ்டுடியோவில் இதற்கு முன்னரும் இதுபோல சில விபத்துகள் நடந்துள்ளதால் அந்த பகுதியில் மண்ணின் தன்மை பற்றி ஆய்வு நடத்த வேண்டும் என குரல்கள் எழுந்துள்ளன.

வன்முறைகள் தீர்வல்ல…. தில்லியில் அமைதி திரும்ப நடவடிக்கை தேவை! மருத்துவர் ராமதாஸ் வேண்டுகோள்

0

வன்முறைகள் தீர்வல்ல…. தில்லியில் அமைதி திரும்ப நடவடிக்கை தேவை! மருத்துவர் ராமதாஸ் வேண்டுகோள்

தலைநகரான டெல்லியில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்போருக்கும்,ஆதரிப்போருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இரு பிரிவினருக்கும் இடையேயான மோதல் கலவரமாக மாறி ஏதும் அறியாத பல அப்பாவிகள் அதன் மூலமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கலவரத்தை தடுத்து தலைநகரில் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்த வேண்டும் என பாமக நிறுவனர் மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது.

தலைநகர் தில்லியில் குரியுரிமை சட்டத் திருத்தத்தை ஆதரிப்போருக்கும், எதிர்ப்போருக்கும் இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட மோதலும், அதனால் உருவான கலவரமும் நான்காவது நாளாக இன்றும் நீடிப்பது அதிர்ச்சியும், கவலையும் அளிக்கிறது. இந்த வன்முறையில் எந்த தவறும் செய்யாத அப்பாவிகள் படுகொலை செய்யப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது; இது நிறுத்தப்பட வேண்டும்.

தில்லியில் இயல்பு நிலைமை திரும்பச் செய்வதற்காக மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தில்லி மாநில துணை நிலை ஆளுனர், முதலமைச்சர் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பல்வேறு கட்ட ஆலோசனைகளை நடத்தி உள்ளார். தில்லி மாநில காவல்துறையும் சிறப்பு ஆணையராக ஸ்ரீவஸ்தவா நியமிக்கப்பட்டு உடனடியாக பொறுப்பேற்றுள்ளார். பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதுடன், கலவரக்காரர்களை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இவ்வளவுக்கு பிறகும் கலவரம் தொடருகிறது.

தில்லி கலவரத்தில் இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர்.70-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். வன்முறை மூலம் எந்த பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது என்பதை இரு தரப்பினரும் உணர்ந்தால் அனைத்து சிக்கல்களையும் தீர்த்து விட முடியும். இதை உணராமல் வன்முறை மற்றும் கலவரத்தை கட்டவிழ்த்து விடுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து, தில்லியில் அமைதியையும், சட்டம் & ஒழுங்கையும் நிலை நிறுத்த மத்திய உள்துறை அமைச்சகமும், தில்லி அரசும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

“ரேசன் கடைல அரிசி தரமாட்றாங்க’ சாமி! உணவுக்காக கலெக்டரிடம் கெஞ்சிய அப்பாவி மூதாட்டிகள்!

0

“ரேசன் கடைல அரிசி தரமாட்றாங்க’ சாமி! உணவுக்காக கலெக்டரிடம் கெஞ்சிய அப்பாவி மூதாட்டிகள்!

உணவுக்காக கலெக்டரிடம் மூதாட்டிகள் கெஞ்சிய வருத்தமான நிகழ்வு நடந்துள்ளது.

கோவை மாவட்டம் பேரூர் வட்டம் பூலவப்பட்டியைச் சேர்ந்த மூதாட்டிகள் மூன்று பேர், கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு வந்திருந்தனர். அங்கு தனக்கான மனு பதிவு செய்யும் இடத்தில் சோகமாக நின்றிருந்த மூதாட்டுகளிடம் கோரிக்கை என்னவென்று கேட்கப்பட்டது. அதற்கு, “எனக்கு பொங்கி சாப்பிட அரிசி வேணும் சாமி” என்று வேதனையுடன் சென்னார்.
நாங்க ரேசன் கடையில கேட்ட அரிசி தரமாட்றாங்க சாமி என்றும் வேதனையுடன் தெரிவித்தார்.

