Home Blog Page 5740

ஆளுமையின் அடையாளம் ஜெயலலிதா..! 72 வது பிறந்தநாளை பெண் குழந்தைகளின் பாதுகாப்பு தினமாக அறிவிப்பு..!!

0

ஆளுமையின் அடையாளம் ஜெயலலிதா..!
72 வது பிறந்தநாளை பெண் குழந்தைகளின் பாதுகாப்பு தினமாக அறிவிப்பு..!!

தமிழக அரசியல் வரலாற்றில் தனக்கென்று தனி முத்திரை பதித்தவர் முன்னாள் முதல் ஜெயலலிதா. அவரது 72 வது பிறந்தநாளை பெண் குழந்தைகளின் பாதுகாப்பு தினமாக சட்டசபையில் அதிமுக அரசு அறிவித்து கடைபிடித்து வருகிறது.

தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் ஜெயலலிதா வின் உருவ படத்திற்கு மாலையிட்டு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. இந்த பிறந்தநாளில் மரக்கன்றுகளை நட்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்துள்ளார். சென்னையில் உள்ள பொதுப்பணித்துறை வளாகத்தில் குழந்தைகள் தின பாதுகாப்பு நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு விழாவை சிறப்பிக்கிறார்.

மேலும், அதிமுக வின் தலைமை அலுவலகத்தில் தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஓ.பி.எஸ் மற்றும் அதிமுக கட்சியின் அமைச்சர்களும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் ஜெயலலிதா வின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்துகஜெயலலிதா இவரின் பிறந்தநாளை பெண் குழந்தைகளின் பாதுகாப்பு தினமாக அதிமுக அரசு அறிவித்ததோடு மட்டுமல்லாமல் அரசாணையில் வெளியிட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தமிழக அரசியலில் தனித்துவமான அரசியலை செய்தவர்.

எம்ஜிஆருக்கு பிறகு அதிகமு வை தொடர்ந்து ஆட்சியில் அமர வைத்த புரட்சி தலைவியாக இருந்தார். இவருக்கு பெண்களிடையே பெருமளவு ஆதரவு இருந்தது. அரசியல் வரலாற்றில் ஆளுமையின் அடையாளமாக இருந்தவர் செல்வி ஜெயலலிதா என்பது கடந்தகால வரலாறாகும்.

இந்தியா முழுவதும் பரவியது அரவிந்த் கெஜ்ரிவாலின் திட்டம்: அதிரடி அறிவிப்புகள்

0
இந்தியா முழுவதும் பரவியது அரவிந்த் கெஜ்ரிவாலின் திட்டம்: அதிரடி அறிவிப்புகள்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மூன்றாவது முறையாக சமீபத்தில் பதவியேற்றார் என்பது தெரிந்ததே. பாஜக மற்றும் காங்கிரஸ் என இரண்டு தேசிய கட்சிகளை அவர் வீழ்த்தி மீண்டும் பதவியை பெற்றுள்ளது பெரும் சாதனையாக கருதப்படுகிறது. அவரது வெற்றிக்கு முக்கிய காரணம் பெண்கள் வாக்குகள் ஒட்டுமொத்தமாக அவருக்கு கிடைத்தது தான்

பெண்களுக்கு அவர் பல்வேறு சலுகைகளை வழங்கினார். குறிப்பாக மெட்ரோ ரயில் மற்றும் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் என்பது அனைத்து பெண்களையும் ஒட்டுமொத்தமாக கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த மாபெரும் வெற்றிக்கு காரணமாக இருந்தது பெண்களுக்கான இலவச பயணம் திட்டம் தான் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்தியா முழுவதும் பரவியது அரவிந்த் கெஜ்ரிவாலின் திட்டம்: அதிரடி அறிவிப்புகள்

இந்த நிலையில் டெல்லியை அடுத்து மேலும் சில மாநிலங்களில் இலவச பேருந்து பயணம் குறித்த திட்டம் அறிவிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. முதல்கட்டமாக ஜார்க்கண்ட் மாநில முதல்வர் இந்த அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளார். தெலுங்கானா உள்பட மேலும் ஒரு சில மாநிலங்களில் இந்த திட்டம் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதால் கெஜ்ரிவாலின் திட்டம் இந்தியா முழுவதும் பரவ உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

9 ரன்களே வெற்றி இலக்கு: நியுசிலாந்து சாதனை வெற்றி !

