Home Blog Page 5736

கலவர பூமியாக மாறும் டெல்லி: ராணுவத்தை அனுப்ப சொல்லும் கெஜ்ரிவால் !

0

கலவர பூமியாக மாறும் டெல்லி: ராணுவத்தை அனுப்ப சொல்லும் கெஜ்ரிவால் !

டெல்லியில் நடக்கும் கலவரங்களைக் கட்டுக்குள் கொண்டுவர ராணுவத்தை அனுப்புங்கள் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கேட்டுள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தின் போது  உருவான மோதல் பயங்கரமான வன்முறையாக மாறி வருகிறது. தொடர்ந்து இரண்டு நாட்களாக நடந்துவரும் கலவரத்தில் 20 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் பல இடங்களில் மக்களின் வீடுகள் கொளுத்தப்பட்டு சூரையாடப் பட்டு வருகின்றன.

வடகிழக்கு டெல்லியில் நேற்று போராட்டம் தீவிரமடைந்து வன்முறையானது. மஜ்பூரில் ஏற்பட்ட கல்லெறி சம்பவத்தால் ரத்தன் என்ற டெல்லி காவலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கலவரத்தை கலைக்க கண்ணீர் புகை குண்டுகளும், துப்பாக்கி சூடும் நடத்தப்பட்டது. சிஏஏ ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களுக்கும் கலவரம் அதிகரித்தது. இதனையடுத்து அங்கிருந்த வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டு கலவரம் உச்சகட்டத்தை அடைந்தது.

கலவர பூமியாக மாறும் டெல்லி: ராணுவத்தை அனுப்ப சொல்லும் கெஜ்ரிவால் !

டெல்லியின் காவல்துறை நேரடியாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதனால் டெல்லி முதல்வர் தங்களால் எந்த பாதுகாப்பு நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை என சொல்லியுள்ளார். கலவரம் மேலும் பரவாமல் இருக்க வடகிழக்கு டெல்லி பகுதிகளான மஜ்பூர், கர்தாம்பூரி, தயால்பூர், சாந்த்பாக் போன்ற இடங்களில் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது சம்மந்தமாக நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ‘டெல்லிக்கு ராணுவத்தை அனுப்புங்கள். போலீஸ்காரர்களால் கலவரத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை’ எனத் தெரிவித்துள்ளார்.

வரலாறு படத்தில் நடிக்க வேண்டிய கமல்: பின்வாங்கியது ஏன் ?

0

வரலாறு படத்தில் நடிக்க வேண்டிய கமல்: பின்வாங்கியது ஏன் ?

அஜித்துக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்த வரலாறு படத்தில் முதலில் நடிக வேண்டியது கமல்தான் என நடன இயக்குனர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடன இயக்குனர்களில் சிவசங்கரும் ஒருவர். இதுவரை 800 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றி இருக்கும் பல விருதுகளையும் வென்றுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த நேர்காணல் ஒன்றில் தான் பணிபுரிந்த வரலாறு திரைப்படத்தை பற்றி வெளி உலகிற்குத் தெரியாத பல தகவல்களை சொல்லியுள்ளார்.

வரலாறு படத்தில் அஜித் பெண் தன்மை கொண்ட பரதநாட்டிய கலைஞராக ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் அஜித்துக்கு நடன அசைவுகள் மற்றும் நளினமாக நடந்து கொள்வது குறித்து சொல்லிக் கொடுத்ததுடன் அந்த படத்தில் இடம்பெறும் இன்னிசை அளபெடையே என்ற பாடலுக்கு நடனம் அமைத்துக் கொடுத்ததும் இவர்தான்.

வரலாறு படத்தில் நடிக்க வேண்டிய கமல்: பின்வாங்கியது ஏன் ?

இந்த படம் பற்றி பேசிய அவர் ‘முதலில் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார், இந்த படத்தில் நடிக்க வைக்க கமல்ஹாசனைதான் அனுகினார். ஆனால் அவர் அப்போது வேறு படங்களில் நடித்துக் கொண்டு இருந்ததால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது. அதன் பிறகு அஜித்தை அனுக அவர் தயங்கினார். இயக்குனர்தான் நம்பிக்கைக் கொடுத்து நடிக்க வைத்தார். இந்த படத்தில் நான் சொல்லிக் கொடுத்த விஷயங்களை அஜித் பிரமாதமாக உள்வாங்கி நடித்தார்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்ந்து பல படங்கள் தோல்வி அடைந்த நிலையில் இந்த படத்துக்காக உடல் எடையைக் குறைத்த அஜித் தனது திறமையை நிரூபித்து வெற்றியை ஈட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைவி சர்ச்சையும் சமாதானமும்! நடந்தது என்ன?