முதியோர்களுக்கான உதவித் தொகை பெறுபவர்களுக்கு ரேசன் கடையில் 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. இலவச அரிசிக்காக பலமுறை எழுதிய மனுவை மூதாட்டிகள் கையில் வைத்திருந்தனர். இதுகுறித்து நாகம்மாள் மூதாட்டி கூறுகையில்; எங்கள் கிராமத்தில் ரேசன் அரிசியை கேட்டோம் தரவில்லை, இதனால் கலெக்டரிடம் முறையிட்டோம் நிச்சயமாக நாளையில் இருந்து அரிசி கிடைக்கும் என்று கூறியுள்ளார். எங்களுக்கு கிடைக்கும் 1000 ரூயாப் உதவிக் தொகையிலும் இலவச அரியில்தான் எங்கள் வாழ்க்கையே ஓடுகிறது என்று வேதனையுடன் கூறினார்.

இதனையடுத்து, மாவட்ட வழங்கல் அலுவலரான குமரேசன் கூறுகையில்; முதியோர் உதவித்தொகையை புதிதாக வாங்குபவர்கள் முறைப்படி பதிவு செய்ய வேண்டும் என குறிப்பிட்டார். முறைப்படி பதிவு செய்தவர்களுக்கு இலவச அரிசி எந்த தடையும் இல்லாமல் கிடைக்கும் என்றும், மனு சம்பந்தபட்ட மூதாட்டிகள் பதிவு செய்யாமல் ஸ்மார்ட்கார்டு மூலம் அரிசி கேட்டுள்ளனர். மேலும், மூதாட்டிகளுக்கு தேவையான இலவச அரிசிக்கான வழிமுறை செய்யப்பட்டுள்ளது என உறுதியளித்தார்.

ஒவ்வொரு மாவட்டங்களிலும் குறைதீர் கூட்டத்தில் இதுபோன்ற அப்பாவி மக்கள் பல்வேறு கோரிக்கையுடன் காத்துகிடப்பது தொடர்ந்து நடந்து வருகிறது.

அரசாங்கம் வழங்கும் இலவச மாட்டுக் கொட்டகை பற்றி தெரியுமா?

0

அரசாங்கம் வழங்கும் இலவச மாட்டுக் கொட்டகை பற்றி தெரியுமா?

கிராமங்கள் தான் இந்தியாவின் முதுகெலும்பு என்றவர் மகாத்மா காந்தியடிகள்.உள்ளாட்சிகள் சயசார்புடைமை பெற்றால் மட்டுமே இந்தியா பொருளாதாரத்தில் முன்னேற முடியும் என்றும் உறுதியாக நம்பியவர் மகாத்மா.

ஆனால் இன்றைக்கு கிராமங்களில் இருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறிய வண்ணம் உள்ளனர்.இதற்கான காரணம் கிராமங்களில் உள்ள விவசாயத்தில் இலாபம் இல்லாமையே.அதனால் கிராமப்புற விவசாயிகள் தங்கள் வருமானத்தை பெருக்க ஆடுகள்,கோழிகள்,மாடுகள் போன்றவற்றை வளர்த்து அதன் மூலம் கூடுதல் பெற வேண்டிய சூழலில் உள்ளனர்.

அவ்வாறு ஒரு கூடுதல் வருமானம் அவர்களுக்கு கிடைக்கும் பட்சத்தில் விவசாயம் பொய்த்துப் போகும் காலங்களில் கூட அவர்களால் சற்று பொருளாதார சுமையை சமாளிக்க முடியும்.இதற்காக பல்வேறு திட்டங்களை மத்திய மாநில அரசுகள் வகுத்த செயல்படுத்திவருகிறது.

ஆனால் இதைப்பற்றிய தகவல்களை கிராமப்புற மக்களுக்கு கொண்டுசெல்வதில் பிரச்சனை உள்ளது.அவ்வாறு மக்கள் அறியாமலே உள்ள திட்டங்களில் ஒன்றே இலவச மாட்டுக்கொட்டகை திட்டம்.