0

9 ரன்களே வெற்றி இலக்கு: நியுசிலாந்து சாதனை வெற்றி !

இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் நியுசிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றுள்ளது.

நியுசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 5 டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. அதன் பின் நடந்த ஒருநாள் தொடரை நியுசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி கடந்த 21 ஆம் தேதி வெல்லிங்க்டன் மைதானத்தில் தொடங்கியது.

இந்திய அணியில் ரஹானே (46), மயங்க்(34) மற்றும் ஷமி (21) ஆகியோரைத் தவிர மற்ற அனைவரும் சொதப்ப இந்தியா 165 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அபாரமாக வீசிய டிம் சவுத்தி மற்றும் ஜேமீஸன் ஆகியோர் தலா 4 விக்கெட்களைக் கைப்பற்றினர். இதையடுத்து நேற்ற்று தங்கள் இன்னிங்ஸை துவங்கிய நியுசிலாந்து அணி நிதானமாக விக்கெட்களைப் பறிகொடுக்காமல் விளையாடியது. அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் 89 ரன்களில் அவுட் ஆகி சதமடிக்கும் வாய்ப்பை இழந்தார். மற்றொரு வீரரான ராஸ் டெய்லர் 44 ரன்கள் சேர்த்தார்.

9 ரன்களே வெற்றி இலக்கு: நியுசிலாந்து சாதனை வெற்றி !

இதையடுத்து இரண்டாம் நாள் ஆட்டமுடிவில் நியுசிலாந்து 216 ரன்கள் சேர்த்து 5 விக்கெட்களை இழந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவை விட 51 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. இன்று தொடர்ந்து ஆடிய நியுசிலாந்து அணி மேலும் 132 ரன்கள் சேர்த்து 248 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களயும் இழந்து தங்கள் ஆட்டத்தை முடித்துக் கொண்டது. இதன் மூலம் நியுசிலாந்து அணி 183 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. சிறப்பாக பந்துவீசிய இந்தியாவின் இஷாந்த் சர்மா 5 விக்கெட்களைக் கைப்பற்றினார். இது அவரது 11 ஆவது 5 விக்கெட் இன்னிங்ஸாகும்.

அதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரரான பிருத்வி ஷா 14 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். அதன் பின் வந்த புஜாரா ஆமை வேகத்தில் விளையாண்டு கடைசியி 11 ரன்களில் வெளியேறினார். பெரிதும் எதிர்பார்க்கபப்டட் கோலி 19 ரன்களில் வெளியேற, மயங்க் அகர்வால் அரைசதம் அடித்து 58 ரன்களில் அவுட் ஆனார். முதல் இன்னிங்ஸ் போலவே பொறுப்புடன் விளையாடி வரும் ரஹானே 25 ரன்களுடனும் ஹனுமா விஹாரி 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா மூன்றாம் நாள் ஆட்டமுடிவில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 144 ரன்கள் சேர்த்துள்ளது. நியுசிலாந்தை விட இந்தியா 39 ரன்கள் பின் தங்கிய நிலையில் இருந்தது.

9 ரன்களே வெற்றி இலக்கு: நியுசிலாந்து சாதனை வெற்றி !

இதையடுத்து இன்று தொடர்ந்து ஆடிய இந்திய அணி மேற்கொண்டு 47 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் 191 ரன்கள் சேர்த்த இந்தியா முதல் இன்னிங்ஸில் 183 பின் தங்கியதால் நியுசிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக 9 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. நியுசிலாந்து தரப்பில் அபாரமாக பந்துவீசிய சவுத்தி 5 விக்கெட்களும் ட்ரண்ட் போல்ட் 4 விக்கெட்களும் கைப்பற்றினர்.

