தனுஷ் படத்தின் போஸ்டரும் இயேசுவின் ஓவியமும் – அடுத்த போஸ்டர் சர்ச்சை !

0
57

தனுஷ் படத்தின் போஸ்டரும் இயேசுவின் ஓவியமும் – அடுத்த போஸ்டர் சர்ச்சை !

தனுஷின் ஜகமே தந்திரம் போஸ்டர் இயேசுநாதரின் புகழ்பெற்ற ஓவியத்தின் காப்பி என சொல்லப்படுகிறது.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் சில ஆண்டுகளுக்கு முன்னதாகவே ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இடையில் அவருக்கு ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பு வந்ததால் பேட்ட படத்தை இயக்கி முடித்துவிட்டு தனுஷுக்கான கதையை அவர் தயார் செய்தார்.

கடந்த ஆண்டு இறுதியில் லண்டனில் தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு 60 நாட்கள் நடந்தது. இந்த படத்தில் லண்டனைச் சேர்ந்த சில ஹாலிவுட் நடிகர்கள் நடித்தனர். இந்நிலையில் அங்கிருந்து வந்த படக்குழு இந்தியாவில் சில நாட்கள் படப்பிடிப்பை நடத்தியது. இந்நிலையில் படப்பிடிப்பு முழுவதும் முடிந்துள்ள நிலையில் படத்தின் பின் தயாரிப்பு வேலைகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் மூன்று நாட்களுக்கு முன்னதாக இந்த படத்தின் தலைப்பு ’ஜகமே தந்திரம்’ என்று அறிவிக்கப்பட்டது. தலைப்போடு படத்தின் போஸ்டரும் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்தது. அந்த போஸ்டரில் தனுஷ் நடுவில் அமர்ந்திருக்க, அவருக்கருகில் வரிசையாக பலர் நின்றுகொண்டும் உட்கார்ந்து கொண்டும் இருப்பது போல வடிவமைக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இந்த போஸ்டர் லியானர்டோ டாவின்ஸியின் புகழ்பெற்ற ஓவியமான த லாஸ்ட் சப்பர் (The last Supper) என்ற ஓவியத்தை ஒட்டி உருவாக்கப்பட்டுள்ளதாக சிலர் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அந்த குறிப்பிட்ட ஓவியமானது இயேசுநாதர் சிலுவையில் ஏற்றப்படுவதற்கு முன்னதாக அருந்திய கடைசி இரவு உணவைக் குறிக்கும் விதமாக வரையப்பட்டது. உலக அளவில் புகழ்பெற்ற அந்த ஓவியத்தின் பாதிப்பில் தனுஷ் படத்தின் இந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K