0

தலைவி சர்ச்சையும் சமாதானமும்! நடந்தது என்ன?

தலைவி படத்தில் வேண்டுமென்றே என் பெயரை நீக்கியுள்ளனர் என குற்றம் சாட்டிய எழுத்தாளர் அஜயன் பாலா ஒரே நாளில் இயக்குனர் விஜய்யுடன் சமாதானம் செய்து கொண்டுள்ளார்.

எழுத்தாளர் அஜயன் பாலா ஏ எல் விஜய் இயக்கி வரும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான தலைவி படத்தின் கதை இலாகாவில் பணிபுரிந்துவந்தார். இந்நிலையில் ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24 ஆம் தேதி வெளியான படத்தின் போஸ்டரில் அவரது பெயர் நீக்கப்படட்து தொடர்பாகா சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்தார்.

அதில் “சினிமாவில் நம்பிக்கைத் துரோகத்தை பலமுறை சந்திந்திருந்தாலும் தலைவி படம் மூலமாக எனக்கு நேர்ந்திருக்கும் அவமானத்தை ஏற்கவே முடியவில்லை. இத்தனைக்கும் நான் 6 மாத காலம் ஆய்வு செய்து எழுதிக்கொடுத்த நாவலை அடிப்படையாக வைத்து கோர்ட் வழக்குகளில் ஆதராமாக பயன்படுத்திக்கொண்டு வழக்கில் வெற்றி பெற்ற பின் என் பெயரை சுத்தமாக நீக்கிவிட்டார்கள்.

திரைக்கதையில் வணிக நோக்கில் உண்மைக்கு புறம்பாக மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்தும் காட்சிகளை நான் நீக்கும்படி கோரிக்கை வைத்ததுதான் நான் அவமானப்படுத்தப்பட காரணம். பத்தாண்டு நட்புக்காக இயக்குனர் விஜய்யிடம் பல இழப்புகளையும் துரோகங்களையும் அனுமதித்துக் கொண்டேன். இதை என்னால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. ஆய்வு எழுத்து தொடர்ந்து பல்வேறு கட்டங்களில் திரைக்கதை விவாதம் என ஒன்றரை வருட உழைப்புக்கு கிடைத்த பலன் முதுகு குத்தல் தான்.

இத்தனைக்கும் முந்தின நாள் கூட பேசினேன். அப்போதுகூட இது பற்றி வாய் திறக்காத நண்பர் விஜய், அடுத்த நாள் எனக்கு கிடைக்கப்போகும் அவமானத்தை எண்னி அகமகிழ்ந்திருப்பார் போல, இப்படி எழுதியதால் எனக்கு முறையாக சேரவேண்டிய சம்பள பாக்கியை கொடுக்க மாட்டர்கள் . நட்பிற்காகக்கூட சினிமாவில் முறையான ஒப்பந்தமில்லாமல் யாரும் பணி புரிய வேண்டாம். இதுவே சக எழுத்தாளர்களுக்கு இதன் மூலம் நான் கேட்டுக்கொள்ளும் கோரிக்கை”, என தெரிவித்திருந்தார். ஆனால் அடுத்த சில நிமிடங்களில் அந்த பதிவை நீக்கினார்.

தலைவி சர்ச்சையும் சமாதானமும்! நடந்தது என்ன?

இதனிடையே நேற்று மாலை தனது பதிவு நீக்கத்துக்கு விளக்கமளிக்கும் விதமாக ‘இன்று காலை தலைவி பட பிரச்னை தொடர்பாக முகநூலில் இட்ட பதிவுக்கு பலரும் ஆதரவும் வருத்தமும் தெரிவித்தனர். தயாரிப்பாளர் அழைத்து வருத்தம் தெரிவித்து, நாளை நேரில் பேசித் தீர்க்க சென்னை வருவதாக உறுதி கூறியதால் பதிவை நீக்கியுள்ளேன். நாளை, சந்திப்புக்குபின் தொடர்புகொள்கிறேன்’ எனத் தெரிவித்தார்.