இதன் பின்னர் களமிறங்கிய நியுசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 10 ரன்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்தது. இந்த வெற்றி நியுசிலாந்து அணிக்கு 100 ஆவது வெற்றியாகும். இரண்டு  இன்னிங்ஸிலும் சிறப்பாக பந்துவீசிய சவுத்தி ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பெண்களுக்கு பிரச்சினை வந்தால் முதல் ஆளாக குரல் கொடுப்பேன்! பீப் பாடல் புகழ் சிம்பு பேச்சு..!!

0

பெண்களுக்கு பிரச்சினை வந்தால் முதல் ஆளாக குரல் கொடுப்பேன்! பீப் பாடல் புகழ் சிம்பு பேச்சு..!!

திருச்சி கல்லூரி விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் சிம்பு, பெண்களுக்கு ஏதாவது பிரச்சினை வந்தால் நான் முதல் ஆளாக குரல் கொடுப்பேன் என்று வசனம் பேசியுள்ளார்.

நான் சினிமாவில் வளரக்கூடாது என்று சிலர் தடுக்கிறார்கள். தற்போது அந்த தடைகளை மீறி வெளியே வந்துள்ளேன். நான் ஏன் கோபப்படுகிறேன் என்றும் விளக்கத்துடன் மேடையில் கூறினார். எல்லாவற்றையும் தாண்டி தனது ரசிகர்கள் மீது வைத்துள்ள அதிகபட்ச அன்பால்தான் சமூக வலைதளங்களில் தன்னை வச்சு செய்வதாக தன்னையே கலாய்த்து பேசினார்.

பெண்களுக்காக குரல் கொடுப்பேன் என்று பேசிய இதே நடிகர் சிம்புதான் பெண்களுக்கு எதிரான பீப் பாடலை பாடி வெளியிட்டார். அந்த சர்ச்சை மாதர் சங்கம் வரை இழுத்துச் சென்றது. மேலும் தனது சினிமா படங்களில் பெண்களுக்கு எதிரான பாடல்களையும் இவர் இயற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

திருவாதிரைக்கு முன்பு திமுக எம்.பி நடத்தும் கல்லூரியில் வெடித்த 4 வது சம்பவம்! கதவை திறந்து பார்த்தால் மீண்டும்…?

0

திருவாதிரைக்கு முன்பு திமுக எம்.பி நடத்தும் கல்லூரியில் வெடித்த 4 வது சம்பவம்! கதவை திறந்து பார்த்தால் மீண்டும்…?

சென்னை பொத்தேரியில் அமைந்துள்ள எஸ்.ஆர்.எம் கல்லூரியில் மீண்டும் ஒரு தற்கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த கல்லூரி பெரம்பலூர் தொகுதி எம்.பியான பச்சமுத்து அவர்களுக்கு சொந்தமான கல்லூரியாகும்.

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஆஷாராணா என்ற மாணவி எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக விடுதியில் தங்கி பி.டெக் 2 ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். வழக்கமாக சரியான நேரத்திற்கு கல்லூரிக்கு கிளம்பவிடும் ஆஷாராணா இன்று காலை வெகு நேரமாகியும் அவரது அறையின் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த கல்லூரி நிர்வாகத்தினர் அறையின் கதவை உடைக்க முயற்சி செய்தனர்.

