சமீபத்தில் தளபதி விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடியாக ரெய்டு செய்தனர் என்பது தெரிந்ததே. இந்த ரெய்டு குறித்து அரசியல் தலைவர்கள் மற்றும் ஊடகங்கள் பல்வேறு செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
அவ்வாறு ஒரு ஊடகம் வெளியிட்ட செய்தியில் விஜய், விஜய் சேதுபதி உள்பட பல திரையுலக பிரபலங்கள் மதமாற்ற பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் அதற்காக அவர்கள் திரையுலகில் கிடைக்கும் கருப்பு பணத்தை பயன்படுத்தி வருவதாகவும் இதனை அறிந்து தான் மத்திய அரசு தகுந்த ஆவணங்களுடன் விஜய் வீட்டிலும் ஏஜிஎஸ் மற்றும் அன்புச்செழியன் வீட்டிலும் ரெய்டு செய்ததாகவும் செய்தி வெளியிட்டிருந்தது
இந்த செய்தியை பார்த்த விஜய்சேதுபதி தனது டுவிட்டர் தளத்தில் ”போய் வேற வேலை இருந்தா பாருங்கடா” என்று காட்டமாக விமர்சனம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் சேதுபதி மட்டுமின்றி நடிகை ஆர்த்தியும் தனது டுவிட்டர் தளத்தில் இந்த செய்தியை வெளியிட்ட ஊடகத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
பிரபல ஹாலிவுட் நடிகர் டுவெய்ன் ஜான்சன் என்ற ராக் டபிள்யூ.டபிள்யூ.ஈ என்னும் மல்யுத்தப் போட்டியில் பங்குபெற்று புகழ் பெற்று இருந்தார் என்பது தெரிந்ததே. இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்
இந்த நிலையில் மல்யுத்த போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பின் அவர் ’ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்’ உள்பட பல திரைப்படங்களில் முன்னணி கேரக்டர்களில் நடித்து வந்தார். திரையுலகுக்கு வந்த பின்னும் இவருக்கு ரசிகர்கள் குவிந்துள்ளனர்
இந்த நிலையில் ராக் மகள் சிமோன் ஜான்சன் என்பவர் தற்போது தந்தை வழியில் மல்யுத்த போட்டியில் களமிறங்க உள்ளார். 18 வயதாகும் இவர் சமீபத்தில் மல்யுத்தப் போட்டியில் விளையாட ஒப்பந்தம் ஆகி, தற்போது பயிற்சியை தொடங்க உள்ளதாகவும் விரைவில் இவர் தனது முதல் போட்டியை சந்திப்பார் என்றும் கூறப்படுகிறது
இது குறித்து சீமான் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது: ‘எனது குடும்பத்திற்கு மல்யுத்தத்துடன் இருக்கும் தொடர்பு தொடர்ந்து வருகிறது என்பதை உணர்வது எனக்கு அத்தனை முக்கியமான விஷயம். தற்போது அதனைத் தொடர எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. மல்யுத்தம் செய்வதற்கு மட்டுமல்ல, ஒரு பெரிய பாரம்பரியத்தை தொடர்வதற்கும்தான்’ என்று தெரிவித்துள்ளார்.
குழந்தை இல்லாமல் 80 ஆண்டு வாழ்க்கை! அன்பின் இலக்கணமாக வாழும் காதல் ஜோடி..!!
அமெரிக்கா நாட்டின் ஆஸ்டின் நகரின் அருகேயுள்ள லான்ஹார்ன் கிராமத்தில் வசிக்கும் ஜான் மற்றும் சார்லோட் ஹென்டர்சன் தம்பதி உலகில் வாழும் அதிக வயதான தம்பதியராக கின்னஸ் சான்றிதழ் மூலம் கடந்த ஆண்டு அங்கீகரிக்கப்பட்டு காதலுக்கு பெருமை சேர்த்தனர்.
இவர்கள் இருவரும் முதன்முதலாக, 1934 ம் ஆண்டு டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் சந்தித்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
ஜான் தனது காதலை வெளிப்படுத்த சார்லோட்டிடம் மலர்கொத்தை கொடுத்து அன்பை பரிமாறிக்கொண்டார். இருவரும் இரண்டாம் உலகப்போரின் தொடக்க காலத்தில் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் காதல் வாழ்க்கை 100 வயதுகளை தாண்டி உண்மையான அன்பை பறைசாற்றுகிறது.