அதன் பின்னர் இன்று காலை மீண்டும் ‘நேற்று இரவு நண்பரும் இயக்குனருமான விஜய் இரவு பத்துமணிக்கு வீட்டுக்கு வந்து உதவி இயக்குனரின் கவனக்குறைவால் நடந்துவிட்ட பிசகுக்கு வருத்தம் தெரிவித்தார். சரியான அங்கீகாரம் இடம்பெற்ற திருத்தப்பட்ட விளம்பரத்தை காண்பித்தார். இன்று ஹைதராபாத்திலிருந்து வரவிருக்கும் தயாரிப்பாளர் விஷ்ணு வுடன் நடத்தவிருக்கும் பேச்சு வார்த்தை மூலம் சம்பளப்ரச்னைகள் முடிவை எட்டும் என நம்புகிறேன். இவ்விவரம் தொடர்பாக எனக்கு உடன் நின்ற ஊடக.இதழியல் முகநூல் நண்பர்களுக்கு இதயம் நெகிழ்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.’ என சமாதானமாகியுள்ளார். இதையடுத்து பலரும் அவரது நியாயமான கோரிக்கைக்குக் கிடைத்த வெற்றி என இதை பாராட்டு வருகின்றனர்.

விஜய் சுதா கொங்கரா சந்திப்பில் நடந்தது என்ன? ஆச்சரிய தகவல்

0

தளபதி விஜய்யை கடந்த சில நாட்களுக்கு முன்னர் நேரில் சந்தித்து ’தளபதி 65’ படத்தின் ஒன் லைன் கதையை இயக்குனர் சுதா கொங்காரா கூறியதாகவும் இந்த கதை விஜய்க்கு பிடித்திருந்தாலும் முழு கதையை தான் கேட்ட பின்னரே முடிவு சொல்ல முடியும் என்று விஜய் தரப்பில் கூறியதாகவும் தெரிகிறது

இதனை அடுத்து இந்த வார இறுதியில் விஜய்யை மீண்டும் சந்திக்கும் இயக்குனர் சுதா கொங்காரா முழு கதையையும் கூற இருப்பதாகவும் அந்த கதையை கேட்டபின் விஜய் அந்த கதை திருப்தியாக இருந்தால் உடனே நடிக்க ஒப்புக் கொண்டு விடுவார் என்றும் அதன்பின்னர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் கூறிய கதையும் விஜய்க்கு பிடித்துள்ளதால் சுதா கொங்காரா இல்லாவிட்டால் லோகேஷ் தான் ‘தளபதி 65’ படத்தின் இயக்குனர் என்றும் இந்த இருவரில் யார் ‘தளபதி 65’ படத்தின் இயக்குனர் என்பது இன்னும் ஒருசில நாட்களில் முடிவுக்கு வந்துவிடும் என்றும் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது

இயக்குனர் சுதா கொங்காரா தற்போது ‘சூரரை போற்று’ படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு போஸ்ட் புரடொக்சன்ஸ் பணியில் பிசியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

கடவுள் இல்லை இல்லவே இல்லை என்று கூறிவிட்டு அப்பன் முருகனிடம் அருள்வாங்கிய நாத்திகவாதி..!!

0

கடவுள் இல்லை இல்லவே இல்லை என்று கூறிவிட்டு அப்பன் முருகனிடம் அருள்வாங்கிய நாத்திகவாதி..!!

“சொல் ஒன்று செயல் ஒன்று’ பகுத்தறிவு என்கிற நாத்திகத்தை பேசும் இயக்கம் தமிழ்நாட்டில் பல உண்டு. அதில் அடிக்கடி டிவி விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் திரைப்பட இயக்குனர் வேலு பிரபாகரன் ஈவேராவின் பகுத்தறிவுக் கொள்கையை ஏற்றுக் கொண்டவர். தொடர்ந்து கடவுள் இல்லை என்று பேசி வந்த இவருக்கு முருகன் கோயில் முக்தி வந்துள்ளது.

திருச்செந்தூர் முருகன் கோவிலில் சேலம் ஆர்ஆர் பிரியாணி ஓனர் தமிழ்ச்செல்வனுடன் கோயிலுக்கு சென்று பக்தியுடன் வணங்கியுள்ளார். பின்னர் மாலை கழுத்துடன் கோயிலுக்கு வந்த போது தமிழ்ச்செல்வன் இது குறித்து பேசினார்.