சில நிமிடங்களில் கதவு உடைத்தவுடன் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. இரவு தங்கியிருந்த அறையில் மாணவி ஆஷாராணா துப்பட்டாவால் தூக்கிட்டு மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இச்சம்பவம் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவி இறந்ததற்கான காரணத்தை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

படிப்பினால் ஏற்பட்ட மன உளைச்சலா.? காதல் சம்பந்தபட்ட பிரச்சினையா..? குடும்பத்தில் ஏதாவது சிக்கலா..? அல்லது கல்லூரியில் ஆசிரியர்களாலோ, சக மாணவர்களாலோ ஏதேனும் பிரச்சினையா என்று பல்வேறு வகையில் விசாரணை உடனடியாக முடுக்கிவிடப்பட்டுள்ளது. இதே கல்லூரியில் சென்ற வருடம் மூன்று மாணவ மாணவிகள் இறந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

கோலி சில தவறுகள் செய்தார்: அதனால் தோல்வி நேரிடலாம்! கடிந்துகொன்ட முன்னாள் வீரர் !

0

கோலி சில தவறுகள் செய்தார்: அதனால் தோல்வி நேரிடலாம்! கடிந்துகொன்ட முன்னாள் வீரர் !

நியுசிலாந்து பேட்டிங்கின் போது கோலி செய்த சில தவறுகளால் இந்திய அணி தோல்வியை தழுவலாம் என முன்னாள் வீரர் விவிஎஸ் லஷ்மன் தெரிவித்துள்ளார்.

நியுசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 5 டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. அதன் பின் நடந்த ஒருநாள் தொடரை நியுசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நேற்று முன் தினம் வெல்லிங்க்டன் மைதானத்தில் தொடங்கியது.

இதில் இந்தியா முதல் இன்னிங்ஸில் மோசமாக ஆடி 165 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து நேற்ற்று தங்கள் இன்னிங்ஸை துவங்கிய நியுசிலாந்து அணி நிதானமாக விக்கெட்களைப் பறிகொடுக்காமல் விளையாடியது. அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் 89 ரன்களில் அவுட் ஆகி சதமடிக்கும் வாய்ப்பை இழந்தார். மற்றொரு வீரரான ராஸ் டெய்லர் 44 ரன்கள் சேர்த்தார்.

இதையடுத்து இரண்டாம் நாள் ஆட்டமுடிவில் நியுசிலாந்து 216 ரன்கள் சேர்த்து 5 விக்கெட்களை இழந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவை விட 51 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. இன்று தொடர்ந்து ஆடிய நியுசிலாந்து அணி மேலும் 132 ரன்கள் சேர்த்து 248 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களயும் இழந்து தங்கள் ஆட்டத்தை முடித்துக் கொண்டது. இதன் மூலம் நியுசிலாந்து அணி 183 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. சிறப்பாக பந்துவீசிய இந்தியாவின் இஷாந்த் சர்மா 5 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

இது அவரது 11 ஆவது 5 விக்கெட் இன்னிங்ஸாகும். அதன் பின் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்தியா மூன்றாம் நாள் முடிவில் 144 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது. இப்போது வரை இந்தியா 39 ரன்கள் பின் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கோலி சில தவறுகள் செய்தார்: அதனால் தோல்வி நேரிடலாம்! கடிந்துகொன்ட முன்னாள் வீரர் !

இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் சில தவறுகள் செய்ததாக முன்னாள் கிரிக்கெட் வீரர் லஷ்மன் தெரிவித்துள்ளார். மதிய உணவு இடைவேளையின் போது பேசிய அவர் ‘நியுசிலாந்தின் பின் வரிசை ஆட்டக்காரர்களை அதிக ரன்கள் சேர்க்கவிட்டார் இந்தியா கேப்டன். 7ஆவது விக்கெட் விழுந்தபோது புதிய பந்து எடுக்கப்பட்டிருந்த நிலையில் கோலி வேகப்பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்தாமல் அஸ்வினுக்கு அதிக ஓவர்களைக் கொடுத்தார்.