இன்னும் இணைபிரியாத தம்பதியர்களாக வாழும் இவர்கள், தங்களது 80 ஆவது திருமண நாளை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொண்டாடினர். திருமண பந்தம் நீடித்து தொடர்வதற்கான ரகசியமாக இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்வதை முக்கிய காரணமாக சொல்கிறார்கள். இவர்களின் காதல் வாழ்க்கையை கடந்த ஆண்டு அமெரிக்க ஊடகங்கள் மிக அழகாக வர்ணித்து வெளியிட்டிருந்தன.
இந்த அழகான காதல் ஜோடி அடிக்கடி கடந்தகால நிகழ்வுகளை பேசி மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதாக ஜோடியை பற்றி அறிந்தவர்கள் கூறியிருந்தனர்.
தனது காதல் வாழ்க்கையை அன்பால் நிரப்பி இருவரும் விட்டுக்கொடுத்து வாழ்ந்துவந்த இவர்களுக்கு கடவுள் குழந்தை பாக்கியத்தை தராமல் போனது துரதிஷ்டமே. குழந்தை இல்லாததை ஒரு பெரிய குறையாக நினைக்காமல் இருவரும் அன்போடு 80 ஆண்டுகாலத்தை கடந்தது வியப்பான ஒன்றுதான்.
கடந்த ஆண்டு இவர்களின் காதலை உலகமே போற்றியது. உலகமே அன்பால்தான் இயங்குகிறது என்பதற்கு, இவர்களின் காதல் வாழ்க்கையும் ஒரு எடுத்துக்காட்டாகும்.
வாடிக்கையாளருக்கு பீட்சாவை டெலிவரி செய்யும் முன்னர் அதன் மீது எச்சில் துப்பி டெலிவரி செய்த டெலிவரி பாய் ஒருவருக்கு இரண்டரை ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
துருக்கியில் பீட்சா டெலிவரி செய்யும் நபர் ஒருவர் வாடிக்கையாளர் ஒருவருக்கு பீட்சா டெலிவரி செய்தார். அவர் டெலிவரி செய்த பீட்சாவின் பேக்கிங் சற்று வித்தியாசமாக இருந்ததை பார்த்து சந்தேகமடைந்த அந்த வாடிக்கையாளர் உடனே அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியை பார்த்தார். அப்போது டெலிவரி பாய் பீட்சாவை ஓபன் செய்து அதில் எச்சில் துப்பி இருந்தது தெரிய வந்தது.
உடனடியாக இது குறித்து வாடிக்கையாளர் போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்த விசாரணையில் அந்த வாடிக்கையாளர் இதற்கு முன்னர் பீட்சா டெலிவரி செய்த போது தன்னை ஏளனமாக பேசியதாகவும் அதற்காக அவரை பழிவாங்கும் வகையில் அடுத்தமுறை பீட்சா டெலிவரி செய்யும் போது எச்சில் துப்பியதாகவும் வாக்குமூலம் கொடுத்தார். இதனையடுத்து அந்த டெலிவரி நபருக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
உலகக்கோப்பை
இறுதி ஆட்டம்:மோதிக் கொண்ட இருநாட்டு வீர்ரகள்!ஐசிசி அளித்த தண்டனை!
தென் ஆப்பிரிக்காவில் கடந்த ஒரு மாதமாக 19 வயதுக்குட்பட்டோருக்கான ஜூனியர் உலகக்கோப்பை தொடர் நடைபெற்று வந்தது. இதில் தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய இந்திய அணி எளிதாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. அதேப்போல வங்கதேசமும் முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி கடந்த
9 ஆம் தேதி நடந்தது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் இந்தியாவை பேட் செய்ய பணித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய வீரர்கள் அனைவரும் சொதப்ப ஜெய்ஸ்வால் மட்டுமே அதிகபட்சமாக 88 ரன்களை சேர்த்தார். அதன் பின்னர் ஆடிய வங்கதேச அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தாலும் ஒருவழியாக போட்டியை வென்று முதல் முறையாகக் கோப்பையைக் கைப்பற்றியது.