வேலு பிரபாகரன் கடவுள் மறுப்பு கொள்கை உடையவர். கடவுளை மறுப்பவர் அல்ல, சிலரின் கருத்துகளுக்கு எதிரானவர் மட்டுமே சாமி இருந்தால் மகிழ்ச்சி என்று சொல்வார் அவ்வளவுதான். அனைவரையும் கோயிலுக்கு அழைத்துச் சென்று பூஜை நடத்தி வழிபட்டது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது என்று கூறினார். ஐயர் கொடுத்த பிரசாதத்தை வாங்கிக் கொண்டதாக தமிழ்ச்செல்வன் கூறினார்.

இது சம்பந்தமாக வேலு பிரபாகரன் பேசியதாவது: இதை ஒரு நல்ல வாய்ப்பாக நினைக்கிறேன், இங்கு பல லட்சக்கணக்கான மக்களின் எண்ணமும், வேண்டுதலுடன் இருக்கின்றனர். அவர்களுடன் நான் சில மணி நேரம் இங்கேயே இருந்தேன். இந்த வாய்ப்பை கொடுத்த மனிதநேய பண்பாளருக்கு நன்றி தெரிவித்தார்.

பொன்னியின் செல்வன் படத்திற்கு போட்டியாகும் அஜித்

0

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் பிரமாண்டமான திரைப்படமான ’பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இந்த படம் 2021ல் முதல் பாகமும் 2022ல் இரண்டாம் பாகமும் வெளியாகும் என தெரிகிறது

இந்த நிலையில் இதே ராஜராஜசோழன் கதையை பிரபல இயக்குனர் விஷ்ணுவர்த்தன் திரைக்கதை எழுதியுள்ளார் என்பதும், இந்த திரைக்கதைக்கு மறைந்த எழுத்தாளர் பாலகுமாரன் அவர்கள் பெரும் உதவி செய்து இருந்தார் என்பது தெரிந்ததே

இந்த படத்தில் ராஜராஜ சோழனாக அஜித் நடிப்பார் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்த படம் முழு வடிவம் பெற்றுள்ளதாகவும், இந்த படமும், இதில் ராஜராஜசோழன் கேரக்டரில் அஜித் நடிக்க இருப்பதும் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் ’தல 61’படம் இதுதான் என்றும் கூறப்படுகிறது.

விஷ்ணுவர்தன், அஜித் ஏற்கனவே பில்லா, ஆரம்பம் ஆகிய படங்களில் இணைந்துள்ள நிலையில் மீண்டும் இதே கூட்டணி இணையும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. அனேகமாக இந்த படம் பொன்னியின் செல்வன் படத்திற்கு போட்டியாக இருக்கும் என்றும், அதே நேரத்தில் பொன்னியின் செல்வன் படத்திற்கு போட்டியாக இந்த படம் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

1957-ம் ஆண்டு திருடப்பட்ட ஆழ்வார் சிலை இங்கிலாந்தில் கண்டுபிடிப்பு! சிலையை திருடிச் சென்றது யார்..?

0

1957-ம் ஆண்டு திருடப்பட்ட ஆழ்வார் சிலை இங்கிலாந்தில் கண்டுபிடிப்பு! சிலையை திருடிச் சென்றது யார்..?

தமிழ்நாட்டின் பாரம்பரிய சிலைகள் இங்கிருந்து திருடப்பட்டு அதிக பணத்திற்காக வெளிநாடுகளுக்கு விற்கப்படுகிறது. பல காலமாக இந்த திருட்டு சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் இருந்து திருடப்பட்ட “திருமங்கை ஆழ்வார் சிலை’ இங்கிலாந்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இந்தியாவிற்கு கொண்டு வர வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

1957 ஆம் ஆண்டு தமிழகத்தின் சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் இருந்து திருமங்கை ஆழ்வார் சிலை திருடப்பட்டது. இந்த சிலை 15 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட சிலையாகும். தற்போது பெருமாள் கோவிலில் போலியான வெண்கல சிலை வைக்கப்பட்டு வழிபாடு நடந்து வருகிறது. இதனையடுத்து, ஆழ்வார் சிலை இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் இருக்கும் அஷ்மோலியன் அருங்காட்சியகத்தில் இருப்பது தெரியவந்தது.