நம்மிடம் மூன்று தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்தார்கள். கடைசி மூன்று விக்கெட்டுக்கு மட்டும் 100 ரன்களுக்கு மேல் கொடுத்தனர். அதனால் நியுசிலாந்து அணி 183 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இல்லையென்றால் அவர்கள் 100 ரன்களுக்குள் அவுட் ஆகி இருப்பார்கள். அதேப்போல பீல்டிங் செட் செய்வதிலும் கோலி சில தவறுகளை செய்தார். கோலி செய்த இந்த தவறுகளால் இதனால் நாம் முதல் போட்டியை இழக்கக்கூட நேரிடலாம்’ என அவர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் ஜிந்தாபாத் சொன்ன சிறுமியைக் கொன்றால் 10 லட்சம் – ஸ்ரீராம் சேனா அமைப்பின் பிரமுகர் சர்ச்சைப் பேச்சு !

0

பாகிஸ்தான் ஜிந்தாபாத் சொன்ன சிறுமியைக் கொன்றால் 10 லட்சம் – ஸ்ரீராம் சேனா அமைப்பின் பிரமுகர் சர்ச்சைப் பேச்சு !

கர்நாடகா மாநிலத்தில் பெங்களூரு நகரில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி ஒன்று நடந்தது.  இந்த பேரணியில் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் தலைவரான ஓவைசி கலந்து கொண்டார்.

இந்த பேரணியில் கலந்து கொண்டவர்களில் அமுல்யா என்ற இளம்பெண் திடீரென்று பாகிஸ்தானிற்கு ஆதரவாக ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்று கோஷம் எழுப்பினார். இது பேரணியில் கலந்து கொண்டவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து கோஷமிட்ட அவரை தடுத்து நிறுத்திய ஓவைசி, இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இதனையடுத்து இந்தியாவிற்கு எதிராக செயல்பட்ட அந்த இளம்பெண் மீது 124ஏ பிரிவின் கீழ் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.  மேலும் இது குறித்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது.  இதன்பின் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் கூறப்படுகிறது. மேலும் அந்த பெண்ணுக்கு ஆதரவாக கொடி பிடித்துச் சென்ற அவரது தோழியையும் கைது போலிஸ் செய்தது.

பாகிஸ்தான் ஜிந்தாபாத் சொன்ன சிறுமியைக் கொன்றால் 10 லட்சம் – ஸ்ரீராம் சேனா அமைப்பின் பிரமுகர் சர்ச்சைப் பேச்சு !

ஏற்கனவே குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடி வருபவர்களை பாகிஸ்தானிற்கு ஆதரவாக பாஜகவினர் சித்தரித்து வரும் நிலையில் தற்போது இந்த பெண் பாகிஸ்தானிற்கு ஆதரவாக கோஷமிட்டது அரசியல் ரீதியாகக் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியின் சார்பாக அவரது தந்தை மன்னிப்புக் கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.

போலீஸார் இந்த சர்ச்சையில் சடட்ப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் ஸ்ரீராம் சேனா எனும் அமைப்பைச் சேர்ந்த சஞ்சீவ் மராதி என்பவர் ’அமுல்யாவைப் போலிஸ் வெளியில் விட்டால் கொலை செய்துவிடுவேன். அவரைக் கொன்றால் 10 லட்சம் பரிசளிக்கப்படும்’ என அறிவித்துள்ளார். அவரது இந்த வன்முறைப் பேச்சுக்குப் பலரும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.

தனுஷ் படத்தின் போஸ்டரும் இயேசுவின் ஓவியமும் – அடுத்த போஸ்டர் சர்ச்சை !

0

தனுஷ் படத்தின் போஸ்டரும் இயேசுவின் ஓவியமும் – அடுத்த போஸ்டர் சர்ச்சை !

தனுஷின் ஜகமே தந்திரம் போஸ்டர் இயேசுநாதரின் புகழ்பெற்ற ஓவியத்தின் காப்பி என சொல்லப்படுகிறது.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் சில ஆண்டுகளுக்கு முன்னதாகவே ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இடையில் அவருக்கு ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பு வந்ததால் பேட்ட படத்தை இயக்கி முடித்துவிட்டு தனுஷுக்கான கதையை அவர் தயார் செய்தார்.

