கோலி சில தவறுகள் செய்தார்: அதனால் தோல்வி நேரிடலாம்! கடிந்துகொன்ட முன்னாள் வீரர் !

0
58

கோலி சில தவறுகள் செய்தார்: அதனால் தோல்வி நேரிடலாம்! கடிந்துகொன்ட முன்னாள் வீரர் !

நியுசிலாந்து பேட்டிங்கின் போது கோலி செய்த சில தவறுகளால் இந்திய அணி தோல்வியை தழுவலாம் என முன்னாள் வீரர் விவிஎஸ் லஷ்மன் தெரிவித்துள்ளார்.

நியுசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 5 டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. அதன் பின் நடந்த ஒருநாள் தொடரை நியுசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நேற்று முன் தினம் வெல்லிங்க்டன் மைதானத்தில் தொடங்கியது.

இதில் இந்தியா முதல் இன்னிங்ஸில் மோசமாக ஆடி 165 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து நேற்ற்று தங்கள் இன்னிங்ஸை துவங்கிய நியுசிலாந்து அணி நிதானமாக விக்கெட்களைப் பறிகொடுக்காமல் விளையாடியது. அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் 89 ரன்களில் அவுட் ஆகி சதமடிக்கும் வாய்ப்பை இழந்தார். மற்றொரு வீரரான ராஸ் டெய்லர் 44 ரன்கள் சேர்த்தார்.

இதையடுத்து இரண்டாம் நாள் ஆட்டமுடிவில் நியுசிலாந்து 216 ரன்கள் சேர்த்து 5 விக்கெட்களை இழந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவை விட 51 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. இன்று தொடர்ந்து ஆடிய நியுசிலாந்து அணி மேலும் 132 ரன்கள் சேர்த்து 248 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களயும் இழந்து தங்கள் ஆட்டத்தை முடித்துக் கொண்டது. இதன் மூலம் நியுசிலாந்து அணி 183 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. சிறப்பாக பந்துவீசிய இந்தியாவின் இஷாந்த் சர்மா 5 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

இது அவரது 11 ஆவது 5 விக்கெட் இன்னிங்ஸாகும். அதன் பின் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்தியா மூன்றாம் நாள் முடிவில் 144 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது. இப்போது வரை இந்தியா 39 ரன்கள் பின் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் சில தவறுகள் செய்ததாக முன்னாள் கிரிக்கெட் வீரர் லஷ்மன் தெரிவித்துள்ளார். மதிய உணவு இடைவேளையின் போது பேசிய அவர் ‘நியுசிலாந்தின் பின் வரிசை ஆட்டக்காரர்களை அதிக ரன்கள் சேர்க்கவிட்டார் இந்தியா கேப்டன். 7ஆவது விக்கெட் விழுந்தபோது புதிய பந்து எடுக்கப்பட்டிருந்த நிலையில் கோலி வேகப்பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்தாமல் அஸ்வினுக்கு அதிக ஓவர்களைக் கொடுத்தார்.

நம்மிடம் மூன்று தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்தார்கள். கடைசி மூன்று விக்கெட்டுக்கு மட்டும் 100 ரன்களுக்கு மேல் கொடுத்தனர். அதனால் நியுசிலாந்து அணி 183 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இல்லையென்றால் அவர்கள் 100 ரன்களுக்குள் அவுட் ஆகி இருப்பார்கள். அதேப்போல பீல்டிங் செட் செய்வதிலும் கோலி சில தவறுகளை செய்தார். கோலி செய்த இந்த தவறுகளால் இதனால் நாம் முதல் போட்டியை இழக்கக்கூட நேரிடலாம்’ என அவர் தெரிவித்துள்ளார்.

author avatar
Parthipan K