இத்திட்டம் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது.இத்திட்டத்தின் கீழ் 2,3,5,9 மாடுகள் என பல்வேறு வகையில் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற ஊரக வேலைவாய்ப்பு உறுத்தித்திட்ட அட்டை வைத்திருக்க வேண்டும்.அவரது பெயரிலேயே கொட்டகை அமைக்க தேவையான நிலம் இருத்தல் அவசியம்.

இத்திட்டத்தில் பயன் பெற மகளிர் சுய உதவிக்குழுக்ளையோ , ஊராட்சி மன்ற தலைவரையோ , அரசு கால்நடை மருத்துவரையோ அல்லது நேரடியாக திட்டங்கள் தொடர்பான வட்டார வளர்ச்சி அலுவலரையோ (scheme BDO),ஆவின் பால் சங்கத்தையோ அனுக வேண்டும்.

இரண்டு மாடு கொட்டகை அமைக்க ₹98,500 , மூன்று மாடுகள் தங்கும் கொட்டகைக்கு 1,20,000 என பல்வேறு விதங்களில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இதுபோல் அதிகபட்சம் ரூபாய் பத்துலட்சம் வரை அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது.இத்திட்டம் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் செயல்படுத்தப்படுகிறது.

இதுபோன்ற திட்டங்கள் செயல்படுத்தும் போது உரிய விழிப்புடன் இருக்கும் பட்சத்தில் கிராமங்களில் வாழும் விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்க வழிவகுக்கும்.

கொரோனா வைரஸ் எதிரொலி! ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்பட வாய்ப்பு!

0

கொரோனா வைரஸ் எதிரொலி! ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்பட வாய்ப்பு!

கொரோனா வைரஸ் கட்டுக்குள் வராவிடில் ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகிற ஜூலை 24  ஆம் தேதி முதல்  மற்றும் ஆகஸ்டு 9 ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது.  ஒலிம்பிக் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ள ஜப்பானையும் கொரோனா வைரஸ் தாக்கம் விட்டு வைக்கவில்லை. இதனால், வரும் ஜூலை மாதம் ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பானில் திட்டமிட்டபடி நடத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில், மே மாதத்திற்குள் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வராவிடில் ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியானது.

அதேநேரத்தில் டோக்கியோ ஒலிம்பிக்கை வேறு இடத்திற்கு மாற்றவோ, ஒத்தி வைப்பது குறித்த திட்டம் எதுவுமில்லை என ஒலிம்பிக் கமிட்டி அதிகாரிகள் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

பள்ளி மாணவியை கற்பழித்த திமுக பிரமுகர்! திமுக உறுப்பினர் என்பதில் பெருமை கொள்வதாக விளம்பரம்..!!

0

பள்ளி மாணவியை கற்பழித்த திமுக பிரமுகர்! திமுக உறுப்பினர் என்பதில் பெருமை கொள்வதாக விளம்பரம்..!!

பள்ளி மாணவியை மது போதையில் திமுக செயலாளர் கற்பழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பன அள்ளி பகுதியில் சென்ற வாரம் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி, பள்ளி முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்தார். அந்த நேரத்தில் அரசு ஆண்கள் மேநிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவரும் அங்கு வந்துள்ளார். இருவருக்கும் ஏற்கனவே அறிமுகம் இருப்பதால் பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது, சிறிது நேரத்தில் அந்த மாணவர்களின் நண்பர்களான ராஜா மற்றும் மஞ்சுநாத் ஆகியோர் காரில் வந்துள்ளனர். பேசிக்கொண்டிருந்த பள்ளி மாணவர் இவர்களுக்கு ஏற்கனவே நண்பர் என்பதால் குடிப்பதற்கு கூல்டிரிங்ஸ் கொடுத்துள்ளனர். குளிர்பானத்தை குடித்த மாணவி சிறிது நேரத்தில் மயக்கமடைந்துள்ளார்.