கோப்பையைக் கைப்பற்றிய கொண்டாட்டத்தில் ஓய்வறையில் இருந்த வீரர்கள் அனைவரும் மைதானத்துக்குள் ஓடிவந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அப்போது அவர்களின் செய்கை இந்திய வீரர்களை சீண்டும் விதமாகவும் பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைக்கும் விதமாகவும் இருந்தது. இதற்கு
இந்திய வீரர்களான ரவி பிஷ்னாய் மற்றும் ஆகாஷ் சிங் ஆகியோர் எதிர்வினையாற்றினார். இதனால்
மைதானத்தில் கைகலப்பு உருவாகும் சூழல் ஏற்பட்டது. பின்னர் போட்டி நடுவர்கள் தலையிட்டு
வீரர்களை அனுப்பி வைத்தனர்.
ஆனாலும் பின்னர் இதுபற்றி போட்டி நடுவர்கள் மற்றும்
பிசிசிஐ சார்பில் ஐசிசியிடம் முறையிடப்பட்டது. இதையடுத்து
வங்கதேச அணி வீரர்களான
தோஹித் ஹிர்தாய், ஷமிம் ஹொசைன் ஆகியோருக்கு தலா 6 தகுதி இழப்பு புள்ளிகளையும்,
ராகிபுல் ஹசனுக்கு 5 தகுதி இழப்பு புள்ளிகளையும் வழங்கி ஐசிசி உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்திய
வீரர்களான ஆகாஷ் சிங் 5 புள்ளிகளும் ரவி பிஷ்னோய்
7 தகுதியிழப்புப்
புள்ளிகளும் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த தகுதியிழப்புப் புள்ளிகள் இனிவரும் போட்டிகளில் வீரர்களுக்குக் கணக்கிடப்படும் எனத் தெரிகிறது. தகுதியிழப்பு புள்ளிகள் கொடுக்கப்பட்டவர்கள் அனைவரும். குறைந்தது 6 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெண்களை இழிவுபடுத்தி பைக்கில் வசனம்; திரெளபதி இயக்குனரின் புகாரால் காவல்துறை நடவடிக்கை..!!
திரெளபதி படத்தின் டிரெய்லர் கடந்த ஜனவரி மாதம் இணையத்தில் வெளியாகி 4 மில்லியன் பார்வையாளர்களை தாண்டியது. இப்படத்தின் இயக்குனர் மோகன் ஜி பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகிய போதும், அனைத்து கேள்விகளுக்கும் சரியான பதில்களை தனது பேட்டியின் மூலம் விளக்கமளித்து விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். பெண்களுக்கு எதிராக திட்டமிட்டு நடத்தும் நாடக காதலை மையப்படுத்தி உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட கதைக்களமே திரெளபதி படம் என்று கூறியிருந்தார்.
இந்த இளைஞர்கள் மனதில் விஷத்தை விதைத்தவர்கள் களை எடுக்கப்பட வேண்டும்… https://t.co/0MbguLlJB7
திரெளபதி படத்தில் சொன்னது போலவே பெண்களை இழிவுபடுத்தும் வகையில் இளைஞர் ஒருவர் தனது பைக்கின் பின் புறத்தில் தவறான வாசகங்களை எழுதியுள்ளார். அந்த வாசகத்தை இயக்குனர் மோகன் ஜி தனது டுவிட்டர் பக்கத்தில்: இந்த இளைஞர்கள் மனதில் விஷத்தை விதைத்தவர்கள் உடனே களை எடுக்கப்பட வேண்டும் என அழுத்தமாக கூறியிருந்தார்.