இந்த சிலை 1967 ஆம் ஆண்டு சூத்பி என்னும் ஏல மையத்தின் மூலம் ஏலம் விடப்பட்டுள்ளது. இதை அஷ்மோலியன் அருங்காட்சியகம் ஏலத்தில் விலை கொடுத்து வாங்கியுள்ளது. அஷ்மோலியன் அருங்காட்சியகத்தில் இருக்கும் திருமங்கை ஆழ்வார் சிலையை பார்வையிட்ட ஒரு தனியார் ஆராய்ச்சியாளர், இது தமிழகத்தில் இருந்து திருடப்பட்ட சிலை என்று அருங்காட்சியக நிர்வாகிகளிடம் தெரிவித்தார்.பின்னர், இங்கிலாந்து இந்திய தூதரகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. இது உங்கள் சிலைதானா என்பதற்கு மேலும் சில ஆதாரங்களையும் கேட்டனர்.

இதன்பிறகு, தமிழக சிலை தடுப்பு பிரிவு போலீசாரின் அறிக்கை ஒன்று அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த சிலை தமிழகத்தை சேர்ந்த திருமங்கை ஆழ்வார் சிலைதான் என்று உறுதி செய்து, இந்தியாவிற்கு அனுப்ப கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து சிலையினை ஒப்படைக்க இங்கிலாந்து அஷ்மோலியன் அருங்காட்சியகம் பச்சைக் கொடி காட்டியுள்ளது. இருப்பினும், எங்களுடைய குழுவின் முக்கிய பிரதிநிதி இந்தியா வந்து முழு ஆய்வு செய்த பின்னரே சிலை முறையாக ஒப்படைக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

இதனை ஏற்று, உடனடியாக பணியை செயல்படுத்துமாறு இந்திய அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். லண்டன் இந்திய தூதரகத்தின் முதன்மை செயலாளர் ராகுல் நந்த்கரே மூலம் இந்த மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. இந்தியாவில் இருந்தும் குறிப்பாக தமிழகத்தில் இருந்து பாரம்பரியமான பல்வேறு சிலைகள் திருடப்பட்டு திரும்பி மீட்கப்படாமல் உள்ளது. தமிழர்களின் பாரம்பரியத்தை மீட்க வேண்டும் என்பதே பொது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ஒரு வயது குழந்தையை தூக்கில் போட்ட தாய்! கணவனுடன் நடந்த சண்டையால் ஏற்பட்ட கொடூர சம்பவம்..!!

0

ஒரு வயது குழந்தையை தூக்கில் போட்ட தாய்! கணவனுடன் நடந்த சண்டையால் ஏற்பட்ட கொடூர சம்பவம்..!!

மதுரை மாவட்டத்தின் வாடிப்பட்டி பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் என்பவருக்கு, இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.
இவர்களுக்கு ஒரு வயதில் ரித்திக் என்ற மகன் உள்ளார். தனியார் நிறுவன குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த பிரபாகரன், வேலையின் காரணமாக தனது குடும்பத்தை வாடிப்பட்டியில் இருந்து சில மாதங்களுக்கு முன்பு அவிநாசி அருகிலுள்ள பெரியாயி பாளையத்தில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் குடியேறினார்.

இதனையடுத்து கணவனுக்கும், மனைவிக்கும் ஏற்கனவே குடும்பத்தில் சின்ன சின்ன சண்டைகள் வந்துள்ளது. நேற்று வழக்கம் போல இருவருக்கும் சண்டை அதிகரித்து மனைவியை பிரபாகரன் திட்டிவிட்டு வேலைக்கு சென்றுள்ளார். அன்று மாலை வரை அவரது வீடு திறக்கவே இல்லை. கிராமம் இரவை நோக்கி நகர ஆரம்பித்தும் வீட்டு கதவு திறக்கவில்லை. இதனால் பிரபாகரன் வீட்டு அருகிலுள்ளவர்கள் சந்தேகமடைந்து கதவை தட்டிப்பார்த்தனர்.

பின்னர், கதவை திறந்து பார்த்தில், பிரபாகரன் மனைவி துர்கா தேவியும், அவரது ஒரு வயது குழந்தையும் தூக்கில் தொங்கியவாறு மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். இதைப்பார்த்த அக்கம் பக்கத்து வீட்டார் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியில் மூழ்கினர். சம்பவம் குறித்து உடனடியாக அவிநாசி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரின் உடலையும் மீட்டனர்.

இதனையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், கணவன் மனைவி இருவருக்கும் ஏற்பட்ட சண்டையினால் இந்த சம்பவம் நடந்தது தெரியவந்தது. ஒரு வயது குழந்தையை முதலில் தூக்கில் தொங்கவிட்டு பின்னர் தானும் தூக்கில் தொங்கி இருக்கலாம் என்கிற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தலைவி படத்தில் இருந்து திடீரென விலகிய பிரபல நடிகை: பெரும் பரபரப்பு

0

முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ’தலைவி’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் கங்கனா ரனாவத், எம்ஜிஆர் கேரக்டரில் அரவிந்தசாமி நடித்து வருகின்றனர்

இதனை அடுத்து இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க பிரபல நடிகை பிரியாமணி ஒப்பந்தம் செய்திருந்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். தற்போது அவர் இந்த படத்தில் இருந்து திடீரென விலகி விட்டதாகவும் விலகியதற்கான காரணத்தை கூற மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது

பிரியாமணி இந்த படத்தில் இருந்து விலகியதை அடுத்து அவருக்கு பதிலாக நடிகை பூர்ணா இந்த படத்தில் சசிகலா கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அவருடைய கேரக்டரின் படப்பிடிப்பு சமீபத்தில் ஆரம்பித்ததாகவும் அவர் இந்த கேரக்டருக்கு மிக பொருத்தமாக இருப்பதாக இயக்குனர் விஜய் உள்பட பலரும் தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது

ஜூன் 26ஆம் தேதி தமிழ் தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய 3 மொழிகளில் வெளியாக உள்ள இந்தப் படத்தில் ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

அரசுப் பணிக்காக காத்திருப்பவரா நீங்கள்? விண்ணப்பிக்க தாயாராகுங்கள்

0

அரசுப் பணிக்காக காத்திருப்பவரா நீங்கள்? விண்ணப்பிக்க தாயாராகுங்கள்

போட்டிகள் நிறைந்த இந்த உலகத்தில் ஒவ்வொருவரும் தங்களுக்கு என நிரந்தரமான ஒரு வேலையை தேடிக்கொள்வதில் மிகுந்த கவனத்துடன் உள்ளனர்.

இருந்தபோதிலும் தமிழக இளைஞர்கள் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வானையம் நடத்தும் தேர்வுகளுக்கு மட்டுமே விண்ணப்பிக்கின்றனர்.
இந்திய அரசிடம் இருந்து நாள்தோரும் பல்வேறு வேலை வாய்ப்பு அழைப்பு வந்தபோதும் அதற்கு விண்ணப்பம் கூட செலுத்தாமல் புறக்கணிப்பதை நாம் கண் கூடாகப் பார்க்க முடிகிறது.

இந்த நிலை மாறி மத்திய அரசுப்பணிகளில் தமிழர்கள் கோலோச்ச அனைத்து விதமான மத்திய அரசுப் பணிக்கும் தமிழக இளைஞர்கள் விண்ணப்பிப்பது காலத்தின் கட்டாயமாக உள்ளது.

அந்தவகையில் இந்திய அரசிடம் இருந்து ஒரு புதிய அறிவிப்பு வந்துள்ளது.மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்திடம் இருந்து NIC என்று சொல்லப்படுகின்ற NATIONAL INFORMATION CENTER ல் பணிபுரிய பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியிடங்களின் எண்ணிக்கை:

Scientist-B(288)
Technical assistance-A(207)

வயது வரம்பு:

பொது பினவருக்கான வயது வரம்பு 30 எனவும் பட்டியலின விண்ணப்பதாரர்களுக்கு 35 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி:

B.E or B.Tech or M.sc or M.phil

தேர்வுக்கட்டணம்:

பொதுப்பிரிவினருக்கு ₹800

பட்டியலினத்தவர் அல்லது பெண் விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் ஏதும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய தேதி:

26-02-2020 முதல் 26-03-2020 வரை விண்ணபங்களை ஆன்லைனில் செலுத்தலாம்.

மேலும் தகவலுக்கு:

https://www.calicut.nielit.in/nic/ என்ற உரலியின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.