கடந்த ஆண்டு இறுதியில் லண்டனில் தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு 60 நாட்கள் நடந்தது. இந்த படத்தில் லண்டனைச் சேர்ந்த சில ஹாலிவுட் நடிகர்கள் நடித்தனர். இந்நிலையில் அங்கிருந்து வந்த படக்குழு இந்தியாவில் சில நாட்கள் படப்பிடிப்பை நடத்தியது. இந்நிலையில் படப்பிடிப்பு முழுவதும் முடிந்துள்ள நிலையில் படத்தின் பின் தயாரிப்பு வேலைகள் நடைபெற்று வருகின்றன.

தனுஷ் படத்தின் போஸ்டரும் இயேசுவின் ஓவியமும் – அடுத்த போஸ்டர் சர்ச்சை !

இந்நிலையில் மூன்று நாட்களுக்கு முன்னதாக இந்த படத்தின் தலைப்பு ’ஜகமே தந்திரம்’ என்று அறிவிக்கப்பட்டது. தலைப்போடு படத்தின் போஸ்டரும் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்தது. அந்த போஸ்டரில் தனுஷ் நடுவில் அமர்ந்திருக்க, அவருக்கருகில் வரிசையாக பலர் நின்றுகொண்டும் உட்கார்ந்து கொண்டும் இருப்பது போல வடிவமைக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இந்த போஸ்டர் லியானர்டோ டாவின்ஸியின் புகழ்பெற்ற ஓவியமான த லாஸ்ட் சப்பர் (The last Supper) என்ற ஓவியத்தை ஒட்டி உருவாக்கப்பட்டுள்ளதாக சிலர் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அந்த குறிப்பிட்ட ஓவியமானது இயேசுநாதர் சிலுவையில் ஏற்றப்படுவதற்கு முன்னதாக அருந்திய கடைசி இரவு உணவைக் குறிக்கும் விதமாக வரையப்பட்டது. உலக அளவில் புகழ்பெற்ற அந்த ஓவியத்தின் பாதிப்பில் தனுஷ் படத்தின் இந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

முதலில் வேலை கிடைக்குமா என்று பயந்தேன்! ஸ்விக்கியில் 6800 ஆர்டரை டெலிவரி செய்து சாதனை படைத்த சிங்கப்பெண்..!!

0

முதலில் வேலை கிடைக்குமா என்று பயந்தேன்! ஸ்விக்கியில் 6800 ஆர்டரை டெலிவரி செய்து சாதனை படைத்த சிங்கப்பெண்..!!

நவீன யுகத்தில் பெண்கள் சாதிக்காத துறைகளே இல்லை என்று கூறலாம். மண்ணில் செய்யும் விவசாயம் முதல் விண்ணில் செலுத்தும் ராக்கெட் வரை தனது அசாத்திய திறமையின் மூலம் பெண்கள் சாதித்து வருகிறார்கள். அந்த வகையில் தன் வயதை ஒரு காரணமாக நினைக்காமல் கடுமையான உழைப்பின் மூலம் உணவு டெலிவரி செய்யும் வேலையில் ஒரு பெண்மணி சாதித்துள்ளார்.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த சுதா ஜெகதீஷ் கடந்த 2019 ஆம் ஆண்டு ஆன்லைன் மூலம் உணவு டெலிவரி செய்யும் தனியார் நிறுவனமான ஸ்விக்கியில் வேலைக்கு சேர முயன்றுள்ளார். வயது சற்று அதிகம் என்பதால் ஆரம்பத்தில் தயக்கத்துடன் வேலை கிடைக்குமா என்று சந்தேகத்துடன் சென்றவருக்கு, வேலைக்கு தேர்வு செய்யும் நேர்காணலில் பச்சைக்கொடி காட்டப்பட்டது.