இந்த பதிவு இணையத்தில் பல்வேறு நபர்களுக்கு வேகமாக பரவியது. சிலர் இந்த வாகனத்தின் விலாசத்தை இணையத்தின் மூலம் கண்டுபிடித்து பதிவிட்டனர். பின்னர், தவறான வாசகத்தை எழுதியிருந்த நபரை பிடித்து காவல்துறை தனது பாணியில் கவனித்ததாக சொல்லப்படுகிறது. மேலும், பெண்களுக்கு எதிராக இருந்த வாசகம் காவல்துறையினரின் கவனிப்பால் நீக்கப்பட்டது. பெண்களை இழிவுபடுத்தும் விதமாக இனி எழுத கூடாது என்றும் அந்த இளைஞருக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்த காவல்துறைக்கு திரெளபதி படத்தின் இயக்குனர் மோகன் ஜி டுவிட்டரில் தனது நன்றியை தெரிவித்தார். நாடக காதல் செய்பவர்களை இப்படித்தான் தோலுரிக்க வேண்டும் என்று இயக்குனரை பலர் பாராட்டி வருகின்றனர்.
சந்தானத்துக்கு
சான்ஸ் கொடுத்த சிம்பு:கவுண்டமணி சொன்னது என்ன தெரியுமா?
சந்தானத்துக்கு
மன்மதன் படத்தில் சிம்பு முதன் முதலாக வேடம் கொடுத்த போது அதை கவுண்டமணி விரும்பவில்லை
என சந்தானத்தின் நண்பரான லொள்ளு சபா சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் காமடி மற்றும் குணச்சித்திர பாத்திரங்களில் 500 படத்துக்கும் மேல் நடித்திருப்பவர் ’லொள்ளு சபா’ சாமிநாதன். லொள்ளு சபா எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சந்தானத்தோடு இணைந்து நடித்து புகழ்பெற்றதால் அவர் லொள்ளு சபா சாமிநாதன் என அழைக்கப்படுகிறார். இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் தன்னுடன்
லொள்ளு சபாவில் நடித்து இப்போது ஹீரோவாக மாறியுள்ள சந்தானம் பற்றி சில விஷயங்களைப்
பகிர்ந்து கொண்டுள்ளார்.
அதில் ‘சந்தானத்துக்கு முதலில் ஹீரோவாகும் ஆசை எல்லாம்
இல்லை. அது இப்போது வந்ததுதான். சந்தானம் மன்மதன் படத்துக்கு முன்னரே சில படங்களில்
நடித்து இருந்தாலும் அவருக்கு திருப்பு முனையை ஏற்படுத்தியது மன்மதன்தான். அந்த படத்தில்
சிம்பு சந்தானத்துக்கு பெரிய கதாபாத்திரத்தைக் கொடுத்தார். ஆனால் அதை அந்த படடத்தில்
நடித்த ஜாம்பவான் நடிகரான கவுண்டமணி விரும்பவில்லை.
சிம்புவிடம் சென்று அவன் சினிமாவைக் கலாய்த்து லொள்ளு
சபாவில் நடிக்கிறான். நீ ஏன் அவனுக்கு சான்ஸ் கொடுக்கற? எனக் கேட்க, அவரின் பேச்சைக்
காதில் வாங்காத சிம்பு, சந்தானத்தின் காட்சிகளை
அதிகமாக்கியதாகக் கேள்விப்பட்டேன்’ எனத் தெரிவித்துள்ளார்.
ஒருவேளை சிம்பு கவுண்டமணியின் பேச்சைக் கேட்டு சந்தானத்தை படத்தில் இருந்து தூக்கி இருந்தால் தமிழ் சினிமா முக்கியமான ஒரு நகைச்சுவை நடிகரை இழந்திருக்கும்.
இனிமேல் கொரோனா
வைரஸ் தாக்குதல் நோய்க்கு இதுதான் பெயர்:அறிவித்தது உலக சுகாதார நிறுவனம்!
உலகையே அச்சுறுத்தி
வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உலக சுகாதார நிறுவனம் பெயர் வைத்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல்வேறு நாடுகள் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சீனாவுடனான தொடர்பைத் துண்டித்து வருகின்றன. இதுவரை சீனாவில் சுமார் 1115 பேர் இந்த வைரஸ் தாக்குதலால் இறந்துள்ளனர். 47000
க்கும் மேற்பட்டோர் பாதிக்கப் பட்டுள்ளனர். இதனால் சீனாவின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
நேற்று மட்டும் சீனாவில் இந்த நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை
97 என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக 2003 ஆம் ஆண்டு பரவிய சார்ஸ் நோயின் மூலம்
இறந்தவர்களின் எண்ணிக்கையை (774) இந்த நோய் தாண்டியுள்ளது.