இதனையடுத்து, மாணவியை மருத்துவமனைக்கு ஏற்றிச் செல்வது போல் காரில் ஏற்றிக் கொண்டு, ஆந்திராவை பகுதியை ஒட்டி ரகசியமான இடத்திற்கு மாணவியை திட்டமிட்டு அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர், மயங்கிய நிலையில் இருந்த மாணவியை அவரது நண்பரும், ராஜா மற்றும் மஞ்சுநாத் ஆகிய மூவரும் சேர்ந்து கற்பழித்துள்ளனர்.

சிறிது நேரத்திற்கு பிறகு மயக்கம் தெளிந்த மாணவி, தனக்கு நேர்ந்த கொடுமையை எண்ணி கதறி அழுதுள்ளார். அங்கிருந்து உடனடியாக தப்பித்து வீட்டுக்கு வந்தவுடன், பெற்றோர்களிடம் தனக்கு நேர்ந்த கொடுமைகளை விவரித்துள்ளார் இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர், உடனடியாக மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.

புகாரின் அடிப்படையில் 11 ஆம் வகுப்பு மாணவனை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். மேலும் இருவரை தேடிவந்த நிலையில் நேற்று முன்தினம் ராஜா மற்றும் மஞ்சுநாத்தை போலீசார் கைது செய்தனர். ராஜா என்பவர் வேப்பன அள்ளி பகுதியின் திமுக இளைஞரணி ஒன்றிய செயலாளர் என்று கூறப்படுகிறது. சம்பவத்தின் போது இந்த இருவரும் குடிபோதையில் இருந்தது விசாரணையில் தெரியவந்தது. மேலும் குளிர்பானத்தில் திட்டமிட்டு மதுவை கலந்து கொடுத்ததும் தெரியவந்துள்ளது.

திமுக கட்சியினர் இதுபோன்ற ஆபாச செயல்களிலும், குற்றங்களிலும் ஈடுபட்டு வருவது சமீப காலங்களில் அதிகரித்துள்ளது. சமீபத்தில் மனைவியை பிரிந்து தன்னை விட 16 வயது அதிகமான பெண்ணுடன் திமுக பிரமுகர் வைத்திருந்த கள்ளக்காதல் சம்பவமும் குறிப்பிடத்தக்கது.

மீண்டும் கூடும் தமிழக சட்டபேரவை: முக்கிய அறிவிப்புகளை வெளியிடும் முதல்வர்?

0

மீண்டும் கூடும் தமிழக சட்டபேரவை: முக்கிய அறிவிப்புகளை வெளியிடும் முதல்வர்?

தமிழக சட்டப்பேரவை மார்ச் 9ம் தேதி மீண்டும் கூட உள்ளதாக பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார். மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்காக சட்டப்பேரவை கூட உள்ளதாக  அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 14ந்தேதி தொடங்கியது. அன்றைய தினம் துணை முதலமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 2020-21ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தார். இதில் பல்வேறு துறைகளுக்கு எவ்வளவு நிதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது என்று அறிவிக்கப்பட்டது. அதையடுத்து நடைபெற்ற அலுவல் ஆய்வு கூட்டத்தில் சட்டமன்றத்தை 20ந்தேதி வரை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

17-ம் தேதி திங்கட்கிழமை காலை 10 மணிக்கு மீண்டும் சட்டப்பேரவை கூடியபோது, பட்ஜெட் தொடர்பான விவாதம் மற்றும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதங்கள் நடைபெற்றது.கடைசி நாளில் முதலமைச்சர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வேளாண் மண்டல மசோதா நிறைவேற்றப்பட்டது. 

பின்னர் தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவையை ஒத்திவைப்பதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார். பிப்ரவரி 14ல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு பிப்ரவரி 20ம் தேதி வரை நடைபெற்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதலாவது அமர்வில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெறவில்லை.

இந்நிலையில்  மார்ச் 9ம் தேதி தமிழக சட்டப்பேரவை மீண்டும் கூடுவதாகவும், இதில் துறை ரீதியிலான மானியக் கோரிக்கைகள் குறித்த விவாதம் நடைபெறும் என்றும் சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார். தொடரை எத்தனை நாள் நடத்துவது என்பதை அலுவல் ஆய்வுக்குழு 9ம் தேதி முடிவு செய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே, குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றவேண்டும் என எதிர்கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.