இதையடுத்து வேலை கிடைத்த மகிழ்ச்சியில் படு ஜோராக செயல்பட்டுள்ளார். பணியின் ஆரம்ப காலத்தில் இருந்து இதுவரை 6838 ஆர்டர்களை வெற்றிகரமாக டெலிவரி செய்துள்ளார். அவரின் மன தைரியம் அவரை இந்தளவிற்கு பயணிக்க வைத்துள்ளது. ஆண்கள் செய்யக்கூடிய வேலையில் சாதித்து காட்டிய சுதாவை பார்த்து இப்போது ஆண்களும் பெருமைப்படுவதாக கூறுகிறார்.
கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் முடித்து தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த சுதாவிற்கு 2015 ஆம் ஆண்டு நடந்த விபத்தால் கட்டாய ஓய்வு எடுக்கும் நிலை ஆகிவிட்டது.

சில வருடங்களை கடந்து ஸ்விக்கியில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தையும் கூறினார்; மழை நேரத்தில் எனக்கான ஆர்டர் ஒன்று வந்தது, ஆர்டரை எடுத்துக்கொண்டு சரியான நேரத்திற்கு டெலிவரி செய்தேன். டெலிவரிக்கு பிறகு கொட்டும் மழையால் முழுவதும் நனைந்து வெளியே குளிரில் நடுங்கினேன். நான் வெளியே நடுங்குவதை பார்த்து வீட்டில் இருந்த வெளியே வந்த பெண்மணி, தண்ணீரை துடைத்துக்கொள்ள டவலை கொடுத்துவிட்டு, குடிக்க டீ வேண்டுமா என்று கேட்டார். அந்த நாளை என்னால் மகிழ்ச்சியாகவும் மறக்க முடியாத நாளாகவும் அமைந்தது.

ஒவ்வொரு டெலிவரியும் எனக்கு புதுப்புது அனுபவங்களை தருகிறது என்று புன்னகையுடன் சுதா கூறுகிறார். தொடர்ந்து வெற்றியை நோக்கி பயணிக்கும் சிங்கப்பெண் சுதாவிற்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

சர்ச்சை சாமியார் நித்தியானந்தாவின் புது வீடியோ

0

சர்ச்சை சாமியார் நித்தியானந்தாவின் புது வீடியோ

சர்ச்சைக்கு பெயர் பெற்ற சாமியாரான நித்யானந்தா சமீபத்தில் தினம் தினம் ஒரு காணொலியை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

இதுநாள் வரை அவர் எங்கே உள்ளார் என்ற தகவல் யாருக்கும் கிடைக்கப் பெறவில்லை.இருந்த போதிலும் நித்யானந்தா வீடியோ மூலம் மக்களிடம் தனது கருத்துக்களை தெரிவித்து வருகிறர்.

சிவராத்திரிக்காக அவர் வெளியிட்ட காணொலியில் கூறிய “லெஜன்ட்ஸ் செலிபிரேட் சிவராத்திரி” என்ற வாசகம் மிகவும் பிரபலமாக இனையத்தில் வலம்வந்தது.

இதனை தொடர்ந்து தற்போது ஒரு காணொலி பதிவை வெளியிட்டுள்ளார்.அதில் கிருஸ்துவர்களுக்கு எப்படி ஒரு வாட்டிகன் நகரம் உள்ளதோ அதுபோல இந்துக்களுக்கு கைலாசத்தை அமைக்க வேண்டும் என எண்ணினேன்.

கைலாசத்தை அமைக்கும் பணிகள் முடிவடைந்து தற்போது சில நாடுகளுடன் தூதரக உறவுகளுக்கான பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது.ஆனால் கைலாசதேசம் எங்கே உள்ளது என்பதை பற்றி யாருக்கும் இப்போது தெரிவிக்கப் போவதில்லை.

நான் இத்துடன் தமிழ்நாட்டிற்கு வரப்போவது இல்லை.என்னுடைய சொத்துகள் எனக்கு பிறகு யார் அனுபவிக்க வேண்டும் என்பது பற்றி உயில் எழுதிவிட்டேன் என்றும் அந்த காணொலியில் நித்யாணந்தா தெரிவித்துள்ளார்.