இந்த நோய் தொற்று வெகு விரைவாக ஒருவரிடம் இருந்து மற்றவருக்குப் பரவுதால் மக்கள் பீதிக்குள்ளாகியுள்ளனர். இந்த நோய் தொற்றால் கொரோனா பற்றி உலகத்துக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய மருத்துவரே இறந்துள்ளதால் மக்கள் முகமூடி அணிந்தே வெளியெ செல்கின்றனர். சீனா
மட்டுமல்லாது உலகம் முழுவதும் கொரோனா என்ற பெயரே பீதியைக் கிளப்பி வருகிறது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்குதலால் உருவாகும் நோய்க்கு உலக சுகாதார நிறுவனம் இன்று அதிகாரப்பூர்வமாக பெயரை அறிவித்துள்ளது. எந்த ஒரு இடத்தையோ, விலங்கையோ, குறிப்பிட்ட சமுதாய மக்களையோ குறிப்பிடாமல் இந்த பெயரை உருவாக்கியுள்ளனர். இந்த நோய்கு கோவிட்-19 அதாவது COVID-19 (coronavirus disease 2019) எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசுக்கு எதிராக விஷால் பதிவு செய்த வழக்கு ஒன்றில் விஷாலுக்கு ஆதரவாக உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளதால் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக விஷால் இருந்து வரும் நிலையில் திடீரென தயாரிப்பாளர் சங்கத்திற்கு என். சேகர் என்பவரை சிறப்பு அதிகாரியாக தமிழக அரசு நியமனம் செய்தது. இந்த நியமனத்துக்கு விஷால் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு வரும் ஜூன் 30-ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை அடுத்து விஷால் தரப்பினர் உற்சாகமடைந்துள்ளனர். விரைவில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் விஷால் மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது
நடிகர் ஜோசப் விஜய் கிறித்துவ மதத்தை பரப்புகிறார்! அர்ஜூன் சம்பத் குற்றச்சாட்டு!!
இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத், தஞ்சை பெரிய கோயிலில் வழிபட்ட போது நடிகர் விஜயை பற்றி முக்கிய குற்றச்சாட்டை செய்தியாளர்களிடம் முன்வைத்தார். அந்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
நடிகர் விஜய் தனது சினிமா பிரபலத்தை வைத்து தனது நண்பர்களின் மூலம் கிறித்தவ மதத்தை பரப்புவதாக கடுமையாக சாடினார். விஜய் வீட்டில் வருமானவரி சோதனை நடத்த காரணம், அவர் வரி ஏய்ப்பு செய்துள்ளார் என்கிற அடிப்படையில் சோதனை நடக்கிறது. இதை சிலர் ரஜினியுடன் தொடர்புபடுத்தி பேசுகிறார்கள். நடிகர் ரஜினிகாந்த் அவர்களுடன் விஜயை தொடர்புபடுத்தி பேசுவது தவறானது என்றும் குறிப்பிட்டார்.
இந்தியாவின் பிரதமராக வாஜ்பாய் இருந்த காலத்தில், ரஜினியின் வீட்டிலும் வருமானவரி சோதனை அதிரடியாக நடத்தப்பட்டது. பிறகு அதன் மூலம் சில ஆவணங்களும் கிடைத்தது உண்மைதான். சோதனையின் முடிவுக்கு பின்னர் வருமான வரித்துறையினரே ரஜினிக்கு நற்சான்றிதழ் வழங்கியதாகவும் அர்ஜூன் சம்பத் தெரிவித்தார். நடிகர் விஜய் வரி ஏய்ப்பு செய்யும் சோதனை நடப்பதாக கூறினார்.
விஜய் தனது சினிமா பிரபலத்தை வைத்தும் அதன் வருமானத்தை வைத்தும் கிறித்தவ மதத்தை பரப்புவதாக பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்த பேட்டியினால் சில விஜய் ரசிகர்கள் இடையே கொந்தளிப்பு கிளப்பியுள்ளது. சில தினங்களுக்கு முன்பு இயக்குனர் அமீர் ,விஜயை பார்த்து அவ்வளவு பயமா என்று அர்ஜூன் சம்பத்தை நோக்கி கேட்டது குறிப்பிடத்தக்கது.